Wednesday, September 21, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_50

தன் தொடர்ந்து யோஹன்னாவிற்கு கால் செய்துகொண்டே இருந்தான். அவள் எடுக்காமல் தவிர்த்துக்கொண்டேயிருந்தாள். ஒருவாரப் போராட்டத்திற்குப் பின், ஒரு நாள் யோஹன்னா ஃபோனை எடுத்தாள்.

“மதன், ஏன் இப்படிப் பண்றே? “ என்றாள்.

“அதையே தான் நானும் கேட்கிறேன். ஏன் இப்படிப் பண்றே? என்ன நடந்துச்சுன்னு ஒரு விளக்கம்கூடக் கேட்க மாட்டியா? அவ்வளவு தானா உன் காதல்? இந்தளவிற்கு நம்பிக்கை இல்லாமலா என்னுடன் எங்கேஜ்மெண்ட் வரை வந்தாய்?”

“இனிமே கேட்க என்ன இருக்கு? நான் மனசளவில் ரொம்ப நொந்துபோயிருக்கேன் மதன். ப்ளீஸ், போதும். விட்டுடு”

“யோஹன்னா, முன்னாடி ஒன்னா லிவிங் டுகெதர்னு வாழ்ந்ததால, சும்மா அவங்களைப் பார்க்கப்போனேன். அவளுக்கு இப்போ வேற ஆள்கூட கல்யாணம் ஆயிடுச்சு. அவங்க கேட்டுக்கிட்டதால் அங்க ஒருநாள் தங்கினேன். அவ்ளோ தான். அப்போ சும்மா விளையாட்டுக்கு எடுத்தது அந்த ஃபோட்டோ. என் ஃப்ரெண்ட்ஸ் எப்பவும் அந்த குழந்தையை ஜூனியர்.மதன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதனால தான் நானும் கிண்டலா அப்படி அனுப்பினேன். தப்புப் பண்ணவன் எங்கேஜ்மெண்ட் முடிச்சப்புறமும் இவ்வளவு தைரியமா இப்படி மெயில் அனுப்புவேனா? யோசி, யோஹன்னா”

யோஹன்னா குழம்பிப்போனாள். மதன் தாக்குதலைத் தொடர்ந்தான்.

“எனக்கு இங்கே யாரைத் தெரியும்? இப்போது யாரை நம்பி நான் வந்தேன்? உன் ஒருத்தியை நம்பித்தானே நான் வந்தேன். என்னோட அப்பா, உறவுகள், ஊர், நாடு எல்லாத்தையும் விட்டுட்டு,உன் பின்னால வந்ததுக்கு இது தான் பலனா?”

“மதன், எனக்கு குழப்பமா இருக்கு. நான் க்ஞ்சம் யோசிக்கணும். அப்புறமா நானே கூப்பிடறேன். பை”.

மதன் சிரித்தான். ’இப்படியே தொடர்ந்தால், நிச்சயம் அவள் நம்பிவிடுவாள். விடக்கூடாது ‘ என்று முடிவு செய்தான். மறுநாளே கையில் ரோஜாப் பூங்கொத்துடன் அவள் தெருவில் போய் நின்றான். அவள் ஆஃபீஸ் கிளம்பிவந்தபோது “யோஹன்னா, ஐ லவ் யூ” என்று கத்தியபடியே மண்டியிட்டான். கைகளை விரித்து வானத்தைப் பார்த்து “ஐ லவ் யோஹன்னா” என்று கத்தினான். தெருவில் போன அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மதனைக் கடந்து சென்ற ஒரு லேடி “குட் ஒர்க்..ஆல் தி பெஸ்ட்” என்றாள். யோஹன்னா மதனை விட்டு விலகி நடந்தாள்.

ஆஃபீஸ் வந்தபின்னும் யோஹன்னாவிற்கு படபடப்பாக இருந்தது. ‘இது பொய்யா? இந்தக் காதலா பொய்?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள். உடனே பதிவர் சிவாவிற்கு ஃபோன் செய்தாள். இன்று நடந்ததையும், நேற்று அவன் ஃபோனில் பேசியதையும் சொன்னாள். சிவா மதனது சேட்டைகளை கல்லூரிக்காலம் முதல் பார்த்தவன் என்பதால், மதனின் திட்டத்தைப் புரிந்து கொண்டான்.


“யோஹன்னா, அவன் அப்படித்தான் நடிப்பான். ஏமாந்துவிடாதே. அந்த மெயிலை எனக்கு அனுப்பச் சொன்னேனே..அனுப்பினாயா?” என்றான்

“இல்லை..உனக்கு செங்கோவின்னு யாரையாவது தெரியுமா?” என்றாள்.

“தெரியுமே..ஏற்கனவே நான் உன்கிட்ட சொன்னமாதிரி ஞாபகம். அவன் எனக்கும் மதனுக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட். இப்போ என்கூட காண்டாக்ட் இல்லை. மதன் கூட இருக்கு. அவன் மெயில் ஐடியைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன். ஏன் கேட்கிறே?”

“மதனோட ஜூனியர்.மதன் -மெயிலுக்கு செங்கோவி ரிப்ளை பண்ணியிருக்கான்”

“ஓ..நான் சொன்னேன் பார்த்தாயா..உடனே அந்த மெயில் ஐடியை அனுப்பு. நான் அவனை உன்கூட பேச வைக்கிறேன். அப்புறம் எல்லா உண்மையும் உனக்குத் தெரியும்”

யோஹன்னா அரைமனதுடன் அந்த மெயிலை அனுப்பினாள்.

சிவா உடனே எனக்கு ஒரு மெயில் அனுப்பினான். எடுத்தவுடனே இதைப் பற்றிப் பேசினால், நன்றாக இருக்காது என்பதால்...

“ஹாய் செங்கோவி,

எப்படி இருக்கே? இது சிவா. ஞாபகம் இருக்கா? காலேஜ்..ஃபர்ஸ்ட் இயர்..ஹாஸ்டல்..ரூம் மேட்.

எனக்கு இப்போ தான் உன் மெயில் ஐடி ஒரு ஃப்ரெண்ட் மூலமா கிடைச்சது. உன்னோட ஃபோன் நம்பர் எனக்கு அனுப்பு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

--சிவா”

என்று மெயிலில் எழுதியிருந்தான்.

அதே நேரத்தில் யோஹன்னாவிற்கு மதன் முன்பு சிவா பற்றியும் செங்கோவி பற்றியும் சொன்னது ஞாபகம் வந்தது. உடனே சிவாவிற்குக் கூப்பிட்டாள்.

“சிவா, நான் குழப்பத்தில் இருக்கிறேன்..அதனால் கேட்கிறேன். மதன் முன்னாடி என்கிட்டப் பேசும்போது  ‘சிவா பொறாமை பிடிச்சவன்..செங்கோவியும் நல்ல ஃப்ரெண்ட் கிடையாதுன்னு சொல்லியிருந்தான். ஒருவேளை அது உண்மையா இருந்தா? ஏதாவது கடுப்பில் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து மதனைப் பத்தி, என்கிட்ட தப்புத்தப்பாச் சொல்லிட்டா?...எனக்கு என்ன பேசுறேன்னு தெரியலை..ஆனா இப்படியெல்லாம் தோணுது “

சிவாவுக்கு பயங்கரக் கோபம் வந்தது. “உன்னை மாதிரி ஒரு முட்டாளை நான் பார்த்ததே இல்லை. இங்க பார், எனக்கு அப்படி ஒன்னும் உனக்கு உதவி செய்யணும்னு அவசியம் இல்லை. பாவம், ஒரு பொண்ணு வாழ்க்கை பாழாகுதேன்னு வந்தா, இஷ்டத்துக்கு பேசறே. ஓகே, மதன் ரொம்ப நல்லவன். அவனையே கட்டிக்கோ. இனிமே நான் இது பத்திப் பேசலை. பை.” என்று ஃபோனை வைத்தான்.


அப்போது நான் சென்னைக்கு வந்திருந்தேன். நண்பரின் அறையில் தங்கியிருந்தேன். அன்று நண்பரும் ஆஃபீஸ் போய்விட, நெட்டில் பதிவுகளையெல்லாம் படித்தபடியே உட்கார்ந்திருந்தேன்.

பொதுவாக இரண்டு, மூன்று நாள் சேர்த்துவைத்தே, மெயில் பார்ப்பது என் வழக்கம். ஃப்ரெண்ட்ஸ் வட்டம் சிறியதென்பதால், அது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அன்றும் அதே போன்று அசுவாரஸ்யமாய் மெயில் பாக்ஸை திறந்தேன். சிவாவிடம் இருந்து’ ஹாய்’ என ஒரு மெயில் வந்திருந்தது. அதற்குக்கீழே ‘மதனானந்தா” என்ற சப்ஜெக்ட்டுடன் ஜெயபாலிடம் இருந்து மெயில் வந்திருந்தது. ஜெயபால் யார் என்று யோசித்தபடியே சப்ஜெக்ட் இழுத்ததால், அந்த மெயிலை ஓப்பன் செய்தேன்.

“நண்பர்களே,

நான் ஜெயபால். மதனின் பள்ளிக்கால நண்பன். உங்களில் சிலர் என்னை அறிந்திருக்கலாம்.

நம் எல்லோருக்கும் இப்போது நித்யானந்தாவை தெரிந்திருக்கும். அதேபோன்று பல நித்யானந்தாக்கள் இங்கே நம்மிடையே இருக்கின்றார்கள். உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஒரு நித்யானந்தா பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மெயில்.

அது வேறு யாருமில்லை, நம் மதன் தான்.

மதன் கல்லூரியிலேயே தன் காதல் லீலைகளை ஆரம்பித்துவிட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால் இப்போது நம் சாமியார் மதனானந்தா ஏமாற்றியிருப்பது ஜமீலா என்ற கேரளத்துப் பெண்ணை. அவளுக்கு ஒரு வயதில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு, கழற்றிவிட்டுவிட்டார் மதனானந்தா. அவர் இப்பொது ஃபாரினில் சொகுசு வாழ்க்கையில். ஆனால் அந்தப் பெண்?

கேரளாவில் சாப்பாட்டிற்கே வழியின்றி, கைக்குழந்தையுடன் தவித்து வருகிறாள். குழந்தையைக் கவனிக்கக்கூட முடியாமல், இப்போது ஒரு சின்ன ஆஃபீஸிற்கு வேலைக்கு போய்க்கொண்டிருக்க்கிறாள். அங்கே வாங்கும் சம்பளம் குழந்தைக்கு நல்ல உணவையோ, உடையையோ வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு இல்லை.

மதன் இப்போது ஃபாரினில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால், இங்கே அந்தப் பெண் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுகொண்டிருக்கிறாள். அந்தப் பெண் முதலில் இங்கே மதுரையில் தான் மதன் அப்பாவுடன் இருந்தாள். அப்புறம் மதன் என்ன சொன்னாரோ, அவளை அடித்துவிரட்டிவிட்டார்கள்.

இது தான் மதனானந்தாவின் லட்சணம். இப்படி ஒரு நண்பன் நமக்குத் தேவை தானா?

-- ஜெயபால்

அந்த மெயிலைப் பார்த்ததும் அதிர்ச்சியானேன். அது யாருக்கு அனுப்பப்படிருக்கிறதென்ன்று பார்த்தேன். மதனில் ஆரம்பித்து, 100க்கும் மேற்பட்ட ஆட்களுக்கு அது அனுப்பப்பட்டிருந்தது.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

110 comments:

 1. இன்று லீலை.///ஐய்!இன்னிக்கு லீலை,படிச்சுடுவோம்!!!!

  ReplyDelete
 2. //Yoga.s.FR said...
  இன்று லீலை.///ஐய்!இன்னிக்கு லீலை,படிச்சுடுவோம்!!!!//

  அடேங்கப்பா இப்பவே லீலைக்கு இப்படி துள்ளிக்குதிக்கிறீங்களே, அப்போ..........

  ReplyDelete
 3. நெட் கனெக்சன் பிராப்ளம்..ஆகவே தான் லேட்..சாரி!

  ReplyDelete
 4. அண்ணே மன்னிச்சிருங்க அண்ணே..புட்டி பால்(பழைய நல்லதம்பி)தான் எல்லா பாகங்களையும் வாசிச்சி மதன முழுசா புரிஞ்சி வச்சிருக்காரு.. கொஞ்சம் லேட் ஆகி அவரு வருவாரு.. நா மொத ரெண்டு பாகத்தையும் டவுன்லோட் பண்ணி வாசிச்சிட்டு இங்க வர்றேன்...அவரு அப்பால வந்து கமெண்ட் போடுவாரு.. இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு நா அப்பீட் ஆகுறேன்!!

  ReplyDelete
 5. கொஞ்சம் அதிகமாவே சூடு பிடிக்கிறாப்புல இருக்கு,எங்க போய் முடியப் போவுதோ?செங்கோவிக்குத் தான் வெளிச்சம்!

  ReplyDelete
 6. // மொக்க ராசு மாமா said...
  அண்ணே மன்னிச்சிருங்க அண்ணே..புட்டி பால்(பழைய நல்லதம்பி)தான் எல்லா பாகங்களையும் வாசிச்சி மதன முழுசா புரிஞ்சி வச்சிருக்காரு.. கொஞ்சம் லேட் ஆகி அவரு வருவாரு.. நா மொத ரெண்டு பாகத்தையும் டவுன்லோட் பண்ணி வாசிச்சிட்டு இங்க வர்றேன்...அவரு அப்பால வந்து கமெண்ட் போடுவாரு.. இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு நா அப்பீட் ஆகுறேன்!!//

  ஒன்னும் பிரச்சினை இல்லை..நிதானமா வாங்க..மெதுவா போங்க..எந்த பள்ளத்துலயும் மறுபடி விழுந்துடாதீங்க.

  ReplyDelete
 7. செங்கோவி said...அடேங்கப்பா இப்பவே லீலைக்கு இப்படி துள்ளிக்குதிக்கிறீங்களே, அப்போ..........///பீர் பாட்டிலும்,பொரிச்ச கோழிக் காலும் குடுத்துப்புட்டு?லீலைன்னா துள்ளிக் குதிக்கிறீங்க அப்புடீன்னா இன்னா அர்த்தம்கிறேன்?

  ReplyDelete
 8. // Yoga.s.FR said...
  கொஞ்சம் அதிகமாவே சூடு பிடிக்கிறாப்புல இருக்கு,எங்க போய் முடியப் போவுதோ?செங்கோவிக்குத் தான் வெளிச்சம்!//

  ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். நமக்கெல்லாம் இருட்டு தான்.

  ReplyDelete
 9. // Yoga.s.FR said...
  பீர் பாட்டிலும்,பொரிச்ச கோழிக் காலும் குடுத்துப்புட்டு? //

  இதுக்கே துள்ளிக்குதிகிறீங்கன்னா.......

  ReplyDelete
 10. செங்கோவி said...

  நெட் கனெக்சன் பிராப்ளம்..ஆகவே தான் லேட்..சாரி!///கால் மணி நேரமா நோண்டிக்கிட்டிருந்தேன்,அப்ப தெரிஞ்சு போச்சு நெட்டு தான் பிராப்ளம்னு!

  ReplyDelete
 11. செங்கோவி said...

  // Yoga.s.FR said...
  பீர் பாட்டிலும்,பொரிச்ச கோழிக் காலும் குடுத்துப்புட்டு? //

  இதுக்கே துள்ளிக்குதிகிறீங்கன்னா.......////அப்ப விஸ்கி பாட்டில் குடுங்க,குடுத்துப் பாருங்க!ரணகளமாயிடும்!(கோழிக் காலுன்னா துள்ளிக் குதிக்கத் தான் செய்யும்!)

  ReplyDelete
 12. செங்கோவி said...

  // Yoga.s.FR said...
  கொஞ்சம் அதிகமாவே சூடு பிடிக்கிறாப்புல இருக்கு,எங்க போய் முடியப் போவுதோ?செங்கோவிக்குத் தான் வெளிச்சம்!//

  ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். நமக்கெல்லாம் இருட்டு தான்.////ச்சி!! அப்புடீல்லாம் சலிச்சுக்கப்படாது!

  ReplyDelete
 13. இப்போ மறுபடியும் அப்படியே ஆகுது..காணலைன்னு தேடாதீங்க.

  ReplyDelete
 14. ஜெயபாலோட லீலைங்க இது முடிஞ்சதுக்கப்புறம் வருமா?

  ReplyDelete
 15. உணவு இடை வேளை விட்டுடலாம்!

  ReplyDelete
 16. ரொம்பவுமே சூடு பிடிச்சிரிச்சு... இது இரு தலை கொள்ளி ஆப்பு, அடுத்த பாகம் எப்போ?

  ReplyDelete
 17. "மதனானந்தா"ஹி!ஹி!ஹி! ஆனந்தமா இருக்கிறதால ஆனந்தான்னு தான் முடியணும்!!!!

  ReplyDelete
 18. Yoga.s.FR said...
  //ஜெயபாலோட லீலைங்க இது முடிஞ்சதுக்கப்புறம் வருமா?//
  செங்கோவி லீலைகள் வரும்.

  ReplyDelete
 19. பொதுவாக இரண்டு,மூன்று நாள் சேர்த்துவைத்தே,மெயில் பார்ப்பது என் வழக்கம்./////இப்ப கூடவா?

  ReplyDelete
 20. செங்கோவி said...
  //இப்போ மறுபடியும் அப்படியே ஆகுது..காணலைன்னு தேடாதீங்க//

  அண்ணன் என்னமோ ஆகுதுங்குறாரே?????

  ReplyDelete
 21. Dr. Butti Paul said...

  Yoga.s.FR said...
  //ஜெயபாலோட லீலைங்க இது முடிஞ்சதுக்கப்புறம் வருமா?//
  செங்கோவி லீலைகள் வரும்./////பட்டி பவுலா,புட்டி பவுலா?ஏதோ ஒண்ணு;அப்பிடீல்லாம் பேசப்படாது,சாரே!

  ReplyDelete
 22. மறுநாளே கையில் ரோஜாப் பூங்கொத்துடன் அவள் தெருவில் போய் நின்றான். அவள் ஆஃபீஸ் கிளம்பிவந்தபோது “யோஹன்னா, ஐ லவ் யூ” என்று கத்தியபடியே மண்டியிட்டான்.கைகளை விரித்து வானத்தைப் பார்த்து “ஐ லவ் யோஹன்னா”என்று கத்தினான்.////என்னமா சீன் போடுறான்!ஒலக மகா நடிப்புடா சாமி!

  ReplyDelete
 23. லீலைகள் தொடரட்டும்...இப்பதான் PDF தொடக்கத்திலே இருக்கிறேன்...முடியறதுக்கு முன்னே புடிச்சிருவேன் செங்கோவி...-:)

  ReplyDelete
 24. ஃப்ரெண்ட்ஸ் வட்டம் சிறியதென்பதால், அது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.////ஆமாமா,மின்னாடியே சொல்லியிருக்கீங்க, நானும் அப்புடித் தான்னு சொல்லியிருக்கேன்!

  ReplyDelete
 25. வரவர பரபரப்பு + விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது! வாழ்த்துக்கள் அண்ணே! கலக்கறீங்க!

  ReplyDelete
 26. சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் ஐடியா மணி!!!!!!

  ReplyDelete
 27. லீலைகள் முடிவுக்கு வந்துட்டு இருக்கு.... ம்ம்....!

  ReplyDelete
 28. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  லீலைகள் முடிவுக்கு வந்துட்டு இருக்கு.... ம்ம்....!////எங்க,எங்க??????

  ReplyDelete
 29. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  லீலைகள் முடிவுக்கு வந்துட்டு இருக்கு.... ம்ம்....!////எங்க,எங்க??????///////

  ப்ளாக்லதான்.... வேற எங்கேன்னு நெனச்சீங்க?

  ReplyDelete
 30. பன்னிக்குட்டி ராம்சாமி said...ப்ளாக்லதான்.... வேற எங்கேன்னு நெனச்சீங்க?////அட அம்புட்டுத் தானா? நான் என்னமோ,க.கா ன்னு நெனைச்சேன்!

  ReplyDelete
 31. இன்னிக்கு வேற ஐம்பது!அதாங்க ஐம்பதாவது நாளுன்னு(லீலை)சொல்ல வந்தேன்!

  ReplyDelete
 32. ஆஃபீஸ் வந்தபின்னும் யோஹன்னாவிற்கு படபடப்பாக இருந்தது. ‘இது பொய்யா? இந்தக் காதலா பொய்?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.///அடப் பாவமே!எல்லா ஊர்லயும் பொண்ணுங்க இப்புடித் தான் இருக்கும் போல?

  ReplyDelete
 33. யாரையும் காணம்.குட்டு நைட்டு!

  ReplyDelete
 34. அரை சதம் அடித்த லீலைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. ஃபிஃப்ட்டிக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 36. மதனின் லீலைகள் நண்பர் வட்டாரத்தில் மெயில் மூலமாக அம்பலம்... சூடு பிடிக்க் ஆரம்பித்து விட்டது.. யோஹன்னாவிடம் மதனின் ஆட்டம் எடுபடுமா பொருத்திருந்து பார்ப்போம்....

  ReplyDelete
 37. ப்ளாக்ல மட்டும்தான் அம்பதா!

  ReplyDelete
 38. ///மதன் சிரித்தான். ’இப்படியே தொடர்ந்தால், நிச்சயம் அவள் நம்பிவிடுவாள். விடக்கூடாது ‘ என்று முடிவு செய்தான்.////
  தலைவர் நிஜமாகவே மன்மதன் தான்..பொண்ணுங்களுக்கு எப்படி ரூட்டை போட்டா எப்படி..நம்புவாங்கனு..நல்லாதெரிஞ்சு வச்சு இருக்கார்.

  ReplyDelete
 39. அப்பறம் அந்த ஜெயபால்..தான் இந்தக்கதையின்..ஹீரோவா தெரியுறார்....உதாரணத்துக்கு.டாகுதர்மாதிரி.....அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..பாஸ்

  ReplyDelete
 40. அண்ணே..இந்த தொடர்கதை உங்கள் எழுத்துக்களுக்கான பொக்கிசம்...சந்தர்ப்பம் கிடைத்தால்..இதை...முழுநீள நாவலாக வெளியிடுங்கள்...இதனால்...ஆவணப்படுத்தப்படும்..அல்லவா.

  ReplyDelete
 41. எப்போ இதனை புக் ஆக போட போகிற்கிரகள்??
  காத்து இருக்கும் ரசிகன் நான்.
  நன்றி !!
  வாழ்த்துக்கள் .
  அன்புடன்
  யானைக்குட்டி
  உங்கள் பார்வைக்கு ....
  பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!

  ReplyDelete
 42. இனிய காலை வணக்கம் பாஸ்.

  ReplyDelete
 43. “அதையே தான் நானும் கேட்கிறேன். ஏன் இப்படிப் பண்றே? என்ன நடந்துச்சுன்னு ஒரு விளக்கம்கூடக் கேட்க மாட்டியா? அவ்வளவு தானா உன் காதல்? இந்தளவிற்கு நம்பிக்கை இல்லாமலா என்னுடன் எங்கேஜ்மெண்ட் வரை வந்தாய்?”//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  மதனோட நடிப்பினைப் பார்த்தால்,
  கதை எழுதிக் கொடுத்து நடிக்க வைக்கும் சினிமா நடிகர்களே தோற்று விடுவார்கள் போல இருக்கே......

  ReplyDelete
 44. யோஹன்னா குழம்பிப்போனாள். மதன் தாக்குதலைத் தொடர்ந்தான்.//

  அவ்...ஆண்களால் எறியப்படும் அன்பெனும் அஸ்திரத்தில் மயங்கி அனைத்தையும் இழப்பது தானே பெண்களின் வேலை...

  யோஹன்னா லாஜிக்கை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்திருக்கலாம்((((((((((((((((;

  ReplyDelete
 45. மறுநாளே கையில் ரோஜாப் பூங்கொத்துடன் அவள் தெருவில் போய் நின்றான்..//

  நம்மட பாரம்பரிய லவ் பண்ணும் முறையினை மதன் கடல் கடந்து சென்ற பின்னரும் மறக்கவில்லைப் பாருங்கள்.
  ஐ லைக் திஸ்...

  ReplyDelete
 46. “இல்லை..உனக்கு செங்கோவின்னு யாரையாவது தெரியுமா?” என்றாள்.//

  நம்ம தலைவர் ஆஜாராகுறாரா..?

  அடிங்க விசிலை...

  ReplyDelete
 47. நம் எல்லோருக்கும் இப்போது நித்யானந்தாவை தெரிந்திருக்கும். அதேபோன்று பல நித்யானந்தாக்கள் இங்கே நம்மிடையே இருக்கின்றார்கள். உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஒரு நித்யானந்தா பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மெயில்.//

  கதை இப்போ நிகழ்காலத்திற்கு வந்து விட்டதே....

  ReplyDelete
 48. அந்த மெயிலைப் பார்த்ததும் அதிர்ச்சியானேன். அது யாருக்கு அனுப்பப்படிருக்கிறதென்ன்று பார்த்தேன். மதனில் ஆரம்பித்து, 100க்கும் மேற்பட்ட ஆட்களுக்கு அது அனுப்பப்பட்டிருந்தது.//

  அவ்...நல்லா வத்தி வைக்கிறாங்க பாருங்க...

  திரிலிங்காக- படபடப்போடு நகர்கிறது தொடர்...

  அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.

  ReplyDelete
 49. கதை முடிவுக்கு வருவதுபோல் வந்து மீண்டும் சூடு பிடிக்கிறது,
  கிழிந்த டைரி அரைசதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்.
  சதமடித்துத்தான் முடிவுக்கு வரும் போல.... தொடரட்டும்.

  ReplyDelete
 50. கதை நல்ல விறுவிறுப்பு பெற்றுள்ளது.

  கதையின் முடிவில் அதாவது இன்றைய பொழுதில் மதன் உயிரோடு இல்லையா ,அல்லது மன நிலை சரியில்லாமல் இருக்கிறாரா !அல்லது சிரை....

  ReplyDelete
 51. //ஆஃபீஸ் வந்தபின்னும் யோஹன்னாவிற்கு படபடப்பாக இருந்தது. ‘இது பொய்யா? இந்தக் காதலா பொய்?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்//

  //சிவா உடனே எனக்கு ஒரு மெயில் அனுப்பினான். //

  narration confuse ஆகுதே..third person narration திடீர்னு first person narration ஆகுதே..

  ReplyDelete
 52. U &yr friends circle spoiled a true love of Yoganna .Muruga perumanukey 2 wife Madan enna pavam panninar eruthudu poogadumnu vida vendiyathuthaney.U, Siva, Jayapal all played in Yoganna love life .
  I will pray god for 4 members Madan,Jamela,his son,Yoganna i hope Jamela will accept Madan love if she known .I saw in my town 3 incidents like this 1st wife accept lover of her husband in Coimbatore District

  ReplyDelete
 53. // Yoga.s.FR said...
  ஜெயபாலோட லீலைங்க இது முடிஞ்சதுக்கப்புறம் வருமா?//

  அடுத்த பகுதியில் கொஞ்சம் வரும்..

  //"மதனானந்தா"ஹி!ஹி!ஹி! ஆனந்தமா இருக்கிறதால ஆனந்தான்னு தான் முடியணும்!!!! //

  அப்போ யோகானந்தான்னு தானே முடியணும்..

  //பொதுவாக இரண்டு,மூன்று நாள் சேர்த்துவைத்தே,மெயில் பார்ப்பது என் வழக்கம்./////இப்ப கூடவா? //

  இப்போ கொஞ்சம் பரவாயில்லை தான்..பதில் போட வேணா லேட் ஆகலாம்.

  ReplyDelete
 54. // Yoga.s.FR said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...ப்ளாக்லதான்.... வேற எங்கேன்னு நெனச்சீங்க?////அட அம்புட்டுத் தானா? நான் என்னமோ,க.கா ன்னு நெனைச்சேன்! //

  க.கா லீலைகள்....இன்னிக்கு வரும் நைட் ஐயா!

  //ஆஃபீஸ் வந்தபின்னும் யோஹன்னாவிற்கு படபடப்பாக இருந்தது. ‘இது பொய்யா? இந்தக் காதலா பொய்?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.///அடப் பாவமே!எல்லா ஊர்லயும் பொண்ணுங்க இப்புடித் தான் இருக்கும் போல? //

  இதே டவுட் தான்..அப்போ எனக்கு!

  // யாரையும் காணம்.குட்டு நைட்டு! //

  சாரி..கொஞ்சநாளாவே நெட் ரொம்ப படுத்துது.

  ReplyDelete
 55. // Dr. Butti Paul said...
  ரொம்பவுமே சூடு பிடிச்சிரிச்சு... இது இரு தலை கொள்ளி ஆப்பு, அடுத்த பாகம் எப்போ?//

  வெள்ளி இரவு தான்..

  //செங்கோவி லீலைகள் வரும்.//

  வரும்...ஆனா வராது!

  // அண்ணன் என்னமோ ஆகுதுங்குறாரே?????// நெட் கனெக்சன் பிராப்ளத்தைச் சொன்னேன்யா.

  ReplyDelete
 56. // ரெவெரி said...
  லீலைகள் தொடரட்டும்...இப்பதான் PDF தொடக்கத்திலே இருக்கிறேன்...முடியறதுக்கு முன்னே புடிச்சிருவேன் செங்கோவி...-:)//

  ரைட்டு..படிச்சு முடிக்கவும் சொல்லுங்க..கேள்வி கேட்கிறேன்.

  ReplyDelete
 57. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  வரவர பரபரப்பு + விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது! வாழ்த்துக்கள் அண்ணே! கலக்கறீங்க! //

  வாங்க மணி சாஆஆஆஅர்!...நன்றி சார்!

  ReplyDelete
 58. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  லீலைகள் முடிவுக்கு வந்துட்டு இருக்கு.... ம்ம்....! //

  அண்ணே, கடந்த 10 பகுதிக்கும் இதே கமெண்ட்டை அசராம போடுறீங்க.என்னதான்யா நினைச்சுக்கிட்டிருக்கீங்க?

  ReplyDelete
 59. // தமிழ்வாசி - Prakash said...
  அரை சதம் அடித்த லீலைக்கு வாழ்த்துக்கள்.//

  அடேங்கப்பா....நன்றி தமிழ்வாசி அவர்களே.

  ReplyDelete
 60. // மாய உலகம் said...
  சூடு பிடிக்க் ஆரம்பித்து விட்டது.. யோஹன்னாவிடம் மதனின் ஆட்டம் எடுபடுமா பொருத்திருந்து பார்ப்போம்....//

  பாருங்க..பாருங்க.

  ReplyDelete
 61. // FOOD said...
  ப்ளாக்ல மட்டும்தான் அம்பதா! //

  என்ன சார் இது, ......நீங்களும் டபுள் மீனிங்ல பேசுறீங்க..

  ReplyDelete
 62. // K.s.s.Rajh said...
  அப்பறம் அந்த ஜெயபால்..தான் இந்தக்கதையின்..ஹீரோவா தெரியுறார்....உதாரணத்துக்கு.டாகுதர்மாதிரி.....அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..பாஸ் //

  டாகுடர் பாவம்யா..விடுங்க.

  //அண்ணே..இந்த தொடர்கதை உங்கள் எழுத்துக்களுக்கான பொக்கிசம்...சந்தர்ப்பம் கிடைத்தால்..இதை...முழுநீள நாவலாக வெளியிடுங்கள்...இதனால்...ஆவணப்படுத்தப்படும்..அல்லவா.//

  சைடுல ஆவணப்படுத்தியிருக்கேன்..போதாதா?

  ReplyDelete
 63. // யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
  எப்போ இதனை புக் ஆக போட போகிற்கிரகள்??
  காத்து இருக்கும் ரசிகன் நான்.//

  ஏன் காத்திருக்கீங்க?..சைடு பார்ல ஈ-புக்கா இருக்கு...எடுத்துக்கோங்க.

  ReplyDelete
 64. // நிரூபன் said...
  இனிய காலை வணக்கம் பாஸ். //

  வணக்கம் நிரூ...அப்புறம் வர்றேன்.

  ReplyDelete
 65. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 66. சைடுல ஆவணப் படுத்தியது போதாது.. புத்தகத்தை எதிர்ப்பாக்கிறோம்..

  ReplyDelete
 67. கிழிஞ்ச டைரி பார்க்க நானும் வந்துட்டேன்....

  ReplyDelete
 68. தமிழ்மணம் ஒட்டு போட்டுட்டேன் ஹி ஹி...

  ReplyDelete
 69. கிழிஞ்ச டைரில இருந்து ஐம்பது பக்கங்கள் வந்துட்டுதே? அதுவும் சுவாரசியமா...

  ReplyDelete
 70. டைரி தானே கிழிஞ்சிருக்கு?இல்ல,எழுத்து ஒண்ணும் கிழியலைன்னேன்!!!!!!

  ReplyDelete
 71. செங்கோவி said...அப்போ யோகானந்தான்னு தானே முடியணும்.///இல்ல,அது............வந்து.........இல்லல்ல,அப்புடி வரவே வராது,ஆமா சொல்லிப்புட்டேன்!

  ReplyDelete
 72. செங்கோவி said...க.கா லீலைகள்....இன்னிக்கு நைட் வரும் ஐயா!/////அது வரும் ஓ.கே!"அவரு" வருவாரா, நைட்டு ஓடிப்புட்டாரே?

  ReplyDelete
 73. ரைட்டு..படிச்சு முடிக்கவும் சொல்லுங்க..கேள்வி கேட்கிறேன்.////எக்ஸாம் வேற இருக்குதா?அப்புடீன்னா,ஒரொரு எழுத்தா படிக்கணும்!கதையில வர்ற எல்லா பேருங்களையும் நெனைப்பு வச்சுக்கணும்!ஊர் பேருங்க கூட கரெக்டா தெரிஞ்சுக்கணும்!பிளைட்டில போனாங்களா,பஸ்ஸில போனாங்களா,டாக்ஸியில போனாங்களா,எல்லாம் கரெக்டா நெனைப்பிருந்தா தான் ஜெயிக்கலாம்!(ஸ்கூல் படிக்கிறப்போ இப்புடிப் படிச்சிருந்தா...........?!)

  ReplyDelete
 74. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்...

  சைடுல ஆவணப் படுத்தியது போதாது.. புத்தகத்தை எதிர்ப்பாக்கிறோம்..//

  மார்க்கெட்டிங் பொறுப்பு எடுத்துக்கறீங்களா?

  ReplyDelete
 75. // MANO நாஞ்சில் மனோ said...
  கிழிஞ்ச டைரி பார்க்க நானும் வந்துட்டேன்....//

  நீங்க படிக்க மாட்டீங்களே..

  ReplyDelete
 76. // பாலா said...
  கிழிஞ்ச டைரில இருந்து ஐம்பது பக்கங்கள் வந்துட்டுதே? அதுவும் சுவாரசியமா...//

  ஆமாம் பாஸ்...ஆனா அது பக்கம் இல்லை..அத்தியாயம்.

  ReplyDelete
 77. Yoga.s.FR said...

  //டைரி தானே கிழிஞ்சிருக்கு?இல்ல,எழுத்து ஒண்ணும் கிழியலைன்னேன்!!!!!! //

  உங்களுக்கு கிழிஞ்சாத்தான் பிடிக்குமா பாஸ்..

  //..அப்போ யோகானந்தான்னு தானே முடியணும்.///இல்ல,அது............வந்து.........இல்லல்ல,அப்புடி வரவே வராது,ஆமா சொல்லிப்புட்டேன்! //

  ரைட்டு!

  // க.கா லீலைகள்....இன்னிக்கு நைட் வரும் ஐயா!/////அது வரும் ஓ.கே!"அவரு" வருவாரா, நைட்டு ஓடிப்புட்டாரே? //

  அவருன்னா...நானா -- நெட் ஒழுங்கா இருந்தா, நான் ஏன் ஓடுறேன்..இல்லே, பன்னிக்குட்டி/காட்டானா...அவங்க கிளுகிளுப்பா எழுதுனா, நிப்பாங்க பாஸ்.

  ReplyDelete
 78. //நிரூபன் said...
  யோஹன்னா குழம்பிப்போனாள். மதன் தாக்குதலைத் தொடர்ந்தான்.//

  அவ்...ஆண்களால் எறியப்படும் அன்பெனும் அஸ்திரத்தில் மயங்கி அனைத்தையும் இழப்பது தானே பெண்களின் வேலை...

  யோஹன்னா லாஜிக்கை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்திருக்கலாம்..//

  லாஜிக்கை யோசிக்க மூளை வேலை செய்யணுமே..காதல்னு வந்துட்டா, மூளை ஃப்ரீஸ் ஆகிடுதே!

  ReplyDelete
 79. அடடா..சிலருக்கு பதில் சொல்ல விட்டுபோயிருக்கே...சாரி!

  ReplyDelete
 80. // சே.குமார் said...
  சதமடித்துத்தான் முடிவுக்கு வரும் போல.... தொடரட்டும்.//

  அவ்ளோ தூரம் போகாது..பயப்படாதீங்க.

  ReplyDelete
 81. // M.R said...
  கதை நல்ல விறுவிறுப்பு பெற்றுள்ளது.

  கதையின் முடிவில் அதாவது இன்றைய பொழுதில் மதன் உயிரோடு இல்லையா ,அல்லது மன நிலை சரியில்லாமல் இருக்கிறாரா !அல்லது சிரை....//

  என்னத்தச் சொல்ல...

  ReplyDelete
 82. // IlayaDhasan said...
  interesting ...
  முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா //

  நன்றி.

  ReplyDelete
 83. // வெட்டிப்பேச்சு said...

  //சிவா உடனே எனக்கு ஒரு மெயில் அனுப்பினான். //

  narration confuse ஆகுதே..third person narration திடீர்னு first person narration ஆகுதே..//

  ஐயா..கதை எப்பவும் ஃபர்ஸ்ட் பெர்சன் நரேசன் தான்..என் டைரியைத் தானே படிக்கிறீங்க..பின்னால வர வேண்டிய பக்கங்கள் உங்க வசதிக்காக முன்னாடி வந்திடுச்சு..ஆனாலும் நான் தான் கதையை ‘சொல்றேன்’...ஓகேவா?

  ReplyDelete
 84. // Tirupurvalu said...
  U &yr friends circle spoiled a true love of Yoganna .Muruga perumanukey 2 wife Madan enna pavam panninar //

  ஹா..ஹா..

  பாஸ், ஒருவேளை நீங்க சீரியஸா கமெண்ட் போட்டிருந்தா, சாரி!

  ReplyDelete
 85. // சி.பி.செந்தில்குமார் said...
  அட....கலக்கல் //

  கலக்கல் கமெண்ட்.

  ReplyDelete
 86. // mohan said...
  thanks //

  எதுக்கு திடீர்னு நன்றி சொல்றாரு...

  ReplyDelete
 87. அண்ணே ...கதை நல்ல விறுவிறுப்பா தான் போய்கிட்டு இருக்கு...more twists to climax...

  ReplyDelete
 88. சம்பவங்களை விவரிக்கும்போது ஒரு நல்ல திரைக்கதையாலன் உங்களிடம் ஒளிந்து இருப்பது தெரிகிறது ....ஏன் நீங்க (சினிமா) படம் எடுக்க கூடாது???

  ReplyDelete
 89. 1 day u& yr freinds will feel to destroyed a over seas love

  ReplyDelete
 90. சூப்பராப் போயிட்டிருக்கு!

  ReplyDelete
 91. கதை சுவாரசியமாக இருக்கின்றது எப்படி எல்லாம் மதன் நடிக்கின்றான் ஒ இது உங்கள் நண்பர் கதையா செங்கோவி ஐயா இடையில் அடிபடுகின்றார் !
  ஜெய்பால் யாரு முன்னால் மந்திரி ஜெய்பால்ரெட்டி இல்லையே?
  தொடருங்கள் அடுத்த பதிவில் முடிந்தால் இடையில் வாரன் கும்மியடிக்க! 

  ReplyDelete
 92. எங்கேயும் எப்போதும்..... இன்னும் பார்க்க வில்லையா.!!!!இன்னும் உங்கள் விமர்சனம் வரவில்லை...குவைதில் இன்னும் வெளியாகவில்லையோ ??!!!

  ReplyDelete
 93. அண்ணன் HALF CENTURY அடிச்சிருகாக!!!!

  அல்லாரும் ஜோரா கைய தட்டுங்கோ !!!

  ReplyDelete
 94. அண்ணே டிவி சீரியல் மாதிரி இழுத்துட்டே போனாலும் கொஞ்சம் கூட சுவாரஸ்சியம் குறையல, கிளைமேக்ஸ் வேற நெருங்கிகிட்டு இருக்கும் போல, எப்படியாவது ஜமீலா கூட சேர்த்து வச்சிடுங்க, பாவமா இருக்குது

  ReplyDelete
 95. ////நான் ஜெயபால். மதனின் பள்ளிக்கால நண்பன்<.....>உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மெயில்.//////நண்பேண்டா!!!!

  ReplyDelete
 96. 100 ....சென்சுரி அடிப்போம்ல

  ReplyDelete
 97. செங்கோவி said... [Reply]
  // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்...

  சைடுல ஆவணப் படுத்தியது போதாது.. புத்தகத்தை எதிர்ப்பாக்கிறோம்..//

  மார்க்கெட்டிங் பொறுப்பு எடுத்துக்கறீங்களா?//

  மாப்ள எடுத்துகிட்டாப் போச்சு...

  உனக்கு இல்லாததா?

  ReplyDelete
 98. இன்னிக்கு கிழிச்சிட வேண்டியது தான்!எதுவா?அது....... அப்புறம் பாருங்க!

  ReplyDelete
 99. мσнαη « • said... [Reply]
  // is Madhan still alive????//

  ம்ம்......

  //சம்பவங்களை விவரிக்கும்போது ஒரு நல்ல திரைக்கதையாலன் உங்களிடம் ஒளிந்து இருப்பது தெரிகிறது ....ஏன் நீங்க (சினிமா) படம் எடுக்க கூடாது???//

  தம்பி, நான் ஒரு நல்ல வேலைல நிம்மதியா இருக்கறது பிடிக்கலியா..

  // • » мσнαη « • said... [Reply]
  100 ....சென்சுரி அடிப்போம்ல//

  ஓ..இதுக்குத் தான் கமெண்ட் மழையா..ஓகே, ஓகே!

  ReplyDelete
 100. // Tirupurvalu said... [Reply]
  1 day u& yr freinds will feel to destroyed a over seas love //

  1 டே...ஒருநாள் மட்டும் தான் ஃபீல் பண்ணுவமா? அப்போ பரவாயில்லை!

  ReplyDelete
 101. // சென்னை பித்தன் said... [Reply]
  சூப்பராப் போயிட்டிருக்கு! //

  தொடர்ந்து படிக்கறதுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 102. // தனிமரம் said... [Reply]
  இது உங்கள் நண்பர் கதையா செங்கோவி ஐயா இடையில் அடிபடுகின்றார் ! //

  50 பதிவுக்கு அப்புறம் கேட்கிற கேள்வியைப் பாருங்க..

  ReplyDelete
 103. // • » мσнαη « • said... [Reply]
  எங்கேயும் எப்போதும்..... இன்னும் பார்க்க வில்லையா.!!!!இன்னும் உங்கள் விமர்சனம் வரவில்லை...குவைதில் இன்னும் வெளியாகவில்லையோ ??!!! //

  ஆமாம் மோகன்..தியேட்டர்ல பார்த்தா மட்டும் தான் விமர்சனம் போடறது.இனிமே தான் டவுன்லோடு போடணும்.

  ReplyDelete
 104. // இரவு வானம் said... [Reply]
  அண்ணே டிவி சீரியல் மாதிரி இழுத்துட்டே போனாலும் கொஞ்சம் கூட சுவாரஸ்சியம் குறையல,//

  கேவலமா திட்டுற மாதிரி உங்க கமெண்ட் ஆரம்பிச்சாலும், கொஞ்சம்கூட என்னை கேவலப்படுத்தலை..நன்றி நைட்!

  ReplyDelete
 105. // !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply]
  மார்க்கெட்டிங் பொறுப்பு எடுத்துக்கறீங்களா?//

  மாப்ள எடுத்துகிட்டாப் போச்சு...உனக்கு இல்லாததா? //

  ஓகே, அப்போ க்ருன்கிட்டயே ஒரு புக்காவது வித்துடலாம்!

  ReplyDelete
 106. // Yoga.s.FR said... [Reply]
  இன்னிக்கு கிழிச்சிட வேண்டியது தான்!எதுவா?அது....... அப்புறம் பாருங்க! //

  ஐயா ஏதோ முடிவோட உட்கார்ந்திருக்காரே...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.