Wednesday, July 6, 2011

ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கிய கவர்ச்சி நடிகை கைது (நானா யோசிச்சேன்)


நெஞ்சைத் தொட்ட வரிகள்:
காயே கருப்பக்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
ஊயே புளியங்கா
உப்புக்கச்ச நெல்லிக்கா
தாவணி தாரிக்கா
கன்னம் தான் பேரிக்கா
வாயோரம் கோவக்கா
வார்த்தை தான் பாவக்கா
......................
சங்கிலி முங்கிலி கதவைத் திற!
நான் மாட்டேன் வெங்கலப் புலி!

(லாரன்ஸின் ‘காஞ்சனா’வில் இருந்து)

ஒரு லட்சம் ஹிட்ஸ் :

இந்த 100வது பதிவு, 200வது பதிவு, 1000ஹிட்ஸ்-ன்னு ஏதாவது பதிவர் வாழ்க்கைல நடந்திருச்சுன்னா, இருக்குற வேலையை எல்லாம் போட்டுட்டு, திரும்பிப் பார்த்து நன்றி சொல்லணும்ங்கிறது பொதுவிதி. அதனால எதுக்கு வம்பு..நாமளும் என்னத்தையாவது திரும்பிப் பார்ப்போம் வாங்க.
சிலபேரு ஏன் சினிமா பத்தி எழுதறே, ஏன் நிறைய நேரம் பொறுப்பே இல்லாம எழுதறேன்னு கேட்கிறாங்க. சொந்த வாழ்க்கையில அடிமேல் அடி வாங்கிக்கிட்டு(கல்யாண வாழ்க்கைல இல்லைய்யா..), ஆஃபீஸ் லைஃபையும் இறுக்கமா நகர்த்துற நமக்கு ஏதாவது ரிலாக்ஸேசன் தேவைப்படுது. அதற்கு கமர்சியல் வலைப்பூக்கள் உதவி செய்யுது. ப்ளாக் எழுத ஆரம்பிக்கமுன்ன, 3-4 வருசமா மத்தவங்க எழுதறதைப் படிச்சு ரிலாக்ஸ் ஆன அனுபவத்தை வச்சுத்தான் இதைச் சொல்றேன்.

மத்தவங்களை சந்தோசப்படுத்துறதும் ஒரு சேவைதானே..உண்மையான சமூக அக்கறையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இங்கு சிலர் எழுதிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். அது பாராட்டப்பட வேண்டிய விசயம். அவ்வப்போது நல்ல அரசியல் பதிவுகள் எழுதினாலும், எப்பொழுதுமே அப்படி எழுதுவது என் மனநிலைக்கு நல்லதல்ல என்பதே உண்மை. 

அதனால எழுதுறது மூலமா இந்த சமுதாயத்தையே தலைகீழாப் புரட்டிப் போடும் திட்டம் எதுவும் நமக்குக் கிடையாதுண்ணே...ஏதோ நம்ம எழுத்து நமீதாவைப் புரட்டிப் போட்டா போதாதாண்ணே? ஆனா, அது என்னை மாதிரி தனி மனுசனால ஆகுற காரியம் இல்லை தான். அதுக்குத் தொடர்ந்து கூட இருந்து ஆதரவு தர்ற என்னோட 199 ஃபாலோயர்ஸ்க்கும், வெளில ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ், லாரி, ஸ்கூட்டில இருந்து ஆதரவு தர்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. 

எனக்குத் தொடர்ந்து திரட்டிகளில் ஓட்டுப்போட்டு, என் பதிவுகளைப் பிரபலப்படுத்தும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.
இன்னமும் என்னை நம்பி ‘அப்போ உருப்படியா ஒன்னுமே எழுத மாட்டியா’ன்னு பரிதாபமாக் கேட்கறவங்களுக்கு மட்டும் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் வேலை செய்ற மெக்கானிகல் எஞ்சினியரிங்ல உள்ள பைப்பிங் பிரிவு பத்தி, தமிழில் ஒரு மெகா தொடர் எழுதப்போறேன். தரமான பாடநூலா அது இருக்கும்னு நம்புறேன். அதை எப்போ எழுதுவேன்னா..ஹி..ஹி...’மன்மதன் லீலைகள்’ முடிஞ்சப்புறம்(ரொம்ப முக்கியம் அது!)

தாய்மண்ணே வணக்கம்:

அவசரமா இந்தியா வரலாமான்னு யோசிக்கிறேன்..பத்மநாபபுரம் கோயில் பாதாள அறையில தங்கமா அள்ளி இருக்காங்களாமே..எங்க பாட்டன் கொடுத்த வீடு ஒன்னும் எங்க கிராமத்துல கட்டமண்ணாக் கிடக்குது...ஒருவேளை வருங்கால சந்ததிக்காக(சங்கவிக்காக இல்லைய்யா..சரியாப் படிங்க) ஏதாவது உள்ள புதைச்சுக் கிதைச்சு வச்சிருப்பாரோ..வந்து தோண்டிப் பார்ப்பமா..ஒருவேளை ஜஸ்ட் ஆயிரம் கோடி ரூவா தங்கம் மாட்டுனா நல்லது தானே..அப்புறம் முழுநேர பதிவர் ஆயிடலாம்லே..ப்பூ..த்தூ..ச்சே..ரொம்ப வாயைப் பிளந்ததுல வாய்க்குள்ள கொசு போயிடுச்சுண்ணே.

கவர்ச்சி நடிகை கைது :

தட்ஸ்தமிழ்ல ’பிரபல கவர்ச்சி நடிகை கைது’ன்னு தலைப்புச்செய்தி. என்னடா இது ஒரு பிரபல கவர்ச்சி நடிகை கைது ஆகியும் ஏன் பதிவுலகம் பதறாம அமைதியா இருக்குன்னும் புரியலை. பாவிப்பயலுக..நாம யாரை லுக் விடுறமோ அவிங்களைத்தானே கரெக்டாப் பிடிச்சு உள்ள போடுவாங்க..இப்போ யாரை உள்ள போட்டாங்களோன்னு நெஞ்சு படபடக்க நியூசைப் படிச்சா........’பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா. கொரியா சென்றபோது, விசா பிரச்சினையால் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்’னு போட்டிருந்துச்சு.

பிரபல கவர்ச்சி நடிகையா..யார்டா அது நமக்குத் தெரியாம..அடச்சண்டாளங்களா...பதிவர்களான நாம தான் தனக்குத் தானே பிரபல பதிவர்னு சொல்லி இம்சை பண்றோம்னு பார்த்தா இப்போ நடிகைகளும் ஆரம்பிச்சுட்டாங்களா..விளங்கிரும்.

பொதுவா இவங்களை விபச்....அய்யோ..அபச்சாரம், அபச்சாரம்..பால் இயல் தொழில் ஆளின்னு சொல்லித்தானே அரெஸ்ட் பண்ணுவாங்க..இதென்ன புதுசா ’மேட்டர்’ இல்லே, விசா மேட்டர்னு சொல்றாங்களேன்னு யோசிச்சு உண்மைல என்ன நடந்துச்சுன்னு கண்டுபிடிச்சுட்டேன். முதல்ல அது படத்தை நல்லா உத்துப் பாருங்க..
இப்போ நான் சொல்றேன் என்ன நடந்திருக்கும்னு..இது இம்மிக்ரேசன்ல இருக்குறவன்ட்டப் போய் ‘நான் ஒரு கவர்ச்சி நடிகை’ன்னு சொல்லி இருக்கும். அதைக் கேட்டு அவன் ஷாக் ஆகியிருப்பான். ’இதுக்கு எவன்டா கவர்ச்சி நடிகை சான்ஸ் கொடுப்பான்? மூஞ்சியே சொம்பு மாதிரி நசுங்கி இருக்கே’ன்னு டவுட்டாகி தூக்கி உள்ள வச்சுட்டாங்க. அப்புறம் அம்மா பேரைச் சொல்லவும் தான் விட்டிருக்காங்க.

அம்மான்னா அந்த அம்மா இல்லைய்யா..எக்குத் தப்பா யோசிச்சு என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்க. இந்தப் பொண்ணோட அம்மா கவர்ச்சி நடிகை பபிதா. ஞாபகம் இருக்கா..'நான் சிரிச்சா தீபாவளி ஹோய்’ன்னு நாயகன்ல ஆடுமே..அதே ஆண்ட்டி தான்... ஹூம்........த்ரிஷா, ராதா மகளைப் பார்க்கும்போது என்ன தோணுதோ அதானே இப்பவும் உங்களுக்குத் தோணுது..ரைட்டு.

எப்படி இருந்த நான்:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

 1. நல்லா தொகுத்திருக்கீங்க, நண்பரே.

  ReplyDelete
 2. தாய் நாடு வரும்போது, மறக்காம,நெல்லை பக்கமும் வாங்க.

  ReplyDelete
 3. மாப்ள என்னமா புரட்டுரய்யா....பதிவ ஹிஹி!

  ReplyDelete
 4. [நடிகர் திலகம் பாணியில் படிக்கவும்]

  கவர்ச்சி நடிகை மேட்டரை நானும்தேன் பேப்பரிலே படிச்சேன்.
  இப்படி காமெடி பண்ணத்தோணலியே....
  எப்புடி ராசா...
  சுமதி...
  இந்த தம்பி எழுதினத படிச்சியா...
  கோடி நட்சத்திரம் கொட்டின மாதிரி சிரிப்பு வரல்ல...

  ReplyDelete
 5. @FOOD//தாய் நாடு வரும்போது, மறக்காம,நெல்லை பக்கமும் வாங்க.// கண்டிப்பா வர்றேன் சார்.

  ReplyDelete
 6. @விக்கியுலகம் //மாப்ள என்னமா புரட்டுரய்யா....பதிவ ஹிஹி!// ஏதோ நம்மால முடிஞ்சது....

  ReplyDelete
 7. @THOPPITHOPPI //hahaha....// சிரிப்புக்கு நன்றி தொப்பி.

  ReplyDelete
 8. >>ஏதோ நம்ம எழுத்து நமீதாவைப் புரட்டிப் போட்டா போதாதாண்ணே

  அண்ணே.. ஒரு டவுட். இந்த லைனை எல்லாம் பார்த்துட்டு அண்ணி ஒண்ணூம் சொல்ல மாட்டாங்களா? ஹி ஹி

  ReplyDelete
 9. >>வருங்கால சந்ததிக்காக(சங்கவிக்காக இல்லைய்யா..சரியாப் படிங்க)

  aahaa ஆஹா டைட்டில் சிக்குச்சு நன்றி அண்ணே./. ஹி ஹி

  ReplyDelete
 10. எங்கண்ணன் எப்பவும் டீசண்ட்டான கமெண்ட்டைத்தான் பப்ளிஸ் பண்ணூவாரு. டபுள் மீங்க் கமெண்ட்டா மாடரேட் பண்ணிடுவாரு ஹி ஹி லேட்டஸ்ட் உதா ..

  விக்கியுலகம் said... [Reply]

  மாப்ள என்னமா புரட்டுரய்யா....பதிவ ஹிஹி!

  ReplyDelete
 11. //சொந்த வாழ்க்கையில அடிமேல் அடி வாங்கிக்கிட்டு(கல்யாண வாழ்க்கைல இல்லைய்யா..)//
  சரி சரி விடுங்கண்ணே! புரியுது!

  ReplyDelete
 12. //முதல்ல அது படத்தை நல்லா உத்துப் பாருங்க..//
  என்ன கொடுமைண்ணே! என்னா ஒரு அராஜகம்!
  எவன் இதுங்களை எல்லாம் பிடிச்சுக் கொண்டுபோய் நடிக்க வைக்கிறான்?
  அய்யய்யோ உங்ககூட சேர்ந்து நானும் பெண்களை இழிவு படுத்தி பேசிட்டேண்ணே!

  ReplyDelete
 13. //புதுசா ’மேட்டர்’ இல்லே, விசா மேட்டர்னு சொல்றாங்களேன்னு யோசிச்சு உண்மைல என்ன நடந்துச்சுன்னு கண்டுபிடிச்சுட்டேன்.//
  பெரிய ஆளுண்ணே நீங்க! நாங்கெல்லாம் எப்பதான் வளரப் போறமோ?

  ReplyDelete
 14. ங்கொய்யாலே...!!நான் என்னமோ ஏதோன்னு நெனச்சேன்..!!!

  ReplyDelete
 15. என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)பதிவு அருமை !!!! அதேபோல் பைபிங் பிரிவு பதிவும் நன்றாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...awaiting for Ur piping design blog....plz start immediately...

  ReplyDelete
 16. இந்த கண்றாவியெல்லாம் மானாட மயிலாட இல் இருந்து தான் சினிமாவுக்கு ஏற்றுமதி ஆனது தான்.....அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளிவருபவர்களுக்கு சினிமாவில் item -டான்ஸ் ஆடும் வாய்ப்பு தான் கிடைக்கிறது(இதுவே அதிகம் தான் !!!!) (பிரியா,சுஜி பாலா& மேல் கண்ட மூஞ்சி )...இதில் காமெடி என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் உடன் ஆடும் நடன மங்கைகள் கூட இவைகளை விட அழகாக இருக்கிறார்கள் என்பதுதான்...இந்த மூஞ்சிகளை அந்த நிகழ்ச்சியில் திருப்பி திருப்பி காட்டிய கடுப்பில் தான் மக்கள் திமுக வுக்கு ஒட்டு போடலையோ என்னவோ.....????

  ReplyDelete
 17. என்னை நம்பி ‘அப்போ உருப்படியா ஒன்னுமே எழுத மாட்டியா’ன்னு பரிதாபமாக் கேட்கறவங்களுக்கு மட்டும் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் வேலை செய்ற மெக்கானிகல் எஞ்சினியரிங்ல உள்ள பைப்பிங் பிரிவு பத்தி, தமிழில் ஒரு மெகா தொடர் எழுதப்போறேன். தரமான பாடநூலா அது இருக்கும்னு நம்புறேன். அதை எப்போ எழுதுவேன்னா..ஹி..ஹி...’மன்மதன் லீலைகள்’ முடிஞ்சப்புறம்(ரொம்ப முக்கியம் அது!)//

  நான் திரும்பவும் மாடு மேய்க்க போலாம்னு இருக்கேன் அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 18. சரிய்யா சரிய்யா சரிய்யா ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 19. நல்லா தொகுத்திருக்கீங்க. vazhththukkal.

  ReplyDelete
 20. நல்லா தொகுத்திருக்கீங்க. vazhththukkal.

  ReplyDelete
 21. அண்ணே ஹனிஸ்க்கா என்னைய திரும்பி பாக்குறான்கன்னே

  ReplyDelete
 22. அண்ணே கொள்கை விளக்கம் சூப்பருங்கன்னே, பாருங்க மணிய ஹன்சிக்கு ரூட்டு வுடறத எங்க போனாலும் போட்டிக்கு வரதே பொழப்பா போச்சு

  ReplyDelete
 23. //உலக சினிமா ரசிகன் said...

  கவர்ச்சி நடிகை மேட்டரை நானும்தேன் பேப்பரிலே படிச்சேன்.
  இப்படி காமெடி பண்ணத்தோணலியே....
  எப்புடி ராசா...// அது நம்மை மாதிரி நாறக் கொள்கை உள்ள ஆளால தான் முடியும் சார்.

  //சுமதி...
  இந்த தம்பி எழுதினத படிச்சியா...// ஏன் சார் லேடீஸ்கிட்ட மாட்டி விடுறீங்க? நிம்மதியா இருக்க விடுங்க சார்..

  //கோடி நட்சத்திரம் கொட்டின மாதிரி சிரிப்பு வரல்ல...// இந்தக் கமெண்ட்டுக்காகவே கே.ஆர்.விஜயா பாட்ம் போடலாம் போலிருக்கே..நன்றி சார்.

  ReplyDelete
 24. // சி.பி.செந்தில்குமார் said...
  இந்த லைனை எல்லாம் பார்த்துட்டு அண்ணி ஒண்ணூம் சொல்ல மாட்டாங்களா? // நோ டாக்கிங்..ஒன்லி ஆக்சன்!..டிஷ்யூம்..டிஷ்யூம்.

  //டபுள் மீங்க் கமெண்ட்டா மாடரேட் பண்ணிடுவாரு // எனக்கு அடி வாங்கித்தரணும்ங்கிற முடிவோடபோடப்படும் கமெண்ட்கள் நீக்கப்படும்.பின்னே, நான் எழுதுனதுக்கு அடி வாங்குறது நியாயம்..நீங்க எழுதுனதுக்கெல்லாம் நான் வாங்க முடியுமா?

  ReplyDelete
 25. ஜீ... said...
  //அய்யய்யோ உங்ககூட சேர்ந்து நானும் பெண்களை இழிவு படுத்தி பேசிட்டேண்ணே!//

  ஆஹா..தம்பி, உங்களுக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த ஆணாதிக்கவாதியை நான் எழுப்பிட்டனா?

  //பெரிய ஆளுண்ணே நீங்க! நாங்கெல்லாம் எப்பதான் வளரப் போறமோ?//

  போதும் ஜீ..போதும்..தாங்க முடியலை.

  ReplyDelete
 26. //* வேடந்தாங்கல் - கருன் *! said...
  eppadeenga ippadiyellaam..//

  வாத்யாரு அசந்துடடரு போலிருக்கே...

  ReplyDelete
 27. // ரஹீம் கஸாலி said...
  ok..raittu.// ரைட்டு கஸாலி.

  ReplyDelete
 28. // தங்கம்பழனி said...
  ங்கொய்யாலே...!!நான் என்னமோ ஏதோன்னு நெனச்சேன்..!!! // இதைவிடக் கேவலமா எதிர்பார்த்தீங்களா பாஸ்?

  ReplyDelete
 29. //°•ℛŚℳ●•٠·˙ said...
  என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)பதிவு அருமை !!!! அதேபோல் பைபிங் பிரிவு பதிவும் நன்றாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை//

  நன்றி நண்பரே..நிச்சயம் உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

  ReplyDelete
 30. // RŚM·˙ said...
  இந்த கண்றாவியெல்லாம் மானாட மயிலாட இல் இருந்து தான் சினிமாவுக்கு ஏற்றுமதி ஆனது தான்....//

  ஆமா பாஸ், இப்போ தான் ஞாபகம் வருது..கலா மாஸ்டர்கூட இது தானே சண்டை போட்டுச்சு..

  ReplyDelete
 31. // MANO நாஞ்சில் மனோ said...
  நான் திரும்பவும் மாடு மேய்க்க போலாம்னு இருக்கேன் அவ்வ்வ்வ்வ்....// ஏண்ணே, மாடு மேய்ப்பது எப்படின்னு பதிவு போடுங்கண்ணே.

  ReplyDelete
 32. //சே.குமார் said...
  நல்லா தொகுத்திருக்கீங்க. vazhththukkal.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 33. // நா.மணிவண்ணன் said...
  அண்ணே ஹனிஸ்க்கா என்னைய திரும்பி பாக்குறான்கன்னே //

  அதுக்கு ஏன்யா ஹன்சிகா விரும்பிப் பார்த்த மாதிரி குஷி ஆகுறீங்க?

  ReplyDelete
 34. //இரவு வானம் said... [Reply]
  அண்ணே கொள்கை விளக்கம் சூப்பருங்கன்னே..// அப்போ ஒரு கை கொடுப்பீங்கள்ல....

  ReplyDelete
 35. //நாம தான் தனக்குத் தானே பிரபல பதிவர்னு சொல்லி இம்சை பண்றோம்னு பார்த்தா இப்போ நடிகைகளும் ஆரம்பிச்சுட்டாங்களா..விளங்கிரும்.//
  அவங்கதான் முதல்!

  ReplyDelete
 36. @சென்னை பித்தன் அப்படியா..பெரியவங்க சொன்னாச் சரி தான்..

  ReplyDelete
 37. Anne..kavichi adache kavarchi nadigaiyai parthu payanthutten... bayam theliya maariyamman kovil veppilai parcel pannavum...

  ReplyDelete
 38. Sengovi,

  Tokyo perusa, illa Japan perusa.........??????

  ReplyDelete
 39. @டக்கால்டி //kavarchi nadigaiyai parthu payanthutten... bayam theliya maariyamman kovil veppilai parcel pannavum...// ஹா..ஹா..இதுக்குத் தான் நானா யோசிச்சேன் பகுதில ஆம்பிளைப்படமும் போடறதில்லை..

  ReplyDelete
 40. @Vadivelan //Tokyo perusa, illa Japan perusa..// என்ன கண்ணுய்யா உங்களுக்கு.....யாருக்காவது இப்படி கேட்கணும்னு தோணுச்சா..வெரிகுட்..வெரிகுட்.

  ReplyDelete
 41. பதிவுலகில் பல்சுவை அம்சங்களைத் தொடர்ந்தும் எழுதி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 42. நெஞ்சைத் தொட்ட வரிகள்://

  என்ன ஒரு ரசனை உள்ள ஆளுய்யா நீங்க..

  //அதனால எதுக்கு வம்பு..நாமளும் என்னத்தையாவது திரும்பிப் பார்ப்போம் வாங்க.//

  என்ன மாளவிக்காவோடை அதைய்யா திரும்பி பார்க்கிறீங்க;-))

  //நான் வேலை செய்ற மெக்கானிகல் எஞ்சினியரிங்ல உள்ள பைப்பிங் பிரிவு பத்தி, தமிழில் ஒரு மெகா தொடர் எழுதப்போறேன். தரமான பாடநூலா அது இருக்கும்னு நம்புறேன்.//

  வாழ்த்துக்கள் பாஸ், இத் தொடரினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  தாய்மண்ணே வணக்கம்://

  வெகு விரைவில் ஊருக்குப் போறீங்களா...
  என்ஜோய் பண்ணுங்க பாஸ்.

  //கவர்ச்சி நடிகை கைது ://

  அட இதுவா மேட்டரு...
  பார்த்தால் ஆங்கில சீன் பட நடிகை மாதிரி இருக்கா.

  எப்படி இருந்த நான்://

  எல்லாம் காலம் செய்யுற வேலை பாஸ்..


  கலக்கலான பதிவினைப் பல்சுவை கலந்து, நகைச்சுவையூட்டித் தந்திருக்கிறீங்க.

  ரசித்தேன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.