Wednesday, August 17, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_36


“டேய்..உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னேல்ல..பையன்கூட இருக்கான்னு நான் போன தடவை இந்தியா வந்தப்போ சொன்னியேடா”

மதன் இதைக் கேட்டதும் அதிர்ந்து போனான். சிவாவிடம் தான் அப்படிப் பேசியதையே மதன் மறந்து போயிருந்தான்.

மதன் உடனே அந்த ஷாக்கை உள் வாங்கிக்கொண்டான். தைரியமாக எதிர்த்து நிற்பது என்று முடிவு செய்தான்.

“நான் எப்படா சொன்னேன்? நாம யூ.கே.விசா பத்தித் தானே பேசுனோம்?”
“ஆமாடா..கடைசியா நான் பெர்சனல் லைஃப் எப்படிப் போகுதுன்னு கேட்டப்போ நீ ஒரு பையன்னு சொன்னியே”
“மேரேஜ் ஆயிடுச்சு..என் வைஃப் இன்னாரு..இன்ன வேலை..செய்றாங்க..என் பையன் பேரு இது..வயசு இத்தனை-இப்படில்லாம் நான் சொன்னனாக்கும்? கனவு கினவு கண்டயா நீ”
“ம்..அப்படிச் சொல்லலை..ஆனா பையன் இருக்கான்னு சொன்னியே”
“கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னனா?”
“இல்லே.ஆனா”
“கல்யாணமே ஆகலைன்னா பையன் எப்படிடா வருவான்..லூசுப் பயலே..ஏன் இப்படி என் வாழ்க்கையோட விளையாடறே”

சிவாவுக்கு தன் ஞாபகசக்தி மீது சந்தேகம் வந்தது.

“வேற யார்கிட்டயும் பேசுனயா? பாய்க்குத் தான் இப்போ கல்யாணம் ஆகி, குழந்தையும் இருக்கு..அவனையும் என்னையும் போட்டுக் குழப்பிட்டயா?”

சிவா குழம்பிப்போனான். இவ்வளவு உறுதியாச் சொல்றான்னா, நம்ம தான் கன்ஃபியூஸ் ஆயிட்டோம் போல’ என்று நினைத்துக்கொண்டான்.

“சிவா, நான் எவ்வளவு ஆசையா என் ஃப்ரெண்ட்கிட்ட என் லவ்வரை இண்ட்ரடியூஸ் பண்ணுவோம்னு வந்தேன்..நீ என்னடான்னா....”
”சரிடா..சரிடா..” என்று பம்மினான் சிவா.
“நல்லவேளைடா..நாளைக்கு அவ முன்னாடி சொல்லாமப் போனியே..”

“சரி..சரி..விடு..நான் நாளைக்கு வர்றேன்..ஹா..ஹா..செம ஜோக்குல்ல?” என்றான் சிவா.

மதன் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான்.

றுநாள் ஸ்டிக்ல்ஸ்டட்  ஹோட்டலில் வைத்து யோஹன்னாவும் சிவாவும் சந்தித்துக்கொண்டார்கள். மதன் அப்பாவியாக அமர்ந்திருந்தான்.

யாரைப் பார்த்தாலும் முதல் சந்திப்பிலேயே தயக்கமின்றிப் பேசும் சிவா இங்கும் ஆரம்பித்தான். பரஸ்பர அறிமுகங்கள், தன் தீஸிஸ் ஒர்க் என்று பேசிக்கொண்டே போனான். யோஹன்னாவிற்கு அவன் வெளிப்படையாக சரளமாகப் பேசுவது பிடித்திருந்தது. அவள் தன் பெற்றோர் பற்றியும் இப்போது தான் தனித்து இருப்பது பற்றியும் சொன்னாள். சிவாவுக்கு அதைக் கேட்கவும் அந்தப் பெண் மேல் பரிதாபம் பிறந்தது.உடனே அவளுக்கு அண்ணன் கேரக்டரை தானே முன்வந்து மனதிற்குள் ஏற்றுக்கொண்டான்.

“ மதன் சொன்னான்...ரொம்ப சந்தோசமா இருந்துச்சு..” என்றான் சிவா.
“என்ன சொன்னான்?”
“நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னும் சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கப்போறீங்கன்னும் சொன்னான்..நீங்க ரெண்டு பேரும் பெர்ஃபெக்ட் ஜோடி”

யோஹன்னா மதனைத் திரும்பிப் பார்த்தாள். மதனுக்குத் தெரியும், சிவா இப்படி உளறுவான் என்று. உளறட்டும் என்றே முழுதாக எதையும் சொல்லாமல் கூட்டி வந்திருந்தான். 

’இது அடுத்த அட்டாக்..நண்பர்களிடம் கூடச் சொல்கிறானே என்று நம்ப ஆரம்பித்தால் மேட்டர் ஓவர்..ஏன் இப்படி நண்பர்களிடம் சொல்லிக் கேவலப்படுத்துகிறாய்?” என்று துள்ளினால், இன்றோடு இவள் சேப்டர் க்ளோஸ்..இப்போது யோஹன்னா என்ன செய்யப் போகிறாள்?” முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் சாப்பிட்டுகொண்டே இருந்தான்.

‘பண்றதையும் பண்ணிட்டு எப்படி அமுக்கன் மாதிரி இருக்கான்’ என்று யோஹன்னா யோசித்தாள்.சிரிப்பு வந்தது. மதனும் சிரித்தான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சிவாவும் சிரித்தான்.

தனும் யோஹன்னாவும் அதன்பிறகு காதலர்களாகவே நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். யோஹன்னா ஒரு புத்தகப் புழுவாக இருந்தாள். ரொம்பவும் நீதி, நேர்மை, கற்பென மாரல் மங்கையாக இருந்தாள். மதன் சமயம் பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தான். நெருக்கத்தில் யோஹன்னாவைப் பார்ப்பதும், அவ்வாறு பார்த்த பின்னும் அவளை ஏதும் செய்ய முடியாமல் இருப்பதும் மதனுக்கு பேரவஸ்தையாக இருந்தது. 

காதலில் ஆகச் சிறந்த விஷயமே இந்த தவிப்பு தான் என்று தோன்றியது, கையருகே பெண் இருந்தும், அவளது வாசமே தன்னைத் தூண்டியும் ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தத் தவிப்பும்  நன்றாகவே இருந்தது. தொட்டுவிடலாமா என்று ஆர்வம் பொங்கிய போதெல்லாம் அடக்கிக்கொண்டான். அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்!

தன் பெண்களுக்காக செலவழித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்கர்களும் மதனுக்குப்  போட்டியாக வீடு வாங்க செலவழித்துக்கொண்டிருந்தார்கள். கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் எளிதாகக் கிடைத்தது. ஒன்றுக்கு இரண்டாக ஜிமிக்கி வாங்குவது போல் வீடு வாங்கித் தள்ளினார்கள். 

கடனைத் திருப்பிச் செலுத்தும்போது தான் பிரச்சினை வந்தது. ‘திருப்பிக் கொடுக்க வக்கில்லை ’என்பதை டீசண்டாக சப் ப்ரைம் இஷ்யூ என்றார்கள்.கடன் கொடுத்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அலறின. அதைக் கேட்ட கரடிகள் பங்குச்சந்தையில் பாய்ந்து குதறின.

தொழில் நிறுவனங்கள் தங்கள் புராஜக்ட்டை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. புராஜக்ட் நின்றதும் ஆட்குறைப்பு ஆரம்பமானது.

கம்பெனி மதனை அழைத்தது. “தங்கள் சேவையை மெச்சினோம்..இருப்பினும் தங்களைத் தொடர்ந்து இங்கு வைத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்..விசா முடிய இன்னும் 3 மாதம் இருப்பதால் நீங்களும் இந்த நாட்டில் அதுவரை தங்கலாம். விருப்பப்பட்டால் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால் ஃப்ளாட்டை இம்மாத இறுதியில் காலி பண்ணி விடவும். நன்றி. நீங்கள் கிளம்பலாம்” என்று பிங்க் ஸ்லிப்பைக் கையில் கொடுத்தது.

பெரிய சேமிப்பு ஏதும் இன்றி மதன் நார்வேயில் நடுரோட்டில் நின்றான்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

72 comments:

 1. இன்னைக்கு எனக்குத்தான் வடை

  ReplyDelete
 2. என்னங்க பிகர பார்த்து பிரண்டு கோட்டை விட்டுட்டாரு போல, சுவாரஸ்ஸமாக போகுது

  ReplyDelete
 3. யோவ் இரவு வானம், மதிய நேரத்துல வந்து இப்படி வடை வாங்கலாமா?

  ReplyDelete
 4. ஆஹா..நைட்டு இன்னைக்கு வடையை தட்டிட்டுப் போய்ட்டாரே..

  ReplyDelete
 5. அடடா இன்னிக்கு முடிவு சோகமாயிடுச்சே....... அப்போ இனி நோ கிளுகிளுப்பா....?

  ReplyDelete
 6. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் இரவு வானம், மதிய நேரத்துல வந்து இப்படி வடை வாங்கலாமா? //

  நல்ல நேரம் சதீஷ்கிட்ட டைம் குறிச்சா வடை வாங்க முடியும்..

  ReplyDelete
 7. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடடா இன்னிக்கு முடிவு சோகமாயிடுச்சே....... அப்போ இனி நோ கிளுகிளுப்பா....? //

  சொல்ல மாட்டனே..

  ReplyDelete
 8. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடடா இன்னிக்கு முடிவு சோகமாயிடுச்சே....... அப்போ இனி நோ கிளுகிளுப்பா....? //

  சொல்ல மாட்டனே..

  ///////

  அப்போ கிளுகிளு கன்பர்ம்.........

  ReplyDelete
 9. @ பன்னிக்குட்டி

  மத்தியானம் வெறும் வடைய வெச்சு என்ன பண்ணுறது??

  ReplyDelete
 10. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் இரவு வானம், மதிய நேரத்துல வந்து இப்படி வடை வாங்கலாமா? //

  நல்ல நேரம் சதீஷ்கிட்ட டைம் குறிச்சா வடை வாங்க முடியும்..
  /////

  இல்ல அவரு இரவு வானமா இருக்காரே அதான் கேட்டேன்.......

  ReplyDelete
 11. //// இரவு வானம் said...
  @ பன்னிக்குட்டி

  மத்தியானம் வெறும் வடைய வெச்சு என்ன பண்ணுறது??
  //////

  ஒரு கட்டிங்க தேத்துறது?

  ReplyDelete
 12. @ பன்னிக்குட்டி

  ஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது? நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்

  ReplyDelete
 13. ///////இரவு வானம் said...
  @ பன்னிக்குட்டி

  ஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது? நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்
  ///////

  ஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க........

  ReplyDelete
 14. கட்டிங்குக்கு வடையா???

  ReplyDelete
 15. @
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////இரவு வானம் said...
  @ பன்னிக்குட்டி

  ஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது? நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்
  ///////

  ஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......

  ஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா யோசிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....

  ReplyDelete
 16. ///////இரவு வானம் said...
  @
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////இரவு வானம் said...
  @ பன்னிக்குட்டி

  ஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது? நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்
  ///////

  ஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......

  ஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா யோசிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....

  //////////

  அப்போ பாலமன் ஆப்பையாவ கூப்புட்டு ஒரு பட்டிமன்றன் வெச்சி முடிவு பண்ணிடுவோம்......

  ReplyDelete
 17. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////இரவு வானம் said...
  @
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////இரவு வானம் said...
  @ பன்னிக்குட்டி

  ஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது? நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்
  ///////

  ஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......

  ஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா யோசிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....

  //////////

  அப்போ பாலமன் ஆப்பையாவ கூப்புட்டு ஒரு பட்டிமன்றன் வெச்சி முடிவு பண்ணிடுவோம்....

  அவரு வேணாங்க பேசாம நம்ம எதிர்கட்சி தலைவர கூப்பிடுவோம்

  ReplyDelete
 18. ////////இரவு வானம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////இரவு வானம் said...
  @
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////இரவு வானம் said...
  @ பன்னிக்குட்டி

  ஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது? நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்
  ///////

  ஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......

  ஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா யோசிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....

  //////////

  அப்போ பாலமன் ஆப்பையாவ கூப்புட்டு ஒரு பட்டிமன்றன் வெச்சி முடிவு பண்ணிடுவோம்....

  அவரு வேணாங்க பேசாம நம்ம எதிர்கட்சி தலைவர கூப்பிடுவோம்////////

  அவருக்கு ஊத்திக் கொடுக்கனுமே.....?

  ReplyDelete
 19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அவருக்கு ஊத்திக் கொடுக்கனுமே.....? //

  அய்யய்யோ..அதுக்கு ’அவரை’ கூப்பிடணுமே..

  ReplyDelete
 20. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அவருக்கு ஊத்திக் கொடுக்கனுமே.....? //

  அய்யய்யோ..அதுக்கு ’அவரை’ கூப்பிடணுமே..

  ////////

  வெளங்கிரும்யா...........

  ReplyDelete
 21. இன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..

  ReplyDelete
 22. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..

  //

  பன்னிக்குட்டியாரே சும்மா இருந்தாலும் இவங்க எடுத்துக் கொடுத்திடுவாங்க போலிருக்கே..

  ReplyDelete
 23. //அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்!//
  அண்ணன் வெளிநாட்ல இருந்ததால இதெல்லாம் தெரியுது!

  ReplyDelete
 24. //கையருகே பெண் இருந்தும், அவளது வாசமே தன்னைத் தூண்டியும் ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தத் தவிப்பும் நன்றாகவே இருந்தது//
  ஏதோ நீங்க சொல்றதால இதெல்லாம் தெரிஞ்சுக்க முடியுது!

  ReplyDelete
 25. ////ஜீ... said...
  //அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்!//
  அண்ணன் வெளிநாட்ல இருந்ததால இதெல்லாம் தெரியுது!
  //////

  அடங்கொன்னியா.....

  ReplyDelete
 26. ////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..

  ///////

  நைட்டுக்கு இதவிட கிளுகிளு மேட்டர் ஒண்ணு இருக்காம்......

  ReplyDelete
 27. வணக்கம் பசங்களா..
  இங்கே என்ன நடக்குது?
  மிட் நைட்டில் வந்து சூடாக்க வேண்டிய மன்மத லீலைகள் மாலையே வந்திடுச்சே...

  இருங்க படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 28. “கல்யாணமே ஆகலைன்னா பையன் எப்படிடா வருவான்..லூசுப் பயலே..ஏன் இப்படி என் வாழ்க்கையோட விளையாடறே”

  சிவாவுக்கு தன் ஞாபகசக்தி மீது சந்தேகம் வந்தது.//

  அவ்....இதுவரை நல்லாத் தானே போய்க் கொட்டிருந்திச்சு.

  ReplyDelete
 29. அடுத்த பாகத்தில்....யோஹன்னா வீட்டு டின்னர் இடம்பெறும்,. அதன் பிறகு யோஹன்னா வீட்டில் தங்கலாம் என்று மதன் முடிவெடுப்பான் என நினைக்கிறேன்.

  சுவாரஸ்யமாகத் தொடரினை நகர்த்திச் செல்லுறீங்க.

  ReplyDelete
 30. உம்.....................,என்ன செய்ய விதின்னு ஒன்னு இருக்கே?கத நல்லா போவுது,பிடியுங்க,வாழ்த்துக்களை!!!!( நான் நல்ல புள்ளயாக்கும்?!)

  ReplyDelete
 31. நிரூபன் said..........அதன் பிறகு யோஹன்னா வீட்டில் தங்கலாம் என்று மதன் முடிவெடுப்பான் என நினைக்கிறேன்.////இந்த நெனைப்புத் தான் புளப்பக் கெடுக்கப் போவுது!

  ReplyDelete
 32. ஏன் செங்கோவி பச்சப் புள்ளங்க மனச கெடுக்கிறீங்க?பாருங்க,,ஜீ ஒங்களுக்கு நன்றில்லாம் சொல்லுறாரு!வாயில வெரல வச்சா கடிக்கத் தெரியாத புள்ளங்கள.....................................!

  ReplyDelete
 33. // ஜீ... said...
  //அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்!//
  அண்ணன் வெளிநாட்ல இருந்ததால இதெல்லாம் தெரியுது! //

  ஆமாம் தம்பி..அங்கு காதில் விழுந்த விஷயங்கள் தான் இவை..இல்லேன்னா இதெல்லாம் இந்த அப்பாவிக்கு எப்படித் தெரியும்?

  ReplyDelete
 34. //// பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..//

  நைட்டுக்கு இதவிட கிளுகிளு மேட்டர் ஒண்ணு இருக்காம்......//

  சும்மா இருங்கண்ணே..நைட்டு பிள்ளைங்க ஏமாந்துடப் போவுது..

  ReplyDelete
 35. "மதன்" பெண்களுக்காக "செலவழித்து"க்கொண்டிருந்த அதே நேரத்தில்,அமெரிக்கர்களும் "மதனுக்குப் போட்டியாக" வீடு வாங்க "செலவழித்து"க் கொண்டிருந்தார்கள்.////அட இது நல்லாருக்கே?

  ReplyDelete
 36. //
  சி.பி.செந்தில்குமார் said...
  என்னாச்சு அண்ணனுக்கு?//

  நீங்க வருத்தப்படற அளவுக்கு நான் என்னண்ணே பண்ணிட்டேன்..

  ReplyDelete
 37. // நிரூபன் said...
  வணக்கம் பசங்களா..
  இங்கே என்ன நடக்குது?
  மிட் நைட்டில் வந்து சூடாக்க வேண்டிய மன்மத லீலைகள் மாலையே வந்திடுச்சே...//

  பகல்லயும் வரும் குழந்தாய்!

  //அடுத்த பாகத்தில்....யோஹன்னா வீட்டு டின்னர் இடம்பெறும்,. அதன் பிறகு யோஹன்னா வீட்டில் தங்கலாம் என்று மதன் முடிவெடுப்பான் என நினைக்கிறேன்.//

  சும்மா இருங்கய்யா..நாந்தான் சொல்லுவேன்.

  ReplyDelete
 38. அப்போ இன்னைக்கு "டின்னர்" கெடையாதா?

  ReplyDelete
 39. / Yoga.s.FR said...
  உம்.....................,என்ன செய்ய விதின்னு ஒன்னு இருக்கே?கத நல்லா போவுது,பிடியுங்க,வாழ்த்துக்களை!!!!( நான் நல்ல புள்ளயாக்கும்?!) //

  ஓ..நல்ல புள்ளைன்னா இப்படித் தான் கமெண்ட் போடணுமா..

  //ஏன் செங்கோவி பச்சப் புள்ளங்க மனச கெடுக்கிறீங்க?பாருங்க,,ஜீ ஒங்களுக்கு நன்றில்லாம் சொல்லுறாரு!வாயில வெரல வச்சா கடிக்கத் தெரியாத புள்ளங்கள...! //

  அவருக்கா தெரியாது....

  ReplyDelete
 40. //Yoga.s.FR said...
  அப்போ இன்னைக்கு "டின்னர்" கெடையாதா?//

  உண்டு பாஸ்..இது போனஸ்.

  ReplyDelete
 41. தல அடுத்த பகுதியை எப்ப எழுதுவீங்க?

  ReplyDelete
 42. //
  Kss.Rajh said...
  தல அடுத்த பகுதியை எப்ப எழுதுவீங்க?//

  வெள்ளி இரவு!

  ReplyDelete
 43. அடடா மறந்துட்டேனே... லீலையை..

  ReplyDelete
 44. நைட் நேரத்துல போட வேண்டியதை மட்ட மதியம் போட்டு இம்சை பண்ணும செங்கோவி ஒழிக.

  ReplyDelete
 45. மதன் ரொம்ப தவிக்கிறான். பாவம்யா... இம்புட்டு எபிசோடு இழுக்காதிங்க.

  ReplyDelete
 46. //
  தமிழ்வாசி - Prakash said...
  மதன் ரொம்ப தவிக்கிறான். பாவம்யா... இம்புட்டு எபிசோடு இழுக்காதிங்க.//

  தவிக்கிறது மதனா..தமிழ்வாசியா?

  ReplyDelete
 47. naan... naan... naan inna sollare...naa
  veri nice

  ReplyDelete
 48. Surprise ... an early episode during the weekdays. Thank you.

  -----

  It is interesting to see the way you develop Joanna's character, she is an interesting characterization. Waiting for the next episode ....

  ReplyDelete
 49. சந்தடி சாக்குல ..சப் prime யும் உள்ள நுளைச்சிட்டீங்க செங்கோவி...

  ReplyDelete
 50. அன்பரே
  பதிவையும், வந்துள்ள
  கருத்துரைகளும் படித்த எனக்கு
  புதுமையாகவும் நகைச் சுவையாகவும் இருந்தது
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 51. மதன் குழம்பிப்போனான். இவ்வளவு உறுதியாச் சொல்றான்னா, நம்ம தான் கன்ஃபியூஸ் ஆயிட்டோம் போல’ என்று நினைத்துக்கொண்டான்.


  இந்த இடத்துல மதனா குழம்பி போவான்

  சாரி டவுட்டு

  ReplyDelete
 52. வழக்கம்போல அசத்தல்... அசத்திட்டேருங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 53. பகல் பதிவு திடீர் அதிர்ச்சி

  ஏன் இந்த மாற்றம் ?

  ReplyDelete
 54. பண்றதையும் பண்ணிட்டு எப்படி அமுக்கன் மாதிரி இருக்கான்’ என்று யோஹன்னா யோசித்தாள்.சிரிப்பு வந்தது. மதனும் சிரித்தான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சிவாவும் சிரித்தான்.

  நானுன்தேன்

  எதுக்கு சிரிச்க்கேன்னு கேக்கப்படாது !
  ஆமா சொல்லிப் புட்டேன்

  ReplyDelete
 55. நல்லாதான்யா போய்கிட்டிருக்கு.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 56. கடனைத் திருப்பிச் செலுத்தும்போது தான் பிரச்சினை வந்தது. ‘திருப்பிக் கொடுக்க வக்கில்லை ’என்பதை டீசண்டாக சப் ப்ரைம் இஷ்யூ என்றார்கள்.கடன் கொடுத்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அலறின. அதைக் கேட்ட கரடிகள் பங்குச்சந்தையில் பாய்ந்து குதறின.


  ஆஹா ஆஹா

  அப்ப கத சமீபத்தில்தான் நடந்ததா

  ReplyDelete
 57. பெரிய சேமிப்பு ஏதும் இன்றி மதன் நார்வேயில் நடுரோட்டில் நின்றான்.

  அய்யோ.................

  பா........................வம்

  ReplyDelete
 58. கடைக்காரர் ஏங்க போனாரு ,

  நேரத்தை மாத்தி இப்பிடி பதிவை போட்டுட்டு எண்ணை இப்படி தனியா புலம்ப வச்சுட்டாரே .

  யாராவது கடைக்காரரை பாத்தா வர சொல்லுங்க

  ReplyDelete
 59. //மாலதி said...
  naan... naan... naan inna sollare...naa veri nice //

  நன்றி சகோ.

  ReplyDelete
 60. // வினையூக்கி said...
  Surprise ... an early episode during the weekdays. Thank you.

  It is interesting to see the way you develop Joanna's character, she is an interesting characterization. Waiting for the next episode ....//

  நன்றி செல்வா.

  ReplyDelete
 61. // Reverie said...
  சந்தடி சாக்குல ..சப் prime யும் உள்ள நுளைச்சிட்டீங்க செங்கோவி...//

  அதுவும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் தான் ரெவரி.

  ReplyDelete
 62. // புலவர் சா இராமாநுசம் said...
  அன்பரே
  பதிவையும், வந்துள்ள
  கருத்துரைகளும் படித்த எனக்கு
  புதுமையாகவும் நகைச் சுவையாகவும் இருந்தது
  நன்றி! //

  வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 63. //
  M.R said...
  மதன் குழம்பிப்போனான். இவ்வளவு உறுதியாச் சொல்றான்னா, நம்ம தான் கன்ஃபியூஸ் ஆயிட்டோம் போல’ என்று நினைத்துக்கொண்டான்.


  இந்த இடத்துல மதனா குழம்பி போவான்

  சாரி டவுட்டு//

  சாரி பாஸ்..தப்பு தான்..திருத்தி விட்டேன்..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 64. // மாய உலகம் said...
  வழக்கம்போல அசத்தல்... அசத்திட்டேருங்க வாழ்த்துக்கள் //

  நன்றி மாயா.

  ReplyDelete
 65. M.R said...
  //பகல் பதிவு திடீர் அதிர்ச்சி ...ஏன் இந்த மாற்றம் ? //

  இது சும்மா போனஸ் பதிவுய்யா..

  //கடைக்காரர் ஏங்க போனாரு ,..நேரத்தை மாத்தி இப்பிடி பதிவை போட்டுட்டு எண்ணை இப்படி தனியா புலம்ப வச்சுட்டாரே .//

  நன்றி எம்.ஆர்.

  ReplyDelete
 66. // காட்டான் said...
  நல்லாதான்யா போய்கிட்டிருக்கு.... வாழ்த்துக்கள்...//

  காட்டான் ஏன் குழ போடாமப் போய்ட்டாரு...

  ReplyDelete
 67. கிழிந்த டைரி... கலக்கலாய்...

  ReplyDelete
 68. செங்கோவி said... [Reply]

  //Yoga.s.FR said...
  அப்போ இன்னைக்கு "டின்னர்" கெடையாதா?//

  உண்டு பாஸ்..இது போனஸ்.///வைத்தியரு சாப்பாட்டுக்கு முன்னாடி,சாப்பாட்டுக்குப் பின்னாடின்னு குடுப்பாரே,அது மாதிரின்னு சொல்லுறீங்க?டின்னர காலேல சாப்பிட்டா என்ன மதியம் சாப்பிட்டா என்ன?டின்னர்,டின்னர் தானே?

  ReplyDelete
 69. இரவு பகல் பாராமல் கதைக்கும் செங்கோவிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 70. // FOOD said...
  இரவு பகல் பாராமல் கதைக்கும் செங்கோவிக்கு வாழ்த்துக்கள். //

  நன்றி..நன்றி..நன்றி.

  ReplyDelete
 71. பதிவுக்கு நன்றி.
  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.