Saturday, September 10, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45

நமது சமூகத்தில் தந்தைக்கு அடுத்த இடம் தாய்மாமனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு உறவுகளுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் தன் சகோதரி நன்றாக இருக்கவேண்டும் என்றே எந்தவொரு மனிதனும் நினைப்பான் என்ற நம்பிக்கை. அதை தாய்வழிச் சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.

ஜமீலாவின் தாய்மாமன் முகமது சையது இத்தனை நாள் கழித்து ஜமீலா ஃபோன் செய்யவும் பாசத்தில் கலங்கிப் போனார். அவள் திருச்சூர் வந்து செட்டில் ஆகிறாள் என்று தெரியவும் தானே வீடு பார்த்து, எல்லா ஏற்பாடும் செய்வதாகச் சொன்னார். 

சையது சொன்னபடியே எல்லா உதவிகளையும் செய்தார். வேறு மார்க்கத்தில் திருமணம் செய்ததால் உறவுகள் இன்னும் கோபமாய் இருப்பதகாவும், கொஞ்சநாளைக்கு யாரிடமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் சொன்னார். மதனிடம் மிகவும் மரியாதையாகப் பேசினார்.  

மதன் வேலை தேடுவதாய்ச் சொல்லிக்கொண்டு, சும்மா வெளியே சுற்றினான். வீட்டில் நெட் கனெக்சன் கொடுத்து, யோஹன்னாவிற்கு காதலுடன் மெயில் அனுப்பினான். அவளும் உருகி உருகி மெயில் அனுப்பிக்கொண்டிருந்தாள். மதனை உலுக்கிய ஒரே விஷயம் மகனின் பிஞ்சுக் கைகளின் தொடுதல் தான். அந்தக் குழந்தை ஏதோவொரு விதத்தில் இவர் முக்கியமானவர் என்று தெரிந்துகொண்டது. அவனுடன் அன்பாக ஒட்டிக்கொண்டது. தூங்கிக்கொண்டிருப்பவனின் மேல் ஏறி விளையாடியது. அப்படியே அவன் மேல் படுத்து அதுவும் தூங்கியது.

இதெல்லாம் ஜமீலாவின் மனக்காயத்தை ஆற்றியது. அந்தக் குழந்தையின் விளையாட்டை ஃபோட்டோ எடுத்தாள். மதன் எழுந்ததும் அவனிடம் காட்டினாள். மதனுக்கு மனது நெகிழ்ந்தது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்..தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது..என்று யோசித்தபடியே மதன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

“ஃபாரின்ல பீட்சா, பர்கர்னு சாப்பிட்டுப் பழகியிருப்பே. நான் வேற சோறும் சப்பாத்தியுமா போட்டுக்கிட்டிருக்கேன். இன்னிக்கு நைட் வெளில போய் சாப்பிட்டு வா” என்றாள் ஜமீலா.

“ஹோட்டல் சாப்பாடா..அதெல்லாம்..வேண்டாம் “என்றான்.

“ஏன் நீ ஹோட்டல்ல சாப்பிட்டதே இல்லையா? வீட்ல நீ விரும்புறது கிடைக்கலேன்னா ஹோட்டலுக்குப் போறதுல தப்பு ஒன்னும் இல்லை.நீ போய்ட்டு வா” என்றாள் ஜமீலா.

மதனுக்கு சில மாதங்கள் முன்பு இதே ஹோட்டல் உதாரணத்தை யோசித்த்து நினைவுக்கு வந்த்து. இதைச் சொல்லித் தானே நாம் ஆடத் துவங்கினோம்..இப்போது அந்த ஆட்டம் எங்கே என்னைக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லையே..பெர்மனண்ட் ரெசிடென்சி முதலில் கிடைக்கட்டும்..பிறகு பார்த்துக்கொள்ளலாம் ஜமீலா மேட்டரை என்று தானே நினைத்தோம்’யோசித்தபடியே மதன் உட்கார்ந்திருந்தான்.


ஜமீலா “இந்த ஃபோட்டோவை உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு அனுப்புவோமா? அழகா இருக்குல்ல?” என்றாள்.


“ஆமாம்” என்றபடியே மதன் குழப்பத்துடன் அந்த ஃபோட்டோக்களை தன் மெயிலில் அட்டாச் செய்தான். ஜூனியர்.மதன் என்று சப்ஜெக்ட் போட்டு எல்லாருக்கும் அனுப்பினான். 

மதனுக்கு ஏதோவொன்று தவறாகப் போவது தெரிந்தது..ஆனாலும் என்னவென்று புரியவில்லை. 

காமம் என்பது சுழித்துக் கொண்டு ஓடும் காட்டாறு. அதில் விளையாட்டாய், வகைதொகையின்றி இறங்கிய எல்லாரையுமே அது புரட்டிப்போட்டு விடுகிறது. காமம் எப்போதும் தனிமனித இச்சை மட்டுமே அல்ல. அப்படியே இங்கு சொல்லப்படுகிறது. ‘இது உன் வாழ்க்கை..கொண்டாடு..கூத்தாடு’ என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காமம் எப்போதும் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது. 


காமத்தில் இறங்கி ஒருவன் செய்யும் தவறு, இங்கு பல மனங்களைக் காயப்படுத்திவிடுகிறது. சுற்றியுள்ள பல குடும்பங்களை அது சீரழித்துவிடுகிறது. பலநேரங்களில் அது திருத்திக்கொள்ள முடியாத தவறாகப் போய்விடுகிறது. காமத்தைப் பற்றிப் புரியாமல் இறங்கியவனை சமூகம் அதனாலேயே கடுமையாக அவமானப்படுத்துகிறது. அது சமூக ஒழுங்கை சீர்குலைத்து விடுமென்று பயப்படுகிறது.

மதன் தெரிந்தும், தெரியாமலும் பல தவறுகளைச் செய்துகொண்டே போனான்.

ப்போது நானும் அய்யரும் அமெரிக்கா வைத்த ஆப்புடன் டெல்லி ஆஃபீசிற்கு வந்து சேர்ந்திருந்தோம். மதனின் மெயில் பார்த்து சந்தோசப்பட்டோம். ‘மருமகன் சூப்பரா இருக்கான் ‘என்று பதில் அனுப்பினேன்.

‘மருமகனை இன்னும் நேரில் வந்து பார்க்காதவனை தாய்மாமனா ஏத்துக்க நாங்க தயாரா இல்லை’ என்று மதன் பதில் அனுப்பினான்.

அதே நாளில் எனக்கொரு ஃபோன் வந்தது.

“செங்கோவி, நான் பாலா பேசுறேன்”

“பாலாவா..எந்த பாலா?”

“என்னப்பா இப்படிக் கேட்கிறே? என்னை ஞாபகம் இல்லையா? நாந்தான் பாலா”

எனக்கு கடுப்பாகிவிட்டது.

“இங்க பாருங்க..எனக்கு ஸ்கூல்ல படிக்கும்போதே 2 பாலாவைத் தெரியும். காலேஜ்ல இன்னும் ரெண்டு பாலா படிச்சாங்க. கோயம்புத்தூர்ல ஒரு பாலா கூட வேலை பார்த்தான். இப்போ இங்கயும் ஒரு பாலா புதுசா ஜாயின் பண்ணியிருககன்..ஹாலிவுட் பாலான்னு ஒருத்தர் வேற நெட்ல எழுதுறாரு..டைரக்டர் பாலா, ரைட்டர் பாலகுமாரன்னு எனக்கு எக்கச்சக்க பாலாவைத் தெரியும். அதனால மொட்டையா பாலான்னு சொல்லாம நீங்க எந்த பாலான்னு சொல்லுங்க”

“என்னடா இப்படிப் பேசுறே..நான் எத்தனை வருசம் கழிச்சு உன் ஃபோன் நம்பரை கஷ்டப்பட்டு தேடி வாங்கிக் கூப்புடுறேன்..நீங்கள்லாம் பெரிய ஆளுக..எஞ்சினியரு..என்னையெலாம் ஞாபகம் இருக்குமா?”

‘அய்யோ ராமா..’டயலாக் தான் எனக்கு ஞாபகம் வந்தது.

“நான் என்னய்யா செய்ய..பாலமுருகன்னு பேர் வச்சாலும், பாலச்சந்தர்னு பேர் வச்சாலும், பாலசுப்பிரமணின்னு பேர்வச்சாலும் சரி, நீங்களா பாலான்னு சுருக்கிக்கிடுறீங்க.இதுல என்னைத் தெரியலியான்னா என்னய்யா அர்த்தம்? யாருய்யா நீ?”

“செங்கோவி, நாந்தான்யா பாலா..(அடிங்..)..ஸ்கூல்ல படிச்சனே..கோவில்பட்டி..இப்போ ஆர்மில இருக்கன்யா”

“அட கூவை...நீதானா..ஆர்மி பாலான்னு சொல்ல வேண்டியது தானே?”

“உனக்கு நான் ஆர்மீல சேர்ந்தது தெரியுமா? “

“தெரியுண்டா..எப்படி இருக்கே? என்ன திடீர்னு?”

“நல்லா இருக்கேண்டா..உனக்கு மதன்னு யாரையும் தெரியுமா?”

“மறுபடியும் மொட்டையாச் சொல்றே, பார்த்தியா?”

“சரி..சரி..உன்கூட மதுரை காலேஜ்ல எஞ்சினியர்ங்ல மதன்னு யாரும் படிச்சாங்களா?”

“ஆமா..நம்ம பையன் தான்..நமக்கு க்ளோஸ் பிரண்டு..அவனை எப்படி உனக்குத் தெரியும்?”

“அவன் நல்ல பையனா?”

“ஆமாண்டா..என் ஃப்ரெண்டுங்கிறேன்..அப்புறமும் நொல்ல பையனாங்கிற?”

“என் தங்கச்சிக்கு வரன் வந்திருக்குடா..இப்போ நார்வேல இருக்காரா அவரு?”

“வரனா? என்னடா சொல்றே?”

“ஆமா, ஜாதகம் வந்துச்சு..எல்லாப் பொருத்தமும் இருக்கு..நகைகூடப் பிரச்சினை இல்லை, உங்க பொண்ணு..உங்க இஷ்டம்னு சொல்லிட்டாங்க..காலேஜ் பேரைக் கேட்கவும் உன் ஞாபகம் வந்துச்சு..அதான் உன் ஊருக்குப் போய் நம்பர் வாங்கினேன். நீயே நல்ல பையன்னு சொல்றேன்னா..”

“டேய்..இரு..இரு..அவன் நல்ல பையன் தான்..அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கே?”

“என்னடா சொல்றே?”

“ஏதோ குழப்பம் நடந்திருக்கு..அவன் லவ் மேரேஜ் பண்ணான்..முதல்ல அவன் அப்பா ஒத்துக்கலை..இப்போ அந்தப் பொண்ணும் மதுரைல தானே இருக்கு..அவன் இன்னைக்குக் கூட தன் பையன் ஃபோட்டோவை மெயில்ல அனுப்பி இருக்காண்டா.”

“ஓஹோ..அப்போ அவனுக்குத் தெரியாமத் தான் இது நடக்கும்கிறயா? கரெக்டாச் சொல்லுப்பா..அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுல்ல?”

“யார் உன்கிட்ட வரன் கொண்டு வந்தாங்களோ, அவங்ககிட்டயே ஜமீலா யாருன்னு கேளு..ஓடிடுவாங்க...இல்லேன்னா சிம்பிளா நான் செங்கோவி ஃப்ரெண்டுன்னு சொல்லு போதும்”

“சரி, இனிமே அவங்களை நான் பார்த்துக்கறேன்.”

அவன் ஃபோனை வைத்தபிறகு, எனக்குக் குழப்பமாக இருந்தது. 

மெயிலில் இருந்த மதன் நம்பரை எடுத்து கால் செய்தேன்.

“ஹலோ, யார் பேசுறது?’ என்றான் மதன்.

“ஓ...., என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே?”

“டேய் செங்கோவி...நல்லா இருக்கியா? இந்தியா வந்துட்டயா?”

“ஆமா..என்ன நடக்குது அங்க?”

“என்ன நடக்கு? ஒன்னும் நடக்கலை..ஏன்?”

“என் ஸ்கூல்மேட் ஃபோன் பண்ணான். உன் ஜாதகம் வந்திருக்காம், அவன் தங்கச்சிக்கு. என்னைக் கூப்பிட்டுக் கேட்டாங்க..அவனுக்குக் கல்யாணம் ஆகி, குழந்தையே இருக்குன்னு சொன்னேன்..கடுப்பாகிட்டாங்க.”

“ஜாதகமா? என் ஜாதகத்தை நானே பார்த்ததில்லையே...”

“அது எனக்கும் தெரியும்..அதான் கேட்கேன், என்ன நடக்குது?”

“இப்போ நான் கேரளா வந்துட்டேண்டா. அப்பாக்கும் ஜமீலாக்கும் ஒத்துக்கலை. அவருக்கு வயசாயிடுச்சா, மறை கழண்டிடுச்சு..அவர் தான் இது மாதிரி ஏதாவது லூசுத்தனமாப் பண்றாருன்னு நினைக்கேன்..நான் பேசிக்கிறேன்..தங்கச்சி இருக்கு..பேசறியா?”

“குடு..ரொம்ப நாளாச்சு”

“அண்ணா..நல்லா இருக்கீங்களா? இந்தியா எப்பண்ணா வந்தீங்க? என் நம்பர் உங்ககிட்ட இல்லையா? “

என்றும் மாறாத அதே அன்புடன் ஜமீலா பேசிக்கொண்டே போனாள்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

54 comments:

 1. லீலைகள் ஒருவழியா முடிவுக்கு வந்துட்டு இருக்கு போல.....?

  ReplyDelete
 2. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  லீலைகள் ஒருவழியா முடிவுக்கு வந்துட்டு இருக்கு போல.....?//

  ஆமாண்ணே, ஏறக்குறைய அப்படித்தான்..

  ReplyDelete
 3. எல்லாரும் மேட்ச் பாத்துட்டு இருக்காங்க போல....

  ReplyDelete
 4. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  எல்லாரும் மேட்ச் பாத்துட்டு இருக்காங்க போல....//

  ஓ...மேட்ச்சா இன்னிக்கு..ஓகே..ஓகே..அப்போ நாமளும் பார்ப்போம்.

  ReplyDelete
 5. வணக்கம் மாப்பிள... 
  தாய் மாமன மண்டைக்கயிருன்னு சொல்லுவாங்க மச்சான்கள் முத்து எடுக்க கடளுக்குள் இறங்கும்போது இடுப்பில் கட்டும் கயிறை அவர்களிடம்தான் கொடுப்பார்கள்.. அக்காவின் வாழ்க்கை அந்த கயித்திலதான்... ஹி ஹி

  ReplyDelete
 6. காட்டான் மாவின் கமெண்ட்ஸ் கலக்கலா இருக்கே.... ஹீ ஹீ

  ReplyDelete
 7. பாஸ் கதை செம விறு விறு, அப்புறம் ஏதாவது விறு விருப்பை அதிகப்படுத்துறேன் என்று ஜமிலாவுக்கு அந்த பிரெண்ட் தங்கச்சியை சக்களத்தி ஆக்கிராதீங்கோ !!!!!

  ReplyDelete
 8. பாஸ் உங்கள் பதிவை வாசிக்கவில்லை விடியவந்து வாசிச்சு கமண்ட் போடுறன் காரணம் நான் எழுதின நம்ம பதிவர்கள் பத்தின கிசு.கிசு..பதிவை 3 பன்னாடை இனையதளங்களில் காப்பி பன்னு போட் டு இருக்காங்க...அவங்களோட அக்க்ப்போற் அடிச்சே நேரம் போய்விட்டது எனவே இது பற்றி ஒரு சாட்டை அடிப்பதிவு போட்டு இருக்கேன் வந்து உங்கள் ஆதரவையும் தாருங்கள்..
  சேம் ப்ராப்ளம் தான் நிரூபன் பாஸ்க்கும்

  இனைய தளங்களின் வண்ட வாளங்கள்
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/httptamilcnncomhttpnewyarlcom.html

  ReplyDelete
 9. ஆமா பாஸ்
  தாய்மாமன் உறவு
  இன்னும் போற்றப்படுகிறது
  இது ஒன்றே தாய்வழிச் சமூகத்தின்
  அடையாளமா இருக்குது.

  ReplyDelete
 10. தொடர் சூப்பரா போகுது (இப்பதான்னே முதல் எபிசோட்ல இருந்து வாசிச்சு முடிச்சேன்). ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்க... அத அப்புறம் டீல் பண்ணிக்குவம். இப்போதக்கி ஓட்டும் காமெண்டும் ஓகே.

  ReplyDelete
 11. இப்ப தாங்க படிக்க ஆரம்பிச்சேன்...அதுக்குள்ளே முடிய போகுதா...
  WORD OR PDF version வச்சிருந்தா மொத்தமா மெயில் பண்ணுங்க செங்கோவி...

  ReplyDelete
 12. Sengovi,

  You wrote about uncle is very good.Now many guys thing about expenses to do for sister's kids .

  ReplyDelete
 13. // காட்டான் said...
  வணக்கம் மாப்பிள...
  தாய் மாமன மண்டைக்கயிருன்னு சொல்லுவாங்க மச்சான்கள் முத்து எடுக்க கடளுக்குள் இறங்கும்போது இடுப்பில் கட்டும் கயிறை அவர்களிடம்தான் கொடுப்பார்கள்.. அக்காவின் வாழ்க்கை அந்த கயித்திலதான்... ஹி ஹி //

  ஆமா மாம்ஸ், நானும் கேள்விப்பட்டிருக்கேன்.

  முத்துக்குளிக்க வாரீயளா...............

  ReplyDelete
 14. // துஷ்யந்தன் said...
  பாஸ் கதை செம விறு விறு, அப்புறம் ஏதாவது விறு விருப்பை அதிகப்படுத்துறேன் என்று ஜமிலாவுக்கு அந்த பிரெண்ட் தங்கச்சியை சக்களத்தி ஆக்கிராதீங்கோ !!!!! //

  நானா எப்படிய்யா ஆக்க முடியும்?

  ReplyDelete
 15. // K.s.s.Rajh said...
  பாஸ் உங்கள் பதிவை வாசிக்கவில்லை விடியவந்து வாசிச்சு கமண்ட் போடுறன் //

  இதைச் சொல்ல ஒரு கமெண்ட்டா.......என்னய்யா இது......

  ReplyDelete
 16. // மகேந்திரன் said...
  ஆமா பாஸ்,
  தாய்மாமன் உறவு
  இன்னும் போற்றப்படுகிறது
  இது ஒன்றே தாய்வழிச் சமூகத்தின்
  அடையாளமா இருக்குது.//

  நன்றி மகேந்திரன்......இது கமெண்ட் தானே, ஏன் கவிதை மாதிரி எழுதியிருக்காரு?

  ReplyDelete
 17. // Real Santhanam Fanz said...
  தொடர் சூப்பரா போகுது (இப்பதான்னே முதல் எபிசோட்ல இருந்து வாசிச்சு முடிச்சேன்). ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்க... அத அப்புறம் டீல் பண்ணிக்குவம். இப்போதக்கி ஓட்டும் காமெண்டும் ஓகே. //

  ஓகே, ரைட்டு.

  ReplyDelete
 18. ரெவெரி said...
  // இப்ப தாங்க படிக்க ஆரம்பிச்சேன்...அதுக்குள்ளே முடிய போகுதா...//
  இன்னும் 10 எபிசோடு போகும்...டோண்ட் ஒர்ரி!

  // WORD OR PDF version வச்சிருந்தா மொத்தமா மெயில் பண்ணுங்க செங்கோவி...//

  இப்போ தான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்...

  ReplyDelete
 19. // Tirupurvalu said...
  Sengovi,

  You wrote about uncle is very good.Now many guys thing about expenses to do for sister's kids . //

  உண்மை தான்..நாகரீக உலகில் பாசத்தின் அருமை புரிவதில்லை.

  ReplyDelete
 20. நமது சமூகத்தில் தந்தைக்கு அடுத்த இடம் தாய்மாமனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு உறவுகளுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் தன் சகோதரி நன்றாக இருக்கவேண்டும் என்றே எந்தவொரு மனிதனும் நினைப்பான் என்ற நம்பிக்கை. அதை தாய்வழிச் சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.

  ஆகா இவ்வளவு விசயம் இருக்கா இந்தப் பதவிக்கு!.....
  கதைக்குள் ஆங்காங்கே நல்ல தகவலையும் கொடுத்துள்ளீர்கள் அருமை .இன்று உங்கள் வரவையும்
  என் தளம் எதிர்பார்க்கின்றது சார் .நன்றி பகிர்வுக்கு .....

  ReplyDelete
 21. //காமம் என்பது சுழித்துக் கொண்டு ஓடும் காட்டாறு. அதில் விளையாட்டாய், வகைதொகையின்றி இறங்கிய எல்லாரையுமே அது புரட்டிப்போட்டு விடுகிறது. காமம் எப்போதும் தனிமனித இச்சை மட்டுமே அல்ல. அப்படியே இங்கு சொல்லப்படுகிறது. ‘இது உன் வாழ்க்கை..கொண்டாடு..கூத்தாடு’ என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காமம் எப்போதும் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது.


  காமத்தில் இறங்கி ஒருவன் செய்யும் தவறு, இங்கு பல மனங்களைக் காயப்படுத்திவிடுகிறது. சுற்றியுள்ள பல குடும்பங்களை அது சீரழித்துவிடுகிறது. பலநேரங்களில் அது திருத்திக்கொள்ள முடியாத தவறாகப் போய்விடுகிறது. காமத்தைப் பற்றிப் புரியாமல் இறங்கியவனை சமூகம் அதனாலேயே கடுமையாக அவமானப்படுத்துகிறது. அது சமூக ஒழுங்கை சீர்குலைத்து விடுமென்று பயப்படுகிறது.
  //

  ஒரு நல்ல எழுத்தாளருக்கான சிந்தனையும் தகுதியும் உங்களுக்கு உள்ளது. உணர்வுகளை மிகக் கவனமாக கையாள்கிறீர்கள். எனவே மிக எளிதாக சென்றடைகின்றன..

  அதே சமயத்தில் வயதுப் பிள்ளைகளின் குறும்பும் உங்களிடம் உள்ளது. இது ஒரு ஆச்சரியமான கலவை...

  நல்ல நடை மற்றும் சிந்தனை.

  வாழ்த்துக்கள்.

  God Bless You.

  ReplyDelete
 22. கலக்கலா இருக்கு அன்பரே
  கலக்கலா இருக்கு அன்பரே
  மன்மதா

  ReplyDelete
 23. தொடர்ச்சியாக படித்து வருகிறேன் ஒவ்வொரு செவ்வாயும் நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதவும்

  ReplyDelete
 24. இந்த எபிசோடில் நல்லதொரு கருத்து உள்ளது நண்பரே .பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 25. மாப்ள இந்த தொடரை புத்தகமா போடுவீங்களா?

  ReplyDelete
 26. // அம்பாளடியாள் said...
  ஆகா இவ்வளவு விசயம் இருக்கா இந்தப் பதவிக்கு!.....
  கதைக்குள் ஆங்காங்கே நல்ல தகவலையும் கொடுத்துள்ளீர்கள் அருமை .இன்று உங்கள் வரவையும்
  என் தளம் எதிர்பார்க்கின்றது சார் //

  முயற்சிக்கிறேன் சகோ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 27. // வெட்டிப்பேச்சு said...

  ஒரு நல்ல எழுத்தாளருக்கான சிந்தனையும் தகுதியும் உங்களுக்கு உள்ளது. உணர்வுகளை மிகக் கவனமாக கையாள்கிறீர்கள். எனவே மிக எளிதாக சென்றடைகின்றன..

  அதே சமயத்தில் வயதுப் பிள்ளைகளின் குறும்பும் உங்களிடம் உள்ளது. இது ஒரு ஆச்சரியமான கலவை...//

  இதை ரெண்டுங்கெட்டான்னும் சொல்வாங்க பாஸ்.

  மனம் திறந்த வாழ்த்துக்கு நன்றி வேதாந்தி.

  ReplyDelete
 28. // கவி அழகன் said...
  கலக்கலா இருக்கு அன்பரே
  கலக்கலா இருக்கு அன்பரே
  மன்மதா //

  ரெண்டு வரி பாராட்டு..ஒரு வரி ஆப்பா?

  ReplyDelete
 29. // Vadivelan R said...
  தொடர்ச்சியாக படித்து வருகிறேன் ஒவ்வொரு செவ்வாயும் நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதவும் //

  தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி..எழுதிகிறேன்.

  ReplyDelete
 30. // M.R said...
  இந்த எபிசோடில் நல்லதொரு கருத்து உள்ளது நண்பரே .பகிர்வுக்கு நன்றி //

  ஓ..அப்போ இத்தனை நாளா இல்லியா..ஓகே!

  ReplyDelete
 31. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மாப்ள இந்த தொடரை புத்தகமா போடுவீங்களா? //

  அது கிளைமாக்ஸ் என்ன ஆகுதுங்கிறதைப் பொறுத்து கருன்.

  ReplyDelete
 32. மாம்ஸ்... தொடர் சூப்பரா போகுது... முடிவு என்னவாக இருக்குமோ?

  ReplyDelete
 33. கிழிஞ்ச டைரி கிழியாம போயிட்டு இருக்கு முடிவு என்னாகுமோ....?

  ReplyDelete
 34. >>>>நமது சமூகத்தில் தந்தைக்கு அடுத்த இடம் தாய்மாமனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு உறவுகளுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் தன் சகோதரி நன்றாக இருக்கவேண்டும்


  குட்

  ReplyDelete
 35. // தமிழ்வாசி - Prakash said...
  மாம்ஸ்... தொடர் சூப்பரா போகுது... முடிவு என்னவாக இருக்குமோ? //

  அதுவா..முடிவு கிளைமாக்ஸ் ஆகும், பிரகாஷ்.

  ReplyDelete
 36. // MANO நாஞ்சில் மனோ said...
  கிழிஞ்ச டைரி கிழியாம போயிட்டு இருக்கு முடிவு என்னாகுமோ....? //

  மேலே பார்க்கவும்.

  ReplyDelete
 37. // சி.பி.செந்தில்குமார் said...

  குட் //

  குட்!

  ReplyDelete
 38. இனிய மாலை வணக்கம் பாஸ்,

  ReplyDelete
 39. Bad people meet bad ends, but in this case anything bad for Madhan might affect Jameela and their son. Hope he realises soon and be with the family without any malicious intent.

  The story series might have started in a "naughty" note , but as it flows into episodes it has become a touching story(ies) of several victims. A really an interesting auto fiction.

  Waiting for the next episode

  ReplyDelete
 40. சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.//

  ஆமா பாஸ். எனக்கும் இந்த அனுபவம் இருக்கு..என் மாமாவும் எனக்கு நிறைய விதத்தில அன்பு செலுத்தி உதவி செஞ்சிருக்காரு.

  ReplyDelete
 41. மதனை உலுக்கிய ஒரே விஷயம் மகனின் பிஞ்சுக் கைகளின் தொடுதல் தான். அந்தக் குழந்தை ஏதோவொரு விதத்தில் இவர் முக்கியமானவர் என்று தெரிந்துகொண்டது. அவனுடன் அன்பாக ஒட்டிக்கொண்டது. தூங்கிக்கொண்டிருப்பவனின் மேல் ஏறி விளையாடியது. அப்படியே அவன் மேல் படுத்து அதுவும் தூங்கியது//

  செண்டி மெண்டை டச் பண்ணிட்டீங்களே தல.

  ReplyDelete
 42. இதெல்லாம் ஜமீலாவின் மனக்காயத்தை ஆற்றியது. அந்தக் குழந்தையின் விளையாட்டை ஃபோட்டோ எடுத்தாள். மதன் எழுந்ததும் அவனிடம் காட்டினாள். மதனுக்கு மனது நெகிழ்ந்தது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்..தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது..என்று யோசித்தபடியே மதன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.//

  மனம் ஒரு குரங்கு எனும் நிலைக்கு அப்பால்...மதனின் மனம் இரண்டும் கெட்டான் நிலையில் இந்தப் பொழுதில் திண்டாடியிருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 43. காமம் என்பது சுழித்துக் கொண்டு ஓடும் காட்டாறு. அதில் விளையாட்டாய், வகைதொகையின்றி இறங்கிய எல்லாரையுமே அது புரட்டிப்போட்டு விடுகிறது. காமம் எப்போதும் தனிமனித இச்சை மட்டுமே அல்ல. அப்படியே இங்கு சொல்லப்படுகிறது. ‘இது உன் வாழ்க்கை..கொண்டாடு..கூத்தாடு’ என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காமம் எப்போதும் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது. //


  ஆய் தத்துவம்....


  கலக்கல். வாழ்வியலைச் சொல்லி நிற்கிறது மேற்படி வரிகள்.

  ReplyDelete
 44. “என் தங்கச்சிக்கு வரன் வந்திருக்குடா..இப்போ நார்வேல இருக்காரா அவரு?”

  “வரனா? என்னடா சொல்றே?”//


  நெசமாவே நீங்க வெளையாடுறீங்களா...

  மதன் நிஜமாவே மன்மதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்..

  முடியலை மச்சி...
  அடுத்த பொண்ணோட வாழ்க்கையிலும் மதன் இறங்கப் போறாரா....

  ReplyDelete
 45. அடுத்த பாகத்தின் திடுக்கிடும் திருப்பத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 46. // வினையூக்கி said...

  The story series might have started in a "naughty" note , but as it flows into episodes it has become a touching story(ies) of several victims. A really an interesting auto fiction.//

  ஆட்டோ ஃபிக்சனா..........ஏன்யா பெரிய பெரிய வார்த்தைல்லாம் சொல்றீங்க.

  ReplyDelete
 47. நிரூபன் said...
  // சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.//

  ஆமா பாஸ். எனக்கும் இந்த அனுபவம் இருக்கு..என் மாமாவும் எனக்கு நிறைய விதத்தில அன்பு செலுத்தி உதவி செஞ்சிருக்காரு. //

  தாய்மாமன் அன்பு,அதிக அக்கறை கொண்டது தான்.

  // மனம் ஒரு குரங்கு எனும் நிலைக்கு அப்பால்...மதனின் மனம் இரண்டும் கெட்டான் நிலையில் இந்தப் பொழுதில் திண்டாடியிருக்கும் என நினைக்கிறேன்.//

  ஆமாம்..அது ஒரு வகைக்குள் அடக்க முடியாத விநோத மனம்.

  //மதன் நிஜமாவே மன்மதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்..

  முடியலை மச்சி...//

  நிரூவுக்கு மதனைப் பார்த்தா பொறாமையா இருக்கா?

  ReplyDelete
 48. ////

  “ஆமா, ஜாதகம் வந்துச்சு..எல்லாப் பொருத்தமும் இருக்கு..நகைகூடப் பிரச்சினை இல்லை, உங்க பொண்ணு..உங்க இஷ்டம்னு சொல்லிட்டாங்க..காலேஜ் பேரைக் கேட்கவும் உன் ஞாபகம் வந்துச்சு..அதான் உன் ஊருக்குப் போய் நம்பர் வாங்கினேன். நீயே நல்ல பையன்னு சொல்றேன்னா..”

  “டேய்..இரு..இரு..அவன் நல்ல பையன் தான்..அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கே?”

  “என்னடா சொல்றே?”

  “ஏதோ குழப்பம் நடந்திருக்கு..அவன் லவ் மேரேஜ் பண்ணான்..முதல்ல அவன் அப்பா ஒத்துக்கலை..இப்போ அந்தப் பொண்ணும் மதுரைல தானே இருக்கு..அவன் இன்னைக்குக் கூட தன் பையன் ஃபோட்டோவை மெயில்ல அனுப்பி இருக்காண்டா////

  இதுதான் பாஸ் ஒரு நண்பனுக்கு அழகு...

  அப்பறம் ஒரு கிளைமாக்ஸ் நோக்கி லீலைகள் போக்குது போல வெயிட்டிங் அடுத்த அடுத்த பகுதிகளுக்கு

  ReplyDelete
 49. மதனை உலுக்கிய ஒரே விஷயம் மகனின் பிஞ்சுக் கைகளின் தொடுதல் தான். அந்தக் குழந்தை ஏதோவொரு விதத்தில் இவர் முக்கியமானவர் என்று தெரிந்துகொண்டது. அவனுடன் அன்பாக ஒட்டிக்கொண்டது. தூங்கிக்கொண்டிருப்பவனின் மேல் ஏறி விளையாடியது. அப்படியே அவன் மேல் படுத்து அதுவும் தூங்கியது.//

  அழகிய மழலையின் அன்பு மழையில் மதன்.... அருமையான நடை சகோ

  ReplyDelete
 50. அருமை...
  கடைசி வரியில் அந்த தங்கையின் பாசம் மனதை எதோ செய்கிறது...

  ReplyDelete
 51. //“ஆமாம்” என்றபடியே மதன் குழப்பத்துடன் அந்த ஃபோட்டோக்களை தன் மெயிலில் அட்டாச் செய்தான். ஜூனியர்.மதன் என்று சப்ஜெக்ட் போட்டு எல்லாருக்கும் அனுப்பினான்//
  ஆப்பில் வசதியாக உட்கார்ந்து கொண்டான்! :-)

  காமம் பற்றி நீங்க எழுதிய ரெண்டு பாராவும் செம்ம கலக்கல் அண்ணே!

  ReplyDelete
 52. வீட்ல நீ விரும்புறது கிடைக்கலேன்னா ஹோட்டலுக்குப் போறதுல தப்பு ஒண்ணும் இல்லை.////இங்கே அப்புடி ஒண்ணும் இல்லியே?

  ReplyDelete
 53. திருப்பங்கள் எல்லாம் எழுத்தில் நன்றாக வருகிறது,உங்களுக்கு!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.