Saturday, September 24, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52

தன் எப்படியோ ஜெயபாலின் மொபைல் நம்பரைத் தேடிப் பிடித்தான். ஜெயபாலிற்கு ஃபோன் செய்து ‘ஏண்டா இப்படி மெயில் அனுப்பினே’ என்று காதால் கேட்க முடியாத அளவிற்கு திட்டினான்.

“நான் என்னடா மாப்ள செய்ய..உன் ஒய்ஃப் தான் சொல்லிச்சு. நீ விட்டுட்டு ஓடிட்டே. ஏமாதிட்டே. கஷ்டப்படுறேன்’னு! எனக்கும் பாவமா இருந்துச்சு. அதான் உனக்கு மெயில் போட்டேன்”

“ஓ..அவ இப்படி ஒவ்வொருத்தன்கிட்டயா என்னைப் பத்திச் சொல்றாளா? “

“ஆமாம் மாப்ள..நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அதுகிட்ட பேசுறாங்க. அதுவும் சொல்லுது.”
”சரி, இனிமே அவகூடப் பேசாதே. என் பெர்சனல் மேட்டர்ல தலையிடாதே. இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்”

சொல்லிவிட்டு மதன் கடுப்புடன் ஃபோனை வைத்தான்.

டுத்த நாள் காலையில் ஜெயபால் ரத்தக்கண்ணீர் வடித்தபடி ஒரு மெயில் போட்டிருந்தான் :

ஃப்ரெண்ட்ஸ்,
நம்ம பசங்க யாராவது கெட்டுப்போனா, நமக்கு எப்படி இருக்கும்? நமக்கு பிடிச்ச பையன்னா, நாம மனசு கஷ்டப்படுவோம் இல்லையா? அப்படித்தான் மதனுக்காக ஃபீல் பண்ணி ,அந்த மெயிலை நான் போட்டேன். அவனை திருத்தணும்னு தான் நான் அப்படி மெயில் போட்டேன். ஆனா அவன் என்னைப் பத்திக் கேவலமா மெயில் போடறான். ஆனா அவன் சொன்னதெல்லாம் உண்மை தான். எனக்கு அந்தப் பொண்ணுகளைப் பிடிச்சிருந்துச்சு. அவங்களுக்கும் என்னை பிடிச்சிருந்துச்சு. ஆனால் நான் யாரையும் ஏமாத்தலை. யாருக்கும் நான் நம்பிக்கை துரோகம் செய்யலை.

என்னோட போன மெயிலை படிச்சுட்டு, மதன் எனக்கு கால் பண்ணான். என் நம்பர் யார் கொடுத்தீங்கன்னு தெரியலை. ரொம்ப மோசமா என்னைத் திட்டினான். என் ஃபேமிலியை ரொம்ப கேவலமா பேசுனான். என்னால் சாகறவரைக்கும் அதை மறக்க முடியாது. மதன் அப்படிப் பேசுவான்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை.

மதன், நீ கடைசியா சாரி கேட்டுக்கிட்டாலும் , அது உன் கேரக்டர் என்னன்னு காட்டிடுச்சு. உன் மனசுல அந்த மாதிரி எண்ணம் இருக்கப்போய்த்தானே அப்படில்லாம் பேசுன? நீ எப்படி என் ஃபேமிலி பத்தி அப்படில்லாம் சொல்லலாம்? நீ அப்படிப் பேசுனது தப்பு. 

நான் இனிமே உன் லைஃப்ல குறுக்க வர மாட்டேன். ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நீ ஒருநாள் பதில் சொல்லியே ஆகணும். இனிமே உன் ஒய்ஃபுக்கு சப்போர்ட்டா நான் யார்கிட்டயும் பேச மாட்டேன்.

இப்போ இல்லாட்டியும் ஒரு நாள் என்னை நீ புரிஞ்சுப்பே.

உன் முன்னாள் நண்பன்,
ஜெயபால்.

இந்தக் கலவரத்தில் சிவாவின் மெயிலுக்கு பதில் போட மறந்துபோனேன். எனவே இரண்டு வரியில் நலம் விசாரிப்புடன், என் மொபைல் நம்பரைப் போட்டு பதில் அனுப்பினேன். ஆனால் சிவா யோஹன்னாவால் மனம் வெறுத்த நிலையில், அந்த மெயிலுக்கு எந்த பதிலும் போடவில்லை.

மதன் மேல் அப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. அவன் ஏதோ விளையாட்டாகச் செய்துகொண்டிருப்பான், நிச்சயம் சொன்னால் திருந்திவிடுவான் என்றே நம்பினேன். கல்லூரி நாட்களில் மதன் எல்லை மீறும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்ட வேண்டும் என்று விரும்பினான். 


நான் சொல்வதை அவனால் ஃபாலோ பண்ண முடியாவிட்டாலும், நான் தொடர்ந்து அவனை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்தான். எங்களுக்குள் எவ்வித ஒளிவுமறைவும் இல்லாத நாட்கள் அவை. அவனின் மனசாட்சியாகவே என்னை வைத்திருந்தான். எனவே இப்போதும் அதே உரிமையுடன் அவனுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் :

அன்பு மதன்,

என்னடா ஆச்சு?..என்ன நடக்குது?...முதல்ல ஜெயபால் மெயிலை பார்த்தப்போ நான் நம்பலை..அப்புறம் உன் reply அது உண்மைதான்னு சொல்றமாதிரி இருந்துச்சு...எதுவா இருந்தாலும் நீ பண்றது தப்புடா..

லைப்ல புருஷன் பொண்டாட்டிக்கு இடையில பிரச்சினை வர்றது சகஜம்டா...அதுக்காக பிரியறதுன்னா, உலகத்துல யாருமே சந்தோசமா இருக்க முடியாது...

நான் விசாரிச்சவரைக்கும், தங்கச்சி கொச்சின்லதான் இருக்குது...சாப்பாட்டுக்கு வழியில்லாம இப்போ ஏதோ ஆபீஸ்க்கு வேலைக்கு போகுது..அதுவரைக்கும் குழந்தையை யாரோ பார்த்துக்கிருதாங்க...இதெல்லாம் நல்லாவாடா இருக்கு?..ஜமீலாவுக்காக இல்லேன்னாலும் உன் குழந்தைக்காகவாவது நீ மனசு மாறனும்..

இதைக் கேட்கிற உரிமை எனக்கு இன்னும் இருக்குன்னு நம்புறேன்..என்னைவிட உனக்கு கல்யாணம் பண்ணிவச்ச cc-ல இருக்கிற நம்ம பிரெண்ட்சுக்கு இருக்கு...நீ arranged marriage பண்ணி, இப்படி நடந்துக்கிட்டா உன்னை சும்மா விட்டிருவாங்களா?..இப்போ அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லேன்னு நினைச்சுக்கிட்டு தானே இப்படி பண்றே..சொந்தக்காரங்க யாரோ சொன்னப்பவும் உன் மேலே போலீஸ் கம்ப்ளைன்ட் வராம உன் wife தாண்டா தடுத்துக்கிட்டு இருக்கு..

நம்ம அம்மா இறந்தப்போ, அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கலை..எதுக்கு?..தன் குழந்தைங்க நல்ல இருக்கணும்னு தானே...அப்புறம் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கே?..உன் குழந்தை மத்தவங்களை விட நல்லா இருக்க வேண்டாமா?..

நீயாத்தான் அந்த பொண்ணுகிட்டே propose பண்ணே..உன்னை நம்பி அந்தப் பொண்ணும் வீட்டை விட்டும் வந்திருச்சு...குழந்தையும் ஆயிருச்சு...இனிமே இப்படி பண்றது பாவம்டா..நீ இப்போ இந்தியா வராட்டியும், கொஞ்சம் பணமாவது அதுக்கு அனுப்பு...மத்ததை நீ இங்க வரும்போது நாம பேசித் தீர்த்துக்கலாம்..

நீ காலேஜ்ல என்ன தப்பு பண்ணினாலும் உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கேன்..இப்பவும் நம்ம பசங்க என்கிட்டே கேட்கிறாங்க..என்னால சப்போர்ட் பண்ண முடியலை...

நீயும் உன் குடும்பமும் ஒன்னு சேரனும்கிறதுதான் எங்க எல்லாரோட ஆசையும்..

கடைசியா ஒன்னு சொல்றேன்...நீ இந்த விசயத்தில எது பண்றதாயிருந்தாலும், அம்மா இப்போ இருந்தா உனக்கு என்ன சொல்வாங்களோ அதை மட்டும் பண்ணு..It will solve everything..அம்மா சந்தோசப் படுறமாதிரி நடந்துக்கோ...

If possible, call me or give me your no.

-- செங்கோவி

எனது மெயிலைத் தொடர்ந்து அய்யரும் ஒரு மெயில் போட்டான். 

மதன்,

இந்த விஷயத்தில் தலையிட எனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நமது நட்பும் அதற்கான மரியாதையும் இன்னும் தங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

எங்கள் அனைவரிலும், தங்கலுடன் நீண்டகால நட்பும், தங்கள் குடும்பத்தினருடன் பரிச்சயமும் கொண்டவர் செங்கோவி என்பதை நாங்கள் அறிவொம். இந்த கடிதத்தை வேறு யார் அனுப்பியிருந்தாலும் அதை நாங்கள் spam என்று சொல்லி delete செய்திருப்போம். ஆனால் செங்கோவியிடமிருந்து வந்துள்ளதால் இது எங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அவர் சொல்வதை நாங்கள் நம்பினாலும், தங்கள் எதிர் வாதத்தை கேட்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.

இதையெல்லாம் கேட்க நீ யார்? என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. ஆனால், தங்கள் பதிவு திருமணத்தில் கையொப்பமிட்ட சாட்சி நான் என்கிற உரிமையில் கேட்கிறேன். தயவு செய்து இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள்.

சில மாதங்களுக்கு முன் தங்களிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சலில் தாங்கள் Spain-ல் இருப்பதாக சொன்னீர்கள். ஆனால் அந்த மின்னஞ்சலின் originating IP address தாங்கள் நார்வேயில் இருப்பதாக காட்டியது. இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. கூட்டி கழித்து பார்க்கும்போது, இது எல்லாம் ஒரு premeditated plan ஆக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.

மறுபுரம், தங்கள் மனைவி, “எல்லருமாக சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என்று போலீசாரிடம் குற்றபதிவு செய்தால், கையொப்பமிட்ட நானும் (accomplice in conspiracy to commit crime) சிறைச்சாலை செல்வது உறுதி.

ஆனால் எனக்கு ஞாபகத்திற்கு வருவது ஒரு விஷயம் தான். தங்கள் பதிவு திருமணத்தின்போது, பெண்ணின் விண்ணப்பத்தில், அவர் ஒரு divorcee என்பதை கண்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அன்றிரவு நான் அதைப்பற்றி தங்களிடம் கேட்டபோது, அந்த பெண் பாலிய விவாஹ கொடுமைக்கு உட்பட்டவள், அவளது கொடுமைக்கார கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டாள் என்றும் சொன்னீர்கள். அந்த பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுத்த உங்களை நினைத்து மெய் சிலிர்த்தேன். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட நீங்கள் இப்படிப்பட்ட காரியத்தை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இங்ஙணம்,
உங்க அய்யர்

மதனிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்து, நாங்கள் காத்திருந்தோம்.

(செவ்வாய் இரவு தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

 1. எதிர்பாராத நேரத்துல பதிவு போட்டு அசத்துறிங்க!
  ஓ!இன்னைக்கு சனிக்கிலமையா!மறந்துடுச்சு!

  ReplyDelete
 2. ஜெயபால் வடிப்பது ரத்தக்கண்ணீரா?முதலைக்கண்ணீரா?

  ReplyDelete
 3. அவனின் மனசாட்சியாகவே என்னை வைத்திருந்தான்.//
  அவரு பண்ண நல்ல காரியம் இதான்னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 4. நாங்களும் நல்ல பதிலை எதிர் பாத்து காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 5. நாங்களும் காத்திருக்கோம்.

  ReplyDelete
 6. காத்திருக்க தேதி எல்லாம் குறிச்சு சொல்றாரப்பா!!ரொம்ப நலல்வரோ!

  ReplyDelete
 7. காத்திருக்க தேதி எல்லாம் குறிச்சு சொல்றாரப்பா!!ரொம்ப நலல்வரோ!

  ReplyDelete
 8. ம்......... நியாயத்துக்கு நீதி கிட்டணும்!

  ReplyDelete
 9. மைந்தன் சிவா அவர்களே!கருத்துரைத்தால் பதில் உரைக்க வேண்டும்,அப்போது தான் கலகலப்பாக இருக்கும்!

  ReplyDelete
 10. மதனிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்து,நாங்கள் காத்திருந்தோம்.//// நாங்களும் தான்!

  ReplyDelete
 11. ஜெயபாலை புரிஞ்சுக்க முடியலியே? அவர் நோக்கம்தான் என்ன?

  ReplyDelete
 12. பார்ப்போம் இப்போ மதன் என்ன சொல்ல போறாருன்னு....

  ReplyDelete
 13. அண்ண நானும் உங்களோட  வந்து கலகலப்பாக்கலாம் ஆனா லீலைகளை தொடர்ந்து வாசிக்கவில்லையே...  கடை ஓனர் வீக்கன்ல வரமாட்டாராமே மெய்யாலுமா..!?

  ReplyDelete
 14. காட்டான் said...

  அண்ண நானும் உங்களோட வந்து கலகலப்பாக்கலாம் ஆனா லீலைகளை தொடர்ந்து வாசிக்கவில்லையே... கடை ஓனர் வீக்கன்ல வரமாட்டாராமே மெய்யாலுமா..!?


  hi hi hi

  ReplyDelete
 15. அண்ணன் வேற ஈமெயில் போட்டிருக்காரு. பார்போம் என்ன நடந்திச்சின்னு.

  ReplyDelete
 16. இன்ட்லியையும் தூக்கிட்டீங்களா? காணோம்...

  ReplyDelete
 17. லீலைகள் ஒரு சுவாரஸ்ய கட்டத்தை ரெருங்கி விட்டது....மதனின் பதிலுக்கு வெயிட்டிங்..நிறைய செக் அடிக்கப்பட்டுள்ளது மதன் செக்மேட் ஆவாரா இல்லையா வெயிட்டிங்.

  ReplyDelete
 18. தொடருங்கள்... காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 19. காட்டான் said... [Reply] அண்ண நானும் உங்களோட வந்து கலகலப்பாக்கலாம்,ஆனா லீலைகளை தொடர்ந்து வாசிக்கவில்லையே... கடை ஓனர் வீக்கன்ல வரமாட்டாராமே மெய்யாலுமா?///ஆமாம்,அவருக்கும் புள்ள,குட்டி,பொண்டாட்டி இருக்குல்ல?ஒங்கள மட்டும் சந்தோஷப்படுத்தினா பத்தாதே?தொடர்புடைய பதிவுகள்,கீழ போட்டிருக்குது!அத விட,வலது பக்கம் மேல் மூலையில இரண்டு பாகம் தரவிறக்கிப் படிக்கலாம்!

  ReplyDelete
 20. காட்டான் said... [Reply] கடை ஓனர் வீக்கன்ல வரமாட்டாராமே மெய்யாலுமா..!?///கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! (நானா யோசிச்சேன்)...§இந்தப் பதிவு படிக்கவும்,புரியும்!

  ReplyDelete
 21. ஜமீலாவுக்காக இல்லேன்னாலும் உன் குழந்தைக்காகவாவது நீ மனசு மாறனும்..////மாறுவாரா,மதன்???????

  ReplyDelete
 22. கடைசியா ஒன்னு சொல்றேன்...நீ இந்த விசயத்தில எது பண்றதாயிருந்தாலும், "அம்மா" இப்போ இருந்தா உனக்கு என்ன சொல்வாங்களோ அதை மட்டும் பண்ணு..It will solve everything.."அம்மா" சந்தோசப் படுறமாதிரி நடந்துக்கோ...////அம்மா பேச்சுக்கு கட்டுப்படுறவன் நல்ல மகன்!

  ReplyDelete
 23. பதில கொஞ்சம் நல்ல விதமா போடச் சொல்லுங்க மதனை

  உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?

  ReplyDelete
 24. வணக்கம் பாஸ்,

  தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கம் எவ்வாறு கிளறப்படுகின்றது என்பதனையும்,
  மதனின் உண்மையான ஆத்மார்த்த பதிலிலாவது ஒரு குடும்பத்தின் வாழ்வு செழிக்காதா என ஏங்கும் அய்யர், செங்கோவி ஆகியோரின் உணர்வுகளைத் தாங்கியும் இந்தப் பதிவு நகர்கின்றது.

  ReplyDelete
 25. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 26. காத்திருக்கிறேன் நண்பரே அடுத்த பாகத்திர்க்காக

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.