Wednesday, September 14, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47


தன் மும்பை சென்று இறங்கினான். எங்களது நண்பர் ஒருவரின் அறையில் தங்கினான். ‘என்ன விஷயம்’ என்று நண்பர் கேட்க, ஃபாரின் போகப் போவதாகவும் விசா ஸ்டாம்பிங் செய்ய வந்திருப்பதாகவும் சொன்னான்.

மதனுக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. யோஹன்னா விசிட்டிங் விசா எடுத்து அனுப்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தும், அதை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். திடீரென ஜமீலாவின் மாமா மூன்று லட்சம் தரவும் ஆடிப்போனான்.

அடுத்து ஜமீலாவும் ‘இன்னும் ஏன் யோசிக்கிறீங்க? கம்பெனி விசா இருக்குன்னு சொன்னீங்கள்ல..அதுவும் ஃபேமிலிக்கே இருக்குன்னு சொன்னீங்கள்ல. சீக்கிரம் விசா பிராசசிங் பண்ணுங்க. நாம கிளம்புவோம். எனக்கு இங்க இருக்கிறது சரியாவே படலை’ என்று சொல்லி, மிகவும் வற்புறுத்தி மும்பை அனுப்பினாள்.

இப்போது கையில் விசிட்டிங் விசாவுடன் மூன்று லட்சம் செலவுக்குப் பணம். அடுத்து என்ன செய்வது..இப்போது விசா பிராசசிங் பண்ணு என்றே ஜமீலாவும் சொல்கிறாள், ஜமீலா மாமாவும் சொல்கிறார், யோஹன்னாவும் சொல்கிறாள். எல்லோரும் சொல்லும்போது, நமக்கென்ன..முதலில் ஃபாரின் போவோம்..பெர்மனண்ட் ரெசிடென்சி வாங்குவோம்..பிறகு பார்த்துக் கொள்ளலாம்..

மதன் அங்கு ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து, விசா ஸ்டாம்பிங் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் மூன்றே நாளில் முடித்துக்கொடுத்தார்கள். டிக்கெட் உடனே கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்தே இருந்தது. மதன் அந்த டிக்கெட்டை வாங்கி விட்டு, காத்திருக்கத் தொடங்கினான்.

தன் வந்தவுடன் ஃபாரின் கிளம்ப வேண்டியிருக்கும் என்பதால், ஜமீலா தேவையான பொருட்களை பேக் பண்ணத் தொடங்கினாள்.

யோஹன்னா மனம் நொந்த நிலையில் ஆத்திரத்துடன் காத்திருந்தாள். 

பதிவர் சிவாவிடம் எதுவும் சொல்லாமல், மதன் பற்றியும் அவன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தாள். சிவாவும் மதனின் நெருங்கிய நண்பனாக என்னைச் சொல்லிக்கொண்டிருந்தான். 

’தான் மெயிலில் பார்த்தபடியே, மதனுக்கு குழந்தை உண்டா..அல்லது தான் தான் தவறாக புரிந்து கொண்டோமா..சிவா பொறாமை பிடித்தவன் என்று வேறு மதன் சொன்னானே..இவனிடம் ஃபோட்டோ மேட்டரைக் கேட்டால் உண்மையைச் சொல்வானா?’ என்று யோஹன்னா குழம்பியபடியே சிவாவிடம் நேரடியாக எதுவும் கேட்காமல் சுற்றி வளைத்துக்கொண்டிருந்தாள்.

சிவா எங்கெங்கோ விசாரித்ததில் ’மதனுக்குக் கல்யாணம் ஆனது உண்மை என்றும், அது செங்கோவிக்கு நன்றாகத் தெரியும்’ என்றும் அறிந்து கொண்டான். ’ ஆனால் இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே..இங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது..ஏதாவது ஒரு ஆதாரம் இல்லாமல் இந்தப் பெண்களிடம் பேச முடியாதே’ என்று தனியே புலம்பிக்கொண்டிருந்தான் சிவா.


ஜெயபாலிற்கு எரிச்சலாக இருந்தது.

’அவனுக்கு எரிச்சலாய் இருப்பது அதிசயம் அல்ல. அவன் சாதாரணமாய் இருப்பதே அதிசயம் ’என்று நினைத்த படியே அவன் அப்பா மீண்டும் கேட்டார்.

“சொல்லுப்பா..ஏன் கணக்கு டேலி ஆக மாட்டேங்குது?”

“பார்த்துட்டுச் சொல்றேன்”

“பார்த்திட்டா?..எப்போ...எப்போ சார் பார்ப்பீங்க? ஒரு பிஸினஸ் பண்றவனுக்கு கணக்கு எப்பவும் விரல் நுனில இருக்க வேண்டாமா?”

“இப்போ இல்லை..என்ன செய்யணும்கிறீங்க?”

ஜெயபால் குரலை உயர்த்தவும், அவன் அம்மா உள்ளே புகுந்தாள்.

“ஜெயா, அப்பா உன் நல்லதுக்குத் தானேப்பா கேட்காரு..ஏங்க அவன் சொல்லுவான்..விடுங்க”

“ம்..அவன் இன்னிக்கு இப்படி கெட்டுக் குட்டிச்சுவராப் போனதுக்கு காரணமே நீ கொடுத்த செல்லம் தான். லட்சக்கணக்குல என் பி.எஃப்.காசு போட்டு, ஏஜென்ஸி வச்சுக் கொடுத்திருக்கேன். அதுக்கு நான் கணக்குக் கேட்டா, கோவம் வருது சாருக்கு..வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்க..அதுக்கு நல்ல உதாரணமா வந்து வாச்சிருக்கான் இவன்..”

அவர்கள் பேசுவதைக் கேட்டபடி  தன் ரூமிற்குள் அமர்ந்திருந்த ஜெயபாலின் தம்பி, இதுவே தான் செல்ல சரியான நேரம் என்று நினைத்தபடி எழுந்தான். தன் காலேஜ் பேக்கை எடுத்தபடி, அமைதியாக ஹாலுக்கு வந்தான்.

“அம்மா..அப்பா..நான் காலேஜ் போய்ட்டு வர்றேன்” என்றான். அவன் எதிர்பார்த்தபடியே அவன் அப்பா ஆரம்பித்தார்.

“பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி டென் த் கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு. உன்னால என்கூட வேலை செய்ற வாத்திக முன்னாடி தலைகுனிஞ்சு எத்தனை தடவை நின்னிருப்பேன். எப்போ இவன் காலேஜ் சேர்ந்தானோ, அன்னிக்குத் தான் நான் தலைநிமிர்ந்து எங்க ஸ்கூல்ல நடக்க ஆரம்பிச்சேன்”

ஜெயபாலின் தம்பிக்கு சந்தோசமாக இருந்தது. எப்போதும் கேட்கும் வசனம் தான். சில வார்த்தைகள் மாறலாம், ஆனால் அதே பாயிண்ட். ‘அப்பாவை தலைநிமிர்ந்து நடக்க வைத்த மகன்’ என்பதைக் கேட்கவே சந்தோசமாய் இருந்தது.இதற்காகவாவது கேம்பஸில் செலக்ட் ஆகவேண்டும் என்று நினைத்தபடி காலேஜ் கிளம்பினான். அப்பா தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

“ உன்கூட மதுரை ஸ்கூல்ல படிச்ச எல்லாப் பசங்களும் இன்னிக்கு எஞ்சினியர், டாக்டர்னு ஆகி ஃபாரின் போய்ட்டாங்க. அவங்களைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா நீ? பிஸினஸை நல்லா நடத்தி, முன்னேற வேண்டாமா?”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயபால் வெளியேறினான். கோபத்தை பைக்கின் மேல் காட்ட உதைக்க வீறிட்டபடி, அது நகர்ந்தது.

ஜெயபால் மதனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். மதன் படித்து எஞ்சினியர் ஆகி, வெளிநாடும் பறந்துவிட, ஜெயபால் மதுரையில் ஏதோதோ பிஸினஸ் செய்து தோற்று, இப்போது டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டுத்தேவைப் பொருட்களை விற்கும் ஏஜென்ஸியை நடத்திக்கொண்டிருந்தான்.

அடிக்கடி இப்படி அப்பா அவமானப்படுத்துவதை நினைத்துக்கொண்டே கடுப்புடன் பைக்கை விரட்டியபடியே பழங்கானத்தம் சிக்னல் வந்து நின்றான். மேலும் சிலரும் சிக்னலுக்காக காத்திருந்தனர். ஒரு பெண் ஸ்கூட்டியில் வந்து ஜெயபாலின் பின்னால் நின்றாள். பிறகு கொஞ்சம் பின்னே நகர்ந்து, ஜெயபாலுக்கு அடுத்திருந்த கேப்பில் கொஞ்சம் கொஞ்சமாக வண்டியை நுழைத்தாள். அவள் வண்டியில் பின்பகுதி ஜெயபால் பைக் மீது லேசாக உரசியது. உடனே வண்டியை பின்னிழுத்து விட்டு “சாரி சார்” என்றாள்.

ஜெயபால் கடுப்புடன் திரும்பிப் பார்த்தான். அவள் “ஆஃபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு..அதான்” என்றாள்.

“நீ மட்டும் தான் ஆஃபீஸ் போறே..நாங்கள்லாம் சிரைக்கப் போறமா?” என்று கத்தினான் ஜெயபால்.

அந்தப் பெண் பயந்து போனாள். அதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். அதே நேரத்தில் பூனை ஒன்று நான்கு குட்டிகளுடன் சிக்னல் ஏரியாவிற்குள் நுழைந்தது. இந்த பிஸியான நேரத்தில், இது எங்கிருந்து ஏன் வந்தது என்று எல்லாரும் திகைத்தனர்.

அந்த தாய்ப் பூனை இவர்களது பகுதியைக் கடக்கும்போது க்ரீன் சிக்னல் விழுந்தது. முன்னால் நின்றோர் எப்படிப் போவதென யோசித்தபடியே நின்றனர். பின்னால் இருந்தவர்கள் விஷயம் புரியாமல், ஹாரன பலமாக அடிக்கத்தொடங்கினர். பூனையும் குட்டிகளும் மிரண்டன.

ஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.

(தொடர்ச்சி...வெள்ளி இரவில்!)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

133 comments:

 1. :»»";";";";"முதல் மழை:";";";"««

  ReplyDelete
 2. அவரு கேட்டாரு,இவரு முந்திக்கிட்டாரே?சரி, நாமளும் படிச்சுடுவோம்!

  ReplyDelete
 3. வணக்கம் ப்ளாக் ஓனர், மன்மத தேசத்தின் கதாநாயகன் செங்கோவி அவர்களே,

  மற்றும் யோகா ஐயா அவர்களே
  எல்லோரும் நலமா?

  ReplyDelete
 4. மதன் மும்பை சென்று இறங்கினான். எங்களது நண்பர் ஒருவரின் அறையில் தங்கினான். ‘என்ன விஷயம்’ என்று நண்பர் கேட்க, ஃபாரின் போகப் போவதாகவும் விசா ஸ்டாம்பிங் செய்ய வந்திருப்பதாகவும் சொன்னான்.//

  அவ்...இப்படிதான் சொல்லியிருப்பான், ஆனால் உள் மனதில் அடுத்த ஸ்டெப் என்ன என்று ஒரு பெரிய திட்டமே போட்டிருப்பானே?

  ReplyDelete
 5. யோகா ஐயா,
  மரணச் சடங்கெல்லாம் எப்படி?
  தாங்கள் நலமா?

  ReplyDelete
 6. ஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது.////ஐயோ!

  ReplyDelete
 7. // » мσнαη « • said...
  :»»";";";";"முதல் மழை:";";"//

  மழை பெய்யட்டும்.

  ReplyDelete
 8. //
  நிரூபன் said...
  வணக்கம் ப்ளாக் ஓனர், மன்மத தேசத்தின் கதாநாயகன் செங்கோவி அவர்களே,

  மற்றும் யோகா ஐயா அவர்களே
  எல்லோரும் நலமா?//

  அனைவரும் நலமே..நீங்க நலம் தானான்னு சந்தேகமா இருக்கே..

  ReplyDelete
 9. மதனுக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. யோஹன்னா விசிட்டிங் விசா எடுத்து அனுப்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தும், அதை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். திடீரென ஜமீலாவின் மாமா மூன்று லட்சம் தரவும் ஆடிப்போனான்.//

  அவ்....மாமா என்றால் இப்படித் தான் இடக்கு முடக்கான டைம்மிலயும் உதவுவார் என்று நினைக்கிறேன்.
  ஆனால் மதனுக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் மனிதன் மாமாவிற்குப் புரியாமலிருப்பது தான் வேதனை..

  ReplyDelete
 10. //
  Yoga.s.FR said...
  ஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது.////ஐயோ!//

  அதையே தான் அதைப் பார்த்த என் நண்பரும் சொன்னார் ஐயா...

  படிச்சதுக்கே இப்படின்னா, பார்த்த ஆளு நிலைமை?

  ReplyDelete
 11. கடந்த மூன்று பக்கங்களை(லீலைகளை) மிஸ் பண்ணிட்டேன்.எல்லாத்தையும் படிச்சுட்டு வந்துடுறேன்!

  ReplyDelete
 12. அடுத்து ஜமீலாவும் ‘இன்னும் ஏன் யோசிக்கிறீங்க? கம்பெனி விசா இருக்குன்னு சொன்னீங்கள்ல..அதுவும் ஃபேமிலிக்கே இருக்குன்னு சொன்னீங்கள்ல. சீக்கிரம் விசா பிராசசிங் பண்ணுங்க. நாம கிளம்புவோம். எனக்கு இங்க இருக்கிறது சரியாவே படலை’ என்று சொல்லி, மிகவும் வற்புறுத்தி மும்பை அனுப்பினாள்.//

  ஆகா...நல்லாத் தான் விடுறாங்க..........ரீலு...

  ReplyDelete
 13. //நிரூபன் said...
  அவ்....மாமா என்றால் இப்படித் தான் இடக்கு முடக்கான டைம்மிலயும் உதவுவார் என்று நினைக்கிறேன்.
  ஆனால் மதனுக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் மனிதன் மாமாவிற்குப் புரியாமலிருப்பது தான் வேதனை.//

  மதனுக்குத் தெரிந்ததெல்லாம் வேற மாமா தான்..

  ReplyDelete
 14. கோகுல் said...
  கடந்த மூன்று பக்கங்களை(லீலைகளை) மிஸ் பண்ணிட்டேன்.எல்லாத்தையும் படிச்சுட்டு வந்துடுறேன்!//

  கண்டிப்பா வந்திடுவீங்க எல்லே..
  அப்புறம் எஸ் ஆகி...யோஹன்னா யாரு என்று இணையத்தில தேடப் போயிட மாட்டீங்க தானே;-))))))))))
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 15. என்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?

  ReplyDelete
 16. நிரூபன் said...

  யோகா ஐயா,
  மரணச் சடங்கெல்லாம் எப்படி?
  தாங்கள் நலமா?///எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம். நலமே உள்ளேன்.எல்லாம் நடந்து முடிந்தது.பரம்பொருள் ஒரு நல் ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது!சரி,எல்லோருக்கும் வருவது தானே?. நிருபன், வந்தவுடன் எல்லோரையும் மேலோட்டமாகப் பார்த்து முடிந்த வரை குழம்பியிருக்கிறேன்!பாருங்கள்.

  ReplyDelete
 17. முதலில் ஃபாரின் போவோம்..பெர்மனண்ட் ரெசிடென்சி வாங்குவோம்..பிறகு பார்த்துக் கொள்ளலாம்.//

  இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை என்பதனை மதன் இவ்வளவு அனுபவங்களின் பின்னருமா உணர்ந்து கொள்ளவில்லை.

  ReplyDelete
 18. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?//

  அப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்..

  ReplyDelete
 19. //
  கோகுல் said...
  கடந்த மூன்று பக்கங்களை(லீலைகளை) மிஸ் பண்ணிட்டேன்.எல்லாத்தையும் படிச்சுட்டு வந்துடுறேன்! //

  ஒன்னும் அவசரம் இல்லை..நிதானமா வாங்க.

  ReplyDelete
 20. மதன் கிளம்பி போய்ட்டு திரும்ப வர போறாரு......

  ReplyDelete
 21. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?//

  ஏண்ணே பிட்டுப் படத்துலகூட இண்டவெல்லுக்கு மேல சீன் வராதே..நீங்க இங்க இப்படி கடைசி வரைக்கும் எதிர்பார்க்கலாமா?

  ReplyDelete
 22. மதன் அங்கு ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து, விசா ஸ்டாம்பிங் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் மூன்றே நாளில் முடித்துக்கொடுத்தார்கள். டிக்கெட் உடனே கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்தே இருந்தது. மதன் அந்த டிக்கெட்டை வாங்கி விட்டு, காத்திருக்கத் தொடங்கினான்.//

  அட எல்லாம் நல்லாத் தானே போய்க்கிட்டுருக்கு..

  நல்ல நோக்கத்தில விசா அப்ளை பண்ணினா ரொம்ப நாளு எடுப்பாங்க.
  ஆனால் மதன மாதிரி மன்மதக் குஞ்சுகளுக்கு..
  சீக்கிரமே விசாக் குடுத்திடுறாங்களே..

  ReplyDelete
 23. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மதன் கிளம்பி போய்ட்டு திரும்ப வர போறாரு.//

  எல்லாரும் வாங்க..பன்னியண்ணன் கதை சொல்லப்போறாரு..

  அப்புறம்ணே...?

  ReplyDelete
 24. Yoga.s.FR said...
  நிரூபன் said...

  யோகா ஐயா,
  மரணச் சடங்கெல்லாம் எப்படி?
  தாங்கள் நலமா?///எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம். நலமே உள்ளேன்.எல்லாம் நடந்து முடிந்தது.பரம்பொருள் ஒரு நல் ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது!சரி,எல்லோருக்கும் வருவது தானே?. நிருபன், வந்தவுடன் எல்லோரையும் மேலோட்டமாகப் பார்த்து முடிந்த வரை குழம்பியிருக்கிறேன்!பாருங்கள்.//

  ஆமாம் ஐயா...
  நல்ல விடயம்,
  அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 25. ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?//

  அப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்../////

  ஆஹா அப்படி வேற இருக்கா?

  ReplyDelete
 26. //
  நிரூபன் said...
  மதன் அங்கு ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து, விசா ஸ்டாம்பிங் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் மூன்றே நாளில் முடித்துக்கொடுத்தார்கள். டிக்கெட் உடனே கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்தே இருந்தது. மதன் அந்த டிக்கெட்டை வாங்கி விட்டு, காத்திருக்கத் தொடங்கினான்.//

  அட எல்லாம் நல்லாத் தானே போய்க்கிட்டுருக்கு..

  நல்ல நோக்கத்தில விசா அப்ளை பண்ணினா ரொம்ப நாளு எடுப்பாங்க.
  ஆனால் மதன மாதிரி மன்மதக் குஞ்சுகளுக்கு..
  சீக்கிரமே விசாக் குடுத்திடுறாங்களே.//

  ஹா..ஹா..உண்மை தான்யா..என்னையும் 3 மாசம் அலைய விட்டாங்க.

  ReplyDelete
 27. மதன் வந்தவுடன் ஃபாரின் கிளம்ப வேண்டியிருக்கும் என்பதால், ஜமீலா தேவையான பொருட்களை பேக் பண்ணத் தொடங்கினாள்.

  யோஹன்னா மனம் நொந்த நிலையில் ஆத்திரத்துடன் காத்திருந்தாள். //

  அவ்...ஒரு உள்ளம் பிரிவில், இன்னோர் உள்ளம் எதிர்பார்ப்பில்..

  மதன் எப்படியெல்லாம் நடிக்கிறான்...

  ReplyDelete
 28. என்ன தலிவா இப்டி eamathiteenga ...இந்த பஹுதில ட்விஸ்ட் வைபீங்கனு பார்த்த ஜெயபால் கடுப்ப வெளில போனதே சொல்லி கதைய முடிச்சிட்டீங்க .

  ReplyDelete
 29. //
  நிரூபன் said...
  Yoga.s.FR said...
  நிரூபன் said...

  யோகா ஐயா,
  மரணச் சடங்கெல்லாம் எப்படி?
  தாங்கள் நலமா?///எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம். நலமே உள்ளேன்.எல்லாம் நடந்து முடிந்தது.பரம்பொருள் ஒரு நல் ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது!சரி,எல்லோருக்கும் வருவது தானே?. நிருபன், வந்தவுடன் எல்லோரையும் மேலோட்டமாகப் பார்த்து முடிந்த வரை குழம்பியிருக்கிறேன்!பாருங்கள்.//

  ஆமாம் ஐயா...
  நல்ல விடயம்,
  அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.//

  ஐயாவை அதில் இருந்து மீட்கவே நான் எதுவும் கேட்கலை நிரூ..விடுங்க.

  ReplyDelete
 30. //manikandansaudiarab said...
  என்ன தலிவா இப்டி eamathiteenga ...இந்த பஹுதில ட்விஸ்ட் வைபீங்கனு பார்த்த ஜெயபால் கடுப்ப வெளில போனதே சொல்லி கதைய முடிச்சிட்டீங்க .//

  அவர் ரொம்ப முக்கியமான ஆளு பாஸ்..அதனால தான்...

  ReplyDelete
 31. ஜெயபால் கதை ---

  புதுசா ஒரு கிளைக்கதை????....

  படத்தில் வர்ற மாதிரி கிளைமாக்ஸ்சில் வில்லன் என்ட்ரியா???? ...

  ReplyDelete
 32. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!///சரி,சரி புரிகிறது!பிறந்த பயன் கிட்டியது தானே?சென்று உறங்குங்கள்! நாங்கள் கும்முகிறோம்!

  ReplyDelete
 33. “நீ மட்டும் தான் ஆஃபீஸ் போறே..நாங்கள்லாம் சிரைக்கப் போறமா?” என்று கத்தினான் ஜெயபால்//

  இவ் இடத்தில் வாற சிரைக்கிறோம் என்ற வசனம் எங்கள் ஊரிலும் ரொம்ப பேமசு..

  நீ...என்ன மயிரை...சிரைச்சுக் கிட்டே இருக்கிறாய் என்று கோபம் வரும் போது ஏசுவார்கள்.

  இச் சொல் பற்றியும் ஒரு தனிப்பதிவே போடலாம் பாஸ்..
  நினைவூட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
 34. //» мσнαη « • said...
  ஜெயபால் கதை ---

  புதுசா ஒரு கிளைக்கதை????....

  படத்தில் வர்ற மாதிரி கிளைமாக்ஸ்சில் வில்லன் என்ட்ரியா????//

  அப்போ மதன் ஹீரோ தானா?

  ReplyDelete
 35. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?//

  அப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்../////

  ஆஹா அப்படி வேற இருக்கா?//

  ஆமா பாஸ்....

  ReplyDelete
 36. அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//

  என்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு........

  ReplyDelete
 37. //நிரூபன் said...
  “நீ மட்டும் தான் ஆஃபீஸ் போறே..நாங்கள்லாம் சிரைக்கப் போறமா?” என்று கத்தினான் ஜெயபால்//

  இவ் இடத்தில் வாற சிரைக்கிறோம் என்ற வசனம் எங்கள் ஊரிலும் ரொம்ப பேமசு..

  நீ...என்ன மயிரை...சிரைச்சுக் கிட்டே இருக்கிறாய் என்று கோபம் வரும் போது ஏசுவார்கள்.

  இச் சொல் பற்றியும் ஒரு தனிப்பதிவே போடலாம் பாஸ்..
  நினைவூட்டியதற்கு நன்றி.//

  யோவ் என்ன ஆளுய்யா நீரு..அந்த வார்த்தையை ஒருதடவை எழுத முன்ன பத்து தடவை யோசிச்சேன்..இவரு தனிப்பதிவே போடப்போறாராம்..

  ReplyDelete
 38. //நிரூபன் said...
  அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//

  என்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//

  ஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்?

  ReplyDelete
 39. செங்கோவி said...ஐயாவை அதில் இருந்து மீட்கவே நான் எதுவும் கேட்கலை நிரூ..விடுங்க.////வருத்தமொன்றுமில்லை.வயதான தாயார் தான்.நெடு நாள் முடியாமலிருந்து இறக்கவில்லை என்பதில் எங்கள் எல்லோருக்குமே பரம திருப்தி!அதனால் வருந்தவில்லை!ஆண்டவனுக்கு நன்றி!

  ReplyDelete
 40. பிட்டு படத்துல மன்மதன் மாதிரி ஆட்கள்தானே ஹீரோ....??(anti -hero )போலீஸ் தானே வில்லன் மன்மதன் மாதிரி ஹீரோக்களுக்கு... ...அது மாதுரி

  ReplyDelete
 41. /////// செங்கோவி said...
  //நிரூபன் said...
  அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//

  என்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//

  ஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்?
  ///////

  உள்குத்துக்கே உள்குத்தா?

  ReplyDelete
 42. என்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//

  ஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்?//

  ஹே...ஹே...ஹே...
  அவ்...........

  ReplyDelete
 43. செங்கோவி said...யோவ் என்ன ஆளுய்யா நீரு..அந்த வார்த்தையை ஒருதடவை எழுத முன்ன பத்து தடவை யோசிச்சேன்..இவரு தனிப்பதிவே போடப்போறாராம்.///அது சரி!

  ReplyDelete
 44. Yoga.s.FR said...
  செங்கோவி said...ஐயாவை அதில் இருந்து மீட்கவே நான் எதுவும் கேட்கலை நிரூ..விடுங்க.////வருத்தமொன்றுமில்லை.வயதான தாயார் தான்.நெடு நாள் முடியாமலிருந்து இறக்கவில்லை என்பதில் எங்கள் எல்லோருக்குமே பரம திருப்தி!அதனால் வருந்தவில்லை!ஆண்டவனுக்கு நன்றி!//

  ஐயா அப்படீன்ன மிஸ்டர் காட்டான் மாமவும் இதே மரணச் சடங்கிற்குத் தான் போயிருந்ததாகச் சொன்னார்,

  அப்போ...உங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியுமா?

  ReplyDelete
 45. • » мσнαη « • said...
  // பிட்டு படத்துல மன்மதன் மாதிரி ஆட்கள்தானே ஹீரோ....??(anti -hero )போலீஸ் தானே வில்லன் மன்மதன் மாதிரி ஹீரோக்களுக்கு...//

  அந்த மாதிரிப் படத்தைக்கூட கடைசிவரைக்கும் உட்கார்ந்து பார்ப்பீங்களாய்யா?

  // ...அது மாதுரி //

  மாதுரியா......யாரு, 80-ல எல்லாரும் ரேப் பண்ணுவாங்களே...ரேப் ஸ்பெஷலிஸ்ட் மாதுரி..அதுவா?
  //

  ReplyDelete
 46. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// செங்கோவி said...
  ///////

  உள்குத்துக்கே உள்குத்தா?//

  யோ..என்ன ஆளுங்கையா நீங்க.

  நானே வயித்துக் குத்தில நாலு நாளா அவதிப்படுறேன்..
  இதில உள் குத்து என்று ஓவர் நக்கலு...

  ReplyDelete
 47. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// செங்கோவி said...
  //நிரூபன் said...
  அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//

  என்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//

  ஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்?
  ///////

  உள்குத்துக்கே உள்குத்தா?//

  அண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்கும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே?

  ReplyDelete
 48. அண்ணே பன்னிக்குட்டியண்ணே,
  அந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு?

  ReplyDelete
 49. //////// நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// செங்கோவி said...
  ///////

  உள்குத்துக்கே உள்குத்தா?//

  யோ..என்ன ஆளுங்கையா நீங்க.

  நானே வயித்துக் குத்தில நாலு நாளா அவதிப்படுறேன்..
  இதில உள் குத்து என்று ஓவர் நக்கலு...
  ///////

  மறுபடியும் உள்குத்தா? ஹஹஹா

  ReplyDelete
 50. ஆனால் இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே.////எத்தன வாட்டி தாய்யா சொல்லுறது?அதென்ன தொலைந்தான்,காணாமப் போனான்னு?

  ReplyDelete
 51. @செங்கோவி...

  உள்குத்துக்கே உள்குத்தா?//

  அண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்கும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே?//

  அவ்...ஆளாளுக்கு ஒரு தனி ப்ளாக்கே ஓப்பின் பண்ணி அவனவன் குத்திக்கிட்டிருக்கான்னே....

  இதில நாம போடுறதெல்லாம் உள் குத்து என்றால்........
  அவ்...........

  ReplyDelete
 52. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// செங்கோவி said...
  //நிரூபன் said...
  அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//

  என்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//

  ஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்?
  ///////

  உள்குத்துக்கே உள்குத்தா?//

  அண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்கும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே?
  ////////

  யோவ் நான் போட்டது உள்குத்து இல்லியா வெளிகுத்து..... நான் போட்ட மாதிரி செய்யற பதிவர்கள் எப்படியும் 100 பேராவது இருப்பாங்கல்ல....?

  ReplyDelete
 53. ///ரேப் ஸ்பெஷலிஸ்ட் மாதுரி..அதுவா?////

  யாருங்க அது....????

  நிறைய கதைகள் வச்சிருப்பீங்க போல!!!!

  ReplyDelete
 54. //Yoga.s.FR said...
  ஆனால் இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே.////எத்தன வாட்டி தாய்யா சொல்லுறது?அதென்ன தொலைந்தான்,காணாமப் போனான்னு?//

  நான் என்ன செய்ய..அவர் அப்படித் தான் சொன்னாரு..இதை அவரும் படிச்சுக்கிட்டுத் தான் இருப்பார்..அதனால இனிமே சொல்ல மாட்டார்..

  ReplyDelete
 55. அடுத்தது என்னவாயிருக்கும் எனும் ஆவலோடு உங்களின் பதிவினை முடித்திருக்கிறீங்க.
  நன்றி பாஸ்..

  நான் நாளை நைட் சந்திக்கிறேன்.

  ReplyDelete
 56. /////நிரூபன் said...
  அண்ணே பன்னிக்குட்டியண்ணே,
  அந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு?
  //////

  நீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண்ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....

  ReplyDelete
 57. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் நான் போட்டது உள்குத்து இல்லியா வெளிகுத்து..... நான் போட்ட மாதிரி செய்யற பதிவர்கள் எப்படியும் 100 பேராவது இருப்பாங்கல்ல....? //

  ஓ..100 பேரை டார்கெட் பண்ணீங்களா...பெரிய ஆளுதாண்ணே நீங்க..நாங்க இங்க ஒருத்தரைப் பத்தி எழுதவே யோசிக்கிறோம்..

  ReplyDelete
 58. பன்னிக்குட்டி ராம்சாமி said..//

  யோவ் நான் போட்டது உள்குத்து இல்லியா வெளிகுத்து..... நான் போட்ட மாதிரி செய்யற பதிவர்கள் எப்படியும் 100 பேராவது இருப்பாங்கல்ல....?//

  ஆமாண்ணே...அது அட்வைஸ் நல்லுரைப் பதிவு அண்ணே...

  பழசைக் கிளறாம...நேரடியா கமலா காமேஷ் மேட்டருக்கு வாங்கண்ணே...

  ReplyDelete
 59. நிரூபன் said...ஐயா அப்படீன்ன மிஸ்டர் காட்டான் மாமவும் இதே மரணச் சடங்கிற்குத் தான் போயிருந்ததாகச் சொன்னார்,

  அப்போ...உங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியுமா?////இல்லை.அது வேறு,இது வேறு.அவரைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமில்லை!

  ReplyDelete
 60. //////நிரூபன் said...
  @செங்கோவி...

  உள்குத்துக்கே உள்குத்தா?//

  அண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்கும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே?//

  அவ்...ஆளாளுக்கு ஒரு தனி ப்ளாக்கே ஓப்பின் பண்ணி அவனவன் குத்திக்கிட்டிருக்கான்னே....

  இதில நாம போடுறதெல்லாம் உள் குத்து என்றால்........
  அவ்...........
  ///////

  இது எங்க? வரவர என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குதுய்யா... இதுக்கு தேர்தல்லயே நின்னு எம்பியாகிடலாம் போல...

  ReplyDelete
 61. // » мσнαη « • said...
  ///ரேப் ஸ்பெஷலிஸ்ட் மாதுரி..அதுவா?////

  யாருங்க அது....????

  நிறைய கதைகள் வச்சிருப்பீங்க போல!!//

  யோவ், மாதுரியைத் தெரியாதா..கறுப்புக் கட்டழகி..

  ரகுவரன்கூட நிறையப் படத்துல ரேப் பண்ணியிருக்காரே..

  மனிதன்..மனிதன்....எவன் தான் மனிதன்.......

  ReplyDelete
 62. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////நிரூபன் said...
  அண்ணே பன்னிக்குட்டியண்ணே,
  அந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு?
  //////

  நீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண்ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....//

  ஆமாணே..அது நெட்டில இருக்கு...

  தேடிப் பாருங்க கிடைக்கும்,

  ........கில்மா......என்ற முகவரியில் தேடுங்க.

  இல்லேன்னா சாட்டுக்கு வாங்க.

  ReplyDelete
 63. அட பாவமே ஒரு உசுரு போச்சே

  ReplyDelete
 64. //நிரூபன் said...
  அடுத்தது என்னவாயிருக்கும் எனும் ஆவலோடு உங்களின் பதிவினை முடித்திருக்கிறீங்க.
  நன்றி பாஸ்..

  நான் நாளை நைட் சந்திக்கிறேன்.//

  ஓகே நிரூ!

  ReplyDelete
 65. இது எங்க? வரவர என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குதுய்யா... இதுக்கு தேர்தல்லயே நின்னு எம்பியாகிடலாம் போல...
  //

  அதான் மெயிலுக்கு அனுப்பியிருக்கேனே...
  அவ்,.,,,,,,,,,,

  ReplyDelete
 66. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இது எங்க? வரவர என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குதுய்யா... இதுக்கு தேர்தல்லயே நின்னு எம்பியாகிடலாம் போல.//

  உமக்குப் புரியலேன்னா, இந்தியா நாசமாப் போயிடணுமா..என்னய்யா இது...

  ReplyDelete
 67. // நிரூபன் said...

  ஆமாணே..அது நெட்டில இருக்கு...

  தேடிப் பாருங்க கிடைக்கும்,

  ........கில்மா......என்ற முகவரியில் தேடுங்க.

  இல்லேன்னா சாட்டுக்கு வாங்க.//

  நிரூ, இந்த சர்வீஸெல்லாம் பண்றாரா...

  ReplyDelete
 68. அவர்கள் பேசுவதைக் கேட்டபடி தன் ரூமிற்குள் அமர்ந்திருந்த ஜெயபாலின் தம்பி,இதுவே தான் செல்ல சரியான நேரம் என்று நினைத்தபடி எழுந்தான்.///தம்பியுடையான் சண்டைக்கஞ்சான்னு சொல்லுறது கரெக்டாத்தானிருக்கும் போலருக்கு?

  ReplyDelete
 69.  நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?//

  அப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்../////

  ஆஹா அப்படி வேற இருக்கா?//

  ஆமா பாஸ்....

  அப்பிடி போடுங்கையா இந்த கும்மியில என்ர பங்கு இல்லைன்னேக்க கவலையா இருக்கையா.. செங்கோவியின்ர பதிவ ஆரம்பத்தியேயே படிச்சிருக்கலாமோ என்னவோ...!!?

  அண்ணாத்த ஒருமுறை என்ர பிளாக்கிள சொல்லியிருந்தார் செங்கோவியின்ர கடையிலும் தான் கும்மியடிப்பதாக அதுதான் நான் இங்க வந்து ஒட்டிக்கிட்டது.. இந்த லீல விரைவா முடியப்போறது சந்தோஷமேய்யா...!!??

  ReplyDelete
 70. //
  M.R said...
  அட பாவமே ஒரு உசுரு போச்சே//

  பல மனசு இங்கே போச்சே....

  ReplyDelete
 71. செங்கோவி said...

  //நிரூபன் said...
  அடுத்தது என்னவாயிருக்கும் எனும் ஆவலோடு உங்களின் பதிவினை முடித்திருக்கிறீங்க.
  நன்றி பாஸ்..

  நான் நாளை நைட் சந்திக்கிறேன்.//

  ஓகே நிரூ!////Good Night!

  ReplyDelete
 72. //காட்டான் said...

  அப்பிடி போடுங்கையா இந்த கும்மியில என்ர பங்கு இல்லைன்னேக்க கவலையா இருக்கையா.. செங்கோவியின்ர பதிவ ஆரம்பத்தியேயே படிச்சிருக்கலாமோ என்னவோ...!!?

  அண்ணாத்த ஒருமுறை என்ர பிளாக்கிள சொல்லியிருந்தார் செங்கோவியின்ர கடையிலும் தான் கும்மியடிப்பதாக அதுதான் நான் இங்க வந்து ஒட்டிக்கிட்டது.. இந்த லீல விரைவா முடியப்போறது சந்தோஷமேய்யா...!!?//

  மாம்ஸ், உங்க பங்களிப்பு வேணுமா......ஓகே,

  அடுத்து ‘காட்டானின் லீலைகள்(18 ப்ளஸ்) ஆரம்பம்..

  ReplyDelete
 73. //
  Yoga.s.FR said...
  அவர்கள் பேசுவதைக் கேட்டபடி தன் ரூமிற்குள் அமர்ந்திருந்த ஜெயபாலின் தம்பி,இதுவே தான் செல்ல சரியான நேரம் என்று நினைத்தபடி எழுந்தான்.///தம்பியுடையான் சண்டைக்கஞ்சான்னு சொல்லுறது கரெக்டாத்தானிருக்கும் போலருக்கு?//

  இது என்ன ஐயா, புது மொழியா?

  ReplyDelete
 74. பதிவுல ஒரு படத்தையும் காணோம்

  ReplyDelete
 75. ஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.  ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது சரியாகத்தான் இருக்கு

  ReplyDelete
 76. சாலை விதிகளை மதிக்காத எம வாகன ஒட்டிகளாலும்,நடைபாதை ஆக்கிரமிப்புகளாலும் பாதசாரிகளின் இன்றைய நிலை அந்த பூனை & குட்டி மாதிரி தான்...

  ReplyDelete
 77. “பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி "டென்த்" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு????

  ReplyDelete
 78. //
  M.R said...
  பதிவுல ஒரு படத்தையும் காணோம் //

  அடப்பாவிகளா..

  ReplyDelete
 79. //
  Yoga.s.FR said...
  “பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி "டென்த்" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு??//


  யாரா..டென்த் ஃபெயில் ஜெயபாலு ஐயா.

  ReplyDelete
 80. செங்கோவி said...இது என்ன ஐயா, புது மொழியா?///ஒங்களுக்குத் தெரியாதா? நம்மூர்ல பேமஸ் ஆச்சே?தம்பியுடையான் படைக்கஞ்சான்,சண்டைக்கஞ்சான் அப்புடீன்னு டைமுக்கு ஏத்தாப்புல சொல்லுவாங்க!

  ReplyDelete
 81. நிரூ எனக்கு ஒரு முக்கியமான லிங் (?)கொடுத்திருப்பதால் இன்னும் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு வருகின்றேன்......

  ReplyDelete
 82. கடமை ஆற்றியாச்சு

  கதையை சுவாரஸ்யமாக கொண்டு போவதுடன் ஆவலை தூண்டும் விதமாக தொடரும் போட்டுள்ளீர்கள்.

  பாராட்டுக்கள்.

  சாரி கதையல்ல நிஜத்தின் நினைவலைகள்.

  ReplyDelete
 83. //Yoga.s.FR said...
  செங்கோவி said...இது என்ன ஐயா, புது மொழியா?///ஒங்களுக்குத் தெரியாதா? நம்மூர்ல பேமஸ் ஆச்சே?தம்பியுடையான் படைக்கஞ்சான்,சண்டைக்கஞ்சான் அப்புடீன்னு டைமுக்கு ஏத்தாப்புல சொல்லுவாங்க!//

  நாங்க படைக்கஞ்சான் தான் சொல்வோம்..அதான்.

  ReplyDelete
 84. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நிரூ எனக்கு ஒரு முக்கியமான லிங் (?)கொடுத்திருப்பதால் இன்னும் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு வருகின்றேன்......//

  எனக்கு பாஸ்....ஹி..ஹி..

  ReplyDelete
 85. செங்கோவி said...

  //
  Yoga.s.FR said...
  “பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி "டென்த்" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு??//


  யாரா..டென்த் ஃபெயில் ஜெயபாலு ஐயா.////நான் கேட்டது,அந்தத் தங்கக் கம்பித் தம்பிய!

  ReplyDelete
 86. பாவி,படுபாவி!நமக்கொண்ணும் கு........................!

  ReplyDelete
 87. மாம்ஸ், உங்க பங்களிப்பு வேணுமா......ஓகே, 

  அடுத்து ‘காட்டானின் லீலைகள்(18 ப்ளஸ்) ஆரம்பம்..

  மாப்பிள காட்டானின் லீலைகள்ன்னு போட்டு என்ர இமேச்ச கெடுத்துடாதீங்கோ..!!!! எனக்கு பெண்வாசகர்கள் அதிகமுங்கோ....!!!????)))) ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 88. // Yoga.s.FR said...
  செங்கோவி said...

  //
  Yoga.s.FR said...
  “பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி "டென்த்" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு??//


  யாரா..டென்த் ஃபெயில் ஜெயபாலு ஐயா.////நான் கேட்டது,அந்தத் தங்கக் கம்பித் தம்பிய!//

  அது ஜெயபால் தம்பி..நல்ல பையன்..தெரிஞ்சோ தெரியாமலோ ஜெயபால் இப்படி ஆக காரணம் ஆனவன்...

  ReplyDelete
 89. பாவி,படுபாவி!நமக்கொண்ணும் கு........................!

  ReplyDelete
 90. ஒரு அரை மணி நேரம் கழிச்சுப் பாப்பமா?

  ReplyDelete
 91. //காட்டான் said...
  மாம்ஸ், உங்க பங்களிப்பு வேணுமா......ஓகே,

  அடுத்து ‘காட்டானின் லீலைகள்(18 ப்ளஸ்) ஆரம்பம்..

  மாப்பிள காட்டானின் லீலைகள்ன்னு போட்டு என்ர இமேச்ச கெடுத்துடாதீங்கோ..!!!! எனக்கு பெண்வாசகர்கள் அதிகமுங்கோ....!!!????)))) ஹி ஹி ஹி ஹி
  //

  சும்மா கதை விடாதீங்க..உங்க ஃபோட்டோவைப் பார்த்தா யாரு வருவா?

  ReplyDelete
 92. //
  Yoga.s.FR said...
  பாவி,படுபாவி!நமக்கொண்ணும் கு........................!//

  ஐயா, இது புரியலை..சொல்லுங்க...கடையைச் சாத்திடலாம்.

  ReplyDelete
 93. மாதுரி!அழகான,அமைதியான,ஜனரஞ்சக நடிகை!இந்த ரகுவரன் சார் தான்.......................!

  ReplyDelete
 94. செங்கோவி said...

  //
  Yoga.s.FR said...
  பாவி,படுபாவி!நமக்கொண்ணும் கு........................!//

  ஐயா, இது புரியலை..சொல்லுங்க...கடையைச் சாத்திடலாம்.////ஐயய்யோ,ஒங்கள சொல்லல,விடுங்க.கடையை சாத்திடாதிங்க!

  ReplyDelete
 95. செங்கோவி said...அது ஜெயபால் தம்பி..நல்ல பையன்..தெரிஞ்சோ தெரியாமலோ ஜெயபால் இப்படி ஆக காரணம் ஆனவன்.////ஐய்!புரிஞ்சு போச்சு.எதிர் பாராத திருப்பங்களோட கொண்டுகிட்டு போறீங்க.கங்கிராட்ஸ்!

  ReplyDelete
 96. //Yoga.s.FR said...
  மாதுரி!அழகான,அமைதியான,ஜனரஞ்சக நடிகை!இந்த ரகுவரன் சார் தான்.........//

  ஆமாம்..அந்த ஆளுக்கு தங்கச்சியோமோகியா-ன்னு ஒரு நோய் இருக்கும்போல பாஸ்.

  ReplyDelete
 97. //
  Yoga.s.FR said...
  செங்கோவி said...அது ஜெயபால் தம்பி..நல்ல பையன்..தெரிஞ்சோ தெரியாமலோ ஜெயபால் இப்படி ஆக காரணம் ஆனவன்.////ஐய்!புரிஞ்சு போச்சு.எதிர் பாராத திருப்பங்களோட கொண்டுகிட்டு போறீங்க.கங்கிராட்ஸ்!//

  ஐயோ..ஐயோ...முதல்ல போய் சாப்ட்டு, ரெஸ்ட் எடுங்க பாஸ்..

  நானும் கிளம்புறேன்.

  ReplyDelete
 98. Blogger செங்கோவி said...சும்மா கதை விடாதீங்க..உங்க ஃபோட்டோவைப் பார்த்தா யாரு வருவா?///ஹி!ஹி!ஹி!ஹு!ஹு!ஹு!ஹ!ஹ!ஹா!

  ReplyDelete
 99. நூறாககிடுவோம்!

  ReplyDelete
 100. ஆக்கிட்டேன்!

  ReplyDelete
 101. //Yoga.s.FR said...
  Blogger செங்கோவி said...சும்மா கதை விடாதீங்க..உங்க ஃபோட்டோவைப் பார்த்தா யாரு வருவா?///ஹி!ஹி!ஹி!ஹு!ஹு!ஹு!ஹ!ஹ!ஹா!//

  ஹா..ஹா..சந்தோசத்தில் செஞ்சுரி போட்டதுக்கு நன்றி..

  பை.

  ReplyDelete
 102. யோவ் இங்கே என்னய்யா நடக்குது, ஆள் ஆளுக்கு என் மாமாவை மிரட்டுறீங்க.. பிச்சுப்புடுவன் பிச்சு... மாமாக்கு பிராண்ஸில் பெண் பான்ஸ் அதிகமைய்யா... நேத்து கூட பரிஸ் ரயினுக்க 2 வெள்ளைக்காரிங்க மாமாவ ரெம்ப ............... சரி விடுங்க.., அய்யய்யோ விரிவா கொமண்ட்ஸ் போட முடியவில்லையே.. என் கொம்பியூட்டர் மேலே போய்ட்டூது... அவ்வ் இனி புது அப்பிள் எடுக்க  1300 யூரோ வேணுமே...
  அவ்வ்வ்.....

  ReplyDelete
 103. ஜெயபால் ஒரு அரக்கன் போல பிகு பண்ணூறான்... நான்சன்ஸ்.... :((

  ReplyDelete
 104. லீலையில் திருப்பங்கள், திகில் காட்சிகள் என விருவிருப்பாக செல்கிறது.

  ReplyDelete
 105. எழுதீட்டே இருங்க...Catchup பண்ணிக்கிறேன் செங்கோவி....

  ReplyDelete
 106. சுவாரஸ்யமாக போகுது(ஏன் இதை நீ சொல்லித்தான் தெரியனுமா என்று முறைக்காதீங்க பாஸ்)ஜெயபால் என்டர் திடீர் திருப்பம்..அவருக்கு இந்தக்கதையில் எதோமுக்கிய பங்கு இருக்கு போல......

  ReplyDelete
 107. இந்தவாரம் லீலயவிட கமென்ட் சூடா (ஹாட்) இருக்கே... நல்ல வேள எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா வந்தோம்.

  ReplyDelete
 108. ////நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////நிரூபன் said...
  அண்ணே பன்னிக்குட்டியண்ணே,
  அந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு?
  //////

  நீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண்ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....//

  ஆமாணே..அது நெட்டில இருக்கு...

  தேடிப் பாருங்க கிடைக்கும்,

  ........கில்மா......என்ற முகவரியில் தேடுங்க.

  இல்லேன்னா சாட்டுக்கு வாங்க./////

  இது வேற நடந்திருக்கா? வர வர பதிவுலகத்துல என்னென்ன நடக்குதுன்னே புரியுதில்லையே...

  ReplyDelete
 109. Sengovi,

  Nice turning.Blogger Siva your friend also reading this duuuuuuuuuuuurrrrrrrrrr dairy
  what about Madan he is also reading his games in yr dairy ?

  ReplyDelete
 110. மாம்ஸ் எனக்கு ஒரு சந்தேகம்.... முன்பு ஒரு பகுதியில் மதன் யோஹன்னாவுடன் எடுத்த போட்டோவை உங்கள் எல்லோருக்கும் அனுப்பியதாக சொன்னீர்கள்.. ஆனால் அதை பார்த்த பின்பு நீங்க யாருக்குமே அவருக்கு குடும்பம் குட்டின்னு ஒன்னு இருக்கறத பத்தி கேக்கவே இல்லையா??? இல்ல பதிவின் நீளதுக்காக அத இங்க சொல்லலையா????

  ReplyDelete
 111. என்னமா போகுது கதை...ரைட்டு!

  ReplyDelete
 112. // துஷ்யந்தன் said...
  ஜெயபால் ஒரு அரக்கன் போல பிகு பண்ணூறான்... நான்சன்ஸ்.... :(( //

  நோ டென்சன்...ரிலாக்ஸ்!

  ReplyDelete
 113. // KANA VARO said...
  comments 100+, i'm escape.//

  ரைட்டு..நீங்க படிச்சாலே போதும் பாஸ்!

  ReplyDelete
 114. // தமிழ்வாசி - Prakash said...
  லீலையில் திருப்பங்கள், திகில் காட்சிகள் என விருவிருப்பாக செல்கிறது. //

  ஓஹோ..அப்படியா..சரி சரி.

  ReplyDelete
 115. // ரெவெரி said...
  எழுதீட்டே இருங்க...Catchup பண்ணிக்கிறேன் செங்கோவி....//

  ஓகே ரெவரி..நோ பிராப்ஸ்!

  ReplyDelete
 116. // K.s.s.Rajh said...
  சுவாரஸ்யமாக போகுது(ஏன் இதை நீ சொல்லித்தான் தெரியனுமா என்று முறைக்காதீங்க பாஸ்)ஜெயபால் என்டர் திடீர் திருப்பம்..அவருக்கு இந்தக்கதையில் எதோமுக்கிய பங்கு இருக்கு போல......//

  ஆமா கிஸ் ராஜா..அதனால தான் இப்படி இண்ட்ரோ....

  ReplyDelete
 117. // Real Santhanam Fanz said...
  இந்தவாரம் லீலயவிட கமென்ட் சூடா (ஹாட்) இருக்கே... நல்ல வேள எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா வந்தோம். //

  ஆமா..லீலையை விட எங்க கமெண்ட்ஸை புக்காப் போடலாம்..நல்லா விக்கும்!

  ReplyDelete
 118. // Tirupurvalu said...
  Sengovi,

  Nice turning.Blogger Siva your friend also reading this duuuuuuuuuuuurrrrrrrrrr dairy
  what about Madan he is also reading his games in yr dairy ? //

  ஆம்..சிவா இணையப் பக்கம் வரும்போது, மொத்தமாகப் படிப்பார்..மெயிலில் தன் கருத்துக்களை விரிவாகச் சொல்வார்.

  மதன் படிக்கிறாரான்னு தெரியலை பாஸ்..

  ReplyDelete
 119. // Carfire said...
  மாம்ஸ் எனக்கு ஒரு சந்தேகம்..? //

  மதனைப் பற்றி இருவிதமான அபிப்ராயம் எங்களிடையே இருந்தது. ‘அவன் நல்லவன்..ஏதோ சும்மா ஜாலிக்காகச் செய்கிறான்..’என்றே ஒரு குரூப் நினைத்தது. மற்றொரு நண்பர் ‘என்னடா பண்றே?’ என்று மெயில் அனுப்பியபோது ‘சும்மா..மத்தவங்களை வெறுப்பேத்த அனுப்பினேன்..மற்றபடி தவறாக ஒன்றும் இல்லை’ என்று தனியாக சாட்டில் சொன்னான். அவனுக்கு எப்போதும் அடுத்தவரை விட தான் நன்றாக இருப்பதாகவும், பெரிய ஆள் என்றும் எண்ணம் உண்டு. எனவே இதுவும் அந்த மாதிரியான விளையாட்டு என்றே நினைத்தோம்.


  மற்றொரு குரூப் ‘அவன் எப்போதும் அப்படித்தானே..அவன் நல்லது செய்தால் தான் அதிசயம்’ என்று நினைத்தது. எனவே ‘இது பற்றிப் பேசுவதே அசிங்கம்’ என்று ஒதுங்கிக்கொண்டது.

  எல்லோருமே யோஹன்னாவை ஏதோ ஒரு அயிட்டம் என்றே நினைத்தோம். மதன் என்மீது வேலை விஷயத்தில் பொறாமையில் இருந்ததாலும், நண்பர்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பியதாலும் நானும் விலகியே இருந்தேன்..இது தொடரில் உள்ளது.

  ReplyDelete
 120. சந்தேகம் தீர்ந்தது......

  ReplyDelete
 121. //விக்கியுலகம் said...
  என்னமா போகுது கதை...ரைட்டு! //

  மாப்ள...யோஹன்னா மதன் ஒய்ஃபா? ஜமீலா மதன் ஒய்ஃபா?....கரெக்டாச் சொல்லும் பார்ப்போம்.

  ReplyDelete
 122. //Carfire said...
  சந்தேகம் தீர்ந்தது......//

  ரொம்ப நல்லது.

  ReplyDelete
 123. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  /////நிரூபன் said...
  அண்ணே பன்னிக்குட்டியண்ணே,
  அந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு?
  //////

  நீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண்ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....


  yoov, ராம்சாமி, நமீதாவுக்கு துரோகம்?

  ReplyDelete
 124. கதை தொடரட்டும் நாங்களும்.....

  ReplyDelete
 125. மாப்ள கதை ரூட் மாறுதுன்னு நினைக்கிறேன்..

  மொத்தக் கதையும் ஒரு பாப்அப் மேனுல குடுத்தா நல்லா இருக்கும் ன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 126. புது காரெக்டர்..ஜெயபால்? முன்னாடி வந்த மாதிரி தெரியலியே?

  ReplyDelete
 127. //இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே..இங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது..ஏதாவது ஒரு ஆதாரம் இல்லாமல் இந்தப் பெண்களிடம் பேச முடியாதே’ என்று தனியே புலம்பிக்கொண்டிருந்தான் சிவா.//

  சமயத்தில் ஆதாரம் இருந்தால்கூட நம்ப மாட்டார்கள்! கெட்டவர்களை நம்புவதில் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது! :-)

  ReplyDelete
 128. ஜீ... said...

  // புது காரெக்டர்..ஜெயபால்? முன்னாடி வந்த மாதிரி தெரியலியே? //

  ஆமாம் ஜீ.

  // சமயத்தில் ஆதாரம் இருந்தால்கூட நம்ப மாட்டார்கள்! கெட்டவர்களை நம்புவதில் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது! :-) //

  தம்பி, இந்த மாதிரி ஆணாதிக்கக் கருத்துகள் அண்ணனுக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா.......!

  ReplyDelete
 129. இன்றய அரசியல்வாதியில்

  காந்தி சுடப்பட்டது ஏன்?- வைரவேல் என்னாச்சு?(அரசியல் கேள்வி பதில்கள்-பாகம்-3)

  ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்

  ReplyDelete
 130. செங்கோவி said...தம்பி, இந்த மாதிரி ஆணாதிக்கக் கருத்துகள் அண்ணனுக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா.......!///இத்தப் பார்ரா!?

  ReplyDelete
 131. This comment has been removed by the author.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.