Saturday, August 27, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_39

டிஸ்கி : ஏன் லீலைகள் இன்னும் வரலை..வாரத்துக்கு 4 எழுதறேன்னு சொன்னல்ல? கண்ட கர்மத்தையெல்லாம் எழுதற..அதுக்கு பதிலா லீலைகளை எழுதலாம்ல? - அப்படீன்னு மெயில் அனுப்பி திட்டுற புண்ணியவான்களே..மன்னிச்சுக்கோங்க. இந்த வாரம் நீங்க சொன்னபடியே எழுதறேன். ரம்ஜான் லீவு வேற வருது. சோ, டோண்ட் ஒர்ரி..

“நான் வாய் திறந்து சொன்னாத்தான் உனக்குத் தெரியுமா? என்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் காதல் தெரியவில்லையா?” என்றாள் வெட்கத்துடன்.

வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். 

”யோஹன்னா...உட்கார்”

யோஹன்னா மதனின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள்.

“மதன், நான் உன் அப்பாகூடப் பேசணும்”

’என்னடா இது’ என்று துணுக்குற்ற மதன் “ஏன்?” என்றான்.

“இது என்ன கேள்வி..நாம கல்யாணம் பண்ணிக்கப்போறோம்..நான் என் அம்மாகிட்ட உன்னைப் பத்தி ஏற்கனவே சொல்லிட்டேன். நீயும் உன் அப்பாகிட்டச் சொல்லு. அவர் கல்யாணத்துக்கு வந்தா நல்லா இருக்கும். டூரிஸ்ட் விசா நான் அரேஞ்ச் பண்றேன்.”

“யோஹன்னா..புரியாமப் பேசாத. இந்தியால லவ் மேரேஜுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. வேற ஜாதி, மதப் பொண்ணுன்னாலே ஒத்துக்க மாட்டாங்க. நீ வேற நாடு..எப்படி அப்பா ஒத்துப்பார்? நாம முதல்ல கல்யாணம் பண்ணிப்போம். அப்புறம் அவருக்கு தகவல் சொல்லிக்கலாம்”

யோஹன்னாவுக்கு அதில் உடன்பாடு இல்லை.

“இல்லை மதன்..நீ அவர்கிட்ட விஷயத்தை சொல்லிடு. ஒருவேளை அவர் இதுக்கு ஒத்துக்கலேன்னா அப்புறம் நாமா கல்யாணம் பண்ணிக்கலாம். நாமாகவே இப்போ எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.”

மதன் இந்த இரவு நேரத்தை விவாதத்தில் கழிக்க விரும்பவில்லை.

“ஓகே..நீ சொல்றதும் சரிதான்..நான் அவர்கிட்டப் பேசுறேன். அவரும் கல்யாணத்துக்கு வந்தா நல்லாத் தான் இருக்கும்”

யோஹன்னா மகிழ்ந்தாள்.

“குட் பாய்” என்றாள்.

“யோஹன்னா, ஏன் என்னைப் பிடிச்சிருக்கு உனக்கு?”

“ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத்துணையிடம் தன் தந்தையையே தேடுகிறாள்..சிக்மண்ட் ஃப்ராய்டு....படிச்சதில்லையா?”

“ம்..இதையே எங்க ஓஷோவும் சொல்லி இருக்காரே..ஒவ்வொரு ஆணும் பெண்களிடம் தேடுவது தன் தாயையேன்னு”

“ம்..அப்புறம் என்ன சொன்னார்?”

“உண்மையில் காமத்தில் என்ன தான் நிகழ்கிறது? ஆணுக்கு என்ன தான் தேவை? ஆணின் ஆழ்மனதில் இன்னும் கருப்பையில் வாழ்ந்த காலம் படிந்துள்ளதோ? மீண்டும் கருப்பையில் நுழைவதற்கான போராட்டம் தான் காமமா? அப்படியென்றால் அது முடிவற்றதாயிற்றே..காமத்திற்கும் காமத்தினால் வரும் அயர்ச்சிக்கும் அடிப்படை அது தானா?”

யோஹன்னாவிற்கு எப்போதும் தத்துவ புத்தகங்களில் நாட்டம் உண்டு. அவள் தொடர்ந்தாள்.

“பெண் குழந்தைகள் எப்போதும் தந்தை மேலே பிரியம் கொள்கிறார்கள். அழகான பெண்கள் அவலட்சணமான ஆண்களை மணக்கும் காரணம் தான் என்ன..ஒருவேளை தன் தந்தையின் சாயலை அவனிடம் கண்டதாலா? பெண்ணுக்குத் தேவை அண்மை.......எப்போதும் பிரியாமல் கூட இருந்தே அன்பைப் பொழியும் தன்மை”

“யோஹன்னா, மனதில் இருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்துவது? கவிதை எழுதியா? அப்படி திட்டமிடலுடன் தொடங்கினால் அது வார்த்தை அடுக்கும் விளையாட்டாகி விடாதா? வேறு எப்படி அன்பை வெளிப்படுத்த முடியும்..காமம் வெறும் உடற்பசியா அல்லது மனதில் பெருகும் அன்பைப் பரிமாறும் வழிமுறையா? ஆயிரம் வார்த்தைகள் எழுதினாலும் சொல்ல முடியாத ஆறுதலை ஒரு அரவணைப்பு சொல்லி விடுகிறதே..தொடுதல் வெறும் உடல்களின் தீண்டலா?”

சொல்லிவிட்டு மதன் யோஹன்னாவின் கையை மென்மையாகப் பற்றிக் கொண்டான். யோஹன்னா தொடர்ந்தாள்.

“இல்லை..தொடுதல் மனதில் இருப்பதை அடுத்தவருக்கு கடத்தும் உபகரணம்...அன்பைச் சொல்ல சொற்கள் போதுமா? ஒருகட்டத்தில் சொற்கள் பொருளிழந்து விடுகின்றன..வெறும் எழுத்துக்குவியலாய் மாறிப்போகின்றன”

” அப்படியென்றால் இப்போது நான் என் அன்பை எப்படிச் சொல்ல யோஹன்னா?”

யோஹன்னாவின் மனது சிலிர்த்தது. காதோரம் நரம்புகளின் ரீங்காரம் கேட்டது. மதனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். 

”யோஹன்னா..இது வார்த்தைகள் உதிரும் நேரமா? மனதில் இருந்த அன்பு உடலெல்லாம் பரவி நிற்பது தெரிகின்றதா? கை கோர்த்தல் போதுமா? என்னைப் பார் யோஹன்னா....ஏன் கண்களை மூடுகிறாய்.அன்பின் அழுத்தம் தாங்கவில்லையா? யோஹன்னா.........”

என் உதட்டில் இருப்பது 
ஷெல்லியின் வரியா?
உன் உதட்டில் தெரிவது 
கம்பனின் வரியா?
இரண்டையும் இணைத்து
புதுக்கவிதை சமை.

ஃப்ராய்டின் கருத்து கொண்டு
வெட்க ஆடை விலக்கு.
ஓஷோவின் வழி பற்றி 
தத்துவ தரிசனம் செய்.

தத்துவத்தின் பாதையில்
தொலைந்தோர் அநேகம்.
எனை விட்டு விடாது 
இறுகப் பற்று.

சலனமற்ற தன்மையில்
சலிப்பே மிஞ்சும்.
இயங்கு - அதுவே
பிரபஞ்ச அடிப்படை
இயக்கம் - அதுவே
என்றும் சாஸ்வதம்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

108 comments:

 1. இந்திய மன்னன்,,,, குவைத் மன்மதன்

  ReplyDelete
 2. ரைட்டு,படிச்சுட்டு வரேன்!

  ReplyDelete
 3. //தமிழ்வாசி - Prakash said...
  இந்திய மன்னன்,,,, குவைத் மன்மதன்//

  ஆப்பு வைக்கணும்னே முழிச்சிருந்து வர்றாங்களே..

  ReplyDelete
 4. //Yoga.s.FR said...
  ரைட்டு,படிச்சுட்டு வரேன்!//

  ரைட்டு.

  ReplyDelete
 5. ம்...ம்.....ம்....................கத நல்லாப் போகுது!வேற என்னத்தச் சொல்ல?

  ReplyDelete
 6. எல்லாத்துலயும் ஓட்டு போட்டாச்சு...

  மன்மதனுக்காக தமிழ்மணமும் சீக்கிரமா இனைஞ்சிருச்சே

  ReplyDelete
 7. //Yoga.s.FR said...
  ம்...ம்.....ம்....................கத நல்லாப் போகுது!வேற என்னத்தச் சொல்ல?//

  நீங்க ம்..ம்..ம்-னு சொன்னதே போதும் ஐயா.

  ReplyDelete
 8. நான் அப்பிடியெல்லாம் செய்ய மாட்டன்,இப்ப தான் எனக்கு மணி எட்டே முக்கால்!

  ReplyDelete
 9. அப்படீன்னு மெயில் அனுப்பி திட்டுற புண்ணியவான்களே..மன்னிச்சுக்கோங்க. >>>

  யாருங்க அந்த புண்ணியவான்? இம்புட்டு ஆர்வமா?

  ReplyDelete
 10. //தமிழ்வாசி - Prakash said...
  எல்லாத்துலயும் ஓட்டு போட்டாச்சு...

  மன்மதனுக்காக தமிழ்மணமும் சீக்கிரமா இனைஞ்சிருச்சே//

  ஆமா..தமிழ்மணத்துக்கும் லீலைன்னா பிடிக்குமோ?

  ReplyDelete
 11. //
  Yoga.s.FR said...
  நான் அப்பிடியெல்லாம் செய்ய மாட்டன்,இப்ப தான் எனக்கு மணி எட்டே முக்கால்!//

  சரி, அப்போ அலாரம் வச்சிக்கோங்க.

  ReplyDelete
 12. வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். >>>>

  அப்போ அவனுக்கும் வெட்கம் வந்திருக்கனுமே...

  ReplyDelete
 13. தத்துவத்தின் பாதையில்
  தொலைந்தோர் அநேகம்.
  எனை விட்டு விடாது
  இறுகப் பற்று.//// நச்!

  ReplyDelete
 14. இது என்ன கேள்வி..நாம கல்யாணம் பண்ணிக்கப்போறோம்..நான் என் அம்மாகிட்ட உன்னைப் பத்தி ஏற்கனவே சொல்லிட்டேன். நீயும் உன் அப்பாகிட்டச் சொல்லு. அவர் கல்யாணத்துக்கு வந்தா நல்லா இருக்கும். டூரிஸ்ட் விசா நான் அரேஞ்ச் பண்றேன்.”>>>>

  அப்பாவ பாக்கனும்னு ஆப்பு வக்கிறாளே

  ReplyDelete
 15. //
  தமிழ்வாசி - Prakash said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். >>>>

  அப்போ அவனுக்கும் வெட்கம் வந்திருக்கனுமே...//

  மதனுக்கு எப்படிய்யா வரும்? கதையை திரும்ப முதல்ல இருந்து படிங்க.

  ReplyDelete
 16. //Yoga.s.FR said...
  தத்துவத்தின் பாதையில்
  தொலைந்தோர் அநேகம்.
  எனை விட்டு விடாது
  இறுகப் பற்று.//// நச்!//

  நச்-சா? நான்கூட இச்-சோன்னு பயந்துட்டேன்.

  ReplyDelete
 17. செங்கோவி said...
  //
  தமிழ்வாசி - Prakash said...
  வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். >>>>

  அப்போ அவனுக்கும் வெட்கம் வந்திருக்கனுமே...//

  மதனுக்கு எப்படிய்யா வரும்? கதையை திரும்ப முதல்ல இருந்து படிங்க.>>>>>

  ஒரு வார்த்தையை விட்டுட்டேன்...

  அப்போ அவனுக்கும் வெட்கம் வந்த மாதிரி நடிச்சிருப்பானே.....

  ReplyDelete
 18. செங்கோவி said...
  //
  Yoga.s.FR said...
  நான் அப்பிடியெல்லாம் செய்ய மாட்டன்,இப்ப தான் எனக்கு மணி எட்டே முக்கால்!//
  சரி, அப்போ அலாரம் வச்சிக்கோங்க.////அப்புடீன்னா,அடுத்த பார்ட்டும் ரெடியோ?

  ReplyDelete
 19. யோஹன்னாவுக்கு அதில் உடன்பாடு இல்லை.///

  ரொம்ப ஸ்டராங்கான பொண்ணா இருக்குமோ?

  ReplyDelete
 20. //தமிழ்வாசி - Prakash said...

  மதனுக்கு எப்படிய்யா வரும்? கதையை திரும்ப முதல்ல இருந்து படிங்க.>>>>>

  ஒரு வார்த்தையை விட்டுட்டேன்...

  அப்போ அவனுக்கும் வெட்கம் வந்த மாதிரி நடிச்சிருப்பானே.....//

  மதனுக்கே தமிழ்வாசி சொல்லித் தர்றாருன்னா....

  ReplyDelete
 21. கிளுகிளுப்பை விடத் தத்துவத்தின் ஆதிக்கம் தான் இருக்கிறது ... அருமை

  ReplyDelete
 22. //
  Yoga.s.FR said...
  செங்கோவி said...
  //
  Yoga.s.FR said...
  நான் அப்பிடியெல்லாம் செய்ய மாட்டன்,இப்ப தான் எனக்கு மணி எட்டே முக்கால்!//
  சரி, அப்போ அலாரம் வச்சிக்கோங்க.////அப்புடீன்னா,அடுத்த பார்ட்டும் ரெடியோ?//

  ஆமா..நாளைக்கு இதே நேரம்..அலாரம் வச்சிக்கோங்க.

  ReplyDelete
 23. பற்றுக பற்றை பற்றற்று - வள்ளுவன்.

  ReplyDelete
 24. //வினையூக்கி said...
  கிளுகிளுப்பை விடத் தத்துவத்தின் ஆதிக்கம் தான் இருக்கிறது ... அருமை//

  என்ன செய்ய பாஸ்...கதை எழுத அனுமதி கொடுத்த யோஹன்னா, என்னை திரைக்கதை எழுத விடலியே..

  ReplyDelete
 25. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  தத்துவத்தின் பாதையில்
  தொலைந்தோர் அநேகம்.
  எனை விட்டு விடாது
  இறுகப் பற்று.//// நச்!//

  நச்-சா? நான்கூட இச்-சோன்னு பயந்துட்டேன்.////இந்த நேரத்தில போயி பழசையெல்லாம் கிளறிக்கிட்டு?

  ReplyDelete
 26. “ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத்துணையிடம் தன் தந்தையையே தேடுகிறாள்..சிக்மண்ட் ஃப்ராய்டு....படிச்சதில்லையா?”>>>>>


  ஹி...ஹி... ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணை தேடுகிறான்... மன்மதன் படம் நீ பார்த்தது இல்லையா?

  ReplyDelete
 27. //பாரத்... பாரதி... said...
  பற்றுக பற்றை பற்றற்று - வள்ளுவன்.//

  வாத்தியார் பாவம்..டெய்லி வந்து அதிர்ச்சி ஆகுறாரு..இவருக்காகவாவ்து நல்ல பதிவும் அப்பப்போ போடணும்.

  ReplyDelete
 28. // தமிழ்வாசி - Prakash said...
  “ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத்துணையிடம் தன் தந்தையையே தேடுகிறாள்..சிக்மண்ட் ஃப்ராய்டு....படிச்சதில்லையா?”>>>>>


  ஹி...ஹி... ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணை தேடுகிறான்.//

  அப்படியா..எனக்குத் தெரியாது சார்.

  ReplyDelete
 29. பாரத்... பாரதி... said...
  பற்றுக பற்றை பற்றற்று - வள்ளுவன்.>>

  வாத்தியாரும் மன்மதனை தேடி வந்துட்டாரே...

  ReplyDelete
 30. //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  தத்துவத்தின் பாதையில்
  தொலைந்தோர் அநேகம்.
  எனை விட்டு விடாது
  இறுகப் பற்று.//// நச்!//

  நச்-சா? நான்கூட இச்-சோன்னு பயந்துட்டேன்.////இந்த நேரத்தில போயி பழசையெல்லாம் கிளறிக்கிட்டு?//

  உங்க பழைய காதலிகளை பழசுன்னு சொல்றது ஆணாதிக்கம் இல்லையா?

  ReplyDelete
 31. யோஹன்னாவின் மனது சிலிர்த்தது. காதோரம் நரம்புகளின் ரீங்காரம் கேட்டது. மதனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். ///

  ஸ்டார்ட் மியூசிக்...

  ReplyDelete
 32. செங்கோவி said...
  //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  தத்துவத்தின் பாதையில்
  தொலைந்தோர் அநேகம்.
  எனை விட்டு விடாது
  இறுகப் பற்று.//// நச்!//

  நச்-சா? நான்கூட இச்-சோன்னு பயந்துட்டேன்.////இந்த நேரத்தில போயி பழசையெல்லாம் கிளறிக்கிட்டு?//

  உங்க பழைய காதலிகளை பழசுன்னு சொல்றது ஆணாதிக்கம் இல்லையா?///

  மாட்டுனார் யோகா....

  ReplyDelete
 33. //
  தமிழ்வாசி - Prakash said...

  ஸ்டார்ட் மியூசிக்...//

  ஆமா, பன்னிக்குட்டியாரை எங்கே?

  ReplyDelete
 34. “இல்லை..தொடுதல் மனதில் இருப்பதை அடுத்தவருக்கு கடத்தும் உபகரணம்.//// நான் போயி கரண்டு கம்பிய தொடப் போறேன்!ஷாக்காயிடுமில்ல?

  ReplyDelete
 35. அந்த கவிதை யாரு சொன்னது? அப்படியே அவங்க சொல்லி இருந்தாலும் நீங்க இம்புட்டு ஞாபகம் வச்சிருகிங்களே....

  ReplyDelete
 36. //Yoga.s.FR said...
  “இல்லை..தொடுதல் மனதில் இருப்பதை அடுத்தவருக்கு கடத்தும் உபகரணம்.//// நான் போயி கரண்டு கம்பிய தொடப் போறேன்!ஷாக்காயிடுமில்ல?//

  கரண்ட் மனசுல என்ன இருக்குன்னு அப்போத் தானே தெரியும்...

  ReplyDelete
 37. வணக்கம் நண்பா

  ReplyDelete
 38. //
  தமிழ்வாசி - Prakash said...
  அந்த கவிதை யாரு சொன்னது? அப்படியே அவங்க சொல்லி இருந்தாலும் நீங்க இம்புட்டு ஞாபகம் வச்சிருகிங்களே....//

  அடப்பாவி மனுசா..இதுக்காகத் தான் பதிவே லேட் ஆச்சு..இப்படிக் கேட்கீங்களே..

  ReplyDelete
 39. செங்கோவி said...
  //
  தமிழ்வாசி - Prakash said...

  ஸ்டார்ட் மியூசிக்...//

  ஆமா, பன்னிக்குட்டியாரை எங்கே?///

  இன்னும் காணோமே....

  ReplyDelete
 40. //
  M.R said...
  வணக்கம் நண்பா//

  வணக்கம்..வந்தாச்சா..

  ReplyDelete
 41. தமிழ்வாசி - Prakash said...நச்-சா? நான்கூட இச்-சோன்னு பயந்துட்டேன்.////இந்த நேரத்தில போயி பழசையெல்லாம் கிளறிக்கிட்டு?//

  உங்க பழைய காதலிகளை பழசுன்னு சொல்றது ஆணாதிக்கம் இல்லையா?///

  மாட்டுனார் யோகா...§§§§§.அச்சச்சோ,தமிழ்வாசி வூட்டுல கொழப்பத்த உருவாக்கப் பாக்குறாரே?

  ReplyDelete
 42. //Yoga.s.FR said...
  தமிழ்வாசி - Prakash said...நச்-சா? நான்கூட இச்-சோன்னு பயந்துட்டேன்.////இந்த நேரத்தில போயி பழசையெல்லாம் கிளறிக்கிட்டு?//

  உங்க பழைய காதலிகளை பழசுன்னு சொல்றது ஆணாதிக்கம் இல்லையா?///

  மாட்டுனார் யோகா...§§§§§.அச்சச்சோ,தமிழ்வாசி வூட்டுல கொழப்பத்த உருவாக்கப் பாக்குறாரே?//

  அவருக்கு இதே வேலையாப் போச்சுங்க..இப்படித்தான் என்னை....அவ்வ்!

  ReplyDelete
 43. வணக்கம் -வாக்கு - வாழ்த்து - காணமல் போதல்.

  ReplyDelete
 44. செங்கோவி said...அடப்பாவி மனுசா..இதுக்காகத் தான் பதிவே லேட் ஆச்சு..இப்படிக் கேட்கீங்களே..////பதிவேத்தினதே லேட்டு!அப்புறம்,அலாரம் வேற வைக்கச் சொல்லுறாக!

  ReplyDelete
 45. கடைசியா உள்ள பாடலை இயக்கியது

  யார் நண்பரே ?

  ReplyDelete
 46. // M.R said...
  கடைசியா உள்ள பாடலை இயக்கியது

  யார் நண்பரே ?//

  இப்படி எல்லாம் கேவலப்படுத்தாதீங்கய்யா..நான் என்ன மண்டபத்துல யாரோ கொடுத்ததையா போடப் போறேன்..நாந்தான்யா..நம்புங்கய்யா.

  ReplyDelete
 47. //
  பாரத்... பாரதி... said...
  வணக்கம் -வாக்கு - வாழ்த்து - காணமல் போதல்.//

  புரியுது சார்..போயிட்டு வாங்க.

  ReplyDelete
 48. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேட்டர் ஓவர்.....//

  ஆஹா..இது கமெண்ட்டு!

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேட்டர் ஓவர்.............//

  ஓ....அதான் லேட்டா?

  ReplyDelete
 50. //Yoga.s.FR said...
  செங்கோவி said...அடப்பாவி மனுசா..இதுக்காகத் தான் பதிவே லேட் ஆச்சு..இப்படிக் கேட்கீங்களே..////பதிவேத்தினதே லேட்டு!அப்புறம்,அலாரம் வேற வைக்கச் சொல்லுறாக!//

  ஓகே...12-12.15

  ReplyDelete
 51. செங்கோவி said...உங்க பழைய காதலிகளை பழசுன்னு சொல்றது ஆணாதிக்கம் இல்லையா?///அது வந்து..................., நான் பழச தானுங்க சொன்னேன்!காதலிகளப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?

  ReplyDelete
 52. //
  தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேட்டர் ஓவர்.............//

  ஓ....அதான் லேட்டா?//

  ஹா..ஹா.முடியல.

  ReplyDelete
 53. காமத்திற்கு அடிகோலும் முயற்சியானாலும் ,அவர்கள் பேசும் யதார்த்தம் உண்மை .

  ஆண் குழந்தை தாயையும்

  பெண் குழந்தை தகப்பனையும்

  பாசம் காட்டுவது இதனாலே உண்மை .

  பெண் மட்டுமல்ல தோழரே ஆணும்
  பெண்ணை சார்ந்துள்ளான்

  காமத்திற்காக அல்ல.கடமைக்காகவும் அல்ல .

  பதிவில் வார்த்தை ஜாலம் அருமை நண்பா .

  ReplyDelete
 54. //
  Yoga.s.FR said...
  செங்கோவி said...உங்க பழைய காதலிகளை பழசுன்னு சொல்றது ஆணாதிக்கம் இல்லையா?///அது வந்து..................., நான் பழச தானுங்க சொன்னேன்!காதலிகளப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?//

  ஓகே பாஸ். (உங்களை பாஸ் என்பது உண்மையான பாஸை குறிக்கும்!..மொட்டை பாஸ் மாதிரி..தலைவரேன்னு பொருள்படும்!)

  ReplyDelete
 55. M.R said...

  பதிவில் வார்த்தை ஜாலம் அருமை நண்பா .//

  ஓ... இம்புட்டு நேரமா வார்த்தையில் ஒன்றி போயிட்டிங்களா?

  ReplyDelete
 56. ////// செங்கோவி said...
  //
  தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேட்டர் ஓவர்.............//

  ஓ....அதான் லேட்டா?//

  ஹா..ஹா.முடியல.

  ////////

  யோவ், அங்க பதிவுல மேட்டர் ஓவர்னு சொன்னா அப்பிடியே ரூட்ட மாத்திவிட்டா பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 57. //M.R said...
  காமத்திற்கு அடிகோலும் முயற்சியானாலும் ,அவர்கள் பேசும் யதார்த்தம் உண்மை .

  ஆண் குழந்தை தாயையும்

  பெண் குழந்தை தகப்பனையும்

  பாசம் காட்டுவது இதனாலே உண்மை .

  பெண் மட்டுமல்ல தோழரே ஆணும்
  பெண்ணை சார்ந்துள்ளான்

  காமத்திற்காக அல்ல.கடமைக்காகவும் அல்ல .

  பதிவில் வார்த்தை ஜாலம் அருமை நண்பா .//

  தெளிவாச் சொல்லிட்டீங்க. நன்றி.

  ReplyDelete
 58. பூவை இணைத்திருப்பது நாராக இருந்தாலும் பூவின் வாசம் மட்டுமே
  நமக்கு தெரியும்.

  தங்களின் இந்த பதிவில் நார் காமம் , யதார்த்த வாழ்க்கை தத்துவங்கள் பூ

  ReplyDelete
 59. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ், அங்க பதிவுல மேட்டர் ஓவர்னு சொன்னா அப்பிடியே ரூட்ட மாத்திவிட்டா பிச்சிபுடுவேன் பிச்சி....//

  தமிழ்வாசி..அண்ணன் இப்போ தனிக்கட்டைய்யா..அவரு ஃபீலிங்ஸை புரிஞ்சிக்கோங்க.

  ReplyDelete
 60. செங்கோவி said...

  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேட்டர் ஓவர்.....//

  ஆஹா..இது கமெண்ட்டு!§§§§ஓஹோ,இதுக்குப் பேர் தான் கமெண்டா?இது தெரியாம நாம ஓரோர் எழுத்தா தேடி தட்டுறது எல்லாம் வேஸ்ட்டா?

  ReplyDelete
 61. செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ், அங்க பதிவுல மேட்டர் ஓவர்னு சொன்னா அப்பிடியே ரூட்ட மாத்திவிட்டா பிச்சிபுடுவேன் பிச்சி....//

  தமிழ்வாசி..அண்ணன் இப்போ தனிக்கட்டைய்யா..அவரு ஃபீலிங்ஸை புரிஞ்சிக்கோங்க.////

  நன்பேண்டா....

  ReplyDelete
 62. // M.R said...
  பூவை இணைத்திருப்பது நாராக இருந்தாலும் பூவின் வாசம் மட்டுமே
  நமக்கு தெரியும்.

  தங்களின் இந்த பதிவில் நார் காமம் , யதார்த்த வாழ்க்கை தத்துவங்கள் பூ//

  ஓஹோ...அப்படியா..

  ReplyDelete
 63. ///////தமிழ்வாசி - Prakash said...
  செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ், அங்க பதிவுல மேட்டர் ஓவர்னு சொன்னா அப்பிடியே ரூட்ட மாத்திவிட்டா பிச்சிபுடுவேன் பிச்சி....//

  தமிழ்வாசி..அண்ணன் இப்போ தனிக்கட்டைய்யா..அவரு ஃபீலிங்ஸை புரிஞ்சிக்கோங்க.////

  நன்பேண்டா....

  ///////

  ம்ம்ம் இது நல்லபுள்ளைக்கழகு....

  ReplyDelete
 64. //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேட்டர் ஓவர்.....//

  ஆஹா..இது கமெண்ட்டு!§§§§ஓஹோ,இதுக்குப் பேர் தான் கமெண்டா?இது தெரியாம நாம ஓரோர் எழுத்தா தேடி தட்டுறது எல்லாம் வேஸ்ட்டா?//

  பாஸ், நான் ஒரு பக்கம் எழுதுனதை அவரு ரெண்டே வார்த்தைல முடிச்சதைப் பார்த்து அசந்துட்டேன்..அதான்.

  ReplyDelete
 65. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்லபுள்ளைக்கழகு....//

  ஏன் அண்ணன் ஸ்பேஸ் விடாம எழுதுறாரு..பதிவு ரொம்ப பாதிச்சிடுச்சோ?

  ReplyDelete
 66. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இனி மதன் எஸ்கேப் ஆகனுமே?//

  சொல்ல மாட்டனே..

  ReplyDelete
 67. செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இனி மதன் எஸ்கேப் ஆகனுமே?//

  சொல்ல மாட்டனே..///

  இப்போ சொல்ல மாட்டார்... தொடர் சொல்லும்

  ReplyDelete
 68. நாயகனுக்காக இன்ட்லி

  நாயகிக்காக தமிழ் 10

  செங்கோவிக்காக தமிழ் மணம்

  ReplyDelete
 69. செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்லபுள்ளைக்கழகு....//

  ஏன் அண்ணன் ஸ்பேஸ் விடாம எழுதுறாரு..பதிவு ரொம்ப பாதிச்சிடுச்சோ?////

  அதான் மேட்டர் ஓவர்னு சொல்லிட்டு உள்ள வந்தாரே... உமக்கு புரியலையா?

  ReplyDelete
 70. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  செங்கோவி said...//
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேட்டர் ஓவர்.....//
  ஆஹா..இது கமெண்ட்டு!§§§§ஓஹோ,இதுக்குப் பேர் தான் கமெண்டா?இது தெரியாம நாம ஓரோர் எழுத்தா தேடி தட்டுறது எல்லாம் வேஸ்ட்டா?//
  பாஸ்,நான் ஒரு பக்கம் எழுதுனதை அவரு ரெண்டே வார்த்தைல முடிச்சதைப் பார்த்து அசந்துட்டேன்..அதான்.////சின்னப் பசங்க அசத்துவாங்க தான்..................?!

  ReplyDelete
 71. M.R said...
  நாயகனுக்காக இன்ட்லி

  நாயகிக்காக தமிழ் 10

  செங்கோவிக்காக தமிழ் மணம்///

  ஏன் இம்புட்டு ஐஸ் வைக்கிறாரு....?

  ReplyDelete
 72. நண்பர்களே,

  நிரூ ஒரு நல்ல பதிவு போட்டுள்ளார்..அங்கு செல்வோம்.

  http://www.thamilnattu.com/2011/08/blog-post_27.html

  ReplyDelete
 73. தமிழ்வாசி - Prakash said...
  M.R said...

  பதிவில் வார்த்தை ஜாலம் அருமை நண்பா .//

  ஓ... இம்புட்டு நேரமா வார்த்தையில் ஒன்றி போயிட்டிங்களா?

  ஆமாம் செங்கோவியின் வரிகள் செய்த மாயத்தால் மயங்கித்தான் போனேன்

  (உண்மையாக தான் சொல்கிறேன் ,அங்காடி தெரு சோபி சொல்ற மாதிரி இல்ல )

  ReplyDelete
 74. செங்கோவி said...

  நண்பர்களே,

  நிரூ ஒரு நல்ல பதிவு போட்டுள்ளார்..அங்கு செல்வோம்.////O.K.Son!

  ReplyDelete
 75. வணக்கம் மாப்பிள நீங்க இண்டைக்கு முக்கிய பதிவு போடுவீங்கன்னு ஓடிவந்தன்.. இதில வேற அண்ணாத்தையும் நிரூபனின் பதிவில இண்டைக்கு செங்கோவின்ன கடையில போய் பார்போம்ன்னு ஆர்வத்த கூட்டினார் பரவாயில்ல நானும் வேலையில நிண்டுதான்  உங்கட பதிவ பார்கிறனான் வீட்ட போய் ஓட்டு போடுறன்.. நாளை எதிர்பார்கலாமா இன்றய முக்கிய செய்தியப்பற்றி உங்கள் பார்வைய..!!??

  ReplyDelete
 76. //
  காட்டான் said...
  வணக்கம் மாப்பிள நீங்க இண்டைக்கு முக்கிய பதிவு போடுவீங்கன்னு ஓடிவந்தன்.. இதில வேற அண்ணாத்தையும் நிரூபனின் பதிவில இண்டைக்கு செங்கோவின்ன கடையில போய் பார்போம்ன்னு ஆர்வத்த கூட்டினார் பரவாயில்ல நானும் வேலையில நிண்டுதான் உங்கட பதிவ பார்கிறனான் வீட்ட போய் ஓட்டு போடுறன்.. நாளை எதிர்பார்கலாமா இன்றய முக்கிய செய்தியப்பற்றி உங்கள் பார்வைய..!!//

  தேதி குறிக்கப்பட்டது குறித்து நிரூ சொல்லும்வரை நான் அறியவில்லை..நிரூ பதிவில் தான் இருக்கின்றேன். வாருங்கள்.

  ReplyDelete
 77. நானும் அந்த அப்பாவி மூன்று உயிர்களின் தண்டனை பற்றி
  செங்கோவி அண்ணனின் பதிவைத்தான் எதிர்பார்த்து இருக்குறேன்,
  நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள.....

  ReplyDelete
 78. கடைசியில் கவிதை அழகு.

  ReplyDelete
 79. உங்க காதலிய இப்டித்தான் யோஹன்னா.. நீட்டி முழக்கி முழுப்பேர சொல்லி கூப்டுவீங்களா...ஏதாவது செல்லப்பேர் வையுங்கய்யா..
  யோஹூ.. யோஹூ..ன்னு ஏதாவது..

  இடையே அருமையான தத்துவங்கள்...

  ReplyDelete
 80. யம்மாடி...பய புள்ள என்னமா பிட்ட மாத்தி போடுறாரு...யோவ் தமிழ்ல இருக்க அழகான வார்த்தைகளை எல்லாம் இந்த கதைக்கு அழச்சி வந்திருக்கீரோ....நல்லாத்தான்யா போகுது கதை(!) ஹிஹி!

  ReplyDelete
 81. சிக்மண்ட் ஃப்ராய்டு
  ஓஷோ
  செங்கோவி
  மூணுபேரும் கலக்குறாங்களே!

  ReplyDelete
 82. கவிதை சூப்பர்ணே!
  ஓஷோவின் வரிகள் மாதிரியே இருக்கு!

  //சலனமற்ற தன்மையில்
  சலிப்பே மிஞ்சும்.
  இயங்கு - அதுவே
  பிரபஞ்ச அடிப்படை
  இயக்கம் - அதுவே
  என்றும் சாஸ்வதம்//

  இந்தவரிகள் 'டாப்'

  ReplyDelete
 83. பின்னிட்டீங்க! மதன் கூட இவ்வளவு பீல் பண்ணியிருப்பாரா தெரியல!
  ஓஷோ எல்லாம் படிக்க நேரம்,மனநிலை இருந்ததா அவருக்கு?

  நீங்கதான் பதிவர்ணே!
  ஹன்சி உங்களுக்குத்தாண்ணே! :-)

  ReplyDelete
 84. இந்த பகுதி ரொம்ப சின்னதா முடிஞ்சிடுச்சி... ஏன்?

  ReplyDelete
 85. //ஜீ... said... [Reply]
  பின்னிட்டீங்க! மதன் கூட இவ்வளவு பீல் பண்ணியிருப்பாரா தெரியல!
  ஓஷோ எல்லாம் படிக்க நேரம்,மனநிலை இருந்ததா அவருக்கு?

  நீங்கதான் பதிவர்ணே!
  ஹன்சி உங்களுக்குத்தாண்ணே! :-)
  August 27, 2011 6:40 அம///
  யோவ் இவர் யாரு ஜீ...
  நாம நாளாந்தம் உருகிரம்..ஒரு கவிதையை போட்டவோன ஹன்சி அவருக்காகிடுமா??
  அவருக்கு ஆல்ரெடி ஷகி மேடம் தொடக்கம் திரிஷா மேடம் வரைக்கும் லிங்க் இருக்கு தெரியும்லே!

  ReplyDelete
 86. தமிழ்மனம் 16

  ReplyDelete
 87. // துஷ்யந்தன் said...
  நானும் அந்த அப்பாவி மூன்று உயிர்களின் தண்டனை பற்றி
  செங்கோவி அண்ணனின் பதிவைத்தான் எதிர்பார்த்து இருக்குறேன்,
  நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள.....//

  நிச்சயம் எழுதுவேன் துஷ்யந்தன்..

  ReplyDelete
 88. // FOOD said...
  கடைசியில் கவிதை அழகு. //

  நன்றி சார்.

  ReplyDelete
 89. // Balavasakan said...
  உங்க காதலிய இப்டித்தான் யோஹன்னா.. நீட்டி முழக்கி முழுப்பேர சொல்லி கூப்டுவீங்களா...ஏதாவது செல்லப்பேர் வையுங்கய்யா..
  யோஹூ.. யோஹூ..ன்னு ஏதாவது..//

  ரொம்ப ஃபீல் பண்றீங்களே...யோகுன்னா நல்லாவா இருக்கு..

  ReplyDelete
 90. // விக்கியுலகம் said...
  யம்மாடி...பய புள்ள என்னமா பிட்ட மாத்தி போடுறாரு...யோவ் தமிழ்ல இருக்க அழகான வார்த்தைகளை எல்லாம் இந்த கதைக்கு அழச்சி வந்திருக்கீரோ....நல்லாத்தான்யா போகுது கதை(!) ஹிஹி! //

  ரைட்டு விக்கி!

  ReplyDelete
 91. ஜீ... said...
  //சிக்மண்ட் ஃப்ராய்டு
  ஓஷோ
  செங்கோவி
  மூணுபேரும் கலக்குறாங்களே! //

  பார்ரா...!

  // கவிதை சூப்பர்ணே!
  ஓஷோவின் வரிகள் மாதிரியே இருக்கு! //

  ஓஷோ கவிதை எழுதுனாரா...

  // நீங்கதான் பதிவர்ணே!
  ஹன்சி உங்களுக்குத்தாண்ணே! :-) //

  தம்பீ...............இது போதும்யா..இது போதும்..இனியும் நான் எழுதணுமா..

  ReplyDelete
 92. / Heart Rider said...
  இந்த பகுதி ரொம்ப சின்னதா முடிஞ்சிடுச்சி... ஏன்? //

  இதுக்கு மேல எழுத இதென்ன சரோஜாதேவி புக்கா?

  ReplyDelete
 93. // சி.பி.செந்தில்குமார் said...
  தனி புக்கா போடுங்க //

  அப்படியா சொல்றீங்க?

  ReplyDelete
 94. // மைந்தன் சிவா said...
  அவருக்கு ஆல்ரெடி ஷகி மேடம் தொடக்கம் திரிஷா மேடம் வரைக்கும் லிங்க் இருக்கு தெரியும்லே! //

  இருந்தாலும் ஹன்சி மாதிரி வருமா சிவா.......

  ReplyDelete
 95. // Riyas said...
  தமிழ்மனம் 16 //

  ஓஹோ..

  ReplyDelete
 96. யோவ் பண்றதே கில்மா இதுல கவிதை, தத்துவம் எல்லாம் பேசிட்டு, எப்படியெல்லாம் டிரை பண்ண வேண்டியிருக்கு ஹூம்ம்ம்

  ReplyDelete
 97. ஐய்யா 100 வது வடை

  ReplyDelete
 98. டைரி இன்னுமா டரியல் ஆகலை அவ்வவ்....

  ReplyDelete
 99. டைரி இன்னுமா டரியல் ஆகலை அவ்வவ்....////அங்க தான் "இரென்"(Iren)புயல் வீசலியே?

  ReplyDelete
 100. இடுகையின் கடைசிக் கவிதை சூப்பர்!

  ReplyDelete
 101. //ஃப்ராய்டின் கருத்து கொண்டு
  வெட்க ஆடை விலக்கு.
  ஓஷோவின் வழி பற்றி
  தத்துவ தரிசனம் செய்.//

  ஆகா..............

  ReplyDelete
 102. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 103. கவிதை நல்லா இருக்கு நண்பா
  நிலாரசிகன்

  ReplyDelete
 104. //Jeyamaran $Nila Rasigan$ said... [Reply]
  கவிதை நல்லா இருக்கு நண்பா
  நிலாரசிகன் //

  கவிதையை ரசித்ததற்கு நன்றி ரசிகரே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.