Sunday, August 14, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_35


“அப்போ அம்மா?”
மதனின் கண் கலங்கத் தொடங்கியது. 


யோஹன்னா கலவரமானாள்.
“ஏன்..நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டனா?”
“இல்லே..என் அம்மா என்னோட 15வது வயசுலயே இறந்துட்டாங்க. அந்த இழப்புல இருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு. இங்க வந்த அப்புறம்தான் கொஞ்சம் மறந்திருந்தேன்”
“சாரி”


மதன் உடனே எழுந்தான். “ஓகே..நான் கிளம்புறேன்” பில்லுக்கு காசை வைத்துவிட்டு வெளியேறினான். ஒரு மனிதனைக் காயப்படுத்தி விட்டோமோ என்று யோஹன்னா கவலைப்பட்டாள்.
மதன் அடுத்தடுத்த நாட்களும் அங்கே சென்றான். கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டான். பாதுகாப்பற்ற பறவை என்று தெரிந்தது. வேட்டையாட வசதியான இடம் என்று முடிவு செய்தான்.ந்த வார இறுதியில் ஷாப்பிங் போன மதன், அங்கே ஒரு தமிழ் முகத்தைக் கண்டான். தெரிந்த முகம் போல் தெரிய, நெருங்கினால் அது சிவா!


பிரவீணா விவகாரத்தில் அடித்துக்கொண்ட பின், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போயிருந்தது. இடையில் சிவா இந்தியா வந்தபோது ஃபோனில் பேசினாலும், அந்த நட்பைத் தொடர்வதில் மதனுக்கு சிறிதும் விருப்பமில்லை.

இப்போது என்ன செய்வது, பார்க்காத மாதிரி போய்விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, சிவா மதனைப் பார்த்து ‘நண்பா” என்று கூவிக்கொண்டே நெருங்கினான். இனி தப்பிக்க வழியில்லை என்று உணர்ந்த மதனும் ‘டேய் சிவா..இங்க என்னடா பண்றெ?” என்றான்.

“ஒரு தீஸிஸ் பண்றேண்டா. புராஜக்ட்டுக்காக இங்க வந்திருக்கிறேன்..நீ எப்படா இங்க வந்தே?”
“நான் வந்து எட்டு மாசம் ஆச்சுடா..”


சிவாவுக்கு ஒரு தமிழனை அதுவும் கல்லூரி நண்பனைப் பார்த்த சந்தோசம் தாங்கவிலை. பழைய பிரவீணா மேட்டரும் பிரவீணாவும் இப்போது அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவும் இல்லை.  நண்பர்கள் இருவரும் அருகில் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட ஒதுங்கினர்.


சிவாவிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் புதிதாக ஏற்பட்டிருந்தது. முதலாவது அவன் ப்ளாக் எழுத ஆரம்பித்திருந்தான். இரண்டாவது யாரைப்பார்த்தாலும் ‘நான் பதிவர்..இது என் ப்லாக் அட்ரஸ்’ என்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தான். மதனிடமும் அதைச் சொன்னான். ”ஓஹோ..என்று சுவாரஸ்யமே இல்லாமல் மதன் கேட்டுக் கொண்டான். சிவா மாதிரிப் பதிவர்களுக்கு இந்த மாதிரி ஓஹோக்கள் வாங்கி அசிங்கப்படுவது புதிதல்ல என்பதால் அதைப் பெரிதாக சிவா எடுத்துக்கொள்ளவில்லை.

யோஹன்னா கடந்த பத்து நாட்களில் மதனை ஃப்ரெண்டாக ஏற்றுக் கொண்டிருந்தாள். மொபைல் நம்பர், மெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி அனைத்தும் இருவருக்கும் இடையே பரிமாறப்பட்டிருந்தன.


மதன் இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். ஒரு அழகிய மாலை நேரத்தில் அருகில் இருந்த பீச்சில் வைத்து தன் காதலைச் சொன்னான்.
“ என் அம்மா போனப்புறம் எனக்குன்னு யாரும் இல்லைன்னு ஆயிடுச்சு. உன்கூட பழகுன இந்த பத்து நாள்ல தான் நான் பழைய படி சந்தோசமா இருக்கேன். உன்கூட இருக்கும்போது என் அம்மாகூட இருக்கிற அதே ஃபீலிங்..நீ எப்பவும் என்கூட இருப்பியா..நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் “


யோஹன்னா அதிர்ந்து போனாள். என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு மதனைப் பிடித்திருந்தது. ஆனால் முன்பின் அறியாத, வேறொரு நாட்டைச் சேர்ந்தவனை எப்படி நம்புவது என்று யோசித்தாள்.


“மதன், உன்னை எனக்கு பத்து நாளாத்தான் தெரியும்..அதுக்குள்ள லவ்வுன்னா...இங்க பாரு, நான் உன்கூட ஃப்ரெண்ட்டாத் தான் பழகுறேன்..நாம அப்படியே இருப்போம்..இந்த மாதிரிப் பேச்சு நமக்குள்ள வேண்டாம்” என்றாள்.


மதன் கண் கலங்கியபடியே உட்கார்ந்திருந்தான். உள்ளுக்குள் சிரித்தான். எப்போ ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொல்றவனை அடிச்சு விரட்டாம நாம ஃப்ரெண்டா இருப்போம்னு கதை சொல்றான்னா, ஃபிகரு முக்கால்வாசி மடிஞ்சிருச்சுன்னு தான் அர்த்தம்..இன்னும் கால்வாசி தானே.’


யோஹன்னா எபிசோடு ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், மதன் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த நைஜீரியப் பெண்ணிடமும், ஷாப்பிங் மாலில் ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்ணிடமும் இதே டெக்னிக், இதே வசனங்கள், இதே ஃபீலிங்ஸ் உடன் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான்.


இந்தப் பெண்களுடன் காதலிக்கும்போது பேசுவது தான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. கண்களெல்லாம் கனவுடன் முகம் நிறைந்த பூரிப்புடன் காதலிக்கும்போது இந்தப் பெண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்..ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு ஏன் அடியோடு மாறிப்போய் விடுகிறார்கள்..ஜமீலா இப்போது பேச ஆரம்பித்தாலே விசா, விசா என்ரு உயிரை எடுக்கிறாள். இந்தியாவில் வீணான என் வாலிபப் பருவத்தை இங்கு வந்து ஈடுகட்டுவோம் என்றால் விட மாட்டேங்கிறாளே..


காதலிக்கும்போது உள்ள பெரிய பிரச்சினை செலவு..மாதா மாதம் வாங்குகிற சம்பளம் இவர்களை மெயிண்டெய்ன் செய்யவே சரியாகப் போகிறது..காதலிக்கும்போது காதலன் தாராள பிரபுவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு இப்படி இருந்தால், அவர்களே திட்டுகிறார்கள். ஊதாரிக் காதலனும் சிக்கனமான கணவனும் வேண்டும் என்கிறார்கள்.இது என்ன மாதிரியான கண்றாவி லாஜிக் என்றே புரியவில்லை..


இப்போது யோஹன்னாவை இன்னும் ஒரு வாரத்தில் மடக்கி விடலாம் என்று தோன்றியது. அவளுக்கு நம் மீது நம்பிக்கை வர வேண்டும். ’என்ன செய்யலாம்?’ என்று யோசிக்கும்போதே சிவா ஞாபகம் வந்தது.


’கரெக்ட்..சிவாவை யோஹன்னாவிடம் அறிமுகப்படுத்தலாம். கல்லூரிக் காலத்தில் இருந்தே நண்பன் என்று சொல்லலாம்..சிவாவையும் நம்மைப் பற்றி உயர்வாகச் சொல்லுமாறு சொல்லலாம். சொல்வானா?..வேறு வழியில்லை..ஆளும் இல்லை’

உடனே கிளம்பி சிவா வீட்டிற்குச் சென்றான். சிவா எப்போதும்போல் சந்தோசமாக ‘நண்பா’ என்று அலறினான். ‘இவன் இம்சை தாங்கலையே...’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே பதிலுக்கு “மாப்ளே” என்றான் மதன்.


“என்னடா திடீர்னு வந்து நிக்கிறே..?”
“சும்மாடா..நாளைக்கு டின்னருக்கு வெளில போலாமான்னு கேட்க வந்தேன்”
“போலாமே..இதுக்கு கால் பண்ணா போதாதா?”


“இல்லைடா..அந்த டின்னருக்கு இன்னொரு வி.ஐ.பியும் வர்றாங்க.”


“யார்டா அது?”


“என் லவ்வர்டா”


“லவ்வரா..?” சிவா அதிர்ச்சியுடன் கேட்டான். 


மதன் சகஜமாக “ஆமாம்..இதுக்கு ஏண்டா அலறுதே?”


“டேய்..உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னேல்ல..பையன்கூட இருக்கான்னு நான் போன தடவை இந்தியா வந்தப்போ சொன்னியேடா”


மதன் இதைக் கேட்டதும் அதிர்ந்து போனான். 


சிவாவிடம் தான் அப்படிப் பேசியதையே மதன் மறந்து போயிருந்தான்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

82 comments:

 1. இன்னைக்கும் வடையைத் தட்டிட்டுப் போயிட்டீங்களா..தமிழ்வாசியை எங்கய்யா..

  ReplyDelete
 2. மதன் அடுத்தடுத்த நாட்களும் அங்கே சென்றான். கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டான். பாதுகாப்பற்ற பறவை என்று தெரிந்தது. வேட்டையாட வசதியான இடம் என்று முடிவு செய்தான்.


  மதன் பருந்தோ

  ReplyDelete
 3. //மதன் பருந்தோ /

  அதில் சந்தேகமா?

  ReplyDelete
 4. சிவாவிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் புதிதாக ஏற்பட்டிருந்தது. முதலாவது அவன் ப்ளாக் எழுத ஆரம்பித்திருந்தான்.

  சிவா யாரு ???????????????

  ReplyDelete
 5. சிவா மாதிரிப் பதிவர்களுக்கு இந்த மாதிரி ஓஹோக்கள் வாங்கி அசிங்கப்படுவது புதிதல்ல என்பதால் அதைப் பெரிதாக சிவா எடுத்துக்கொள்ளவில்லை.

  சகஜம் தானே

  யாருக்கு இல்ல இந்த அனுபவம் ?

  ReplyDelete
 6. உன்கூட பழகுன இந்த பத்து நாள்ல தான் நான் பழைய படி சந்தோசமா இருக்கேன்

  அப்பிடியா !!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 7. //M.R said...

  சிவா யாரு ????//

  அதை விருப்பப்பட்டால் அவரே சொல்வார்..நான் அவர் பேரை எழுத மாட்டேன்னு வாக்கு கொடுத்திருக்கேன்..

  ReplyDelete
 8. //M.R said...
  சிவா மாதிரிப் பதிவர்களுக்கு இந்த மாதிரி ஓஹோக்கள் வாங்கி அசிங்கப்படுவது புதிதல்ல..

  சகஜம் தானே

  யாருக்கு இல்ல இந்த அனுபவம் ?//

  யோவ், நான் யார்கிட்டயும் சொன்னதில்லைய்யா..எல்லாம் சிவாவைப் பார்த்து கத்துக்கிட்டது தான்..

  ReplyDelete
 9. யோஹன்னா எபிசோடு ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், மதன் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த நைஜீரியப் பெண்ணிடமும், ஷாப்பிங் மாலில் ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்ணிடமும் இதே டெக்னிக், இதே வசனங்கள், இதே ஃபீலிங்ஸ் உடன் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான்.

  படுபாவி படுபாவி

  ReplyDelete
 10. சிவாவிடம் தான் அப்படிப் பேசியதையே மதன் மறந்து போயிருந்தான்.  ஹா ஹா ஹா

  இடம் பொருள் ஏவல் .....

  ReplyDelete
 11. //M.R said...

  படுபாவி படுபாவி //

  ஏதோ புகையிற வாசம் வருதே..

  ReplyDelete
 12. காண வில்லை காண வில்லை

  பிரகாஷை காணவில்லை

  ReplyDelete
 13. செங்கோவி said...
  //M.R said...

  படுபாவி படுபாவி //

  ஏதோ புகையிற வாசம் வருதே..

  ஹி ஹி வயிறு கொஞ்சம் எரியுது

  அல்சர்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 14. //M.R said...
  காண வில்லை காண வில்லை

  பிரகாஷை காணவில்லை //

  அவரு மறுபடியும் கருங்காலியை பார்க்கப் போயிட்டாரோ..வந்து மறுபடியும் அஞ்சலியை கேவலப்படுத்துனாருன்னா நான் கொலைகாரனாயிடுவேன்..

  ReplyDelete
 15. // ‘இவன் இம்சை தாங்கலையே...’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே பதிலுக்கு “மாப்ளே” என்றான் மதன்.//


  டைலாக் சூப்பர்..... இப்படி சொல்லி தப்பிச்சுக்குவோம்

  ReplyDelete
 16. //மாய உலகம் said...
  // ‘இவன் இம்சை தாங்கலையே...’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே பதிலுக்கு “மாப்ளே” என்றான் மதன்.//


  டைலாக் சூப்பர்..... இப்படி சொல்லி தப்பிச்சுக்குவோம்//

  ம்..மாயாவின் லீலைகள்னு ஒன்னு ஆரம்பிச்சுடலாமா?

  ReplyDelete
 17. ஹா ஹா அது ஒரு சிந்துபாத்து மாதிரி போவுமே ப்ர்ர்ர்வாயில்லையா

  ReplyDelete
 18. //மாய உலகம் said...
  ஹா ஹா அது ஒரு சிந்துபாத்து மாதிரி போவுமே ப்ர்ர்ர்வாயில்லையா //

  நடிகை சிந்துவோட பாத் சீன்லாம் உண்டா..பரவாயில்லையே..

  ReplyDelete
 19. இந்த "சின்ன"ப் பசங்களப் பாத்தீங்களா செங்கோவி எப்புடிப் பறக்குறாங்கன்னு?

  ReplyDelete
 20. ஆஹா மாப்பு வச்சுட்டீயே ஆப்பு இதான் போட்டு வாங்கறதா

  ReplyDelete
 21. //Yoga.s.FR said...
  இந்த "சின்ன"ப் பசங்களப் பாத்தீங்களா செங்கோவி எப்புடிப் பறக்குறாங்கன்னு?//

  யாரைச் சொல்றீங்க..நானும் சின்னப் பையன் தான் பாஸ்..

  ReplyDelete
 22. யோஹன்னா எபிசோடு ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், மதன் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த நைஜீரியப் பெண்ணிடமும், ஷாப்பிங் மாலில் ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்ணிடமும் இதே டெக்னிக், இதே வசனங்கள், இதே ஃபீலிங்ஸ் உடன் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான்.// நம்மள விட பெரிய ஆட்டக்காரனா இருப்பானோ?

  ReplyDelete
 23. நான் பதிவர்..இது என் ப்லாக் அட்ரஸ்’ என்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தான்.///இதுல உள் "குத்து" ஒண்ணும் இல்லியே????(பல பதிவுகள்ள இப்புடிக் கேக்குறதப் பாத்திருக்கேன்,அதான்!)

  ReplyDelete
 24. செங்கோவி said...யாரைச் சொல்றீங்க..நானும் சின்னப் பையன் தான் பாஸ்..///சரி ( அப்புடியே)வச்சுக்குங்க!

  ReplyDelete
 25. //Heart Rider said...

  நம்மள விட பெரிய ஆட்டக்காரனா இருப்பானோ? //

  யாருய்யா அது, சைடு கேப்ல விளம்பரம் போடறது?

  ReplyDelete
 26. // Yoga.s.FR said...
  நான் பதிவர்..இது என் ப்லாக் அட்ரஸ்’ என்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தான்.///இதுல உள் "குத்து" ஒண்ணும் இல்லியே????//

  இல்லை பாஸ்..அது சிவாவை மட்டும் தான் குறிப்பிடுது..தானா யாரும் வந்து ஆப்புல ஏறுனா நான் பொறுப்பில்லை!

  ReplyDelete
 27. Interesting .... Interesting ... waiting for the next episode...

  ReplyDelete
 28. செங்கோவி said...
  //மாய உலகம் said...
  ஹா ஹா அது ஒரு சிந்துபாத்து மாதிரி போவுமே ப்ர்ர்ர்வாயில்லையா //

  நடிகை சிந்துவோட பாத் சீன்லாம் உண்டா..பரவாயில்லையே..

  ஆசை தோசை அப்பளம் வடை

  ReplyDelete
 29. //
  வினையூக்கி said...
  Interesting .... Interesting ... waiting for the next episode...//

  நன்றி செல்வா..

  ReplyDelete
 30. //M.R said...

  ஆசை தோசை அப்பளம் வடை..//

  பூரி, பொங்கல், பணியாரம், பஜ்ஜி சுஷ்யம் ...........யாருய்யா அது நடுராத்திரில தோசை சுடுறது?

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. //M.R said...
  தண்ணி அடிக்காதவங்க என் வலைப்பூவின் பதிவின் கீழ் உள்ள படத்தை பார்க்காதீங்க

  பார்த்தாலும் தெரியாது

  பாஸ் நீங்க............?//

  வர்றோம்யா..எப்படில்லாம் ட்ரிக் வச்சுக் கூப்பிடுறாங்க..நாமளும் இருக்கமே..

  ReplyDelete
 33. என்னமோ படம் போட்டிருக்கிறதா சொன்னாரே,பாப்பமேன்னு(நப்பாசல)போனனா,அது தண்ணி அடிக்கிறவங்களுக்கு மட்டும் தான் தெரியுமாமின்னு ரமேசு கடேசில எழுதியிருக்காரு!நியாயமா,தம்பி?

  ReplyDelete
 34. //Yoga.s.FR said...
  என்னமோ படம் போட்டிருக்கிறதா சொன்னாரே,பாப்பமேன்னு(நப்பாசல)போனனா,அது தண்ணி அடிக்கிறவங்களுக்கு மட்டும் தான் தெரியுமாமின்னு ரமேசு கடேசில எழுதியிருக்காரு!நியாயமா,தம்பி?//

  பரவாயில்லை..நான் மட்டும் தான் ஏமாந்தேன்னு நினைச்சேன்..அண்ணாச்சியும் கூட இருக்காரு!

  ReplyDelete
 35. Heart Rider said.......நம்மள விட பெரிய ஆட்டக்காரனா இருப்பானோ?////நீங்க எந்த டீம்ல ஆடுறீங்க?மெட்ராசா,பாம்பேயா,கொல்கத்தாவா????

  ReplyDelete
 36. //Yoga.s.FR said...
  Heart Rider said.......நம்மள விட பெரிய ஆட்டக்காரனா இருப்பானோ?////நீங்க எந்த டீம்ல ஆடுறீங்க?மெட்ராசா,பாம்பேயா,கொல்கத்தாவா??//

  மதனை மாதிரியே அவரும் உலகம் பூரா போய் விளையாடுவாருன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 37. செங்கோவி said......பரவாயில்லை..நான் மட்டும் தான் ஏமாந்தேன்னு நினைச்சேன்..அண்ணாச்சியும் கூட இருக்காரு!////சரி வுடுங்க,இதெல்லாம் போயி பப்ளிக்கில சொல்லிக்கிட்டு?

  ReplyDelete
 38. ஊதாரிக் காதலன்,சிக்கனமான கணவன் இந்த லாஜிக் நல்லது தானே?

  ReplyDelete
 39. //
  Yoga.s.FR said...
  ஊதாரிக் காதலன்,சிக்கனமான கணவன் இந்த லாஜிக் நல்லது தானே?//

  அப்போ ரெண்டும் வேற வேற ஆளா?

  ReplyDelete
 40. இன்னும் தொடருமா?திரும்ப வருவேன்.

  ReplyDelete
 41. கலக்கலா தொடருங்க

  ReplyDelete
 42. மாப்பிள காட்டான சிவாவா மாத்தேலத்தானே... ஏன்னா நாந்தான் சிவாவோன்னு பாக்கிறன்..
  ஓட்டெல்லாம் போட்டன் செல்லாத ஓட்டோன்னு பாத்து சொல்லு மாப்பிள..!!??

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 43. தொடருங்கள் நாங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்

  ReplyDelete
 44. அலெக்ஸா ரேங்கிங்கில் 2 லட்சம் டூ 1,64000 . செம ஸ்பீடு இம்ப்ரூவ்மெண்ட்..

  ReplyDelete
 45. >>இந்தப் பெண்களுடன் காதலிக்கும்போது பேசுவது தான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. கண்களெல்லாம் கனவுடன் முகம் நிறைந்த பூரிப்புடன் காதலிக்கும்போது இந்தப் பெண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்..ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு ஏன் அடியோடு மாறிப்போய் விடுகிறார்கள்

  அது தெரிஞ்சா நாங்க சொல்ல மாட்டாமா? எவனுக்கும் தெரியாது ஹா ஹா

  ReplyDelete
 46. @செங்கோவி

  பிரகாஷை காணவில்லை //

  அவரு மறுபடியும் கருங்காலியை பார்க்கப் போயிட்டாரோ..வந்து மறுபடியும் அஞ்சலியை கேவலப்படுத்துனாருன்னா நான் கொலைகாரனாயிடுவேன்.>>>>>>

  perusa onnume illaatha antha padathai eppai innoru murai paarkka poven?

  ReplyDelete
 47. //“மதன், உன்னை எனக்கு பத்து நாளாத்தான் தெரியும்..அதுக்குள்ள லவ்வுன்னா...இங்க பாரு, நான் உன்கூட ஃப்ரெண்ட்டாத் தான் பழகுறேன்..நாம அப்படியே இருப்போம்..இந்த மாதிரிப் பேச்சு நமக்குள்ள வேண்டாம்” என்றாள்//

  எல்லா ஊர்ப்பொண்ணுங்களும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 48. மச்சி, வருகையினைப் பதிவு செய்து விட்டுச் செல்கிறேன்,
  இரண்டு பாகங்களைத் தவற விட்டு விட்டேன்,
  படித்து, விரிவான கருத்துக்களோடு மாலை வருகிறேன்.

  ReplyDelete
 49. ஹாய் பாஸ் நலமா??
  சில நாட்கள் வரமுடியவில்லை..மன்னிச்சு...
  வந்திட்டேன்லே...
  இனி தொடர்ந்து கலக்குவோம்!

  ReplyDelete
 50. //சிவாவிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் புதிதாக ஏற்பட்டிருந்தது. முதலாவது அவன் ப்ளாக் எழுத ஆரம்பித்திருந்தான். இரண்டாவது யாரைப்பார்த்தாலும் ‘நான் பதிவர்..இது என் ப்லாக் அட்ரஸ்’ என்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தான்//
  ஹா ஹா ஹா!

  //எப்போ ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொல்றவனை அடிச்சு விரட்டாம நாம ஃப்ரெண்டா இருப்போம்னு கதை சொல்றான்னா, ஃபிகரு முக்கால்வாசி மடிஞ்சிருச்சுன்னு தான் அர்த்தம்..இன்னும் கால்வாசி தானே.’//
  இங்க பார்ரா! :-)

  என்னமா அனுபவிச்சு எழுதியிருக்கார் அண்ணன்!

  ReplyDelete
 51. யோவ்;காட்டான்!இந்த நெனப்புத் தான் பொழப்பக் கெடுக்கப் போவுது!கம்முனு இருய்யா!மைந்தன் (தூக்கத்திலருந்து)முழிச்சிக்கிட்டாராம்.என்ன பினத்துறாருன்னு பாப்போம்,வாய்யா!

  ReplyDelete
 52. //ராஜ நடராஜன் said...
  இன்னும் தொடருமா?திரும்ப வருவேன். //

  ஆமா சார்..போய்ட்டு மெதுவா வாங்க..

  ReplyDelete
 53. // KANA VARO said...
  கலக்கலா தொடருங்க //

  ஓகே பாஸ்!

  ReplyDelete
 54. // காட்டான் said...
  மாப்பிள காட்டான சிவாவா மாத்தேலத்தானே... ஏன்னா நாந்தான் சிவாவோன்னு பாக்கிறன்.. //

  ச்சே..ச்சே..

  ReplyDelete
 55. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  தொடருங்கள் நாங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம் //

  தொடர்வதற்கு நன்றி.

  ReplyDelete
 56. // FOOD said...
  Kalakkal. //

  நன்றி சார்.

  ReplyDelete
 57. // சி.பி.செந்தில்குமார் said...
  >>இந்தப் பெண்களுடன் காதலிக்கும்போது பேசுவது தான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. கண்களெல்லாம் கனவுடன் முகம் நிறைந்த பூரிப்புடன் காதலிக்கும்போது இந்தப் பெண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்..ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு ஏன் அடியோடு மாறிப்போய் விடுகிறார்கள்

  அது தெரிஞ்சா நாங்க சொல்ல மாட்டாமா? எவனுக்கும் தெரியாது ஹா ஹா //

  அண்ணனுக்கும் அதே பிரச்சினை தானா..

  ReplyDelete
 58. //தமிழ்வாசி - Prakash said...

  perusa onnume illaatha antha padathai eppai innoru murai paarkka poven? //

  மீண்டும் மீண்டும் அஞ்சலியை அவமானப்படுத்தும் தமிழ்வாசி ஒழிக!

  //tamlmanam sevanth me....50th comment.....// அப்டியா..அப்போ தமிழ்வாசி வாழ்க!

  ReplyDelete
 59. “டேய்..உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னேல்ல..பையன்கூட இருக்கான்னு நான் போன தடவை இந்தியா வந்தப்போ சொன்னியேடா”

  மதன் இதைக் கேட்டதும் அதிர்ந்து போனான்.////இதுக்கு ஏன் அதிரணும், ஏன் அதிரணும்கிறேன்???அது மனைவி,இது காதலி அப்புடீன்னு கட்&ரைட்டா சொல்லிட வேண்டியது தானே?

  ReplyDelete
 60. செங்கோவி said...
  //Yoga.s.FR said...
  ஊதாரிக் காதலன்,சிக்கனமான கணவன் இந்த லாஜிக் நல்லது தானே?//
  அப்போ ரெண்டும் வேற வேற ஆளா?////இந்தக் கேள்விக்கு ரிப்ளை குடுத்திருக்கேன்,மேல!(மேலன்னா,63 வது காமெண்ட் பார்க்கவும்)

  ReplyDelete
 61. செங்கோவி said...

  //ராஜ நடராஜன் said...
  இன்னும் தொடருமா?திரும்ப வருவேன். //

  ஆமா சார்..போய்ட்டு மெதுவா வாங்க../////////அப்புடீன்னா சப்புக் கொட்டிகிட்டு காத்திருக்கத் தேவையில்லைங்கிறீங்க?அடுத்த வாரம் சனிக்கிழம தான் தொடருமாக்கும்?

  ReplyDelete
 62. / Kss.Rajh said...

  எல்லா ஊர்ப்பொண்ணுங்களும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி //

  இந்த கிஸ் ராஜா பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே!

  ReplyDelete
 63. // நிரூபன் said...
  மச்சி, வருகையினைப் பதிவு செய்து விட்டுச் செல்கிறேன்,
  இரண்டு பாகங்களைத் தவற விட்டு விட்டேன்,
  படித்து, விரிவான கருத்துக்களோடு மாலை வருகிறேன்.//

  ரைட்டு!

  ReplyDelete
 64. // மைந்தன் சிவா said...
  ஹாய் பாஸ் நலமா??
  சில நாட்கள் வரமுடியவில்லை..மன்னிச்சு...
  வந்திட்டேன்லே...
  இனி தொடர்ந்து கலக்குவோம்! //

  வருக..வருக!

  ReplyDelete
 65. // ஜீ... said...

  //எப்போ ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொல்றவனை அடிச்சு விரட்டாம நாம ஃப்ரெண்டா இருப்போம்னு கதை சொல்றான்னா, ஃபிகரு முக்கால்வாசி மடிஞ்சிருச்சுன்னு தான் அர்த்தம்..இன்னும் கால்வாசி தானே.’//
  இங்க பார்ரா! :-)

  என்னமா அனுபவிச்சு எழுதியிருக்கார் அண்ணன்! //

  ஆமாய்யா..நல்லா மேடை போட்டுச் சொல்லுங்க!

  ReplyDelete
 66. //Yoga.s.FR said...
  இதுக்கு ஏன் அதிரணும், ஏன் அதிரணும்கிறேன்???அது மனைவி,இது காதலி அப்புடீன்னு கட்&ரைட்டா சொல்லிட வேண்டியது தானே? //

  உங்க அளவுக்கு மதன் தைரியசாலி கிடையாது பாஸ்..

  ReplyDelete
 67. //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  ஆமா சார்..போய்ட்டு மெதுவா வாங்க../////////

  அப்புடீன்னா சப்புக் கொட்டிகிட்டு காத்திருக்கத் தேவையில்லைங்கிறீங்க?அடுத்த வாரம் சனிக்கிழம தான் தொடருமாக்கும்? //

  இல்லை..அதற்கு முன்பே தொடரும்..

  ReplyDelete
 68. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  ஆமா சார்..போய்ட்டு மெதுவா வாங்க../////////

  அப்புடீன்னா சப்புக் கொட்டிகிட்டு காத்திருக்கத் தேவையில்லைங்கிறீங்க?அடுத்த வாரம் சனிக்கிழம தான் தொடருமாக்கும்? //

  இல்லை..அதற்கு முன்பே தொடரும்..§§§§§கேட்டுங்க,மக்காள்ஸ் சனிக்கெழம வரைக்கும் காத்திருக்க தேவலையாம்!இன்னிக்கே போட்டாலும் போட்டுடுவாராம்!மொத ஆளா வந்து "வட" வாங்கிடுங்க!

  ReplyDelete
 69. செங்கோவி said...உங்க அளவுக்கு மதன் தைரியசாலி கிடையாது பாஸ்..////அப்புடித் தெரியலியே?????

  ReplyDelete
 70. //////“டேய்..உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னேல்ல..பையன்கூட இருக்கான்னு நான் போன தடவை இந்தியா வந்தப்போ சொன்னியேடா”

  மதன் இதைக் கேட்டதும் அதிர்ந்து போனான்.

  சிவாவிடம் தான் அப்படிப் பேசியதையே மதன் மறந்து போயிருந்தான்.
  ////////


  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...........!

  ReplyDelete
 71. ////// ஊதாரிக் காதலனும் சிக்கனமான கணவனும் வேண்டும் என்கிறார்கள்.இது என்ன மாதிரியான கண்றாவி லாஜிக் என்றே புரியவில்லை..////////

  பணம் சேருமிடம் அவங்களாகவே இருக்கனும்னு நினைக்கிறாங்க.......!

  ReplyDelete
 72. /////மதன் இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். ஒரு அழகிய மாலை நேரத்தில் அருகில் இருந்த பீச்சில் வைத்து தன் காதலைச் சொன்னான்.
  “ என் அம்மா போனப்புறம் எனக்குன்னு யாரும் இல்லைன்னு ஆயிடுச்சு. உன்கூட பழகுன இந்த பத்து நாள்ல தான் நான் பழைய படி சந்தோசமா இருக்கேன். உன்கூட இருக்கும்போது என் அம்மாகூட இருக்கிற அதே ஃபீலிங்..நீ எப்பவும் என்கூட இருப்பியா..நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் “///////

  எல்லா இடத்துலேயும் ஒரே டெக்னிக்குதானா

  ReplyDelete
 73. ///// எப்போ ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொல்றவனை அடிச்சு விரட்டாம நாம ஃப்ரெண்டா இருப்போம்னு கதை சொல்றான்னா, ஃபிகரு முக்கால்வாசி மடிஞ்சிருச்சுன்னு தான் அர்த்தம்..இன்னும் கால்வாசி தானே.’///////

  அடேங்கப்பா..........

  ReplyDelete
 74. /////இந்தியாவில் வீணான என் வாலிபப் பருவத்தை இங்கு வந்து ஈடுகட்டுவோம் என்றால் விட மாட்டேங்கிறாளே..////////

  இதெல்லாம் நியாயமா?

  ReplyDelete
 75. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  பணம் சேருமிடம் அவங்களாகவே இருக்கனும்னு நினைக்கிறாங்க.......!//

  அண்ணன் சொன்னாச் சரி தான்.

  ReplyDelete
 76. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///// எப்போ ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொல்றவனை அடிச்சு விரட்டாம நாம ஃப்ரெண்டா இருப்போம்னு கதை சொல்றான்னா, ஃபிகரு முக்கால்வாசி மடிஞ்சிருச்சுன்னு தான் அர்த்தம்..இன்னும் கால்வாசி தானே.’///////

  அடேங்கப்பா........//

  ஏண்ணே, தெரியாத மாதிரி ஆக்ட் கொடுக்கிறீங்க..

  ReplyDelete
 77. சிவாவிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் புதிதாக ஏற்பட்டிருந்தது. முதலாவது அவன் ப்ளாக் எழுத ஆரம்பித்திருந்தான். இரண்டாவது யாரைப்பார்த்தாலும் ‘நான் பதிவர்..இது என் ப்லாக் அட்ரஸ்’ என்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தான். மதனிடமும் அதைச் சொன்னான். ”ஓஹோ..என்று சுவாரஸ்யமே இல்லாமல் மதன் கேட்டுக் கொண்டான். சிவா மாதிரிப் பதிவர்களுக்கு இந்த மாதிரி ஓஹோக்கள் வாங்கி அசிங்கப்படுவது புதிதல்ல என்பதால் அதைப் பெரிதாக சிவா எடுத்துக்கொள்ளவில்லை.//

  அவ்.............எனக்கு அந்தப் பதிவர் யார் என்று தெரிஞ்சிடுச்சே....

  ReplyDelete
 78. நல்லாத்தான் கதை சொல்றீங்க பாஸ்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.