Wednesday, September 28, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53


னித மனம் செயல்படும் விதம் விசித்திரமானது. எப்போது எப்படி அது திரும்பும் என்பதே புரிவதில்லை. ஏதாவதொரு சிறு காரணம் கிடைத்தாலும் அதைப் பிடித்துகொண்டு, கீழான நிலைக்கு இறங்க, மனித மனம் தயங்குவதேயில்லை.

ஒரு சொல், ஒரே ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு, வெட்டிகொண்டு வீழ்ந்த குடும்பங்களை நான் அறிவேன். அதே சொல்லும், அதன் மீதான வெறுப்பும் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, சண்டை என்பது வம்சப் பகையாக தொடர்வதைக் கண்டிருக்கிறேன். ஒரே ஒரு சொல் போதும், நம்மை காட்டுமிராண்டிகளாய் மாற்றிவிட என்பதே பலரின் நிலைமை. 

சொல்லில் வாழும் மனிதர்கள், சொல்லிற்காய் சாகும் மனிதர்கள் நாம்.

நம்முடைய நடவடிக்கைகள் எதற்காவது உடனடி ரியாக்சனாய் ஆகிவிட்டாலே, அதனிடம் நாம் தோற்றுவிட்டதாகவே அர்த்தம். அதுவே நம்மை வீழ்த்திவிடும். கடுமையான எதிர்கருத்தையோ, சொல்லையோ சொல்லிவிட்டால், உடனே அதே தரத்திற்கு இறங்கி சண்டையிடுபவர்களே இங்கே அதிகம். அது நம்மை தூண்டுவதற்காகவே சொல்லப்படும் சொல் என்பதுகூட நமக்கு அப்போது புரிவதில்லை.

குடும்பப் பகையின் காரணமாக ஒருவரை வெட்டிக் கொன்று விட்டு, 10 வருடங்கள் வரை ஜெயிலில் கழித்துவிட்டு, வந்தபின்னர் ‘அவன்தான் கூறுகெட்ட தனமா ஏதோ சொல்லிட்டான். அதுக்கு நானும் இப்படிப் பண்ணிட்டனே..எனக்காவது 10 வருச வாழ்க்கை தான் போச்சு. அவனுக்கு மொத்த வாழ்க்கையும் போச்சே’ என்று புலம்பிய மனிதரை நேரில் கண்டிருக்கிறேன். 

நாமும் நமது நடவடிக்கைகளும் பிறராலேயே இங்கு பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றன. எப்போதும் எதற்கேனும், யாருக்கேனும் எதிர்வினையாகவே நமது செயல்பாடுகள் அமைகின்றன. நமக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு விஷயத்தை ஆதரித்துவிட்டால், உடனே அதனை வெறுக்கின்றோம். கூட்டம் சேர்த்து கூக்குரலிடுகின்றோம். எங்காவது அடிபடும்வரை நிதானம் என்பதை நாம் கற்றுக்கொள்வதே இல்லை. 

நம்முடைய சிந்தனையும் செயல்பாடுகளும் நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமேயொழிய, எதற்கும் எதிர்வினையாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு செய்துகொண்டே போனால், வாழ்வது நம் வாழ்வாகவும் இருக்காது, நல்ல வாழ்வாகவும் இருக்காது.

ஜெயபால் இந்த விஷயத்தில் இறங்கியபோதே எனக்கு உறுத்தியது. திருமண பந்தத்தில் வரும் பிரச்சினையில் பெண்ணின் நிலை என்பது எப்போதும் முள்மேல் விழுந்த சேலை தான். அதைக் கையாளுவதற்கான பொறுமையோ, நிதானமோ ஜெயபாலிற்கு நிச்சயம் கிடையாது.

தடால் புடால் என்று இறங்கக்கூடிய விஷயம் அல்ல இது. சமாதானமும் சமரசமும் செய்வது சாதாரண விஷயம் அல்ல. சில நேரங்களில் கோபத்தில் இருதரப்பிலும் வார்த்தைகள் வந்துவிழும். இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வது ஒருநாளும் சமரசத்தை உண்டாக்கிவிடாது.

அவ்வாறு அப்படியே சொல்லப்படும் வார்த்தைகள், அவர்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்யும். அவர்கள் உடனே அதற்கு எதிர்வினையாற்றுவார்கள். பலரின் சிந்தனை/செயல் எல்லாம் எதற்காவது எதிர்வினையாகவே உருவாகின்றன. 

எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும், மற்றவரை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்ட, அதே எண்ணத்தை அடுத்தவர் மேல் திணிப்பதில் பிரியம் கொண்ட மதனுக்கு, ஜெயபாலின் மெயில் பெருத்த மனக்காயத்தை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து அவன் ஜமீலா பற்றி சொல்லிய விஷயங்களும் அவனை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

தொடர்ந்து வந்த எனது/அய்யரின் மெயில்களும் கோபத்தின் உச்சிக்கே அவனைக் கொண்டு சென்றது. ஜமீலா அவனை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டதாகவே நினைத்தான். உடனே எதிர்வினையாற்றத் தொடங்கினான். ஏற்கனவே மனதை தன் பிடியில் வைத்துப் பழக்கமேயில்லாத மதன், இப்போது வார்த்தைகளின் மீதும் பிடி இழந்தான்.

நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மதனின் பதில் மெயில் வந்து சேர்ந்தது. படபடப்புடன் பிரித்து படித்தேன் :

டியர் ஃப்ரெண்ட்ஸ்,

முதலில் அனைவருக்கும் நன்றி.

உங்களுக்கு என்னைக் கேள்வி கேட்க முழு உரிமையும் இருக்கிறது. நான் பண்ண ஒரே தப்பு, உங்ககிட்ட இருந்து பல உண்மைகளை மறைச்சிட்டது தான். நான் ஏன் மறைச்சேன்னா ஜமீலா பேர் கெட்டுப்போகக்கூடாதுன்னு தான். நான் யாரையும் ஏமாத்தலை.

செங்கோவி, உனக்கு ஜெனிஃபர் மேட்டர் நல்லாவே தெரியும். அவள் மோசமான பெண்ணா இருந்தும் நான் அவளைக் கட்டிக்க ரெடியாயிருந்தேன். ஏன்? ஏன்னா அவளை நான்............ நாம யாரையும் ஏமாத்தக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான். அதனால தான் அவளை கழட்டிவிட நான் விரும்பலை. ஆனால் செங்கோவி, உன்னால தான் அவகிட்ட இருந்து தப்பிச்சேன். அதுக்கு நன்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமா நான் ஜமீலாவை கல்யாணம் பண்ணப்போ நீ என் பக்கத்துல இல்லை. 

அய்யர், அன்னைக்கு நீ மட்டும் ஷாக் ஆகலை. அவ டைவர்சின்னு எனக்கும் அப்போத் தான் தெரியும். தெரிஞ்சு நானும் ஷாக் ஆகிட்டேன். இருந்தாலும் விட்டுக்கொடுக்காம நான் பேசினேன். அதை பெரிய விஷயமா நான் எடுத்துக்கலை. நான் நினைச்சேன் அவளைக் கட்டிக்கிட்டவன் தான் தப்பான ஆள்னு. ஆனால் உண்மை தலைகீழா இருந்துச்சு.

என் அப்பா அவளை எப்படில்லாம் பார்த்துக்கிட்டாரு தெரியுமா..ஆனால் அவ எங்கப்பாவை ஒருநாளும் மதிச்சதில்லை. நான் இதுக்கு மேலயும் அவளைப் பத்தி எதுவும் சொல்ல விரும்பலை. 

செங்கோவி, அம்மா இருந்தா என்ன செய்வியோ அதைப் பண்ணுன்னு நீ சொல்றதை நான் ஒத்துக்கறேன். முதல்ல அம்மா இருந்திருந்தா, இந்த மாதிரிப் பெண்ணைக் கட்டிக்க அவங்க ஒத்துக்கிட்டிருக்கவே மாட்டாங்க.

செங்கோவி, பொறுமையா இரு. அவகூட எந்த காண்டாக்ட்டும் வச்சுக்க வேண்டாம். எல்லாரும் இந்தப் பிரச்சினையை இதோட விடுங்க.

இன்னொரு முக்கியமான விஷயம்...அந்தக் குழந்தை எனக்குப் பிறந்தது இல்லை. இதை அவளே ஒத்துக்கிட்டா. அது வேற எவனுக்கோ பிறந்த குழந்தை. என்னோட குழந்தைன்னா, நான் அதுக்கு செலவுக்கு பணம் அனுப்பறது நியாயம். ஆனால் யாருக்கோ பிறந்ததுக்கு நான் ஏன் பணம் கொடுக்கணும்?

என்றும் அன்புடன்
மதன்.

எனது வாழ்க்கையின் மோசமான தருணங்களில் ஒன்றாக அது அமைந்தது. யார் வீட்டிற்கு வந்தாலும் , முகப் சுளிக்காமல் சோறாக்கி பசியாற்றிய அந்தப் பெண்ணை, எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத்திடாத அந்தப் பெண்ணை இவ்வளவு மோசமாக மதன் சொல்வான் என்று கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை. 

மதன் எங்களைத் தவிர்த்து வேறு சில ஆஃபீஸ் நண்பர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தான். அவர்கள் நெதர்லேண்ட் போன்ற இடங்களில் இருந்தார்கள். மதனின் எண்ண ஓட்டத்தை அறிய அவர்களிடமும் நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் சொன்ன பதில் ‘அவனுக்கு இங்கே யோஹன்னா என்ற பெண்ணுடன் எங்கேஜ்மெண்ட் முடிந்துவிட்டது. அவன் ஃபாரினர் ஆகும் கனவில் இருக்கின்றான். இனி அவனுக்கு ஜமீலாவோ இந்தியாவோ ஒரு பொருட்டே அல்ல’.

எனக்கு கோபம் வந்தது. அய்யர் இன்னும் குதித்தான். “எப்படிங்க அந்தப் பொண்ணைப் போய் இப்படிச் சொல்றான்? நாம ஒன்னுமே செய்ய முடியாதா? கண்ணு முன்னாடி ஒருத்தன் ஒரு பொண்ணை ஏமாத்தி குழந்தையைவும் கொடுத்திட்டு ஓடறான். நாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறதா?” என்றான்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

84 comments:

 1. //இன்னொரு முக்கியமான விஷயம்...அந்தக் குழந்தை எனக்குப் பிறந்தது இல்லை. இதை அவளே ஒத்துக்கிட்டா. அது வேற எவனுக்கோ பிறந்த குழந்தை. என்னோட குழந்தைன்னா, நான் அதுக்கு செலவுக்கு பணம் அனுப்பறது நியாயம். ஆனால் யாருக்கோ பிறந்ததுக்கு நான் ஏன் பணம் கொடுக்கணும்?//

  இப்ப புரியுது சார், முன்னாள் நண்பன்னு ஏன் எழுதியிருந்தீங்கன்னு, ஆனாலும் நான் ஒன்னு சொன்னா நீங்க கோவிச்சுக்க கூடாது, உங்க மேலயும் ஒரு சின்ன தப்பு இருக்கு.

  ReplyDelete
 2. //எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும், மற்றவரை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்ட, அதே எண்ணத்தை அடுத்தவர் மேல் திணிப்பதில் பிரியம் கொண்ட மதனுக்கு,//

  இது தெரிஞ்சிண்டும் நீங்க ரிப்லை டு ஆல் பண்ணிருக்கக்கூடாது

  ReplyDelete
 3. லீலைகள் பரபரப்பாகுது, பதில் போட்டு வைங்க, ஆறுதலா நாளைக்கு வந்து படிக்கறான், இப்ப எஸ்கேப்..

  ReplyDelete
 4. //Dr. Butti Paul said...

  இது தெரிஞ்சிண்டும் நீங்க ரிப்லை டு ஆல் பண்ணிருக்கக்கூடாது//

  உண்மை தான்...ஆனாலும் அதில் அவன் திருமணத்திற்கு உதவிய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருந்தார்கள்...ஜெயபால் போன்றோர் கிடையாது.

  ReplyDelete
 5. //Dr. Butti Paul said...
  லீலைகள் பரபரப்பாகுது, பதில் போட்டு வைங்க, ஆறுதலா நாளைக்கு வந்து படிக்கறான், இப்ப எஸ்கேப்..//

  ஓகே..குட் நைட்.

  ReplyDelete
 6. Good narration! feels like watching movie "Speed"

  ReplyDelete
 7. //neovasant said...
  Good narration! feels like watching movie "Speed"//

  நன்றி நியோ.

  ReplyDelete
 8. இன்னிக்கு லீலை!வயசுப் பசங்க என்னெல்லாமோ சொல்லுறாங்க! மதனோ மலருக்கு மலர் தாவும் வண்டு கணக்கா ஆயிட்டு,என்னவெல்லாமோ பெனாத்துராறு.ஐயருக்கு கோவம் பொத்துகிட்டு வருது,செங்கோவி தான் நிதானமா இருக்காரு,பாக்கலாம்!

  ReplyDelete
 9. மவனே மதன் கண்ணு,பொம்பளைங்க பூமா தேவிங்க ராஜா.பொங்கி எழுந்தா நாடு தாங்காது!

  ReplyDelete
 10. சுறுசுறுப்பான தொடர்!நல்ல அறிவுரை ஜெய்பால் பாத்திரம் மூலம் உண்மையில் மதன் நல்லவனா என்றே யூகிக்க முடியவில்லை!

  ReplyDelete
 11. //Yoga.s.FR said... [Reply]
  இன்னிக்கு லீலை!வயசுப் பசங்க என்னெல்லாமோ சொல்லுறாங்க! மதனோ மலருக்கு மலர் தாவும் வண்டு கணக்கா ஆயிட்டு,என்னவெல்லாமோ பெனாத்துராறு.ஐயருக்கு கோவம் பொத்துகிட்டு வருது,செங்கோவி தான் நிதானமா இருக்காரு,பாக்கலாம்!//

  நல்ல விளக்கவுரை.

  ReplyDelete
 12. செங்கோவி..சீக்கிரம் அடுத்த செட் தரவிறக்கம் தயார் பண்ணுங்க...சூடு பிடிக்கிறது...

  ReplyDelete
 13. இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வது ஒருநாளும் சமரசத்தை உண்டாக்கிவிடாது.///உலகில் எதற்கும் பொருந்தும் சத்திய வார்த்தை!

  ReplyDelete
 14. //தனிமரம் said...
  சுறுசுறுப்பான தொடர்!நல்ல அறிவுரை ஜெய்பால் பாத்திரம் மூலம் உண்மையில் மதன் நல்லவனா என்றே யூகிக்க முடியவில்லை!//

  அப்படியெல்லாம் ஈஸியா மனுசங்களை நல்லவன் - கெட்டவன்னு பிரிச்சிட முடியுமா?

  ReplyDelete
 15. // ரெவெரி said...
  செங்கோவி..சீக்கிரம் அடுத்த செட் தரவிறக்கம் தயார் பண்ணுங்க...சூடு பிடிக்கிறது...//

  அப்படியா...நான் மொத்தமா முடிச்சிட்டு போடலாம்னு நினைச்சனே...இப்போ வந்தவரைக்கும் போடவா?

  ReplyDelete
 16. //தனிமரம் said...
  யோகா ஐயாவுக்கு வணக்கம் பின்னால் வாரன் மெயிலில்!//

  ம்ம்ம்ம்ம்ம்...........ம்!

  ReplyDelete
 17. யோவ்...முடிக்காதீங்கய்யா சீக்கிரம்..

  ReplyDelete
 18. மதன் போல் நண்பர்களை ஏமாற்றும் பலர் இருக்கிறார்கள் செங்கோவி ஐயா சமுகத்தில்!

  ReplyDelete
 19. நேத்து வீட்டுக்கு போகும்போது ஒன்னு யோசிச்சேன்....ஆடியோவா விட்டா என்ன? யோசிங்க...

  ReplyDelete
 20. // ரெவெரி said...
  யோவ்...முடிக்காதீங்கய்யா சீக்கிரம்..//

  நானா முடிக்க மாட்டேன்..அதுவா முடிஞ்சா நான் பொறுப்பில்லை.

  ReplyDelete
 21. //தனிமரம் said...
  மதன் போல் நண்பர்களை ஏமாற்றும் பலர் இருக்கிறார்கள் செங்கோவி ஐயா சமுகத்தில்!//

  கமா இல்லாம என்ன சொல்றீங்க?

  செங்கோவி சமூகத்தில், மதன் போல் நண்பர்களை ஏமாற்றும் பலர் இருக்கிறார்களா?

  ReplyDelete
 22. // Yoga.s.FR said...
  இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வது ஒருநாளும் சமரசத்தை உண்டாக்கிவிடாது.///உலகில் எதற்கும் பொருந்தும் சத்திய வார்த்தை!//

  ஆமாம் ஐயா..ஆனால் நம் மக்களுக்கு ‘வாயை’ அடக்குவது ரொம்பக் கஷ்டம்.

  ReplyDelete
 23. நேசன் ஏன் தனிமரம்னு பேரு வச்சாருன்னு இப்ப தான் புரியுது...

  ReplyDelete
 24. //ரெவெரி said...
  நேத்து வீட்டுக்கு போகும்போது ஒன்னு யோசிச்சேன்....ஆடியோவா விட்டா என்ன? யோசிங்க...//

  சும்மா இரும்யா..யாரு தொண்டைத் தன்ணி வத்த கத்துறது..அதை யாரு கேட்கறது? உங்களுக்கு கார்ல போகும்போது டைம் பாஸ்க்கு நானா கிடைச்சேன்?

  ReplyDelete
 25. //ரெவெரி said...
  நேசன் ஏன் தனிமரம்னு பேரு வச்சாருன்னு இப்ப தான் புரியுது...//

  என்ன புரியுது...அது மறைமுக ‘அழைப்பு’ன்னா?

  ReplyDelete
 26. நல்லா யோசிங்க...பின்னாடி மார்க்கெட்டிங் பண்ண உபயோகப்படும்...-:)

  ReplyDelete
 27. நிறைய நண்பர்கள் அவரை ஏமாத்திட்டாங்க போல....-:)

  ReplyDelete
 28. செங்கோவி said...ஆமாம் ஐயா..ஆனால் நம் மக்களுக்கு ‘வாயை’ அடக்குவது ரொம்பக் கஷ்டம்.////ஆமாமாம்,சாப்பாட்டு விஷயத்தில் கூட!ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 29. //Yoga.s.FR said...
  செங்கோவி said...ஆமாம் ஐயா..ஆனால் நம் மக்களுக்கு ‘வாயை’ அடக்குவது ரொம்பக் கஷ்டம்.////ஆமாமாம்,சாப்பாட்டு விஷயத்தில் கூட!ஹி!ஹி!ஹி!//

  சைடு கேப்ல சாப்பிடப் போயாச்சா?

  ReplyDelete
 30. // ரெவெரி said...
  நல்லா யோசிங்க...பின்னாடி மார்க்கெட்டிங் பண்ண உபயோகப்படும்...-:)//

  தமிழன்கிட்ட புக் விக்கிறதை விட, திருட்டு சிடி விக்கலாம்..

  ReplyDelete
 31. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  செங்கோவி said...ஆமாம் ஐயா..ஆனால் நம் மக்களுக்கு ‘வாயை’ அடக்குவது ரொம்பக் கஷ்டம்.////ஆமாமாம்,சாப்பாட்டு விஷயத்தில் கூட!ஹி!ஹி!ஹி!//

  சைடு கேப்ல சாப்பிடப் போயாச்சா?§§§§அது வந்து எட்டரை (பிரான்ஸ்/ஐரோப்பிய நேரம்)மணிலேருந்து காத்துக்கிட்டிருந்துட்டு பொறுக்க முடியாம(பசியத் தான்)சாப்பிட்டு வந்து குந்தினா, நெட்டு மக்கர்!அப்புறம் வந்தா கூட்டம் வந்திடுச்சு.என்னமோ போங்க,உங்களுக்கும் அதே பிராப்ளம் தான் போல?

  ReplyDelete
 32. // Yoga.s.FR said...
  நெட்டு மக்கர்!அப்புறம் வந்தா கூட்டம் வந்திடுச்சு.என்னமோ போங்க,உங்களுக்கும் அதே பிராப்ளம் தான் போல?//


  இங்க ஒரு டெக்னிகல் பிராப்ளம்...12க்கே பப்ளிஷ் பண்ணிட்டேன்..ஆனா போன மாசக்கணக்குல போய் உட்கார்ந்திடுச்சு..நானும் கவனிக்கலை..லேட்டா பார்த்துட்டு சரி பண்ணேன்.

  ReplyDelete
 33. ரெவரி புஸ்தகமா போட ரொம்ப ஆசப்படுறாப்புல தெரியுது.காப்பி ரைட்ட குடுத்து ஒரு அமவுண்ட வாங்கிடுங்க!வித்தா என்ன,சுட்டா என்ன?

  ReplyDelete
 34. // Yoga.s.FR said...
  ரெவரி புஸ்தகமா போட ரொம்ப ஆசப்படுறாப்புல தெரியுது.காப்பி ரைட்ட குடுத்து ஒரு அமவுண்ட வாங்கிடுங்க!வித்தா என்ன,சுட்டா என்ன?//

  அவருக்கு தமிழர்கள் பத்தி இன்னும் புரியலை..ஒருவேளை நம்மை வச்சு ட்ரையல் பார்க்கிறாரோ என்னமோ..

  ReplyDelete
 35. மனித மனம் செயல்படும் விதம் விசித்திரமானது. எப்போது எப்படி அது திரும்பும் என்பதே புரிவதில்லை. ஏதாவதொரு சிறு காரணம் கிடைத்தாலும் அதைப் பிடித்துகொண்டு, கீழான நிலைக்கு இறங்க, மனித மனம் தயங்குவதேயில்லை.////////

  அருமையான தத்துவம்ணே!நிஜமாவே உண்மையான தத்துவம்!

  ReplyDelete
 36. குடும்பப் பகையின் காரணமாக ஒருவரை வெட்டிக் கொன்று விட்டு, 10 வருடங்கள் வரை ஜெயிலில் கழித்துவிட்டு, வந்தபின்னர் ‘அவன்தான் கூறுகெட்ட தனமா ஏதோ சொல்லிட்டான். அதுக்கு நானும் இப்படிப் பண்ணிட்டனே..எனக்காவது 10 வருச வாழ்க்கை தான் போச்சு. அவனுக்கு மொத்த வாழ்க்கையும் போச்சே’ என்று புலம்பிய மனிதரை நேரில் கண்டிருக்கிறேன். ////////

  இதுவும் உண்மையே! சுடலை ஞானம் என்பது இதுதானோ?

  ReplyDelete
 37. எனது வாழ்க்கையின் மோசமான தருணங்களில் ஒன்றாக அது அமைந்தது. யார் வீட்டிற்கு வந்தாலும் , முகப் சுளிக்காமல் சோறாக்கி பசியாற்றிய அந்தப் பெண்ணை, எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத்திடாத அந்தப் பெண்ணை இவ்வளவு மோசமாக மதன் சொல்வான் என்று கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை. ////////

  நாங்களும்!

  ReplyDelete
 38. மதன் பெரிய வில்லபயலா இருக்கானே.போடா டுபுக்கு - ஒரிய படம் இந்திரன் வசூலை மிஞ்சும்

  ReplyDelete
 39. இது வரை பார்த்ததிலே மதனின் உச்சகட்ட கோரமுகம் இன்று வெளிப்பட்டுவிட்டது.

  எங்களுக்கே கோவம் வருது.
  அய்யருக்கும் ,உங்களுக்கும் எப்படி இருந்திருக்கும்?

  ReplyDelete
 40. //சொல்லில் வாழும் மனிதர்கள், சொல்லிற்காய் சாகும் மனிதர்கள் நாம்.
  //


  //நம்முடைய சிந்தனையும் செயல்பாடுகளும் நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமேயொழிய, எதற்கும் எதிர்வினையாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு செய்துகொண்டே போனால், வாழ்வது நம் வாழ்வாகவும் இருக்காது, நல்ல வாழ்வாகவும் இருக்காது//

  அற்புதம்.. அற்புதம்..

  ReplyDelete
 41. வணக்கம் பாஸ் உண்மையில் ஜமீலா அக்காவின் நிலைமையை நினைக்க கவலையாக இருக்கு..மதன் போல் பலர் இந்த சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் இதனால் பலியாவது பல அப்பாவிப்பெண்களின் வாழ்க்கை...இவர்களாக பார்த்து உணரவேண்டும்.

  ReplyDelete
 42. // வினையூக்கி said...
  mmmm //

  ம்ம்ம்ம்ம்.....!

  ReplyDelete
 43. Powder Star - Dr. ஐடியாமணி said...

  //மனித மனம் செயல்படும் விதம் விசித்திரமானது. எப்போது எப்படி அது திரும்பும் என்பதே புரிவதில்லை. ஏதாவதொரு சிறு காரணம் கிடைத்தாலும் அதைப் பிடித்துகொண்டு, கீழான நிலைக்கு இறங்க, மனித மனம் தயங்குவதேயில்லை.////////

  அருமையான தத்துவம்ணே!நிஜமாவே உண்மையான தத்துவம்! //

  யோவ், இப்போத் தான் இது தெரியுமா?

  // இதுவும் உண்மையே! சுடலை ஞானம் என்பது இதுதானோ? //

  ஆமாம் மணி..நம்ம மக்கள் எப்பவும் அப்படித் தானே..

  ReplyDelete
 44. // IlayaDhasan said...
  மதன் பெரிய வில்லபயலா இருக்கானே.//

  ஆமா..உங்க ஒரியப் படத்துல் வில்லன் ஆக்குங்க.

  ReplyDelete
 45. // கோகுல் said...
  இது வரை பார்த்ததிலே மதனின் உச்சகட்ட கோரமுகம் இன்று வெளிப்பட்டுவிட்டது. எங்களுக்கே கோவம் வருது. அய்யருக்கும் ,உங்களுக்கும் எப்படி இருந்திருக்கும்? //

  அய்யரை நான் கட்டுப்படுத்தலேன்னா, ஜெயிலுக்குப் போயிருப்பார்!!

  ReplyDelete
 46. // வெட்டிப்பேச்சு said...
  அற்புதம்.. அற்புதம்..//

  நன்றி சார்.

  ReplyDelete
 47. // K.s.s.Rajh said...
  வணக்கம் பாஸ் உண்மையில் ஜமீலா அக்காவின் நிலைமையை நினைக்க கவலையாக இருக்கு..//

  ஆம், ஜமீலாவின் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.

  ReplyDelete
 48. செங்கோவி said... [Reply] அய்யரை நான் கட்டுப்படுத்தலேன்னா, ஜெயிலுக்குப் போயிருப்பார்!!////ஐயய்யோ!

  ReplyDelete
 49. என்னோட குழந்தைன்னா, நான் அதுக்கு செலவுக்கு பணம் அனுப்பறது நியாயம். ஆனால் யாருக்கோ பிறந்ததுக்கு நான் ஏன் பணம் கொடுக்கணும்?////மூணு லட்சம் நஷ்ட ஈடோ?

  ReplyDelete
 50. எனக்கென்னவோ நீங்க மதன், ஜெனிபர் காதலை பிரிச்சிரிக்க வேண்டாமென்று தோன்றுகிறது.
  நீங்களும் பின்னர் இதையேதான் யோசித்திருப்பீர்கள் என்று ஊகிக்கிறேன்.

  ReplyDelete
 51. அவசர முடிவுகள் அல்லலைத்தரும்.

  ReplyDelete
 52. லீலைகள் பரபரப்பாகுது...

  ReplyDelete
 53. // Yoga.s.FR said...
  என்னோட குழந்தைன்னா, நான் அதுக்கு செலவுக்கு பணம் அனுப்பறது நியாயம். ஆனால் யாருக்கோ பிறந்ததுக்கு நான் ஏன் பணம் கொடுக்கணும்?////மூணு லட்சம் நஷ்ட ஈடோ? //

  ம்ம்...அப்படித் தான் போல..

  ReplyDelete
 54. // Jagannath said...
  எனக்கென்னவோ நீங்க மதன், ஜெனிபர் காதலை பிரிச்சிரிக்க வேண்டாமென்று தோன்றுகிறது....நீங்களும் பின்னர் இதையேதான் யோசித்திருப்பீர்கள் என்று ஊகிக்கிறேன்.//

  முதல் யோசிப்பில் அப்படித்தான் தோன்றியது ஜகன்..மதன் - ஜெனிஃபர் பொருத்தமான ஜோடி தான்.ஆனால் ஜெனிஃபருடன் மட்டும் கடைசி வரை வாழ்ந்திருப்பானா என்ன? அவளையும் ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டு விட்டு, ஜமீலாவிடமோ யோஹன்னாவிடமோ வந்திருக்கலாம்..

  ReplyDelete
 55. // FOOD said...
  அவசர முடிவுகள் அல்லலைத்தரும்.//

  உண்மை தான்..தனக்கு மட்டுமல்லாது தன்னைச் சுற்றி உள்ளோர்க்கும்..

  ReplyDelete
 56. // சே.குமார் said...
  லீலைகள் பரபரப்பாகுது...//

  நன்றி குமார்.

  ReplyDelete
 57. மனம் பற்றி எவ்ளோ டீப்பா சொல்லியிருக்கார் அண்ணன்!

  ReplyDelete
 58. //ஏற்கனவே மனதை தன் பிடியில் வைத்துப் பழக்கமேயில்லாத மதன், இப்போது வார்த்தைகளின் மீதும் பிடி இழந்தான்.//
  அண்ணன் தமிழ்ல பின்னி எடுக்கிறார்!

  ReplyDelete
 59. //யார் வீட்டிற்கு வந்தாலும் , முகப் சுளிக்காமல் சோறாக்கி பசியாற்றிய அந்தப் பெண்ணை, எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத்திடாத அந்தப் பெண்ணை இவ்வளவு மோசமாக மதன் சொல்வான் என்று கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை//

  இதுல ஒரு நல்ல விஷயம் நீங்க, உங்க நண்பர்கள் எல்லாம் அந்தப் பெண்ணைப்பற்றி புரிந்து வைத்திருக்கிறீங்க. பல இடங்களில் நட்பு என்றால் நியாயம், நீதி பார்க்காமல் நண்பனை சப்போர்ட் பண்ணுவது என்றே தவறாகப் புரிந்து, அப்படியே நடந்தும் வருகிறார்கள்!

  ReplyDelete
 60. >>>>>செங்கோவி said... [Reply]
  //ரெவெரி said...
  நேத்து வீட்டுக்கு போகும்போது ஒன்னு யோசிச்சேன்....ஆடியோவா விட்டா என்ன? யோசிங்க...//

  சும்மா இரும்யா..யாரு தொண்டைத் தன்ணி வத்த கத்துறது..அதை யாரு கேட்கறது? உங்களுக்கு கார்ல போகும்போது டைம் பாஸ்க்கு நானா கிடைச்சேன்?<<<<

  ஆமா அண்ணே உங்க காந்தர்வக் குரலில அதைக்கேக்கணும்னு ஆவலா இருக்குண்ணே!
  ஏற்பாடு பண்ணுங்க!

  அண்ணனோட எழுத்தே இப்பிடின்னா சொந்தக்குரல்ல ஏற்ற இறக்கத்தோட கேட்டா எப்புடி இருக்கும்?

  ReplyDelete
 61. நண்பர்களுக்குக் கோபம் வருவது நியாயமே.

  ReplyDelete
 62. நல்ல மனோதத்துவ கருத்துக்களை தொடர்ல சரியான இடங்கள்ல பயன்படுத்துறீங்க....... கதை காலகட்டம் சமகாலத்துக்கு நெருங்கீடுச்சுன்னு நினைக்கிறேன்.....

  ReplyDelete
 63. ///////ஜீ... said... [Reply]
  >>>>>செங்கோவி said... [Reply]
  //ரெவெரி said...
  நேத்து வீட்டுக்கு போகும்போது ஒன்னு யோசிச்சேன்....ஆடியோவா விட்டா என்ன? யோசிங்க...//

  சும்மா இரும்யா..யாரு தொண்டைத் தன்ணி வத்த கத்துறது..அதை யாரு கேட்கறது? உங்களுக்கு கார்ல போகும்போது டைம் பாஸ்க்கு நானா கிடைச்சேன்?<<<<

  ஆமா அண்ணே உங்க காந்தர்வக் குரலில அதைக்கேக்கணும்னு ஆவலா இருக்குண்ணே!
  ஏற்பாடு பண்ணுங்க!

  அண்ணனோட எழுத்தே இப்பிடின்னா சொந்தக்குரல்ல ஏற்ற இறக்கத்தோட கேட்டா எப்புடி இருக்கும்?////////

  நான் அண்ணனுக்கு ஒரு வெள்ள குர்தாவ மாட்டிவிட்டு உலாத்திக்கிட்டே கத சொல்ற மாதிரி வீடியோவாவே எடுத்திட்டா என்னன்னு யோசிக்கிறேன்.....

  ReplyDelete
 64. இனிய மாலை வணக்கம் உறவுகளே,

  ReplyDelete
 65. வாழ்வியலைத் தாங்கி பாகம் 53 இன் அரைவாசிப் பகுதி மனதினுள் பல நல்ல சிந்தனைகளை விதைத்தவாறு செல்லுகின்றது.

  ReplyDelete
 66. மதனின் இன்னோர் முகத்தினைப் படம் பிடித்தவாறு கதை நகர்கின்றது.

  அடுத்த பாகத்தில் மீட் பண்றேன் பாஸ்..

  ReplyDelete
 67. நிரூபன் said...

  மதனின் இன்னோர் முகத்தினைப் படம் பிடித்தவாறு கதை நகர்கின்றது.

  அடுத்த பாகத்தில் மீட் பண்றேன் பாஸ்.////அப்போ இன்னிக்கு "நானா யோசிச்சேன்" படிக்க வரமாட்டீங்களா?

  ReplyDelete
 68. ஜீ... said...

  // அண்ணன் தமிழ்ல பின்னி எடுக்கிறார்! //

  தமிழ் என்ன சடையா? பின்னவும் எடுக்கவும்.....

  //பல இடங்களில் நட்பு என்றால் நியாயம், நீதி பார்க்காமல் நண்பனை சப்போர்ட் பண்ணுவது என்றே தவறாகப் புரிந்து, அப்படியே நடந்தும் வருகிறார்கள்! //

  அப்படியும் சிலர் மதனுக்கு சப்போர்ட் செய்தார்கள் ஜீ...

  // ஆமா அண்ணே உங்க காந்தர்வக் குரலில அதைக்கேக்கணும்னு ஆவலா இருக்குண்ணே!..ஏற்பாடு பண்ணுங்க! //

  தம்பி, இது நியாயமா..அண்ணனை நீங்களே ஓட்டலாமா?

  // அண்ணனோட எழுத்தே இப்பிடின்னா சொந்தக்குரல்ல ஏற்ற இறக்கத்தோட கேட்டா எப்புடி இருக்கும்? //

  நாராசமாய் இருக்கும்..

  ReplyDelete
 69. // சென்னை பித்தன் said...
  நண்பர்களுக்குக் கோபம் வருவது நியாயமே.//

  ஆமாம் ஐயா.

  ReplyDelete
 70. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //நல்ல மனோதத்துவ கருத்துக்களை தொடர்ல சரியான இடங்கள்ல பயன்படுத்துறீங்க....... கதை காலகட்டம் சமகாலத்துக்கு நெருங்கீடுச்சுன்னு நினைக்கிறேன்.....//

  ஆமாம்ணே..

  // நான் அண்ணனுக்கு ஒரு வெள்ள குர்தாவ மாட்டிவிட்டு உலாத்திக்கிட்டே கத சொல்ற மாதிரி வீடியோவாவே எடுத்திட்டா என்னன்னு யோசிக்கிறேன்.....//

  ஆஹா..ஒன்னு கூடிட்டாங்களே...ஏண்ணே, பேக் க்ரவுண்ட்ல வெள்ளை உடை தேவதைகள் கிடையாதா?

  ReplyDelete
 71. நிரூபன் said...
  //இனிய மாலை வணக்கம் உறவுகளே,//

  வணக்கம் நிரூ.

  //அடுத்த பாகத்தில் மீட் பண்றேன் பாஸ்..//

  யோகா ஐயா கேள்விக்கு பதில் சொல்லும்யா.

  ReplyDelete
 72. // Yoga.s.FR said...
  நிரூபன் said...

  அப்போ இன்னிக்கு "நானா யோசிச்சேன்" படிக்க வரமாட்டீங்களா? //

  படிக்க வர மாட்டாரு..பார்க்க வருவாரு..இன்னிக்கு நைட் பதிவை பெரியவங்க படிச்சாப் போதும் ஐயா.

  ReplyDelete
 73. Sengovi,

  Your writing style is too good in this part.Will c your villan charector in next part .
  I hope u + Iyer maintain a true friendship with Madan so only u both sad about Madan's family.
  Madan's word not surprise about his wife + kid because nowadays peoples show they are good to others .So they can put their mistakes above their close circle

  ReplyDelete
 74. //Tirupurvalu said...
  Sengovi,

  Your writing style is too good in this part.Will c your villan charector in next part .//

  ஹா..ஹா..பாருங்கள் வாலு.

  ReplyDelete
 75. மாம்ஸ், தாமத பின்னூட்டதிற்கு மன்னிக்கவும். மதனின் முகம் இன்று எல்லோருக்கும் அவரின் கடிதம் மூலமாக காட்டி விட்டீர்கள். அடுத்த பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்றே நினைக்கிறன்.

  ReplyDelete
 76. விறுவிறுப்பு கூடுகிறது நண்பரே

  தொடருங்கள் தொடர்கிறேன் அருமை வாசிக்க

  ReplyDelete
 77. என்ன நண்பரே இன்ட்லியில் ஒட்டு போட முடியல ,என்ன செய்யறது ?

  ReplyDelete
 78. செங்கோவி said..படிக்க வர மாட்டாரு..பார்க்க வருவாரு..இன்னிக்கு நைட் பதிவை பெரியவங்க படிச்சாப் போதும் ஐயா.///அப்புடீன்னா,இன்னிக்குப் பதிவு 25 பிளஸ்சோ?ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 79. // தமிழ்வாசி - Prakash said... [Reply]
  மாம்ஸ், தாமத பின்னூட்டதிற்கு மன்னிக்கவும். //

  மன்னிச்சாச்சு..பொழைச்சுப் போங்க.

  ReplyDelete
 80. // M.R said... [Reply]
  என்ன நண்பரே இன்ட்லியில் ஒட்டு போட முடியல ,என்ன செய்யறது ? //

  ஒன்னும் செய்ய வேண்டாம்..பரவாயில்லை...சரி பண்ண முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 81. // Yoga.s.FR said... [Reply]
  செங்கோவி said..படிக்க வர மாட்டாரு..பார்க்க வருவாரு..இன்னிக்கு நைட் பதிவை பெரியவங்க படிச்சாப் போதும் ஐயா.///அப்புடீன்னா,இன்னிக்குப் பதிவு 25 பிளஸ்சோ?ஹி!ஹி!ஹி!
  //

  ஐயா, பெரியவங்கன்னா 60+..அதாவது நீங்க படிக்கலாம்.

  ReplyDelete
 82. டியர் செங்கோவி , பணம் , பெண் ஒரு மனிதனை யோசிக்க விடாது. படிக்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி Gana

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.