Saturday, September 10, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_46

ம்மைப் பற்றிய ஞாபகங்களை அறியாமலேயே நாம் நம்மைச் சுற்றி விதைத்துக்கொண்டே இருக்கின்றோம். பிரிவின்போது அது வளர்ந்து விஸ்வரூபமெடுக்கின்றது பூக்களாகவோ, முட்களாகவோ!

யோஹன்னாவால் மதனைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அவன் இந்தியா போன இரண்டாவது நாளே, அவனுக்கு விசிட்டிங் விசா அப்ளை செய்து, விடாது ஃபாலோ செய்து, அதை வாங்கினாள். மதனுக்கும் அதை இன்று மெயிலில் அனுப்பியிருந்தாள். அவனுடன் வாழ்ந்த அதே அறையில் அவன் இல்லாமல் இருப்பது பெரும் கொடுமையாக இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு நினைவுகளைக் கிளறின.

இன்னும் இந்தியாவில் மொபைல் சிம் வாங்கவில்லையாம். இப்போது தான் அப்ளை செய்திருக்கிறானாம். அது எப்போது வந்து, நான் எப்போது பேச..என்று நொந்துகொண்டாள். மெயிலில் மட்டுமே பேசிக்கொள்வது எப்படிப் போதும்..சாட்டிற்கும் வர மாட்டேனென்கிறான். ஆண்கள் கல் நெஞ்சக்காரர்கள் தான். நாம் தான் இப்படிக் கிடந்து தவிக்கின்றோம்..ஏன் ஒரு கல் நெஞ்சக்காரனுக்காக தவிக்க வேண்டும்..யோஹன்னாவிற்கு சிரிப்பு வந்தது..அப்போ இது தான் காதலா? அவன் திரும்பி வந்தால் பேசக்கூடாது. கிட்டயே விடக்கூடாது. என்னை ஒரு மாசம் புலம்ப வைத்தாய் அல்லவா...நீயும் புலம்பு..அழு..ம்ஹும்..முடியவே முடியாது..ராஸ்கல்.

அப்படி இருப்பேனா..சந்தேகம் தான்..அவனைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுமே..இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் சிரிக்கின்றோம்..இதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்..எல்லாம் அந்த லூசுப்பையனால் வந்தது. என்னையும் லூசாக்கி விட்டான். இப்படி தனியே அரை மயக்கத்தில் புலம்ப வைத்துவிட்டானே..அவன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? இந்தியாவில் எங்கெ இருப்பான்? ஏதோ ஊர் சொன்னானே..பிக் டெம்பிள்..ம்..மத்ரை..அங்க தான் இருக்கணும்..அங்கே வேறென்ன ஸ்பெஷல்? தூங்கா நகரம்னு சொன்னானே..என்னை மாதிரியே அதுவும் முழிச்சுக்கிட்டிருக்குமா? ஒருவேளை மத்ரையும் யாரையோ லவ் பண்ணுதோ? தூங்க முடியாமல் காதல் அவஸ்தையில் அதுவும் தவிக்கிறதோ? பாவம்..

அங்கே வேறு என்ன ஸ்பெஷல்? ம்..கூகுள் எதுக்கு இருக்கு? அதுகிட்டக் கேட்போம். 

யோஹன்னா எழுந்து, தன் லேப்டாப்பை ஆன் செய்தாள். கூகுளிடம் போனாள். “Madrai, India" என்று டைப் செய்தாள். கூகுள் ‘Madurai’-ஐ ரெகமண்ட் செய்தது. அங்கே வந்த வெப்சைட்களை ஒவ்வொன்றாகப் படித்தபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் போரடித்தது. இந்த கூகுளிடம் இதே போல் மதனையும் எங்கேயென்று எனக்குத் தேடிக்கொடுத்தால் எப்படி இருக்கும்?

‘Madhan, Madurai, India' என்று போட்டாள்.

என்னென்னவோ தகவல்கள் வந்தன. அசுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டே வந்தவள் கண்ணில் மதன் பெயர் கொண்ட ஒரு யாஹூ மெயில் குரூப் கண்ணில் பட்டது. அது ஏதோ மதுரையில் உள்ள காலேஜ் மாணவர்களின் குரூப் என்று தெரிந்தது. க்ளிக் செய்து உள்ளே போனாள். அது மதனின் காலேஜ் தான் என்பது புரிந்தது. அப்படியென்றால், மதனும் இங்கே இருப்பானா என்று ஆர்வத்துடன் தேடினாள். அந்தப் பக்கத்தின் கடைசி மெயிலாக ‘Re:Jr.Madhan' இருந்தது.

அதை க்ளிக் செய்தாள். அங்கே புரியாத எழுத்துக்களில் ஏதோ எழுதியிருந்தது. அனுப்பிய மெயில் ஐடியைப் பார்த்தாள். அது மதனின் யாஹு ஐடி தான். அனுப்பிய தேதி பார்த்தாள். நேற்றுத் தான் அனுப்பி இருக்கிறாள். 

யோஹன்னாவிற்கு பதட்டமாக இருந்தது. ‘இது என்ன? ஜூனியர் மதன் என்றால், மகனா? மதனுக்கு மகனா?’ அதற்கு முந்தைய மெயிலை தேடி எடுத்தாள். மதன் தன் குழந்தையுடன் விளையாடும், தூங்கும் ஃபோட்டோக்கள் இருந்தன.

யோஹன்னாவிற்கு ஒரு நிமிடம் இதயமே நின்று போனது. என்ன இது? மதனுக்குக் குழந்தையா? மதன் கல்யாணம் ஆனவனா? துரோகத்தின் வலி தாங்காமல் கதற வேண்டும் போல் இருந்தது. கண்ணீர் திரண்டு வந்து அந்த ஃபோட்டோக்களை மறைத்தது. 

இந்த உறவும் பொய்யா? எனக்கு எந்த உறவுமே உண்மையாய் அமையப்போவதில்லையா? நான் அப்படி என்ன பாவம் செய்தேன் ஆண்டவரே. எத்தனை பேச்சு, அதில் எவ்வளவு அன்பு..எல்லாம் பொய்யா?

இதனால்தான் ஃபோன் நம்பர் தர மறுக்கிறானா? இதனால் தான் சாட்டிலும் வருவதில்லையா? அழுத படியே பலவாறு யோசித்தாள். ஒரு கட்டத்தில் யோசிப்பும் நின்று, அழுகையே மிஞ்சியது. 

தனுக்கு அவன் அப்பா பெண் தேடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஜமீலா பயந்து போனாள்.

“எனக்குன்னு இந்த உலகத்துல இருக்கிறது நீ தானே? நீ இல்லேன்னா இனி நான் எங்க போக முடியும்? என்னை எங்க வீட்ல ,ஊர்ல மனுஷியா மதிப்பாங்களா? எனக்குப் பயமா இருக்கு மதன்..” என்று அழுதாள்.

மதனுக்கு திடீரென்று அந்த ஐடியா வந்தது. “ஜமீலா, நாம இந்தியால இருந்தா அப்பா இப்படித் தான் தொல்லை பண்ணுவாரு. நாம எங்கேயாவது வெளிநாடு போயிடலாம்”

“அதைத் தானே நான் பல தடவை உங்கிட்டக் கேட்டேன்”

“ஜமீலா..நீ வருத்தப்படுவியேன்னு நான் உன்கிட்ட பல விஷயத்தை மறைச்சுட்டேன். நான் போன கம்பெனி நல்ல கம்பெனி கிடையாது. முதல் மூணு மாசம் சம்பளம் கொடுத்தாங்க. அத்தோட சரி..அப்புறம் ரிசசன்னு சொல்லி சம்பளம் இல்லாமலேயே வேலை பார்த்தேன். திடீர்னு மூணுமாசம் முன்ன வேலையை விட்டே தூக்கிட்டாங்க. அப்புறம் போன மூணு மாசமா வேலை தேடுனேன். கடைசியா ஒரு வேலை கிடைச்சுச்சு. ஆனால் பழையபடி இந்தியால விசா பிராசசிங் எல்லாம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. நான் இந்தியா வந்தப்புறம் தான் விசா மெயில்ல வந்துச்சு. திரும்ப போன தடவை மாதிரியே நிறைய செலவாகும். அப்பவே 2 லட்சம் ஆயிடுச்சு. ஆனா இவங்க ஃபேமிலி விசாவே தர்றோம்னு சொல்றாங்க. நான் அப்பாகிட்ட காசு வாங்க்கிக்கலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு..அதனால தான் இங்கயே ஏதாவது வேலை பார்ப்போம்னு முடிவு பண்ணேன். இப்போ என்ன செய்யன்னு எனக்கே தெரியலை”

ஜமீலாவிற்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. “கொஞ்ச நாள் இந்தியால இருப்போம். காசு கொஞ்சம் சேர்த்துட்டு, அப்புறம் ஃபாரின் போகலாம்” என்றாள். மதனும் அதற்கு ஒத்துக்கொண்டான்.

றுநாள் ஜமீலாவின் தாய்மாமன் அவர்களைப் பார்க்க வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது மதன் அடுத்து என்ன செய்யப்போகின்றான் என்று கேட்டார். மதன் அதே கதையைச் சும்மா சொன்னான். அதற்கு அவர் “வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கணும். இப்போ கையில இருக்கிற விசாவை விட்டுட்டு, புதுசா இங்க இருந்து வேலை தேடப்போறீங்களா? அது எவ்வளவு கஷ்டம்?”

“இப்போ அவ்வளவு பணத்துக்கு எங்கே மாமா போக?” என்று கேட்டாள் ஜமீலா.

“நான் தர்றேன்மா. நீ அங்க போய்ட்டு, நல்லபடியா செட்டில் ஆகிட்டு, திரும்பக் கொடு” என்றார் அந்த நல்ல மனிதர்.

(செவ்வாய் இரவு...தொடரும்..)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

55 comments:

 1. நண்பருக்காக..கொஞ்சம் பர்ச்சேஸ் வேலை...வெளியில் போகிறேன்....

  ReplyDelete
 2. அப்போ வடை எனக்குதானே...

  ReplyDelete
 3. @MANO நாஞ்சில் மனோ ஆமாண்ணே..ரசிச்சு சாப்பிடுங்க..போய்ட்டு, வந்திடறேன்.

  ReplyDelete
 4. முடிவு சுபமாத்தான் இருக்கும் போல....?

  ReplyDelete
 5. யோஹன்னாவோட எண்ண ஓட்டங்களை ரொம்ப அருமையா கொண்டு வந்துட்டீங்க.... !

  ReplyDelete
 6. very interesting. waiting for next part

  ReplyDelete
 7. யோகன்னாவின் தவிப்பை அழகா சொல்லி இருக்கீங்க பாஸ்,
  ரெண்டுதடவை அப்பகுதியை படித்தேன்......அழகு வர்ணனைகள்.....
  ஏனோ தெரியவில்லை இந்த அத்தியாயம் படித்து
  முடித்ததில் இருந்து யோகன்னாதான் மனசுக்க நிக்குறாள்.

  ReplyDelete
 8. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  முடிவு சுபமாத்தான் இருக்கும் போல....?//

  சுபமா இருந்தா சந்தோசம் தான்ணே...

  ReplyDelete
 9. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோஹன்னாவோட எண்ண ஓட்டங்களை ரொம்ப அருமையா கொண்டு வந்துட்டீங்க.... !//

  ஆமா, எப்படியோ வந்திடுச்சு.

  ReplyDelete
 10. //
  koodalnagar said...
  sir... very interesting... :)))) //

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 11. //தமிழ்வாசி - Prakash said...
  very interesting. waiting for next part//

  தமிழ்வாசியுமா...........அதிசயம் தான்.

  ReplyDelete
 12. //துஷ்யந்தன் said...
  யோகன்னாவின் தவிப்பை அழகா சொல்லி இருக்கீங்க பாஸ்,
  ரெண்டுதடவை அப்பகுதியை படித்தேன்......அழகு வர்ணனைகள்.....
  ஏனோ தெரியவில்லை இந்த அத்தியாயம் படித்து
  முடித்ததில் இருந்து யோகன்னாதான் மனசுக்க நிக்குறாள்.//

  நன்றி துஷ்..

  இப்போதாவது தேவயானியை விரட்டி விட்டீர்களே..மகிழ்ச்சி.

  ReplyDelete
 13. படிக்கலை...இப்ப தான் தொடக்கத்திலே இருக்கேன் செங்கோவி...

  ReplyDelete
 14. ஆஜர், போன எபிசோட்ல மாமான்னு பெரிய பில்டப் குடுத்தப்போவே நெனச்சன், அவருக்கும் ஆப்பு ரெடியா? சார் இந்த மதன் பைபிங்ல வேலன்னுதானே சொனீங்க, எனக்கு என்னமோ ஆப்பு பாக்டரில வேல பாத்திருப்பாரோன்னு தோணுது..

  ReplyDelete
 15. Very good vara vara unga aeluthu theramai kuditea pothu. Yoganah pavam. madhan sontha selavula sunyam vachiketan. Subam nu thana mudiyum.
  .-gopi

  ReplyDelete
 16. உண்மையிலே அவர் நல்ல மனிதரா

  ReplyDelete
 17. தூங்கா நகரம்னு சொன்னானே..என்னை மாதிரியே அதுவும் முழிச்சுக்கிட்டிருக்குமா?//

  காதல் வந்தால் ஏது தூக்கம்...தொலைஞ்சது தான்

  ReplyDelete
 18. யோஹன்னாவிற்கு பதட்டமாக இருந்தது. ‘இது என்ன? ஜூனியர் மதன் என்றால், மகனா? மதனுக்கு மகனா?’ அதற்கு முந்தைய மெயிலை தேடி எடுத்தாள். மதன் தன் குழந்தையுடன் விளையாடும், தூங்கும் ஃபோட்டோக்கள் இருந்தன.//

  கூகுளுக்கு நன்றி சொல்லலாம் டெக்னாலஜி முன்னேறியதால் துரோகத்தை எளிதாக அடையாளம் காண் முடிகிறது...

  ReplyDelete
 19. பாஸ், முதல் பாதியைப் படிக்கும் போது என்னவோ செய்கிறது பாஸ்....

  அவ்வளவு அழகாக ஒரு பெண்ணின் தவிப்பை,
  காதல் பற்றிய இனிமையான + எளிமையான புரிதல்களை அருமையாகத் வர்ணித்திருக்கிறீங்க.

  இந்த வர்ணனைகளின் பின்னே அவளின் உண்மையான தவிப்பு மனங்களை மௌனிக்கச் செய்கிறது..


  You are really great.

  ReplyDelete
 20. தொழில் நுட்பங்களின் உதவியின் மூலம் பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பதனை இத் தொடர் மக்களிடையே சேதியாகவும் கொண்டு வந்திருக்கிறது.

  அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 21. மதன் திருந்திட்டானோ? ஆமாண்ணே எனக்கு ஒரு டவுட், இது உண்மைக்கதையா இல்ல கற்பனையா?

  ReplyDelete
 22. சிறந்த ஆக்கம் நல்ல வருணனைகள் பாராட்டுகள் நன்றி

  ReplyDelete
 23. // ரெவெரி said...
  படிக்கலை...இப்ப தான் தொடக்கத்திலே இருக்கேன் செங்கோவி...//

  ஒன்னும் அவசரம் இல்லை ரெவரி..மெதுவா வாங்க.

  ReplyDelete
 24. நல்லதம்பி(தல-தளபதி சலூன்) said...

  //ஆஜர், போன எபிசோட்ல மாமான்னு பெரிய பில்டப் குடுத்தப்போவே நெனச்சன், அவருக்கும் ஆப்பு ரெடியா? //

  ஹி...ஹி..

  //சார் இந்த மதன் பைபிங்ல வேலன்னுதானே சொனீங்க...//

  இப்போ அவர் அதில் இல்லை நண்பரே.

  ReplyDelete
 25. // gopituty said...
  Subam nu thana mudiyum.
  .-gopi //

  இது டைரிங்கிறதால......இப்போ 2010ல் இருக்கிறோம்.........பார்ப்போம்.

  ReplyDelete
 26. // கவி அழகன் said...
  உண்மையிலே அவர் நல்ல மனிதரா //

  அப்படியெல்லாம் எளிதாக மனிதர்களை பிரித்து விட முடியுமா - என்பது தான் இந்தத் தொடர் எழுப்பும் முக்கியக் கேள்வி..அதையே நீங்களும் கேட்டதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 27. // மாய உலகம் said...
  கூகுளுக்கு நன்றி சொல்லலாம் டெக்னாலஜி முன்னேறியதால் துரோகத்தை எளிதாக அடையாளம் காண் முடிகிறது...//

  ஆமாம் மாயா..அந்த யாஹூ குரூப் ஒப்பன் குரூப்பாக, யார் வேண்டுமென்றாலும் படிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. யோஹன்னா சொல்லும்வரை எங்களுக்கு அது தெரியாது.

  ReplyDelete
 28. // நிரூபன் said...
  இந்த வர்ணனைகளின் பின்னே அவளின் உண்மையான தவிப்பு மனங்களை மௌனிக்கச் செய்கிறது..
  You are really great. //

  அந்தப் பெண் என்னிடம் பேசியபோதும் அதையே உணர்ந்தேன் நிரூ.

  ReplyDelete
 29. // Heart Rider said...
  மதன் திருந்திட்டானோ? ஆமாண்ணே எனக்கு ஒரு டவுட், இது உண்மைக்கதையா இல்ல கற்பனையா? //

  என்னய்யா இது...விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு.........

  ReplyDelete
 30. // மாலதி said...
  சிறந்த ஆக்கம் நல்ல வருணனைகள் பாராட்டுகள் நன்றி //

  நன்றி சகோ.

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. என்னய்யா இது...விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு......... // அப்போ கதை உண்மையா?

  அதில்லை என் டவுட்டு கதையில் உங்க கேரக்டர் நல்லவரா இருக்கே அதான் கற்பனை கதையோன்னு நெனச்சிட்டேன் சாரி...

  ReplyDelete
 33. apo leelai mudiya pogutha. Ofz la bore adikumea. Apuram sengovi unga photo va nanga parthathea ilayea. Junior sengovi ya than parthutu irukom. Unga thirumugatha konjam kaatta kudatha.

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. // Heart Rider said...
  அதில்லை என் டவுட்டு கதையில் உங்க கேரக்டர் நல்லவரா இருக்கே அதான் கற்பனை கதையோன்னு நெனச்சிட்டேன் சாரி...//


  ஹா..ஹா..ஏற்கனவே சொல்லியிருக்கேனே....’யாராவது தான் பண்ண லீலைகளை எழுதுவாங்களா...அதுவும் ஒரு குடும்பஸ்தன் எழுதுவானா...’

  ReplyDelete
 36. gopituty said...
  // apo leelai mudiya pogutha. Ofz la bore adikumea. //

  அப்போ உங்க டைரியை உடனே அனுப்பி வைங்க..அடுத்த தொடரை ஆரம்பிச்சுடுவோம்.

  // Apuram sengovi unga photo va nanga parthathea ilayea. Junior sengovi ya than parthutu irukom. Unga thirumugatha konjam kaatta kudatha. //

  காட்டக்கூடாதுன்னு இல்லை...காட்டற அளவுக்கு ஒன்னும் இல்லை!

  ReplyDelete
 37. Sengovi ,

  Madan still touch with you ?He is also reading your diary ?
  Yoganna is poor some human especially
  Ladies always get negative waves in life

  ReplyDelete
 38. யோஹன்னாவின் சிந்தனை அருமை!
  ஒரே பரபரப்பா இருக்குண்ணே!

  ReplyDelete
 39. // Tirupurvalu said... [Reply]
  Sengovi ,

  Madan still touch with you ?He is also reading your diary ? //

  தொடர்ந்து படித்து வாருங்கள் வாலு..நன்றி.

  ReplyDelete
 40. // ஜீ... said... [Reply]
  யோஹன்னாவின் சிந்தனை அருமை!
  ஒரே பரபரப்பா இருக்குண்ணே! //

  நன்றி தம்பி.

  ReplyDelete
 41. What an unexpected twist ??? rivet will come at the right time :P

  ReplyDelete
 42. அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:
  @இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

  ஒருமுறை வாருங்களேன் பிளீஸ்..

  ReplyDelete
 43. ரொம்ப அருமையா கொண்டு வந்துட்டீங்க.... !

  ReplyDelete
 44. //வினையூக்கி said... [Reply]
  What an unexpected twist ??? rivet will come at the right time :P//

  ஆமாம் செல்வா...ஆனால் ஆப்புக்கே ஆப்பு வைக்கும் மனிதர்கள் இங்கு உண்டு.

  ReplyDelete
 45. //சே.குமார் said...
  ரொம்ப அருமையா கொண்டு வந்துட்டீங்க.... !//

  குமார், நான் அடுத்த பதிவையே கொண்டு வந்துட்டேன்..இங்க என்ன செய்றீங்க...

  ReplyDelete
 46. ////
  என்னென்னவோ தகவல்கள் வந்தன. அசுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டே வந்தவள் கண்ணில் மதன் பெயர் கொண்ட ஒரு யாஹூ மெயில் குரூப் கண்ணில் பட்டது. அது ஏதோ மதுரையில் உள்ள காலேஜ் மாணவர்களின் குரூப் என்று தெரிந்தது. க்ளிக் செய்து உள்ளே போனாள். அது மதனின் காலேஜ் தான் என்பது புரிந்தது. அப்படியென்றால், மதனும் இங்கே இருப்பானா என்று ஆர்வத்துடன் தேடினாள். அந்தப் பக்கத்தின் கடைசி மெயிலாக ‘Re:Jr.Madhan' இருந்தது.

  அதை க்ளிக் செய்தாள். அங்கே புரியாத எழுத்துக்களில் ஏதோ எழுதியிருந்தது. அனுப்பிய மெயில் ஐடியைப் பார்த்தாள். அது மதனின் யாஹு ஐடி தான். அனுப்பிய தேதி பார்த்தாள். நேற்றுத் தான் அனுப்பி இருக்கிறாள்/////

  ரொம்ம உஷாரா இருக்னும் போல......அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

  ReplyDelete
 47. Sengovi u r taking me too much tension with your duuuuuur dairy

  ReplyDelete
 48. //K.s.s.Rajh said... [Reply]

  ரொம்ம உஷாரா இருக்னும் போல......அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் //

  அடப்பாவிகளா..எப்படி தப்பு பண்ணன்னா நான் பாடம் எடுக்கிறேன்..

  ReplyDelete
 49. //Tirupurvalu said...
  Sengovi u r taking me too much tension with your duuuuuur dairy//

  ஹா..ஹா..டர்ர் ஆன டைரியப் படிச்சு டர் ஆகலாமா...நாளை வரை பொறுங்களேன்!

  ReplyDelete
 50. செங்கோவி தலைவா உங்களின் லீலை 47 க்கஹா காத்து கொண்டிருக்கிறேன் ....இன்னைக்குதான் செவ்வாய் கிழமை ..

  ReplyDelete
 51. @saran ஆமா பாஸ், வந்துக்கிட்டே இருக்கு..12.15!

  ReplyDelete
 52. கத நல்லாப் போகுது!இதுக்கு முன்னாலையும் நல்லாத் தான் போச்சு!(தப்பிச்சேன்,மறந்து அப்புடியே வுட்டிருந்தா?!)

  ReplyDelete
 53. //Yoga.s.FR said...//

  ஆஹா..எங்கள் தங்கம், தானைத் தலைவர், ஃப்ரான்ஸ் ஃபயர்..ஐயா யோகா அவர்கள் வந்துவிட்டார்!!!

  ஐயா, லீலை தான் ரெடி ஆகிட்டிருக்கு..முடிச்சுட்டு வர்றேன்..

  ReplyDelete
 54. செங்கோவி தலைவா ..சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க....யோஹன்னவோட முடிவு என்னனு தெரிந்துகொள்ள மனம் துடிக்கிறது...மிஹவும் அருமைய கொண்டு போறீங்க ...வாழ்த்துக்கள்...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.