Sunday, August 21, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_38


மதன் தொடர்ந்து வேலை தேடினான். பல கம்பெனிகளுக்கும் ரெசியூம் அனுப்பிக்கொண்டே இருந்தான். ஆனாலும் வேலை தான் கிடைத்த பாடில்லை. வேலை தேடியே இரண்டு மாதம் கடந்திருந்தது. தனக்கு வேலை போன விஷயத்தை தன் நண்பர்களுக்கும் ஜமீலாவிற்கும் அவன் சொல்ல்வேயில்லை. அதை பெரும் மானப்பிரச்சினையாக நினைத்தான்.

தன் வெற்றி, தோல்விகளில் சரிசமமாகப் பங்கெடுத்துக்கொள்கிறவளே மனைவி. தன் வாழ்வின் சரி பாதியான வாழ்க்கைத் துணையிடம் நடிக்கத் தொடங்குபவன், முடிவில் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். கடும் தோல்வியிலும், விரக்தியிலும் இருக்கும் மனிதனுக்கு வாழ்க்கைத் துணை தரும் ஆறுதல் அளப்பரியது. அதைப் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி, மதன் ஜமீலாவிடமே இமேஜை மெயிண்டய்ன் செய்தான்.

அவளும் விஷ்யம் தெரியாமல் ‘ஏன் இன்னும் விசா எடுக்கவில்லை’ என்று சண்டையை தொடர்ந்தாள். அது மதனை மேலும் வெறுப்பேற்றியது. என்ன பெண் இவள்...எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுகொண்டு..’ என்று கோபமாக வந்தது. அவளுடன் பேசுவதைக் குறைத்தான்.

யோஹன்னா சந்தோசத்தின் உச்சியில் இருந்தாள். தான் எதிர்பார்த்த மாதிரியே தன் மேல் அன்பு பொழிய ஒருவன் கிடைத்திருப்பது அவளை எப்போதும் சந்தோசத்தில் மிதக்க வைத்தது. அதுவும் அவன் தன்னுடனே தங்கியிருக்கின்றான் என்பது மேலும் பூரிப்பைத் தந்தது. தனியே அமர்ந்திருக்கும்போதும் மதனையே நினைத்தாள், சிரித்தாள். அலுவலக நண்பர்கள் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். மெல்ல என்ன விஷயம் என்று நோண்டினார்கள்.

யோஹன்னா தன் காதலனைப் பற்றிச் சொன்னாள். நண்பர்களும் சந்தோசத்துடன் அவளை கேலி செய்தார்கள். அன்று மாலையே அவள் வீட்டிற்கு வந்து மதனைச் சந்திப்பதாகச் சொன்னார்கள். யோஹன்னாவும் சரி என்றாள்.

திவர் சிவா அன்று கடும் விரக்தியில் இருந்தான். காரணம், அன்று பதிவு எழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. என்னத்தைத் தான் எழுத என்று கடுப்பாகி, லேப்டாப்பை மூடிவிட்டு, வெளியே கிளம்பினான். பொதுவாக பதிவருக்கு கோபம் வருவது நல்லது. அந்த கோபத்தை ஜெயலலிதா மீதோ கருணாநிதி மீதோ இறக்கினால், நல்ல ஹிட்ஸ் கிடைக்கும்.

கல்யாணம் ஆகியிருந்தாலாவது மனைவியுடன் சண்டை போட்டு, கோபத்தை கூட்டிக்கொள்ளலாம். கட்டைப் பிரம்மசாரியான சிவாவுக்கு கோபமும் நன்றாக வரவில்லை. எம்ப்டி மைண்டாக, வெளியில் சுற்றிய சிவா, தற்செயலாய் மதன் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டதை அறிந்தான். ‘சரி, இவனையாவது பார்ப்போம்’ என்று உள்ளே நுழைந்தான்.

மதன் வழக்கம்போல் ‘வந்துட்டாண்டா இம்சை’ என்று நினைத்துக்கொண்டே ‘வாடா சிவா” என்று சிரித்தான்.

சிவா உள்ளே போய் அமர்ந்து கொண்டு, வேலை விஷயம் என்ன ஆயிற்று என்று விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, யோஹன்னா தன் நண்பர்கள் கூட்டத்துடன் உள்ளே நுழைந்தாள். கூட்டத்தைப் பார்த்து மதன் மிரண்டான். யோஹன்னா மதனிடம் அவர்களை அறிமுகப்படுத்தினாள்.

“இவங்க என் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ்..உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க..அதான் கூட்டி வந்தேன்” என்றாள். சிவாவையும் அனைவரிடமும் ‘எனக்கு கிடைத்த இந்திய அண்ணன்’ என்று அறிமுகப்படுத்தினாள். 

ஏற்கனவே ஃபீலிங்ஸ் பார்ட்டியான சிவா மனதில் ‘என் இனிய வெள்ளைக்காரத் தங்கச்சிக்கு’ என்று ஒரு கவிதைத் தலைப்பு ஓடியது. ‘அப்பாடா பதிவு ஒன்னு சிக்குச்சு’ என்று முகம் மலர்ந்தான்.

யோஹன்னா மதனுக்கு வேலை போய் விட்டதையும், இன்னும் விசா ஒரு மாதமே இருப்பதையும் சொன்னாள். எல்லோரும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தபோது, யோஹன்னாவின் தோழி ஒருத்தி ‘இது ஒரு பிரச்சினையே அல்ல்..மதன் இந்தியா போக வேண்டியதும் இல்லை’ என்றாள். எல்லோரும் ஆச்சரியத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

“ரொம்ப சிம்பிள்..இப்போ யோஹன்னா மதனை மேரேஜ் பண்ணிக்கிட்டா, ரெசிடன்ஸி அப்ளை பண்ணிடலாம்..விசா பிராப்ளம் ஓவர்..கண்ணெதிரே தீர்வை வச்சுக்கிட்டு ஏன் எல்லாரும் குழம்புறீங்க?” என்றாள்.

“கிரேட்” என்று அனைவரும் கத்தினர். யோஹன்னா வெட்கத்தால் சிவந்தாள். மதனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. மேட்டரை முடித்துவிட்டு நகரவே அவன் யோஹன்னவிடம் வந்தான். ஆனால் இப்படி ஒரு அருமையான வாய்ப்பு இருப்பது அவனுக்கு உறைக்கவே இல்லை. ஜமீலாவை முழுதாக கழட்டிவிடும் எண்ணமும் அவனுக்கு இல்லாததே அதற்குக் காரணம்.

“என்ன மதன்..என்ன யோசிக்கிறே?” என்று சிவா மதன் திகைத்து நிற்பதைப் பார்த்துக் கேட்டான்.
“ஒன்னுமில்லை..அப்படியே செஞ்சுடலாம்” என்றான் மதன். அனைவருக்கும் உடனே ஒயின் ஆர்டர் செய்யப்பட்டது. நண்பர்கள் ஜோடி ஜோடியாக நடனமாடிக் களைத்த பின் விடை பெற்றனர். சிவாவும் கிளம்பினான்.

மதன் ஜமீலாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். ’இப்போது என்ன செய்வது..இவளைத் திருமணம் செய்துகொண்டு, இங்கேயே செட்டிலானால் எவ்வளவு நன்றாக இருக்கும்..நம் வகுப்பு நண்பர்கள் யாருக்குமே இப்படி ஒரு வாழ்க்கை அமைந்ததில்லையே..எல்லோரிடமும் ‘இப்போது தெரிகிறதா நான் உங்களையெல்லாம் விட உயர்ந்தவன் என்று’ என சவால் விடலாம்.’..

பெரும் குழப்பத்துடன் உட்கார்ந்திருந்த மதனிடம் யோஹன்னா வந்தாள்.

“என்ன யோசனை?”

“நீ இதுவரை என்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லவே இல்லை..இப்போ தீடீர்னு டைரக்டா மேரேஜ்னு சொல்லவும் ஷாக்காகிட்டேன்”

“நான் வாய் திறந்து சொன்னாத்தான் உனக்குத் தெரியுமா? என்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் காதல் தெரியவில்லையா?” என்றாள் வெட்கத்துடன்.

வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். 

(தொடரும்..)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

106 comments:

 1. கலக்குங்க, நல்ல திருப்பம்

  vadai pochae,

  ReplyDelete
 2. M.R said...
  // hi //

  வணக்கம்!

  // i get it //

  என்னது?..வடையா..அதைச் சொல்ல என்ன கூச்சம்? ஏன் இங்கிலிபீசு?

  ReplyDelete
 3. நம்ம கடை பக்கம் நீங்க வரவே மாட்றீங்க அண்ணே, கொஞ்சம் எட்டித்தான் பாக்குறது?

  http://vigneshms.blogspot.com

  ReplyDelete
 4. Heart Rider said...

  // கலக்குங்க, நல்ல திருப்பம் //

  நல்லது..

  // vadai pochae,//

  கவலைப்படாதே சகோதரா...

  ReplyDelete
 5. Heart Rider said...

  // கலக்குங்க, நல்ல திருப்பம் //

  நல்லது..

  // vadai pochae,//

  கவலைப்படாதே சகோதரா...

  ReplyDelete
 6. //
  Heart Rider said...
  நம்ம கடை பக்கம் நீங்க வரவே மாட்றீங்க அண்ணே, கொஞ்சம் எட்டித்தான் பாக்குறது? //

  மறந்து மறந்து போகுது...என்ன செய்ய..வயசாகுதுல்ல..

  ReplyDelete
 7. கவலைப்படாதே சகோதரா...// கே.டிவியில காதல் கோட்டை பாத்தியளோ?

  ReplyDelete
 8. //Heart Rider said...
  கவலைப்படாதே சகோதரா...// கே.டிவியில காதல் கோட்டை பாத்தியளோ?//

  இன்னுமா அந்தப் படமெல்லாம் போடுறாங்க..

  ஏதோ கிழவிக்கான சூழலை நீங்களே உருவாக்க-ன்னு பதிவு போட்டிருக்கீங்களே..அதைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்..

  ReplyDelete
 9. ஏதோ கிழவிக்கான சூழலை நீங்களே உருவாக்க-ன்னு பதிவு போட்டிருக்கீங்களே..அதைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்..// கிழவி இல்லண்ணே உலவி...

  ReplyDelete
 10. தமிழில் மணம் தந்தாச்சு

  ReplyDelete
 11. //////தன் வெற்றி, தோல்விகளில் சரிசமமாகப் பங்கெடுத்துக்கொள்கிறவளே மனைவி. தன் வாழ்வின் சரி பாதியான வாழ்க்கைத் துணையிடம் நடிக்கத் தொடங்குபவன், முடிவில் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். கடும் தோல்வியிலும், விரக்தியிலும் இருக்கும் மனிதனுக்கு வாழ்க்கைத் துணை தரும் ஆறுதல் அளப்பரியது. //////

  அண்ணன் இன்னிக்கு பீலிங்சோட ஆரம்பிச்சிருக்காரே?

  ReplyDelete
 12. வேலை போனாலும் வேலை கெடலையே

  ReplyDelete
 13. //////தனியே அமர்ந்திருக்கும்போதும் மதனையே நினைத்தாள், சிரித்தாள். //////

  என்னதிது, நம்மூரு சினிமா கணக்கா இருக்கே?

  ReplyDelete
 14. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////தன் வெற்றி, தோல்விகளில் சரிசமமாகப் பங்கெடுத்துக்கொள்கிறவளே மனைவி. தன் வாழ்வின் சரி பாதியான வாழ்க்கைத் துணையிடம் நடிக்கத் தொடங்குபவன், முடிவில் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். கடும் தோல்வியிலும், விரக்தியிலும் இருக்கும் மனிதனுக்கு வாழ்க்கைத் துணை தரும் ஆறுதல் அளப்பரியது. //////

  அண்ணன் இன்னிக்கு பீலிங்சோட ஆரம்பிச்சிருக்காரே?

  நானே சொல்லனும் என்று இருந்தேன்

  ReplyDelete
 15. ////பதிவர் சிவா அன்று கடும் விரக்தியில் இருந்தான். காரணம், அன்று பதிவு எழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. ///////

  அடடடா இந்தப் பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி......

  ReplyDelete
 16. /////பொதுவாக பதிவருக்கு கோபம் வருவது நல்லது. அந்த கோபத்தை ஜெயலலிதா மீதோ கருணாநிதி மீதோ இறக்கினால், நல்ல ஹிட்ஸ் கிடைக்கும்./////

  அண்ணன் ஒரு பிரலபதிவர்ங்கிறத காட்டுறாருய்யா....

  ReplyDelete
 17. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////தனியே அமர்ந்திருக்கும்போதும் மதனையே நினைத்தாள், சிரித்தாள். //////

  என்னதிது, நம்மூரு சினிமா கணக்கா இருக்கே?

  இந்த இடத்துல பாட்டு ஒன்னு வச்சிருந்தாரு ,பதிவு நீளமா போயிடுமேன்னு எடுத்துட்டாரு

  ReplyDelete
 18. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அண்ணன் இன்னிக்கு பீலிங்சோட ஆரம்பிச்சிருக்காரே?//

  அண்ணன் ரொம்ப ஃபீல் பண்ணிக்கிட்டே வர்றாரே..வணக்கம்ணே.

  ReplyDelete
 19. //
  M.R said...
  வேலை போனாலும் வேலை கெடலையே //

  அய்யோ..ஆபாசம்..ஆபாசம்!

  ReplyDelete
 20. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////பதிவர் சிவா அன்று கடும் விரக்தியில் இருந்தான். காரணம், அன்று பதிவு எழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. ///////

  அடடடா இந்தப் பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி..//

  தொழிலதிபரை விட மோசமா தொல்லை பண்றாங்களோ..

  ReplyDelete
 21. ///////M.R said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////தனியே அமர்ந்திருக்கும்போதும் மதனையே நினைத்தாள், சிரித்தாள். //////

  என்னதிது, நம்மூரு சினிமா கணக்கா இருக்கே?

  இந்த இடத்துல பாட்டு ஒன்னு வச்சிருந்தாரு ,பதிவு நீளமா போயிடுமேன்னு எடுத்துட்டாரு

  ///////

  அதுனால என்ன நம்ம போட்ருவோம்........

  மேற்படி சிச்சுவேசன்ல அல்லாரும் இந்த பாட்ட நெனச்சுக்குங்கப்பா


  மாசி மாசம் ஆளான பொண்ணு..... மாமன் எனக்குத்தானே.....

  ReplyDelete
 22. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////தனியே அமர்ந்திருக்கும்போதும் மதனையே நினைத்தாள், சிரித்தாள். //////

  என்னதிது, நம்மூரு சினிமா கணக்கா இருக்கே?//

  எங்க போனாலும் ‘அவங்க’ அப்படித் தான்னே..

  ReplyDelete
 23. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அதுனால என்ன நம்ம போட்ருவோம்........

  மேற்படி சிச்சுவேசன்ல அல்லாரும் இந்த பாட்ட நெனச்சுக்குங்கப்பா


  மாசி மாசம் ஆளான பொண்ணு..... மாமன் எனக்குத்தானே.//

  நல்ல பாட்டு..நானா யோசிச்சேனுக்கு யூஸ் ஆகும்!

  ReplyDelete
 24. /////கல்யாணம் ஆகியிருந்தாலாவது மனைவியுடன் சண்டை போட்டு, கோபத்தை கூட்டிக்கொள்ளலாம்.//////

  அப்புறம் பதிவுல வர்ர ஓட்டையும் ஹிட்சையும்தான் நைட்டு டின்னருக்கு வெச்சுக்கனும்.....

  ReplyDelete
 25. ////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அதுனால என்ன நம்ம போட்ருவோம்........

  மேற்படி சிச்சுவேசன்ல அல்லாரும் இந்த பாட்ட நெனச்சுக்குங்கப்பா


  மாசி மாசம் ஆளான பொண்ணு..... மாமன் எனக்குத்தானே.//

  நல்ல பாட்டு..நானா யோசிச்சேனுக்கு யூஸ் ஆகும்!

  /////

  அடங்கொன்னியா.... ஒரு கேப் விட மாட்டேங்கிறாரே?

  ReplyDelete
 26. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////கல்யாணம் ஆகியிருந்தாலாவது மனைவியுடன் சண்டை போட்டு, கோபத்தை கூட்டிக்கொள்ளலாம்.//////

  அப்புறம் பதிவுல வர்ர ஓட்டையும் ஹிட்சையும்தான் நைட்டு டின்னருக்கு வெச்சுக்கனும்.//

  அண்ணனுக்கு அனுபவம் பேசுதோ?

  ReplyDelete
 27. /////எம்ப்டி மைண்டாக, வெளியில் சுற்றிய சிவா, தற்செயலாய் மதன் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டதை அறிந்தான். ‘சரி, இவனையாவது பார்ப்போம்’ என்று உள்ளே நுழைந்தான்.////////

  ப்ளான் பண்ணி போனவர தற்செயலாக்கிட்டீங்களே?

  ReplyDelete
 28. பன்னிக்குட்டி ராம்சாமி said... மாசி மாசம் ஆளான பொண்ணு..... மாமன் எனக்குத்தானே... வெள்ளக்கார பொண்ணு பாடுனா எப்பிடி இருக்கும்னு நினைத்து பார்த்தேன் ஹா ஹா ஹா ராமசாமி அண்ணே நீங்க நினைத்து பார்த்தீங்களா

  ReplyDelete
 29. /////“ரொம்ப சிம்பிள்..இப்போ யோஹன்னா மதனை மேரேஜ் பண்ணிக்கிட்டா, ரெசிடன்ஸி அப்ளை பண்ணிடலாம்..விசா பிராப்ளம் ஓவர்..கண்ணெதிரே தீர்வை வச்சுக்கிட்டு ஏன் எல்லாரும் குழம்புறீங்க?” என்றாள்.//////

  மாப்பு வெச்சுட்டாய்யா ஆப்பு...

  ReplyDelete
 30. /////M.R said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... மாசி மாசம் ஆளான பொண்ணு..... மாமன் எனக்குத்தானே... வெள்ளக்கார பொண்ணு பாடுனா எப்பிடி இருக்கும்னு நினைத்து பார்த்தேன் ஹா ஹா ஹா ராமசாமி அண்ணே நீங்க நினைத்து பார்த்தீங்களா
  //////

  அடங்கொக்காமக்கா.... ஒரு புள்ளி வெச்சா, கோடுபோட்டு ரோடே போட்டுடுறாங்களே.....?

  ReplyDelete
 31. ///கிரேட்” என்று அனைவரும் கத்தினர். யோஹன்னா வெட்கத்தால் சிவந்தாள்.////

  அடப்பாவி, வெள்ளைக்காரிக்கும் வெட்கமா? அண்ணனுக்குள்ள 10 பாரதிராஜா தூங்கிட்டு இருக்காய்ங்கடோய்....

  ReplyDelete
 32. வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
  ஹி ஹி அப்புறம் ???

  ReplyDelete
 33. ///“நான் வாய் திறந்து சொன்னாத்தான் உனக்குத் தெரியுமா? என்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் காதல் தெரியவில்லையா?” என்றாள் வெட்கத்துடன்.////////

  என்னமா ரசிச்சி எழுதி இருக்காருய்யா மனுசன்.....

  ReplyDelete
 34. //M.R said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... மாசி மாசம் ஆளான பொண்ணு..... மாமன் எனக்குத்தானே... வெள்ளக்கார பொண்ணு பாடுனா எப்பிடி இருக்கும்னு நினைத்து பார்த்தேன் ஹா ஹா ஹா ராமசாமி அண்ணே நீங்க நினைத்து பார்த்தீங்களா//

  எப்படில்லாம் யோசிக்காங்க..இவங்களை முதல்ல நாடு கடத்தணும்.

  ReplyDelete
 35. ///////M.R said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
  ஹி ஹி அப்புறம் ???

  /////////

  அப்புறம் லைட்ட ஆஃப் பண்ணிடுவாங்க...

  ReplyDelete
 36. // M.R said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
  ஹி ஹி அப்புறம் ??//

  ம்..அப்புறம் விழுப்புரம்!

  ReplyDelete
 37. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////M.R said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
  ஹி ஹி அப்புறம் ???

  /////////

  அப்புறம் லைட்ட ஆஃப் பண்ணிடுவாங்க..//

  இது நல்லா இருக்கே..அப்போ அடுத்த பகுதியை டெலீட் பண்ணிட வேண்டியது தான்..

  ReplyDelete
 38. //////வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். //////

  அப்போ அன்னிக்கு நைட்டு போட்டோ எடுக்கும் போது......?

  ReplyDelete
 39. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///“நான் வாய் திறந்து சொன்னாத்தான் உனக்குத் தெரியுமா? என்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் காதல் தெரியவில்லையா?” என்றாள் வெட்கத்துடன்.////////

  என்னமா ரசிச்சி எழுதி இருக்காருய்யா மனுசன்....//

  என்னமா ரசிச்சி படிக்காருய்யா மனுசன்...

  ReplyDelete
 40. ////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////M.R said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
  ஹி ஹி அப்புறம் ???

  /////////

  அப்புறம் லைட்ட ஆஃப் பண்ணிடுவாங்க..//

  இது நல்லா இருக்கே..அப்போ அடுத்த பகுதியை டெலீட் பண்ணிட வேண்டியது தான்..
  //////

  யோவ் லைட்ட ஆஃப் பண்ணா என்ன, உங்க கைல டார்ச் எதுவும் இல்லியா? அத வெச்சி எழுதுங்க.....

  ReplyDelete
 41. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். //////

  அப்போ அன்னிக்கு நைட்டு போட்டோ எடுக்கும் போது......?//

  ஒன்னும் நடக்கலைன்னு நேத்தே சொன்னேன்ல...நம்ப மாட்டேங்கிறாங்களே..

  ReplyDelete
 42. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் லைட்ட ஆஃப் பண்ணா என்ன, உங்க கைல டார்ச் எதுவும் இல்லியா? அத வெச்சி எழுதுங்க...//

  நல்ல வேலை கொடுத்திருக்கீங்கய்யா..நல்லாயிருங்க.

  ReplyDelete
 43. செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////M.R said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
  ஹி ஹி அப்புறம் ???

  /////////

  அப்புறம் லைட்ட ஆஃப் பண்ணிடுவாங்க..//

  இது நல்லா இருக்கே..அப்போ அடுத்த பகுதியை டெலீட் பண்ணிட வேண்டியது தான்..

  எதுக்கு அப்பிடியே ஒரு நீரோடைய காண்பிச்சா போச்சு ,பிறகு அப்பிடியே தொடர வேண்டியது தான்

  ReplyDelete
 44. //M.R said...

  எதுக்கு அப்பிடியே ஒரு நீரோடைய காண்பிச்சா போச்சு ,பிறகு அப்பிடியே தொடர வேண்டியது தான் //

  தமிழ்சினிமா பார்த்து ரொம்பக் கெட்டுப் போயிருப்பாரு போல..

  ReplyDelete
 45. ///////M.R said...
  செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////M.R said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
  ஹி ஹி அப்புறம் ???

  /////////

  அப்புறம் லைட்ட ஆஃப் பண்ணிடுவாங்க..//

  இது நல்லா இருக்கே..அப்போ அடுத்த பகுதியை டெலீட் பண்ணிட வேண்டியது தான்..

  எதுக்கு அப்பிடியே ஒரு நீரோடைய காண்பிச்சா போச்சு ,பிறகு அப்பிடியே தொடர வேண்டியது தான்
  //////

  இவ்வளவு நாளா மன்மத லீலை பதிவுகளை படிச்ச எஃபக்டே இவருக்கு இன்னும் வரலியே? பேசாம சிபிகிட்ட ட்ரைனிங் அனுப்பிடலாமா?

  ReplyDelete
 46. கடும் தோல்வியிலும், விரக்தியிலும் இருக்கும் மனிதனுக்கு வாழ்க்கைத் துணை தரும் ஆறுதல் அளப்பரியது. உண்மை தான் நண்பரே.

  ReplyDelete
 47. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////M.R said...

  எதுக்கு அப்பிடியே ஒரு நீரோடைய காண்பிச்சா போச்சு ,பிறகு அப்பிடியே தொடர வேண்டியது தான்
  //////

  இவ்வளவு நாளா மன்மத லீலை பதிவுகளை படிச்ச எஃபக்டே இவருக்கு இன்னும் வரலியே? பேசாம சிபிகிட்ட ட்ரைனிங் அனுப்பிடலாமா?//

  அய்யோ அண்ணே, அவரு டபுள் மீனிங்ல கமெண்ட் போட்டிருக்காரு..நல்லா ஓடையை உத்துப் பாருங்க..அவரைப் போயி..

  ReplyDelete
 48. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////M.R said...

  எதுக்கு அப்பிடியே ஒரு நீரோடைய காண்பிச்சா போச்சு ,பிறகு அப்பிடியே தொடர வேண்டியது தான்
  //////

  இவ்வளவு நாளா மன்மத லீலை பதிவுகளை படிச்ச எஃபக்டே இவருக்கு இன்னும் வரலியே? பேசாம சிபிகிட்ட ட்ரைனிங் அனுப்பிடலாமா?//

  அய்யோ அண்ணே, அவரு டபுள் மீனிங்ல கமெண்ட் போட்டிருக்காரு..நல்லா ஓடையை உத்துப் பாருங்க..அவரைப் போயி..

  ///////

  அடங்கொன்னியா அப்போ நாந்தான் ட்ரைனிங் போகனுமா?

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said... இவ்வளவு நாளா மன்மத லீலை பதிவுகளை படிச்ச எஃபக்டே இவருக்கு இன்னும் வரலியே? பின்ன அப்புறம்னு கேட்டதுக்கு லைட்ட ஆஃப் பண்ணிடுவாங்கன்னு சொன்னா ? இருட்டுல ஆடியன்சுக்கு என்ன வேலை?

  ReplyDelete
 50. செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////M.R said...

  எதுக்கு அப்பிடியே ஒரு நீரோடைய காண்பிச்சா போச்சு ,பிறகு அப்பிடியே தொடர வேண்டியது தான்
  //////

  இவ்வளவு நாளா மன்மத லீலை பதிவுகளை படிச்ச எஃபக்டே இவருக்கு இன்னும் வரலியே? பேசாம சிபிகிட்ட ட்ரைனிங் அனுப்பிடலாமா?//

  அய்யோ அண்ணே, அவரு டபுள் மீனிங்ல கமெண்ட் போட்டிருக்காரு..நல்லா ஓடையை உத்துப் பாருங்க..அவரைப் போயி..

  அட ஒடையில குளிச்சுட்டு மத்த வேலைகளை(வேலை தேடுற்து)பார்க்கலாம்னு சொன்னேன்

  ReplyDelete
 51. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இவ்வளவு நாளா மன்மத லீலை பதிவுகளை படிச்ச எஃபக்டே இவருக்கு இன்னும் வரலியே? பேசாம சிபிகிட்ட ட்ரைனிங் அனுப்பிடலாமா?//

  அய்யோ அண்ணே, அவரு டபுள் மீனிங்ல கமெண்ட் போட்டிருக்காரு..நல்லா ஓடையை உத்துப் பாருங்க..அவரைப் போயி..

  ///////

  அடங்கொன்னியா அப்போ நாந்தான் ட்ரைனிங் போகனுமா?//

  இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலை..இவருக்குள்ளயும் ஒரு தமிழ்வாசி இருந்திருக்காரு பாருங்களேன்..

  ReplyDelete
 52. //M.R said...

  அட ஒடையில குளிச்சுட்டு மத்த வேலைகளை(வேலை தேடுற்து)பார்க்கலாம்னு சொன்னேன்//

  ம்க்கும்...சமாளிக்காராம்!

  ReplyDelete
 53. நன்றாக செல்கிறது... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 54. ம்ம்ம்... கலக்கலாத்தான் போகுது

  ReplyDelete
 55. சூப்பரா கொண்டு போறீங்க பாஸ்

  ரியலி சூப்பர்

  ReplyDelete
 56. அருமையாதான் கதைய கொண்டு போறீங்க.. ஆனால் என்னைப்போல இடையில் வருபவர்களுக்குதான் கொஞ்சம் சிக்கல் போல தெரியுது

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 57. இன்னைக்கு ஒரே பீலிங்ஸ்....பீலிங்ஸ்....பீலிங்ஸ்....

  ReplyDelete
 58. ஒட்டு போட்டிட்டேன்..கதை வாசிக்கல அப்புறமா வாறன்..

  ReplyDelete
 59. முன்கதை தெரியா ஆயினும்
  முழுக்கதை படிப்பது போல
  பின்கதை தொடர்வது சிறப்பே
  பின்தொர் படித்திட விருப்பே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 60. @வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.//அடுத்தது(அடுத்த பதிவு)எப்போ எப்போ.....

  ReplyDelete
 61. இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

  ReplyDelete
 62. // மதுரை சரவணன் said...
  நன்றாக செல்கிறது... வாழ்த்துக்கள் //

  நன்றி சரவணன்..

  ReplyDelete
 63. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  ம்ம்ம்... கலக்கலாத்தான் போகுது

  சூப்பரா கொண்டு போறீங்க பாஸ் //

  நான் எங்கே கொண்டு போறேன்..அது அப்படி நடந்துச்சு...

  ReplyDelete
 64. // காட்டான் said...
  அருமையாதான் கதைய கொண்டு போறீங்க.. ஆனால் என்னைப்போல இடையில் வருபவர்களுக்குதான் கொஞ்சம் சிக்கல் போல தெரியுது //

  அப்போ வேற வழியில்லை...முதல்ல் இருந்து படிங்க!

  ReplyDelete
 65. // தமிழ்வாசி - Prakash said...
  இன்னைக்கு ஒரே பீலிங்ஸ்....பீலிங்ஸ்....பீலிங்ஸ்....//

  நீங்க எதிர்பார்த்தது இது இல்லையா?

  ReplyDelete
 66. // மைந்தன் சிவா said...
  ஒட்டு போட்டிட்டேன்..கதை வாசிக்கல அப்புறமா வாறன்..//

  வாங்க..

  ReplyDelete
 67. Kalakareenga sengovi..nice style of writing.

  ReplyDelete
 68. // புலவர் சா இராமாநுசம் said...
  முன்கதை தெரியா ஆயினும்
  முழுக்கதை படிப்பது போல
  பின்கதை தொடர்வது சிறப்பே
  பின்தொர் படித்திட விருப்பே

  புலவர் சா இராமாநுசம் //

  கவிதை வடிவில் பாராட்டா...மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 69. தமிழ்விருது said...
  இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

  ReplyDelete
 70. //செங்கோவி said...
  மறந்து மறந்து போகுது...என்ன செய்ய..வயசாகுதுல்ல..//
  யாருக்கு?

  ReplyDelete
 71. தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 72. ஏ யப்பா கிழிஞ்ச டைரி இன்னும் முடியலையாடா சாமியோவ்.....

  ReplyDelete
 73. //K.s.s.Rajh said... [Reply]
  @வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.//அடுத்தது(அடுத்த பதிவு)எப்போ எப்போ.....//

  வரும் கிஸ் ராஜா..வரும்!

  ReplyDelete
 74. //Bala said...
  Kalakareenga sengovi..nice style of writing//

  நன்றி பாலா!

  ReplyDelete
 75. “கிரேட்” என்று அனைவரும் கத்தினர். யோஹன்னா வெட்கத்தால் சிவந்தாள். மதனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை//

  இருக்காதா பின்னே!

  ReplyDelete
 76. // FOOD said...
  தமிழ்மணம் ஏழு.//

  ஏழு தமிழ்மணமா?

  ReplyDelete
 77. MANO நாஞ்சில் மனோ said...
  // ஏ யப்பா கிழிஞ்ச டைரி இன்னும் முடியலையாடா சாமியோவ்.....//

  சுகன்யா புகழ் மனோ ஒழிக!

  // ஐ லவ் யூ ஹி ஹி.....//

  உம்ம ஐ லவ் யூ யாருக்குய்யா வேணும்..

  ReplyDelete
 78. // கோகுல் said...
  “கிரேட்” என்று அனைவரும் கத்தினர். யோஹன்னா வெட்கத்தால் சிவந்தாள். மதனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை

  இருக்காதா பின்னே! //

  வடை போச்சே-ன்னு ஃபீல் பண்ற மாதிரி இருக்கு..

  ReplyDelete
 79. ஏ யப்பா கிழிஞ்ச டைரி இன்னும் முடியலையாடா சாமியோவ்....

  லேசுல முடியாது சாரு.அவக எம்புட்டு நாளா பொத்திவச்ச ரகசியம் .
  நீங்க சொல்லிக்கிட்டே போங்க செங்காவி .ஆனா இண்டைக்கு நா
  வந்த நோக்கம் உங்கள சிரிக்க வைக்கணும் அதுனால நம்ம கடைக்கு
  இண்டைக்கு வாங்க சிரிக்கலாம் . மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு
  ஓட்டுப் போட்டாச்சு .........

  ReplyDelete
 80. //J.P Josephine Baba said...
  அப்புறம் ...//

  இன்னைக்கு நான் மவுன விரதம்..(அப்பாடா..தப்பிச்சேன்)

  ReplyDelete
 81. // அம்பாளடியாள் said...
  ஏ யப்பா கிழிஞ்ச டைரி இன்னும் முடியலையாடா சாமியோவ்....

  லேசுல முடியாது சாரு.அவக எம்புட்டு நாளா பொத்திவச்ச ரகசியம் .
  நீங்க சொல்லிக்கிட்டே போங்க செங்காவி .//

  அப்படி நல்லா எடுத்துச் சொல்லுங்க சகோ!

  ReplyDelete
 82. “நான் வாய் திறந்து சொன்னாத்தான் உனக்குத் தெரியுமா? என்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் காதல் தெரியவில்லையா?” என்றாள் வெட்கத்துடன்.//

  சிவாக்கு கிடைக்க மாதிரியே எனக்கு ஒரு டைட்டில் கிடைச்ச்டுசு.... வெட்கப்பட்ட வெள்ளைக்காரி

  ReplyDelete
 83. சுய சரிதைன்னு ரொம்ப நாளா தெரியாமப்போச்சு செங்கோவி...தொடர்ந்து கலக்குங்க...

  ReplyDelete
 84. // FOOD said... [Reply]
  //செங்கோவி said...
  மறந்து மறந்து போகுது...என்ன செய்ய..வயசாகுதுல்ல..//
  யாருக்கு?//

  எனக்குத் தான்..

  ReplyDelete
 85. // வினையூக்கி said...
  Super//

  ஓகே!

  ReplyDelete
 86. //விக்கியுலகம் said...
  பார்ரா!//

  பாருங்க..

  ReplyDelete
 87. //மாய உலகம் said...

  சிவாக்கு கிடைக்க மாதிரியே எனக்கு ஒரு டைட்டில் கிடைச்ச்டுசு.... வெட்கப்பட்ட வெள்ளைக்காரி//

  நல்ல டைட்டில் மாயா.

  ReplyDelete
 88. //சென்னை பித்தன் said...
  இப்படிப் போகுதா!//

  ஆமாம் சார்..இப்படித் தான் போகுது..

  ReplyDelete
 89. //
  ரெவெரி said...
  சுய சரிதைன்னு ரொம்ப நாளா தெரியாமப்போச்சு செங்கோவி...தொடர்ந்து கலக்குங்க..//

  அதான் டைரி-ன்னு டைட்டில் வச்சிருக்கேன்ல..அப்படியுமா தெரியல..

  ReplyDelete
 90. ரொம்ப நல்லா போகுதுங்க... நடக்கட்டும்... நடக்கட்டும்...

  ReplyDelete
 91. //சே.குமார் said... [Reply]
  ரொம்ப நல்லா போகுதுங்க... நடக்கட்டும்... நடக்கட்டும்...//

  நன்றி குமார்!

  ReplyDelete
 92. காணவில்லை...’எங்கள் பாஸ்’ யோகா-வை காணவில்லை. யாராவது பார்த்தீங்களா..

  ReplyDelete
 93. @ செங்கோவி said...
  காணவில்லை...’எங்கள் பாஸ்’ யோகா-வை காணவில்லை. யாராவது பார்த்தீங்களா..//

  அவர் சண்டேன்னா கொஞ்சம் பிசியாகிடுவார்.

  ReplyDelete
 94. பதிவர் சிவா அன்று கடும் விரக்தியில் இருந்தான். காரணம், அன்று பதிவு எழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. என்னத்தைத் தான் எழுத என்று கடுப்பாகி, லேப்டாப்பை மூடிவிட்டு, வெளியே கிளம்பினான். பொதுவாக பதிவருக்கு கோபம் வருவது நல்லது. அந்த கோபத்தை ஜெயலலிதா மீதோ கருணாநிதி மீதோ இறக்கினால், நல்ல ஹிட்ஸ் கிடைக்கும்.//

  அவ்....இது நல்லா இருக்கே.
  நோட் பண்ணிக்கிறேன் பாஸ்.

  ReplyDelete
 95. This comment has been removed by the author.

  ReplyDelete
 96. மன்மத லீலைகள் ஒவ்வோர் பாகத்தின் சுவாரஸ்யமும் குன்றிவிடாத வண்ணம், ஒவ்வோர் பதிவிலும், வெவ்வேறு வகையான இனிமையான அனுபவங்களை மீட்டிப் பார்த்தவாறு நகர்ந்து செல்கிறது,

  அந்த வகையில் இப் பாகத்திலும்,
  யோஹன்னாவின் நண்பர்களின் விருந்துபசாரம் எதிர்பாராமல் கிடைக்கும் போது சந்தோசப்படும் மதனின் மன மகிழ்ச்சியினை இரட்டிப்பாக்க விசா வடிவில் அடுத்த இன்ப அதிர்ச்சி வந்து கொள்கிறது..

  இதற்கு முத்தாய்ப்பாய்,
  இப் பகுதியின் நிறைவில்..பார்வைகளால் இரு காதலர்களையும் பேசிக் கொள்ளச் செய்து, அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் எனும் சஸ்பென்ஸுடன் முதற் இப் பாகத்தினை ஆசிரியர் அருமையாக நிறைவு செய்திருக்கிறார். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 97. //நிரூபன் said...
  @ செங்கோவி said...
  காணவில்லை...’எங்கள் பாஸ்’ யோகா-வை காணவில்லை. யாராவது பார்த்தீங்களா..//

  அவர் சண்டேன்னா கொஞ்சம் பிசியாகிடுவார்//

  அப்போ சரி!

  ReplyDelete
 98. //
  நிரூபன் said...
  மன்மத லீலைகள் ஒவ்வோர் பாகத்தின் சுவாரஸ்யமும் குன்றிவிடாத வண்ணம், ஒவ்வோர் பதிவிலும், வெவ்வேறு வகையான இனிமையான அனுபவங்களை மீட்டிப் பார்த்தவாறு நகர்ந்து செல்கிறது,//

  நன்றி நிரூ.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.