Friday, September 16, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_48


ஜெயபால் வண்டியை தன் கடை முன் நிறுத்தினான்.

“நாராசு.....நாராசு” என்றான்.

கடைக்குள்ளிருந்து நாகராஜ் ஓடி வந்தான். “என்ன மச்சான்?”

“அப்புறமா வண்டி வீலைக் கழுவிடு..”

“சரி..ரிம்மெல்லாம் ரத்தமா இருக்கு?”

“ஆமாண்டா..என்னத்து மேலயோ ஏத்திட்டேன்”

“ஏன், இன்னிக்கும் மாமா படிப்பின் மகத்துவம் பத்தி பாடம் எடுத்தாரா?” என்றபடி சிரித்தான் நாகராஜ். அவன் ஜெயபாலின் அத்தை மகன். ஜெயபால் கடையிலேயே வேலை செய்பவன். ஜெயபால் பற்றி நன்கு அறிந்தவன். ஜெயபால் யாரிடமாவது சிரித்துப் பேசுகிறான் என்றால், அது நாகராஜிடம் மட்டும் தான்.

இருவரும் பேசியபடியே கடைக்குள் நுழைந்தனர். 

“மாமா என்ன சொல்றாங்க?”

“என்ன சொல்லப்போறாரு..எனக்கு விவரம் தெரிஞ்சப்போ ஆரம்பிச்ச அதே பல்லவி.படிக்கலேன்னா நாசமாப் போவே..படிச்சவன் மட்டும் தான் நல்லா இருப்பான்..லொட்டு லொசுக்குன்னு..ஏண்டா இப்போ நினைச்சா யார்கிட்டயும் கேட்காம நான் போய் சினிப்ரியால உட்கார்ந்துக்குவேன். படிச்சுட்டு ஆஃபீஸ்ல இருக்கிறவன் அப்படி வந்திடமுடியுமா? அடிமைப் பிழைப்பு. எப்பவும் எவனுக்காவது சொம்படிச்சுக்கிட்டுத் திரியறானுக. நம்மால அது முடியுமாடா? “

“கரெக்ட் மச்சான்..இப்போத் தான் படிச்சவன் லட்சணம் தெரிஞ்சு நம்ம ஏரியாவே சிரிக்குதே”

“என்ன லட்சணம்டா?”

“உன் ஃப்ரெண்டு மதன் மேட்டர் தெரியாதா மச்சான்? தெரியும்னுல்ல நினைச்சேன்”

”எது? எவளையோ கூட்டிட்டு வந்து நின்னானே அதுவா? ஹா...ஹா..வெட்டிப்பய..நம்ம சாதியைவே கேவலப்படுத்திட்டானே..இதெல்லாம் எங்கப்பா கண்ணுக்குத் தெரியாது. நம்மளைத் தான் குறை சொல்வாரு”

“மச்சான், இப்போ என்னாச்சுன்னு தெரியாதா? அவளை அடிச்சு விரட்டிட்டாங்க”

“என்னடா சொல்றே?”

“ஆமா மச்சான்..இதுக்குத் தான் அப்பப்போ எங்க வீட்டுப்பக்கமும் வரணும்..நீ காசு உள்ளவன்...”

“டேய், விஷயத்தைச் சொல்லு..என்ன ஆச்சு?”

“அந்தப் பொண்ணு ஒரு லோலாம்..ஏற்கனவே பலபேரோட பழக்கமாம். இது தெரியாம நம்மாளு இழுத்துக்கிட்டு வந்துட்டாரு. இப்போ மேட்டர் தெரிஞ்சு அடிச்சு விரட்டிட்டாங்க”

“மதன் இங்க தானடா இருக்கான்..ஒருநாள் பார்த்தனே”

“ஆமா, இருந்தான்..இப்போ ஆளைக் காணோம். ஃபாரின் போய்ட்டான்னு சொல்றாங்க. அவன் அப்பா இப்போ பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கார்”

ஜெயபாலிற்கு சந்தோசமாக இருந்தது. அப்பாவிடம் இரவு இதுபற்றிப் பேச வேண்டும். ‘பாருய்யா படிச்சவன் லட்சணத்தை..நாங்க எப்பவாவது குடும்ப கௌரவம் கெடுற மாதிரி நடந்திருக்கிறோமா?’ என்று கேட்க வேண்டும்.

“இப்போ அவ எங்கடா இருக்கா?”

“யாரு? மதன் பொண்டாட்டியா?”

“ஆமா”

“தெரியலை மச்சான்..ராசபாளையம் லச்சுமி மதினி வீட்டுல இருக்குன்னு சொன்னாங்க”

“அவளைத் தேடிப் பிடிக்கணுமே..லச்சுமியக்காகிட்ட நான் பேசுறேன்..அவ நம்பர் இருந்தா வாங்கணும்”

“எதுக்கு மச்சான்?”

“ஆறுதல் சொல்லத்தான்” என்று சொல்லிவிட்டு ஜெயபால் சிரித்தான்.

’இரண்டு நாட்களாக யோஹன்னாவிடம் இருந்து மெயில் இல்லை. கோபம் போல் தெரிகிறது.ஃபோன் நம்பர் கேட்டாள், தரவில்லை. சாட்டுக்குக் கூப்பிட்டாள். அதுவும் முடியவில்லை. ஜமீலாவை வைத்துக்கொண்டு எப்படி சாட் பண்ண? இப்போது பேசலாம் என்று மெசேஜ் அனுப்பினால், பதிலே இல்லை. ஒருவேளை அம்மாவைப் பார்க்க ஃப்ரான்ஸ் போய்விட்டாளா?’ யோசித்தபடியே ஏர்போர்ட்டில் உட்கார்ந்திருந்தான் மதன்.

’இன்னும் கொஞ்ச நேரத்தில் ஃபளைட் ஏறிவிடலாம். யோஹன்னா அங்கு இல்லாவிட்டாலும் வீட்டுச் சாவி ஒன்று நம்மிடமும் இருக்கிறது. அதனால் பிரச்சினை இல்லை. அவள் எங்கு போயிருப்பாள் அல்லது கோபம் தானா?’ என்று மதன் நினைக்கும்போதே ஃப்ளைட்டில் போர்டிங் ஆரம்பிப்பதாய் அறிவித்தார்கள். மதன் கிளம்பினான்.

“யோஹன்னா, என்ன ஆச்சு? ஏன் ஒருவாரமா டல்லாவே இருக்கிறே? எதுவும் பிரச்சினையா? நாங்களும் மதன் இல்லாததால தான் இப்படி இருக்கிறேன்னு நினைச்சோம். ஆனா சம்திங் ராங்னு தோணுது. சொல்லு”

யோஹன்னாவிடம் ஆறுதலாய் அவள் அலுவலகத் தோழி ஏஞ்சலின் கேட்டாள். யோஹன்னாவிற்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும்போல் தோன்றியது. யோசித்து யோசித்து மூளையே குழம்பிவிடும்போல் தெரிந்தது. யோஹன்னா அவளிடம் நடந்ததை, நடந்து கொண்டிருப்பதைச் சொன்னாள்.

“ஜூனியர் மதன்னா போட்டிருந்துச்சு? அப்படீன்னா அது மதன் குழந்தையா?”

“தெரியலை..யார்கிட்டயும் கேட்கலை. கேட்கவும் பயமா இருக்கு, ஆமான்னு சொல்லிடிவாங்களோன்னு பயமா இருக்கு. கேட்காம இருக்கவும் முடியலை. என்ன செய்ய?”

“முட்டாளா நீ? ஒருத்தன் மேல அதுவும் கட்டிக்கப்போறவன் மேல டவுட்டுன்னா, தீர விசாரிச்சுடணும். இப்போ மதன் எங்கே?”

“இந்நேரம் இங்க வந்திருப்பான். வீட்டிற்கு போயிருக்கணும்”

“அப்புறம் நீ இங்கே வந்துட்டே?”

“எனக்கு குழப்பமா இருந்துச்சு. பயமாவும் இருந்துச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன்.” யோஹன்னா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் மொபைல்ஃபோன் அடித்தது.

“மதன் கால் பண்றான்” என்றாள் யோஹன்னா.

“என்கிட்ட கொடு. அந்த ஃபோட்டோஸ் எங்கே இருக்கு?”

“என் டெஸ்க் டாப்ல”

“ஓகே “ என்றபடி காலை அட்டெண்ட் செய்தாள் ஏஞ்சலின்.

“ஹாய்” என்றாள்.

“ஹா..ய்..யார் இது?”

“ஏஞ்சலின்”

“ஓ..ஹாய் ஏஞ்சலின்..ஹை டூ யு டூ?”

“மதன், இப்போ எங்கே இருக்கிறே?”

“ஃப்ளாட்ல தான்”

“ஓகே, அப்போ யோஹன்னாவோட லேப்டாப்பை ஆன் பண்ணு”

“ஏன்”
“பண்ணு”

ஏதோ பிரச்சினை என்று மதனுக்குப் புரிந்தது. லேப்டாப்பை ஆன் செய்தான். டெஸ்க்டாப்பில் ஜூனியர் மதன் என்று ஒரு ஃபோல்டர் இருந்தது. அதை ஓப்பன் செய்தான். அவன் மெயிலில் அனுப்பிய ஃபோட்டோக்கள் வந்தன. மதன் அதிர்ச்சியானான்.

“மதன் “

“....”

“மதன், ஓப்பன் பண்ணிட்டியா?”

“ஆங்..பண்ணிட்டேன்.:

“அங்கே ஃபோட்டோஸ் இருக்கிறதா?”

“ம்..”

“சொல்லு, இதுக்கு என்ன அர்த்தம்?”

மதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது எப்படி இங்கே வந்தது? யார் அனுப்பி இருப்பார்கள்? யோஹன்னாவிற்குத் தெரிந்த ஒரே ஆள் சிவா தான். அவனுக்கு இது எப்படிக் கிடைத்திருக்கும்?

“மதன்..சொல்லு..அந்தக் குழந்தை யாரோடது?”

“யோஹன்னா எங்கே? அவகிட்ட ஃபோனைக்கொடு. எல்லாத்தையும் நான் சொல்றேன்” சொல்லிக்கொண்டே என்ன சொல்லலாம் என்று யோசித்தான்.

“அவ உன்கிட்டப் பேச ரெடியா இல்லை மதன்.”

“ஏஞ்சலின், நான் ஒரு பொண்ணுகூட லிவிங் டுகெதரா முன்னாடி இருந்தேன்.  யோஹன்னாக்கும் தெரியுமே. அவளோட குழந்தை தான் அது”

“அப்போ ஏன் ஜூனியர் மதன்னு போட்டு மெயில் அனுப்பினே?”
“ஹே..ஜஸ்ட் ஃபார் ஃபன்..சும்மா “

“மதன், ஏமாத்தணும்னு எப்பவும் நினைக்காதே. இங்க ஏமாத்திட்டு நீ தப்பிக்கவே முடியாது. எங்க ஆஃபீஸ்ல எல்லாரும் உன்மேல கொலைவெறில இருக்காங்க. வந்தாங்கன்னா, அடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சிருவாங்க..உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, வெளில போயிடு. ஈவ்னிங் யோஹன்னாவோட நாங்களும் வருவோம். நீ அங்கே இருந்தால், உடனே போலீசைக் கூப்பிட்டிடுவோம்..ஓடிடு..கெட் அவுட் இம்மீடியேட்லி”

(நாளை இரவு தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

63 comments:

 1. சூப்பர் திருப்பம்

  ReplyDelete
 2. ஆஹா, இது நல்லா இருக்கே.. சார் இனி என்ன பண்ண போறாரு?

  ReplyDelete
 3. //siva said...
  vadai//

  முதல் முதலாய் வடை வாங்கிய சிவாவிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. //
  siva said...
  adutha partukku aavalai ullen //

  நாளை..........ஒரு நாள் பொறுங்களேன்.

  ReplyDelete
 5. //
  Real Santhanam Fanz said...
  ஆஹா, இது நல்லா இருக்கே..//

  ஒரு மனுசன் தெருவுல நிக்கறது நல்லா இருக்குதாக்கும்?

  ReplyDelete
 6. என்ன சார் நீங்க, தெருவுல நிக்கற ஆளா அவரு?

  ReplyDelete
 7. கதை சூடாகப் போகுது இதில் சேர்ந்து வாழ்தல் வருகின்றது இனி இது தான் தொடருமோ கதையை நல்லாத்தான் கொண்டு போறிங்கள் ஐயா!

  ReplyDelete
 8. // Real Santhanam Fanz said...
  என்ன சார் நீங்க, தெருவுல நிக்கற ஆளா அவரு? //

  ஹா..ஹா..மதனை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்களே..

  ReplyDelete
 9. //Nesan said...
  கதை சூடாகப் போகுது இதில் சேர்ந்து வாழ்தல் வருகின்றது இனி இது தான் தொடருமோ கதையை நல்லாத்தான் கொண்டு போறிங்கள் ஐயா!//

  சூடா இருந்தா நல்லது தான் ஐயா.

  ReplyDelete
 10. “சரி..ரிம்மெல்லாம் ரத்தமா இருக்கு?”
  //ஆரம்பமே ரணகளமா இருக்கு,உள்ள வரலாமா?

  ReplyDelete
 11. madhan enna aavannu romba kavalaiya iruuku

  ReplyDelete
 12. ஜெயபாலிற்கு சந்தோசமாக இருந்தது. அப்பாவிடம் இரவு இதுபற்றிப் பேச வேண்டும். ‘பாருய்யா படிச்சவன் லட்சணத்தை..நாங்க எப்பவாவது குடும்ப கௌரவம் கெடுற மாதிரி நடந்திருக்கிறோமா?’ என்று கேட்க வேண்டும்.//

  கேப்புல கிடா வேட்டுறதுங்கறது இதுதானா?

  ReplyDelete
 13. நீ அங்கே இருந்தால், உடனே போலீசைக் கூப்பிட்டிடுவோம்..ஓடிடு..கெட் அவுட் இம்மீடியேட்லி”
  //

  எங்களைச்சொல்ல்றிங்களா?
  தோ!படிச்சுட்டு ஓடிடுறோம்!

  ReplyDelete
 14. நாளைக்கும் சேர்த்து உள்ளேன் அய்யா...

  ReplyDelete
 15. ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்டுங்கோ........

  ReplyDelete
 16. செங்கோவியின் தியேட்டர்ல எத்தனை மணிக்கு படம் போடுவாங்கன்னு நேசனிடம் சொன்னது தப்பா போச்சையா எனக்கு முன்னாலேயே கியூவில நிக்கிறாரே..!!

  ReplyDelete
 17. பாஸ்... என்ன விறு விறுப்பு......... ரியலி அசத்தல்....
  படிக்கும் போதே ஒரு வித பரபரப்பு நம்மகிட்டையும் தொத்துகின்றது.
  பிரமாதம் பாஸ்.

  ReplyDelete
 18. மாப்பிள நான் சொல்ல தேவையில்ல கதைய வாசிக்கவில்லை..!! ஹி ஹி ஹி

  ReplyDelete
 19. நாளை இரவுக்காய் காத்து இருக்கேன் பாஸ்.......
  நாளைக்கு இதை விட செம விறு விறுப்பாய் போகும் என்று நினைக்குறேன்.

  ReplyDelete
 20. ஐயா செங்கோவியாரே காட்டான் எனக்கு ஏதும் சொல்லவில்லை எங்கே செங்கோவி தனிமரத்தில் கூடுகட்டிவிடுவார் என்று பயத்தில் சொல்லுகின்றார்  கோப்பை கழுவும் நேரத்தில் சிறு ஓய்வு ஒரு பால்கோப்பி குடிக்க வந்தன் பல்பு செங்கோவியார் தியேட்டரில் படம் போட்டு பாட்டுப்போகுது என்று காட்டியதில் ஓடியந்தன் .இது நானாஜோசித்தது!

  ReplyDelete
 21. வணக்கம் செங்கோவி சார்!, நலமா? அருமையான, விறுவிறுப்பான கதை சார்! அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!

  ReplyDelete
 22. கதை விரைவில் பொன் விழா காணப் போகுது .வாழ்த்துக்கள் சார் .முன்னைய பகுதிகள் படிக்க முடியாததால் படிக்க வில்லை சார் .நேரம் இருக்கும் போது முழுவதையும் படித்து விடுகிறேன்

  ReplyDelete
 23. //ஆறுதல் சொல்லத்தான்” என்று சொல்லிவிட்டு ஜெயபால் சிரித்தான்//
  அய்யய்யே! இவன் வேற இருக்கிற பிரச்சினை போதாதுன்னு!

  ReplyDelete
 24. ////
  “மதன், ஏமாத்தணும்னு எப்பவும் நினைக்காதே. இங்க ஏமாத்திட்டு நீ தப்பிக்கவே முடியாது. எங்க ஆஃபீஸ்ல எல்லாரும் உன்மேல கொலைவெறில இருக்காங்க. வந்தாங்கன்னா, அடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சிருவாங்க..உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, வெளில போயிடு. ஈவ்னிங் யோஹன்னாவோட நாங்களும் வருவோம். நீ அங்கே இருந்தால், உடனே போலீசைக் கூப்பிட்டிடுவோம்..ஓடிடு..கெட் அவுட் இம்மீடியேட்லி/////

  தல இப்படி சிக்கீட்டாரே........அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.........

  ReplyDelete
 25. //ஓடிடு..கெட் அவுட் இம்மீடியேட்லி”//
  வந்த அன்னிக்கே வீட்ட விட்டு துரத்திட்டாங்களா? அப்புறம் வெய்ட்டிங்!
  செம்ம விருவிருப்பா போகுது!

  ReplyDelete
 26. Sengovi,

  C commonly all married mens got bore with wife after 3-5 years because wife change her life style for kids, and other relations .But mens always in same mentality that wife had to be fresh for him, she have to talk,breath about him .This is married mens mentality .This is also Madan.He already in Overseas so he need a lady to take care in his personal life.So he select yoganna .That is not fault this is common mentality for mostly mens.For my comment many peoples can refuse but ask them personally they will do as Madan if they all in Madan situation .
  Each men work as criminal mind like Madan if they escape with a good name in their carrier in ladies matter.If Madan read my command i think he will agree my commands.
  Your writing style is good and twist also in each part .
  Eagerly awaiting for your next part

  ReplyDelete
 27. திருப்பங்கள்... திருப்பங்கள்.... செம ஸ்பீட் தொடர்...

  ReplyDelete
 28. நாராசு.....நாராசு”

  நல்ல பெயர்

  ReplyDelete
 29. நல்ல விறு விருப்பாக முடித்துள்ளீர்கள்

  இன்னைக்கு பதிவு சின்னதா இருக்கிற மாதிரி ஒரு எண்ணம எனக்கு .

  நாளை வருகிறேன் நண்பரே

  ReplyDelete
 30. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  ReplyDelete
 31. விறு,விறு,மொறு,மொறு!

  ReplyDelete
 32. மச்சி ஓப்பன் தி பாட்டில்ல்ல்ல்ல்ல்ல்

  ReplyDelete
 33. // நாடோடிப் பையன் said...
  நல்ல ட்விஸ்ட். //

  நன்றி நாடோடி.

  ReplyDelete
 34. கோகுல் said...

  //ஆரம்பமே ரணகளமா இருக்கு,உள்ள வரலாமா? //

  இப்படியே எல்லாரும் ஓடிட்டா எப்படி?

  // எங்களைச்சொல்ல்றிங்களா?
  தோ!படிச்சுட்டு ஓடிடுறோம்! //

  நீங்க இருந்து, சாப்பிடிட்டுப் போங்க கோகுல்.

  ReplyDelete
 35. // siva said...
  madhan enna aavannu romba kavalaiya iruuku //

  ஆமா அது பச்சப்புள்ள..இவரு கவலைப்படுறாரு..

  ReplyDelete
 36. // ரெவெரி said...
  நாளைக்கும் சேர்த்து உள்ளேன் அய்யா...//

  என்னய்யா இது புதுசா இருக்கு..

  ReplyDelete
 37. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்டுங்கோ........//

  அண்ணன் எஸ் ஆகிட்டாரு..

  ReplyDelete
 38. // காட்டான் said...
  செங்கோவியின் தியேட்டர்ல எத்தனை மணிக்கு படம் போடுவாங்கன்னு நேசனிடம் சொன்னது தப்பா போச்சையா எனக்கு முன்னாலேயே கியூவில நிக்கிறாரே..!! //

  அதானே..அவர் டைம் இது இல்லையே..நீங்க பண்ண வேலை தானா?

  ReplyDelete
 39. // துஷ்யந்தன் said...
  பாஸ்... என்ன விறு விறுப்பு......... ரியலி அசத்தல்....
  படிக்கும் போதே ஒரு வித பரபரப்பு நம்மகிட்டையும் தொத்துகின்றது.
  பிரமாதம் பாஸ். //

  ஓகே துஷ்.

  ReplyDelete
 40. // காட்டான் said...
  மாப்பிள நான் சொல்ல தேவையில்ல கதைய வாசிக்கவில்லை..!! ஹி ஹி ஹி //

  மாம்ஸ், நீங்க எங்க கமெண்ட்ஸை வாசிக்கத்தான் வர்றீங்கன்னு தெரியும்.

  ReplyDelete
 41. // Nesan said...
  ஐயா செங்கோவியாரே காட்டான் எனக்கு ஏதும் சொல்லவில்லை எங்கே செங்கோவி தனிமரத்தில் கூடுகட்டிவிடுவார் என்று பயத்தில் சொல்லுகின்றார் கோப்பை கழுவும் நேரத்தில் சிறு ஓய்வு ஒரு பால்கோப்பி குடிக்க வந்தன் பல்பு செங்கோவியார் தியேட்டரில் படம் போட்டு பாட்டுப்போகுது என்று காட்டியதில் ஓடியந்தன் .இது நானாஜோசித்தது! //

  காட்டான் மாமாக்கு பொறாமை பாஸ்..நீங்க முதல்ல் படம் பார்த்திட்டீங்களேன்னு..

  ReplyDelete
 42. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  வணக்கம் செங்கோவி சார்!, நலமா? அருமையான, விறுவிறுப்பான கதை சார்! அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்! //

  ரொம்ப நன்றி மணி சார்..நிஜமாவே நீங்க படிச்சுட்டுத்தான் சொல்றீங்களா சார்?

  ReplyDelete
 43. // kobiraj said...
  கதை விரைவில் பொன் விழா காணப் போகுது .வாழ்த்துக்கள் சார் .முன்னைய பகுதிகள் படிக்க முடியாததால் படிக்க வில்லை சார் .நேரம் இருக்கும் போது முழுவதையும் படித்து விடுகிறேன் //

  ஒன்னும் பிரச்சினை இல்லை..மெதுவா படிங்க.

  ReplyDelete
 44. // ஜீ... said...
  //ஆறுதல் சொல்லத்தான்” என்று சொல்லிவிட்டு ஜெயபால் சிரித்தான்//
  அய்யய்யே! இவன் வேற இருக்கிற பிரச்சினை போதாதுன்னு! //

  இவன் எதுக்குன்னு போனவாரம் கேட்டீங்களே..இதுக்குத்தான்.

  ReplyDelete
 45. // K.s.s.Rajh said...
  தல இப்படி சிக்கீட்டாரே........அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.........//

  மதன் தான் உங்களுக்கு தலயா?..விளங்கிரும்.

  ReplyDelete
 46. // Tirupurvalu said...
  Sengovi,

  C commonly all married mens got bore with wife after 3-5 years because wife change her life style for kids, and other relations .But mens always in same mentality that wife had to be fresh for him, she have to talk,breath about him .This is married mens mentality .This is also Madan.He already in Overseas so he need a lady to take care in his personal life.So he select yoganna .That is not fault this is common mentality for mostly mens.For my comment many peoples can refuse but ask them personally they will do as Madan if they all in Madan situation .
  Each men work as criminal mind like Madan if they escape with a good name in their carrier in ladies matter.If Madan read my command i think he will agree my commands.
  Your writing style is good and twist also in each part .
  Eagerly awaiting for your next part //

  கண்டிப்பா மதன் உங்க கமெண்ட்ஸை ஒத்துப்பான்..நான் ஒத்துக்க மாட்டேன்.

  ReplyDelete
 47. // தமிழ்வாசி - Prakash said...
  திருப்பங்கள்... திருப்பங்கள்.... செம ஸ்பீட் தொடர்...//

  என்னய்யா திருதிருன்னு பின்னூட்டம் போட்டு வச்சிருக்கீரு?

  ReplyDelete
 48. // M.R said...
  நாராசு.....நாராசு”

  நல்ல பெயர் //

  ஏன், நாராசமா இருக்கா?

  ReplyDelete
 49. // மாய உலகம் said...
  இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன் //

  அப்படியா நன்றி மாயா...ஆனாலும் புதியவர்களை அறிமுகப்படுத்தினால் இன்னும் நல்லா இருக்கும், இல்லியா?

  ReplyDelete
 50. // FOOD said...
  விறு,விறு,மொறு,மொறு! //

  நன்றி சார்.

  ReplyDelete
 51. // இரவு வானம் said...
  மச்சி ஓப்பன் தி பாட்டில்ல்ல்ல்ல்ல்ல் //

  மேல ஏறி வாரேன்..ஒதுங்கி நில்லு!

  ReplyDelete
 52. மாப்ள வழக்கம்போல அதிரடி திருப்பங்களுடன்..

  ReplyDelete
 53. மாட்டிக்கிட்டானா?அவன் கழுவற நீரிலும் நழுவற மீனாச்சே!

  ReplyDelete
 54. Sengovi ,

  Can u tell me Madan also reading yr duuuuuurrrrrrr dairy ?

  ReplyDelete
 55. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மாப்ள வழக்கம்போல அதிரடி திருப்பங்களுடன்.. //

  நன்றி கருன்.

  ReplyDelete
 56. // சென்னை பித்தன் said...
  மாட்டிக்கிட்டானா?அவன் கழுவற நீரிலும் நழுவற மீனாச்சே! //

  நீங்க சொல்றது சரி தான் ஐயா.

  ReplyDelete
 57. // Tirupurvalu said...
  Sengovi ,

  Can u tell me Madan also reading yr duuuuuurrrrrrr dairy ? //

  இப்போது மதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை நண்பரே, எனவே தான் சொல்கிறேன் அவன் படிக்கிறாரா இல்லையான்னு எனக்குத் தெரியாது.

  ReplyDelete
 58. சடன் பிரேக் போட்டிருக்கீக?பையன்(மதன்)ஷாக்காவலை!

  ReplyDelete
 59. இரு வேறு விதமான கோணத்தில் இக் கதை இங்கே நகர்கின்றது,

  மற்றவர்களைப் பழியுரைத்து தம்மை நல்லோராகக் காட்டிக் கொள்ள நினைக்கும் தமிழர்களின் பண்பினை நாகராஜன், மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக உரைத்தபடியும்,

  உண்மைகள் வெளியே வரும் போது, வார்த்தைகள் தடுமாறும் எனும் மதனின் நிலையினை விளக்கியவாறும் கதை நகர்கிறது.

  அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.