Sunday, August 28, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_40

அறிவிப்பு :
நேற்றைய முக்கியப் பதிவான ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? -ஐ தவற விட்டவர்கள், தயவு செய்து அதனைப் படித்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!


மீலாவுக்கு மதுரை ஓரளவு பழகியிருந்தது. மதனின் அப்பா பேரனை கொஞ்சுவதிலேயே பெரும்பகுதி நேரத்தைக் கழித்தார். கரடுமுரடான சுபாவம் உள்ள அவர் இப்படி பேரனுடன் விளையாடுவது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

‘இதுவரைக்கும் இந்தாளு ஏதாவது பிள்ளையை தூக்கி இருக்காரா..இப்போ பேரன் வரவும் இறக்கி விடமாட்டேங்கிறாரே’ என்று உறவுகள் ஆச்சரியப்பட்டன. ஜமீலாவிற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. அவள் கேட்பது எல்லாம் வாங்கித்தர வேலையாட்களுக்கு மதன் அப்பா சொல்லி வைத்திருந்தார்.

ஆனாலும் ஜமீலாவிற்கு ’ விசா ஏன் இப்படி லேட் ஆகிறது, மதன் எப்போது தன்னை அழைத்துக்கொள்வான் ‘ என்ற யோசனையே ஓடிக்கொண்டிருந்தது. மகனுக்கும் இடையில் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முயற்சித்தாள். அதற்கு மதனின் அனுமதி வேண்டும் என்றும், அஃபிடவிட்டில் அவன் கையெழுத்திட்டு அனுப்பவேண்டும் என்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.மதனிடம் அது பற்றிப் பேசலாம் என்றால் அவனிடம் இருந்து ஒரு வாரமாக ஃபோனே இல்லை. என்ன செய்கிறான் என்றே தெரியவில்லை....

தனை ஒருவாரமாக யோஹன்னா ’அப்பாவிடம் பேசியாகிவிட்டதா’ என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள். 

“மதன், எனக்கும் உன் அப்பாகிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு. அவர் ஒத்துக்கலேன்னா என்கிட்ட கொடு. நான் பேசுறேன். எனக்கு என் அப்பாவைத் தான் பார்க்க கொடுத்துவைக்கலை. உன் அப்பாவைப் பார்த்தாவது என்னை நான் ஆறுதல் படுத்திக்கறேன். “

மதனுக்கு இந்த விஷயத்தை எப்படி அடுத்து கையாளுவது என்று தெரியவில்லை. ’இவளை மணந்தால் இங்கேயே குடிமகன் ஆகி, நமது லைஃப் ஸ்டைலே மாறி விடும். ஆனால் இவள் அப்பாவிடம் பேசியே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாளே..அப்பாவிடம் எப்படிப் பேச? என்ன சொல்ல முடியும்? எனக்கு வேறு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்றால் ஒத்துக்கொள்வாரா? அதற்கு சான்ஸ் கம்மி தான். ஜமீலாவைக் கைவிடுவதை அவர் ஒத்துக்கொள்ள வாய்ப்பே இல்லையே..என்ன செய்ய’ நாளெல்லாம் யோசனையிலேயே மதன் சுற்றினான்.

இடையில் யோஹன்னாவின் அம்மா வேலை விஷயமாக ஃப்ரான்ஸ் சென்றிருந்தாள். அங்கிருந்து சாட் பண்ணினாள். மதனிடம் பேச வேண்டும் என்று ஆர்வமாய்ப் பேசினாள். மதனை வெப் கேமில் பார்த்துவிட்டு, நல்ல ஜோடிப்பொருத்தம் என்றாள். 

“நீங்க உங்க அப்பாகிட்ட பேசிட்டுச் சொல்லுங்க. நான் ஒரு முக்கியமான அஃபிசியல் டூரில் இருக்கேன். நான் திரும்பி வரவும் மேரேஜை வச்சிக்கலாம்..ஆனால் உங்க அப்பா சம்மதம் முக்கியம்னு நான் நினைக்கிறேன்’ என்றாள்.

மதனும் ‘கண்டிப்பாகப் பேசுகிறேன்..அவர் ஒத்துப்பார்னு நம்புறேன்’ என்றான்.

விசா முடிவதற்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், மதன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். ஃபோனை எடுத்து அப்பாவிற்கு கால் செய்தான்.

“அப்பா”

“மதனா..நல்லா இருக்கியாப்பா?’
“ம்...இருக்கேன்ப்பா”

“என்னப்பா கம்முன்னு பேசுறே..என்ன ஆச்சு..உடம்பு கிடம்பு சரி இல்லையா?”

“ப்ச்..விடுங்கப்பா..நீங்க நல்லா இருக்கீங்கள்ல..எனக்குன்னு இந்த உலகத்துல உண்மையா அன்பு காட்ட இருக்கிறது நீங்க தானே..”

‘என்னப்பா இப்படிப் பேசுறே..என்ன ஆச்சு..எங்க இருக்க? ஆஃபீஸ்லயா?”

‘இல்லைப்பா..ஒரு வாரமா ஆஃபீஸ் போகலை..”

“ஏன்..ஏன்..என்ன ஆச்சுய்யா..ஆஃபீஸ்ல ஏதும் பிரச்சினையா?”

“ஆஃபீஸ்ல இல்லைப்பா..விடுங்கப்பா..நான் அப்புறம் பேசுறேன்”

“என்னய்யா..என்ன ஆச்சு..அப்பாக்கு பதறுதில்ல..என்னன்னு சொல்லு.”

“ஏம்ப்பா நான் யார் மேலல்லாம் அன்பு காட்டுறனோ அவங்கள்லாம் என்னை ஏமாத்துறாங்க இல்லே விட்டுட்டுப் போயிடறாங்க?”

“இப்போ யாருய்யா உன்னை ஏமாத்துனது?”

“வேண்டாம்பா..இங்க எனக்குன்னு யாருமே இல்லை..அது மட்டும் நல்லா தெரியுது..என்..னால பேச முடியலை”

“அழறியா? ஆம்பிளை நீ அழற அளவுக்கு என்னய்யா நடந்து போச்சு..அப்பா நான் இருக்கேன்ல..நீ அழறதைப் பார்த்திட்டு சும்மா இருப்பனா? ஏன் யாருமே இல்லேன்னு சொல்றே? நான் இருக்கேன்.ஜமீலா இருக்கா..என் பேரன் இருக்கான்..அப்புறம் என்னய்யா?”

“வேணாம்பா..அவளைப் பத்திப் பேசாதீங்க..நான் ஏமாந்துட்டேன்பா”

“என்னய்யா சொல்றே..என்ன ஏமாந்துட்ட?”

”அப்பா..அவ என்னை முட்டாளா ஆகிட்டாப்பா..என்னை மட்டுமில்ல நம்ம எல்லாரையும் முட்டாளா ஆகிட்டா” 

மதன் பேசுவதை நிறுத்தி அழத்தொடங்கினான். மறுமுனையில் மதனின் அப்பா உணர்ச்சிவசப்பட்டவராய் நின்றிருந்தார்.

“என்ன விஷயம்னு சொல்லுய்யா..அப்பா இருக்கேன்ல..இங்க நமக்காக எத்தனை பேரு இருக்காங்க..சொல்லு”

“அப்பா..ஜமீலா ஏற்கனவே..”

“ஏற்கனவே..என்னப்பா ஏற்கனவே?”

“அவ ஏற்கனவே கல்யாணம ஆனவளாம்பா. அவ கேரக்டர் சரி இல்லேன்னு அவ முத புருசன் அவளை டைவர்ஸ் பண்ணிட்டானாம்..என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டாப்பா..நல்லவ மாதிர் நடிச்சு நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டா”

“என்னது..அவ ஏற்கனவே அத்துக்கிட்டு வந்தவளா? என்னப்பா சொல்றே? யாரு உனக்கு இதைச் சொன்னது?”

”அவ கிளாஸ்மேட் பொண்ணு ஒன்னை இங்க பார்த்தேன்பா..அவ தான் எல்லாத்தையும் சொன்னா..அவளுக்காக நான் உங்களைக் கூட தூக்கிப் போட்டேன்..ஆனா அவ இந்த டைவர்ஸ் விஷயத்தைப் பத்தி ஒன்னுமே சொல்லாம என்னை நம்ப வச்சி ஏமாத்திட்டாப்பா..உங்க மனசை கஷ்டப்படுத்துன பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்பா”

“டேய்..அவ நம்மளப் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கா? நாம என்ன சொம்பன்களா..நான் உம்னு ஒரு வார்த்தை சொன்னா வீச்சருவா, வேல்கம்போட ஓடிவர நூறு பேரு இங்க இருக்கான்..என் வீட்லயே அந்த அவிசாரி தன் வேலையைக் காட்டிட்டாளா..அழாத..அழாதய்யா..அப்பா இருக்கேன்ல..நீ ஃபோனை வை..நான் பார்த்துக்கிறேன், நான் பார்த்துக்கறேன்யா அந்த தே..முண்டையை.”

(புதன் கிழமை..தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

48 comments:

 1. சனியும் வந்தான் மன்மதன்

  ReplyDelete
 2. ஜமீலாவுக்கு மதுரை ஓரளவு பழகியிருந்தது.///

  நம்ம ஊரா இருக்கே...

  ReplyDelete
 3. அவ ஏற்கனவே கல்யாணம ஆனவளாம்பா. அவ கேரக்டர் சரி இல்லேன்னு அவ முத புருசன் அவ்ளை டைவர்ஸ் பண்ணிட்டானாம்.///

  அடப்பாவி மதன்.... கவுத்துட்டானே...

  ReplyDelete
 4. //தமிழ்வாசி - Prakash said...
  சனியும் வந்தான் மன்மதன்//

  சனி மாதிரி வந்தானா?

  ReplyDelete
 5. கிளைமாக்ஸ் ஸ்டார்ட்.... இனி திருப்பங்கள்.....

  ReplyDelete
 6. //தமிழ்வாசி - Prakash said...
  அவ ஏற்கனவே கல்யாணம ஆனவளாம்பா. அவ கேரக்டர் சரி இல்லேன்னு அவ முத புருசன் அவ்ளை டைவர்ஸ் பண்ணிட்டானாம்.///

  அடப்பாவி மதன்.... கவுத்துட்டானே...//

  ஆம் பிரகாஷ்.

  ReplyDelete
 7. // தமிழ்வாசி - Prakash said...
  கிளைமாக்ஸ் ஸ்டார்ட்.... இனி திருப்பங்கள்.....//

  ஆமாம்..

  பிரகாஷ், வெளியில் கிளம்புகிறேன்..பார்ப்போம்.

  ReplyDelete
 8. :( ... Madhan should be punished , sad turning point

  ReplyDelete
 9. மதனின் அப்பாவுக்கு எங்கே தெரிய போகிறது மதனின் லீலைகள்... அவர் பாவம் மகனின் செய்கை அறியாமல் வீர வசனம் ஆறுதலாக பேசுகிறார்...மதனின் லீலைகள் தொடரட்டும்.. தொடர்கிறோம் நண்பரே...

  ReplyDelete
 10. //தமிழ்வாசி - Prakash said...
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ஜமீலாவுக்கு மதுரை ஓரளவு பழகியிருந்தது.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>
  நம்ம ஊரா இருக்கே...///
  தமிழ்வாசி உள்ள புகுந்திறப்போறாரு.

  ReplyDelete
 11. ரைட்டுய்யா....நடத்து!பாரதி ராஜா படத்து வர நாட்டாமையா அவரு டவுட்டு!

  ReplyDelete
 12. நாள் சொல்லி மன்மதன் வருகிறார்!!சூப்பர்!
  எழுத்து அழகு!

  ReplyDelete
 13. அருமையாய் சுவாரசியமாய் கதை போகுது
  வாழ்த்துக்களும் வாக்குகளும்

  ReplyDelete
 14. அடப்பாவி மதன்!
  இப்பிடி எல்லாமா பண்ணுவாங்க?

  மதன் சைக்கோவா அண்ணே? எல்லாரும் தன்னைப்பார்த்து பரிதாபப்படவேணும்னு நினைக்கிறது! குறிப்பா அழுது அனுதாபத்தைத் தேடிக்கொள்றது.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. //“அவ ஏற்கனவே கல்யாணம ஆனவளாம்பா. அவ கேரக்டர் சரி இல்லேன்னு அவ முத புருசன் அவளை டைவர்ஸ் பண்ணிட்டானாம்..என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டாப்பா..நல்லவ மாதிர் நடிச்சு நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டா”//

  தனது சுயலாபத்திற்காக ஏதும் அறியா ஒரு பெண்ணின் மீது இப்படி குற்றம் சுமத்த எப்படி மதனுக்கு மனசு வந்தது?

  ReplyDelete
 17. கத நல்லா போகுது.ஆம்பளன்னா இப்புடித் தான் இருக்கணுமோ?(டவுட்டு)

  ReplyDelete
 18. தமிழ்வாசி - Prakash said...
  சனியும் வந்தான் மன்மதன்!////ஆமாய்யா,ஒங்க தொல்ல தாங்க முடியாமத் தான் அவரு "இந்த"நேரத்திலயும் ஒங்கள கிளு,கிளுக்க வைக்கிறாரு!(இது தான் சனியோ?)

  ReplyDelete
 19. FOOD said...

  //தமிழ்வாசி - Prakash said...
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ஜமீலாவுக்கு மதுரை ஓரளவு பழகியிருந்தது.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>
  நம்ம ஊரா இருக்கே...///
  தமிழ்வாசி உள்ள புகுந்திறப்போறாரு.§§§§"லொலி பாப்" சாப்புடுற புள்ளயப் போயி....................................!?

  ReplyDelete
 20. இடையில் யோஹன்னாவின் "அம்மா" வேலை விஷயமாக ஃப்ரான்ஸ் சென்றிருந்தாள்.////அட! நாம குடியிருக்கிற நாட்டுக்கு வந்தாங்களா,சொல்லவேயில்ல?????

  ReplyDelete
 21. // வினையூக்கி said... [Reply]
  :( ... Madhan should be punished , sad turning point //

  உண்மை.

  ReplyDelete
 22. // மாய உலகம் said... [Reply]
  மதனின் அப்பாவுக்கு எங்கே தெரிய போகிறது மதனின் லீலைகள்... அவர் பாவம் மகனின் செய்கை அறியாமல் வீர வசனம் ஆறுதலாக பேசுகிறார்...மதனின் லீலைகள் தொடரட்டும்.. தொடர்கிறோம் நண்பரே...//

  தொடருங்க..தொடர்கிறேன்.

  ReplyDelete
 23. // FOOD said... [Reply]
  தமிழ்வாசி உள்ள புகுந்திறப்போறாரு. //

  அவரு அப்படிப்பட்ட ஆளு தான்.

  ReplyDelete
 24. // விக்கியுலகம் said... [Reply]
  ரைட்டுய்யா....நடத்து!பாரதி ராஜா படத்து வர நாட்டாமையா அவரு டவுட்டு! //

  அது கே.எஸ்.ரவிகுமார் படம்யா..

  ReplyDelete
 25. // மைந்தன் சிவா said... [Reply]
  நாள் சொல்லி மன்மதன் வருகிறார்!!சூப்பர்! //

  அன்னைக்கு லீவு..அதான்!

  ReplyDelete
 26. // கவி அழகன் said... [Reply]
  அருமையாய் சுவாரசியமாய் கதை போகுது
  வாழ்த்துக்களும் வாக்குகளும் //

  நன்றி..நன்றி.

  ReplyDelete
 27. // ஜீ... said... [Reply]

  மதன் சைக்கோவா அண்ணே? எல்லாரும் தன்னைப்பார்த்து பரிதாபப்படவேணும்னு நினைக்கிறது! குறிப்பா அழுது அனுதாபத்தைத் தேடிக்கொள்றது. //

  அப்படியும் சொல்லலாம்..

  ReplyDelete
 28. // K.s.s.Rajh said... [Reply]

  தனது சுயலாபத்திற்காக ஏதும் அறியா ஒரு பெண்ணின் மீது இப்படி குற்றம் சுமத்த எப்படி மதனுக்கு மனசு வந்தது? //

  வருகிறதே..

  ReplyDelete
 29. Yoga.s.FR said... [Reply]
  // ஆம்பளன்னா இப்புடித் தான் இருக்கணுமோ?(டவுட்டு) //

  நான் அப்படிச் சொல்லலை சாமீ..என்னை விட்டுடுங்க.

  //இடையில் யோஹன்னாவின் "அம்மா" வேலை விஷயமாக ஃப்ரான்ஸ் சென்றிருந்தாள்.////அட! நாம குடியிருக்கிற நாட்டுக்கு வந்தாங்களா,சொல்லவேயில்ல????? //

  அது ஓல்டு லேடி சார்..விடுங்க. (அது தான் பொருத்தமோ?)

  ReplyDelete
 30. செங்கோவி said...அது ஓல்டு லேடி சார்..விடுங்க. (அது தான் பொருத்தமோ?)////OLD IS GOLD!!!!Ha!Ha!!Ha!!!

  ReplyDelete
 31. வேடிக்கையா போகுதா கதை
  அல்லது வேதனையாபோகுதா கதை
  தெரியல!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 32. ஓங்க நானா யோசிச்சேன் பஞ்ச டயலாக் சூப்பர்!!குறிப்பா திரிசா கமலா காமேஷ் ஒப்பீடு வயித்து வலியே வந்துடுச்சு!!

  ReplyDelete
 33. “அவ ஏற்கனவே கல்யாணம ஆனவளாம்பா. அவ கேரக்டர் சரி இல்லேன்னு அவ முத புருசன் அவளை டைவர்ஸ் பண்ணிட்டானாம்..என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டாப்பா..நல்லவ மாதிர் நடிச்சு நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டா”

  “என்னது..அவ ஏற்கனவே அத்துக்கிட்டு வந்தவளா? என்னப்பா சொல்றே? யாரு உனக்கு இதைச் சொன்னது?”

  ”அவ கிளாஸ்மேட் பொண்ணு ஒன்னை இங்க பார்த்தேன்பா..அவ தான் எல்லாத்தையும் சொன்னா..அவளுக்காக நான் உங்களைக் கூட தூக்கிப் போட்டேன்..ஆனா அவ இந்த டைவர்ஸ் விஷயத்தைப் பத்தி ஒன்னுமே சொல்லாம என்னை நம்ப வச்சி ஏமாத்திட்டாப்பா..உங்க மனசை கஷ்டப்படுத்துன பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்பா”

  அட இதெல்லாம் இப்ப நாட்டில சகசமப்பா.அடுத்து யாரு யார ஏமாத்தப் போறாங்களோ!...அத நம்ம செங்கோவிக்கிட்ட கேட்டாப்போச்சு
  ஹி.....ஹி....ஹி ...
  நன்றி சகோ தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள் நாட்டுல நடக்குறத அப்புடியே படம்புடிசுக் காட்டுறதுக்கு .

  தமிழ்மணம் 8

  ReplyDelete
 34. கிளுகிளு முடிஞ்சு, பரபர ஆரம்பிச்சிருச்சா?

  ReplyDelete
 35. அடப்பாவி மதன்.இவ்வளவு மோசமான ஆளா?

  ReplyDelete
 36. //புலவர் சா இராமாநுசம் said... [Reply]
  வேடிக்கையா போகுதா கதை
  அல்லது வேதனையாபோகுதா கதை
  தெரியல!//

  வேடிக்கையாப் போன கதை
  வேதனையாகப் போகுதோ?

  ReplyDelete
 37. //Naran said...
  ஓங்க நானா யோசிச்சேன் பஞ்ச டயலாக் சூப்பர்!!குறிப்பா திரிசா கமலா காமேஷ் ஒப்பீடு வயித்து வலியே வந்துடுச்சு!!//

  உங்க சந்தோசமே என் குறிக்கோள்..நன்றி.

  ReplyDelete
 38. //அம்பாளடியாள் said...

  நன்றி சகோ தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள் நாட்டுல நடக்குறத அப்புடியே படம்புடிசுக் காட்டுறதுக்கு .//

  ஆம் சகோ..அதுவே நம் நோக்கம்.

  ReplyDelete
 39. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மதன் ஹீரோவா, வில்லனா?//

  அப்படி தனித்தனியா பிரிக்க முடியுமா?

  ReplyDelete
 40. //சென்னை பித்தன் said...
  அடப்பாவி மதன்.இவ்வளவு மோசமான ஆளா?//

  ஏன்..இத்தனை நாளா உங்களை மாதிரின்னு நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா?

  ReplyDelete
 41. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
  ரெவெரி...

  ReplyDelete
 42. thamizmanam 2

  alexa 1,48000

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. sengovi matter modichutha ellaiya athai solluppa mothalla
  Eppadiku jollu viduvor sangam
  Tirupur branch

  ReplyDelete
 44. கிழிஞ்சது செங்கோவி டைரி

  ReplyDelete
 45. ஒரு பெண்ணைக் கழட்டி விடனும் என்றால் அல்லது கைகழுவி விடனும் என்றால் ஆண்கள் எவ்வாறான அஸ்திரத்தை உபயோகிப்பார்கள் என்பதனை வெட்ட வெளிச்சமாக மதன் எனும் கேரக்டர் மூலமாகச் சொல்லியிருக்கிறீங்க.

  அடுத்த பாகத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 46. GOOD POST KEEP IT UP.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.