Saturday, September 3, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_43

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்.......

பதிவர் சிவா தலையை உலுப்பிக்கொண்டான். ஏன் இந்த வரி இன்று அடிக்கடி ஞாபகம் வருகிறது? என்ன பாடல் இது? பொதுவாக ஏதாவது நல்ல பாடல் கேட்டுவிட்டால், அன்று முழுக்க அந்தப் பாடல் விடாது துரத்தும். இளையராஜாவின் ‘யமுனை ஆற்றிலே’ இரண்டு நிமிடப் பாடல் தான். ஒரு தடவை கேட்டுவிட்டால், அதுவே ஓடிக்கொண்டிருக்கும்.

இன்று காலையில் இருந்து இந்த வரி ஓடிக்கொண்டே இருக்கிறது..ஆஃபீஸ் வந்தும் விடவில்லை. யார் பிரம்ம ராட்சசர்? ஏன் பெண்களை பின்தொடர்கிறார்கள்? 

கொஞ்ச நேர யோசிப்பில் அது கந்த சஷ்டிக் கவசம் என்று புரிந்தது. இந்த வரி எங்கே வரும்? இதன் முந்தைய, பிந்தைய வரிகள் என்ன? மெதுவாக மனதிற்குள் கவசம் சொல்லிப் பார்த்தான். அந்த வரிகள் சிக்கவில்லை..

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்..

சிவாவுக்கு சிரிப்பு வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேய்க்குப் பயந்து தினமும் படித்தது ஞாபகம் வந்தது. ’சமீபத்தில் ஏதும் படிக்கவில்லையே.பெண்களைத் தொடரும்..’ தலையை உதறிவிட்டு, ஃபேஸ்புக் ஓப்பன் செய்தான்.

மதன் ஆன்லைனில் இருந்தான். 

“என்ன மாப்ள..கடலையா? உனக்குத் தான் வேலையில்லை..அவளையாவது வேலை செய்ய விடு” என்று மெசேஜினான்.

”ஓடிப் போயிரு..டோண்ட் டிஸ்டர்ப்” என்றான் மதன். உண்மையில் மதன் அப்போது அவனும் யோஹன்னாவும் அந்தரங்கமாய் இருந்த போது எடுத்த ஃபோட்டோக்களையும் வீடியோவையும் தன் லேப்டாப்பில் ஒரு ஃபோல்டர்உருவாக்கி, அங்கே சேமித்துக்கொண்டிருந்தான்.

”அப்போ கடலை உண்மை தானா..ஹா..ஹா” என்றபடி சிவா யோஹன்னாவுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினான்.

அவள் உடனே அக்செப்ட் செய்தாள்.

“ஹாய் அண்ணா” என்று மெசேஜ் வந்தது.

“அண்ணா?..இந்த வார்த்தை எப்படித் தெரியும்?”

“மதன்கிட்ட கேட்டேன்..ஐ லைக் இட்”

“ஐ டூ..அப்புறம் மதன் என்ன சொல்றான்?”

“ம்..எல்லாமே..ஐ அம் வெரி லக்கி..அவன் எதையும் என்கிட்ட மறைக்கறதில்லை தெரியுமா? ..ஜமீலா மேட்டரைக்கூட!” 

“ஜமீலாவா? யார் அது?”

“உனக்குத் தெரியாதா..இந்தியால மதன்கூட லிவிங் டுகெதரா இருந்துச்சே அந்தப் பொண்ணு”

சிவா குழம்பிப்போய் ஸ்கிரீனையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். 

மதன் “டேய், என்ன பண்றே?” என்று மெஜேஜ் போட்டான்.

’ஏன் இவன் திரும்ப வர்றான்’னு யோசிச்சபடியே “யோஹன்னாகூட சாட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று பதில் போட்டான்.

“ஓத்...அவகூட என்னடா சாட்? எதுக்கு அவளுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புனே? அவகூடப் பேசணும்னா நான் இருக்கும்போது பேசு. போதும். பிரவீணா மேட்டர்ல பண்ண மாதிரி பண்ணுவோம்னு நினைச்சே மவனே தொலைச்சுடுவேன்” என்றான் மதன்.


சிவாவுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ‘இவன் தானே வலிய யோஹன்னாவிடம் முதலில் அழைத்துச் சென்றான்? இவன்தானே  இப்போது எங்கேஜ்மெண்ட்டுக்கும் வா என்று அழைத்தான்? ஏன் இப்போது இப்படிப் பேசுகிறான்? அதுவும் அந்தப் பெண்ணை நான் எவ்வளவு மரியாதையாக நினைக்கின்றேன்? இவ்வளவு கேவலமாப் பேசுறானே’ என தொடர்ந்து குழம்பினான்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை குளோஸ் செய்துவிட்டு , எழுந்தான். ஃபேஸ் வாஷ் செய்ய வேண்டும் போல் இருந்தது. யாரோ முகத்தில் உமிழ்ந்துவிட்டது போல் வலித்தது.

வாஷ்பேசின் போய் முகத்தைக் கழுவினான்.

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்....

என்ன இது..மீண்டும் அதே வரி..என்ன நடக்கிறது? மதன் என்னைச் சந்தேகப்படுகிறானா?

பேண்ட்ரி போய் காஃபி எடுத்தான்.

’பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்..

இல்லை மதன் யோஹன்னாவுடன் நான் பேசுவதைப் பார்த்து பயப்படுகிறான். ஜமீலா..ஜமீலா யார்? இந்தியாவில் ஏது லிவ்விங் டுகெதர்? அப்படியென்றால் அவனுக்கு கல்யாணம் ஆனதாக நான் சந்தேகப்பட்டது சரியா? யாரைக் கேட்கலாம்? பழனியை? செங்கோவியை? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்..
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட....

ஹா..அடுத்த வரி இது தான்..இது தான்..

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட....’

(செவ்வாய்க்கிழமை....தொடரும்)


டிஸ்கி : கொஞ்சம் வேலை..வெளியில் கிளம்புகிறேன். காலையில் சந்திப்போம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

65 comments:

 1. Anea suvarasiyam thanga mudiyalai. Apuram aenachu. Ithu unmailayea nadantha kadhai thana. Antha poruki madhan sir(hi.. Hi.) inum irukara. Payavulla anyayam panirukanea.

  ReplyDelete
 2. வாக்கும், வாழ்த்துகளும்..

  ReplyDelete
 3. இறுசு காட்டேரி.., துன்ப சேனையும்..

  ReplyDelete
 4. ”ஓடிப் போயிரு..டோண்ட் டிஸ்டர்ப்” என்றான் மதன். உண்மையில் மதன் அப்போது அவனும் யோஹன்னாவும் அந்தரங்கமாய் இருந்த போது எடுத்த ஃபோட்டோக்களையும் வீடியோவையும் தன் லேப்டாப்பில் ஒரு ஃபோல்டர்உருவாக்கி, அங்கே சேமித்துக்கொண்டிருந்தான்.//

  அதானே!நல்ல நேரம் பாத்து டிஸ்டர்ப் பண்ணா எப்படி?

  ReplyDelete
 5. நான் நினைக்கிறேன்,இது இப்போதைக்கு முடியும் போல தெரியல! நல்லது தானே?

  ReplyDelete
 6. மதன் யோஹன்னாவுடன் நான் பேசுவதைப் பார்த்து பயப்படுகிறான். ஜமீலா..ஜமீலா யார்? இந்தியாவில் ஏது லிவ்விங் டுகெதர்? அப்படியென்றால் அவனுக்கு கல்யாணம் ஆனதாக நான் சந்தேகப்பட்டது சரியா? யாரைக் கேட்கலாம்? பழனியை? செங்கோவியை? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?//

  உங்கயை கேட்டாரா சீக்கிரம் சொல்லுங்க!

  ReplyDelete
 7. யாரைக் கேட்கலாம்? பழனியை? செங்கோவியை? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?/////செங்கோவி,இங்க தாங்க இருக்கிறாரு!

  ReplyDelete
 8. சிவாவுக்கு சிரிப்பு வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேய்க்குப் பயந்து தினமும் படித்தது ஞாபகம் வந்தது.///சிவா,கல்லூரி படிக்கும் காலத்தில் பேய்க்குப் பயந்தாரா?ஆம்பளப் பேயா,பொம்பளப் பேயா?

  ReplyDelete
 9. மதன் நல்லாப் பேசுறாரு!(காண்டாவுராறு?)

  ReplyDelete
 10. //• » мσнαη « • said...
  நமீதா ,....ச்சீ,,...மன்மத லீலைகள் 100வது பாகம் எப்ப வரும்?????//

  மன்மதன் லீலைகள் 55ஐ தாண்டாதுன்னு நம்புறேன்..

  நமீதா லீலைகள் 100ஐத் தாண்டும்..

  ReplyDelete
 11. ? செங்கோவியை? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?//


  பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்

  ReplyDelete
 12. அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட....’//

  ஏதோ அந்த பாடல் வரியில் சஸ்பென்ஸோடு விட்டு விட்டீர்களே... செவ்வாய் கிழமை வரை வெய்ட்டிங் செய்கிறோம் நண்பரே

  ReplyDelete
 13. gopituty said...
  // Anea suvarasiyam thanga mudiyalai. Apuram aenachu. Ithu unmailayea nadantha kadhai thana. //

  ஆமாம் கோபிக்குட்டி..அதனால தானே டைரி-ன்னு போட்டிருக்கேன்.

  ReplyDelete
 14. // பாரத்... பாரதி... said...
  இறுசு காட்டேரி.., துன்ப சேனையும்..//

  உங்களுக்கு இது தான் மனசுல ஓடுதா? பயங்கரமா இருக்கே?

  ReplyDelete
 15. // கோகுல் said...
  ”ஓடிப் போயிரு..டோண்ட் டிஸ்டர்ப்” என்றான் மதன். உண்மையில் மதன் அப்போது அவனும் யோஹன்னாவும் அந்தரங்கமாய் இருந்த போது எடுத்த ஃபோட்டோக்களையும் வீடியோவையும் தன் லேப்டாப்பில் ஒரு ஃபோல்டர்உருவாக்கி, அங்கே சேமித்துக்கொண்டிருந்தான்.//

  அதானே!நல்ல நேரம் பாத்து டிஸ்டர்ப் பண்ணா எப்படி? //

  பதிவர் கோகுல் அளவுக்கு பதிவர் சிவாவுக்கு விவரம் இல்லை.

  ReplyDelete
 16. / கோகுல் said...
  மதன் யோஹன்னாவுடன் நான் பேசுவதைப் பார்த்து பயப்படுகிறான். ஜமீலா..ஜமீலா யார்? இந்தியாவில் ஏது லிவ்விங் டுகெதர்? அப்படியென்றால் அவனுக்கு கல்யாணம் ஆனதாக நான் சந்தேகப்பட்டது சரியா? யாரைக் கேட்கலாம்? பழனியை? செங்கோவியை? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?//

  உங்கயை கேட்டாரா சீக்கிரம் சொல்லுங்க! //

  ஆமா, எங்கயை கேட்டாரு!

  ReplyDelete
 17. Yoga.s.FR said...
  // யாரைக் கேட்கலாம்? பழனியை? செங்கோவியை? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?/////செங்கோவி,இங்க தாங்க இருக்கிறாரு! //

  தல, வந்துட்டேன்.

  //சிவாவுக்கு சிரிப்பு வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேய்க்குப் பயந்து தினமும் படித்தது ஞாபகம் வந்தது.///சிவா,கல்லூரி படிக்கும் காலத்தில் பேய்க்குப் பயந்தாரா?ஆம்பளப் பேயா,பொம்பளப் பேயா? //

  சிவா சிரிக்கிறதைப் பார்த்தா தெரியலை?

  // மதன் நல்லாப் பேசுறாரு!(காண்டாவுராறு?) //

  ஃபோன் நம்பர் கொடுங்க..உங்ககிட்டயே பேசச் சொல்றேன்.

  ReplyDelete
 18. //மாய உலகம் said...
  அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட....’//

  ஏதோ அந்த பாடல் வரியில் சஸ்பென்ஸோடு விட்டு விட்டீர்களே... செவ்வாய் கிழமை வரை வெய்ட்டிங் செய்கிறோம் நண்பரே //

  அப்படியே செய்யுங்கள்.

  ReplyDelete
 19. >>
  டிஸ்கி : கொஞ்சம் வேலை..வெளியில் கிளம்புகிறேன். காலையில் சந்திப்போம்.


  டிஸ்கி : கொஞ்சும் வேலை..வெளியில் கிளம்புகிறேன். காலையில் சந்திப்போம்.

  ஹி ஹி கரெக்‌ஷன் பை ராம்சாமி

  ReplyDelete
 20. என்ன பாஸ் இன்னைக்கு டக்கண்ணு முடிஞ்சுது , இன்னும் கொஞ்சம் தந்துட்டு வெளியே போய் இருக்கலாம் இல்ல

  ReplyDelete
 21. கொஞ்சம் வேலை..வெளியில் கிளம்புகிறேன்....

  கடையை யாருய்யா பாத்துபபா?

  ReplyDelete
 22. சிவா ராக்ஸ்!!நான் அவன சொன்னேன்!

  ReplyDelete
 23. அப்புறம் முன்னூறு போலோவேர்ஸ்!!வாழ்த்துக்கள் பாஸ்!!

  ReplyDelete
 24. //ஓத்...அவகூட என்னடா சாட்? எதுக்கு அவளுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புனே? அவகூடப் பேசணும்னா நான் இருக்கும்போது பேசு. போதும். பிரவீணா மேட்டர்ல பண்ண மாதிரி பண்ணுவோம்னு நினைச்சே மவனே தொலைச்சுடுவேன்” என்றான் மதன்.///

  இது எல்லா இடத்திலும் நடக்கும் கூத்துதான் மதன் எவ்வளவோ பரவாஇல்லை ஆனால் எனது சில நண்பர்கள் அவங்க பிகருகளின் பேஸ்புக்கில் நாங்கள் பிரண்டா இருந்தால் அவள்கிட்ட சொல்லி முதலில் எங்களை பிரண்ஸ் லிஸ்டில் இருந்து நீங்கிவிடுவாங்க.ஹி.ஹி.ஹி.ஹி

  அப்பறம் ஒரு கேள்வி இது 2004 ம் ஆண்டுக்கு பிறகு நடந்த கதைதானே?

  இன்று என் கடையில்(பகுதி-8)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/8.html

  ReplyDelete
 25. மாம்ஸ், மூணு பாகத்துக்கு நான் வரல... அதுக்குள்ளே என்னென்னமோ நடந்து போச்சே.... ஜமீலா சோகம், யோகானா சந்தோசம், மதனின் பொய் விளையாட்டுகள்... இன்னும் என்னன்னா வருமோ???

  ReplyDelete
 26. யோஹன்னாவையாச்சும் காப்பாத்துங்கய்யா, உங்ககிட்ட கேட்டா உண்மைய சொல்லுவீங்களா இல்ல பொய் சொல்லுவீங்களா?
  எனக்கு தெரியும் நீங்க நல்லவரு(?)ன்னு உண்மைய சொல்லுங்க....


  அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 27. தொடர் நன்றாக போகிறது ,இப்பொழுது தான் கதாசிரியர் உள்ளே வருகிறார்.

  அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்

  வரேன் நண்பா

  ReplyDelete
 28. // சி.பி.செந்தில்குமார் said...
  டிஸ்கி : கொஞ்சும் வேலை..வெளியில் கிளம்புகிறேன். காலையில் சந்திப்போம்.

  ஹி ஹி கரெக்‌ஷன் பை ராம்சாமி //

  நல்ல கரெக்சன்யா........நல்லா இருங்க.

  ReplyDelete
 29. // துஷ்யந்தன் said...
  என்ன பாஸ் இன்னைக்கு டக்கண்ணு முடிஞ்சுது , இன்னும் கொஞ்சம் தந்துட்டு வெளியே போய் இருக்கலாம் இல்ல //

  செவ்வாய்க்கிழமை தர்றேன் துஷ்.

  ReplyDelete
 30. // KANA VARO said...
  ஹாய் அண்ணா //

  ஹாய் கண வரோ!

  ReplyDelete
 31. // ரெவெரி said...
  கொஞ்சம் வேலை..வெளியில் கிளம்புகிறேன்....

  கடையை யாருய்யா பாத்துபபா? //

  நீங்கள்லாம் இருக்கீங்களே.

  ReplyDelete
 32. // மைந்தன் சிவா said...
  சிவா ராக்ஸ்!!நான் அவன சொன்னேன்! //

  ஹா..ஹா..சிவான்னாலே அப்படித் தானோ?

  ReplyDelete
 33. K.s.s.Rajh said...

  //இது எல்லா இடத்திலும் நடக்கும் கூத்துதான் மதன் எவ்வளவோ பரவாஇல்லை ஆனால் எனது சில நண்பர்கள் அவங்க பிகருகளின் பேஸ்புக்கில் நாங்கள் பிரண்டா இருந்தால் அவள்கிட்ட சொல்லி முதலில் எங்களை பிரண்ஸ் லிஸ்டில் இருந்து நீங்கிவிடுவாங்க.ஹி.ஹி.ஹி.ஹி //

  அது எவ்வளவோ பரவாயில்லை.

  // அப்பறம் ஒரு கேள்வி இது 2004 ம் ஆண்டுக்கு பிறகு நடந்த கதைதானே? //

  இந்தப் பகுதி 2008!

  ReplyDelete
 34. // தமிழ்வாசி - Prakash said...
  மாம்ஸ், மூணு பாகத்துக்கு நான் வரல... அதுக்குள்ளே என்னென்னமோ நடந்து போச்சே.... ஜமீலா சோகம், யோகானா சந்தோசம், மதனின் பொய் விளையாட்டுகள்... இன்னும் என்னன்னா வருமோ??? //

  உங்களை யாருய்யா டூர் போகச் சொன்னது?

  ReplyDelete
 35. // Heart Rider said...
  யோஹன்னாவையாச்சும் காப்பாத்துங்கய்யா, உங்ககிட்ட கேட்டா உண்மைய சொல்லுவீங்களா இல்ல பொய் சொல்லுவீங்களா?
  எனக்கு தெரியும் நீங்க நல்லவரு(?)ன்னு உண்மைய சொல்லுங்க....

  அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்..//

  ரைட்டு!

  ReplyDelete
 36. // M.R said...
  தொடர் நன்றாக போகிறது ,இப்பொழுது தான் கதாசிரியர் உள்ளே வருகிறார்.

  அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் //

  ஆமா, பார்ப்போம்.

  ReplyDelete
 37. பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்.......//

  அவ்...இலங்கை ஜனாதிபதிக்கே சவால் விடுற மாதிரி ஒரு வசனம் வைக்கிறீங்க....
  அவ்....
  மர்ம மனிதர்கள் - கிரிஸ் மனிதர்கள் மேட்டருடன் மேற்படி வரிகள் நன்றாகவே பொருந்திப் போகின்றன.

  ReplyDelete
 38. அவள் உடனே அக்செப்ட் செய்தாள்.

  “ஹாய் அண்ணா” என்று மெசேஜ் வந்தது.

  “அண்ணா?..இந்த வார்த்தை எப்படித் தெரியும்?”

  “மதன்கிட்ட கேட்டேன்..ஐ லைக் இட்”

  “ஐ டூ..அப்புறம் மதன் என்ன சொல்றான்?”//

  ஐயோ...இப்படி எல்லாம் தூக்கலா எழுதுறீங்களே...
  சான்ஸே இல்லை பாஸ்...
  இந்த இடங்களைப் படிக்கையில் ஒரு வித சந்தோச உணர்வினைத் தருகின்றது உங்கள் பதிவு.

  ReplyDelete
 39. ம்..எல்லாமே..ஐ அம் வெரி லக்கி..அவன் எதையும் என்கிட்ட மறைக்கறதில்லை தெரியுமா? ..ஜமீலா மேட்டரைக்கூட!”

  “ஜமீலாவா? யார் அது?”

  “உனக்குத் தெரியாதா..இந்தியால மதன்கூட லிவிங் டுகெதரா இருந்துச்சே அந்தப் பொண்ணு”//

  அவ்.....அடப் பாவமே...இப்படியெல்லாமா போட்டுக் குடுக்கிறாங்க.

  ReplyDelete
 40. போ..மச்சி..
  சூப்பரா கதையினை நகர்த்தி விட்டு, க்ந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளையும் சொல்லி விட்டு, முக்கியமான கட்டத்தில் முற்றுப் புள்ளி வைத்துத் தொடரும் என்று போட்டு எஸ் ஆகிட்டீங்களே...
  இது தகுமா?

  செவ்வாய் கிழமை வரை காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 41. இது மதன் கதையா
  மன் மதன் கதையா
  இப்படியும் மனிதர்கள்
  இருப்பது என்னவோ
  உணமைதான்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 42. // நிரூபன் said...

  இந்த இடங்களைப் படிக்கையில் ஒரு வித சந்தோச உணர்வினைத் தருகின்றது உங்கள் பதிவு.//

  ரொம்ப சந்தோசம் நிரூ.

  ReplyDelete
 43. // புலவர் சா இராமாநுசம் said...
  இது மதன் கதையா
  மன் மதன் கதையா
  இப்படியும் மனிதர்கள்
  இருப்பது என்னவோ
  உணமைதான் //

  ஆமாம் ஐயா..மேலான நிலையிலும் மனிதர் உண்டு, மிகக் கீழான நிலையிலும் மனிதர் உண்டு.

  ReplyDelete
 44. செங்கோவி ........இந்தப் பகுதி 2008! ////அப்பயும் நானு இங்க தாங்க இருந்தேன்.மிஸ் பண்ணிட்டனே?

  ReplyDelete
 45. செங்கோவி said...ஃபோன் நம்பர் கொடுங்க..உங்ககிட்டயே பேசச் சொல்றேன்.////வேணாங்க,அப்புறம் பேஜாராயிடும்! அவரு "அப்புடில்லாம்"பேசிட்டாருன்னா?

  ReplyDelete
 46. கிழிஞ்ச டைரிக்குள்ளே ஒரு நல்ல டைரி ஹி ஹி...

  ReplyDelete
 47. வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க!ஒத்தவரில சொல்லணும்னா’ சிந்திக்க வச்சுட்டீங்க ஸா!’

  ReplyDelete
 48. // Yoga.s.FR said... [Reply]
  செங்கோவி ........இந்தப் பகுதி 2008! ////அப்பயும் நானு இங்க தாங்க இருந்தேன்.மிஸ் பண்ணிட்டனே? //

  நான் அப்படி நினைக்கலை..ஒருவேளை அதை நேர்ல பார்த்தா ‘ஓ..நீ தானா..ஃபன்னி லேடி’ன்னு நீங்க சொல்லலாம்!

  ReplyDelete
 49. / MANO நாஞ்சில் மனோ said... [Reply]
  கிழிஞ்ச டைரிக்குள்ளே ஒரு நல்ல டைரி ஹி ஹி... //

  அடேங்கப்பா..அண்ணன் இன்னிக்குத் தான் வாயைத் திறந்து நல்ல டைரின்னு சொல்லி இருக்கார்!

  ReplyDelete
 50. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said... [Reply]
  வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க!ஒத்தவரில சொல்லணும்னா’ சிந்திக்க வச்சுட்டீங்க ஸா!’ //

  யாருய்யா இந்த கும்பிடு சாமி?......அப்போ இத்தனை வருசமா நீங்க சிந்திக்கவே இல்லையா?

  ReplyDelete
 51. Super ... This particular episode is 3 consecutive sixes of Dravid. You brought out the link of Praveena old matter to this Joanna (people might have forgotten Praveen's episode and the role of Siva).

  Waiting for knowing whom did Siva call?

  yet another interesting episode, make one inbetween the week.

  ReplyDelete
 52. //வினையூக்கி said...
  Super ... This particular episode is 3 consecutive sixes of Dravid. You brought out the link of Praveena old matter //

  நன்றி செல்வா...செவ்வாய் வரை பொறுங்கள்..

  ReplyDelete
 53. கிளிஞ்ச டைரி ஏ இப்படி எண்டா கிழியாத
  டைரி

  ReplyDelete
 54. நான் அப்படி நினைக்கலை..ஒருவேளை அதை நேர்ல பார்த்தா ‘ஓ..நீ தானா.."பன்னி லேடி"ன்னு நீங்க சொல்லலாம்!
  September 4, 2011 2:55 PM ////பன்னி லேடியா?ஆள வுடுங்க,சாமி!

  ReplyDelete
 55. நான் அப்படி நினைக்கலை..ஒருவேளை அதை நேர்ல பார்த்தா ‘ஓ..நீ தானா.."பன்னி லேடி"ன்னு நீங்க சொல்லலாம்!////இதுக்கு வேற மாதிரி கமெண்டு போடலாம்! நீங்க வேணாம்னு சொல்லிட்டீங்க,இல்ல?

  ReplyDelete
 56. @Yoga.s.FR ரொம்ப சுவாரஸ்யமான கமெண்ட்டா இருந்தா, தனியா மெயில்ல சொல்லுங்க..ஹி..ஹி.

  ReplyDelete
 57. கலக்கல்... கலக்குங்க...ஸ்பீட் ஏறுது...

  ReplyDelete
 58. நடந்தது பயங்கரமான்னா அண்ணன் அதவிட பயங்கரமா கதைய கொண்டுபோறாரே.....?

  ReplyDelete
 59. அலோ செங்கோவி ஒயின்ஷாப்பா.... கட எப்பசார் திறப்பீங்க.......?

  ReplyDelete
 60. அலோ.... கட எப்ப சார் தெறப்பீங்க....?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.