Tuesday, September 6, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_44

சிவா எங்களைத் தேடத் தொடங்கினான். அதில் பிரச்சினை என்னவென்றால், சிவாவும் என்னைப் போலவே நண்பர்களைப் பேணுவதில் எக்ஸ்பெர்ட்! 

ஒரு இடம் விட்டு நகர்ந்தால், அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு அத்தோடு முடிந்து போகும். சோம்பேறித்தனமே காரணம். ‘கழுத்தை இறுக்கும்’ நட்பை நாங்கள் எப்போதுமே விரும்பியதில்லை. வந்ததை வரவில் வைப்போம்..போனதைச் செலவில் வைப்போம் என எளிதாகவே எடுத்துக்கொள்ளும் ரகம் நாங்கள்.

என்னுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஐந்து பேருமே அந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். ’நண்பேண்டா..நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேண்டா’ என்று நாங்கள் உணர்ச்சிவசப் பட்டதேயில்லை. அத்தகைய இறுக்கும் நட்பை நாங்கள் எப்போதும் விரும்பியதும் இல்லை. 

ஆறு மாதங்கள் வரை பேசாமல் இருந்துவிட்டுப் பேசினால், ஏதோ நேற்றுப் பேசிய பேச்சின் தொடர்ச்சி போல ‘சொல்லுடா...’ என்று கேஷுவலாக ஆரம்பிப்போம். ‘மாப்ளே, ஒரு டாகுமெண்ட் ஃப்ரெண்ட்கிட்ட கொடுத்து விட்டிருக்கேன்..ஏர்போர்ட் போய் வாங்கிட்டு, அதை என் வீட்டு அட்ரஸ்க்கு கொரியர் பண்ணிடு” என்றால் உடனே ஏர்போர்ட்டுக்கு ஓடுவோம்.

 ’ஏண்டா இத்தனை நாளாப் பேசலை’ என்பது போன்ற சிணுங்கல்களுக்கு இங்கு இடம் இல்லை. தேவைப்படும்போது கேள், பேசத் தோன்றும்போது பேசு. நீண்டநாள் பிரிந்திருந்தாலும், நல்ல உள்ளங்களின் கற்பும் கெடுவதில்லை, நட்பும் கெடுவதில்லை!

ந்த மாதிரி பற்றற்ற சாமியார்த்தனமான நட்பே இப்போது சிவாவுக்கு வில்லனாகப் போயிற்று. சிவா எங்கள் நட்பு வட்டத்துள் இருந்த நண்பன் இல்லை. காலேஜ் முடிந்தபின் நாங்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. பல இடங்களில் கேட்டும் அவனுக்கு எனது லேட்டஸ்ட் மெயில் ஐடி கிடைக்கவில்லை. இடையில் நான் நான்கைந்து முறை மெயில் ஐடியை மாற்றியிருந்தேன். (அதற்குக் காரணம் நான் நான்கைந்து ஃபிகர்களை கழட்டி விட்டது தான் என்று பின்னூட்டம் போட பரபரக்குதா? அடங்குங்க!)

இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சிவாவின் பதிவுகளை அப்போது தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். சிவா தன் சொந்தப் பெயரிலேயே எழுதியதால் எனக்கு அவர் யார் என்று தெரிந்தது. ‘ச்சார்..ச்சூப்பரா எழுதுறீங்க ச்சார்” என்று வேறு பெயரில் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருந்தேன். அவரும் கெத்தாக ‘மிக்க நன்றி நண்பரே’ என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

ந்தக் கூத்து ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, மதன் வருங்காலத்தில் என்னவெல்லாம் பிரச்சினை வரும் என்று யோசித்து தினமும் ஒன்றாக கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

”எனக்கு உண்மையான ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லை. எல்லாருமே ஏமாத்துக்காரனுக. இப்படித்தான் செங்கோவின்னு ஒருத்தன்..வேலையில்லாம நாயா அலைஞ்சுக்கிட்டிருந்தான். நான் தான் சென்னைல வேலை வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் என்ன பண்ணான் தெரியுமா? எங்க பாஸ்க்கு சொம்படிச்சு, என்னைவிட அதிக சேலரி, புரமோசன் வாங்கிட்டான்.”

“இந்த சிவா இருக்கானே, இவனுக்கு யாருமே நல்லா இருந்தாப் பிடிக்காது. ஏதாவது சொல்லி கெடுக்கிறதே குறியா இருப்பான். இருந்தாலும் நம்மகிட்ட அப்படிப் பண்ண மாட்டானு நினைக்கேன். நம்ம மேல அன்பாத் தானே இருக்கான்”

“நான் ஃபாரின் வந்திருக்கிறதே இந்தியால இருக்கிற என் கிளாஸ் மேட்ஸ்க்கு வயித்தெரிச்சலா இருக்கு. என்னடா சான்ஸ் கிடைக்கும், இதைக் கெடுக்கன்னு தான் அலையறாங்க.அதான் நான் எவன்கிட்டயும் டச்சே வச்சுக்கிறதில்லை”

யோஹன்னாவிற்கு சிவாவை மட்டுமே தெரியும் என்பதால் மற்ற எல்லாக் கதைகளையும் கேட்டுக்கொண்டாள். சிவாவைப் பற்றிப் பேசும்போது மட்டும் ‘அவர் அப்படின்னு நான் நினைக்கலை’ என்றாள். 

தனுக்கு விசா முடிந்து கிளம்பும் நாள் வந்தது. அப்பாவிற்குப் போன் பண்ணி தான் ஒரு மாத லீவில் வருவதாகச் சொன்னான். ஜமீலாவிற்கும் ஃபோன்  செய்தான். ஒன்றும் கவலைப் பட வேண்டாம் என்றும் தான் வந்து எல்லாவற்றையும் சரி செய்வதாகவும் சொன்னான். ஜமீலா அழுதாள், அதைத் தவிர வேறொன்றும் பேச அவளால் முடியவில்லை.

மதன் இந்தியா வந்திறங்கினான். மதுரை சென்று அப்பாவைப் பார்த்தான். அவர் இவனுக்கு ஆறுதல் சொன்னார்.

“ஒன்னும் கவலைப் படாதப்பா..அந்த கண்...-ஐ அடிச்சுத் துரத்தியாச்சு. அப்பா இருக்கிறவரை எதுக்கும் பயப்படாத” என்றார்.

“அப்பா, அவ இன்னும் நம்ம கிராமத்துல தான் இருக்கா, தெரியுமா?”

“ம்..எல்லாம் அந்த லட்சுமி பண்ற வேலை..அங்க நமக்கு வேண்டாத குரூப்பும் இருக்கு. அதான் உள்ள இறங்கி அடிக்க யோசிக்கேன். நீ கண்டுக்காத..எத்தனை நாளைக்கு வச்சுக் காப்பாத்துவாங்கன்னு பார்ப்போம்”

”இல்லைப்பா..அது நல்லதில்லை..திடீர்னு போலீசுக்குப் போய் கேஸ்ன்னு ஆயிடுச்சுன்னா, நான் ஃபாரினுக்குப் போகமுடியாமக் கூட ஆயிடலாம். நான் அவகிட்டப் பேசி, அவ அம்மா வீட்ல போய் விட்டுடுறேன். ஏதாவது செட்டில்மெண்ட்டுக்குக் கேட்டா, நானே கொடுத்திடறேன். இதுல முரட்டுத்தனமா இறங்க வேண்டாம்”

“நீ சொல்றதும் சரி தான்..சீக்கிரம் அந்தக் கழுதையை இங்க இருந்து விரட்டிட்டு வா” என்று மகனை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.


தன் ராஜபாளையம் போய் இறங்கினான். ஜமீலாவால் அழுவதைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை. அவனை ஃபாரின் அனுப்பும்போது தான் இருந்த நிலையை நினைத்துப் பார்த்தாள். இப்போது யார் யாரோ வந்து பார்த்து பரிதாபப்பட்டு பேசும் நிலையில் இருப்பதை நினைக்கும்போது, அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“சரி, விடு. அவருக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சு. நாம இப்போ நம்ம வாழ்க்கையைப் பார்ப்போம். அவரைக் கேட்டா நான் உன்னைக் கட்டிக்கிட்டேன், இப்போ அவர் பேச்சைக் கேட்டு உன்னை விரட்ட? யார் இதை அவர்கிட்டச் சொன்னாங்கன்னு தான் தெரியலை. அய்யர்க்குத் தெரியும். ஆனா அவனுக்கு அப்பாவைத் தெரியாதே..அய்யர்கூட செங்கோவி இருக்கான். அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ? அவனுக்கும் அப்பா ஃபோன் நம்பர் தெரியாதே..”

“யாரா இருந்தாலும் சரி, அவன் நல்லாவே இருக்க மாட்டான். நான் அவங்களுக்கு என்ன கெடுதல் பண்ணேன்?” என்றாள் ஜமீலா.

“அடுத்தவங்களைப் பத்தி பேசுறதை விடு. நாம இங்கே இப்படி சொந்தக்காரங்க வீட்ல இருக்கிறது சரி கிடையாது. நாம எங்கயாவது போய் வீடு எடுத்துத் தங்குவோம்”

“சரி..சென்னை போயிடலாம்”

“வேண்டாம்மா..தமிழ்நாட்டுல எங்கே இருந்தாலும் அப்பா நம்மை நிம்மதியா இருக்க விடமாட்டாரு. நேத்தே அவளைப் பார்க்கப்போனா தூக்குல தொங்கிடுவேன்னு மிரட்டுனாரு. என்னைக்கு ஒரு கைப்பிள்ளைக்காரியை வீட்டைவிட்டு விரட்டுனாரோ, அன்னிக்கே அவர் மேல இருந்த மரியாதை போச்சு. இனி இது தான் என் குடும்பம். நீ..நான்..நம்ம மகன்..அதனால நாம கேரளா போயிடலாம்”

சொந்த மண்ணிற்கே திரும்புவதை நினைத்து ஜமீலா சந்தோசப்பட்டாள்.

“நிஜமாவா?”

“ஆமா..திருச்சுர்ல சில எஞ்சினியரிங் கம்பெனி இருக்கு. அங்க ஏதாவது வேலை தேடிக்கலாம். அதனால அங்க போவோம்.”

“திருச்சூரா? அங்க தான் என் தாய்மாமா இருக்கார். என் மேல அவருக்கு அதிக பாசம்..இப்போ பேசுவாரான்னு தெரியலை..”

’இது என்னடா புது வில்லன்..வேறு ஊர் சொல்லியிருக்கலாமோ’ என்று மதன் யோசித்தான்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

64 comments:

 1. இன்னைக்கு பகலிலேயே லீலையா??

  ReplyDelete
 2. Tnks Sengovi from morning i visit 5 times to yr blog to read part 44 .Plz always advise next edition date or day

  ReplyDelete
 3. ப்ரெசென்ட்

  ReplyDelete
 4. • » мσнαη « • said...
  // முதல் மழை?? //

  அதே!

  // இன்னைக்கு பகலிலேயே லீலையா?? //

  ஆமா...எக்ஸ்ட்ரா தானே இது!

  ReplyDelete
 5. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  maapla time night 12 aayiduchchaa enna? //

  ஆமா மாஃப்ள..ஆயிடுச்சாம் அமெரிக்கால!

  ReplyDelete
 6. // Tirupurvalu said...
  Tnks Sengovi from morning i visit 5 times to yr blog to read part 44 .Plz always advise next edition date or day //

  சாரி..

  எப்பவும் வெள்ளி-சனி இரவு 12 மணி.

  வார நாட்கள்ல வரும்னு சொன்னேன்னா, பகல் 12 மணி.

  அடுத்த பகுதி வெள்ளி நள்ளிரவில்!

  ஆதரவிற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. // siva said...
  ப்ரெசென்ட் //

  இவரு தான் அந்த பதிவர் சிவாவோ?

  ReplyDelete
 8. மாம்ஸ்... லீலை சும்மா விறுவிறுன்னு போகுது முடிவை நோக்கி....

  ReplyDelete
 9. //
  ’ஏண்டா இத்தனை நாளாப் பேசலை’ என்பது போன்ற சிணுங்கல்களுக்கு இங்கு இடம் இல்லை. தேவைப்படும்போது கேள், பேசத் தோன்றும்போது பேசு. நீண்டநாள் பிரிந்திருந்தாலும், நல்ல உள்ளங்களின் கற்பும் கெடுவதில்லை, நட்பும் கெடுவதில்லை//

  இன்னைக்கு நானும் என் கடையில் கற்பை பத்தி ஒரு மேட்டர் போட்டு இருக்கேன்
  (கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

  ReplyDelete
 10. //எனக்கு உண்மையான ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லை. எல்லாருமே ஏமாத்துக்காரனுக. இப்படித்தான் செங்கோவின்னு ஒருத்தன்..வேலையில்லாம நாயா அலைஞ்சுக்கிட்டிருந்தான். நான் தான் சென்னைல வேலை வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் என்ன பண்ணான் தெரியுமா? எங்க பாஸ்க்கு சொம்படிச்சு, என்னைவிட அதிக சேலரி, புரமோசன் வாங்கிட்டான்.”//

  ஹி.ஹி.ஹி.ஹி உண்மையா பாஸ்....

  ReplyDelete
 11. அசத்தலா போகுது கிளைமாக்ஸ்க்காக வெயிட்டிங்...

  ReplyDelete
 12. @செங்கோவி
  // siva said...
  ப்ரெசென்ட் //

  இவரு தான் அந்த பதிவர் சிவாவோ?//

  ஒருவேளை அப்படிதானோ...

  ReplyDelete
 13. அன் டைம் போஸ்ட்டா இருக்கே?

  ReplyDelete
 14. சூப்பர்ணே! அந்தப்பதிவர் சிவா இன்னும் எழுதுறாரா?

  ReplyDelete
 15. அண்ணனுக்கு கேரளாவுலயும் கேர்ள் ஃபிரண்ட்ஸ் ஏகப்பட்டது இருக்கும் போல.

  ReplyDelete
 16. அண்ணன் நண்பர்கள், நட்பு பற்றி சொல்லியதெல்லாம் அப்பிடியே எனக்கும் பொருந்திப்போகுது!

  ReplyDelete
 17. //அய்யர்கூட செங்கோவி இருக்கான். அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ? அவனுக்கும் அப்பா ஃபோன் நம்பர் தெரியாதே..//
  அண்ணனை எப்பிடிக் கோர்த்து விட்டான் பாருங்க!

  ReplyDelete
 18. // தமிழ்வாசி - Prakash said...
  மாம்ஸ்... லீலை சும்மா விறுவிறுன்னு போகுது முடிவை நோக்கி....//

  போகட்டும்..போகட்டும்...நீரு வேலையைப் பாரும்.

  ReplyDelete
 19. // விக்கியுலகம் said...
  நடத்துங்க நன்றி! //

  ரைட்டு மாப்ள.

  ReplyDelete
 20. // K.s.s.Rajh said...

  இன்னைக்கு நானும் என் கடையில் கற்பை பத்தி ஒரு மேட்டர் போட்டு இருக்கேன் //

  குஷ்பூ பத்தியா போட்டிருக்கீங்க...நைட்டு வர்றேன்.

  //எங்க பாஸ்க்கு சொம்படிச்சு, என்னைவிட அதிக சேலரி, புரமோசன் வாங்கிட்டான்.”...ஹி.ஹி.ஹி.ஹி உண்மையா பாஸ்....//

  பழசைப் படிய்யா...நம்ம லீலைகளை நாமளே வெளில சொல்வோமா?

  ReplyDelete
 21. சி.பி.செந்தில்குமார் said...
  //அன் டைம் போஸ்ட்டா இருக்கே? //

  இது சும்மா..போன்ஸ் சிபி.

  // அண்ணனுக்கு கேரளாவுலயும் கேர்ள் ஃபிரண்ட்ஸ் ஏகப்பட்டது இருக்கும் போல.//

  மூட்டியாச்சா?..போகலாம்.

  ReplyDelete
 22. ஜீ... said...

  //சூப்பர்ணே! அந்தப்பதிவர் சிவா இன்னும் எழுதுறாரா? //

  அதாவது....ம்..ஆங்..தெரியலியேப்பா!

  //அண்ணன் நண்பர்கள், நட்பு பற்றி சொல்லியதெல்லாம் அப்பிடியே எனக்கும் பொருந்திப்போகுது!//

  அதை எழுதும்போதே நினைச்சேன்..தம்பி ஜீ இப்படித் தான் சொல்வாருன்னு!

  // கவி அழகன் said...
  லீலை மயக்குது //

  லீலைன்னாலே அப்படித்தான்..பார்த்து இருங்க.

  ReplyDelete
 23. கிழிந்த டைரி என்றாலும்
  புரிந்த லீலைகள்
  என்றும் புதியதே...

  ReplyDelete
 24. // மகேந்திரன் said...
  கிழிந்த டைரி என்றாலும்
  புரிந்த லீலைகள்
  என்றும் புதியதே...//

  ஆமா, பாகவதர் காலத்துல இருந்தே புதுசாத் தானே இருக்கு!

  ReplyDelete
 25. என்னா ஸ்பீட்டு.. இப்ப தானே கமெண்ட் பண்ணிட்டு படுத்தான். அதுக்குள்ளே அடுத்த பதிவு.

  ReplyDelete
 26. ரைட்டு நடக்கட்டும் நடக்கட்டும்...

  ReplyDelete
 27. நைட்டே சொன்னீங்க தான், நான் தான் "பெரிசா" எடுத்துக்கல போல?இந்த மதன் பயல் இன்னும் என்னவெல்லாம் கோல்மால் பண்ணப் போறானோ?பொண்ணு பாவம் பொல்லாதுடா பாவிப் பயலே!

  ReplyDelete
 28. ‘கழுத்தை இறுக்கும்’ நட்பை நாங்கள் எப்போதுமே விரும்பியதில்லை.///என்னைய மாதிரி!

  ReplyDelete
 29. // KANA VARO said... [Reply]
  என்னா ஸ்பீட்டு.. இப்ப தானே கமெண்ட் பண்ணிட்டு படுத்தான். அதுக்குள்ளே அடுத்த பதிவு. //

  12 மணி நேரம் கழிச்சுத் தானே அடுத்த பதிவு போட்டிருக்கேன்..நீங்க லேட்டா வந்துட்டு...

  ReplyDelete
 30. // MANO நாஞ்சில் மனோ said... [Reply]
  ரைட்டு நடக்கட்டும் நடக்கட்டும்... //

  ஓகே பாஸ்.

  ReplyDelete
 31. Yoga.s.FR said... [Reply]
  // நைட்டே சொன்னீங்க தான், நான் தான் "பெரிசா" எடுத்துக்கல போல?//

  உங்க ரேஞ்சுக்கு இந்த லீலையெல்லாம் பெருசாத் தெரியுமா?

  // பொண்ணு பாவம் பொல்லாதுடா பாவிப் பயலே! //

  அப்படியா?

  //‘கழுத்தை இறுக்கும்’ நட்பை நாங்கள் எப்போதுமே விரும்பியதில்லை.///என்னைய மாதிரி! //

  ஓ..நீங்களும் என்னை மாதிரி தானா?..அதை விரும்ப மாட்டீங்களா..நல்ல பழக்கம் தலைவரே.

  ReplyDelete
 32. அண்ணே நானும் தொடர்கிறேன்.....

  ReplyDelete
 33. // லீலை சும்மா விறுவிறுன்னு போகுது முடிவை நோக்கி....///


  போதும் முடிச்சுக்கோங்கா-னு சொல்ற மாதிரி இருக்கே...

  ReplyDelete
 34. தமிழ் மணம் ஓட்டுப்பட்டைய காண வில்லையே?

  ReplyDelete
 35. //துஷ்யந்தன் said...
  அண்ணே நானும் தொடர்கிறேன்.....//

  லீலையைவா.....மதனுக்குப் போட்டியா இறங்கிட்டாரு போலிருக்கே..

  ReplyDelete
 36. //பாரத்... பாரதி... said...
  தமிழ் மணம் ஓட்டுப்பட்டைய காண வில்லையே? //

  நாந்தான் எடுத்துட்டேன் சார்.தேடாதீங்க..இருக்குறது போதும்.

  ReplyDelete
 37. its realy good.very intersting.continue

  ReplyDelete
 38. //mandapasalai said...
  its realy good.very intersting.continue //

  நன்றி பாஸ்...அ.கோட்டையில் மழை பெய்கிறதா? எல்லாடும் சுகம் தானே...

  ReplyDelete
 39. செங்கோவி.......ஓ..நீங்களும் என்னை மாதிரி தானா?..அதை விரும்ப மாட்டீங்களா..நல்ல பழக்கம் தலைவரே.///உதவுவதற்கு தயங்குவதில்லை! நீ..............ண்ட காலம் அல்ல நாட்களுக்குப் பின் பார்த்தால் காப்பி சாப்பிடுவது. கொஞ்சம் பேசுவது.பாய்!(bay!)

  ReplyDelete
 40. @செங்கோவி

  / K.s.s.Rajh said...

  இன்னைக்கு நானும் என் கடையில் கற்பை பத்தி ஒரு மேட்டர் போட்டு இருக்கேன் //

  குஷ்பூ பத்தியா போட்டிருக்கீங்க...நைட்டு வர்றேன்//

  ஏன்யா கற்பு என்றது அந்த குஸ்பு ஆண்டிய வம்புக்கு இழுக்கிறீங்க.நான் அவங்களைபத்தி எதுவுமே சொல்லலை இது வேற மேட்டர்..

  ///பழசைப் படிய்யா...நம்ம லீலைகளை நாமளே வெளில சொல்வோமா///

  அப்பறம் இப்பதான் உங்கள் பழய தொடர்களை படிச்சு முடிச்சேன் புரிஞ்சுட்டு.புரிஞ்சுட்டு.....

  ReplyDelete
 41. //Yoga.s.FR said... [Reply]
  செங்கோவி.......ஓ..நீங்களும் என்னை மாதிரி தானா?..அதை விரும்ப மாட்டீங்களா..நல்ல பழக்கம் தலைவரே.///உதவுவதற்கு தயங்குவதில்லை! நீ..............ண்ட காலம் அல்ல நாட்களுக்குப் பின் பார்த்தால் காப்பி சாப்பிடுவது. கொஞ்சம் பேசுவது.பாய்!(bay!) //

  அப்படிச் சொல்லுங்க..அதனால தான் நமக்குள்ளயும் ஒத்துப்போயிடுச்சா...தலைவர் எவ்வழி தொண்டன் அவ்வழி.

  ReplyDelete
 42. வினையூக்கி said...
  Super

  September//

  இந்தக் கமெண்டை, இக் கதையினை நன்றாகப் படித்துப் புரிந்து கொண்டவன் எனும் வகையில் கண்டிக்கிறேன்..

  ஹா...ஹா..
  சாரி நண்பா. ஒரு காமெடிக்குச் சொன்னேன். சீரியஸ் ஆகிடாதீங்க.

  ReplyDelete
 43. மீண்டும் இனிய மாலை வணக்கங்கள் பாஸ்.
  இருங்க படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 44. சிவா எங்களைத் தேடத் தொடங்கினான். அதில் பிரச்சினை என்னவென்றால், சிவாவும் என்னைப் போலவே நண்பர்களைப் பேணுவதில் எக்ஸ்பெர்ட்!//

  அவ்...சேம் சேம் பப்பி சேமா...

  ReplyDelete
 45. ஒரு இடம் விட்டு நகர்ந்தால், அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு அத்தோடு முடிந்து போகும். சோம்பேறித்தனமே காரணம். ‘கழுத்தை இறுக்கும்’ நட்பை நாங்கள் எப்போதுமே விரும்பியதில்லை. வந்ததை வரவில் வைப்போம்..போனதைச் செலவில் வைப்போம் என எளிதாகவே எடுத்துக்கொள்ளும் ரகம் நாங்கள்.//

  அவ்...பயங்கர ஊதாரிப் பசங்களா நீங்க இல்லையே என்று கவலைப்படுகிறேன்..

  ஏன்னா...நானும் எங்கள் நண்பர்களும் நெறைய செலவு பண்ணுவோம்.

  ReplyDelete
 46. என்னுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஐந்து பேருமே அந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். ’நண்பேண்டா..நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேண்டா’ என்று நாங்கள் உணர்ச்சிவசப் பட்டதேயில்லை. அத்தகைய இறுக்கும் நட்பை நாங்கள் எப்போதும் விரும்பியதும் இல்லை. //

  ஆமாம் பாஸ்...இப்படி நண்பேண்டா என்று சொல்லி மிகவும் நெருக்கமாகப் பழகுவோர்கள் சந்தர்ப்பத்திற்காகப் பழகுவது போல் சில வேளைகளில் மாறியும் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 47. ஆதலால் உங்களின் இடை வெளி கரமான, புரிதலுடன் கூடிய நட்பு...வெள்ளிடை மலையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 48. எனக்கு உண்மையான ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லை. எல்லாருமே ஏமாத்துக்காரனுக. இப்படித்தான் செங்கோவின்னு ஒருத்தன்..வேலையில்லாம நாயா அலைஞ்சுக்கிட்டிருந்தான். நான் தான் சென்னைல வேலை வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் என்ன பண்ணான் தெரியுமா? எங்க பாஸ்க்கு சொம்படிச்சு, என்னைவிட அதிக சேலரி, புரமோசன் வாங்கிட்டான்.”//


  அவ்....இப்படியும் நடந்திருக்கா..
  பாவம் பாஸ் அவன்...உங்களை எம்புட்டு நம்பியிருந்திருப்பான்.

  ReplyDelete
 49. ”இல்லைப்பா..அது நல்லதில்லை..திடீர்னு போலீசுக்குப் போய் கேஸ்ன்னு ஆயிடுச்சுன்னா, நான் ஃபாரினுக்குப் போகமுடியாமக் கூட ஆயிடலாம். நான் அவகிட்டப் பேசி, அவ அம்மா வீட்ல போய் விட்டுடுறேன். ஏதாவது செட்டில்மெண்ட்டுக்குக் கேட்டா, நானே கொடுத்திடறேன். இதுல முரட்டுத்தனமா இறங்க வேண்டாம்”//

  அவ்.....நல்லாத் தான்யா ப்ளான் பண்ணிக் கவிழ்க்கிறாங்க.

  ReplyDelete
 50. கதை அருமையாக நகர்கிறது.
  தொடருங்கள் நண்பா.

  ReplyDelete
 51. மாப்ள அந்த புது வில்லன் யாரு நல்லவரா கெட்டவரா?

  ReplyDelete
 52. நிரூபன் said...
  // சிவா எங்களைத் தேடத் தொடங்கினான். அதில் பிரச்சினை என்னவென்றால், சிவாவும் என்னைப் போலவே நண்பர்களைப் பேணுவதில் எக்ஸ்பெர்ட்!.......அவ்...சேம் சேம் பப்பி சேமா...//

  // ஆதலால் உங்களின் இடை வெளி கரமான, புரிதலுடன் கூடிய நட்பு...வெள்ளிடை மலையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.//

  ஆமாம், அதில் சந்தேகாமே இல்லை.

  // கதை அருமையாக நகர்கிறது. தொடருங்கள் நண்பா.//

  நிரூ சொல்லிட்டாரு..அப்போ தொடர்ந்திட வேண்டியது தான்.

  ReplyDelete
 53. // பாலா said...
  மாப்ள அந்த புது வில்லன் யாரு நல்லவரா கெட்டவரா? //

  அவரு ரொம்ம்ப்ப்ப்ப நல்லவரு!

  ReplyDelete
 54. @சென்னை பித்தன்

  //ஜித்தன் மதன்!//

  பித்தன் ஐயாவே மதனை ஜித்தன்னு சொல்லிட்டாரே..

  ReplyDelete
 55. அண்ணே உங்க கதையில நான் ஒரு சின்ன ட்விஸ்ட் வச்சிக்கட்டுமாண்ணே....!

  ReplyDelete
 56. // Heart Rider said...
  அண்ணே உங்க கதையில நான் ஒரு சின்ன ட்விஸ்ட் வச்சிக்கட்டுமாண்ணே....!//

  அண்ணன் குடும்பத்தைக் கெடுக்காத அளவுக்கு வைங்க..

  ReplyDelete
 57. கதைய இதுக்கு மேல கணிக்க முடியலீங்கோ......

  ReplyDelete
 58. I meant super for your narration style. I sympathize with Jameela and Joanna.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.