Saturday, August 13, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_34

யோஹன்னா!

போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள். அதீத தனிமனித சுதந்திரக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளான யோஹன்னாவின் தாயும் தந்தையும் ஒருகட்டத்தில் ஒப்பந்தத்தை முறித்து தனியே பிரிந்தனர். யோஹன்னாவிற்கு விவரம் தெரியும்போதே அப்பா அவளுடன் இல்லை. 

யோஹன்னாவின் அம்மா அந்தப் பிரிவு தந்த சோகத்தை மறக்க குடியில் மூழ்கினாள். யோஹன்னா வேறு வழியின்றி தன் வாழ்வைத் தானே அமைத்துக்கொள்ள படிப்பில் தீவிரமாக இறங்கினாள். ஆர்க்கிடெக்ட்டில் பட்டப்படிப்பு சேர்ந்தாள். கூடவே அம்மாவை குடியில் இருந்து மீட்டு எடுக்கும் போராட்டத்தை நடத்தினாள். அதற்கு விபரீதமான பலன் கிடைத்தது.

தொடர்ந்த சிகிச்சையின் பலனாக குடியில் இருந்து மீண்டாள் யோஹன்னாவின் அம்மா. ஆனாலும் கணவனைப் பிரிந்த சோகத்தை தணித்துக்கொள்ள திடீரென்று ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வந்து நின்றாள். யோஹன்னா அதிர்ச்சியடைந்தாள். பட்டப் படிப்பும் முடிந்துவிட்ட நிலையில் இனியும் தான் அங்கிருப்பது சரியில்லையென்று அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் யோஹன்னா. தாயன்பும் இல்லையென்றாக, அதீத சுதந்திரக் கலாச்சாரத்தின் எச்சில் இலையானாள் யோஹன்னா.

வெளியே சின்னஞ்சிறிய அபார்டெண்ட் அறையொன்றை குறைந்த வாடகைக்குப் பிடித்துத் தங்கினாள். அப்போது தான் படிப்பை முடித்திருந்த யோஹன்னாவிற்கு ஒரு இஞ்சினியரிங் கம்பெனியில் ட்ரெய்னியாக வேலை கிடைத்தது. கிடைத்த சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட மிகவும் கஷ்டப்பட வேண்டி வந்தது. 

தனியே தங்கியிருந்த போதே தன்னைப்பற்றிய கழிவிரக்கத்திற்கு ஆளானாள் யோஹன்னா. தாயின் திருமணத்தை விட தந்தையின் முகமறியா நிலைமை அவளை வருத்தியது. உலகத்தில் எங்கு இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அப்பா என்றால் தனிப் பிரியம் தான். சிறு வயதில் ஸ்கூலி ல்படிக்கும்போது, மற்ற பிள்ளைகள் தன் அப்பா பற்றி பல கதைகளைச் சொல்லும்போது, யோஹன்னாவிற்கு கஷ்டமாக இருக்கும். வீட்டிற்கு வந்து ‘ஏம்மா, எனக்கு மட்டும் அப்பா இல்லை?” என்று கேட்டு அழுவாள். அவள் அம்மா அதனாலேயே அதிகமாகக் குடிப்பாள்.

யோஹன்னாவிற்கு உண்மையான பிரச்சினை அவள் பெரிய பெண் ஆன பிறகே தொடங்கியது. அவள் அன்பான உறவுக்காக ஏங்க, சுற்றி இருந்த ஆண்களோ அவளது வாளிப்பான உடலுக்காக ஏங்கினர். ஃப்ரீ செக்ஸ் கலாச்சாரத்தில் தந்தையும் இல்லாத நிலையில் அவள் தன்னைக் காத்துக்கொள்ள மிகவும் போராட வேண்டியிருந்தது. எல்லா நட்புமே செக்ஸை வேண்டியே வருவதை அறிந்து நொந்தாள். தன் தந்தையிடம் கிடைக்காத அன்பைத் தருபவன் எவனோ, அவனுக்கே தன்னைத் தருவதென்று முடிவு செய்தாள்.

தான் தங்கியிருந்த வெர்டால் ஏரியாவில், தன் அப்பார்ட்மெண்ட்டிற்கு அருகில் இருந்த ரெஸ்ட்டாரண்டில் டின்னர் சாப்பிடுவது யோஹன்னாவின் வழக்கம். கொஞ்ச நாட்களாகவே அதே ஹோட்டலுக்கு புதிதாக ஒருவன் சற்று சோகமான முகத்துடன் வருவதைக் கவனித்தாள். ’அவன் அதிகம் பேசுவதில்லை. தனியே வருகின்றான். என்ன தான் பிரச்சினை அவனுக்கு’ என்ற ஆர்வம் யோஹன்னாவிற்கு வந்தது. 

யோஹன்னாவின் பரிதாபத்துக்கு ஆளான ஆண் மகன் என் அருமை நண்பன் மதனே. மேட்டர்களிடம் மேட்டர் பண்ணுவதில் ஒரு மேட்டரும் இல்லையென்ற அரிய உண்மையை அறிந்த சோகத்திலேயே மதன் அங்கே அவ்வாறு அமர்ந்திருந்தான். அவனும் கொஞ்ச நாட்களாக யோஹன்னாவை கவனித்தபடியே இருந்தான். அடிப்படையில் தமிழனான மதனுக்கு யோஹன்னாவின் புஷ்டியான தேகம் கடும் கிளர்ச்சியைக் கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை தான்.

’இது மாட்டினால் நல்லா இருக்குமே..இனி எத்தனை நாளைக்கு இப்படி எதையோ தின்ற எதுவோ மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்திருப்பது. டெய்லி இரண்டு, மூன்றுடன் இரண்டு மூன்றைப் பார்த்துவிட்டு, இப்படி திடீரென்று நிறுத்துவதால் ஏதேனும் பின்/முன் விளைவுகள் ஏற்படுமா’ என்று சீரியஸாக யோசித்தபடியே இருந்த மதனின் பக்கத்தில் திடீரென யோஹன்னா வந்து நின்றாள்.

மதனுக்கு சிந்தனை, மூச்சு எல்லாம் நின்றது. அவ்வளவு அருகில் வெள்ளை தேகத்தைப் பார்த்து பிரமித்துப்போனான்.

“ஹாய்..நான் இங்க உட்காரலாமா?” என்றாள் யோஹன்னா.
“நோ பிராப்ளம்” 
“நீங்க ஏசியாவா?”
“ஆமாம்”
“ஏசியால எங்க?’
“இந்தியா”
“ஓ..இந்தியா..ஐ நோ...என்கூட சில இண்டியன் ஸ்டூடண்ட்ஸ் படிச்சாங்க..ஐ லைக் இண்டியன் கல்ச்சர் வெரி மச்” என்றாள்.

ஒரு டொச்சு ஃபிகர் கிடைக்கவே பல நாள் பல போராட்டம் நடத்த வேண்டிய இண்டியன் கல்ச்சரில் லைக் பண்ண என்ன இருக்கு என்று மதன் முழித்தான்.

“நீங்க உங்க குடும்பத்துக்கு ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுப்பீங்களாமே.. அப்படியா?” ஆர்வத்துடன் கேட்டாள்.

மதன் விழித்துக்கொண்டான். தூண்டிலில் எந்தப் புழுவை மாட்டினால், இந்த மீன் சிக்கும் என்று உடனே புரிந்தது.

“ஆமாம்..குழந்தைகளுக்காகவே வாழ்நாள் பூரா அட்ஜஸ்ட் பன்ணிக்கிட்டு ஒன்னா வாழ்கிற பெற்றோர் நிறைஞ்ச தேசம் அது. குடும்பம்ங்கிறது எங்கள் வம்சத்தின் நீட்சி. அது பட்டுப்போக நாங்கள் விடுவதில்லை” என்றான்.

யோஹன்னாவை அந்த வார்த்தைகள் சரியாகத் தாக்கியது. 

“ஓ..உங்களுக்கும் குடும்பம் இருக்கா?”
“ம்”
”ஓ..”
“அப்பா மட்டும்!” என்று அவசரமாகச் சொன்னான்.

“அப்போ அம்மா?”

மதனின் கண் கலங்கத் தொடங்கியது. 

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

85 comments:

 1. மன்மதா... ஆகா... சக்..சக்... மந்திரம்... ஆகா.... சக்...சக்...

  ReplyDelete
 2. என்னய்யா இது தமிழ்வாசி வர்ற விதமே சரியில்லையே..

  ReplyDelete
 3. நேத்து துப்பாக்கி காமிச்சதுல இருந்து தமிழ்மணம் உடனே இணையுதே...

  ReplyDelete
 4. போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள்.>>>>

  அந்த ஒப்பந்தத்திற்கு சாட்சி யாருங்கோ?

  ReplyDelete
 5. // தமிழ்வாசி - Prakash said...
  நேத்து துப்பாக்கி காமிச்சதுல இருந்து தமிழ்மணம் உடனே இணையுதே.//

  ஆமா, தமிழ்மணம் டைவர்ஸ் பண்ணிடுச்சுன்னு நினைக்கேன்..

  ReplyDelete
 6. போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள். //
  நல்ல ஒப்பந்ததம்!

  ReplyDelete
 7. Unlike Western girls are shown in Holywood movies, European girls really value relationships, they always wanted to settle with someone , but the problem is they can not digest being dishonest. Our South Asian guys always misunderstood freedom of Sex as Free Sex.
  Looking forward to the next episode, mean while let me search

  ReplyDelete
 8. // தமிழ்வாசி - Prakash said...
  போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள்.>>>>

  அந்த ஒப்பந்தத்திற்கு சாட்சி யாருங்கோ?//

  சாட்சி ஆதாரம் எல்லாம் யோஹன்னா தான்.

  ReplyDelete
 9. //கோகுல் said...
  போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள். //
  நல்ல ஒப்பந்ததம்!//

  உங்களுக்கும் அந்த ஒப்பந்தம் பிடிக்குமா கோகுல்?

  ReplyDelete
 10. யாஹன்னாவின் வரலாறு..... அவங்களே உங்களை கூப்பிட்டு சொன்னாங்களா?

  ReplyDelete
 11. யோஹன்னாவின் பரிதாபத்துக்கு ஆளான ஆண் மகன் என் அருமை நண்பன் மதனே. >>>>>

  மாட்டுனான் மதன்....

  ReplyDelete
 12. வினையூக்கி said...
  //the problem is they can not digest being dishonest. //

  கரெக்டாச் சொன்னீங்க செல்வா..

  //Looking forward to the next episode, mean while let me search //

  அப்படீன்னா..என்னதய்யா தேடப் போறீங்க? அது மாதிரி பொண்ணையா?

  ReplyDelete
 13. ஆரம்பமே சரியில்லையே?"யோஹன்னா"ன்னு ,நான் இல்லைல்ல?ஓ,பொம்பள!!!

  ReplyDelete
 14. //
  தமிழ்வாசி - Prakash said...
  யாஹன்னாவின் வரலாறு..... அவங்களே உங்களை கூப்பிட்டு சொன்னாங்களா?//

  ஆமாம் தமிழ்வாசி...அந்தப் பெண்ணுடன் பேசிவிட்டே எழுதுகிறேன்.

  ReplyDelete
 15. மதனின் கண் கலங்கத் தொடங்கியது.>>>

  கொஞ்ச நேரத்தில் எல்லாமே கலங்கியிருக்குமே????!!!!

  ReplyDelete
 16. //Yoga.s.FR said...
  ஆரம்பமே சரியில்லையே?"யோஹன்னா"ன்னு ,நான் இல்லைல்ல?ஓ,பொம்பள!!!//

  ஐயா..அது யோஹன்..நீங்க யோகன்!

  ReplyDelete
 17. //தமிழ்வாசி - Prakash said...
  மதனின் கண் கலங்கத் தொடங்கியது.>>>

  கொஞ்ச நேரத்தில் எல்லாமே கலங்கியிருக்குமே????//

  கற்பூரம்யா நீரு...மக்களே தொடரின் அடுத்த பாகத்தை தமிழ்வாசியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

  ReplyDelete
 18. பாவம்,யோஹன்னா!மதன் கிட்ட மாட்டுனத வுட இவங்க கிட்ட மாட்டி சின்னாபின்னப் படப்போறா!

  ReplyDelete
 19. செங்கோவி said......மக்களே தொடரின் அடுத்த பாகத்தை தமிழ்வாசியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.////பாவம் அவரு!தமிழ்மணத்துல இணைச்சு வுட்டாரில்ல?நன்றிக்கடன்!

  ReplyDelete
 20. செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  மதனின் கண் கலங்கத் தொடங்கியது.>>>

  கொஞ்ச நேரத்தில் எல்லாமே கலங்கியிருக்குமே????//

  கற்பூரம்யா நீரு...மக்களே தொடரின் அடுத்த பாகத்தை தமிழ்வாசியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.>>>

  அந்த கதையில் நானும் வருவேன். ஐயோ சீக்ரட் வெளியாயிருச்சே...

  ReplyDelete
 21. //Yoga.s.FR said...
  பாவம்,யோஹன்னா!மதன் கிட்ட மாட்டுனத வுட இவங்க கிட்ட மாட்டி சின்னாபின்னப் படப்போறா!//

  ஆமா பாஸ்..எனக்கும் அதான் கவலையா இருக்கு..

  அது நல்ல பொண்ணுய்யா..பார்த்து கமெண்ட் போடுங்க..இல்லேன்னா தூக்க்கிடுவேன்.

  ReplyDelete
 22. செங்கோவி said......ஐயா..அது யோஹன்..நீங்க யோகன்!///ரைட்டு!!!

  ReplyDelete
 23. //தமிழ்வாசி - Prakash said...

  அந்த கதையில் நானும் வருவேன். ஐயோ சீக்ரட் வெளியாயிருச்சே.//

  எனக்கே தெரியாம எப்படி..நீங்க எப்போய்யா வருவீங்க?

  ReplyDelete
 24. செங்கோவி said...
  //Yoga.s.FR said...
  பாவம்,யோஹன்னா!மதன் கிட்ட மாட்டுனத வுட இவங்க கிட்ட மாட்டி சின்னாபின்னப் படப்போறா!//

  ஆமா பாஸ்..எனக்கும் அதான் கவலையா இருக்கு..

  அது நல்ல பொண்ணுய்யா..பார்த்து கமெண்ட் போடுங்க..இல்லேன்னா தூக்க்கிடுவேன்.>>>>

  இப்படி மிரட்டுனா நாங்க கமென்ட் போடாம இருந்திருவோமா????

  ReplyDelete
 25. செங்கோவி said...அது நல்ல பொண்ணுய்யா..பார்த்து கமெண்ட் போடுங்க..இல்லேன்னா தூக்க்கிடுவேன்.///அது அனுதாப வார்த்தை தாங்க!ஏன் ரெண்டு தடவ "க்"போட்டு மெரட்டுறீங்க?

  ReplyDelete
 26. செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...

  அந்த கதையில் நானும் வருவேன். ஐயோ சீக்ரட் வெளியாயிருச்சே.//

  எனக்கே தெரியாம எப்படி..நீங்க எப்போய்யா வருவீங்க?////\

  ஹீ...ஹீ.. அதான் ஊருக்கே தெரியுமே! முதல் கமென்ட்டா அடியேன் வருவேனே!!!!

  ReplyDelete
 27. //Yoga.s.FR said...
  செங்கோவி said...அது நல்ல பொண்ணுய்யா..பார்த்து கமெண்ட் போடுங்க..இல்லேன்னா தூக்க்கிடுவேன்.///அது அனுதாப வார்த்தை தாங்க!ஏன் ரெண்டு தடவ "க்"போட்டு மெரட்டுறீங்க?//

  பாஸ், நான் உங்களைச் சொல்லலை..அந்த கமெண்ட்ல கேப் விட்ருந்தனே..பார்க்கலியா..

  ReplyDelete
 28. தமிழ்வாசி - Prakash said...இப்படி மிரட்டுனா நாங்க கமென்ட் போடாம இருந்திருவோமா????//// நான் வுட்டாலும் இவரு வுட மாட்டேங்கிறாரே?எனக்கென்ன நான் "நல்ல" புள்ளயாக்கும்!

  ReplyDelete
 29. //Yoga.s.FR said...
  தமிழ்வாசி - Prakash said...இப்படி மிரட்டுனா நாங்க கமென்ட் போடாம இருந்திருவோமா????//// நான் வுட்டாலும் இவரு வுட மாட்டேங்கிறாரே?எனக்கென்ன நான் "நல்ல" புள்ளயாக்கும்!//

  ஆமா, நீங்க சிம்பு மாதிரின்னு ‘அந்த’ கமெண்ட்டை தூக்குன எனக்குல்ல தெரியும்!

  ReplyDelete
 30. செங்கோவி said.......பாஸ், நான் உங்களைச் சொல்லலை..அந்த கமெண்ட்ல கேப் விட்ருந்தனே..பார்க்கலியா..////ம்.ம்.ம்.ம்.ம்.....ச்சும்மா!!!!

  ReplyDelete
 31. ஆமா, நீங்க சிம்பு மாதிரின்னு ‘அந்த’ கமெண்ட்டை தூக்குன எனக்குல்ல தெரியும்!///அது அன்னைக்கு!இது இன்னைக்கு!(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிட்டேனோ?)

  ReplyDelete
 32. எப்படியோ ஒத்துக்கிட்டீங்களே..விரல் வித்தை சிம்பு-ன்னு!

  ReplyDelete
 33. சிம்பு சின்னப் பையனில்ல,அவருக்கு என்ன தெரியும்?(ஆமா,யாரு அது "சிம்பு"வோ,"செம்பு"வோ?)

  ReplyDelete
 34. செங்கோவி said...

  எப்படியோ ஒத்துக்கிட்டீங்களே..விரல் வித்தை சிம்பு-ன்னு!////ஐயா சாமி என்னய வுட்டுருங்க!வெள்ளிக்கிழமையும் அதுவுமா...........(அங்க சனி ஆயிடுச்சா?அட,ஆமா!)

  ReplyDelete
 35. இல்லை பாஸ்...இங்க இன்னும் வெள்ளி தான்.அதுக்கே இப்படி..

  ReplyDelete
 36. மதனின் கண் கலங்கத் தொடங்கியது.  நடிகன் நடிக்க தொடங்கி விட்டான்

  ரதியோ மயங்கி விட்டாள்

  ReplyDelete
 37. ஒரு டொச்சு ஃபிகர் கிடைக்கவே பல நாள் பல போராட்டம் நடத்த வேண்டிய இண்டியன் கல்ச்சரில் லைக் பண்ண என்ன இருக்கு என்று மதன் முழித்தான்.////"டொச்சு ஃபிகர்" அப்புடீன்னா,என்ன?

  ReplyDelete
 38. // M.R said...
  மதனின் கண் கலங்கத் தொடங்கியது.  நடிகன் நடிக்க தொடங்கி விட்டான்

  ரதியோ மயங்கி விட்டாள் //

  ஆம் ,ரமேசும் களத்தில் இறங்கி விட்டார்.

  ReplyDelete
 39. தமிழ் மணம் மூணு

  மதன் இருக்கும் இடத்தில் சந்தித்த கண்கள் நான்கு

  ReplyDelete
 40. //Yoga.s.FR said...
  "டொச்சு ஃபிகர்" அப்புடீன்னா,என்ன? //

  சொன்னா ஆணாதிக்கவாதிம்பாங்க..எதுக்கு வம்பு?

  ReplyDelete
 41. மதன் போல ஆளுங்களால தான் இந்திய கலாச்சாரம் கப்பல் ஏறுகிறது,இல்லீங்களா?

  ReplyDelete
 42. //
  M.R said...
  தமிழ் மணம் மூணு

  மதன் இருக்கும் இடத்தில் சந்தித்த கண்கள் நான்கு//

  விளங்கிருச்சு!

  ReplyDelete
 43. //Yoga.s.FR said...
  மதன் போல ஆளுங்களால தான் இந்திய கலாச்சாரம் கப்பல் ஏறுகிறது,இல்லீங்களா?//

  ஆமாம் பாஸ்...

  ReplyDelete
 44. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  "டொச்சு ஃபிகர்" அப்புடீன்னா,என்ன? //

  சொன்னா ஆணாதிக்கவாதிம்பாங்க..எதுக்கு வம்பு?///பரவால்ல வுட்டுடுங்க,இங்க யார் கிட்டயாச்சும் கேட்டு தெரிஞ்சுக்கிறேன்!கொஸ்டீன் பேப்பரில(Question paper) நாளைக்கே வரப் போவுதா,என்ன?

  ReplyDelete
 45. நிரூபன் வூடு(பதிவு)சூடு புடிச்சிருக்கு,பாத்தீங்களா?

  ReplyDelete
 46. //
  Yoga.s.FR said...
  நிரூபன் வூடு(பதிவு)சூடு புடிச்சிருக்கு,பாத்தீங்களா?//

  இல்லையே...வாங்க அங்க போவோம்.

  ReplyDelete
 47. அடேடே லீலைகள் அடுத்தகட்டத்துக்கு போகுது போல....

  ReplyDelete
 48. //////போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள்./////

  அட்டு பிகரா இருந்தாலும் இப்படிச் சொல்லிச் சொல்லியே உசுப்பேத்துங்கய்யா......

  ReplyDelete
 49. //// அடிப்படையில் தமிழனான மதனுக்கு யோஹன்னாவின் புஷ்டியான தேகம் கடும் கிளர்ச்சியைக் கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை தான்.//////

  ம்ம்... எல்லாம் நமீதா கொடுக்கற தைரியம்?

  ReplyDelete
 50. /////ஒரு டொச்சு ஃபிகர் கிடைக்கவே பல நாள் பல போராட்டம் நடத்த வேண்டிய இண்டியன் கல்ச்சரில் லைக் பண்ண என்ன இருக்கு என்று மதன் முழித்தான்.////////

  செங்கோவி ரொம்ப பட்டிருக்காருய்யா... அனுபவிச்சி எழுதுறாரு.....

  ReplyDelete
 51. ////// தமிழ்வாசி - Prakash said...
  மன்மதா... ஆகா... சக்..சக்... மந்திரம்... ஆகா.... சக்...சக்...

  செங்கோவி said...
  என்னய்யா இது தமிழ்வாசி வர்ற விதமே சரியில்லையே..
  ///////

  கருங்காலி படத்த மறுக்கா பாத்திருப்பாரு....

  ReplyDelete
 52. தமிழ்வாசி - Prakash said...
  மன்மதா... ஆகா... சக்..சக்... மந்திரம்... ஆகா.... சக்...சக்...////இவரு என்ன தான் சொல்ல வராரு?(மீன்)முள்ளு,கிள்ளு சிக்கிடுச்சோ?திக்குறாரா,திணர்றாரா?

  ReplyDelete
 53. அனுபவம் புதுமை!!!

  ReplyDelete
 54. //போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள்//
  அட அட அட! என்னா ஒரு வெளக்கம்! :-)

  ReplyDelete
 55. //தன் தந்தையிடம் கிடைக்காத அன்பைத் தருபவன் எவனோ, அவனுக்கே தன்னைத் தருவதென்று முடிவு செய்தாள்//
  பல பெண்கள் தாங்கள் மிக எச்சரிக்கையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு கடைசியில் ஒரு மோசமானவனிடம் வலிய மாட்டுகிறார்கள்!

  ReplyDelete
 56. //ஒரு டொச்சு ஃபிகர் கிடைக்கவே பல நாள் பல போராட்டம் நடத்த வேண்டிய இண்டியன் கல்ச்சரில் லைக் பண்ண என்ன இருக்கு //
  இது அண்ணனோட சொந்த அனுபவம்தான்! ஹி ஹி! :-)

  ReplyDelete
 57. இப்படியே போய்கிட்டு இருந்த என்னய்யா அர்த்தம் இதுக்கு ஒரு முடிவே கெடையாதா? ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்

  ReplyDelete
 58. விடாது டைரி...அசத்தல்...ஊமக்குத்து எல்லாத்துலயும்

  ReplyDelete
 59. உங்களுக்கும் குடும்பம் இருக்கா?”//
  அவர் மட்டும் அயல்கிரகவாசியா

  ReplyDelete
 60. மேட்டர்களிடம் மேட்டர் பண்ணுவதில் ஒரு மேட்டரும் இல்லையென்ற அரிய உண்மையை அறிந்த சோகத்திலேயே மதன் அங்கே அவ்வாறு அமர்ந்திருந்தான்.//
  செம பாயிண்ட்

  ReplyDelete
 61. ஒரு டொச்சு ஃபிகர் கிடைக்கவே பல நாள் பல போராட்டம் நடத்த வேண்டிய இண்டியன் கல்ச்சரில் லைக் பண்ண என்ன இருக்கு என்று மதன் முழித்தான்.
  //
  மதனா செமயா யோசிக்கிற

  ReplyDelete
 62. >>மேட்டர்களிடம் மேட்டர் பண்ணுவதில் ஒரு மேட்டரும் இல்லையென்ற அரிய உண்மையை

  annae, idhai ellaam ungka veetla kandukkamaattaangkaLaa?

  ReplyDelete
 63. >>பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  அடேடே லீலைகள் அடுத்தகட்டத்துக்கு போகுது போல....


  s s going to cot

  ReplyDelete
 64. @பன்னிக்குட்டி ராம்சாமி

  //அடேடே லீலைகள் அடுத்தகட்டத்துக்கு போகுது போல...// ஆமாண்ணே..சிபி சொன்ன அதே இடத்துக்கு..

  //செங்கோவி ரொம்ப பட்டிருக்காருய்யா... அனுபவிச்சி எழுதுறாரு...// டைரின்னா சும்மாவா..

  ReplyDelete
 65. //FOOD said...
  அனுபவம் புதுமை!!//

  பெரியவங்க சொன்னா சரி தான்!

  ReplyDelete
 66. ஜீ... said...

  //அட அட அட! என்னா ஒரு வெளக்கம்! :-)// நன்றி தம்பி!

  //பல பெண்கள் தாங்கள் மிக எச்சரிக்கையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு கடைசியில் ஒரு மோசமானவனிடம் வலிய மாட்டுகிறார்கள்! // அனுபவம் பேசுது போல..

  //இது அண்ணனோட சொந்த அனுபவம்தான்! ஹி ஹி! ://

  அது ஒவ்வொரு இந்தியனும் ஃபீல் பண்ற விஷயம் தானே..

  ReplyDelete
 67. //Heart Rider said...
  இப்படியே போய்கிட்டு இருந்த என்னய்யா அர்த்தம் இதுக்கு ஒரு முடிவே கெடையாதா?//

  கிடையாது..

  ReplyDelete
 68. //
  மாய உலகம் said...
  விடாது டைரி...அசத்தல்...ஊமக்குத்து எல்லாத்துலயும் //

  மாயா பதிவுக்கு ஓட்டு போட்டதைத் தான் அப்படிச் சொல்றாரு..யாரும் அவரை தப்பா எடுத்துக்க வேண்டாம்..

  ReplyDelete
 69. //
  ஆர்.கே.சதீஷ்குமார் said...
  மேட்டர்களிடம் மேட்டர் பண்ணுவதில் ஒரு மேட்டரும் இல்லையென்ற அரிய உண்மையை அறிந்த சோகத்திலேயே மதன் அங்கே அவ்வாறு அமர்ந்திருந்தான்.//
  செம பாயிண்ட்//

  அண்ணன் துள்ளிக் குதிக்காரு போல..

  ReplyDelete
 70. //சி.பி.செந்தில்குமார் said...
  >>மேட்டர்களிடம் மேட்டர் பண்ணுவதில் ஒரு மேட்டரும் இல்லையென்ற அரிய உண்மையை

  annae, idhai ellaam ungka veetla kandukkamaattaangkaLaa?//

  இலக்கியத்துக்காக கூட நாலு அடி வாங்குறது தப்பா?

  ReplyDelete
 71. மாப்ள இந்த கதையில நெறைய கலங்குறா மாதிரி இருக்கே...ஹிஹி!

  ReplyDelete
 72. மாப்ள.. எப்படி இப்படியெல்லாம் கலக்குரமாதிரி எழுதுற.. அருமை..

  ReplyDelete
 73. //விக்கியுலகம் said...
  மாப்ள இந்த கதையில நெறைய கலங்குறா மாதிரி இருக்கே...ஹிஹி!//

  ஆமா மாப்ள..ஹி..ஹி!

  ReplyDelete
 74. என்னய்யா நடக்குது இங்க, நாந்தான் கடைசியா? அப்ப கடைசி வடை எனக்குத்தான், சத்தியமா நான் பதிவ படிக்கலைங்கோ

  ReplyDelete
 75. ஒவ்வொறு பகுதியை வாசிக்கும் போதும் அடுத்தது எப்போது எழுதுவீர்கள் என்று ஆவலைத்தூண்டுகின்றது.அருமை

  ReplyDelete
 76. //இரவு வானம் said...
  என்னய்யா நடக்குது இங்க, நாந்தான் கடைசியா? அப்ப கடைசி வடை எனக்குத்தான், சத்தியமா நான் பதிவ படிக்கலைங்கோ //

  படிச்சிடாதீங்கோ..பாவம்!

  ReplyDelete
 77. //Kss.Rajh said...
  ஒவ்வொறு பகுதியை வாசிக்கும் போதும் அடுத்தது எப்போது எழுதுவீர்கள் என்று ஆவலைத்தூண்டுகின்றது.அருமை //

  நன்றி ராஜ்..உங்க முழுப்பேரு கிஸ் ராஜாவா?

  ReplyDelete
 78. செங்கோவி said.......உங்க முழுப்பேரு கிஸ் ராஜாவா?////பத்திரமாயிருங்க!ஒங்களை பொம்பளன்னு நெனைச்சு.............குடுத்துடப் போறாரு!

  ReplyDelete
 79. @Yoga.s.FR ஆஹா...யோகா இன்னும் யோஹன்னாவை விட்டுப் போகலியா..நேத்து நைட்டு வந்தவரு...ரைட்டு!

  ReplyDelete
 80. லீலைகள் அசத்தல் ரகம்
  ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 81. மதன் தூண்டிலை வீசியாச்சா?
  அதன்பின்?
  காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 82. ’இது மாட்டினால் நல்லா இருக்குமே..இனி எத்தனை நாளைக்கு இப்படி எதையோ தின்ற எதுவோ மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்திருப்பது. டெய்லி இரண்டு, மூன்றுடன் இரண்டு மூன்றைப் பார்த்துவிட்டு, இப்படி திடீரென்று நிறுத்துவதால் ஏதேனும் பின்/முன் விளைவுகள் ஏற்படுமா’ என்று சீரியஸாக யோசித்தபடியே இருந்த மதனின் பக்கத்தில் திடீரென யோஹன்னா வந்து நின்றாள்.//

  அவ்.............

  சுவாரஸ்யமாக, உலகியல் இன்பப் பாடம் கற்பித்து நகர்த்துறீங்க.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.