Tuesday, August 30, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_41

மீலா தன் குழந்தையுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள். மதனின் அப்பா கேட்டைத் திறந்துகொண்டு கோபமாக வருவதைப் பார்த்தாள். அவர் இப்படி ஆக்ரோசமாக வருவது புதிதல்ல. வழக்கமாக ஏதாவது கட்டைப் பஞ்சாயத்து செய்துவிட்டோ, யாரிடமாவது சண்டை போட்டுவிட்டோ வரும்போது, அவர் முகம் இப்படியே இருக்கும். 

ஜமீலா அவரைப் பார்த்து வாங்கப்பா என்று சொல்வதிலேயே பாதிக்கோபம் போய் விடும். பேரனைப் பார்த்துவிட்டால் மீதிக்கோபமும் போய், குழந்தையாகி விளையாட ஆரம்பித்துவிடுவார்.

இப்போதும் ஜமீலா “வாங்கப்பா” என்று சொன்னபடியே எழுந்து நின்றாள்.

”என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? கேணப்பய மாதிரித் தெரியுதா?”

சத்தமாக கடும் கோபத்துடன் மதன் அப்பா அப்படிக்கேட்டதும் ஜமீலா ஆடிப்போனாள். பயத்தில் பேச்சு வராமல் உடல் நடுங்க ஆரம்பித்தது.

“எங்க குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம்னு தெரியுமா? மதன் அம்மாவுக்கு இங்கே எப்படிப்பட்ட மரியாதை இருந்தது தெரியுமா? எல்லாரும் கையெடுத்துக் கும்பிடுற அளவுக்கு உத்தமியான பொம்பளை அவ. ஆனா..ச்சீ..உன்னை மாதிரி கழிசடையை அவ இடத்துல வச்சனேன்னு நினைக்கும்போது எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை கொன்னுடலாமான்னு தோணுது”

“நா..நான் என்னப்பா தப்பு பண்ணேன்?” ஜமீலா கண்ணில் கண்ணீர் வழியக் கேட்டாள்.

“என்னமா நடிக்கிறே..இப்படி நடிச்சுத்தானே என் பையனை ஏமாத்துன? அழுதா ஏமாந்திடுவோமா? உண்மையைச் சொல்லு..நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ தானே? அங்க இருந்து அத்துக்கிட்டு வந்தவ தானே?”

ஜமீலா அதிர்ந்து போனாள். இது திடீரென இவருக்கு எப்படித் தெரியும் என்று யோசித்தபடியே “ஆமாப்பா” என்றாள்.

“ஆமாவா..எவ்வளவு திமிராச் சொல்றே..இத்தனை நாள் இதை மறைச்சு ஏமாத்துன பயம் கொஞ்சமாவது தெரியுதா உனக்கு..உன்னை மாதிரி ஓடுகாலியை வீட்ல கொண்டுவந்து வச்சனே, அது என் தப்பு..மகன் சந்தோசம் தான் முக்கியம்னு எங்க சாதி கௌரவத்தை விட்டு உன்னை குடும்பத்துல சேர்த்தமே அதுக்கு இந்த அவமானம் தேவை தான்.இனி ஒரு நிமிசம் நீ இங்க இருக்கக்கூடாது. எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு அடிச்சே கொன்னுடுவேன். பொட்டச்சியாச்சேன்னு பார்க்கிறேன்..கிளம்பு..இப்பவே கிளம்பு”

இனி இவரிடம் பேசிப் புரியவைக்க முடியாது என்று தெரிந்தது. ஜமீலா அழுதபடியே தன் பொருட்களை சூட்கேஸில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

வெளியே தெருவே கூடி இருந்தது. ‘என்ன பிரச்சினை..ஏன் இப்படிச் செய்றீங்க’ என்று அவரைக் கேட்க அங்கே யாருக்கும் தைரியம் இல்லை. வேறு ஜாதி/மதப் பெண் போய் தொலைந்தால் சரி எனும் மனப்பான்மையும் அங்கே இருந்தது.

ஜமீலா அத்தனை பேரையும் கடந்து மெயின் ரோட்டிற்கு வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றாள். எங்கு போவது என்று தெரியவில்லை. பிறந்த வீட்டிற்குப் போக முடியாது. வேறு தோழிகளுடனும் தொடர்பு இல்லை. மதனின் நண்பர்களை தொடர்பு கொள்ளலாமா? அது வீட்டுப்பிரச்சினையை வெளியில் கொண்டுபோனது போல் ஆகிவிடுமே.

வந்த பஸ்ஸில் ஏறினாள்.

“எங்கம்மா போகணும்” என்றார் கண்டக்டர்.

“எங்க போகுது இந்த பஸ்?”

கண்டக்டர் ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே “ மாட்டுத் தாவணி” என்றார்.

“சரி, அதுக்கே ஒன்னு கொடுங்க” என்று டிக்கெட் வாங்கிக்கொண்டாள்.

மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் கூட்டத்தில் அவளும் கலந்து அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அழுத பையனுக்கு பால் வாங்கிக்கொடுத்துவிட்டு, மதனுக்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அடித்தபடியே இருந்தாள். எந்த பதிலும் இல்லை.

‘என்ன செய்கிறான்..யார் இவரிடம் சொன்னது..நான் ஆரம்பத்திலேயே மறைக்க வேண்டாம் என்று சொன்னேனே..அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டான பழனி, செங்கோவிகிட்டக் கூட சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டானே..இனி யார் என்னை நம்புவார்கள்’ என்று யோசித்தபடியே பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருந்தாள். எந்தப் பஸ்ஸிலும் ஏறாமல் பல மணி நேரமாக அங்கேயே இருந்ததால், சில ஆண்களும் கடைக்காரர்களும் வினோதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். 

ஒருவன் செல்ஃபோனை வெறுமனே காதில் வைத்துக்கொண்டு “சொல்லும்மா..நான் இருக்கேன்ல..எவ்வளவு வேணும்..சொல்லு “ என்றான். ஜமீலா பயந்து போனாள். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம்கூட ஒரு பெண் தனியே பொது இடத்தில் அமர்ந்திருக்க முடியாது என்பது புரிந்தது. அவள் அங்கிருந்து எழுந்து வேறு பக்கம் நோக்கி நடந்தாள். அங்கே ராஜபாளையம் பஸ் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். 

லட்சுமியக்கா ஞாபகம் வந்தது. ஜமீலாவின் பிரசவத்தின்போது உதவி செய்ய லட்சுமியக்கா வந்திருந்தார். மதனுக்கு அவர் அக்கா முறை. ராஜபாளையம் அருகே ஏதோ கிராமம் என்று சொன்னார்கள். பிரசவத்திற்குப் பிறகும் ஃபோனில் என்ன செய்யவேண்டும், கூடாது என அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார். தமிழ்நாட்டில் தனக்குத் தெரிந்த ஒரே ஆள் அவர் தான் என்பது ஜமீலாவிகுப் புரிந்தது. ராஜபாளையம் பஸ்ஸில் குழந்தையுடன் ஏறினாள்.

லட்சுமிக்கு ஃபோன் செய்தாள். 

“அக்கா, நான் ஜமீலா பேசுறேன்”

”ஜமீலாவா..நல்லாயிருக்கியாம்மா?”

“ம்..ஊர்ல தானே இருக்கீங்க?”

“ஆமா.ஏன்மா”

“இல்லே..நான் ராஜபாளையம் வர்றேன்..அப்படியே உங்களையும் பார்க்கலாம்னு”

“இம்புட்டு தூரம் வந்திட்டு, பார்க்காமலா போவே? போனா சும்மா விட்ருவனா? வாம்மா..ராசாளயம் வந்திட்டு போன் பண்ணு..அவரை பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொல்றேன்”

“சரிக்கா”

ஜமீலா ஃபோனை வைத்தாள். ஆனாலும் பயமாகவே இருந்தது. ’மதனின் அப்பாவை எதிர்த்துக்கொண்டு, என்னை வீட்டில் தங்க விடுவார்களா என்று தெரியவில்லை. முதலில் போவோம். இதைத் தவிர வேறு வழியில்லை.’ என்று துணிந்தாள்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

 1. வணக்கம் பாஸ்,
  இருங்க படிச்சிட்டு வாரேன்,

  ReplyDelete
 2. வணக்கம் பாஸ் நானும் படிச்சுட்டு வாரேன்

  ReplyDelete
 3. சார்! நலமா இருக்கீங்களா? நானும் படிச்சிட்டு வர்ரேன்!

  ReplyDelete
 4. மங்காத்தா-!!!!இந்த படத்த வச்சி ஆளாளுக்கு விளையாடுரங்கப்பா!!!!நல்லா விளையாடுறாங்க மங்கத்தா!!!!!!!

  ReplyDelete
 5. மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் கூட்டத்தில் அவளும் கலந்து அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அழுத பையனுக்கு பால் வாங்கிக்கொடுத்துவிட்டு, மதனுக்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அடித்தபடியே இருந்தாள். எந்த பதிலும் இல்லை.//


  ஆகா...இது நம்ம பிரகாஸின் இடமாச்சே...

  ReplyDelete
 6. ஜமீலாவின் நிலைமைய நினைத்தால் பாவமாக இருக்குது...

  ReplyDelete
 7. ஒருவன் செல்ஃபோனை வெறுமனே காதில் வைத்துக்கொண்டு “சொல்லும்மா..நான் இருக்கேன்ல..எவ்வளவு வேணும்..சொல்லு “//

  சே....என்ன மனுசங்க...தமிழர்களின் பூர்விக குணம் இந்த விசயத்தில் மாத்திரம் திருந்தப் போவதில்லை...

  ReplyDelete
 8. அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டான பழனி, செங்கோவிகிட்டக் கூட சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டானே//

  ஆஹா முக்கியமான இடம்... ஒரு வேளை உங்ககிட்ட சொல்லியிருந்தா உங்களுடைய ஆக்ஸன் எப்படி இருக்கும் உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்

  ReplyDelete
 9. ஜமீலாவை நினைக்க பரிதாபமாக இருக்கு! இந்த மாதிரி நேரத்துல புருஷந்தானே ஆறுதல் சொல்லணும்/எங்க போனான் அவன்?

  ஒரு வேளை அவன் தனது தந்தைக்குப் பயந்து, மனைவியை விரட்டி விடுவானோ?

  ஈகர்லி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பார்ட்!

  ReplyDelete
 10. ம்...சோகம் இழையோடும் பதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீங்க.

  இப்படி எத்தனை ஜமீலாக்கள் எங்கள் சமூகத்திலோ?

  புலம் பெயர்வு, வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்த பின்னர் மனைவிகளைக் கை விடும் கணவன்மார்கள்,

  போர்ச் சூழலால் கணவனை இழந்து தனித்து திக்கற்று வாழும் பெண்கள் என நாள் தோறும் சோகங்களைச் சுமந்த படி செல்லும் வரலாற்றினைத் தமிழினம் தன்னகத்தே கொண்டுள்ளது...

  ReplyDelete
 11. @
  ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...


  ஈகர்லி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பார்ட்!//

  சொல்றது தான் சொல்றீங்க,
  ஏதாச்சும் புரியிற மாதிரிச் சொல்லாமில்லே.

  ReplyDelete
 12. @
  ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...


  ஈகர்லி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பார்ட்!//

  சொல்றது தான் சொல்றீங்க,
  ஏதாச்சும் புரியிற மாதிரிச் சொல்லாமில்லே.

  ReplyDelete
 13. இனி இவரிடம் பேசிப் புரியவைக்க முடியாது என்று தெரிந்தது. ஜமீலா அழுதபடியே தன் பொருட்களை சூட்கேஸில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள்.//

  இந்த இடத்தில் மட்டுமல்ல நிறைய சூழ்நிலைகளில் உண்மைகளை விளக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது...ம்ம்ம்

  ReplyDelete
 14. யோகா ஐயாவின் கவனத்திற்கு,
  வலையில் ஐடியா மணி எனும் பெயரில் புதிதாக ஒருவர் வந்திருக்கிறார்.
  அவர் ப்ளாக்கிற்கு போய் பாருங்க...உங்களுக்கு நீங்கள் தவற விட்ட பிரபல புள்ளி ஒருவர் காட்சி தருவார்.

  ReplyDelete
 15. தமிழ்மணம் ஒன்று.

  ReplyDelete
 16. யோகா ஐயாவின் கவனத்திற்கு,
  வலையில் ஐடியா மணி எனும் பெயரில் புதிதாக ஒருவர் வந்திருக்கிறார்.
  அவர் ப்ளாக்கிற்கு போய் பாருங்க...உங்களுக்கு நீங்கள் தவற விட்ட பிரபல புள்ளி ஒருவர் காட்சி தருவார்.///

  சார்! எனக்கு இப்போ அழணும் போல இருக்கு!

  ReplyDelete
 17. இன்னிக்கும் அதே கமண்டு தான்.கத நல்லாப் போகுது!

  ReplyDelete
 18. நிரூபன் said... [Reply]
  யோகா ஐயாவின் கவனத்திற்கு,
  வலையில் ஐடியா மணி எனும் பெயரில் புதிதாக ஒருவர் வந்திருக்கிறார்.
  அவர் ப்ளாக்கிற்கு போய் பாருங்க...உங்களுக்கு நீங்கள் தவற விட்ட பிரபல புள்ளி ஒருவர் காட்சி தருவார்.///யோவ்,என்னய்யா நெனச்சிட்டிருக்கை மனசுல?செங்கோவி கதைய கூடப் படிக்காம அரக்கப்,பரக்க ஓடிப் போனா,மகாபாரதமில்ல எழுதியிருக்கு?அதுல டிஸ்கி வேற,ஒரு முழம் நீளத்துக்கு இருக்கு!அதுல ஒரு பொம்பள போட்டோ போட்டிருக்கு,மனசுக்கு ஆறுதலாயிருந்திச்சு!

  ReplyDelete
 19. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said.....சார்!எனக்கு இப்போ அழணும் போல இருக்கு!////சோகத்த நெஞ்சுல சுமந்துக்கிட்டிருக்கப்படாது!மனசு விட்டு அழுதிடணும்.அது தான் சொகமான வாழ்வுக்கு நல்லது! நெஞ்சில இருக்கிற பாரத்த கொறைச்சிடனும்.இல்லேன்னா,மாரடைப்பு வந்திடும்னு டாக்டருங்க சொல்லுறாங்க!

  ReplyDelete
 20. செங்கோவி கறிக்கடையை தொறந்து வச்சுட்டு மங்காத்தா ஆட போய்ட்டார் போல...

  ReplyDelete
 21. அடடா கதை ரொம்ப சீரியசா போக ஆரம்பிச்சிடுச்சே......?

  ReplyDelete
 22. அடடா கதை ரொம்ப சீரியசா போக ஆரம்பிச்சிடுச்சே......?// தலைவன் வழியில் நானும்# ரிப்பீட்டு...

  ReplyDelete
 23. மங்காத்தா விமர்சனத்துக்காக நான் இப்பவே ரெடியாகுறேன், பாஷின் விமர்சனம் எப்படி இருக்க போகுதோ..

  ReplyDelete
 24. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...
  சார்! நலமா இருக்கீங்களா? நானும் படிச்சிட்டு வர்ரேன்! //

  நல்லா இருக்கேன் சார்..நீங்க நல்லா இருக்கீங்கன்னும் தெரியும் சார்!!

  ReplyDelete
 25. // நிரூபன் said...
  மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் கூட்டத்தில் அவளும் கலந்து அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அழுத பையனுக்கு பால் வாங்கிக்கொடுத்துவிட்டு, மதனுக்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அடித்தபடியே இருந்தாள். எந்த பதிலும் இல்லை.//

  ஆகா...இது நம்ம பிரகாஸின் இடமாச்சே...//

  அப்போ அந்த செல்ஃபோன் பார்ட்டி தமிழ்வாசின்னா சொல்றீங்க?

  ReplyDelete
 26. // நிரூபன் said...
  ஒருவன் செல்ஃபோனை வெறுமனே காதில் வைத்துக்கொண்டு “சொல்லும்மா..நான் இருக்கேன்ல..எவ்வளவு வேணும்..சொல்லு “//

  சே....என்ன மனுசங்க...தமிழர்களின் பூர்விக குணம் இந்த விசயத்தில் மாத்திரம் திருந்தப் போவதில்லை...//

  இங்கு பகலில் தனியே செல்வதே சவாலான விஷயம் தான்.

  ReplyDelete
 27. // மாய உலகம் said...
  அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டான பழனி, செங்கோவிகிட்டக் கூட சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டானே//

  ஆஹா முக்கியமான இடம்... ஒரு வேளை உங்ககிட்ட சொல்லியிருந்தா உங்களுடைய ஆக்ஸன் எப்படி இருக்கும் உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் //

  பொறுங்க பாஸ்..என்ன அவசரம்...

  ReplyDelete
 28. // மாய உலகம் said...
  அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டான பழனி, செங்கோவிகிட்டக் கூட சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டானே//

  ஆஹா முக்கியமான இடம்... ஒரு வேளை உங்ககிட்ட சொல்லியிருந்தா உங்களுடைய ஆக்ஸன் எப்படி இருக்கும் உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் //

  பொறுங்க பாஸ்..என்ன அவசரம்...

  ReplyDelete
 29. // வினையூக்கி said...
  :( மனசு பதறுகிறது //

  உங்க நல்ல மனதுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 30. // Yoga.s.FR said...
  இன்னிக்கும் அதே கமண்டு தான்.கத நல்லாப் போகுது! //

  ரொம்ப நாளாவே அது அப்படித்தானே போகுது பாஸ்!

  ReplyDelete
 31. // ரெவெரி said...
  செங்கோவி கறிக்கடையை தொறந்து வச்சுட்டு மங்காத்தா ஆட போய்ட்டார் போல...//

  ஆமா..ஃப்ரெஷ் ஆடு வாங்கப் போனேன்.

  ReplyDelete
 32. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடடா கதை ரொம்ப சீரியசா போக ஆரம்பிச்சிடுச்சே......? //

  கடைசி வரைக்கும் சீன் வேணுமாக்கும்?

  ReplyDelete
 33. // Heart Rider said...
  அடடா கதை ரொம்ப சீரியசா போக ஆரம்பிச்சிடுச்சே......?// தலைவன் வழியில் நானும்# ரிப்பீட்டு...//

  ரைட்டு!

  ReplyDelete
 34. மதன்-ஜெனிபர் தொடர்புகள் பற்றி மதன் தந்தைக்கு ஏற்கனவே தெரியுமில்லையா? இப்படிப்பட்ட மகனை வைத்துக் கொண்டு ஜமீலாவைக் கேள்வி கேட்கும் தார்மீக உரிமை தனக்குள்ளதா என்று மதன் தந்தை யோசிக்கவில்லையா?

  ReplyDelete
 35. ஆகா கதை சூடுபிடிக்குது தொடரட்டும்..

  ReplyDelete
 36. நல்ல அருமையான தொடர் நண்பா..இதுதான் முதல்முறை படித்தேன்..
  இனி தொடர்ந்து..

  ரம்ஜான் வாழ்த்துகள்..

  ReplyDelete
 37. செங்கோவி said...

  // Yoga.s.FR said...
  இன்னிக்கும் அதே கமண்டு தான்.கத நல்லாப் போகுது! //

  ரொம்ப நாளாவே அது அப்படித்தானே போகுது பாஸ்!§§§§நான் சொன்னது கத "நல்லா" போகுதுன்னு!

  ReplyDelete
 38. ஏனுங்க ஒங்க பேரையும் சொருகியிருக்கிறீங்க?வூட்டுல தெரியுங்களா?

  ReplyDelete
 39. செங்கோவி said...

  // ரெவெரி said...
  செங்கோவி கறிக்கடையை தொறந்து வச்சுட்டு மங்காத்தா ஆட போய்ட்டார் போல...//

  ஆமா..ஃப்ரெஷ் ஆடு வாங்கப் போனேன்.§§§§அந்த பிஸ்னஸ் வேற நடக்குதா?

  ReplyDelete
 40. இந்தக் கதயில எதிர்பாராத "திருப்பங்கள்" எல்லாம் வருது!^(பஸ் ரூட்ட சொல்லல!)

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.