Thursday, July 14, 2011

ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்டா நமீதா? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு 

அருகில் அருகில் வந்தான்..

ரெண்டு புறம் பற்றி 
எரியும் மெழுகாக - ரசிகன்
உருகி நின்றான்!
நன்றி:http://cinebuzz.in/
ரஞ்சிதானந்தா:

சன்டிவிக்கு இதுவரை இருந்த நல்ல நேரம் முடிஞ்சிருச்சு போல. ஆளாளுக்கு இதான் சமயம்னு வழக்காப் போடுதாங்க. பாவம், எத்தனை நாள் கடுப்பை அடக்கி வச்சிருந்தாங்களோ..ஆனா சந்தடிச் சாக்குல நித்யானந்தாவும் சன்டிவி மேல வழக்குப் போடக் கிளம்பி இருக்குறது தான் தமாசு..
கான்செண்ட்ரேசன்ங்கிறது எவ்வளவு முக்கியம்னு நித்யா வீடியோ பார்த்துத் தானே உலமமே கத்துக்கிச்சு.பின்னே, நித்யா முக்கியமான நேரத்துல டிவி பார்த்துக்கிட்டு இருந்தாரு..பின்னாடி ஒருத்தன் அதை வீடியோ எடுத்து அதே டிவில ஒளிபரப்பிட்டான்..இவரு மட்டும் ஒழுங்கா கான்சண்ட்ரேட் பண்ணி இருந்தா இப்படி ஆகியிருக்குமா..யோவ் நித்தி, என்னைக்கு ரஞ்சிதா உனக்கு சேவை செய்யும்போது, அதைக் கண்டுக்காம டிவி பார்த்தயோ, அன்னைக்கே உன்மேல இருந்த மரியாதை எல்லாம் போச்சுய்யா..

நொந்த உள்ளம்:

அடுத்த டிபார்ட்மெண்ட்டுக்கு புதுசா ஒரு ஹெச்.ஓ.டி வந்திருக்காரு. பெரியவரு..நம்ம ஏரியா ஆளு..அதனால நல்லா ஒட்டிக்கிட்டொம்..குடும்பத்தைக் குவைத் கூட்டி வர என்ன ப்ரொசியூசர்ன்னு கேட்டாரு. நானும் ‘முதல்ல மேரேஜ் சர்டிஃபிகேட் இண்டியால அட்டெஸ்ட் பண்ணனும். அதை வைச்சு இங்க மேரேஜ் அஃபிடவிட் எடுக்கணும். அப்புறம் விசா. அந்த விசாவை இந்தியா அனுப்புனா, அங்க மெடிக்கல்-பிசிசி-அப்புறம் ஸ்டாம்பிங்..அங்க ஸ்டாம்பிங் ஆனப்புறம் இங்க கூட்டி வந்திடலாம்.இங்க வந்த பிறகு மறுபடியும் மெடிக்கல், ஃபிங்கர்-ஸ்டாம்பிங்”ன்னு சொன்னேன்.

மனுசன் மலைச்சுப்போய்ட்டாரு. ”இவ்ளோ டாகுமெண்ட்ஸ், புரசீசர்ஸ் தேவையா?”ன்னு கேட்டாரு. நானும் கேஷுவலா” அதானே என்ன அநியாயம் பாருங்க சார்..நம்மூர்ல அவனவன் ஒரு டாகுமெண்ட்டும் இல்லாம அடுத்தவன் பொண்டாட்டியைவே கூட்டிட்டுப் போயிடுதான். நாம நம்ம பொண்டாட்டியைக் கூட்டி வர இந்தப் பாடு”ன்னு சொல்லிட்டேன். பெரிய மனுசன் நொந்து போய்ட்டாரு போல..இப்போல்லாம் நம்மகிட்ட சரியாவே பேசறதில்லை..ஏங்க, நான் சொன்னது தப்பாங்க?

அய்யோ...பாவம்:
இன்னொரு பக்கம் பெரியவரு கலைஞரும் நொந்து போய்ட்டாரு..எல்லாம் இந்தக் காங்கிரஸ்காரன் பண்ற வேலை தான்..2 இலாகா திமுகக்காக காத்திருக்கு-ன்னு பிரதமர் சொல்லியிருக்காரு. என்ன நக்கல் பாருங்க. இப்படித் தான் பாசமாக் கூப்பிடுவீங்க..நம்பி புள்ளைகளை அனுப்பி வச்சா தூக்கி உள்ள வச்சிருவீங்க..புள்ளை புடிக்கிறவன் மாதிரி ஏறக்குறைய எல்லாப் பிள்ளைகளுக்கும் ஆப்பு வச்சிட்டு நக்கலா ‘வேற புள்ள இருக்கா’ன்னு தலிவருகிட்ட இன்டைரக்டா கேட்காங்களே..இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா..

தீவிரமா யோசிச்சது:

ஆஃபீஸ்ல தீவிரமா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு ஒரு யோசனை..;நமீதா கடைசியா நடிச்சு வெளியான படம் எதுன்னு. பில்லா தானா? இல்லே அதுக்கப்புறமும் ஏதாவது படம் வந்துச்சான்னு தெரியலை..ஆனா இப்படி படத்துல நடிக்காம வெறும் ஸ்டில்லு ரிலீஸ் பண்ணியே மார்க்கெட் மெயிண்டய்ன் பண்ற திறமை வேற யாருக்காவது இருக்கா..

நமீதா பத்தி வர்ற நியூசெல்லாம் பார்த்தா அங்க நகைக்கடை திறந்தார், இங்க ஜவுளிக்கடை திறந்தார்னு பாவாடைக்கடைல இருந்து பஸ் ஸ்டாண்ட் கக்கூஸ் வரைக்கும் எல்லாத்தையும் திறக்கறதுல அம்மணி ரெண்டு வருசமா பயங்கர பிஸி..இப்போ நான் தீவிரமா யோசிக்கிறது என்னன்னா......இந்த கிரிக்கெட்ல ஓப்பனிங் பேட்ஸ் மேன்னு சொல்ற மாதிரி நாம ஏன் நம்ம நமீயை ‘ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்’டுன்னு சொல்லக்கூடாது..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

55 comments:

 1. திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...

  ReplyDelete
 2. நெஞ்சை தொட்ட வரிகள் டைமிங் டச்...

  ReplyDelete
 3. @தமிழ்வாசி - Prakash //திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...//
  ஸ்வாமி, எப்பவும் அல்வா-மல்லிப்பூவோடு அலையும் மர்மம் என்னவோ?

  ReplyDelete
 4. @செங்கோவி
  எப்பவும் அல்வா-மல்லிப்பூவோடு அலையும் மர்மம் என்னவோ?>>>>

  உங்க கைவசம் மும்தாஜ் இருக்கு..நமீதா இருக்கு..ஆனா குவைத்துல அல்வா மல்லிகை பூ கிடைக்காதுல்ல அதான் அனுப்பி வைக்கிறேன்

  ReplyDelete
 5. நொந்த உள்ளம்:>>>>

  நம்மாளுகளுக்கு ரூல்ஸ் எப்பவுமே பிடிக்காது. எதுலயும் ஓட்டை இருக்கான்னு பாப்பானுக...

  ReplyDelete
 6. //தமிழ்வாசி - Prakash said...

  உங்க கைவசம் மும்தாஜ் இருக்கு..நமீதா இருக்கு..//

  யோவ் ஸ்டில்லு இருக்குன்னு கரெக்டாச் சொல்லும்யா..

  ReplyDelete
 7. ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட் நமீதா தலையில இருக்குற சொம்பு ரொம்ப நசுங்கி இருக்கே... பில்லா படத்துக்கு அப்புறம் அம்மணிக்கு சொம்பை வச்சுத்தான் தான் பிழைப்பு ஓடுதோ?

  ReplyDelete
 8. @தமிழ்வாசி - Prakash நமீயை விடும்யா..என் ப்ளாக்குக்கு எப்பவும் ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட் நீங்க தான் பிரகாஷ்.(நோ..நோ..கண்ணு கலங்கக்கூடாது)

  ReplyDelete
 9. Anne mahalakshmi ponnu mela namakku romba naalaa oru kannu .....konjam pesi ............

  ReplyDelete
 10. @நா.மணிவண்ணன் கொஞ்சம் பேசியா..யோவ், பிச்சுப்புடுவேன் பிச்சு..

  ReplyDelete
 11. இப்படித் தான் பாசமாக் கூப்பிடுவீங்க..நம்பி புள்ளைகளை அனுப்பி வச்சா தூக்கி உள்ள வச்சிருவீங்க..புள்ளை புடிக்கிறவன் மாதிரி ஏறக்குறைய எல்லாப் பிள்ளைகளுக்கும் ஆப்பு வச்சிட்டு நக்கலா ‘வேற புள்ள இருக்கா’ன்னு தலிவருகிட்ட இன்டைரக்டா கேட்காங்களே..இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா..///ஹிஹிஹி தன் வினை தன்னை சுடும்:-)

  பல விடயங்களை தந்துள்ளீர்கள்.

  நமீதா பற்றிய நக்கல் சூப்பர் ))

  ReplyDelete
 12. ரஜினியில் தொடங்கி,நக்கல், நையாண்டி என நவரசம் கலந்து விட்டீர்கள்! கடைசியில, நமீதாவையும் தொட்டுட்டீங்க!!!!

  ReplyDelete
 13. << Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
  Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

  ReplyDelete
 14. கலக்கிபுட்டீங்க மாப்ள!

  ReplyDelete
 15. தலைவர் வந்ததே ரொம்ப சந்தோசம் மாப்ள..

  ReplyDelete
 16. @கந்தசாமி. //பல விடயங்களை தந்துள்ளீர்கள்.// அப்படி இல்லை கந்து..’வாழ்க்கைக்குத் தேவையான பல விடயங்களைத் தந்துள்ளீர்கள்’னு சொல்லணும்.சரியா...

  ReplyDelete
 17. @FOOD//கடைசியில, நமீதாவையும் தொட்டுட்டீங்க!!!!// சாஆஆஆர்ர்ர்ர்!

  ReplyDelete
 18. @!* வேடந்தாங்கல் - கருன் *! //தலைவர் வந்ததே ரொம்ப சந்தோசம் மாப்ள..// ஆமா கருன்..அதே ஸ்பீடுல நடந்து வந்த அழகே தனி.

  ReplyDelete
 19. கலக்கிபுட்டீங்க...
  கலக்கிபுட்டீங்க...
  கலக்கிபுட்டீங்க...

  ReplyDelete
 20. அரபுக் கன்னிகளின் இரவு இளவலே, வணக்கம்!

  ReplyDelete
 21. ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்டா நமீதா? (நானா யோசிச்சேன்)//

  மச்சி, ஓப்பனிங் என்றால் முன்னால் தானே....அது தான் நம்ம நமீக்கு வேண்டிய அளவு இருக்கே. சந்தேகமே வேணாம், நமீதா ஓப்பனிங் ஸ்பெசலிட் தான்.

  ReplyDelete
 22. தங்க மகன் இன்று
  சிங்க நடை போட்டு

  அருகில் அருகில் வந்தான்..

  ரெண்டு புறம் பற்றி
  எரியும் மெழுகாக - ரசிகன்
  உருகி நின்றான்!//

  சிட்டுவேசன் சாங்ஸ்..சூப்பர் தலைவா.

  தலைவரைத் தூர இருந்து வாழ்த்தும் - வரவேற்கும் ரசிகனாக பாக்கு நீரிணைக்கு அப்பால் இருந்து நானும் பங்கு கொள்கிறேன்.

  ReplyDelete
 23. ரஞ்சிதானந்தா://

  என்னம்மா யோசித்து ஒரு பெயர் வைக்கிறாங்க பாருங்க.

  ReplyDelete
 24. சன்டிவிக்கு இதுவரை இருந்த நல்ல நேரம் முடிஞ்சிருச்சு போல. ஆளாளுக்கு இதான் சமயம்னு வழக்காப் போடுதாங்க. பாவம், எத்தனை நாள் கடுப்பை அடக்கி வச்சிருந்தாங்களோ..ஆனா சந்தடிச் சாக்குல நித்யானந்தாவும் சன்டிவி மேல வழக்குப் போடக் கிளம்பி இருக்குறது தான் தமாசு..//

  ஊரைக் கொள்ளையடித்தால், ஊரே சேர்ந்து அடிப்பாங்களாம், நான் சன் டீவிக்குப் பொருத்தமா இதனைச் சொல்லை.

  ReplyDelete
 25. யோவ் நித்தி, என்னைக்கு ரஞ்சிதா உனக்கு சேவை செய்யும்போது, அதைக் கண்டுக்காம டிவி பார்த்தயோ, அன்னைக்கே உன்மேல இருந்த மரியாதை எல்லாம் போச்சுய்யா.//

  ஆஹா...செம டச்சிங்....

  ReplyDelete
 26. சார்..நம்மூர்ல அவனவன் ஒரு டாகுமெண்ட்டும் இல்லாம அடுத்தவன் பொண்டாட்டியைவே கூட்டிட்டுப் போயிடுதான். நாம நம்ம பொண்டாட்டியைக் கூட்டி வர இந்தப் பாடு”ன்னு சொல்லிட்டேன். பெரிய மனுசன் நொந்து போய்ட்டாரு போல..இப்போல்லாம் நம்மகிட்ட சரியாவே பேசறதில்லை..ஏங்க, நான் சொன்னது தப்பாங்க?//

  தமிழன்! தமிழன்! எப்பவுமே அடுத்தவன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் முன்னோடியாக இருப்பான் என்பது இது தானே.

  அந்தாள் நினைச்சிருக்கும், இப்போ தன்னோடை மனைவியின் நிலமை என்னாகிடுமோ, அதான் இவன் இப்படிப் பேசுறானே என்று நினைச்சிருக்கும் பாஸ்.

  ReplyDelete
 27. அய்யோ...பாவம்://

  ஓவர் குசும்பு....நீங்க அந்தப் போட்டோவிற்காகத் தான் இந்த சப் டைட்டில் வைச்சீங்க;-))

  ReplyDelete
 28. .இந்த கிரிக்கெட்ல ஓப்பனிங் பேட்ஸ் மேன்னு சொல்ற மாதிரி நாம ஏன் நம்ம நமீயை ‘ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்’டுன்னு சொல்லக்கூடாது..//

  ஆமா எல்லே....சொல்லிடலாம் தப்பே இல்லை. ஆனால் இது நமீயைப் பார்த்து நீங்க சொல்லும் டபுள் மீனிங் மாதிரியெல்லே இருக்கு.

  ReplyDelete
 29. நானா யோசிச்சேன்....கலந்து கட்டி, அரசியல், சினிமா, நண்பரின் நொந்த அனுபவம் எனப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்க.

  ReplyDelete
 30. //ஏங்க, நான் சொன்னது தப்பாங்க?//
  ரொம்பச் சரி! அண்ணன் எப்போ தப்ப பேசியிருக்கீங்க?

  ReplyDelete
 31. //யோவ் நித்தி, என்னைக்கு ரஞ்சிதா உனக்கு சேவை செய்யும்போது, அதைக் கண்டுக்காம டிவி பார்த்தயோ, அன்னைக்கே உன்மேல இருந்த மரியாதை எல்லாம் போச்சுய்யா..//
  ஆமாண்ணே! அதுவும் வயலும் வாழ்வும்! என்ன கொடுமை நித்தி?

  ReplyDelete
 32. //ஏன் நம்ம நமீயை ‘ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்’டுன்னு சொல்லக்கூடாது//
  ரொம்ப ஓப்பனா பேசுறீங்க! :-) வாழ்த்துக்கள்!

  ஆமா அண்ணி இப்போ பிலாக் படிக்கிறதில்லையா?

  ReplyDelete
 33. அண்ணன் ஆயிரத்தொரு அராபிய இரவுகள் மாதிரி ஏதாவது ....குவைத் இரவுகள் பற்றி எழுதலாமே!

  ReplyDelete
 34. //சே.குமார் said...
  கலக்கிபுட்டீங்க...
  கலக்கிபுட்டீங்க...
  கலக்கிபுட்டீங்க...// என்னாச்சு குமார்..குஷியா?

  ReplyDelete
 35. நிரூபன் said...
  //மச்சி, ஓப்பனிங் என்றால் முன்னால் தானே...// யாருய்யா உங்க இங்லீஸ் வாத்தி?

  //தலைவரைத் தூர இருந்து வாழ்த்தும் - வரவேற்கும் ரசிகனாக பாக்கு நீரிணைக்கு அப்பால் இருந்து நானும் பங்கு கொள்கிறேன்.// சந்தோசம் நிரூ.

  //அந்தாள் நினைச்சிருக்கும், இப்போ தன்னோடை மனைவியின் நிலமை என்னாகிடுமோ// ஒருவேளை அப்படியும் இருக்குமோ?.அய்யய்யோ!


  // அய்யோ...பாவம் - ஓவர் குசும்பு....நீங்க அந்தப் போட்டோவிற்காகத் தான் இந்த சப் டைட்டில் வைச்சீங்க;-)) // குஷி படத்துல அம்மணி பேசுன டயலாக் அது..கலைஞருக்கும் பொருந்துச்சா..அதான்!

  //ஆமா எல்லே....சொல்லிடலாம் தப்பே இல்லை. ஆனால் இது நமீயைப் பார்த்து நீங்க சொல்லும் டபுள் மீனிங் மாதிரியெல்லே இருக்கு.// ச்சே..எல்லாரும் கெட்ட எண்னத்தோடயே படிக்காங்களே.

  ReplyDelete
 36. ஜீ... said...

  //ரொம்பச் சரி! அண்ணன் எப்போ தப்ப பேசியிருக்கீங்க?// வாங்க த்ம்பி, அப்படி ஆறுதலாச் சொல்லி அண்ணன் மனசைத் தேத்துங்க.

  //ஆமாண்ணே! அதுவும் வயலும் வாழ்வும்! என்ன கொடுமை நித்தி?// வெள்ளாமை பண்ண டிப்ஸ் நோட் பண்ணாரோ?

  //ஆமா அண்ணி இப்போ பிலாக் படிக்கிறதில்லையா? // நீங்க கேட்குறது அடிக்கறதில்லையான்னு என் காதுல விழுதே..அவ்வ்வ்!

  //அண்ணன் ஆயிரத்தொரு அராபிய இரவுகள் மாதிரி ஏதாவது ....குவைத் இரவுகள் பற்றி எழுதலாமே! // தம்பி, டேமேஜைக் குறைக்க வழி சொல்வீங்கன்னு பார்த்தா, ஆளைக் காலி பண்ணப் பார்க்கீங்களே..

  ReplyDelete
 37. ஹிஹி... அது என்னமோ போங்க.... நமீதா மேட்டர் மட்டும் நச்.
  (என்னாமா ஓபன் பண்ணுறிங்க நமீதாவ)

  ReplyDelete
 38. சன் டிவி மண் டிவி'யாப்போச்சே....

  ReplyDelete
 39. //இந்த கிரிக்கெட்ல ஓப்பனிங் பேட்ஸ் மேன்னு சொல்ற மாதிரி நாம ஏன் நம்ம நமீயை ‘ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்’டுன்னு சொல்லக்கூடாது..//
  கிண்டலா?!:)

  ReplyDelete
 40. @சரியில்ல....... //சன் டிவி மண் டிவி'யாப்போச்சே..// சூப்பர் பஞ்ச் பாஸ்!

  ReplyDelete
 41. @சென்னை பித்தன் //கிண்டலா?!:)// ச்சே..ச்சே.சீரியஸ் சார்.

  ReplyDelete
 42. சொன்னா என்னவா.. சொல்லலாமே.. தாராளமா.

  ReplyDelete
 43. @எஸ்.பி.ஜெ.கேதரன் உங்க ஆதரவுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 44. நான் பதிவுலகில் பொதுவா சவால் விடறேன். எங்க அண்னன் மாதிரி டைட்டில் வைக்க யாராவது போட்டிக்கு முடியுமா> ஹி ஹி

  ReplyDelete
 45. \\”இவ்ளோ டாகுமெண்ட்ஸ், புரசீசர்ஸ் தேவையா?”\\ பங்களாதேஷில் இருந்து இந்தியவிற்க்குள் கள்ளத் தனமாக நுழைந்து சுக போக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு கோடிகள் இருக்குமாம். பிரான்ஸ், பிரிட்டன், அமேரிக்கா போன்ற நாடுகளுக்குள் இவ்வாறு நுழைந்தால் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புதல், ஆயுள் தண்டனை, ஏன் மரண தண்டனை கூட உண்டாம். ஆனால் நம் நாட்டில், என்ன செய்துள்ளார்கள் தெரியுமா, உங்களுக்கு ரேஷன் அட்டை, குடியுரிமை என்று பல சலுகைகளைத் தருகிறோம், ஓட்டு எண்கள் கட்சிக்கே போடுங்கள் என்று இந்த ஓட்டுப் பொறுக்கிகள் ஒப்பந்தம் போட்டு வைத்து அவ்வாறே செயல்பட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

  ReplyDelete
 46. \\சந்தடிச் சாக்குல நித்யானந்தாவும் சன்டிவி மேல வழக்குப் போடக் கிளம்பி இருக்குறது தான் தமாசு..\\ என்னது தமாசா? சாமியார் செக்ஸ் பண்ணக் கூடாதுன்னு எந்த இந்தியச் சட்டம் சொல்லுதுன்னு சொல்லுய்யா பாப்போம். அந்த வீடியோவில இருந்தது நாங்கதான், சந்தோஷத்துக்கு சல்சா பண்ணிக்கிட்டு இருந்தோம், அதைப் படமெடுத்து எங்க தனிமனிதச் சுதந்திரத்தில் இவங்க மூக்கை நுழைச்சிட்டாங்கன்னு சொன்னா போதும் அத்தனை பயல்களுக்கும் ஆப்புத்தான்.

  ReplyDelete
 47. \\ ஏன் நம்ம நமீயை ‘ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்’டுன்னு சொல்லக்கூடாது.\\ ஷகீலாவெல்லாம் கனவுப் பண்ணி ....சாரி... கனவு கன்னியாக கோடி கட்டி பறக்கும் தேசத்தில் எல்லாம் பெரிசு பெரிசா இருக்கும் நமீ [நான் கையி , காலைச் சொன்னேன்...ஹி....ஹி...ஹி....] படங்கள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

  ReplyDelete
 48. @சி.பி.செந்தில்குமார் //நான் பதிவுலகில் பொதுவா சவால் விடறேன். எங்க அண்னன் மாதிரி டைட்டில் வைக்க யாராவது போட்டிக்கு முடியுமா> // இப்படி சும்மா இருக்குறவங்களை நோண்டி விடறதே உங்களுக்கு வேலையாப் போச்சு.

  ReplyDelete
 49. //அந்த வீடியோவில இருந்தது நாங்கதான், சந்தோஷத்துக்கு சல்சா பண்ணிக்கிட்டு இருந்தோம், அதைப் படமெடுத்து எங்க தனிமனிதச் சுதந்திரத்தில் இவங்க மூக்கை நுழைச்சிட்டாங்கன்னு சொன்னா போதும் அத்தனை பயல்களுக்கும் ஆப்புத்தான்.// அப்படி ஸ்வாமியைச் சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்.

  அடுத்தவன் பொண்டாட்டியை தள்ளிக்கிட்டு வந்து சரசம் பண்ணிட்டு, வெளில பிரம்மச்சரியம் போதித்தது தான் அந்தாளு செய்த தவறு. ஓஷோ மாதிரி செக்ஸுவல் எக்ஸ்பரிமெண்ட்னு சொல்லியிருந்தா,பிரச்சினையே இல்லை. என்ன ஒன்னு, ஓஷோவைச் சொன்ன மாதிரி செக்ஸ் சாமியார்னு சொல்லி இருப்பாங்க...இப்போ மட்டும் என்னவாம்.

  ReplyDelete
 50. @Jayadev Das //தேசத்தில் எல்லாம் பெரிசு பெரிசா இருக்கும் நமீ படங்கள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.// மலையாளக் கரையோரம் ஒதுங்குனா நிறையப் படம் கிடைக்கும் சார்.

  ReplyDelete
 51. அடிக்கடி நமீய டச் பண்றீங்க, சிபி சார்பா இதை வன்மையா கண்டிக்கிறேன்! (அப்புறம் ரஞ்சிதாவுக்கு வேற நல்ல போட்டோ கிடைக்கலீங்களா?)

  ReplyDelete
 52. @பன்னிக்குட்டி ராம்சாமி ரஞ்சிதா ஃபோட்டோவா..இருக்கு..ஆனா அதை ஏற்கனவே எல்லாரும் யூஸ் பண்ணிட்டாங்க பாஸ்.

  ReplyDelete
 53. // நாம "நம்ம பொண்டாட்டியைக்" கூட்டி வர இந்தப் பாடு //
  நம்ம பொண்டாட்டி? பொறவு எதுக்கு அவர் உங்க கிட்டே பேசணும்? இதுல பஞ்சு மிட்டாய் திங்கற பாப்பா மாதிரி நான் கேட்டது தப்பான்னு கேள்வி வேற. :P நீர் ஊமைக் குசும்பை கூட உள்நோக்கத்தோட பண்ற கில்லாடி :D

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.