Thursday, July 28, 2011

குஷ்பூ காலை உடைத்த சேட்டன்கள் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச சுத்தவிட்டு பார்க்கலாமா

எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
(சும்மா...டைமிங் சாங்!)

பதிவர்/நைனா புலம்பல்:
என் மகன் (ஒரு வயசு தான்) ரெண்டு நாள் முன்னாடி எங்க வீட்ல இருந்த டேபிள்ல வைக்கிற மன்த்லி காலண்டரை புரட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தான். ஒவ்வொரு மாசத்துக்கும் ஒவ்வொரு படம்னு நல்ல நல்ல சீனரீஸ் ஃபோட்டோவா இருந்துச்சு. அதுல ஒரு படத்தைப் பார்த்தா ஏர்ஹோஸ்டஸ் கூட்டம். பயபுள்ளை என்ன நினைச்சானோ தெரியலை, படக்குன்னு அதுக்கு முத்தம் கொடுத்துட்டான். நமக்கு ஆதி அந்தமெல்லாம் ஆடிப்போச்சு. தங்கமணி என்னடான்னா என்னை சுட்டெரிக்கிற மாதிரி பார்க்காங்க. அவன் தானே கொடுத்தான், நான் என்ன பண்ணேன்னு எனக்குப் புரியலை..மறுநாள் பார்த்தா அந்த காலண்டரைக் காணோம். எங்கேன்னு நான் கேட்கலை..கேட்க முடியுமா?
மகன் லெட்டரா?
அட மவனே, நான் உன்னைப் பத்தி ‘பிள்ளைக்கு தந்தை சொன்ன கதைகள்’னு ஏதாவது நல்ல பதிவு போடுவோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா, இப்படி இந்த வயசுலயே நானா யோசிச்சேன்ல எழுத வச்சிட்டியே, இது நியாயமா?

சிங்கப்பூர் சிங்கம்:எல்லோரும் தான் ஸ்டைல் பண்றாங்க. ஆனா நீ பண்றதெல்லாம் ஸ்டைல் ஆகுதே, எப்புடி தலைவா?


சேட்டன்களின் சேட்டை:
திமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணகர்த்தாவான தங்கத் தலைவி குஷ்பூ பத்தி இந்த வாரம் ஒரு சோகச் செய்தி. என்னங்க யோசிக்கீங்க.. ‘காரணகர்த்தா’ மேட்டர் தெரியாதா?..உங்க ஜீகே இன்னும் வளரணும் போலிருக்கே.. அப்போ முதல்ல அதைச் சொல்லுதேன்..


அதாவதுண்ணே, போன தேர்தல்ல அம்மணியை திமுகவுக்கு ஓட்டு கேட்க அனுப்பிச்சாங்களா..அப்போ இது பிரச்சாரத்துல ‘உங்களுக்கு என்னை மாதிரி கொழுக் மொழுக்குன்னு புள்ளை வேணுமாஆஆ’ன்னு கேட்டுச்சு. நம்ம ஆட்களும் ‘ஆமா..ஆமா’ன்னு சந்தோசமா வரிசையில நின்னாங்க. அப்புறம் இது சொல்லி இருக்கு ‘அப்படி வேணுமின்னா போய் ஒதய சூரியனுக்கு ஓட்டுப்போடுங்க..தானாப் பொறக்கும்’னு! எல்லாரும் கடுப்பாயிட்டாங்க. எந்த விஷயத்துல ஏமாத்துறதுன்னு விவஸ்தை வேண்டாம். அந்தக் கடுப்புல தான் எல்லாரும் ரெட்டை இலைக்கு குத்திட்டாங்க..ஓகே, இப்போ இந்த வார மேட்டருக்குப் போவோம்.
இந்த வாரம் தங்கத் தலைவி பத்தி வந்த நியூஸ் என்னன்னா ‘மலையாளப்பட ஷூட்டிங்கின் போது, மாடிப்படி செட் உடைந்து குஷ்பூ கால் முறிந்தது’! செய்தியைப் படிக்கவும் மனசு பதறிப்போச்சு. இந்த சேட்டன்களுக்கு எவ்வளவு சேட்டை பாருங்க. அம்மணியை ஒரிஜினல் மாடிப்படியே தாங்காதே, மாடிப்படி செட் எப்படித் தாங்கும்? கொஞ்சமாவது கூறு இருந்தா இப்படிப் பண்ணி இருப்பாங்களா? எல்லாம் நம்மளைப் பத்துன இளக்காரம்ணே..இதே ஷகீலாவா இருந்தா அந்த மாடிப்படி செட் மேல ஏத்தி இருப்பாங்களா?

அப்புறம் அம்மணியை ஆசுபத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க. அங்க இதை விட அதிர்ச்சியான செய்தி அம்மணிக்கு கிடைச்சிருக்கு. ‘கால்ல எலும்பு முறிவு. ரெண்டு வாரத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கணும்’னு அந்த டாக்டர் சொல்லியிருக்காரு. பெட் ரெஸ்ட்டா? அதுவும் ரெண்டு வாரத்துக்கா? ரொம்ம்பக் கஷ்டம் ஆச்சே..ம், ஓடியாடி ஒழைச்ச மனுஷி..இதைக் கேட்டு இடிஞ்சு போயிருப்பாரே!

ரவுடி மந்திரிகள்:
அதிமுக ஆட்சியோட சிறப்பம்சங்கள்ல ஒன்னு மந்திரிங்க பந்தாடப்படுறது. அவங்களுக்கு, விடிஞ்சு எழுந்தா மந்திரிப் பதவி இருக்குமான்னே தெரியாத சஸ்பென்ஸ் லைஃப் தான். இப்பவும் பந்தாட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆனா இப்போ ஓரளவு நல்ல காரணமும் சொல்றாங்க. மந்திரிங்கள்லாம் பயந்து போய்த்தான் திரியறாங்களாம். ஆஃபீஸ்ல உட்கார்ந்துக்கிட்டு சுத்திமுத்தும் பார்த்துட்டு ‘இதெல்லாம் அனுபவிக்கறதா, வேண்டாமா’ன்னு பவானி ஐபிஎஸ் ஸ்லோமோசன்ல வர்றதைப் பார்த்த ரவுடி மாதிரி புலம்புறாங்களாம்!
ஃப்ளாஷ்பேக்:
நான் நாலாப்பு படிக்கும்போது..........ஒருநாளு என் நண்பன் ஒருத்தன் என்னை வயக்காட்டுல கோலி விளையாடக் கூப்பிட்டான். எங்க வீட்ல யாரும் இல்லை. அதனால நானும் விளையாட வீட்டைப் பூட்டிட்டு கிளம்பினேன். அப்போ தான் ஒரு யோசனை. இப்படி வீட்டுச்சாவியை காட்டுக்கு கொண்டுபோறமே, தொலைஞ்சிருச்சுன்னா?..அதனால பத்திரமா இருக்கட்டும்னு ஜன்னல் வழியா எங்க வீட்டுக்குள்ளயே போட்டுட்டேன்!

கூட இருந்த நண்பன் ‘அய்யய்யோ..சாவியை உள்ள போட்டான்’ன்னு கத்தி ஊரையே கூட்டிட்டான். அப்புறம் நைனா வந்து கதவை உடைச்சு..ன்னு பெரிய ரகளை. அப்போ தான் வருங்காலத்துல நான் பெரிய்ய்ய ஆளா வருவேன்னு எங்க ஊரே புரிஞ்சிக்கிச்சு, நைனாவைத் தவிர!


டாக்டர் செங்கோவி:
பதிவெழுத வந்தப்புறம் சினிமா, அரசியல், நக்கல், நையாண்டின்னு எல்லாக் கர்மத்தைப் பத்தியும் எழுதியாச்சு..இந்த மருத்துவம் பத்தித் தான் இன்னும் ஒன்னும் எழுதலை..அதை மட்டும் எப்பிடி நல்லா இருக்க விடலாம்? 


அதுக்கு என்ன செய்யலாம்னு தான் இப்போ தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்..பேசாம ‘யூரின் அடைப்புக்கு யுனானி மருத்துவம்’னு எழுதியிருவோமா?..யாருக்காவது தேவைப்பட்டா சொல்லுங்கப்பா.


இல்லேன்னா.....மாப்ளை ஒருத்தனுக்கு செம ரகளையா சுன்னத் பண்ணி வைச்சோம். அதை வைச்சு ‘சுன்னத் செய்வது எப்படி’ன்னு ஒரு விழிப்புணர்வு பதிவு எழுதிடுவோமா? அதிலே ரெண்டு பிரச்சினை. முதப் பிரச்சினை என்னன்னா ‘எழுதுறது நானு!’..அதனால பதிவு எப்படி வரும்னு எனக்கே பயமா இருக்கு. ரெண்டாவது பிரச்சினை என் மாப்ளை அன்னைக்கு என் கையைப் பிடிச்சுக்கிட்டு ‘மச்சான், இந்த விஷயம் மட்டும் வெளில தெரிஞ்சா உன் மாப்ளையை நீ உசுரோட பாக்க முடியாது’ன்னு கதிகலங்கிச் சொன்னான். அதான் யோசிக்கேன்.......


நேற்றைய எக்ஸ்ட்ரா பதிவுக்கு : 

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_29


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

89 comments:

 1. @தமிழ்வாசி - Prakash பிரகாஷ், வடை வாங்குவதில் நீங்க ஃபர்ஸ்ட் மட்டும் இல்லை, பெஸ்ட்டும் தான்.

  ReplyDelete
 2. intha night time'kkum antha song timing song thaan

  ReplyDelete
 3. um magan flight'ku kiss panniyiruppaan. neenga thappaa purinjukittinga.

  ReplyDelete
 4. @தமிழ்வாசி - Prakash //um magan flight'ku kiss panniyiruppaan. neenga thappaa purinjukittinga.// அப்படி ஆறுதலா நாலு வார்த்தை சொல்லி அப்பன் மனசைத் தேத்துங்கய்யா.

  ReplyDelete
 5. பையன் பதினாறு அடிபாய்வான் போல இருக்கே...?

  ReplyDelete
 6. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பையன் பதினாறு அடிபாய்வான் போல இருக்கே...?//

  நம்ம பேரைக் காப்பாத்திடுவானோ?

  ReplyDelete
 7. என்னது குஷ்பக்காவுக்கு காலு உடஞ்சிடுச்சா........ யோவ் செங்கோவி, இன்னேரம் தீக்குளிச்சிருக்க வேணாமா? இப்படி உக்காந்து பதிவெழுதிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?

  ReplyDelete
 8. டாகுடரண்ணே, அந்த லேகிய மேட்டர எடுத்து விடுங்கண்ணே....! (ரெண்டு பதிவு அப்படி எழுதிட்டு, அப்புறம் ஊர் ஊரா லாட்ஜ்ல ரூம் போட்ரலாம்ணே...)

  ReplyDelete
 9. //யோவ் செங்கோவி, இன்னேரம் தீக்குளிச்சிருக்க வேணாமா? //

  எனக்கு குளிக்கறதுன்னாலே அலர்ஜிண்ணே!

  ReplyDelete
 10. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பையன் பதினாறு அடிபாய்வான் போல இருக்கே...?//

  நம்ம பேரைக் காப்பாத்திடுவானோ?
  //////

  அடங்கொன்னியா.... இதுல பேரு வேற.....?

  ReplyDelete
 11. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ரெண்டு பதிவு அப்படி எழுதிட்டு, அப்புறம் ஊர் ஊரா லாட்ஜ்ல ரூம் போட்ரலாம்ணே...)//

  பதிவு எழுதாம லாட்ஜுல ரூம் போட வழி இல்லையா?

  ReplyDelete
 12. //////செங்கோவி said...
  //யோவ் செங்கோவி, இன்னேரம் தீக்குளிச்சிருக்க வேணாமா? //

  எனக்கு குளிக்கறதுன்னாலே அலர்ஜிண்ணே!
  /////

  அப்படின்னா நம்ம தமிழ்வாசி பிரகாஷ் இருக்கவே இருக்காரு, அவரை ரெடி பண்ணிடுவோம்.....

  ReplyDelete
 13. /////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ரெண்டு பதிவு அப்படி எழுதிட்டு, அப்புறம் ஊர் ஊரா லாட்ஜ்ல ரூம் போட்ரலாம்ணே...)//

  பதிவு எழுதாம லாட்ஜுல ரூம் போட வழி இல்லையா?
  ///////

  அப்படின்னா தமிழகத்தின் புகழ் பெற்ற தொலைக்காட்சி/வாரப்பத்திரிக்கைகள்ல வாலிப வயோதிக அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது பண்ணா என்னாகும்னு ஒரு விளம்பரம் கொடுத்திருங்கண்ணே.....

  ReplyDelete
 14. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்படின்னா நம்ம தமிழ்வாசி பிரகாஷ் இருக்கவே இருக்காரு, அவரை ரெடி பண்ணிடுவோம். //

  நல்ல ஐடியாண்ணே..சேட்டன்களையும் அலற வைக்கணும்..ஷகீலாவை கடத்திடுவோமாண்ணே?

  ReplyDelete
 15. ///// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்படின்னா நம்ம தமிழ்வாசி பிரகாஷ் இருக்கவே இருக்காரு, அவரை ரெடி பண்ணிடுவோம். //

  நல்ல ஐடியாண்ணே..சேட்டன்களையும் அலற வைக்கணும்..ஷகீலாவை கடத்திடுவோமாண்ணே?
  //////

  கடத்திடலாம்ணே, ஆனா எப்படி கொண்டு போறது? கண்டெயினர் லாரிக்கு பயங்கர தட்டுப்பாடா இருக்காமே?

  ReplyDelete
 16. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கடத்திடலாம்ணே, ஆனா எப்படி கொண்டு போறது? கண்டெயினர் லாரிக்கு பயங்கர தட்டுப்பாடா இருக்காமே? //

  ஹா..ஹா..கண்டெய்னர் ஓனரு யாராவது பதிவரா இருக்காங்களான்னு கண்டுபிடிப்போம்ணே.

  ReplyDelete
 17. ///// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கடத்திடலாம்ணே, ஆனா எப்படி கொண்டு போறது? கண்டெயினர் லாரிக்கு பயங்கர தட்டுப்பாடா இருக்காமே? //

  ஹா..ஹா..கண்டெய்னர் ஓனரு யாராவது பதிவரா இருக்காங்களான்னு கண்டுபிடிப்போம்ணே.
  /////////

  அது நீங்கதானே? (நமீதாவுக்காக நீங்க ஏற்கனவே ஒரு கண்டெயினர் ரெடி வெச்சிருக்கீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்ணே..)

  ReplyDelete
 18. அப்புறம் நமீயை என்ன செய்றதாம்?..அதனால அந்த திட்டத்தை ட்ராப் பண்றேன்.

  ReplyDelete
 19. //////செங்கோவி said...
  அப்புறம் நமீயை என்ன செய்றதாம்?..அதனால அந்த திட்டத்தை ட்ராப் பண்றேன்.
  ////

  பரவால்ல ஒரு கப்பல் வாங்கி ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய்டுங்க.....

  ReplyDelete
 20. நல்லா இருக்குது இந்த கூத்து.....
  அப்பா நினைத்திருந்ததை மகன் செய்துட்டான்..மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....
  எனது கனா.................

  ReplyDelete
 21. இதத்தான் அப்பா டக்கர் ஸ்பெஷல்னு சொன்னீங்களா மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 22. பள்ளிக் கூடம் போகலாமா
  அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
  சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
  மணச சுத்தவிட்டு பார்க்கலாமா

  எல்லோருக்கும் நல்ல பாடம்
  சொல்லாமலே புரியும் பாடம்
  (சும்மா...டைமிங் சாங்!)//

  ஆகா..கப்டனோடை பாட்டை...கலக்கலா மீட்டியிருக்கிறீங்களே.
  பள்ளிக் கூட நினைவு வந்திட்டுதா;-))

  ReplyDelete
 23. பதிவர்/நைனா புலம்பல்//

  பாவமே,ஒரு வேளை நீங்க நமீதா படம் நெட்டில் தேடி முத்தம் கொடுப்பதை மகன் பார்த்திருப்பாரோ;-))

  ReplyDelete
 24. சிங்கப்பூர் சிங்கம்://

  தலைவருக்கு நிகர். அவரே தான்.

  ReplyDelete
 25. சேட்டன்களின் சேட்டை://

  குஷ்பூ மேட்டரை, ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு வாற மாதிரி எழுதியிருக்கிறீங்க மச்சி,

  ReplyDelete
 26. ரவுடி மந்திரிகள்://

  இப்படியாச்சும் நாட்டுக்கு நன்மை வரட்டுமே மாப்பு.

  ReplyDelete
 27. ஃப்ளாஷ்பேக்://

  அடப் பாவி, திறப்பை உள்ளே போட்டுட்டு, இப்படிப்
  பண்ணிட்டீங்களா;-))
  உங்களுக்கு உடம்பு பூரா மூளை இருக்கும் போல தோனுதே;-)))

  அவ்...அவ்...

  ReplyDelete
 28. டாக்டர் செங்கோவி://

  எழுதுங்க மாப்பு, யூரின் பற்றி...
  படிக்கத் தானே நாம இருக்கோம்.
  ஹி....ஹி...

  ReplyDelete
 29. ஏய் யார்ரா அது தானைத்தலைவி குஸ்பு மேடத்தை இந்த பொசிசன்ல படம் எடுத்து போடுறது??

  ReplyDelete
 30. //அட மவனே, நான் உன்னைப் பத்தி ‘பிள்ளைக்கு தந்தை சொன்ன கதைகள்’னு ஏதாவது நல்ல பதிவு போடுவோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா, இப்படி இந்த வயசுலயே நானா யோசிச்சேன்ல எழுத வச்சிட்டியே, இது நியாயமா?/
  ஹிஹி என்ஜாய்!!

  ReplyDelete
 31. //
  எல்லோரும் தான் ஸ்டைல் பண்றாங்க. ஆனா நீ பண்றதெல்லாம் ஸ்டைல் ஆகுதே, எப்புடி தலைவா?//
  படத்த பாருங்க சார்!!!கடவுளே ஏன்னா ச்டயிலு!

  ReplyDelete
 32. ஆகா! ஜூனியர் செங்கோவி கலக்குறானே!
  என்னா ஒரு துணிச்சல்! இந்த வயசுல! உங்களால முடியுமாண்ணே?

  ReplyDelete
 33. ஆமா அப்புறம் உங்களுக்கு என்ன நடந்தது? மறைக்கிறமாதிரி தெரியுதே? சரி விடுங்கண்ணே!
  அப்பா நினைக்கிறான் - மகன் செய்றான்னு பெருமைப்படுங்க!

  ReplyDelete
 34. //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  டாகுடரண்ணே, அந்த லேகிய மேட்டர எடுத்து விடுங்கண்ணே....! (ரெண்டு பதிவு அப்படி எழுதிட்டு, அப்புறம் ஊர் ஊரா லாட்ஜ்ல ரூம் போட்ரலாம்ணே...)

  அதென்னது? நிறைய மேட்டர் வச்சிருக்கீங்க போலிருக்கே!

  அண்ணே! அந்த மேட்டரை எழுதுங்க!
  :-)//

  ReplyDelete
 35. @பன்னிக்குட்டி ராம்சாமி
  அப்படின்னா நம்ம தமிழ்வாசி பிரகாஷ் இருக்கவே இருக்காரு, அவரை ரெடி பண்ணிடுவோம்.....>>>>

  ஏன் இந்த கொலை வெறி??

  ReplyDelete
 36. டாக்டர் செங்கோவி எப்போ பதிவு எழுதுவார். காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 37. நகைச்சுவை எழுத்து நடை நதி பிராகவமாய் ஒடி வந்திருக்கிறதே,மூழ்கினேன் நானும் கொஞ்சம் அதில்!!!!!!

  ReplyDelete
 38. நகைச்சுவை எழுத்து நடை.

  ReplyDelete
 39. அஞ்சு பதிவுல சொல்ற விசயங்களை அஞ்சே நிமிசத்துல சொல்றீங்க.

  பையன் வருங்காலத்தில் ஏரோப்பிளேன் ஓட்டும் சாத்தியம் தெரியுதே:)

  ReplyDelete
 40. >>நேற்றைய எக்ஸ்ட்ரா பதிவுக்கு :


  hi hi அண்ணே. இதுல எனி டபுள் மீனிங்க்?

  ReplyDelete
 41. >>>எனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright!. Simple template. Powered by Blogger.


  hi hi hi

  ReplyDelete
 42. \\பயபுள்ளை என்ன நினைச்சானோ தெரியலை, படக்குன்னு அதுக்கு முத்தம் கொடுத்துட்டான்.\\ "அதப்" பத்தின விவரம் சின்னப் பசங்களுக்கு தெரியாது என்று தங்கமணி சொல்லும்போது, இல்லை தெரியும் என்று நான் சொன்னால் நம்புவதில்லை. உண்மையில் அதுங்களுக்கும் தெரியும். இப்போ நித்தி கோர்டில் என்னுடைய வளர்ச்சி [அதாவது பாலியல் ரீதியான வளர்ச்சி மட்டும் ஆப் பண்ணிட்டானாம்] ஆறு வயது பையனுடையது, நான் எப்படி "அதை" செய்திருக்க முடியும் என்று வாதாடுகிரானாம், .........ங்கொய்யால ஆறு வயசுப் பயனுக்கும் அத்துபடியா "இது தெரியும்டியோவ்".

  ReplyDelete
 43. \\‘உங்களுக்கு என்னை மாதிரி கொழுக் மொழுக்குன்னு புள்ளை வேணுமாஆஆ’ன்னு கேட்டுச்சு. \\உன்னைய மாதிரியா? ஐயோ, சாமி வேண்டவே வேண்டாமடி....

  ReplyDelete
 44. \\அம்மணியை ஒரிஜினல் மாடிப்படியே தாங்காதே, மாடிப்படி செட் எப்படித் தாங்கும்?\\\ ஹி...ஹி...ஹி..........

  ReplyDelete
 45. \\ஓடியாடி ஒழைச்ச மனுஷி..\\ என்னது ஒழைப்பா..... நீ எதப்பா சொல்றே?

  ReplyDelete
 46. \\பவானி ஐபிஎஸ் ஸ்லோமோசன்ல வர்றதைப் பார்த்த ரவுடி மாதிரி புலம்புறாங்களாம்!\\ சினேகா மாதிரி ஒரு ஆபிசர் கிட்ட கைதாவது, உதை வாங்குவது என்றால், நாம் எல்லோருமே ரவுடியாயிடலாம். ஹி...ஹி...ஹி....

  ReplyDelete
 47. அண்ணே உங்கள மாதிரி தானே உங்க பையனும் இருப்பாரு .

  இந்த குஷ்பு படலாம் அண்ணனுக்கு எங்கருந்து கெடைக்குதுன்னு தெரியல ,அட அட என்ன ஒரு கலரு, சைட்டு, பிகரு ,,சூப்பர் ஆண்ட்டி

  அப்பறம் டாக்டர் செங்கோவி சேலம் சிவராஜ் சித்தவைத்திய சாலைக்கு போட்டியா வந்துட வேண்டியதுதானே ,அவரு மாதிரி நீங்களும் " டே அப்படி செய்யாதிங்கடான்னு " முட்டி முட்டி அழுதாஎப்படி இருக்கும் சூப்பெரா இருக்கும்ல

  ReplyDelete
 48. \\அதனால பத்திரமா இருக்கட்டும்னு ஜன்னல் வழியா எங்க வீட்டுக்குள்ளயே போட்டுட்டேன்!\\ நீங்களாவது நாலாப்பு படிக்கும்போது பண்ணுனீங்க, நானு அப்பப்போ இப்பவும் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். [வீட்டு சாவியில் ஒன்றை உள்ளே வைத்து பூட்டிவிட்டு ஊருக்குப் போனோம், திரும்ப வருபோது அந்த ஒரு சாவியை ஊரிலேயே விட்டுவிட்டு வந்து விட்டோம், அப்புறம் என்ன குய்யோ, முறையோ ..... என்று ஒரே களேபரம் தான்..]

  ReplyDelete
 49. \\டாக்டர் செங்கோவி\\ TV ல தமிழ நாட்டு இளைஞர்கள் கெட்டுப் போய் விட்டதாகவும், தமிழ்ப் பெண்கள் தினமும் கண்ணீர் விடுவதாகவும் சொல்லி அழும் டாக்குடரைப் பார்த்ததுண்டா.... அதுலதான் நல்ல துட்டு. [இல்லைன்னா தினமும் ஒரு மணி நேரம் பல டி.வி.யில விளம்பரம் பண்ண முடியுமா?]

  ReplyDelete
 50. //ஆகுலன் said... [Reply]
  நல்லா இருக்குது இந்த கூத்து.....
  அப்பா நினைத்திருந்ததை மகன் செய்துட்டான்..//

  அய்யய்யோ..நான் நினைக்கலே..நினைக்கலே!

  ReplyDelete
 51. // விக்கியுலகம் said... [Reply]
  இதத்தான் அப்பா டக்கர் ஸ்பெஷல்னு சொன்னீங்களா மாப்ள // அப்படியும் வச்சிக்கலாம்.!!

  ReplyDelete
 52. நிரூபன் said... [Reply]
  //ஒரு வேளை நீங்க நமீதா படம் நெட்டில் தேடி முத்தம் கொடுப்பதை மகன் பார்த்திருப்பாரோ;-)) // அப்ப்டியும் இருக்குமோ..

  //குஷ்பூ மேட்டரை, ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு வாற மாதிரி எழுதியிருக்கிறீங்க மச்சி, // குஷ்பூ மேட்டர்னாலே கிளுகிளுப்பு தான் மச்சி!

  //உங்களுக்கு உடம்பு பூரா மூளை இருக்கும் போல தோனுதே;-)))// ஆமாம் நிரூ..ஆனா சில பேரு அதை கொழுப்புன்னு சொல்றாங்களே..

  ReplyDelete
 53. / மைந்தன் சிவா said... [Reply]
  ஏய் யார்ரா அது தானைத்தலைவி குஸ்பு மேடத்தை இந்த பொசிசன்ல படம் எடுத்து போடுறது?? // அந்த புண்ணியவானைத் தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்.

  ReplyDelete
 54. ஜீ... said... [Reply]
  //ஆகா! ஜூனியர் செங்கோவி கலக்குறானே!
  என்னா ஒரு துணிச்சல்! இந்த வயசுல! உங்களால முடியுமாண்ணே? // எப்படி முடியும், அதுவும் தங்கமணி இருக்கும்போதே!!..கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு ஜீ!

  //ஆமா அப்புறம் உங்களுக்கு என்ன நடந்தது? மறைக்கிறமாதிரி தெரியுதே? சரி விடுங்கண்ணே! // விட்டதுக்கு நன்றி ஜீ.

  ReplyDelete
 55. தமிழ்வாசி - Prakash said... [Reply]
  //டாக்டர் செங்கோவி எப்போ பதிவு எழுதுவார். காத்திருக்கிறோம். // எந்தப் பதிவு?

  ReplyDelete
 56. R.Elan. said... [Reply]
  //நகைச்சுவை எழுத்து நடை நதி பிராகவமாய் ஒடி வந்திருக்கிறதே,மூழ்கினேன் நானும் கொஞ்சம் அதில்!!!!!! //

  அய்யய்யோ.....இது கூவம் நதியாச்சே பாஸ்..முங்குன உடனே தெரிஞ்சிருக்குமே.

  ReplyDelete
 57. சே.குமார் said... [Reply]
  //நகைச்சுவை எழுத்து நடை. // கமெண்ட்டை காப்பி பேஸ்ட் பண்ற ஒரே ஆளு நீர்தாம்யா.

  ReplyDelete
 58. //ராஜ நடராஜன் said... [Reply]

  பையன் வருங்காலத்தில் ஏரோப்பிளேன் ஓட்டும் சாத்தியம் தெரியுதே:)// ‘மட்டும்’னு ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களே கமெண்ட்ல!

  ReplyDelete
 59. சி.பி.செந்தில்குமார் said... [Reply]
  //நேற்றைய எக்ஸ்ட்ரா பதிவுக்கு : ...hi hi அண்ணே. இதுல எனி டபுள் மீனிங்க்? //

  இதுல என்னய்யா டபுள் மீனிங் இருக்கு?

  //hi hi hi // விடுங்கய்யா..விடுங்கய்யா!

  ReplyDelete
 60. Jayadev Das said... [Reply]
  //இப்போ நித்தி கோர்டில் என்னுடைய வளர்ச்சி [அதாவது பாலியல் ரீதியான வளர்ச்சி மட்டும் ஆப் பண்ணிட்டானாம்] ஆறு வயது பையனுடையது, நான் எப்படி "அதை" செய்திருக்க முடியும் என்று வாதாடுகிரானாம்//

  எனக்கும் அதான் கோபம் சார்..ரஞ்சி கிடைச்சும் வேஸ்ட் பண்ணிட்டானே!

  \\ஓடியாடி ஒழைச்ச மனுஷி..\\ என்னது ஒழைப்பா..... நீ எதப்பா சொல்றே? //

  இப்படி என் வாயைக் கிண்டியே அடி வாங்கிக் கொடுங்க.

  //சினேகா மாதிரி ஒரு ஆபிசர் கிட்ட கைதாவது, உதை வாங்குவது என்றால், நாம் எல்லோருமே ரவுடியாயிடலாம்.// நாம-ன்னு சொன்னட் பரந்த மனசுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 61. நா.மணிவண்ணன் said...

  //அண்ணே உங்கள மாதிரி தானே உங்க பையனும் இருப்பாரு .// கேட்கவே ரொம்பப் பெருமையா இருக்குய்யா.

  //இந்த குஷ்பு படலாம் அண்ணனுக்கு எங்கருந்து கெடைக்குதுன்னு தெரியல ,அட அட என்ன ஒரு கலரு, சைட்டு, பிகரு ,,சூப்பர் ஆண்ட்டி// போதும் மணி..போதும்.

  //அவரு மாதிரி நீங்களும் " டே அப்படி செய்யாதிங்கடான்னு " முட்டி முட்டி அழுதாஎப்படி இருக்கும் சூப்பெரா இருக்கும்ல // அடப் பாவி மனுசா..முதல்ல மணியை முட்டி முட்டி அழ வைக்கணும்.(நாங்களும் போடுவோம்ல)

  ReplyDelete
 62. Jayadev Das said...
  //நீங்களாவது நாலாப்பு படிக்கும்போது பண்ணுனீங்க, நானு அப்பப்போ இப்பவும் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.// இப்பவும் நீங்க ஒரு குழந்தையா சார்?

  //தமிழ்ப் பெண்கள் தினமும் கண்ணீர் விடுவதாகவும் சொல்லி அழும் டாக்குடரைப் பார்த்ததுண்டா..// அதெல்லாம் விட்டுடுவாங்க சார்.நம்மன்னா....

  ReplyDelete
 63. // ரெண்டு வாரத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கணும்//

  குஷ்புதான ரெஸ்ட் எடுக்கணும். பெட் எதுக்கு ரெஸ்ட் எடுக்கணுமாம். அதுக்குமா அடி பட்டுருக்கு.

  ReplyDelete
 64. வேலை சம்மந்தப்பட்ட பதிவுகள் ரொம்ப நாளா மிஸ்ஸிங். அதை அடிக்கடி போடுங்க செங்கோவி!

  ReplyDelete
 65. //பதிவெழுத வந்தப்புறம் சினிமா, அரசியல், நக்கல், நையாண்டின்னு எல்லாக் கர்மத்தைப் பத்தியும் எழுதியாச்சு..இந்த மருத்துவம் பத்தித் தான் இன்னும் ஒன்னும் எழுதலை..அதை மட்டும் எப்பிடி நல்லா இருக்க விடலாம்? //
  ஆகா!நல்ல ஐடியாவா இருக்கே.சுட்டுடலாமா?!

  எப்படியோ,கால் முறிவு பொதுக்குழுக் கூட்டத்துக்குப் போகாமல் இருக்க உதவியது ’குஷ்’ க்கு!

  ReplyDelete
 66. ///அட மவனே, நான் உன்னைப் பத்தி ‘பிள்ளைக்கு தந்தை சொன்ன கதைகள்’னு ஏதாவது நல்ல பதிவு போடுவோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா, இப்படி இந்த வயசுலயே நானா யோசிச்சேன்ல எழுத வச்சிட்டியே, இது நியாயமா?///

  பயபுள்ள தகப்பன் மாதிரியே இருக்காரே. ஹிஹிஹி.

  இருந்தாலும் குட்டி செங்கோவியும் எதிர்காலத்தில கலக்கலா பதிவெழுத வாழ்த்துக்கள்.!!

  ReplyDelete
 67. Paathunne...islamiya samoogam ethirppu ethirpu therivikka poguthu...

  ReplyDelete
 68. அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு

  விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா
  முளைக்கும்

  இந்த ரெண்டு பழமொழிக்கும் என்ன அர்த்தம் நண்பரே
  ஹி ஹி ஹி தமாசு

  ReplyDelete
 69. நல்லா உட்கார்ந்து யோசிக்கிறீங்க பாஸ்

  நகைச்சுவையான வரிகள்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 70. இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

  வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

  ReplyDelete
 71. //சென்னை பித்தன் said...

  எப்படியோ,கால் முறிவு பொதுக்குழுக் கூட்டத்துக்குப் போகாமல் இருக்க உதவியது ’குஷ்’ க்கு! //

  நல்லவேளை போகலை..

  ReplyDelete
 72. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  நீங்களா யோசிச்சீங்களா? //

  இல்லே, மண்டபத்துல எழுதிக்கொடுத்தாங்க பாஸ்.

  ReplyDelete
 73. //மருதமூரான். said...

  பயபுள்ள தகப்பன் மாதிரியே இருக்காரே. //

  அதான் பயமா இருக்கு!

  ReplyDelete
 74. // டக்கால்டி said...
  Paathunne...islamiya samoogam ethirppu ethirpu therivikka poguthu...//

  அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஓ...சுன்னத் மேட்டரா? கிண்டல் இல்லை பாஸ், சீரியசாவே தான் அதை எழுதலாமான்னு யோசிக்கிறேன்..ஒரு மருத்துவக் காரணத்துக்காக மாப்ளைக்கு செஞ்சோம்.

  ReplyDelete
 75. // சிவகுமார் ! said...
  வேலை சம்மந்தப்பட்ட பதிவுகள் ரொம்ப நாளா மிஸ்ஸிங். அதை அடிக்கடி போடுங்க செங்கோவி!//

  ஆமாம் சிவா..எழுதணும்..நன்றி.

  ReplyDelete
 76. சாவி மேட்டர் சூப்பர்
  இதைதான் ''விளையும் பயிர் முளையிலே தெரியும்'' என்றார் பெரியோர்.

  ReplyDelete
 77. @DRபாலா எனக்கும் அந்தப் பழமொழி ஞாபகம் இருந்துச்சு டாக்டர்..ஆனா அதை நான் எழுதுனா நம்மாளுக உண்டு-இல்லைன்னு ஆக்கிடுவாங்கன்னு தான் எழுதலை!

  ReplyDelete
 78. உங்கள எனக்கு பதிவுகள் மூலமாதான் தெரியும்... தெரிஞ்ச வரைக்கும் என்ன தோணுதுண்னா "அப்பாவுக்கு புள்ள தப்பாமா பொறந்திருக்கு"... :)

  ReplyDelete
 79. ஆஆ படங்கள் சூப்பர்இதையும் பார்க்கவும்http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

  ReplyDelete
 80. @AJ //உங்கள எனக்கு பதிவுகள் மூலமாதான் தெரியும்... தெரிஞ்ச வரைக்கும் என்ன தோணுதுண்னா "அப்பாவுக்கு புள்ள தப்பாமா பொறந்திருக்கு"... :)//

  நேர்ல பழகுனவங்களும் இதே தான் சொல்றாங்க பாஸ்.

  ஆனா ஒன்னு..எவ்வளவு கேவலமான விஷயமா இருந்தாலும் என் பையனும் நான் ‘பண்ணதையே’ பண்றதைப் பார்க்கும்போது சந்தோசமாத் தான் இருக்கு.

  ReplyDelete
 81. //ரா. ராஜ்குமார் said...
  ஆஆ படங்கள் சூப்பர்//

  ரைட்டு.

  ReplyDelete
 82. ஆஹா... நீங்க நெட்ல யாருக்கோ கொடுத்தத பயபுள்ள பாத்துட்டாரு போலருக்கு ,,ஹி ஹி... இனி காலாண்டரே வீட்டில இருக்காதுன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 83. இன்று எனது வலைப்பதிவில்

  நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

  நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

  http://maayaulagam-4u.blogspot.com

  ReplyDelete
 84. ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி நண்பரே...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 85. Hi Friend This Is Mohan VelloreWe buyd one script (cannot copy) your content anyone Copying ?This problem Was SolvedPlz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)You Need This Just Rs 500 Lets buy Contact Mohanwalaja@gmail.com

  ReplyDelete
 86. @ஷீ-நிசி //ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி நண்பரே...//

  உங்க மனசு நிறைஞ்சதில் சந்தோசம் நண்பரே.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.