Thursday, August 11, 2011

அவமானப்பட்ட அஞ்சலியும் கணித மேதையும் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

டிங்கிடி டிங்கி டிங்கி டிங்கி டிங்கிடி
டிங்கிடி டிங்கி டிங்கி டிங்கி டிங்கிடி

ஹைய்யய்யோ அய்யோ அய்யோ
அய்யோ அய்யய்யோ
ஹைய்யய்யோ அய்யோ அய்யோ
அய்யோ அய்யய்யோ
கை..கை..கை..வைக்கிறா..வைக்கிறா..

பதிவர் சந்தோசம் :


போன வாரமே சொல்ல நினைச்சு மறந்திட்டேன்..யூத்ஃபுல் விகடன்-குட் ப்ளாக்ஸ்ல என்னோட டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!

இதுல ரெண்டு சந்தோசம்..ஒன்னு நம்மளையும் யூத்துன்னு சொல்லிட்டாங்க..ரெண்டாவது குட் ப்ளாக்(அதாவது நல்ல...நல்ல ப்ளாக்காம்)னு சொல்லிட்டாங்க..ஹா..ஹா..அவங்க நானா யோசிச்சேன் படிக்கறதேயில்லை போல!


கணித மேதை செங்கோவி:

கொஞ்சநாள் முன்ன ஒரு பதிவரை சாட்ல பிடிச்சேன். பேசும்போது என்னைப்பத்திக் கேட்டாரு. ‘1 குழந்தை - ஒரு வயசு..எனக்கு 33 வயசுன்னு’ சொன்னேன். அதுக்கு அவரு ‘எனக்கும் ஒரு குழந்தை-6 வயசு..எனக்கு 34 வயசு’ன்னாரு. அதுக்கு நான் கேட்டேன் ‘ஒரு வயசுப்பிள்ளைக்கு அப்பாவான என் வயசு 33ன்னா, 6 வயசுப்பிள்ளைக்கு அப்பாவான உங்க வயசு 33+5=38 தானே’ன்னு! மனுசன் டபக்குன்னு ஆஃப்லைனுக்குப் போய்ட்டாரு. அப்புறம் இன்னைக்கு வரைக்கும் அவரை நான் ஆன்லைன்ல பார்க்கலை...
இப்போ இன்னொரு பதிவரை சாட்ல பிடிச்சேன். அந்தப் பதிவரு சாஃப்ட்..நல்லவரு..ஆனா இவரு கோவக்காரரு. தெரியும்..ஆனாலும் நம்ம வாய் சும்மா இருந்தாத் தானே..இங்கயும் அதே கதை நடந்துச்சு..’1 குழந்தை - எனக்கு 33 வயசு’ன்னேன். பதிலுக்கு அவரும் ‘2 குழந்தை - எனக்கு 35 வயசு’ன்னாரு. அப்போ தான் சனி என் நாக்குல ஏறி ‘ஒரு குழந்தைக்கு அப்பாவான எனக்கு 33 வயசுன்னா, ரெண்டு குழந்தைக்கு அப்பாவான உங்களுக்கு 66 வயசு தானே’ன்னு கேட்டுப்புட்டேன். அம்புட்டுதேன், மனுசன் செம கடுப்பாயிட்டாரு.’மவனே நீ மட்டும் என் கைல கிடைச்சே..உன் டேஷை நசுக்கிடுவேன்’ன்னுட்டாரு..இப்போ நான் பயந்துபோய் ஆஃப் லைனுக்கு வந்துட்டேன்..


அடேங்கப்பா..நம்மளையே இந்த சமூகம் இப்படி கொடூரமா ட்ரீட் பண்ணுதுன்னா, கணிதமேதை ராமானுஜம் இந்தச் சமூகத்துகிட்ட என்ன பாடுபட்டிருப்பாரு..........பாவம்! (பதிவர்களின் இமேஜ் கருதி, அவர்களின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது)

ஃப்ளாஷ் பேக் :

அப்போ நான் சிங்கப்பூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருந்தேன். கூட நிறைய சைனீஸ் பொண்ணுங்க வேலை பார்த்தாங்க..சைனீஸ் யாருக்குமே ’ட’வும் ’ரா’வும் வராது. டிராயிங்-கையே தியாயிங்-னு சொல்வாங்க...அவங்க முன்னோர் என்ன பாவம் பண்ணாங்களோ, நாக்கு வழவழா கொழகொழான்னு ஆயிடுச்சு..சரி, நமக்கெதுக்கு அது..விடுங்க..

அங்க மதியம் சாப்பாடு கம்பெனி கேண்டீன்ல தான். பஃபே சிஸ்டம் மாதிரி..ஒரு தட்டை எடுத்து பிடிச்சதை எடுத்துட்டு, கடைசியா அங்க ஒரு சைனீஸ் பொண்ணு கிட்டப் போய் நிக்கணும். அந்தப் பொண்ணு குட்டைங்கிறதாலயோ என்னவோ ஒசரமான ஸ்டூல்ல அது டேபிளுக்கு அந்தாண்டை நிக்கும். நாம இந்தாண்டை நின்னுக்கிட்டு டேபிள் மேல தட்டை வைக்கணும். அது தட்டுல உள்ள ஐயிட்டங்களைப் பார்த்துட்டு எவ்வளவு ஆச்சுன்னு சொல்லும். முத நாளு ஃப்ரெண்ட்ஸ் இதயெல்லாம் சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.

நானும் நாலு லெக் பீஸ், ரெண்டு ஃபிஷ்,ரைஸ்னு எடுத்திட்டுப் போய் அவ முன்னாடி வச்சேன். அதுவும் எட்டி என் தட்டைப் பார்த்துட்டு ‘த்தூ’ன்னு துப்பிடுச்சு. நமக்கு கடுப்பாயிடுச்சு. அது என் மூஞ்சியைப் பார்த்தும் பயப்படாம மறுபடியும் ‘த்தூ’ன்னுச்சு. என்னடா இதுன்னு நான் தொடர்ந்து முழிக்க அது ‘த்தூ தாலர்’ன்னுச்சு..அப்புறம்தான் சண்டாளி 2 டாலரைத் தான் அப்படிச் சொல்றான்னு புரிஞ்சது. அப்புறம் அந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவே மனசு வரலை..அடுத்து ஒரு வாரம் இப்படியே போச்சு..

‘பல சிக்கலான பிரச்சினக்கு. தீர்வும் சிக்கலானதாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை..அது எளிமையான ஒன்றாகவும் இருக்கலாம்’னு யாரு...சரி, யாரோ சிக்கலானந்தா சொன்னது ஞாபகம் வந்துச்சு..அதனால நல்லா யோசிச்சு த்தூப் பிரச்சினைக்கு சிம்பிள் தீர்வு கண்டுபிடிச்சேன்..என்னன்னா 2 டாலர் வந்தாத்தானே துப்புவா..அயிட்டத்தை மாத்துவோம்னு அடுத்த நாள் சிக்கன் பிரியாணிக்கு மாறிட்டேன். எடுத்துட்டுப் போய் அந்த சைனீஸ்காரி டேபிள்மேல வச்சுட்டு’ கர்வமா’ ஒரு லுக் விட்டேன். அவ வழக்கம்போல தட்டுல என்ன இருக்குன்னு பார்த்துட்டுச் சொன்னா ”த்தூ...தொந்தி’ன்னு!

சிக்கன் பிரியாணி 2.20 டாலராம்..அட..உன் மொட்டை மூக்குல மொளகாப்பொடியைக் கொட்ட..இவகிட்ட காசையும் கொடுத்திட்டு வசவும்ல வாங்க வேண்டியிருக்கு’ன்னு நொந்து போயிட்டேன். இதைத்தான் அன்னைக்கே கவுதமி ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா’ன்னுச்சு..கேட்டனா...அந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் அந்த விஷயத்துல கௌதமிகூட கருத்தொருமித்தேன்..(கருத்தொருமித்தேன்னா அப்படீன்னா சேம் திங்கிங்/தாட்-னு அர்த்தம்யா...வர வர தமிழ்ல பேசவே பயம்ம்ம்மா இருக்கு.)

ஃப்ளாஷ் ஃப்ரண்ட்:

நம்ம காலேஜ் ஃப்ரண்டு வினையூக்கி திரும்ப சாட்ல வந்தாரு..’நண்பா..நீங்க ஏன் பிரியாராமன் மேட்டரை எழுத மாட்டேங்கிறீங்க..இமேஜ் மெயிண்டய்ன் பண்றீங்களான்னு கேட்டுட்டாரு..எனக்கு கோவம் வந்திடுச்சு..நமக்கு இமேஜ்-ன்னாலே பிடிக்காதே..ஐ லைக் ஒன்லி வீடியோஸ் தானே..அதனால அந்த கேவலமான ஃப்ளாஷ்பேக்கை இங்க சொல்றேன்:

நாங்க காலேஜ் படிக்கும்போது புதுமைப்பித்தன்னு ஒரு பார்த்திபன் படம் வந்துச்சு. ஹாஸ்டல் டிவில டெய்லி நைட் இந்தப் பாட்டுப் போடுவாங்க..நாங்க உட்கார்ந்து எண்ணுவோம்..என்னதைன்னா..ஹி..ஹி..பிரியாராமன் மொத்தம் எத்தனை தடவை மாராப்பை விலக்குச்சுன்னு எண்ணுவோம். சண்டிவில பாதிப் பாட்டுதான் போடுவாங்க..அப்புறம் ஒரு பொண்ணு தலையை ஆட்டிக்கிட்டே ‘ஓகே வியூவர்ஸ்(!)..நாளைக்குப் பார்ப்போம்’னு சொல்லிட்டுப் போயிடும். திரும்ப அடுத்தநாள் முதல்ல இருந்து எண்ணுவோம்..இப்படியே போராடி ஒரு மாசம் கழிச்சுக் கண்டுபிடிச்சோம்..அது 27 தடவை விலக்குச்சுன்னு!27 தடவைன்னு ஒரு ஞாபகத்துல சொல்றேன்..இந்த வீடியோவைப் பார்த்து இப்போ எண்ணலை..ஏன்னா அதுல ரெண்டு பிரச்சினை..முதப்பிரச்சினை ஏர்ஹோஸ்டஸ்க்கு உம்மா கொடுத்த என் பையனும் என்கூட உட்கார்ந்து எண்ணிடுவானோன்னு பயமா இருந்துச்சு..ரெண்டாவது தங்கமணி நான் எண்ணுறதைப் பார்த்திடுச்சுன்னா, என் எலும்பை எண்ணிடும்..அதான்..ஒரு கணிதமேதையால எண்ணக்கூட முடியலை பாருங்க...என்ன ஒலகம் சார் இது!

கரு..கரு..கருங்காலி அஞ்சலி:

கருங்காலின்னு ஒரு கேவலமான படம் வந்திருக்கு..அதுல நம்ம அஞ்சலி கவர்ச்சி காட்டியிருக்குன்னு ஒரே பரபரப்பு..சரின்னு படத்தைப் பார்த்தேன்..கோவை சரளா தவிர யார் காட்டுனாலும் பார்க்கிற ஆளு தான் நாம..ஆனாலும் ஏனோ அஞ்சலி கவர்ச்சியா நடிக்கிறது பிடிக்கலைண்ணே..அந்த முகத்துக்கும் கவர்ச்சிக்கும் ஒட்டவேயில்லை..ராமராஜன் கைல மெஷின் கன்னைக் கொடுத்த மாதிரி கண்றாவியா இருந்துச்சு...

எதுக்கு அந்தப் புள்ளைக்கு இந்த வேண்டாத வேலை..நல்ல நடிகை..நடிக்க மட்டும் செய்யலாம்...நேத்து நிரூ பதிவுல ஒரு பதிவர் ’படத்துல பெருசா ஒன்னும் இல்லை’ன்னு கமெண்ட் போடுதாரு..இந்த அவமானம் அஞ்சலிக்குத் தேவையா?

சமச்சீர் வெற்றி:
சுப்ரீம் கோர்ட் ஒரு வழியா சம்ச்சீர்க்கல்வியை நடைமுறைப் படுத்தச் சொல்லி இறுதித் தீர்ப்பு கொடுத்திடுச்சு..கடைசீல ஏதாவது கோக்குமாக்கு பண்ணிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்..தீர்ப்பை குற்றவாளியோட மனசாட்சிக்கே விடுற ஆட்களாச்சே நம்ம ஜட்ஜுக..பரவாயில்லை..ஒருவழியா நியாயம் ஜெயிச்சது..
சரிய்யா..தப்பித்தவறி உள்ள வந்திட்ட நல்ல மனுசங்க மேல இருக்கிற பாராவை கமெண்ட் போட யூஸ் பண்ணிக்கோங்கய்யா...

என்ன கொடுமை சார் இது :
இவரை நாம இங்க தேடிக்கிட்டு இருக்கோம்..ஃபாரின்ல என்ன பண்ணுதாரு..இண்டர்வியூ எதுவும் அட்டெண்ட் பண்ணுதாரோ...

டிஸ்கி:
இந்தப் பதிவு 18+..சாரிங்க..முதல்லயே சொல்ல மறந்துட்டேன்..என்னது படிச்சிட்டீங்களா..அய்யய்யோ, அப்போ ஒலகம் அழிஞ்சிடுமா?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

160 comments:

 1. சும்மா இல்லீங்க பனிரெண்டு மணியிலிருந்து காத்திட்டு இருக்கேன்

  ReplyDelete
 2. மில்லி செகன்ட் மிஸிங்

  ReplyDelete
 3. இன்னிக்கு நானா பிரகாஷா அப்பிடின்னு

  ReplyDelete
 4. அடப்பாவிகளா..பேஜ் ஓப்பன் ஆக முன்னாடியே 6 கமெண்ட்டா?

  ReplyDelete
 5. ஹைய்யய்யோ அய்யோ அய்யோ
  அய்யோ அய்யய்யோ>>>

  என்னா பாட்டு இது?

  ReplyDelete
 6. அப்போ நான் சிங்கப்பூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருந்தேன்.


  ஏங்க இங்க எங்கயும் குப்பை கொட்ட இடம் இல்லீங்களா

  ReplyDelete
 7. //
  தமிழ்வாசி - Prakash said...
  ஹைய்யய்யோ அய்யோ அய்யோ
  அய்யோ அய்யய்யோ>>>

  என்னா பாட்டு இது?//

  எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த நல்ல பாட்டைத் தேடி லிரிக்ஸ் எடுத்தேன்..இப்படிக் கேட்கீங்க.

  ReplyDelete
 8. // M.R said...
  அப்போ நான் சிங்கப்பூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருந்தேன்.

  ஏங்க இங்க எங்கயும் குப்பை கொட்ட இடம் இல்லீங்களா //

  ப்லாக்குன்னு ஒரு இடம் இருக்குறது அப்போ எனக்குத் தெரியாது பாஸ்..

  ReplyDelete
 9. மனுசன் டபக்குன்னு ஆஃப்லைனுக்குப் போய்ட்டாரு. அப்புறம் இன்னைக்கு வரைக்கும் அவரை நான் ஆன்லைன்ல பார்க்கலை...>>>

  பாவம் அவரு.... மயங்கினவரு எந்திரிச்சாரா?

  ReplyDelete
 10. அது 27 தடவை விலக்குச்சுன்னு!

  நல்ல ஆராய்ச்சி !!!!!!!!!!!!!!

  ReplyDelete
 11. ராமராஜன் கைல மெஷின் கன்னைக் கொடுத்த மாதிரி கண்றாவியா இருந்துச்சு...
  நல்ல உவமை

  ReplyDelete
 12. // M.R said...
  அது 27 தடவை விலக்குச்சுன்னு!

  நல்ல ஆராய்ச்சி !!!!!!!!!!!//

  அது 27 தடவை தானா? யாராவது செக் பண்ணி என் ஞாபக சக்தி எப்படீன்னு சொல்லுங்கப்பா..

  ReplyDelete
 13. ஆஃபீஸ்ல நேத்து ஆணி அதிகம்..அதனால தான் பதிவும் லேட்டு..பகல்ல ஆன்லைன்ல வர முடியலை..யார் பதிவையும் படிக்க முடியலை..நேத்து என்னை யாராவது தேடியிருந்தா...நன்றி/சாரி.

  ReplyDelete
 14. அனுஷ்கா..  அறுந்துடுமா ??????????????

  ReplyDelete
 15. //M.R said...
  அனுஷ்கா..

  அறுந்துடுமா ????//

  நல்ல ஆராய்ச்சி..இதை நாம யோகாவை நடுவுல வச்சு விவாதப் பொருள் ஆக்கலாம்.

  ReplyDelete
 16. /////// ‘ஒரு வயசுப்பிள்ளைக்கு அப்பாவான என் வயசு 33ன்னா, 6 வயசுப்பிள்ளைக்கு அப்பாவான உங்க வயசு 33+5=38 தானே’ன்னு! மனுசன் டபக்குன்னு ஆஃப்லைனுக்குப் போய்ட்டாரு. /////

  இது யாருன்னு எனக்கு தெரியுமே?

  ReplyDelete
 17. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்

  ReplyDelete
 18. //////அப்போ தான் சனி என் நாக்குல ஏறி ‘ஒரு குழந்தைக்கு அப்பாவான எனக்கு 33 வயசுன்னா, ரெண்டு குழந்தைக்கு அப்பாவான உங்களுக்கு 66 வயசு தானே’ன்னு கேட்டுப்புட்டேன். அம்புட்டுதேன், மனுசன் செம கடுப்பாயிட்டாரு.’மவனே நீ மட்டும் என் கைல கிடைச்சே..உன் டேஷை நசுக்கிடுவேன்’ன்னுட்டாரு..இப்போ நான் பயந்துபோய் ஆஃப் லைனுக்கு வந்துட்டேன்..///////

  இது யாருன்னும் எனக்கு தெரியுமே?

  ReplyDelete
 19. பதிவர் சந்தோசம் :


  போன வாரமே சொல்ல நினைச்சு மறந்திட்டேன்..யூத்ஃபுல் விகடன்-குட் ப்ளாக்ஸ்ல என்னோட டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!

  இதுல ரெண்டு சந்தோசம்..ஒன்னு நம்மளையும் யூத்துன்னு சொல்லிட்டாங்க..ரெண்டாவது குட் ப்ளாக்(அதாவது நல்ல...நல்ல ப்ளாக்காம்)னு சொல்லிட்டாங்க..ஹா..ஹா..அவங்க நானா யோசிச்சேன் படிக்கறதேயில்லை போல!

  ReplyDelete
 20. ////(பதிவர்களின் இமேஜ் கருதி, அவர்களின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது)
  //////

  செங்கோவி பெரிய போட்டோகிராபரா இருப்பாரு போல....!

  ReplyDelete
 21. உன் டேஷை நசுக்கிடுவேன்’ன்னுட்டாரு..இப்போ நான் பயந்துபோய் ஆஃப் லைனுக்கு வந்துட்டேன்..>>>

  வச்சான்ல ஆப்பு...

  வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!

  ReplyDelete
 22. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// ‘ஒரு வயசுப்பிள்ளைக்கு அப்பாவான என் வயசு 33ன்னா, 6 வயசுப்பிள்ளைக்கு அப்பாவான உங்க வயசு 33+5=38 தானே’ன்னு! மனுசன் டபக்குன்னு ஆஃப்லைனுக்குப் போய்ட்டாரு. /////

  இது யாருன்னு எனக்கு தெரியுமே?//

  பாவம்ணே அவரு..விட்டுடுங்க..

  ReplyDelete
 23. ///.அவங்க முன்னோர் என்ன பாவம் பண்ணாங்களோ, நாக்கு வழவழா கொழகொழான்னு ஆயிடுச்சு..சரி, நமக்கெதுக்கு அது..விடுங்க..///////

  வெளங்கிருச்சு....

  ReplyDelete
 24. //
  மாய உலகம் said...
  கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்//

  அப்படி எடுத்துச் சொல்லுங்க மாயா!

  ReplyDelete
 25. //கோவை சரளா தவிர யார் காட்டுனாலும் பார்க்கிற ஆளு தான் நாம.//

  ஹலோ நாங்க ரொம்ப நல்லவ்ங்கன்னு சொல்றாங்க

  ReplyDelete
 26. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// ‘ஒரு வயசுப்பிள்ளைக்கு அப்பாவான என் வயசு 33ன்னா, 6 வயசுப்பிள்ளைக்கு அப்பாவான உங்க வயசு 33+5=38 தானே’ன்னு! மனுசன் டபக்குன்னு ஆஃப்லைனுக்குப் போய்ட்டாரு. /////

  இது யாருன்னு எனக்கு தெரியுமே?//

  பாவம்ணே அவரு..விட்டுடுங்க..

  ///////

  சரி சரி உங்களுக்காக வர மன்னிச்சி விடுறேன்...!

  ReplyDelete
 27. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////(பதிவர்களின் இமேஜ் கருதி, அவர்களின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது)
  //////

  செங்கோவி பெரிய போட்டோகிராபரா இருப்பாரு போல....!//

  அனுஷ்கா ஃபோட்டோவைப் பார்த்தா தெரியலையா..

  ReplyDelete
 28. ///// தமிழ்வாசி - Prakash said...
  உன் டேஷை நசுக்கிடுவேன்’ன்னுட்டாரு..இப்போ நான் பயந்துபோய் ஆஃப் லைனுக்கு வந்துட்டேன்..>>>

  வச்சான்ல ஆப்பு...
  ////////

  ஆமா டேஷ்னா டேஷ்போர்டுதானே?

  ReplyDelete
 29. பல சிக்கலான பிரச்சினக்கு. தீர்வும் சிக்கலானதாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை..அது எளிமையான ஒன்றாகவும் இருக்கலாம்’னு யாரு...சரி, யாரோ சிக்கலானந்தா சொன்னது ஞாபகம் வந்துச்சு.>>>>

  ஏதோ சொல்ல ட்ரை பண்ணியிருகிங்க...


  வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!

  ReplyDelete
 30. ////// செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////(பதிவர்களின் இமேஜ் கருதி, அவர்களின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது)
  //////

  செங்கோவி பெரிய போட்டோகிராபரா இருப்பாரு போல....!//

  அனுஷ்கா ஃபோட்டோவைப் பார்த்தா தெரியலையா..

  ///////

  நல்லாத்தெரியுதுண்ணே....!

  ReplyDelete
 31. ////அவ வழக்கம்போல தட்டுல என்ன இருக்குன்னு பார்த்துட்டுச் சொன்னா ”த்தூ...தொந்தி’ன்னு!//////

  அப்பவே தொப்பை வெச்சி அதுல துப்பும் வாங்கி இருந்திக்காரே...?

  ReplyDelete
 32. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆமா டேஷ்னா டேஷ்போர்டுதானே? //

  ஆமாண்ணே..அதே தான்..அப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க.

  ReplyDelete
 33. //////அன்னைக்கே கவுதமி ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா’ன்னுச்சு..கேட்டனா...அந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் அந்த விஷயத்துல கௌதமிகூட கருத்தொருமித்தேன்..///////

  ம்ம்.... தலைவரு பெரிய எடமோ?

  ReplyDelete
 34. இப்படியே போராடி ஒரு மாசம் கழிச்சுக் கண்டுபிடிச்சோம்..அது 27 தடவை விலக்குச்சுன்னு!>>>

  நல்லா கணக்கு பண்றாங்கப்பா

  வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!

  ReplyDelete
 35. //////இப்படியே போராடி ஒரு மாசம் கழிச்சுக் கண்டுபிடிச்சோம்..அது 27 தடவை விலக்குச்சுன்னு!
  ///////

  இதுக்கே இம்புட்டு பில்டப்பா? நாங்கள்லாம் அந்தப்புள்ளையோட கெட்ட படமே பாத்தவிங்க....!

  ReplyDelete
 36. //தமிழ்வாசி - Prakash said...
  பல சிக்கலான பிரச்சினக்கு. தீர்வும் சிக்கலானதாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை..அது எளிமையான ஒன்றாகவும் இருக்கலாம்’னு யாரு...சரி, யாரோ சிக்கலானந்தா சொன்னது ஞாபகம் வந்துச்சு.>>>>

  ஏதோ சொல்ல ட்ரை பண்ணியிருகிங்க...//

  நமக்கெதுக்கு அதெல்லாம்..ஸ்டில்லு தேறுதான்னு பாருங்க.

  ReplyDelete
 37. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இதுக்கே இம்புட்டு பில்டப்பா? நாங்கள்லாம் அந்தப்புள்ளையோட கெட்ட படமே பாத்தவிங்க....!//

  அண்ணே..அண்ணே..லின்க் ப்ளீஸ்.

  ReplyDelete
 38. /////கோவை சரளா தவிர யார் காட்டுனாலும் பார்க்கிற ஆளு தான் நாம..////

  ஏண்ணே கோவையக்காவ விட்டுட்டீங்க?

  ReplyDelete
 39. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ம்ம்.... தலைவரு பெரிய எடமோ? //

  ம்ஹூம்..சின்ன இடம் தான்.

  ReplyDelete
 40. /////ஆனாலும் ஏனோ அஞ்சலி கவர்ச்சியா நடிக்கிறது பிடிக்கலைண்ணே..அந்த முகத்துக்கும் கவர்ச்சிக்கும் ஒட்டவேயில்லை..//////

  சொல்றதையும் சொல்லிப்புட்டு போட்டிருக்க ஸ்டில்லப் பாத்தீங்களாய்யா? பிச்சிபுடுவேன் பிச்சி....!

  ReplyDelete
 41. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////கோவை சரளா தவிர யார் காட்டுனாலும் பார்க்கிற ஆளு தான் நாம..////

  ஏண்ணே கோவையக்காவ விட்டுட்டீங்க?//

  அதைப் பார்த்தா ஒரு சிஸ்டர் ஃபீலிங்ணே.

  ReplyDelete
 42. //////நேத்து நிரூ பதிவுல ஒரு பதிவர் ’படத்துல பெருசா ஒன்னும் இல்லை’ன்னு கமெண்ட் போடுதாரு..இந்த அவமானம் அஞ்சலிக்குத் தேவையா?//////

  எப்படி இருந்தாலும் எங்களுக்கு அஞ்சலி சேவை தேவை...!

  ReplyDelete
 43. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சொல்றதையும் சொல்லிப்புட்டு போட்டிருக்க ஸ்டில்லப் பாத்தீங்களாய்யா? பிச்சிபுடுவேன் பிச்சி....!//

  நீங்க ரெண்டு நாளாக் கேட்டீங்களேன்னு போட்டா......

  ReplyDelete
 44. செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இதுக்கே இம்புட்டு பில்டப்பா? நாங்கள்லாம் அந்தப்புள்ளையோட கெட்ட படமே பாத்தவிங்க....!//

  அண்ணே எனக்கும் லிங்க் வேணும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 45. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  எப்படி இருந்தாலும் எங்களுக்கு அஞ்சலி சேவை தேவை...!//

  பரவாயில்லைண்ணே..உங்களுக்காவது பெரிய மனசு இருக்கே.

  ReplyDelete
 46. சரிய்யா..தப்பித்தவறி உள்ள வந்திட்ட நல்ல மனுசங்க மேல இருக்கிற பாராவை கமெண்ட் போட யூஸ் பண்ணிக்கோங்கய்யா...////"பாரா"ன்னா என்ன?உத்து பாக்க சொல்லுறீங்களா?இல்ல "பாரா"மப் போக சொல்லுறீங்களா?

  ReplyDelete
 47. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////கோவை சரளா தவிர யார் காட்டுனாலும் பார்க்கிற ஆளு தான் நாம..////

  ஏண்ணே கோவையக்காவ விட்டுட்டீங்க?//

  அதைப் பார்த்தா ஒரு சிஸ்டர் ஃபீலிங்ணே.

  ///////

  ம்ம்.... வரும் வரும், அது ஏன்யா அனுஷ்கா மாதிரி டிக்கட்டுகள பாத்தா அந்த ஃபீலிங் வரமாட்டேங்கிது? டெல் மி தி ரீசன்.....

  ReplyDelete
 48. இந்தப் பதிவு 18+..சாரிங்க..முதல்லயே சொல்ல மறந்துட்டேன்..என்னது படிச்சிட்டீங்களா..அய்யய்யோ, அப்போ ஒலகம் அழிஞ்சிடுமா?>>>>>

  எப்படிஎல்லாம் டிஸ்கி யூஸ் ஆகுது... வாய் இருந்தா அழுதிரும்

  ReplyDelete
 49. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ம்ம்.... வரும் வரும், அது ஏன்யா அனுஷ்கா மாதிரி டிக்கட்டுகள பாத்தா அந்த ஃபீலிங் வரமாட்டேங்கிது? டெல் மி தி ரீசன்....//

  அதான் நீங்களே சொல்லீட்டீங்களே டிக்கெட்டுன்னு!

  ReplyDelete
 50. ம்ம்.... வரும் வரும், அது ஏன்யா அனுஷ்கா மாதிரி டிக்கட்டுகள பாத்தா அந்த ஃபீலிங் வரமாட்டேங்கிது? டெல் மி தி ரீசன்....>>>>

  பன்னி அண்ணே.. கேட்டிங்க பாருங்க ஒரு கேள்வி? செங்கோவி பதில் சொல்ல மாட்டாரு

  ReplyDelete
 51. /////தமிழ்வாசி - Prakash said...
  செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இதுக்கே இம்புட்டு பில்டப்பா? நாங்கள்லாம் அந்தப்புள்ளையோட கெட்ட படமே பாத்தவிங்க....!//

  அண்ணே எனக்கும் லிங்க் வேணும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ////////

  கடைசில நம்மளை கலைச்சேவை பண்ண வெச்சுட்டானுகளே? யோவ் அதுக்கெல்லாம் லிங்கு கெடையாது, நான் பாத்தது அப்போ வீடியோ கேசட்ல... இப்பொ எங்கேயாவது இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க....!

  ReplyDelete
 52. நேத்தைய பதிவுக்கு கமெண்ட் போட்டப்பவே கேட்டேன்,பதிவு ரெடியான்னு!ரெண்டே நிமிஷத்துல வந்து பாத்தா????????????அம்பதாவதா தான் வர முடிஞ்சுது!

  ReplyDelete
 53. //Yoga.s.FR said...
  சரிய்யா..தப்பித்தவறி உள்ள வந்திட்ட நல்ல மனுசங்க மேல இருக்கிற பாராவை கமெண்ட் போட யூஸ் பண்ணிக்கோங்கய்யா...////"பாரா"ன்னா என்ன?உத்து பாக்க சொல்லுறீங்களா?இல்ல "பாரா"மப் போக சொல்லுறீங்களா?//

  வந்திட்டீங்களா..அதையும் தாண்டி மேல பாக்குறவங்க தான் நல்ல மனுசங்கன்னு அர்த்தம் அதுக்கு...குறியீடு..குறியீடு!

  ReplyDelete
 54. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ம்ம்.... வரும் வரும், அது ஏன்யா அனுஷ்கா மாதிரி டிக்கட்டுகள பாத்தா அந்த ஃபீலிங் வரமாட்டேங்கிது? டெல் மி தி ரீசன்....//

  அதான் நீங்களே சொல்லீட்டீங்களே டிக்கெட்டுன்னு!
  /////////

  பார்ரா............?

  ReplyDelete
 55. //Yoga.s.FR said...
  நேத்தைய பதிவுக்கு கமெண்ட் போட்டப்பவே கேட்டேன்,பதிவு ரெடியான்னு!ரெண்டே நிமிஷத்துல வந்து பாத்தா????????????அம்பதாவதா தான் வர முடிஞ்சுது!//

  இப்போ தான் வந்து எழுதுனேன்..அதான் லேட்டு.

  ReplyDelete
 56. போன வாரமே சொல்ல நினைச்சு மறந்திட்டேன்..யூத்ஃபுல் விகடன்-குட் ப்ளாக்ஸ்ல என்னோட டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!


  where is the link

  ReplyDelete
 57. //தமிழ்வாசி - Prakash said...
  இந்தப் பதிவு 18+..சாரிங்க..முதல்லயே சொல்ல மறந்துட்டேன்..என்னது படிச்சிட்டீங்களா..அய்யய்யோ, அப்போ ஒலகம் அழிஞ்சிடுமா?>>>>>

  எப்படிஎல்லாம் டிஸ்கி யூஸ் ஆகுது... வாய் இருந்தா அழுதிரும் //

  டிஸ்கி-2: டிஸ்கியை அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 58. ////// செங்கோவி said...
  பதிவர் சந்தோசம் :


  போன வாரமே சொல்ல நினைச்சு மறந்திட்டேன்..யூத்ஃபுல் விகடன்-குட் ப்ளாக்ஸ்ல என்னோட டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!

  இதுல ரெண்டு சந்தோசம்..ஒன்னு நம்மளையும் யூத்துன்னு சொல்லிட்டாங்க..ரெண்டாவது குட் ப்ளாக்(அதாவது நல்ல...நல்ல ப்ளாக்காம்)னு சொல்லிட்டாங்க..ஹா..ஹா..அவங்க நானா யோசிச்சேன் படிக்கறதேயில்லை போல!
  //////

  இதையும் பதிவுல இணைச்சிட வேண்டியதுதானே?

  ReplyDelete
 59. //
  M.R said...

  where is the link //

  ’இங்கே’யை க்ளிக் பண்ணா வரும்..ஆனா அங்கேயும் பெருசா ஒன்னும் இல்லை..வெறும் லின்க் தான்!!

  ReplyDelete
 60. ////இவரை நாம இங்க தேடிக்கிட்டு இருக்கோம்..ஃபாரின்ல என்ன பண்ணுதாரு..இண்டர்வியூ எதுவும் அட்டெண்ட் பண்ணுதாரோ...
  //////

  அங்க அவரு கட்சிக்கு ஆளு எடுக்குறாருண்ணே...

  ReplyDelete
 61. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// செங்கோவி said...
  பதிவர் சந்தோசம் :

  இதையும் பதிவுல இணைச்சிட வேண்டியதுதானே? //

  இணைச்சுட்டேன்..லேட்டா இணைச்சேன்..அதான் கமெண்ட் போடற மக்கள் பார்க்கட்டும்னு இங்க போட்டேன்.

  ReplyDelete
 62. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அங்க அவரு கட்சிக்கு ஆளு எடுக்குறாருண்ணே..//

  அப்போ ஒபாமாவுக்கு ஆப்பு தான்னு சொல்லுங்க.

  ReplyDelete
 63. 27 தடவைன்னு ஒரு ஞாபகத்துல சொல்றேன்..இந்த வீடியோவைப் பார்த்து இப்போ எண்ணலை..////பொய் தான?தங்கமணி பையனை கூட்டிகிட்டு ஊருக்கு போனதா சொன்னாங்களே?

  ReplyDelete
 64. //////டிஸ்கி:
  இந்தப் பதிவு 18+..சாரிங்க..முதல்லயே சொல்ல மறந்துட்டேன்..என்னது படிச்சிட்டீங்களா..அய்யய்யோ, அப்போ ஒலகம் அழிஞ்சிடுமா?///////

  அடடா..... 18+ போட்டது போட்டீங்க, இன்னும் ரெண்டு அஞ்சலி ஸ்டில்லு போட்டிருக்கலாம்ல, தமிழ்வாசியும் சந்தோசமா போயிருப்பாரு.....!

  ReplyDelete
 65. செங்கோவி said...
  //
  M.R said...

  where is the link //

  ’இங்கே’யை க்ளிக் பண்ணா வரும்..ஆனா அங்கேயும் பெருசா ஒன்னும் இல்லை..வெறும் லின்க் தான்!!>>>>>


  இந்த பெரிசா ஒண்ணும் இல்லை டயலாக் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

  ReplyDelete
 66. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடடா..... 18+ போட்டது போட்டீங்க, இன்னும் ரெண்டு அஞ்சலி ஸ்டில்லு போட்டிருக்கலாம்ல, தமிழ்வாசியும் சந்தோசமா போயிருப்பாரு.....!>>>

  அந்த ஸ்டில் உபயம் நானே...

  ReplyDelete
 67. ///// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அங்க அவரு கட்சிக்கு ஆளு எடுக்குறாருண்ணே..//

  அப்போ ஒபாமாவுக்கு ஆப்பு தான்னு சொல்லுங்க.
  ///////

  அவரு அங்க போனதும் அமெரிக்க பொருளாதாரமே ஆடிப் போயிருக்குண்ணே... ஒபாமா மட்டுமில்ல, ஐநா சபையே தப்புறது கஷ்டம்னு பேசிக்கிறாங்க....!

  ReplyDelete
 68. //Yoga.s.FR said...
  27 தடவைன்னு ஒரு ஞாபகத்துல சொல்றேன்..இந்த வீடியோவைப் பார்த்து இப்போ எண்ணலை..////பொய் தான?தங்கமணி பையனை கூட்டிகிட்டு ஊருக்கு போனதா சொன்னாங்களே?//

  இல்லை பாஸ்..பார்த்திடலாம்..எப்படி எண்ணுறது?..விரலை மடக்குனா வெட்டிற மாட்டாங்க!

  ReplyDelete
 69. செங்கோவி said..அதையும் தாண்டி "மேல பாக்குறவங்க" தான் நல்ல மனுசங்கன்னு அர்த்தம் அதுக்கு...குறியீடு..குறியீடு!////அதையும் தாண்டி புனிதமானது!அப்புடித் தானுங்களே?(நன்றி:கமல்:குணா)

  ReplyDelete
 70. //
  தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடடா..... 18+ போட்டது போட்டீங்க, இன்னும் ரெண்டு அஞ்சலி ஸ்டில்லு போட்டிருக்கலாம்ல, தமிழ்வாசியும் சந்தோசமா போயிருப்பாரு.....!>>>

  அந்த ஸ்டில் உபயம் நானே.//

  தமிழ்வாசி இந்த வேலையை எப்போ ஆரம்பிச்சாரு?

  யோவ், கே.ஆர்.விஜயா ஸ்டில்லு ஒன்னு..வெரி ஹாட் பாத்..தேவைப்படுது..கிடைக்குமா?

  ReplyDelete
 71. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அவரு அங்க போனதும் அமெரிக்க பொருளாதாரமே ஆடிப் போயிருக்குண்ணே... ஒபாமா மட்டுமில்ல, ஐநா சபையே தப்புறது கஷ்டம்னு பேசிக்கிறாங்க....!//

  ஐ.நா சபையை விடுங்க..ஏஞ்சலினா ஜூலிக்கு ஒன்னும் ஆகாதுல்லா?

  ReplyDelete
 72. ///// செங்கோவி said...
  //
  தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடடா..... 18+ போட்டது போட்டீங்க, இன்னும் ரெண்டு அஞ்சலி ஸ்டில்லு போட்டிருக்கலாம்ல, தமிழ்வாசியும் சந்தோசமா போயிருப்பாரு.....!>>>

  அந்த ஸ்டில் உபயம் நானே.//

  தமிழ்வாசி இந்த வேலையை எப்போ ஆரம்பிச்சாரு?

  யோவ், கே.ஆர்.விஜயா ஸ்டில்லு ஒன்னு..வெரி ஹாட் பாத்..தேவைப்படுது..கிடைக்குமா?

  ///////

  தமிழ்வாசி, ஃப்ரீ சர்வீஸ்தானே? அப்படியே எனக்கொண்ணு...!

  ReplyDelete
 73. தமிழ்வாசி இந்த வேலையை எப்போ ஆரம்பிச்சாரு?

  யோவ், கே.ஆர்.விஜயா ஸ்டில்லு ஒன்னு..வெரி ஹாட் பாத்..தேவைப்படுது..கிடைக்கும>>>

  கூகிளில் தேடுற மாதிரி தேடனும்...

  ReplyDelete
 74. தமிழ்வாசி, ஃப்ரீ சர்வீஸ்தானே? அப்படியே எனக்கொண்ணு.>>>

  பன்னி கூகிள் இருக்க கவலை ஏன்

  ReplyDelete
 75. //
  Yoga.s.FR said...
  செங்கோவி said..அதையும் தாண்டி "மேல பாக்குறவங்க" தான் நல்ல மனுசங்கன்னு அர்த்தம் அதுக்கு...குறியீடு..குறியீடு!////அதையும் தாண்டி புனிதமானது!அப்புடித் தானுங்களே?//

  அய்யய்யோ..அந்த கொட்டேசன் மார்க் நான் போடலை..

  ReplyDelete
 76. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அவரு அங்க போனதும் அமெரிக்க பொருளாதாரமே ஆடிப் போயிருக்குண்ணே... ஒபாமா மட்டுமில்ல, ஐநா சபையே தப்புறது கஷ்டம்னு பேசிக்கிறாங்க....!//

  ஐ.நா சபையை விடுங்க..ஏஞ்சலினா ஜூலிக்கு ஒன்னும் ஆகாதுல்லா?
  //////

  ஏஞ்சலினா ஜூலிய பாத்துட்டு இவருக்கு ஒண்ணும் ஆகாம இருந்தா சரி...!

  ReplyDelete
 77. தல டிங்கி டிங்கி பாட்டு எதுக்கு தல

  ReplyDelete
 78. ////////தமிழ்வாசி - Prakash said...
  தமிழ்வாசி இந்த வேலையை எப்போ ஆரம்பிச்சாரு?

  யோவ், கே.ஆர்.விஜயா ஸ்டில்லு ஒன்னு..வெரி ஹாட் பாத்..தேவைப்படுது..கிடைக்கும>>>

  கூகிளில் தேடுற மாதிரி தேடனும்...

  //////

  ஆஹா அண்ணன் என்னமோ டெக்கினிக்கி வெச்சிருக்காருய்யா... இதான் மேட்டரா....?

  ReplyDelete
 79. //தமிழ்வாசி - Prakash said...
  தமிழ்வாசி இந்த வேலையை எப்போ ஆரம்பிச்சாரு?

  யோவ், கே.ஆர்.விஜயா ஸ்டில்லு ஒன்னு..வெரி ஹாட் பாத்..தேவைப்படுது..கிடைக்கும>>>

  கூகிளில் தேடுற மாதிரி தேடனும்.//

  கூகுள்ல கே.ஆர்.விஜயா ஸ்டில் தேடுவது எப்படி-ன்னு ஒரு பதிவு போடுங்க.

  ReplyDelete
 80. //////தமிழ்வாசி - Prakash said...
  தமிழ்வாசி, ஃப்ரீ சர்வீஸ்தானே? அப்படியே எனக்கொண்ணு.>>>

  பன்னி கூகிள் இருக்க கவலை ஏன்

  /////

  கூகிளுக்கே கூகிள் தமிழ்வாசி இருக்க கவலை ஏன்?

  ReplyDelete
 81. //
  மாய உலகம் said...
  தல டிங்கி டிங்கி பாட்டு எதுக்கு தல//

  அதுக்கு ஒரு பயங்கரமான அர்த்தம் இருக்கு..ராத்திரில சொல்லக்கூடாது..பயந்திடுவீங்க.

  ReplyDelete
 82. கூகிளில் தேடுற மாதிரி தேடனும்...

  //////

  ஆஹா அண்ணன் என்னமோ டெக்கினிக்கி வெச்சிருக்காருய்யா... இதான் மேட்டரா....>>>

  தேடுதலுக்கு குறிச்சொற்கள் ரொம்ப முக்கியம்.

  ReplyDelete
 83. செங்கோவி said.....யோவ், கே.ஆர்.விஜயா ஸ்டில்லு ஒன்னு..வெரி ஹாட் பாத்..தேவைப்படுது..கிடைக்கும>>>////"அந்தமான் காதலி"அப்பிடீன்னு ஒரு படம்!ஆத்தாவோட(கே.ஆர்.விஜயா) வாழ்க்கைக்கே வேட்டு வச்ச படம்,பாருங்க!

  ReplyDelete
 84. //Yoga.s.FR said...
  "அந்தமான் காதலி"அப்பிடீன்னு ஒரு படம்!ஆத்தாவோட(கே.ஆர்.விஜயா) வாழ்க்கைக்கே வேட்டு வச்ச படம்,பாருங்க!//

  ஆளுங்க தேடும்போது, அந்த குழிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே...அந்தப் படமா?..அது என்ன வேட்டு மேட்டர் பாஸ்?

  ReplyDelete
 85. //போன வாரமே சொல்ல நினைச்சு மறந்திட்டேன்..யூத்ஃபுல் விகடன்-குட் ப்ளாக்ஸ்ல என்னோட டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!//

  ரெண்டு பதிவா... கலக்குங்க வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 86. //மாய உலகம் said...

  ரெண்டு பதிவா... கலக்குங்க வாழ்த்துக்கள் பாஸ் //

  நன்றி மாயா.

  ReplyDelete
 87. செங்கோவி said...ஆளுங்க தேடும்போது, அந்த குழிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே...அந்தப் படமா?..அது என்ன வேட்டு மேட்டர் பாஸ்?///அதே தான்!சின்ன வயசுல பாத்தீங்களோ,என்னமோ?இப்போ திருப்பியும் பாத்தீங்கன்னா ஏன்னு புரியும்!அது குழி அல்ல,பாரிய குழாய்!தண்ணீர் தாங்கிகள் அமைக்க பயன்படுத்தப்படுவது.தமிழ் நாட்டில் கூட வீராணம் திட்டத்துக்கென்று போட்டு வைத்திருந்தார்களே,தேடுவாரற்று?

  ReplyDelete
 88. //Yoga.s.FR said...
  //அதே தான்!சின்ன வயசுல பாத்தீங்களோ,என்னமோ?இப்போ திருப்பியும் பாத்தீங்கன்னா ஏன்னு புரியும்!//

  ஹி..ஹி..புரிஞ்ச படத்தையே திருப்பி திருப்பி பார்ப்போம்..இதைப் பார்க்க மாட்டோமா..

  //அது குழி அல்ல,பாரிய குழாய்!தண்ணீர் தாங்கிகள் அமைக்க பயன்படுத்தப்படுவது.தமிழ் நாட்டில் கூட வீராணம் திட்டத்துக்கென்று போட்டு வைத்திருந்தார்களே,தேடுவாரற்று?//

  அடடா..சிவாஜியும் விஜயாவும் ஒளிஞ்ச குழாயைவா வீராணத்துக்கு யூஸ் பண்ணாங்க..அது குடிநீராச்சே..அச்சச்சோ..

  ReplyDelete
 89. where is the link //

  ’இங்கே’யை க்ளிக் பண்ணா வரும்..ஆனா அங்கேயும் பெருசா ஒன்னும் இல்லை..வெறும் லின்க் தான்!!///பெருசா ஒண்ணுமில்லன்னா,வுட்டுடலாம்!

  ReplyDelete
 90. செங்கோவி said...அடடா..சிவாஜியும் விஜயாவும் ஒளிஞ்ச குழாயைவா வீராணத்துக்கு யூஸ் பண்ணாங்க..அது குடிநீராச்சே..அச்சச்சோ..////அது நீ.........ண்ட காலமாக கிடந்தது!மழையெல்லாம் பெய்து,சுனாமி கூட வந்ததே?

  ReplyDelete
 91. கடைசியா அங்க ஒரு சைனீஸ் பொண்ணு கிட்டப் போய் நிக்கணும். அந்தப் பொண்ணு குட்டைங்கிறதாலயோ என்னவோ ஒசரமான ஸ்டூல்ல அது டேபிளுக்கு அந்தாண்டை நிக்கும்.///ஒசரமான ஸ்டூல்ல .....................!?அடச்சீ!இன்னா பொழைப்பு?

  ReplyDelete
 92. அவ வழக்கம்போல தட்டுல என்ன இருக்குன்னு பார்த்துட்டுச் சொன்னா ”த்தூ...தொந்தி’ன்னு!////அதானே,அப்போ தொந்தி இருந்திருக்காதே?

  ReplyDelete
 93. //நமக்கு இமேஜ்-ன்னாலே பிடிக்காதே?§§§§§நமக்கும் தான் பிடிக்காது!

  ReplyDelete
 94. எதுக்கு அந்தப் புள்ளைக்கு இந்த வேண்டாத வேலை..நல்ல நடிகை..நடிக்க மட்டும் செய்யலாம்.///Correct!!!!

  ReplyDelete
 95. இவரை நாம இங்க தேடிக்கிட்டு இருக்கோம்..ஃபாரின்ல என்ன பண்ணுதாரு..இண்டர்வியூ எதுவும் அட்டெண்ட் பண்ணுதாரோ...///பையன் நடிக்கப் போற படத்துக்கு லொக்கேஷன்?!பாக்கப் போயிருக்காரோ,என்னமோ?

  ReplyDelete
 96. போன வாரமே சொல்ல நினைச்சு மறந்திட்டேன்..யூத்ஃபுல் விகடன்-குட் ப்ளாக்ஸ்ல என்னோட டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு./////வாழ்த்துக்கள்!நாளைக்கு படிச்சுட்டு சொல்லுறேன்!

  ReplyDelete
 97. //சண்டாளி 2 டாலரைத் தான் அப்படிச் சொல்றான்னு புரிஞ்சது. //super

  ReplyDelete
 98. ரெம்ப ரசிச்சு சிரிச்சு படித்தேன் பாஸ்
  செம காமெடியான ஆள்தான் போல

  அப்புறம்
  இன்னைக்குதான் புதுமைபித்தன் படம் பார்த்தேன்
  பார்த்துட்டு ப்ளாக் வந்த
  அந்த படத்தில் இருந்து ஒரு பாட்டு போட்டு இருக்கீங்க
  என்ன ஒரு ஒற்றுமை இல்லை பாஸ்
  ஹா ஹா

  ReplyDelete
 99. //சைனீஸ் யாருக்குமே ’ட’வும் ’ரா’வும் வராது. டிராயிங்-கையே தியாயிங்-னு சொல்வாங்க...//

  புதுசா கத்துகிட்டது இது!

  ஆமா!பிலிம் காட்டுறதுல கில்லி நீங்களா?சிபியா?

  ReplyDelete
 100. கருங்காலி வந்துடுச்சான்னு வீடியோ கடைல கேட்டா இப்பத்தானே தயார் செய்துகிட்டிருக்கோம்ன்னு பதில் சொல்லிட்டாங்க.அஞ்சலிக்கு முகபாவங்கள் நல்லாவே வருது.அப்படியே நடிப்பது நீண்ட நாட்களுக்கு அவரை பீல்டில் தக்க வைக்கும்.

  ReplyDelete
 101. அவமானப்பட்ட அஞ்சலியும் கணித மேதையும் (நானா யோசிச்சேன்)//

  தலைப்பே ஒரு கிளு கிளுப்பாகவும் கண கணப்பாகவும் இருக்கிறதே...

  அவ்..........அவ்...

  ReplyDelete
 102. இதுல ரெண்டு சந்தோசம்..ஒன்னு நம்மளையும் யூத்துன்னு சொல்லிட்டாங்க..ரெண்டாவது குட் ப்ளாக்(அதாவது நல்ல...நல்ல ப்ளாக்காம்)னு சொல்லிட்டாங்க..ஹா..ஹா..அவங்க நானா யோசிச்சேன் படிக்கறதேயில்லை போல//


  ஓவர் குசும்பையா உமக்கு.......

  இதைப் படிச்சிட்டு யாராச்சும் போட்டுக் குடுத்திடப் போறாங்க.

  ReplyDelete
 103. அடேங்கப்பா..நம்மளையே இந்த சமூகம் இப்படி கொடூரமா ட்ரீட் பண்ணுதுன்னா, கணிதமேதை ராமானுஜம் இந்தச் சமூகத்துகிட்ட என்ன பாடுபட்டிருப்பாரு..........பாவம்! (பதிவர்களின் இமேஜ் கருதி, அவர்களின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது)///


  இத்தால் சகலருக்கும் அண்ண செங்கோவி சொல்லிக் கொள்வது என்னவென்றால்......

  வெகு சீக்கிரத்தில் அவரும் அடுத்த குழந்தைக்கு அப்பாவாகப் போகிறார் என்று...

  அப்படித் தானே)))))))))))))))))))))))))))))))))))))))))))))))));

  ReplyDelete
 104. எதுக்கு அந்தப் புள்ளைக்கு இந்த வேண்டாத வேலை..நல்ல நடிகை..நடிக்க மட்டும் செய்யலாம்...நேத்து நிரூ பதிவுல ஒரு பதிவர் ’படத்துல பெருசா ஒன்னும் இல்லை’ன்னு கமெண்ட் போடுதாரு..இந்த அவமானம் அஞ்சலிக்குத் தேவையா?//

  ஏலேய் தமிழ்வாசி...வடிவா உத்துப் பார்க்கிறது..

  அவ்...........

  தேவையா....தேவையா....தேவையா...

  ReplyDelete
 105. நானா யோசித்தேன்...நகைச்சுவை கலந்த மலையாளப் படம் மச்சி,

  ReplyDelete
 106. டிஸ்கி:
  இந்தப் பதிவு 18+..சாரிங்க..முதல்லயே சொல்ல மறந்துட்டேன்..என்னது படிச்சிட்டீங்களா..அய்யய்யோ, அப்போ ஒலகம் அழிஞ்சிடுமா?//


  இந்தக் குத்து யாருக்கு?

  ReplyDelete
 107. //யூத்ஃபுல் விகடன்-குட் ப்ளாக்ஸ்ல என்னோட டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!//
  வாழ்த்துக்கள், செங்கோவி.

  ReplyDelete
 108. /.இப்படியே போராடி ஒரு மாசம் கழிச்சுக் கண்டுபிடிச்சோம்.//
  நல்லா கணக்கு பண்ணிருக்கீங்க.

  ReplyDelete
 109. நாங்க காலேஜ் படிக்கும்போது புதுமைப்பித்தன்னு ஒரு பார்த்திபன் படம் வந்துச்சு. ஹாஸ்டல் டிவில டெய்லி நைட் இந்தப் பாட்டுப் போடுவாங்க..நாங்க உட்கார்ந்து எண்ணுவோம்..என்னதைன்னா..ஹி..ஹி..பிரியாராமன் மொத்தம் எத்தனை தடவை மாராப்பை விலக்குச்சுன்னு எண்ணுவோம்.//

  நாங்களும்தான். ஹிஹி

  ReplyDelete
 110. அப்போ நான் சிங்கப்பூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருந்தேன்...>>>

  சிங்கப்பூர்ல குப்பை கொட்டினனால தான் உங்கள நாட்டை விட்டு குவைத்துக்கு அனுப்பீட்டாங்களோ செங்கோவி...
  அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....(நானா யோசிச்சேன்...)

  ReplyDelete
 111. என்னமா கின்றாங்கய்யா ஹிஹி!

  ReplyDelete
 112. இப்பவெல்லாம் ஆம்பளைங்க கூட சேட் பண்ணவும் பயமா இருக்கு, அதை வெச்சு ஒரு பதிவு தேத்திடறாங்க அவ்வ்வ்வ்வ்வ்

  கோவை சரளா சீன் வேணும்னா மலையாளப்படம் 4 + 4 பார்க்கவும்..

  ReplyDelete
 113. உண்மைதான் பாஸ் அஞ்சலி புள்ளைய கவர்சியா பார்க்க மனசு வருது இல்லை

  ReplyDelete
 114. ஆமா 18+ ல் விஜயகாந்த் எதுக்கு?

  த்தூ - சிரிக்க வைத்தது.

  வயசுக் கணக்கு - ரொம்ப குசும்பு சாமியோவ்...

  ReplyDelete
 115. //டிகிரி சர்டிஃபிகேட் மட்டும் போதுமா பதிவும் மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!//

  ஆமாண்ணே! :-)
  என்னோட மெலீனாவையும், Samaritan Girl ஐயும் விகடன்தான் பிரபலப்படுத்திச்சு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 116. //இவரை நாம இங்க தேடிக்கிட்டு இருக்கோம்..ஃபாரின்ல என்ன பண்ணுதாரு..இண்டர்வியூ எதுவும் அட்டெண்ட் பண்ணுதாரோ..//
  அதென்ன பூப்போட்ட சட்டை? அப்பிடியே அக்குள்ள ஒரு BAG ஐயும் வச்சுக்கிட்டா...அப்பிடியே சரி வேணாம் விடுங்க! :-)

  ReplyDelete
 117. //சார்வாகன் said...
  //சண்டாளி 2 டாலரைத் தான் அப்படிச் சொல்றான்னு புரிஞ்சது. //super //

  சூப்பருக்கு நன்றி சார்வ்!

  ReplyDelete
 118. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

  இன்னைக்குதான் புதுமைபித்தன் படம் பார்த்தேன் பார்த்துட்டு ப்ளாக் வந்த அந்த படத்தில் இருந்து ஒரு பாட்டு போட்டு இருக்கீங்க
  என்ன ஒரு ஒற்றுமை இல்லை பாஸ் //

  ஒத்துமையெல்லாம் இருக்கட்டும்..எண்ணுனீங்களா இல்லையா..27 கரெக்ட் தானா?

  ReplyDelete
 119. ராஜ நடராஜன் said...
  //சைனீஸ் யாருக்குமே ’ட’வும் ’ரா’வும் வராது. டிராயிங்-கையே தியாயிங்-னு சொல்வாங்க..

  புதுசா கத்துகிட்டது இது! //

  என்ன பாஸ்..சைனீஸ் பொண்ணு/படம் பார்த்ததே இல்லையா..

  //பிலிம் காட்டுறதுல கில்லி நீங்களா?சிபியா? // வயசு, அனுபவம் எல்லாத்துலயும் மூத்த அண்ணன் சிபி தான்!

  //கருங்காலி வந்துடுச்சான்னு வீடியோ கடைல கேட்டா இப்பத்தானே தயார் செய்துகிட்டிருக்கோம்ன்னு பதில் சொல்லிட்டாங்க.// தயார் செய்றாங்களா..என்ன சார் தயிர்சாதம் ரேஞ்சுக்குச் சொல்றீங்க..

  ReplyDelete
 120. நிரூபன் said...

  //தலைப்பே ஒரு கிளு கிளுப்பாகவும் கண கணப்பாகவும் இருக்கிறதே...//

  எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான்..

  //ஓவர் குசும்பையா உமக்கு....இதைப் படிச்சிட்டு யாராச்சும் போட்டுக் குடுத்திடப் போறாங்க.// உண்மையைத் தானே சொன்னோம்..

  //நானா யோசித்தேன்...நகைச்சுவை கலந்த மலையாளப் படம் மச்சி // நல்ல டெஃபனிசன்..


  //இந்தக் குத்து யாருக்கு? // சும்மா பொதுவா குத்துறது தான்..

  ReplyDelete
 121. யூத் விகடனில் உங்கள் பதிவுகள் பகிரபட்டமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க...

  ReplyDelete
 122. FOOD said...

  //வாழ்த்துக்கள், செங்கோவி.//

  நன்றி சார்.

  //நல்லா கணக்கு பண்ணிருக்கீங்க.// இது பாராட்டு மாதிரி தெரியலியே..கோர்த்துவிடற மாதிரில்ல தெரியுது..

  ReplyDelete
 123. // மருதமூரான். said...
  wow. kalakkal boss:-) //

  நன்றி..நன்றி.

  ReplyDelete
 124. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  நாங்க காலேஜ் படிக்கும்போது புதுமைப்பித்தன்னு ஒரு பார்த்திபன் படம் வந்துச்சு. ஹாஸ்டல் டிவில டெய்லி நைட் இந்தப் பாட்டுப் போடுவாங்க..நாங்க உட்கார்ந்து எண்ணுவோம்

  நாங்களும்தான். ஹிஹி //

  ஊர்ஸ்..ஊர்ப் பேரை இப்படித் தான் காப்பாத்தணும்..வெரி குட்..வெரு குட்!

  ReplyDelete
 125. //Reverie said...
  சிங்கப்பூர்ல குப்பை கொட்டினனால தான் உங்கள நாட்டை விட்டு குவைத்துக்கு அனுப்பீட்டாங்களோ செங்கோவி...
  அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....(நானா யோசிச்சேன்...)//

  ReplyDelete
 126. //விக்கியுலகம் said...
  என்னமா கின்றாங்கய்யா ஹிஹி! // கின்றோமா...என்னய்ய கிண்டுறோம்..

  ReplyDelete
 127. சி.பி.செந்தில்குமார் said...
  //இப்பவெல்லாம் ஆம்பளைங்க கூட சேட் பண்ணவும் பயமா இருக்கு, அதை வெச்சு ஒரு பதிவு தேத்திடறாங்க அவ்வ்வ்வ்வ்வ் //

  அண்ணே, உங்க வயசை குறைச்சுப் போட்டிருக்கேன்ல..போதாதா?

  //கோவை சரளா சீன் வேணும்னா மலையாளப்படம் 4 + 4 பார்க்கவும்..// இதுக்குத் தான் அண்ணன் வேணும்ங்கிறது..

  ReplyDelete
 128. // Kss.Rajh said...
  உண்மைதான் பாஸ் அஞ்சலி புள்ளைய கவர்சியா பார்க்க மனசு வருது இல்லை //

  ஆமா பாஸ்..அழாதீங்க..அழாதீங்க..சொல்லிட்டோம்ல..திருந்திடும்.

  ReplyDelete
 129. 'பரிவை' சே.குமார் said...
  //ஆமா 18+ ல் விஜயகாந்த் எதுக்கு? // திருஷ்டிக்குத் தான்!

  ReplyDelete
 130. // ஜீ... said...

  என்னோட மெலீனாவையும், Samaritan Girl ஐயும் விகடன்தான் பிரபலப்படுத்திச்சு! //

  சொல்லவேயில்லை..இதெல்லாம் சப்பை மேட்டர்னு விட்டுட்டீங்களா..வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 131. //ஜீ... said... [Reply]
  அதென்ன பூப்போட்ட சட்டை? அப்பிடியே அக்குள்ள ஒரு BAG ஐயும் வச்சுக்கிட்டா...அப்பிடியே சரி வேணாம் விடுங்க! :- //

  ஹா..ஹா..கலக்கிட்டீங்கய்யா..

  ReplyDelete
 132. பாரத்... பாரதி... said... [Reply]
  //யூத் விகடனில் உங்கள் பதிவுகள் பகிரபட்டமைக்கு வாழ்த்துக்கள். //

  நன்றி சார்..

  //தொடர்ந்து கலக்குங்க. //

  ஹி..ஹி..அதான் இங்க நடந்துக்கிட்டு இருக்கு..

  ReplyDelete
 133. எல்லா விவரங்களும், விவகாரங்களும் கலந்த பதிவு...

  ReplyDelete
 134. என்ன செங்கோவி மாப்ள.. எல்லாம் கில்மா ஸ்டில்லா இருக்கு..
  மனைவி ஊருல இல்லையா?

  ReplyDelete
 135. //பாரத்... பாரதி... said...
  எல்லா விவரங்களும், விவகாரங்களும் கலந்த பதிவு...//

  ஆஹா..விளக்கம் நல்லா இருக்கே..

  ReplyDelete
 136. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  என்ன செங்கோவி மாப்ள.. எல்லாம் கில்மா ஸ்டில்லா இருக்கு..
  மனைவி ஊருல இல்லையா? //

  பத்தவச்சாச்சா...ரைட்டு...வந்த காரியம் முடிஞ்சதுல்ல...போலாம் ரைட்!

  ReplyDelete
 137. //.ராமராஜன் கைல மெஷின் கன்னைக் கொடுத்த மாதிரி கண்றாவியா இருந்துச்சு...//

  உங்களை போர்க்குற்றவாளியாக அறிவிக்கிறேன். இதற்கு மன்னிப்பு கேட்காவிடில்..2 நிமிட உண்ணாவிரதம் இருக்கவும் தயங்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்ளும் இந்த வேளையிலே...

  ReplyDelete
 138. ஆமாம். அஞ்சலிக்கு கிளாமர் சரி இல்லை.

  ReplyDelete
 139. \\கணித மேதை செங்கோவி\\ யோவ், ஒரு வேலை நீர் ஸ்கூல் படிக்கும்போது உன்கிட்ட யாராவது லெட்டர் எழுதச் சொல்லி , வீட்டு நம்பர் 4/204 ன்னு சொல்லியிருந்தா 1/51 போட்டிருபீரு, விளங்கியிருக்கும்!!

  சைனாக்காரங்க நம்மள மாதிரி அட ராமான்னு கூட புலம்ப முடியாது!! லாமா லாமா என்று தான் சொல்வார்கள். ஹா..ஹா....ஹா...

  \\பிரியாராமன் மொத்தம் எத்தனை தடவை மாராப்பை விலக்குச்சுன்னு எண்ணுவோம்.\\ ஆஹா, இண்டரெஸ்டிங் ஆக இருக்கே, இரு நேரம் கிடைக்கறப்போ நானும் எண்ணிப் பார்க்கிறேன், ஹி..ஹி..ஹி...

  \\கருங்காலி அஞ்சலி\\ ஷகீல மாதிரி ஒரு ரோடு ரோலரை கனவுப் பன்னியாக... சாரி கனவு கன்னியாக நினைச்சு மன்றம் ஆரம்பிச்ச ஆளுங்க, அஞ்சலியைப் பழிக்கலாமா? அந்தப் பொண்ணுக்கு என்ன குறைச்சல், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். [யோவ், அது என் ஆளுயா... புரிஞ்சுக்க...அவ்.....]

  \\தீர்ப்பை குற்றவாளியோட மனசாட்சிக்கே விடுற ஆட்களாச்சே \\ ஏதோ ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடின்னு சொத்து அபகரிச்ச வழக்காயிருந்திருந்தா அப்படித்தான் சொல்லியிருப்பாங்க. இங்கே என்ன காசா பணமா, நட்டம் ஒன்னுமில்லையே, அதான் நேர சொல்லிபுட்டாங்க.

  விஜயகாந்து காலேஜு பையன் மாதிரி இருக்காரே, இதை ஹீரோயின்கள் பார்த்து சொக்கரமாதிரிதானே படத்தில எடுத்திருப்பாங்க? ஐயோ......ஐயோ...

  ReplyDelete
 140. இரண்டு விஷயங்கள் தெளிவாகி விட்டன-
  1)நீங்கள் ஒரு கணித மேதை--பதிவர் சாட்,ப்ரியாராமன் (27)
  2)நீங்கள் உடற்பயிர்சி செய்யாமல் தூ எனத் துப்பும் தொந்தியுடன் இருந்திருக்கிறீர்கள்!

  சூப்பர் செங்கோவி!

  ReplyDelete
 141. //சிவகுமார் ! said...

  இதற்கு மன்னிப்பு கேட்காவிடில்..2 நிமிட உண்ணாவிரதம் இருக்கவும் தயங்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்ளும் இந்த வேளையிலே...//

  2 நிமிச உண்ணாவிரதமா..தலைவரை மிஞ்சிட்டீங்களே..

  ReplyDelete
 142. // குணசேகரன்... said...
  ஆமாம். அஞ்சலிக்கு கிளாமர் சரி இல்லை. //

  ஆமாம் பாஸ்..

  ReplyDelete
 143. Jayadev Das said...
  //\\கணித மேதை செங்கோவி\\ யோவ், ஒரு வேலை நீர் ஸ்கூல் படிக்கும்போது உன்கிட்ட யாராவது லெட்டர் எழுதச் சொல்லி , வீட்டு நம்பர் 4/204 ன்னு சொல்லியிருந்தா 1/51 போட்டிருபீரு, விளங்கியிருக்கும்!! //

  ஆமா, அதானே கரெக்ட்டு!

  //சைனாக்காரங்க நம்மள மாதிரி அட ராமான்னு கூட புலம்ப முடியாது!! லாமா லாமா என்று தான் சொல்வார்கள். ஹா..ஹா....ஹா...//

  நல்லவேளை சார்..நல்ல உதாரணம் சொன்னீங்க..ரொம்ப தேங்க்ஸ்.

  //ஆஹா, இண்டரெஸ்டிங் ஆக இருக்கே, இரு நேரம் கிடைக்கறப்போ நானும் எண்ணிப் பார்க்கிறேன், ஹி..ஹி..ஹி...//

  ஒலகத்துல நம்மளைத் தவிர எல்ல ஃபேமிலி மேனும் ஃப்ரீயாத்தான் இருக்காங்க போலிருக்கே..

  // அஞ்சலியைப் பழிக்கலாமா? அந்தப் பொண்ணுக்கு என்ன குறைச்சல், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். [யோவ், அது என் ஆளுயா... புரிஞ்சுக்க...அவ்.....] //

  உங்க ஆளை நல்ல பொண்ணுன்னு தானே சொல்லியிருக்கேன்..அப்புறம் என்ன ஃபீலிங்..

  //விஜயகாந்து காலேஜு பையன் மாதிரி இருக்காரே..// சார்..வேணாம்..முடியலை..

  ReplyDelete
 144. // சென்னை பித்தன் said...

  2)நீங்கள் உடற்பயிர்சி செய்யாமல் தூ எனத் துப்பும் தொந்தியுடன் இருந்திருக்கிறீர்கள்! //

  அதுசரி..அதை ஏன் பாஸ்ட் டென்ஸ்ல சொல்றீங்க?

  ReplyDelete
 145. மெலீனா விமர்சனமும் வந்திருக்கு..லின்க் இங்கே! விகடனுக்கு நன்றி!
  //
  வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 146. கருங்காலின்னு ஒரு கேவலமான படம் வந்திருக்கு..//
  sema vimarsanam

  ReplyDelete
 147. .ராமராஜன் கைல மெஷின் கன்னைக் கொடுத்த மாதிரி கண்றாவியா இருந்துச்சு...//
  உங்களை அடிச்சிக்க ஆள் இல்லை

  ReplyDelete
 148. //என்ன கொடுமை சார் இது ://
  அண்ணே என்னால சிரிப்ப அடக்க முடியலை. இப்போ எந்த நாட்ல நா இருகிங்க௦.
  உங்க லீலை தொடர் டாப் கியர் ல போயிட்டு இருக்கு ஒரு வாரம் வெயிட் பண்ண முடியலை. சனி கிழமை எபோடா வரும் நு இருக்கு

  ReplyDelete
 149. செம ரகளையா இருக்கு உங்க பதிவு...

  இனி ஃபாலோயிங் :)

  ReplyDelete
 150. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  .ராமராஜன் கைல மெஷின் கன்னைக் கொடுத்த மாதிரி கண்றாவியா இருந்துச்சு...//
  உங்களை அடிச்சிக்க ஆள் இல்லை //

  நன்றிங்ணா!

  ReplyDelete
 151. gopituty said...
  //என்ன கொடுமை சார் இது ://
  அண்ணே என்னால சிரிப்ப அடக்க முடியலை. //

  நம்ம நோக்கமே அதானே..நீங்கள்லாம் சிரி..சிரின்னு சிரிச்சுக்கிட்டே இருக்கணும்!

  // இப்போ எந்த நாட்ல நா இருகிங்க௦. // கவலைப்படாதீங்க இந்தியால இல்லை..குவைத்!

  //உங்க லீலை தொடர் டாப் கியர் ல போயிட்டு இருக்கு..ஒரு வாரம் வெயிட் பண்ண முடியலை. // நன்றி..நன்றி..

  // சனி கிழமை எபோடா வரும் நு இருக்கு //

  அது தெரியாதா..சரியாப் போச்சு..சனிக்கிழமை வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும்ணே!

  ReplyDelete
 152. //
  ஷீ-நிசி said...
  செம ரகளையா இருக்கு உங்க பதிவு...

  இனி ஃபாலோயிங் :)//

  உங்களை ஏற்கனவே இந்தப் பக்கம் பார்த்திருக்கனே..அப்போல்லாம் ஃபாலொ பண்ணலியா..ஓகே..ஓகே.

  ReplyDelete
 153. தீர்ப்பை குற்றவாளியோட மனசாட்சிக்கே விடுற ஆட்களாச்சே நம்ம ஜட்ஜுக..பரவாயில்லை..ஒருவழியா நியாயம் ஜெயிச்சது..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.