Thursday, August 18, 2011

கவர்ந்த காஞ்சனாவும் கட்டிப்பிடித்த சிவாஜியும் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

தள்ளிப்போடா..
வேணாம்..வேணாம்...வேணாம்..
வேணாம்..வேணாம்..வேணாம்..வேணாம்


வேணும்..வேணும்..வேணும்..


தள்ளிப் போடா..போடா!

(நீ கவிதை எனக்கு- பாடலில் இருந்து).

வெற்றி நமதே:
இலங்கை வானொலியான வெற்றி எஃப்.எம்மில் மூத்த பதிவர் லோசன் 'நாள் ஒரு தளம்' என்ற நிகழ்ச்சி மூலம் இணையத்தளங்களையும் வலைப் பதிவுத் தளங்களையும் நாள் தோறும் அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் வரும் வெள்ளியன்று காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

லோசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!


ஒன்லி வெளியுறவு:
போனவாரம் நம்ம நாடாளுமன்றத்துல பழுத்த கிழமான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு கூத்து பண்ணியிருக்கார்..நம்ம ராஜஸ்தான் மாநிலத்துல பாகிஸ்தான் டாக்டர் ஒரு ஆளு ஜெயில்ல இருக்காராம்..’பாவம், 80 வயசு ஆயிடுச்சு. சக்கர நாற்காலில தான் நடமாடுறாரு..அதனால அவரை ரிலீஸ் பண்ணுங்க’-ன்னு ஒரு எம்.பி.கேட்டிருக்காரு.
அதுக்கு நம்ம சரோஜா தேவி புகழ் எஸ்.எம்.கிருஷ்ணா ‘  குறிப்பிட்ட அந்த நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தூதரக அளவில் பாகிஸ்தானுடன் பேசுவோம்’னு பதில் சொல்லவும் ‘ராஜஸ்தான் எப்படா பாகிஸ்தான்கிட்டப் போச்சு’ன்னு எல்லாரும் கடுப்பாயிட்டாங்க..அப்புறம் நம்ம மண்ணுமோகன்சிங் தான் சமாளிச்சிருக்காரு..

வயசான காலத்துல வீட்ல கிடக்கறதை விட்டுட்டு, இவங்க பண்ற அலும்பு தாங்கலைய்யா..உள் உறவுக்கு லாயக்கில்லாத ஆளையெல்லாம் வெளி உறவுக்கு அமைச்சராக்குனா இப்படித்தான்..நாம சொன்னா யாரு கேட்கா?..சொல்ற நம்மளைத் தான் ஆபாசமாப் பேசுறாம்பாங்க..என்னமோய்யா...

கட்டிப் பிடித்த நடிகர் திலகம்:

எங்க வீட்ல, ஊர்ல எல்லாரும் சிவாஜியோட தீவிர ரசிகர்கள், நான் உட்பட. அப்போ சிவாஜி ஏதோ ‘தமிழகத்தை முன்னேத்துற முண்ணனி’ன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சிருந்தாரு. தேர்தல் பிரச்சாரத்துக்காக எங்க ஊருக்கு வந்திருந்தாரு. அவர் மீட்டிங் பார்க்க ஊர்ல இருந்து எல்லாரும் கிளம்புனாங்க. நானும் சிவாஜியைப் பார்க்கணும்னு அடம்பிடுச்சுக் கிளம்புனேன். ஓட்டுப்போடற வயசு இல்லே தான்..ஆனா விட்டா ஓட்டுப் போடற அளவுக்கு விவரமா இருந்தனா.... அதனால சரின்னு என்னையும் கூட்டிட்டுப் போனாங்க. 


போறதுன்னா நடை தான். நைட்டு நேரத்துல காடு,கண்மாய் தாண்டி கோவில்பட்டி போனோம். போற வழில தான் சிவாஜி ஒரு வீட்ல தங்கியிருக்காருன்னு தெரிஞ்சது..எல்லாரும் அந்த வீட்டு முன்னால போய் நின்னுக்கிட்டோம். சிவாஜிக்கு எங்க கிராமத்தைத் தெரியும்.அண்ணன்மார் அடிக்கடி போய் அவரைப் பார்த்துட்டு வர்ற அளவுக்கு ரொம்ப கால ரசிகர்கள்..அதனால எங்க ஊர் பேரைச் சொல்லவும் சிவாஜி வெளில வந்துட்டாரு..

வந்து என்னமோ டச்சிங்க்கா பேசுனாரு.நான் அவரையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ நம்ம மாம்ஸ் ஒருத்தரு ‘ஐயா, இந்தச் சின்னப் பையனும் உங்களைப் பார்க்கணும்னு ராத்திரி நேரத்துல நடந்து வந்திருக்காம்’னு கோர்த்துவிட்டாரு. ஐயா திரும்பி என்னைப் பார்த்தாரு.’அப்படியா..வாப்பா..என்னைப் பார்க்கவா இம்புட்டு தூரம் வந்தீக..இங்க வாப்பா’ன்னு கூபிட்டாரு. எனக்கோ படத்துல வர்ற மாதிரியே மனுசன் பேசுதாரேன்னு ஆச்சரியம். எல்லாரும் என்னை அவர்கிட்ட தள்ளிவிட்டாங்க. பக்கத்துல போகவும் என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு..நானும் கட்டிப்பிடிக்க ட்ரை பண்ணேன். நல்லா அகலமா இருந்தாரா..அதனால முடியலை..ஆனா நல்லா மெதுக் மெதுக்குன்னு இருந்தாருண்ணே..

இந்த ஃப்ளாஷ்பேக்கை ரெண்டு நாள் முன்ன ஆஃபீஸ்ல லஞ்ச் டயத்துல சொன்னேன். அப்போ ஒருத்தரு ‘ஏன்யா இத்தனை நாளா சொல்லலை?’ன்னு கேட்டாரு. அதுக்கு இன்னொருத்தரு ‘பத்மினி, கே.ஆர்.விஜயா கட்டிப்பிடிச்சிருந்தா, கம்பெனில சேர்ந்த அன்னிக்கே சொல்லியிருப்பாரு..சிவாஜி தானே..அதான் சொல்லாம விட்டுட்டாரு’ன்னு சொல்லி என்னைக் கேவலப்படுத்திட்டாருண்ணே..

அதான்..நாளைக்கு நீங்களும் விஷயம் தெரிஞ்சு, அப்படி கேவலமா என்னைச் சொல்லிடக்கூடாதுன்னு தான் இப்பவே சொல்றேன்..சிவாஜி என்னை கட்டிப்பிடிச்சாரு..கட்டிப்பிடிச்சாரு..கட்டிப்பிடிச்சாரு..சரிய்யா, சிவாஜியைப் பத்தி இவ்வளவு தூரம் பேசிட்டு பத்மினி ஸ்டில்லு போடலைன்னா பாவம் வந்து சேரும். அதனால...

நாட்டியப் பேரொளின்னு சரியாத் தாம்யா சொல்லியிருக்காங்க..கண்ணெல்லாம் கூசுதே!

தத்துவம் :

பல்சுவைப் பதிவு எழுதுனா தத்துவம் சொல்லணுமாம்லெ..புடிங்கோ..

நல்ல விஷயம் செய்றதுங்கிறது நல்ல சீன் படத்துல வர்ற பிட்டு மாதிரி..பட்டுனு முடிஞ்சிடும். ஆனா கெட்ட காரியம் யூடியூப்ல வெறி ஹாட் தேடுற மாதிரி..ஒன்னைத் தொட்டு ஒன்னைத் தொட்டு முடிவேயில்லாம போயிக்கிட்டே இருக்கும்..டைம், எனர்ஜி எல்லாம் வேஸ்ட் ஆனப்புறம் தான் ஆளை விடும்..அதனால வாழ்க்கைல நல்லதையே பண்ணுங்க...அவ்வ்!


காஞ்சனா :

பொதுவா எனக்குப் பேய்ப் படம் பிடிக்காது. ஏன்னா..படம் நல்லாயில்லைன்னு வச்சிக்கோங்களேன், பேய் வரும்போது மொக்கையாத் தெரியும்..படம் நல்லாயிருந்துச்சுன்னு வச்சிக்கோங்க பேய் வரும்போது பயம்மா இருக்கும்..மொத்தத்துல ரெண்டுமே நமக்கு ஆகாது..அதனால தான் நம்ம வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் நடிச்சிருந்தும் காஞ்சனா பார்க்க யோசிச்சேன். அப்புறம் கோவை சரளா பத்தியும் நிறையப் பேரு சொன்னப்புறம் பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். அதனால தங்கமணிகிட்ட ‘இங்கயே இருக்கணும்..எங்கயும் போயிரக்கூடாது’-ன்னு கண்டிசனா சொல்லிப்புட்டு பார்க்க ஆரம்பிச்சேன்..
லாரன்ஸ் கலக்கிப்புட்டாரு..நல்ல படம்..படம் முழுக்க காமெடியை மிக்ஸ் பண்ணதால என்னை மாதிரி ஆளுங்க பயப்படாம படம் பார்க்க முடிஞ்சது. சரத்குமாரோட பாடி லாங்குவேஜும் சூப்பர்..திருநங்கைகள் பற்றி நல்லதொரு அபிப்ராயம் சமூகத்துல வர்ற அளவுக்கு அவங்களோட நியாயங்கள்/பிரச்சினைகள் படத்துல சுருக்கமா நச்சுன்னு சொல்லியிருக்காங்க..கிளைமாக்ஸ் வரைக்கும் காமெடியைக் கொண்டுபோனது தான் படத்தோட பெரிய பலம். 


சில சீன்ஸ் தெலுங்குத் தனமா இருந்தாலும், காஞ்சனா கவர்ந்துட்டா!

திகுதிகு பெட்ரோல் :


உலகச் சந்தைல குரூடு ஆயில் விலை ஏறுனப்பல்லாம் போட்டி போட்டுக்கிட்டு, நம்ம எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்/டீசல் விலையை ஏத்துனாங்க.நம்ம பிரதமரும் ‘ஒலகம் முழுக்க ஏறுதுல்லா..என்னா செய்ய’ன்னு சப்பை கட்டு கட்டுனாரு..இப்போ குரூடு ஆயில் விலை இறங்குது..ஆனாலும் நம்ம ஆளுக பெட்ரோல்/டீசல் விலையை குறைக்கறதைப் பத்தி பேசவே தயாரா இல்லை..இது என்ன நியாயம்னே நமக்குப் புரியலியே..


ஒரு விஷயம் மட்டும் நல்லாத் தெரியுது..பெட்ரொல்ல் விலையும் பிரியாமணி ஸ்கர்ட்டும் ஒன்னு தான்..ரெண்டும் ஏறிக்கிட்டே போகுதேயொழிய இறங்குற மாதிரித் தெரியலையே..!

ஸ்பீடு மாஸ்டர் :

சரிய்யா..விளையாட்டெல்லாம் இருக்கட்டும்..நம்ம சக பதிவர் ஸ்பீடு மாஸ்டர் இப்போ சிங்கப்பூர்ல வேலைக்கு ட்ரை பண்றாராம். அதுக்காக கன்சல்டன்ஸில கொடுத்த காசும் அம்பேலாம்..வீட்ல ரொம்ப நெருக்கடி..மாஸ்டரு பேச்சுலர் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ்ன் படிச்சிருக்காரு..இப்போ ரொம்ப மோசமான நிலைமைல இருக்காரு..இதைப் படிக்கிற மக்களோ உங்க நண்பர்களோ சிங்கப்பூர்ல இருந்தா அவருக்குக் கொஞ்சம் உதவுங்களேன். மேலதிக விபரங்களுக்கு :


சிங்கப்பூர் மட்டுமில்லாம மற்ற நாடுகள்ல வாய்ப்பு இருந்தாலும் அவர்கிட்டச் சொல்லுங்க..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

132 comments:

 1. முதல் ரசிகன்

  ReplyDelete
 2. //M.R said...
  அட

  முதல் ரசிகன்//

  ஷகீலாவின் முதல் ரசிகரே வருக..

  ReplyDelete
 3. நானும் கட்டிப்பிடிக்க ட்ரை பண்ணேன். நல்லா அகலமா இருந்தாரா..அதனால முடியலை..ஆனா நல்லா மெதுக் மெதுக்குன்னு இருந்தாருண்ணே..

  குழந்தை ,குழந்தை

  ReplyDelete
 4. //தமிழ்வாசி - Prakash said...
  vanakkam//

  வணக்கம் தமிழ்வாசி..

  ReplyDelete
 5. // M.R said...
  நானும் கட்டிப்பிடிக்க ட்ரை பண்ணேன். நல்லா அகலமா இருந்தாரா..அதனால முடியலை..ஆனா நல்லா மெதுக் மெதுக்குன்னு இருந்தாருண்ணே..

  குழந்தை ,குழந்தை //

  அவரா..நானா?

  ReplyDelete
 6. பத்மினி, கே.ஆர்.விஜயா கட்டிப்பிடிச்சிருந்தா, கம்பெனில சேர்ந்த அன்னிக்கே சொல்லியிருப்பாரு..சிவாஜி தானே..அதான் சொல்லாம விட்டுட்டாரு’ன்னு சொல்லி என்னைக் கேவலப்படுத்திட்டாருண்ணே..

  அவங்க கிடக்கறாங்க விடுங்க

  ReplyDelete
 7. நாட்டியப் பேரொளின்னு சரியாத் தாம்யா சொல்லியிருக்காங்க..கண்ணெல்லாம் கூசுதே!

  யாரு கண்ணு ???

  பத்மினி அம்மா கண்ணு ஏன் கூசனும்?

  ReplyDelete
 8. வெள்ளைக்குதிரை லட்சுமி ராய்

  யாரு வச்ச பேரு.........

  ReplyDelete
 9. //M.R said...
  நாட்டியப் பேரொளின்னு சரியாத் தாம்யா சொல்லியிருக்காங்க..கண்ணெல்லாம் கூசுதே!

  யாரு கண்ணு ???

  பத்மினி அம்மா கண்ணு ஏன் கூசனும்?//

  அதெப்படிய்யா பச்சப்புள்ள மாதிரியே மெயிண்டய்ன் பண்றீங்க..

  ReplyDelete
 10. //M.R said...
  வெள்ளைக்குதிரை லட்சுமி ராய்

  யாரு வச்ச பேரு.....//

  பலபேரு இந்த பேரை வச்சிருக்காங்க..நானும் அதுல ஒன்னு..

  ReplyDelete
 11. இது என்ன நியாயம்னே நமக்குப் புரியலியே..

  இது தெரியலீங்களா

  அது தாங்க அநியாயம்

  ReplyDelete
 12. அண்ணன் கரெக்டா டைமுக்கு அலாரம் வெச்சி பதிவு போடுவாரோ?

  ReplyDelete
 13. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் கரெக்டா டைமுக்கு அலாரம் வெச்சி பதிவு போடுவாரோ?

  இல்லண்ணே இன்னிக்கு இரண்டு நிமிடம் லேட்

  ReplyDelete
 14. /////இலங்கை வானொலியான வெற்றி எஃப்.எம்மில் மூத்த பதிவர் லோசன் 'நாள் ஒரு தளம்' என்ற நிகழ்ச்சி மூலம் இணையத்தளங்களையும் வலைப் பதிவுத் தளங்களையும் நாள் தோறும் அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் வரும் வெள்ளியன்று காலை காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது./////////

  வாவ், கிரேட் நியூஸ்....... வாழ்த்துக்கள் செங்கோவி.......

  ReplyDelete
 15. ///அதுக்கு நம்ம சரோஜா தேவி புகழ் எஸ்.எம்.கிருஷ்ணா////

  பார்ரா......? இது அந்த நடிகையா புக்காண்ணே?

  ReplyDelete
 16. ////உள் உறவுக்கு லாயக்கில்லாத ஆளையெல்லாம் வெளி உறவுக்கு அமைச்சராக்குனா இப்படித்தான்..நாம சொன்னா யாரு கேட்கா?..//////

  அடங்கொன்னியா........

  ReplyDelete
 17. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் கரெக்டா டைமுக்கு அலாரம் வெச்சி பதிவு போடுவாரோ?//

  அட ஏண்ணே..ஸ்டில் லோடு ஆகாம படுத்தி எடுத்திருச்சு..இனிமே 12.15க்கு இறக்கிடணும்!

  ReplyDelete
 18. மிக்க நன்றி சார்

  ReplyDelete
 19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  வாவ், கிரேட் நியூஸ்....... வாழ்த்துக்கள் செங்கோவி......//

  எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசீர்வாதமும் வழிநடத்தலும் தான்!

  ReplyDelete
 20. //பக்கத்துல போகவும் என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு..நானும் கட்டிப்பிடிக்க ட்ரை பண்ணேன். நல்லா அகலமா இருந்தாரா..அதனால முடியலை..ஆனா நல்லா மெதுக் மெதுக்குன்னு இருந்தாருண்ணே../////

  அட மறுபடியும் பார்ரா......? சிவாஜிக்கே அண்ணன் இந்தப் போடு போடுறாரே, சரோஜாதேவியா இருந்திருந்தா இன்னொரு சரோஜாதேவி எழுதி இருப்பாரு.......

  ReplyDelete
 21. //Speed Master said...
  மிக்க நன்றி சார்//

  யோவ், நன்றி பன்றின்னா பிச்சுப்புடுவேன் பிச்சு..நானா யோசிச்சேனுக்குத் தான் கூட்டம் அதிகமா வரும்..அதான் இங்க போட்டேன்!

  ReplyDelete
 22. ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  வளர்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 23. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///அதுக்கு நம்ம சரோஜா தேவி புகழ் எஸ்.எம்.கிருஷ்ணா////

  பார்ரா......? இது அந்த நடிகையா புக்காண்ணே?//

  நடிகை தான்ணே..புக் பத்தி தெரியலை..

  ReplyDelete
 24. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////உள் உறவுக்கு லாயக்கில்லாத ஆளையெல்லாம் வெளி உறவுக்கு அமைச்சராக்குனா இப்படித்தான்..நாம சொன்னா யாரு கேட்கா?..//////

  அடங்கொன்னியா....//

  ஏன்ணே..நீங்களும் திட்டுறீங்க..

  ReplyDelete
 25. //M.R said...
  ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  வளர்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே //

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 26. அப்பாடி ஒருவழியா தமிழ்மணத்துக்குள்ள தள்ளியாச்சு பதிவை!

  ReplyDelete
 27. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //பக்கத்துல போகவும் என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு..நானும் கட்டிப்பிடிக்க ட்ரை பண்ணேன். நல்லா அகலமா இருந்தாரா..அதனால முடியலை..ஆனா நல்லா மெதுக் மெதுக்குன்னு இருந்தாருண்ணே../////

  அட மறுபடியும் பார்ரா......? சிவாஜிக்கே அண்ணன் இந்தப் போடு போடுறாரே, சரோஜாதேவியா இருந்திருந்தா இன்னொரு சரோஜாதேவி எழுதி இருப்பாரு.....//

  அது தொடரா வந்திருக்கும்ணே.

  ReplyDelete
 28. //////அதுக்கு இன்னொருத்தரு ‘பத்மினி, கே.ஆர்.விஜயா கட்டிப்பிடிச்சிருந்தா, கம்பெனில சேர்ந்த அன்னிக்கே சொல்லியிருப்பாரு..//////

  இது மட்டும் நடந்திருந்தா செங்கோவி அன்னிக்கே சினிமாவுல குதிச்சி பெரிய ஸ்டார் ஆகி இருப்பாரே?

  ReplyDelete
 29. செங்கோவி நண்பரே ஏன் பிரகாஷ் நண்பர் கோவித்துக் கொண்டு போய் விட்டாரா ?

  சரி சரி இனி நான் வடை வாங்க வில்லை .

  அவரை கூப்பிடுங்கள் செங்கோவி

  ReplyDelete
 30. ////நாட்டியப் பேரொளின்னு சரியாத் தாம்யா சொல்லியிருக்காங்க..கண்ணெல்லாம் கூசுதே!///////

  பப்பரக்கான்னு இப்படி ஒரு ஸ்டில்ல போட்டா கண்ணு கூசாம என்னய்யா செய்யும்?

  ReplyDelete
 31. இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.//

  வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. செங்கோவி said...
  அப்பாடி ஒருவழியா தமிழ்மணத்துக்குள்ள தள்ளியாச்சு பதிவை!

  ஆமாம் தமிழ் மணத்தில் முதலில் தள்ளியது நான்

  ReplyDelete
 33. setting work mudinju varrathukkula ivlo comment pottutaangale.

  ReplyDelete
 34. ///ஆனா கெட்ட காரியம் யூடியூப்ல வெறி ஹாட் தேடுற மாதிரி..ஒன்னைத் தொட்டு ஒன்னைத் தொட்டு முடிவேயில்லாம போயிக்கிட்டே இருக்கும்..டைம், எனர்ஜி எல்லாம் வேஸ்ட் ஆனப்புறம் தான் ஆளை விடும்..///////

  அண்ணன் என்னமா அனுபவிச்சி எழுதி இருக்காருய்யா.... எல்லா பசங்களும் பாத்து நடந்துக்குங்கப்பா.......

  ReplyDelete
 35. //M.R said...
  செங்கோவி நண்பரே ஏன் பிரகாஷ் நண்பர் கோவித்துக் கொண்டு போய் விட்டாரா ?

  சரி சரி இனி நான் வடை வாங்க வில்லை .

  அவரை கூப்பிடுங்கள் செங்கோவி//

  ஹா..ஹா..அவரு மொபைல் கமெண்ட் போடறதைப் பார்த்தா வெளில இருக்காருன்னு நினைக்கேன்..வடையில் எல்லாருக்கும் பங்கு உண்டு!

  ReplyDelete
 36. //மாய உலகம் said...
  இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.//

  வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்//

  வாங்க மாயா..வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 37. ////ஏன்னா..படம் நல்லாயில்லைன்னு வச்சிக்கோங்களேன், பேய் வரும்போது மொக்கையாத் தெரியும்..படம் நல்லாயிருந்துச்சுன்னு வச்சிக்கோங்க பேய் வரும்போது பயம்மா இருக்கும்../////

  நீங்க ஆம்பளை பேய சொல்றீங்களாண்ணே?

  ReplyDelete
 38. //////அதனால தான் நம்ம வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் நடிச்சிருந்தும் காஞ்சனா பார்க்க யோசிச்சேன். //////

  அதானே பாத்தேன்......

  ReplyDelete
 39. /////ஒரு விஷயம் மட்டும் நல்லாத் தெரியுது..பெட்ரொல்ல் விலையும் பிரியாமணி ஸ்கர்ட்டும் ஒன்னு தான்..ரெண்டும் ஏறிக்கிட்டே போகுதேயொழிய இறங்குற மாதிரித் தெரியலையே..!///////

  ஸ்கர்ட்டுன்னு போட்டுட்டு வேற படம் போட்டா எப்படி? பாவம்யா அந்த DKNY

  ReplyDelete
 40. சிவாஜி கட்டி பிடிச்சத இப்படி வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டீட்டிங்க ...ஹா ஹா.. ஐயாம் சோ ப்ரவ்டு ஆஃப் ய்யூ..உங்கள நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...

  ReplyDelete
 41. //தமிழ்வாசி - Prakash said...
  setting work mudinju varrathukkula ivlo comment pottutaangale.//

  செட்டிங்கா..செட்டப்பா?

  ReplyDelete
 42. //மாய உலகம் said...
  சிவாஜி கட்டி பிடிச்சத இப்படி வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டீட்டிங்க ...ஹா ஹா.. ஐயாம் சோ ப்ரவ்டு ஆஃப் ய்யூ..உங்கள நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.//

  அட ஆமா பாஸ்...நம்ம மேஜர் சுந்தர்ராஜனும் அன்னிக்கு அங்க வந்திருந்தாரு..ஆனா அவரு என்னை கட்டிப்பிடிக்கலை!

  ReplyDelete
 43. கவர்ந்த காஞ்சனாவும் கட்டிப்பிடித்த சிவாஜியும் (நானா யோசிச்சேன்)//

  வணக்கம் நண்பர்களே,
  தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கே.

  ReplyDelete
 44. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////ஏன்னா..படம் நல்லாயில்லைன்னு வச்சிக்கோங்களேன், பேய் வரும்போது மொக்கையாத் தெரியும்..படம் நல்லாயிருந்துச்சுன்னு வச்சிக்கோங்க பேய் வரும்போது பயம்மா இருக்கும்../////

  நீங்க ஆம்பளை பேய சொல்றீங்களாண்ணே?//

  ஹா..ஹா..என்னை கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்கண்ணே!

  ReplyDelete
 45. தத்துவம் தடுமாறவச்சிடுச்சு..குப்புன்னு வேர்த்துடுச்சு நல்ல வேள யாரும் பாக்கல கர்சீப்புல தொடச்சுக்குவோம்

  ReplyDelete
 46. தமிழ்வாசி - Prakash said...
  M R naan kovichuttu pogalai. inge irukken.

  கண்டு கொண்டேன் ,கண்டு கொண்டேன்

  ReplyDelete
 47. ஸ்பீட் மாஸ்டருக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள், நானும் முயல்கிறேன்!

  ReplyDelete
 48. காஞ்சனா கவர்ந்த விதம் கலக்கல்

  ReplyDelete
 49. தள்ளிப்போடா..
  வேணாம்..வேணாம்...வேணாம்..
  வேணாம்..வேணாம்..வேணாம்..வேணாம்


  வேணும்..வேணும்..வேணும்..


  தள்ளிப் போடா..போடா!//

  அவ்....................
  செம தூக்கலா இருக்கே இந்த வரிகள்...

  ReplyDelete
 50. அட ஆமா பாஸ்...நம்ம மேஜர் சுந்தர்ராஜனும் அன்னிக்கு அங்க வந்திருந்தாரு..ஆனா அவரு என்னை கட்டிப்பிடிக்கலை


  why ?ஏன்

  ReplyDelete
 51. //மாய உலகம் said...
  தத்துவம் தடுமாறவச்சிடுச்சு..குப்புன்னு வேர்த்துடுச்சு நல்ல வேள யாரும் பாக்கல கர்சீப்புல தொடச்சுக்குவோம்
  //

  சோடா ஏதாவது குடிங்கய்யா..

  ReplyDelete
 52. வெள்ளியன்று காலை காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  லோசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!//

  வாழ்த்துக்கள் மச்சி..
  பல புதிய வாசகர்களிடம் உங்கள் வலைப் பூவினைப் பற்றிய அறிமுகமானது சென்று சேர இந்த அறிமுகம் உதவும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 53. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஸ்பீட் மாஸ்டருக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள், நானும் முயல்கிறேன்!//

  உங்களுக்கு நிறைய காண்டாக்ட்ஸ் உண்டே..செய்யுங்கள்..நல்லது.

  ReplyDelete
 54. //M.R said...
  அட ஆமா பாஸ்...நம்ம மேஜர் சுந்தர்ராஜனும் அன்னிக்கு அங்க வந்திருந்தாரு..ஆனா அவரு என்னை கட்டிப்பிடிக்கலை


  why ?ஏன்//

  யோவ், எல்லாரும் கட்டிப்பிடிக்கறதுக்கா என்னை கூட்டிப் போனாங்க?

  ReplyDelete
 55. நானா யோசித்தேன்...சூப்பர் கலவையாக வந்திருக்கு.
  படங்களின்னும் சூப்பரா இருக்கு.

  ReplyDelete
 56. //தமிழ்வாசி - Prakash said...
  panni anne ungalukkum vanakkam//

  ஒரு ஓட்டை மொபைல வச்சுக்கிட்டு இந்த ஆளு பண்ற அலும்பைப் பாருங்க..

  ReplyDelete
 57. வெற்றியில் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்..

  உண்மையிலே சிவாஜி அவர்களை நேரிலே பார்த்திங்களா ??? புரியல்ல !

  ReplyDelete
 58. ippa mazhai peirathunaala tower problem. so loading time athigamaaguthu. tower problem illaama irunthaa comment varisaiyaa varum. oottai mobile illai. ok'va

  ReplyDelete
 59. கந்தசாமி. said...
  // வெற்றியில் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்..//

  நன்றி கந்து!

  //உண்மையிலே சிவாஜி அவர்களை நேரிலே பார்த்திங்களா ??? புரியல்ல !//

  ஆமா பாஸ்..இங்க ஜாலியா எழுதி இருந்தாலும், என் வாழ்க்கைல முக்கியமான சந்தோசமான தருணங்களில் அதுவும் ஒன்று.

  ReplyDelete
 60. ////// தமிழ்வாசி - Prakash said...
  panni anne ungalukkum vanakkam
  ///////

  வணக்கம்யா.... இன்னிக்கு நீங்க வராம ஸ்டில்கள்லாம் வருத்தமா போஸ் கொடுக்குது.......

  ReplyDelete
 61. //தமிழ்வாசி - Prakash said...
  ippa mazhai peirathunaala tower problem. so loading time athigamaaguthu. tower problem illaama irunthaa comment varisaiyaa varum. oottai mobile illai. ok'va//

  மழை பெய்யுது..கமெண்ட் போட முடியலை..அப்போ ஓட்டை கம்பெனில வேலை செய்றாரோ?

  ReplyDelete
 62. panni anne. innum naan stills paakkala. mobile'il loading aagala. but priyamani still mattum loading aachu.

  ReplyDelete
 63. ////தமிழ்வாசி - Prakash said...
  panni anne. innum naan stills paakkala. mobile'il loading aagala. but priyamani still mattum loading aachu.

  //////

  யோவ் தமிழ்வாசி அந்த ப்ரியாமணி ஸ்டில்லு, ப்ளாக்ல இருந்து இல்ல, உங்க மொபைல்ல திருட்டுத்தனமா சேவ் பண்ணி வெச்சது எப்படியோ ஒப்பன் ஆகி இருக்கு....

  ReplyDelete
 64. ////// தமிழ்வாசி - Prakash said...
  mobile tower thaan ottai.
  ///////

  அப்போ சிகுனல்லாம் வழிஞ்சி ஓடிடாது?

  ReplyDelete
 65. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////தமிழ்வாசி - Prakash said...
  panni anne. innum naan stills paakkala. mobile'il loading aagala. but priyamani still mattum loading aachu.

  //////

  யோவ் தமிழ்வாசி அந்த ப்ரியாமணி ஸ்டில்லு, ப்ளாக்ல இருந்து இல்ல, உங்க மொபைல்ல திருட்டுத்தனமா சேவ் பண்ணி வெச்சது எப்படியோ ஒப்பன் ஆகி இருக்கு..//

  நானும் அதான் நினைச்சேன்..

  அண்ணே, நான் கிளம்பறேன்.

  ReplyDelete
 66. செம கலக்கல்!செங்கோவியா எழுதியது? நம்ப முடியவில்லை!,இல்லை!!,இல்லை!!!(அடுத்த வரி,அவளா சொன்னாள் அப்பிடீன்னு வரணும்,இங்க முடியாதே?) நல்லாருக்கு.அப்புறம் லோஷன் தம்பி வலைப்பூ அறிமுகப்படுத்தப் போகிறார் என்று அறிந்ததில் சந்தோசம்!இன்னும் அதிக நண்பர்கள்(பிகள்),வாசகர்கள் கிட்டக் கடவதாக!(கும்மல் மன்னர்கள் வரவேற்கப்படுகின்றனர்)

  ReplyDelete
 67. பல்சுவைப் பதிவு எழுதுனா தத்துவம் சொல்லணுமாம்லெ?வாழ்க்கைல நல்லதையே பண்ணுங்க...அவ்வ்!///இது எப்புடி இருக்கு?அவ்வ்வ்வவ்வ்வ்வ் !

  ReplyDelete
 68. ஓட்டுப்போடற வயசு இல்லே தான்..ஆனா விட்டா ஓட்டுப் போடற அளவுக்கு விவரமா இருந்தனா....///அப்புடீன்னா.................................அப்பயும்,இப்பயும்,எப்பயும்???????????!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 69. பாஸ் பாஸ்
  தேவயாணி போட்டோ எப்போ போடுவீங்க பாஸ்

  ReplyDelete
 70. வெற்றி fm அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் மாப்பிள..

  ஹாய் அண்ணாத்த நான்..... என்ன வேண்டாமெண்டுறியளோ.... சரி சரி

  காட்டான்........... போட்டான் ஐயா செங்கோவி நான் போட்டத யாரையா எடுத்தது.....!!???

  ReplyDelete
 71. This comment has been removed by the author.

  ReplyDelete
 72. பண்பலை ரேடியோ அறிமுகத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  ReplyDelete
 73. //இலங்கை வானொலியான வெற்றி எஃப்.எம்மில் மூத்த பதிவர் லோசன் 'நாள் ஒரு தளம்' என்ற நிகழ்ச்சி மூலம் இணையத்தளங்களையும் வலைப் பதிவுத் தளங்களையும் நாள் தோறும் அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் வரும் வெள்ளியன்று காலை காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.//

  வாழ்த்துக்கள் செங்கோவி...

  ReplyDelete
 74. அண்ணே சிவாஜி சார் கட்சில மகளிரணித் தலைவி யாரும் வரல? அவங்க கட்டிப்பிடிக்கலையா?

  ReplyDelete
 75. ஸ்பீட் மாஸ்டருக்கு நல்ல வேலை கிடைக்கட்டும்!வாழ்த்துக்கள்!

  வெற்றியில் அறிமுகமாவதற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 76. அனுஷ்கா படம் எதுக்கு?
  ஆமா அனுஷ்கா ஒரு கிழிஞ்ச சட்டை போட்டிருக்காங்களே..அது கிழிச்சிட்டுப் போட்டதா? இல்ல போட்டுட்டு அப்புறமா கிழிச்சதா?

  ReplyDelete
 77. Yoga.s.FR said...
  // செம கலக்கல்!செங்கோவியா எழுதியது? நம்ப முடியவில்லை!,இல்லை!!,இல்லை!!!//

  ஆச்சரியமாக் கேட்கீங்க..அப்போ இத்தனை நாளா கலக்கலா இல்லையா?

  //அப்புறம் லோஷன் தம்பி வலைப்பூ அறிமுகப்படுத்தப் போகிறார் என்று அறிந்ததில் சந்தோசம்! // எல்லாம் உங்க மாதிரி பெரியவங்களோட ஆசீர்வாதம்!

  //அப்புடீன்னா.................................அப்பயும்,இப்பயும்,எப்பயும்???????????!!! // சுருக்கமா உங்களை மாதிரின்னு வச்சுக்கலாம் ஐயா!

  ReplyDelete
 78. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  பாஸ் பாஸ்
  தேவயாணி போட்டோ எப்போ போடுவீங்க பாஸ் //

  சாரி..பொம்பளை ஜாக்கிசான் மாதிரி இருக்குற தேவயானி படம் இங்கே போடப்பட மாட்டாது..

  ReplyDelete
 79. காட்டான் said...

  //வெற்றி fm அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் மாப்பிள.. // நன்றி.

  // ஹாய் அண்ணாத்த நான்..... என்ன வேண்டாமெண்டுறியளோ.... சரி சரி // நான் வேனாமெண்டு சொல்லலையே..

  //காட்டான்........... போட்டான் ஐயா செங்கோவி நான் போட்டத யாரையா எடுத்தது.....!!??? // யாருய்யா குழயை எடுத்தது?

  //Comment deleted...This post has been removed by the author. // டெய்லி உங்களுக்கு இதே வேலையாப் போச்சு!..மெதுவா அமுக்குங்கய்யா..

  ReplyDelete
 80. // சுருக்கமா உங்களை மாதிரின்னு வச்சுக்கலாம் ஐயா!////சுருக்கமாவா,கமுக்கமாவா????(டவுட்டு)

  ReplyDelete
 81. பக்கத்துல போகவும் என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு..நானும் கட்டிப்பிடிக்க ட்ரை பண்ணேன்.////இதப் பாத்துப்புட்டுத் தான் கமல் "அந்தப்"படத்துல "கட்டிப்புடி" வைத்தியம் பண்ணாரோ?அது இன்னா படம்?வரமாட்டெங்குது!

  ReplyDelete
 82. செங்கோவி said...சாரி..பொம்பளை ஜாக்கிசான் மாதிரி இருக்குற தேவயானி படம் இங்கே போடப்பட மாட்டாது..///இதனை நான் வன்மையாக ............................!ஆணாதிக்கவாதி,செங்கோவி .......க!(வுட்ட இடத்துல உங்க இஷ்டம் போல ரொப்பிக்கலாம்,எழுத்த!)

  ReplyDelete
 83. // கோகுல் said...
  பண்பலை ரேடியோ அறிமுகத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.//

  நன்றி கோகுல்!

  // சே.குமார் said...

  வாழ்த்துக்கள் செங்கோவி...//

  நன்றி குமார்.

  ReplyDelete
 84. ஜீ... said...
  // அண்ணே சிவாஜி சார் கட்சில மகளிரணித் தலைவி யாரும் வரல? அவங்க கட்டிப்பிடிக்கலையா? // இல்லை தம்பி..அப்படி நடந்திருந்தா, என் முதல் பதிவே அதாத்தானே இருந்திருக்கும்!

  // வெற்றியில் அறிமுகமாவதற்கு வாழ்த்துக்கள்! // நன்றி ஜீ.

  // அனுஷ்கா படம் எதுக்கு? // ஷகீலா படம் எதுக்கோ, பத்மினி படம் எதுக்கோ அதுக்குத்தான் அனுஷ்கா படமும்!

  //ஆமா அனுஷ்கா ஒரு கிழிஞ்ச சட்டை போட்டிருக்காங்களே..அது கிழிச்சிட்டுப் போட்டதா? இல்ல போட்டுட்டு அப்புறமா கிழிச்சதா? // யோவ், அது ஃபேஷன்யா!

  ReplyDelete
 85. // Yoga.s.FR said...
  பக்கத்துல போகவும் என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு..நானும் கட்டிப்பிடிக்க ட்ரை பண்ணேன்.////இதப் பாத்துப்புட்டுத் தான் கமல் "அந்தப்"படத்துல "கட்டிப்புடி" வைத்தியம் பண்ணாரோ?அது இன்னா படம்?வரமாட்டெங்குது! //

  அது படம் இல்லை சார்..ஏதோ ஃபங்சன்..சில பதிவர்கள் அந்த ஸ்டில்லை தன் பதிவுல போட்டு ‘கமல் இப்படி ம...யே மோந்து பாக்கலாமான்னு கேட்டு கும்மப்பட்டாங்களே அது தானே..ஹி..ஹி..பார்த்தேன்!

  ReplyDelete
 86. கிருஷ்ணா இவ்வாறு உளறுவது முதல் முறையல்லவே!கிருஷ்ணா,ராமான்னு வீட்டோட இருக்க வேண்டிய வயசுலே...!

  ReplyDelete
 87. கிருஷ்ணா பாவமில்லையா?இப்புடிப் போட்டுக் கும்முறீங்க? நாலு பேருக்கு "நல்லது" செய்யணும்னு நெனைக்கிற மனுஷனைப் போய்?

  ReplyDelete
 88. எங்க "நல்ல" புள்ளங்கெல்லாம் போயிட்டாங்க?ஜன ரஞ்சகப் பதிவு போட்டா படிக்க வரமாட்டேங்குறாங்களே?

  ReplyDelete
 89. பிரியாமணி பத்தி மொதலே பதிவு போட்டுட்டு, போட்டோ இப்ப போட்டா இன்னாஅர்த்தம்கிறேன்?

  ReplyDelete
 90. பதிவுக்கு நன்றி.நன்றி,கண்ணன் http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 91. மாப்பிள வயசா போச்சு அதுதான் கண்ணு கொஞ்சம் அப்பிடி இப்பிடி... இனிமே மெதுவா அமுக்குறன்.. எண்டாலும் உங்கட கடைக்கு வந்தா ஏனோ தெரியல என்ர கை கொஞ்சம் படபடக்குதையா..!!!!???

  ReplyDelete
 92. // சென்னை பித்தன் said... [Reply]
  கிருஷ்ணா இவ்வாறு உளறுவது முதல் முறையல்லவே!கிருஷ்ணா,ராமான்னு வீட்டோட இருக்க வேண்டிய வயசுலே...! //

  ஆமா சார்..அவருக்கு இதே வேலையாப் போச்சு!

  ReplyDelete
 93. // Yoga.s.FR said... [Reply]
  எங்க "நல்ல" புள்ளங்கெல்லாம் போயிட்டாங்க?ஜன ரஞ்சகப் பதிவு போட்டா படிக்க வரமாட்டேங்குறாங்களே? //

  எல்லாரும் திருந்திட்டாங்களோ..

  ReplyDelete
 94. // Priya said... [Reply]
  பதிவுக்கு நன்றி.நன்றி,கண்ணன் http://www.tamilcomedyworld.com //

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 95. // காட்டான் said... [Reply]
  மாப்பிள வயசா போச்சு அதுதான் கண்ணு கொஞ்சம் அப்பிடி இப்பிடி... இனிமே மெதுவா அமுக்குறன்.. எண்டாலும் உங்கட கடைக்கு வந்தா ஏனோ தெரியல என்ர கை கொஞ்சம் படபடக்குதையா..!!!!???//

  பத்மினியைப் பார்த்தா படபடப்பு வரத்தான் செய்யும்..பழைய நினைப்பை கிளப்பியிருக்குமே..

  ReplyDelete
 96. \\ஒரு விஷயம் மட்டும் நல்லாத் தெரியுது..பெட்ரொல்ல் விலையும் பிரியாமணி ஸ்கர்ட்டும் ஒன்னு தான்..ரெண்டும் ஏறிக்கிட்டே போகுதேயொழிய இறங்குற மாதிரித் தெரியலையே..!\\ உன்னை யாரும் பீட் பண்ணவே முடியாது, நீ கலக்கு சித்தப்பு!!

  ReplyDelete
 97. \\ஆனா நல்லா மெதுக் மெதுக்குன்னு இருந்தாருண்ணே\\ சிவாஜி கட்சி ஆரம்பிச்சது எம்ஜியார் மண்டையைப் போட்டதுக்கப்புறம், சிங்கப்பூர் போயி உடல் எடையை குறைச்சிருந்தாறு, அப்புறம் எப்படி "மெதுக் மெதுக்குன்னு இருந்தாரு?"

  ReplyDelete
 98. \\‘ராஜஸ்தான் எப்படா பாகிஸ்தான்கிட்டப் போச்சு’ன்னு எல்லாரும் கடுப்பாயிட்டாங்க.\\ இதாச்சும் பரவாயில்லை, ராஜீவ் காந்தி ஜனவரி 26 க்கும் ஆகஸ்டு 15 க்குமே வித்தியாசம் தெரியாம பேசினாராம். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

  ReplyDelete
 99. \\அந்த வகையில் வரும் வெள்ளியன்று காலை காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\ இதை இணையத்தில் கேட்க முடியுமா?

  ReplyDelete
 100. \\தத்துவம் : \\உன்னால மட்டும்தான் இந்த மாதிரியெல்லாம் கனெக்ஷன் கண்டுபிடிக்க முடியும் செங்கோவி!!

  ReplyDelete
 101. இம்புட்டு பேர் கமெண்ட் பண்ணிட்டாங்க. நான் வருகைக்கு..

  ReplyDelete
 102. இவ்ளோ பேர் கமென்ட் பண்ணிடாங்க.. நான் என்ன புதுசா சொல்றது..

  ReplyDelete
 103. செங்கோவி said.....எல்லாரும் திருந்திட்டாங்களோ?///பக்திப் பரவசம் சொட்டுற போட்டோங்க போட்டு அசத்தியும்.....................................!?

  ReplyDelete
 104. லோசன் அவர்களால், வெற்றி எஃப்.எம்மில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..

  ReplyDelete
 105. ///////இலங்கை வானொலியான வெற்றி எஃப்.எம்மில் மூத்த பதிவர் லோசன் 'நாள் ஒரு தளம்' என்ற நிகழ்ச்சி மூலம் இணையத்தளங்களையும் வலைப் பதிவுத் தளங்களையும் நாள் தோறும் அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் வரும் வெள்ளியன்று காலை காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது./////////
  வாழ்த்துக்கள் செங்கோவி.

  ReplyDelete
 106. ஸ்பீட் மாஸ்டருக்கு ரொம்ப ஸ்பீட வேலை கிடைக்க நானும் பிரார்த்தனையுடன் முயற்சியும் செய்கிறேன்.

  ReplyDelete
 107. Jayadev Das said...
  // உன்னை யாரும் பீட் பண்ணவே முடியாது, நீ கலக்கு சித்தப்பு!! // ரொம்ப தேங்க்ஸ் சார்.


  //சிவாஜி கட்சி ஆரம்பிச்சது எம்ஜியார் மண்டையைப் போட்டதுக்கப்புறம், சிங்கப்பூர் போயி உடல் எடையை குறைச்சிருந்தாறு, அப்புறம் எப்படி "மெதுக் மெதுக்குன்னு இருந்தாரு?"//

  இல்லை பாஸ்..அப்போ அவர் ஒரு அரசியல் படம்கூடப் பண்ணுனாரு..பேரு ஞாபகம் இல்லை..’ஆரம்பிச்சு வச்சவரு அண்ணன் தான்’ன்னு ஒரு பாட்டு வரும்..அதுல பார்த்தா, நான் சொன்ன மெதுக் உண்மைன்னு புரியும்!..முதல்மரியாதை கனம் இருந்தாரு..

  \\அந்த வகையில் வரும் வெள்ளியன்று காலை காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\ இதை இணையத்தில் கேட்க முடியுமா?//

  முடியும் சார்...அந்த ரேடியோ லின்க்கை க்ளிக் பண்ணுனா, லைவ் ஸ்ட்ரீம் லின்க் காட்டும்!

  \\தத்துவம் :உன்னால மட்டும்தான் இந்த மாதிரியெல்லாம் கனெக்ஷன் கண்டுபிடிக்க முடியும் செங்கோவி!! //

  ரொம்பப் புகழாதீங்க சார்..எனக்கு வெக்க வெக்கமா வருதுல்ல!

  ReplyDelete
 108. // KANA VARO said...
  இம்புட்டு பேர் கமெண்ட் பண்ணிட்டாங்க. நான் வருகைக்கு..//

  பரவாயில்லை பாஸ்..விடுங்க!

  ReplyDelete
 109. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இவ்ளோ பேர் கமென்ட் பண்ணிடாங்க.. நான் என்ன புதுசா சொல்றது..//

  அடேங்கப்பா..இல்லைன்னா அண்ணன் பிரிச்சு மேஞ்சுருவாரு!..ஏன்யா இது உங்களுக்கே ஓவராத் தெரியலை...

  ReplyDelete
 110. // பாரத்... பாரதி... said...
  லோசன் அவர்களால், வெற்றி எஃப்.எம்மில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..//

  நன்றி பாஸ்.

  ReplyDelete
 111. // FOOD said...
  ஸ்பீட் மாஸ்டருக்கு ரொம்ப ஸ்பீட வேலை கிடைக்க நானும் பிரார்த்தனையுடன் முயற்சியும் செய்கிறேன்.//

  ரொம்ப நன்றி சார்.

  ReplyDelete
 112. எல்லாத்திலயும் ஓட்டு போட்டாச்சு

  ReplyDelete
 113. //இலங்கை வானொலியான வெற்றி எஃப்.எம்மில் மூத்த பதிவர் லோசன் 'நாள் ஒரு தளம்' என்ற நிகழ்ச்சி மூலம் இணையத்தளங்களையும் வலைப் பதிவுத் தளங்களையும் நாள் தோறும் அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் வரும் வெள்ளியன்று காலை காலை இந்திய நேரப்படி 7.40 அளவில் நமது ‘செங்கோவி’ வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.//

  வாழ்த்துக்கள் செங்கோவி...
  நல்லா எழுதுறீங்கன்னு சொன்னா நம்பவே மாட்றீங்களே....

  உங்கள் எழுத்தில் மென்மேலும் மெருகு கூட வாழ்த்துக்கள்...

  கூடவே உங்களை ஆட்டிப்படைக்கும் ஷகீலா...நமீதா...பேய்கள் ஒழியவும் பிரார்த்திக்கிறேன்....

  ReplyDelete
 114. //தமிழ்வாசி - Prakash said...
  எல்லாத்திலயும் ஓட்டு போட்டாச்சு//

  இதை அவசியம் சொல்லணுமா?

  ReplyDelete
 115. Reverie said...

  //வாழ்த்துக்கள் செங்கோவி...
  நல்லா எழுதுறீங்கன்னு சொன்னா நம்பவே மாட்றீங்களே....//

  ரைட்டு!

  //உங்கள் எழுத்தில் மென்மேலும் மெருகு கூட வாழ்த்துக்கள்...//

  மிக்க நன்றி!

  //கூடவே உங்களை ஆட்டிப்படைக்கும் ஷகீலா...நமீதா...பேய்கள் ஒழியவும் பிரார்த்திக்கிறேன்..//

  யோவ், இதுக ஒழிஞ்சிட்டா அப்புறம் எப்படி மெருகு கூடும்?

  போச்சு, இன்னைக்கு கமெண்ட்டும் ரிஜக்டேட்!

  ReplyDelete
 116. போச்சு, இன்னைக்கு கமெண்ட்டும் ரிஜக்டேட்!/////சரி,சரி வுடுங்க!

  ReplyDelete
 117. >>ஒரு விஷயம் மட்டும் நல்லாத் தெரியுது..பெட்ரொல்ல் விலையும் பிரியாமணி ஸ்கர்ட்டும் ஒன்னு தான்..ரெண்டும் ஏறிக்கிட்டே போகுதேயொழிய இறங்குற மாதிரித் தெரியலையே..!

  hi hi அண்ணே, டி சர்ட் வாசகத்துக்கு விளக்கம் சொல்லவே இல்லை?

  ReplyDelete
 118. வணக்கம் பாஸ்,
  நேற்றைய தினம் ஒரு விடயத்தினைத் தவற விட்டு விட்டேன்,
  சகோதரன் ஸ்பீட் மாஸ்டருக்கு வெகு விரைவில் வேலை கிடைக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 119. //சி.பி.செந்தில்குமார் said... [Reply]
  >>ஒரு விஷயம் மட்டும் நல்லாத் தெரியுது..பெட்ரொல்ல் விலையும் பிரியாமணி ஸ்கர்ட்டும் ஒன்னு தான்..ரெண்டும் ஏறிக்கிட்டே போகுதேயொழிய இறங்குற மாதிரித் தெரியலையே..!

  hi hi அண்ணே, டி சர்ட் வாசகத்துக்கு விளக்கம் சொல்லவே இல்லை?//

  நேத்து ஆயிரம் பேருக்கு மேல வந்தாங்க..ஒருத்தரிக்காவது இப்படிக் கேட்கணும்னு தோணிச்சா..அண்ணன் கண்ணு ரொம்ப பவர்ஃபுல்!

  ReplyDelete
 120. hi hi அண்ணே, டி சர்ட் வாசகத்துக்கு விளக்கம் சொல்லவே இல்லை?//அதுல என்ன "பெரிய" ரகசியம் இருக்குது?ஓ.கே. நியூ யோர்க் அப்புடீன்னு வரும்!

  ReplyDelete
 121. ஹா!ஹா! ஹா! எப்படி?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.