Friday, September 23, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51

நான் ஜெயபாலை ஒருமுறை பார்த்திருக்கிறேன். மதனுடன் மதுரைக்குள் சுற்றிய போது, அவனைப் பார்த்தோம். அலட்டலான ஆசாமி என்பது பார்த்தவுடனே தெரிந்தது. ‘நீங்கள்லாம் என்னத்த படிச்சு..என்னத்த கிழிச்சு ‘ என்பதாகவே அவன் பேச்சு இருந்தது. முதல் சந்திப்பிலேயே கடுப்பைக் கிளப்பினான். 

எனவே அவன் மெயிலை என்னால் அப்படியே நம்ப முடியவில்லை. நண்பர்கள் எனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து, அது உண்மையா என்று கேட்க ஆரம்பித்தார்கள். நானும் எங்களது ஆஃபீஸ் நண்பர்களிடம் பேசியபோது, ‘மதனுக்கு யாரோ ஃபாரின் ஃபிகர் செட் ஆகிடுச்சு. அங்கே போய்விட்டான்’ என்பதாகவே சொன்னார்கள். என்னால் அதை நம்பவும் முடியவில்லை. 


ஜமீலா ஃபோன் நம்பர் என்னிடம் இருந்தது. ஆனால் ஜெயபால் பேச்சை நம்பி எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. மதனின் பதில் மெயிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

மதனும் அனைவருக்கும் சேர்த்தே பதில் போட்டான்:

ஹலோ ஜெயபால்,

நீ ஏன் இப்படி கேவலமான நிலைமையில இருக்கிறே, தெரியுமா? ஏன்னா நீ இன்னும் உன் கேரக்டரை மாத்திக்காததால் தான்.

உண்மை என்னன்னு தெரியாம உன் ஓட்டையை ஓப்பன் பண்ணாதே. ஸ்கூல் டேஸ்ல இருந்து இப்படியே தான் பண்ணிக்கிட்டு வர்றே..என்னோட பெர்சனல் லைஃப் பத்திப் பேச நீ யார்டா? மாமா வேலையா பார்க்கறே? என்னைப் பத்திப் பேசுறயே, உன் யோக்கியதை என்னடா?

நீ ஒரு *** பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அவளை மேட்டர் முடிக்கலே? அது தெரிஞ்சு, அந்தப் பொண்ணோட வீட்ல உன்னை ஆள் வைச்சு அடிக்கலே? அதையெல்லாம் வெளில சொல்லாம பைக்ல இருந்து கீழ விழுந்துட்டதா பொய் சொன்னவன் தானே நீ?

அதைவிடு, அந்த மெட்ராஸ் ஆன்ண்டி கதை? அவ புருசனுக்குத் தெரியாம அவ வீட்டுக்கு நீ அடிக்கடி போனவன் தானே நீ? உன் தொல்லை தாங்காம அவ புருசன் அவளைக்கூட்டிக்கிட்டு, திருச்சி போனான்ல? அப்பக்கூட விடாம அங்க போயும் ஜல்சா பண்ணவன் தானடா நீ? என்னைப் பத்திப் பேச என்ன யோக்யதைடா உனக்கு இருக்கு?

என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடியே உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. அதை அப்போ நம்பலை. இப்போ நம்பறேன்.

இனிமேலாவது என் பெர்சனல் லைஃப்ல குறுக்கிடாம இரு. இல்லேன்னா, அதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.

-- மதன்

ஜெயபாலின் மெயிலை விட, மதனின் மெயிலே எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு வார்த்தைகூட நான் அப்படிச் செய்யவில்லை என்றோ, அதற்குரிய விளக்கங்களோ அதில் இல்லை. ’ஆம்..அப்படித்தான்’ என்பதாகவே அந்த மெயில் இருந்தது. மதன் - ஜமீலா கல்யாணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்ட அய்யருக்கும் அந்த மெயில்கள் போயிருந்தன. அதைப் பார்த்துவிட்டு, எனக்குக்கூப்பிட்டான்.

“என்ன பாஸ் இது..என்ன நடக்குது? இதெல்லாம் உண்மையா? அந்தப் பொண்ணு எவ்வளவு நல்லவங்க? அவங்க கையால நாங்க எத்தனை தடவை சாப்பிட்டிருக்கோம்? ஒருதடவை நம்மூர்ல பந்த் அன்னிக்கு சாப்பிட ஹோட்டலே இல்லாம தவிச்சப்போ, அந்தப் பொண்ணு தான் வீட்டுக்கு வரச்சொல்லுங்கன்னு மதன்கிட்ட சொல்லி, 20 பேருக்கு மொத்தமா சமைச்சுப்போட்டுச்சு. அதைப் போய்...என்னால நம்பவே முடியலை..நீங்க என்னன்னு கேளுங்க பாஸ்..அவர் உங்ககிட்ட தான் ஒழுங்கா பேசுவார்..நானும் மெயில் அனுப்புறேன்..நீங்க முதல்ல கேளுங்க” என்றான்.

அதற்கு முன் ஜமீலாவிடம் பேசுவது நல்லது என்று தோன்றியது. ஜமீலாவிற்குக் கால் செய்தேன்.

மறுமுனையில் ஃபோன் எடுத்ததும் எனக்குக்கேட்டது குழந்தையின் அழுகை தான். “அண்ணா, பத்து நிமிசம் கழிச்சு கூப்பிடறீங்களா? கம்பெனில இருந்து இப்போத்தான் வந்தேன் “ என்றாள்.

“சரி “ என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தேன். பத்து நிமிடத்தில் அவளே கூப்பிட்டாள்.

“சொல்லுங்கண்ண்ணா..”

“இல்லே, சும்மா தான் கூப்பிட்டேன்..” என்று இழுத்தேன்.

“அப்புறம் உங்க ஃப்ரெண்ட் மதன் எப்படி இருக்கார்?”

“என்ன இப்படிக் கேட்கிறீங்க? மதன் இப்போ எங்கே?”

“யாருக்குத் தெரியும்ணா?”

“இன்னிக்கு ஒரு மெயில் வேற வந்திருந்துச்சு, ஜெயபால்னு ஒருத்தர்கிட்டேயிருந்து”

“ஜெயபால் அண்ணனா..சொன்னார், மெயில் அனுப்பிக் கேட்கப்போறேன்னு”

“என்ன ஆச்சு?”

“மதன் மாதிரி ஆளை நம்பி வந்தா, என்ன ஆகும்? நான் பண்ண தப்புக்கு நான் அனுபவிக்கணும் இல்லையா?”

“என்ன இப்படில்லாம் பேசறீங்க..அவன் அப்படில்லாம் போக மாட்டான். நான் பேசறேன். வேலைக்கா போறீங்க?”

“ஆமாண்ணா. இப்போத் தான் ரெண்டு நாளா. இங்க என் மாமா தான் சப்போர்ட்டா இருந்தார். அவரும் இப்போ இங்கே வர்றதில்லை. மூணு லட்சம் காசை ஏமாதிட்டமாம்..என்னென்னவோ பேசறாங்க..நடக்கட்டும்னு இருக்கேன்”

“மூணு லட்சமா?”

“ம்..மதன் விசா செலவுக்கு வேணும்னு கேட்டான். வாங்கிக்கொடுத்தேன். ஓடிப்போய்ட்டான். இப்போ அதை நாந்தானே அடைக்கணும்”

“அவன் நம்பர் ஏதாவது இருக்கா?”

“எங்க இருக்கான்னே தெரியலையே..”

“இன்னிக்கு மெயில் போட்டிருக்கான். நான் கேட்கறேன் அவன்கிட்ட. அவன் எப்படில்லாம் உங்ககிட்ட பாசமா இருந்தான்னு எனக்குத் தெரியும். அவன் அப்படில்லாம் விட்டுட்டுப் போக மாட்டான். எங்க போனாலும் வந்திடுவான். அவன் எப்பவும் இப்படித்தான்...ஆனா நல்லவன், வந்திடுவான்”

ஜமீலா அழ ஆரம்பித்தாள். “வருவானா?”

“நிச்சயமா..நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஷாக் ஆகித்தான் இருக்கோம்..நாங்க பேசறோம்”

“அண்ணா, வெளில தான் நான் அப்படிப் பேசறேண்ணா..எனக்கு உண்மையில் பயம்மா இருக்குண்ணா..இங்க எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்க்காங்க..மதன் வந்திருவானா? எப்படியாவது அவனை என்கூட பேசச்சொல்லுங்கண்ணா. நான் சொன்னா அவன் கேட்பான். குழந்தையை விட்டுட்டு ஒரு ஆட்டோமொபைல் ஷாப்ல வேலைக்குப் போறேன். பகல்ல குழந்தையை ஹவுஸ் ஓனர் தான் பார்த்துக்கறாங்க. என்னால நிம்மதியா வேலையும் பார்க்கமுடியலை..கொஞ்சம் நல்லாப் பேசுனா, உடனே தப்பா நினைச்சுக்கிட்டு என்னென்னவோ சாடைமாடையா பேசறாங்க..நல்லாப் பேசலைன்னா ஒழுங்கா வேலை செய்யலைன்னு சொல்றாங்க. வேலைக்குப் போகலைன்னா சாப்பாட்டுக்கு வழியில்லை..காலைல குழந்தையை அமுத்திட்டுப் போனா, திரும்ப நைட்டு தான் வர்றேன். அதனால சிலநேரம்..........”

இருவரும் அழுதோம்.

(நாளை தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

 1. என்னங்க அழுகாச்சியா முடிச்சிட்டிங்க.எங்களுக்கும் அழுக வருது!

  ReplyDelete
 2. எங்களுக்கே இப்படின்னா அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்!?

  ReplyDelete
 3. இந்த ஜெயபால் நல்லவரா?கெட்டவரா?

  ReplyDelete
 4. அண்ணன் செண்டிமெண்ட்டை போட்டு புழிஞ்சு எடுத்துட்டாரே..... எல்லாம் உண்மைன்னு நினைக்கும் போது வருத்தப்படாம இருக்க முடியல....

  ReplyDelete
 5. “என்ன பாஸ் இது..என்ன நடக்குது? இதெல்லாம் உண்மையா? அந்தப் பொண்ணு எவ்வளவு நல்லவங்க? அவங்க கையால நாங்க எத்தனை தடவை சாப்பிட்டிருக்கோம்? ஒருதடவை நம்மூர்ல பந்த் அன்னிக்கு சாப்பிட ஹோட்டலே இல்லாம தவிச்சப்போ, அந்தப் பொண்ணு தான் வீட்டுக்கு வரச்சொல்லுங்கன்னு மதன்கிட்ட சொல்லி, 20 பேருக்கு மொத்தமா சமைச்சுப்போட்டுச்சு. அதைப் போய்...என்னால நம்பவே முடியலை//

  ம்.நல்லவங்களுக்குதான் எத்தனை சோதனைகள்?

  ReplyDelete
 6. ////(நாளை தொடரும்)////

  அப்போ அண்ணன் பதிவை மட்டும் போட்டுட்டு அப்பீட் ஆகிக்குவாரு.....

  ReplyDelete
 7. //“இன்னிக்கு மெயில் போட்டிருக்கான். நான் கேட்கறேன் அவன்கிட்ட. அவன் எப்படில்லாம் உங்ககிட்ட பாசமா இருந்தான்னு எனக்குத் தெரியும். அவன் அப்படில்லாம் விட்டுட்டுப் போக மாட்டான். எங்க போனாலும் வந்திடுவான். அவன் எப்பவும் இப்படித்தான்...ஆனா நல்லவன், வந்திடுவான்”//

  இம்புட்டு நம்பினீங்க??? ரொம்ப அப்பாவியா இருந்திருக்கீங்களே....

  ReplyDelete
 8. ஜமிலாவின் நிலமையை கண்டு கண் கலங்குகிறது நண்பா

  ReplyDelete
 9. நல்ல ஒரு தொடரை இடையில் தவற விட்டுட்டேனுங்க...

  இதில ரெம்ளெட் கொமண்ட அடித்து பிரயோசனமே இல்ல...

  நேரம் கிடைக்கையில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

  ReplyDelete
 10. இப்படி சோகமாக்கிவிட்டீர்கள் இதில் மதன் நல்லவனா கெட்டவனா?

  ReplyDelete
 11. என்னையா இப்படி சோகம் ஆகிட்டுது! பரவாயில்லை! உங்க கில்மா பதிவுக்கு வர்ரேன் கும்ம!

  இப்போது விடைபெறுகிறேன் மனம் விம்ம!

  ReplyDelete
 12. ஜமிலா அக்கா பாவம் பாஸ்.இப்ப இது மட்டும் தான் சொல்ல முடியும் ரொம்ப பீலிங்கா இருக்கு

  ReplyDelete
 13. மாமோய் நீங்க எங்க இருக்கீங்க..

  ReplyDelete
 14. //KANA VARO said...
  மாமோய் நீங்க எங்க இருக்கீங்க..//

  தாங்கள் இடும் பின்னூட்டங்கள் எனது பதிவுகளிலும் அநேகமாக இதே போல பின் நவீனத்துவ பாணியில் இருப்பதால் பதிவுக்கும் - கமேண்டிற்கும் இடையிலான தொடர்பை உய்த்தறிவதில் சமயங்களில் தாவு தீர்ந்து விடுகிறது!

  நீங்கள் பதிவுகளை வாசித்துத்தான் கமென்ட் போடுவீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன்!

  ReplyDelete
 15. ம்ம்ம்....இந்தப்பதிவு சோகமாவே போயிட்டுது ...பாவம் ஜமீலாவும் குழந்தையும்!

  ReplyDelete
 16. நெருங்கும் சோகம் .அடுத்தது சீக்கிரம் வரட்டும் நண்பரே .

  நான் கடந்த பதிவில் கேட்டது போல் வருமா முடிவு ?

  ReplyDelete
 17. இனிய காலை வணக்கம் சகோதரம்,

  மன்மதலீலைகள் 52 வர முன்னாடி என் டாஷ்போர்ட்டில 53 காண்பிச்சுது..

  ஓடி வந்து பார்த்தால் 51 தான் காட்டுகிறது...

  ReplyDelete
 18. மனசைக் கனக்க வைக்கிறது இந்தப் பாகம்,

  மதன் உரிமை கோராது ஜெயபால் சொல்வதெல்லாம் உண்மை எனும் பாணியில் மறைமுகமாக மெயில் அனுப்பியிருப்பதும்,
  குழந்தையோடு தனித்து ஒரு சமூகத்தில் வாழ்விற்காகப் போராடும் தாயின் உணர்வுகளையும் தாங்கி இப் பாகம் வந்திருக்கிறது.

  அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 19. வந்திட்டோம்லே வந்திட்டோம்லே!!!
  நாம வந்திட்டோம்லே!

  ReplyDelete
 20. கழக கண்மணிகள் ஆடும் மங்காத்தா!!
  http://www.youtube.com/watch?v=0XE23Snz8Ew&feature=player_embedded

  ReplyDelete
 21. மனதை நெகிழ வைத்த பாகம் இது..

  ReplyDelete
 22. பெண்பாவம் பொல்லாதது,ஏலவே சொல்லியிருக்கிறேன்!பார்க்கலாம் தெய்வம் நின்றருக்கிறதா இல்லையா என்று!

  ReplyDelete
 23. இப்படி சோகமாக்கிவிட்டீர்கள்....

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 24. இரண்டாம் திருமணமும் மோசமாகி போனதே, ஜமீலாவும் குழந்தையும் நினைத்தால் பாவமாக உள்ளது, இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்??? கடைசியில் பதில் சொல்வீர்க்ள் என நம்புகிறேன்

  ReplyDelete
 25. இன்னைக்கு சனிக்கிழமை, நாளைக்கும் அண்ணன் வரமாட்டார் ம்ம்ம்ம் சரி இன்ட்லில டண்டணக்கா போட்டுட்டு போவோம்....

  ReplyDelete
 26. அண்ணன் பதில் சொல்லாததால கடையில கூட்டம் கம்மியாயிடுச்சு!ம்.ம்.ம்.ம்....!

  ReplyDelete
 27. "நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஷாக் ஆகித்தான் இருக்கோம்..நாங்க பேசறோம்”/// நான் கூட!(ஷாக் ஆயிட்டேன்னேன்.)

  ReplyDelete
 28. MANO நாஞ்சில் மனோ said... இன்னைக்கு சனிக்கிழமை, நாளைக்கும் அண்ணன் வரமாட்டார் ம்ம்ம்ம் சரி இன்ட்லில டண்டணக்கா போட்டுட்டு போவோம்....///கமெண்டு போடுங்க சார்,ஒட்டு போட்டா ஆயிடுச்சா?

  ReplyDelete
 29. மைந்தன் சிவா said... [Reply] வந்திட்டோம்லே வந்திட்டோம்லே!!! நாம வந்திட்டோம்லே!////என்னமோ பாரிஸ் ஏர்போட்டுக்கு வந்த மாதிரி கத்துறீங்கள்?

  ReplyDelete
 30. அழுகையில் முடிச்சுட்டீங்களே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.