Thursday, September 1, 2011

ஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்)


டிஸ்கி : இந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம் :

நல்லவங்க கிளம்பலாம்!
நெஞ்சைத் தொட்ட வரிகள்:

கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி......ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி...ச்சூ ச்சூ மாரி 
ச்சூ ச்சூ மாரி....ச்சூ ச்சூ மாரி 

(பூ-வில் இருந்து வாசம்மிகு வரிகள்)
பின்னோட்டம்:
கமெண்ட் போடுவது எப்படின்னு ஒரு பதிவு போட்டாலும் போட்டேன்..நம்ம மக்களை அது ரொம்ப பாதிச்சிருச்சு போலிருக்கே..ஒருத்தரு ‘நான் பதிவுலகை விட்டுப் போறேன்’ன்னு ஃபீலிங்கா பதிவு போட்டிருக்காரு..அதுக்கு ’நம்ம’ புள்ளையாண்டன் ஒருத்தர் போட்ட கமெண்ட் இது :

XXX said...
நல்ல பதிவு....

வாழ்த்துக்கள்...!

என்ன அநியாயம் பாருங்கய்யா..ஏதோ அந்த பதிவரு ஃபீலிங்ஸ்ல இருந்ததால விட்டுட்டாங்க..இல்லேன்னா கமெண்ட் போட்ட ஆளை மட்டுமில்லாம கமெண்ட் போடச் சொல்லிக்கொடுத்த நம்மளையும் கும்மி இருப்பாங்களே..

இந்த கமெண்ட்டரு அன்னிக்கு என் பதிவுல ஆரம்பிச்சு, நான் பார்த்த 10 இடத்துலயும் இதே கமெண்ட்டு...என்னமோ ராசாக்களா..தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா..தயவு செஞ்சு இப்படில்லாம் பண்ணாதீங்க!

கருணாநிதி செஞ்ச கூத்து :
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்யணும்னு நாம எல்லாம் கேட்டு, ஆண்டவன் புண்ணியத்துல இப்போ ஓரளவு நல்ல செய்தி வந்திடுச்சு. சீக்கிரமே முழு நல்ல செய்தியும் வந்திரும்னு சொல்றாங்க. இந்த மேட்டர்லயும் கருணாநிதி ஒரு கூத்து பண்ணிப்புட்டார்..

அதென்னமோ தெரியலை..ஈழப்பிரச்சினைன்னு வந்துட்டா வலிய வாயைத் திறந்து காமெடி பீஸ் ஆகிடுதாரு தலைவரு..ராஜீவ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, அந்த 3 பேரையும் மன்னிச்சு விட்ருப்பாராம்..கேட்ட உடனே டரியல் ஆகிட்டேன்..அந்த ராஜீவ் செத்ததுக்குத் தானே இவங்களை உள்ள வச்சிருக்காங்க..அவரு சாகலைன்னா இந்த கேஸே இல்லையே..அப்புறம் அந்தாளு என்ன மன்னிக்கிறது..

ஒருவேளை நடக்கிறது மகாத்மா காந்தி கொலை வழக்குன்னு நினைச்சுட்டாரோ...யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா..இதுக்கு கேப்டனே பரவாயில்லையே!

காஃபி போட்ட படலம்:

எப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல..

பின்னே, இத்தனை நாளா என் பதிவுகள்ல இருக்குற ஹன்சிகா., நமீதா ஃபோட்டோவை எடுத்தாத்தான் பெண்ணியவாதி ஆக முடியும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்..(அடடா..இந்த வரிக்கே ஹன்சி ஸ்டில்லு போடலாமே..)
இப்போ அதெல்லாம் வேண்டாம், அவங்களை தூக்காமலேயே..அதாவது அவங்க ஸ்டில்லை தூக்காமலேயே பெண்ணியவாதி ஆகமுடியும்னு தெரியவும், இந்த நல்ல காரியத்தை உடனே செய்யறதுன்னு முடிவு பண்ணேன். 

அது ஈவ்னிங் காஃபி போடற நேரம். அதனால தங்கமணிகிட்ட “இன்னிக்கு நாந்தான் காஃபி போடுவேன். நீ சமையல் கட்டுப் பக்கமே வரக்கூடாது”ன்னு சொல்லி ஹால்ல உட்கார வச்சுட்டு, கிச்சன்ல பூந்தேன். அது ‘இந்த மனுசன் நல்லாத்தானே இருந்தாரு..இன்னிக்கு என்னாச்சு’ன்னு குழம்பிப்போய் ஹால்ல உட்கார்ந்துட்டாங்க.

நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..) அடுப்புல வச்சி, பாலை ஊத்திட்டு, அடுப்பை பத்தவச்சேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. முதல்ல, தங்கமணிகிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம். அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம். முடிஞ்சா தக்காளி விக்கி மாதிரி நான் இன்னிக்கு ரொம்ப பிஸின்னும் பந்தா காட்டிக்கலாம்...டேமேஜான பேரையும் சரி பண்ணிடலாம்னு பல திட்டங்கள் மனசுல.

அப்புறம் தான் பார்க்குறேன், பால் ஒரு மாதிரி திரிஞ்சு போச்சு. என்னடா இது, எக்ஸ்பைரி ஆன பாலான்னு பார்த்தா, அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருவேளை பால் சட்டில ஏதாவது இருந்திருக்குமோன்னு டவுட் வந்துச்சு. சரின்னு, திரிஞ்ச பாலை கீழ கொட்டிட்டு, மறுபடி நல்லா பாத்திரத்தைக் கழுவினேன்.

ஹால்ல இருந்து ‘இன்னும் முடியலியா’ன்னு சவுண்ட் வந்துச்சு. ‘இதோ ரெடி..ஒரே நிமிசம்’னு சொல்லிட்டு, மறுபடி பாலை ஊத்தி அடுப்பை பத்தவச்சேன். ச்சே..பெண்ணியவாதி ஆகறதுன்னா இவ்வளவு கஷ்டமா-ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே அடுப்பைப் பார்த்தா..அடங்கொக்கமக்கா...பால் மறுபடியும் திரிஞ்சு போச்சு!

’நம்மளே திருந்த நினைச்சாலும் விதி விட மாட்டேங்குதே..எப்படி இது’-ன்னு கன்ஃபியூஸ் ஆகி நிக்கும்போது, தங்கமணி பொறுமை இழந்து உள்ள வந்துட்டாங்க.

‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.

நான் பரிதாபமா ‘இப்பிடி ஆயிடுச்சு..பாரு’ன்னு திரிஞ்ச பாலை காட்டிட்டு ”என்ன பிரச்சினை? ஏன் இப்பிடி ஆகுது”ன்னு கேட்டேன்.

அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.

’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.இப்படி கேள்விப்பட்டதே இல்லையே-ன்னு யோசிக்கும்போதே

“உங்களுக்கு எதுக்கு இந்த வேலை...ஏதாவது பதிவு எழுதுனமா..கமெண்ட்டுக்கு மிக்க நன்றின்னு பதில் போட்டமான்னு இல்லாம இது தேவையா..”-ன்னு கிச்சன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க.

நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..

காஃபியில்
கலந்து
கொடுத்தேன் - என்
காதலை!

-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே.

பாலும் வெள்ளையத்தான் இருக்கு..தயிரும் வெள்ளையாத்தான் இருக்கு..ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தா, ரெண்டுமே குழுகுழுன்னு தான் இருக்கு..நான் என்ன செய்ய...எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே..

தீவிரமா யோசிக்கிறது :
திராட்சைப் பழம், கொய்யாப் பழம், மாம்பழம்னு எல்லாப் பழத்தையும் உருண்டையாப் படைச்ச ஆண்டவன், வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்? இத்துனூண்டு இலந்தைப் பழத்துல ஆரம்பிச்சு அம்மாம்பெரிய பலாப்பழம் வரைக்கும் எல்லாம் உருண்டையா இருக்கு..ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..ஒய்..ஹ்யூம்..ஏன்..ஏன்யா?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

138 comments:

 1. படிச்சுடுவோம்!

  ReplyDelete
 2. // Yoga.s.FR said...
  படிச்சுடுவோம்!//

  இது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே?

  ReplyDelete
 3. வா.....................ழைப்பழம் இல்லியா?அதான்...........................!

  ReplyDelete
 4. செங்கோவி said...

  // Yoga.s.FR said...
  படிச்சுடுவோம்!//

  இது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே?/////தண்ணியில நின்னு(தவம்)பண்ணலியே?

  ReplyDelete
 5. // Yoga.s.FR said...
  வா.....................ழைப்பழம் இல்லியா?அதான்...........................!//

  ஆஹா..அருமையான பதில்..இப்படி ஒரு பதிலை நானே எதிர்பார்க்கவில்லை.

  ReplyDelete
 6. //
  Yoga.s.FR said...

  இது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே?/////தண்ணியில நின்னு(தவம்)பண்ணலியே?//

  எனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.

  ReplyDelete
 7. ‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.////கிச்சினுக்கெல்லாம் ஏங்க போறீங்க?பெண்ணாதிக்க வாதியா மாறணும்னா என் கிட்ட கேட்டிருக்கலாமே?கைவசம் ஐடியா நெறைய இருக்கே?அது வந்து எப்புடீன்னா,இன்னிக்கு சமையல் சூப்பரு அப்புடீன்னு யாராவது பிரெண்டுங்க கூட பேசுறாப்பில(தள்ளி நின்னு)நம்பரே போடாம மொபைல்ல பேசணும்!இது இப்போதைக்கு போதும்னு நெனைக்கிறேன்!

  ReplyDelete
 8. //Yoga.s.FR said...
  ‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.////கிச்சினுக்கெல்லாம் ஏங்க போறீங்க?பெண்ணாதிக்க வாதியா மாறணும்னா என் கிட்ட கேட்டிருக்கலாமே?கைவசம் ஐடியா நெறைய இருக்கே?அது வந்து எப்புடீன்னா,இன்னிக்கு சமையல் சூப்பரு அப்புடீன்னு யாராவது பிரெண்டுங்க கூட பேசுறாப்பில(தள்ளி நின்னு)நம்பரே போடாம மொபைல்ல பேசணும்!இது இப்போதைக்கு போதும்னு நெனைக்கிறேன்!//

  இதுக்குத் தான் அனுபவஸ்தர் வேணும்கிறது..அந்த நேரம் கால் வராதவரைக்கும் ஓகே தான்.

  ReplyDelete
 9. செங்கோவி said...

  //
  Yoga.s.FR said...

  இது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே?/////தண்ணியில நின்னு(தவம்)பண்ணலியே?//

  எனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.§§§§நான் நெசமாவே,ஆறு,குளம்,குட்டை,கேணி யை தான் சொன்னேன்!

  ReplyDelete
 10. // Yoga.s.FR said...

  எனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.§§§§நான் நெசமாவே,ஆறு,குளம்,குட்டை,கேணி யை தான் சொன்னேன்!//

  தயவுசெஞ்சு குட்டைங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க பஸ்..அதைக் கேட்டா எனக்கு குஷ்பூ ஞாபகம் வந்திடும்.

  ReplyDelete
 11. கூட்டத்தயே காணம்?மங்காத்தா பாக்க (ஆட) போயிட்டாங்களோ?

  ReplyDelete
 12. //Yoga.s.FR said...
  கூட்டத்தயே காணம்?மங்காத்தா பாக்க (ஆட) போயிட்டாங்களோ?//

  ரம்ஜான் லீவுல்ல..

  ReplyDelete
 13. செங்கோவி said...

  // Yoga.s.FR said...

  எனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.§§§§நான் நெசமாவே,ஆறு,குளம்,குட்டை,கேணி யை தான் சொன்னேன்!//

  தயவுசெஞ்சு குட்டைங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க பஸ்..அதைக் கேட்டா எனக்கு குஷ்பூ ஞாபகம் வந்திடும்.//////அது நல்ல "பூ" தானே?கொண்டையில் தாழம்பூ அப்புடீன்னு தொடங்குற பாட்டொண்ணு கூட இருக்குதே?

  ReplyDelete
 14. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  கூட்டத்தயே காணம்?மங்காத்தா பாக்க (ஆட) போயிட்டாங்களோ?//

  ரம்ஜான் லீவுல்ல..§§§§ஆமா,அது வேற இல்ல?

  ReplyDelete
 15. //
  Yoga.s.FR said...
  செங்கோவி said...
  தயவுசெஞ்சு குட்டைங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க பஸ்..அதைக் கேட்டா எனக்கு குஷ்பூ ஞாபகம் வந்திடும்.//////அது நல்ல "பூ" தானே?//

  ஆமா, இப்போல்லாம் நல்ல பூ எங்க சார் கிடைக்கு...

  ReplyDelete
 16. நல்லவங்க கிளம்பலாம்!// அப்போ நான் படிக்க கூடாதா?

  ReplyDelete
 17. நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..)/////எனக்கு இன்னொரு "பேர்" இருக்குங்கிற மாதிரி,பால் சட்டிக்கு கூட இருக்கா,சொல்லவேயில்ல?

  ReplyDelete
 18. நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே// வஞ்ச புகழ்ச்சி அணி கேள்விப்பட்டதில்லையோ? அதான் இது...

  ReplyDelete
 19. //Heart Rider said...
  நல்லவங்க கிளம்பலாம்!// அப்போ நான் படிக்க கூடாதா?//

  இதய ஓட்டி, உங்க முகத்தைப் பார்த்தா பால் வடியுதே..பரவாயில்லை படிங்க.

  ReplyDelete
 20. // Yoga.s.FR said...
  நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..)/////எனக்கு இன்னொரு "பேர்" இருக்குங்கிற மாதிரி,பால் சட்டிக்கு கூட இருக்கா,சொல்லவேயில்ல?//

  இல்லை பாஸ்..அண்டா குண்டா மாதிரி என்னமோ பேரு வரும்..

  ReplyDelete
 21. //
  Heart Rider said...
  நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே// வஞ்ச புகழ்ச்சி அணி கேள்விப்பட்டதில்லையோ? அதான் இது...//

  ஏன்யா, ஆறுதலா ஏதாவது சொல்லலாம்ல..

  ReplyDelete
 22. நல்ல பதிவு....


  வாழ்த்துக்கள்...!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

  ReplyDelete
 23. ஒருவேளை நடக்கிறது மகாத்மா காந்தி கொலை வழக்குன்னு நினைச்சுட்டாரோ...யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா..இதுக்கு கேப்டனே பரவாயில்லையே!////அப்புறம் "அவரு" இந்த "டைட்டானிக்" கப்பலோட காப்டன் நான் தான்னு சொல்லிடப் போறாரு!

  ReplyDelete
 24. நாங்க நல்லவங்கன்னு யாரு சொன்னது!
  அப்படியெல்லாம் சொல்லி எண்கள துரத்த முடியாது

  ReplyDelete
 25. //கோகுல் said...
  நாங்க நல்லவங்கன்னு யாரு சொன்னது!
  அப்படியெல்லாம் சொல்லி எண்கள துரத்த முடியாது//

  இந்த வெள்ளை உள்ளமே நீங்க நல்லவங்கன்னு சொல்லுதே..

  ReplyDelete
 26. //ரெவெரி said...
  நல்ல பதிவு....


  வாழ்த்துக்கள்...!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........//

  ஹா..ஹா...

  ReplyDelete
 27. வணக்கம் சகோதரம்,

  //ஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்).//

  தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கே.

  ReplyDelete
 28. //நிரூபன் said...
  வணக்கம் சகோதரம்,

  //ஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்).//

  தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கே.//

  காஃபி போட்டதுல என்னய்யா மார்க்கம்?

  ReplyDelete
 29. இந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம்//


  அதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,

  ReplyDelete
 30. கடுகு மிளகு திப்பிலி
  கருங்குளத்தான் போக்கிரி......ச்சூ ச்சூ மாரி
  கொல்லைப்பக்கம் போகாதே
  கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி...ச்சூ ச்சூ மாரி
  ச்சூ ச்சூ மாரி....ச்சூ ச்சூ மாரி //

  அவ்......பள்ளிக்கூட நெனைப்பு வந்திட்டுப் போல இருக்கே.

  ReplyDelete
 31. பின்னோட்டம்://

  அவ்.......என்ன கொடுமை சரவணா.

  ReplyDelete
 32. //நிரூபன் said...
  இந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம்//


  அதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,//

  ஆமா நிரூ..கலையுமா..கலையாதா..

  ReplyDelete
 33. //நிரூபன் said...
  பின்னோட்டம்://

  அவ்.......என்ன கொடுமை சரவணா.
  //

  ஆமா..அவர் போட்டது பின் ஓட்டம் தானே..

  ReplyDelete
 34. இந்த கமெண்ட்டரு அன்னிக்கு என் பதிவுல ஆரம்பிச்சு, நான் பார்த்த 10 இடத்துலயும் இதே கமெண்ட்டு...என்னமோ ராசாக்களா..தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா..தயவு செஞ்சு இப்படில்லாம் பண்ணாதீங்க!//

  யாரய்யா அந்த நொந்த பதிவரு?

  ReplyDelete
 35. அதென்னமோ தெரியலை..ஈழப்பிரச்சினைன்னு வந்துட்டா வலிய வாயைத் திறந்து காமெடி பீஸ் ஆகிடுதாரு தலைவரு..ராஜீவ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, அந்த 3 பேரையும் மன்னிச்சு விட்ருப்பாராம்..//

  ஆகா...தாத்தா வயசு போன காலத்தில ரொம்பத் தான் உளறுரார் போல இருக்கே.

  ReplyDelete
 36. //நிரூபன் said...
  இந்த கமெண்ட்டரு அன்னிக்கு என் பதிவுல ஆரம்பிச்சு, நான் பார்த்த 10 இடத்துலயும் இதே கமெண்ட்டு...என்னமோ ராசாக்களா..தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா..தயவு செஞ்சு இப்படில்லாம் பண்ணாதீங்க!//

  யாரய்யா அந்த நொந்த பதிவரு?//

  விடுங்க..பாவம்.

  ReplyDelete
 37. //
  NAAI-NAKKS said...
  HI......HI.....HI.....//

  சூப்பர் பேருய்யா உங்களுது..

  ReplyDelete
 38. .தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா.//

  மறக்க முடியுமா?அந்த காவியத்தை!

  ReplyDelete
 39. //கோகுல் said...
  .தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா.//

  மறக்க முடியுமா?அந்த காவியத்தை!//

  அய்யோ, விட மாட்டேங்கிறாங்களே..

  ReplyDelete
 40. எப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன்.//

  அவ்....நீங்க தத்துவ ஞானியாகப் போறீங்களா பாஸ்?

  ReplyDelete
 41. காஃபியில்கலந்துகொடுத்தேன் - என்காதலை!-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே./////இப்ப கூட ப்ளூ கலர்ல தான் எழுதியிருக்கிங்க!

  ReplyDelete
 42. //Yoga.s.FR said...
  காஃபியில்கலந்துகொடுத்தேன் - என்காதலை!-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே./////இப்ப கூட ப்ளூ கலர்ல தான் எழுதியிருக்கிங்க!//

  ஆமா..ஆனா அருமைக் கமெண்ட் எங்கே?

  ReplyDelete
 43. அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம்.//

  வெள்ளிக்கிழமை நம்ம சிபி சமையல் பதிவு போடுவாரு.நீங்க அவர தாக்குரீங்களா?//
  கமெண்டு பதிவோட எபக்டு! நாங்க மறக்க மாட்டோம்ல!

  ReplyDelete
 44. போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல..//

  ஆகா யாரோ ஒருத்தன் சொந்த செலவிலை சூனியம் வைச்சுக்க சொல்லிக் கொடுத்திட்டாரா?

  ReplyDelete
 45. செங்கோவி said...ஆமா..ஆனா அருமைக் கமெண்ட் எங்கே?////அம்புட்டுத் தானே?பின்னாடியே வருது,பாருங்க!

  ReplyDelete
 46. அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம்.//

  யாருக்கோ இந்தக் குத்துக் குத்துறீங்களே பாஸ்.

  அவ்,,,,,,,,,,,

  ReplyDelete
 47. ஆண்டவன் வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்?

  ஏன்னயா உமக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ...? யாரவது வாயகக்கிளறி வாங்கி கட்டிக்க போறீங்க பாருங்க ...!

  ReplyDelete
 48. //கோகுல் said...
  அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம்.//

  வெள்ளிக்கிழமை நம்ம சிபி சமையல் பதிவு போடுவாரு.நீங்க அவர தாக்குரீங்களா?//
  கமெண்டு பதிவோட எபக்டு! நாங்க மறக்க மாட்டோம்ல!//

  அடச் சண்டாளங்களா..ஒரு முடிவோட தான் இருக்கீங்களா..

  ReplyDelete
 49. முடிஞ்சா தக்காளி விக்கி மாதிரி நான் இன்னிக்கு ரொம்ப பிஸின்னும் பந்தா காட்டிக்கலாம்..//

  அவ்...அப்போ தக்காளி தான் பிஸி என்று சொல்லி, வீட்டில் சமைக்கிறாரா..

  எனக்கு இம்புட்டு நாளா இது தெரியாமப் போச்சே;-)))))))))))))

  ReplyDelete
 50. //வெட்டிப்பையன்...! said...
  ஆண்டவன் வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்?

  ஏன்னயா உமக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ...? யாரவது வாயகக்கிளறி வாங்கி கட்டிக்க போறீங்க பாருங்க ...!//

  என் கேள்வி நியாயமான கேள்வி தானே..இதுல வாங்கவும் கட்டவும் என்ன இருக்கு?

  ReplyDelete
 51. அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//

  அடிங்...கொய்யலா...நல்ல வேலை நீங்க yoghurt ஐ பால் என்று நெனைச்சு காய்ச்ச தொடங்கலை?

  ReplyDelete
 52. அருமையான "நானா யோசிச்சேன்"!அதுலயும் பெண்ணாதிக்க வாதியா மாறணும்னு மனசுல நினைச்சீங்க பாருங்க,அதுவே ஒரு மாற்றத்தோட அறிகுறி தான்!நீங்க தான் இந்த ஆணாதிக்க வாதிங்களுக்கெல்லாம் ஒரு "முன்னோடி"யா இருக்கணும்!வாழ்க,வளமுடன்!!!!!

  ReplyDelete
 53. //நிரூபன் said...
  முடிஞ்சா தக்காளி விக்கி மாதிரி நான் இன்னிக்கு ரொம்ப பிஸின்னும் பந்தா காட்டிக்கலாம்..//

  அவ்...அப்போ தக்காளி தான் பிஸி என்று சொல்லி, வீட்டில் சமைக்கிறாரா..

  எனக்கு இம்புட்டு நாளா இது தெரியாமப் போச்சே;-)))))))))))))//

  சண்டே அன்னிக்கு பதிவுலயே சொல்றாரே..படிக்கலியா..

  ஓ..நீங்களும் ‘அப்படி’த் தானா.....ஓகே!

  ReplyDelete
 54. நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..//

  ஆகா.....இது ஊசிக் குத்தா இல்லே இருக்கு.

  ReplyDelete
 55. //
  Yoga.s.FR said...
  அருமையான "நானா யோசிச்சேன்"!அதுலயும் பெண்ணாதிக்க வாதியா மாறணும்னு மனசுல நினைச்சீங்க பாருங்க,அதுவே ஒரு மாற்றத்தோட அறிகுறி தான்!நீங்க தான் இந்த ஆணாதிக்க வாதிங்களுக்கெல்லாம் ஒரு "முன்னோடி"யா இருக்கணும்!வாழ்க,வளமுடன்!!!!!//

  அப்பாடி..இப்போ தான் பாஸ் சந்தோசமா இருக்கு..இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கே!

  ReplyDelete
 56. காஃபியில்
  கலந்து
  கொடுத்தேன் - என்
  காதலை!//

  அவ்...என்ன தயிரை பால் என்று நெனைச்சு காய்ச்சி கொடுத்தீங்களே, அதுவா?

  ReplyDelete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
 58. /நிரூபன் said...
  அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//

  அடிங்...கொய்யலா...நல்ல வேலை நீங்க yoghurt ஐ பால் என்று நெனைச்சு காய்ச்ச தொடங்கலை?//

  அதோட பேரு வெளில தெளிவா போட்டிருக்குமே..

  ReplyDelete
 59. நிரூபன் said...

  அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//

  அடிங்...கொய்யலா...நல்ல வேலை நீங்க yoghurt ஐ பால் என்று நெனைச்சு காய்ச்ச தொடங்கலை!/////யோவ்,அது தான்யா,இது!இங்கிலீசுபிசுவில அது(yoghurt) பேரு அது தான்யா!

  ReplyDelete
 60. வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்? //

  ஸப்பா....இது வேறையா...ஐயோ...ஐயோ...

  அது வாழப் பழத்துக்கிட்டத் தான் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்.

  ReplyDelete
 61. அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//

  அடங்கொன்னியா!நல்லவேளை!பினாயில ஊத்தி அடுப்பில வைக்காம போனீரே!

  ReplyDelete
 62. அம்மாம்பெரிய பலாப்பழம் வரைக்கும் எல்லாம் உருண்டையா இருக்கு..ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..ஒய்..ஹ்யூம்..ஏன்..ஏன்யா//

  அவ்....எல்லாப் பழமும் உருண்டையா இருப்பது ஓக்கே...
  ஆனால்.............இந்த நமீதாவோட போட்டோ மட்டும் ஏன் சிட்டுவேசன் சாங்ஸ் போல முடிவுக்கு ஏற்ற மாதிரி வந்திருக்கு?

  ReplyDelete
 63. // நிரூபன் said...
  வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்? //

  ஸப்பா....இது வேறையா...ஐயோ...ஐயோ...

  அது வாழப் பழத்துக்கிட்டத் தான் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்.//

  ஏன் படிக்கிறவங்கள்லாம் தெரிக்கிறாங்க..அப்படி என்ன கேட்டுட்டோம்..

  ReplyDelete
 64. //கோகுல் said...
  அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//

  அடங்கொன்னியா!நல்லவேளை!பினாயில ஊத்தி அடுப்பில வைக்காம போனீரே!//

  அதுக்குன்னு தனியா ஒரு ஸ்மெல் இருக்கே..அதனால தெரியும்!

  ReplyDelete
 65. நானா யோசித்தேன் சிட்டுவேசன் உள்குத்து,
  அரசியல் அதிரடி,
  செண்டிமெண்டல் ஊமக் குத்து...
  அப்புறம் அந்த மாதிரியான ஒரு கேள்வி எனக் கலந்து பல்சுவையாக வந்திருக்கிறது.

  ReplyDelete
 66. //நிரூபன் said...
  அம்மாம்பெரிய பலாப்பழம் வரைக்கும் எல்லாம் உருண்டையா இருக்கு..ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..ஒய்..ஹ்யூம்..ஏன்..ஏன்யா//

  அவ்....எல்லாப் பழமும் உருண்டையா இருப்பது ஓக்கே...
  ஆனால்.............இந்த நமீதாவோட போட்டோ மட்டும் ஏன் சிட்டுவேசன் சாங்ஸ் போல முடிவுக்கு ஏற்ற மாதிரி வந்திருக்கு?//

  தீவிரமா யோசிக்கிறதுக்கான சிச்சுவேசன் ஃபோட்டோ அது...அப்படியே கொஞ்சம் நமீ முகத்தைப் பாருங்க..நான் சொல்றது புரியும்.

  ReplyDelete
 67. //நிரூபன் said...
  நானா யோசித்தேன் சிட்டுவேசன் உள்குத்து,
  அரசியல் அதிரடி,
  செண்டிமெண்டல் ஊமக் குத்து...
  அப்புறம் அந்த மாதிரியான ஒரு கேள்வி எனக் கலந்து பல்சுவையாக வந்திருக்கிறது.//

  இதென்ன?

  ஆராய்ச்சிக்கு முடிவுரையா..ரைட்டு!

  ReplyDelete
 68. ///ஈழப்பிரச்சினைன்னு வந்துட்டா வலிய வாயைத் திறந்து காமெடி பீஸ் ஆகிடுதாரு தலைவரு..ராஜீவ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, அந்த 3 பேரையும் மன்னிச்சு விட்ருப்பாராம்..கேட்ட உடனே டரியல் ஆகிட்டேன்..அந்த ராஜீவ் செத்ததுக்குத் தானே இவங்களை உள்ள வச்சிருக்காங்க..அவரு சாகலைன்னா இந்த கேஸே இல்லையே..அப்புறம் அந்தாளு என்ன மன்னிக்கிறது../// ஹிஹி ஐயா தனக்கு வயசு போய்விட்டது எண்டதை சொல்லாம சொல்லுறார்,

  ReplyDelete
 69. @நிகழ்வுகள் எப்படி இருந்த மனுசன்..இப்படி ஆகிட்டாரே.

  ReplyDelete
 70. vanakkam sako nallathan cofee pottinga kudave kalaingaraiyum thukki pottathu super. by mathiyazhagan.M

  ReplyDelete
 71. நல்ல பதிவு...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 72. சரி சரி கடுப்பாகாதீங்க பாஸ்,

  பாஸு நம்ம தாத்தா காமெடியை சொல்லி
  இந்த சாமத்திலும் கேக்கேபெக்கே என்று சிரிக்க வைத்து
  விட்டீர்கள்........... ஹா ஹா

  ReplyDelete
 73. ///காஃபியில்
  கலந்து
  கொடுத்தேன் - என்
  காதலை!///


  சாறு.... கவிதை சூப்பரு....

  ReplyDelete
 74. இந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம்//


  அதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,

  யோ யாரையா ஆண்டி மனசு வலிக்குதையா இப்பவே சொல்லிபுட்டன் அவங்கள ஆண்டி என்றா நான் இந்த ஆட்டத்துக்கே வரல.. வடிவா பாரய்யா எப்பிடி அம்சமா இருக்காய்யா.. நீங்க நல்ல கண்ணு டொக்குத்தர பாருங்கோய்யா... மாப்பிள நீ இத கண்டிச்சு வை சொல்லிபுட்டன் ஆமா..

  ReplyDelete
 75. என்னையா உங்கட கடைக்கு வாறவங்க போட்ட கொமண்டையெல்லாம் கட் பண்ணிட்டு போறாங்க.. ஆனா நாங்க போட்டா நீங்க கட் பண்ணுறீங்களே மாப்பிள இதில ஏதாவது உள்குத்து இருக்காய்யா.. ஹி ஹி

  ReplyDelete
 76. சரி சரி கடுப்பாகாதீங்க பாஸ்,

  பாஸு நம்ம தாத்தா காமெடியை சொல்லி
  இந்த சாமத்திலும் கேக்கேபெக்கே என்று சிரிக்க வைத்து
  விட்டீர்கள்........... ஹா ஹா

  September 1, 2011 3:35 AM
  மாப்பிள ஒருக்கா அம்மா காமெடி சொல்லிப்பாருங்கோ இவரு எப்பிடி சிரிப்பாருன்னு பாக்கலாம்..?? ஹி ஹி

  ReplyDelete
 77. மாப்பிள வீட்டில ஆண்கள் சமைச்சா என்ன குடி முழுகியா போகும் பெண்களுக்கும் கொஞ்சம் அடுப்படியில இருந்து லீவு கொடுத்தா அவங்க புத்துணர்ச்சியோட இருப்பாங்கதானே..!!?? இந்த கொமண்டில் உள் குத்து ஒண்டுமில்ல மாப்பிள இத கட் பண்ணிடாத.. ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமெண்டு நெஞ்ச தொட்டு போட்ட கொமண்டுய்யா!!!!!!!???

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 78. இந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி//

  அதை நாங்க சொல்லணும் மாம்ஸ்

  ReplyDelete
 79. முதல்ல கூட்டத்தைக் கலைப்போம் ://

  இந்த நேர்மை தான் உங்க கிட்ட பிடிச்சது

  ReplyDelete
 80. ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..//

  சொன்னா நாங்களும் தெரிஞ்சுகுவம் எல்லே!

  ReplyDelete
 81. உங்க பிளாக்கை நல்ல நேரம் எல்லாரும் வீட்ல தூங்கும்போது ஓப்பன் பண்ணேன். ஷகீலா படத்தை நான் பாக்குறதை எங்க வீட்ல பாத்து இருந்தா எனக்கு அட்வான்ஸ் தீபாவளிதான்.

  ReplyDelete
 82. ஆமா மாப்பிள அதென்ன வாழைப்பழம் அதுக்கு பிறகு இலந்தைப்பழம் இதில உள் குத்து ஒண்டுமிலைத்தானே..!!!?? 

  ReplyDelete
 83. மாப்ளைக்கு Back To Formன்னு நெனப்பு....ஏன்யா தயிருக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாதா நீரெல்லாம் சமச்சி.....விளங்கிடும்! சரியாத்தான்யா சொல்லி இருக்காங்க....ஆங் அது என்னது போற வாக்குல என் பிடரில தட்டிட்டு போயிருக்கீரு....நான் நல்லா இருக்கறது உமக்கு புடிக்கலையா ஹிஹி!

  ReplyDelete
 84. என்னாது ஒரே கில்மா படங்களா இருக்கு... பதிவ படிச்சுட்டு வாரென்

  ReplyDelete
 85. தயிர்ல டீ போட்ட பிரபல பதிவர் அடுத்த தலைப்புல பதிவ போட்ற வேண்டியதான் ஹி ஹி ஹி

  ReplyDelete
 86. தீவிரமா யோசிக்கிறது... வில்லங்கமா இருக்கே....அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 87. //
  நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே//

  வரும் காலத்துல இந்த பீல்டுக்குல்(கல்யாண) போகும் போது உஷார சமைக்ககத்துக்கனுமா அண்ணே?

  அப்பரம் அது ஏன் பாஸ் கடைசியில நமிதா படத்தை போட்டு அந்த பழக்கேள்விய கேட்டீங்க?

  ReplyDelete
 88. //நான் என்ன செய்ய...எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே.//
  ஹாலிடே அவுட்டா!

  ReplyDelete
 89. காஃபியில்
  கலந்து
  கொடுத்தேன் - என்
  காதலை!

  அப்பாடா கண்ணக் கட்டுது .கலக்கல் கற்பனை அருமை !......
  வாழ்த்துக்கள் சகோ ..

  ReplyDelete
 90. அந்த தீவிரமா யோசிக்கறத கேட்டது நீங்களா இல்லை நமீதாவா? இல்லை நமீதா கேட்க சொல்லி நீங்க கேட்டீங்களா?

  ReplyDelete
 91. பழங்களிலேயே(சரியா தான் பேசுறனா?)ஊட்டச் சத்து அத்தனையும் நிறைந்திருப்பது "வா.....ழைப்பழம்" ஒன்றிலேயே!அதனால் தான் செந்தில் கவுண்டருக்கிடையில் அடி,தடி கூட ஆயிருச்சு!நீ..............ளமா இருக்கிறது ஒரு "பிரச்சினை"யாய்யா?

  ReplyDelete
 92. இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன் குளிக்க போற பொம்பலய நிக்க வச்சு போஸ் குடுக்க சொன்னா அந்த பொம்பல எப்ப போய் குளிக்கிறது .

  அட அது போகட்டும் கீழ பாறுங்க குளிச்சிட்டுருந்த புள்ளைய வேற எட்டிப்பாக்க சொல்லி.....ம்ம்ம்...

  ReplyDelete
 93. யாருக்கு "!!!!" அடிச்சிடுச்சி பேய் ஒட்டறீங்க

  ReplyDelete
 94. என்னமோ பொம்பளங்கள வுட்டா சமயல்ல அடிச்சுக்க ஆளே இல்லைங்கிற மாதிரி(நான் ஆணாதிக்க வாதி)மாதிரி பீத்திக்கிறாங்களே?ஸ்பக்கட்டி(spaghetti) எனப்படுகிற நூடில்ஸ் சமைக்கத் தெரியாம,அடுப்பில பாத்திரத்துல தண்ணி வச்சு,மேல ஸ்டீமரில நூடில்ஸ் ஐ வச்சு அவிச்சவ(பொம்பள)ங்களை எனக்குத் தெரியும்!ப்ரூவ் பண்ணவா?(My Loving Wife!)பின் குறிப்பு;இந்தக் கமெண்டு போட்டது,"அவங்களுக்கு"தெரியாது!வீட்டில சப்பாத்தி/ரொட்டி உருட்டுற கட்ட(குஷ்பூ இல்ல)இருக்கு!

  ReplyDelete
 95. ஆமா பாலு தண்ணீயா இருக்கும் தயிரு கட்டியால்ல இருக்கும் எப்பிடி வித்தியாசம் தெரியாம போச்சு !

  சரி சரி அடுத்த முறை நான் சமைக்கும் பொழுது உங்களை கூப்பிடுகிறேன் வந்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க

  ReplyDelete
 96. tamil manam 14

  indli 24
  tamil10 15

  ReplyDelete
 97. என்ன இருந்தாலும்/இல்லாட்டாலும்,இந்தக் காப்பி?!ப் பதிவு நல்ல "உழைப்பால்" உருவாகியிருப்பது கண் "முன்னே" தெரிகிறது!இது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானே?)போல,ஒரு அதிசயப் பதிவு இது!பதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட "தேர்ந்து" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்பு!மொத்தத்தில் இது பதிவே அல்ல!அட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்!இந்தப் பதிவின் மூலம்...........,வேணாம் வுட்டுடுவோம்!

  ReplyDelete
 98. காஃபியில்கலந்துகொடுத்தேன் - சயனைடை
  உங்களுக்கு அதுதான் சரியாக இருக்கும்.

  ReplyDelete
 99. //
  Mathi said...
  vanakkam sako nallathan cofee pottinga kudave kalaingaraiyum thukki pottathu super. by mathiyazhagan.M//

  நன்றி நண்பரே..தெரியாத விஷயத்துல வீம்பா இறங்குனா இப்படித்தானே ஆகும்.

  ReplyDelete
 100. //DrPKandaswamyPhD said...
  காஃபியில்கலந்துகொடுத்தேன் - சயனைடை
  உங்களுக்கு அதுதான் சரியாக இருக்கும்.//

  பரவாயில்லை சார்..நீங்க ஒருத்தராவது வாயைத்திறந்து மனசுல பட்டதைச் சொல்றீங்களே..

  ReplyDelete
 101. என்ன இருந்தாலும்/இல்லாட்டாலும்,இந்தக் காப்பி?!ப் பதிவு நல்ல "உழைப்பால்" உருவாகியிருப்பது கண் "முன்னே" தெரிகிறது!இது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானே?)போல,ஒரு அதிசயப் பதிவு இது!பதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட "தேர்ந்து" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்பு!மொத்தத்தில் இது பதிவே அல்ல!அட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்!இந்தப் பதிவின் மூலம்...........,வேணாம் வுட்டுடுவோம்!
  September 1, 2011 11:33 AM


  ஹி ஹி ஹி பாருங்கையா குழந்த துள்ளிகுதிக்கிறத.. வீட்டில வைக்கேசன் முடிச்சு ஒருத்தரும் வரேல்லபோல..அப்ப நம்ம கேசுதான்..!?

  ReplyDelete
 102. // துஷ்யந்தன் said...
  ///காஃபியில்
  கலந்து
  கொடுத்தேன் - என்
  காதலை!///

  சாறு.... கவிதை சூப்பரு....//

  இதுக்காகவே உங்களுக்கு ஒரு காஃபி போட்டுக் கொடுக்கணும் போல இருக்கே!

  ReplyDelete
 103. காட்டான் said...

  // அதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,

  யோ யாரையா ஆண்டி மனசு வலிக்குதையா இப்பவே சொல்லிபுட்டன் அவங்கள ஆண்டி என்றா நான் இந்த ஆட்டத்துக்கே வரல.. வடிவா பாரய்யா எப்பிடி அம்சமா இருக்காய்யா.. நீங்க நல்ல கண்ணு டொக்குத்தர பாருங்கோய்யா... மாப்பிள நீ இத கண்டிச்சு வை சொல்லிபுட்டன் ஆமா..//

  ஐயா, அது உங்களுக்கு சின்னப் பொண்ணு..எங்களுக்கு ஆண்ட்டி!

  //என்னையா உங்கட கடைக்கு வாறவங்க போட்ட கொமண்டையெல்லாம் கட் பண்ணிட்டு போறாங்க.. ஆனா நாங்க போட்டா நீங்க கட் பண்ணுறீங்களே மாப்பிள இதில ஏதாவது உள்குத்து இருக்காய்யா.. ஹி ஹி //

  அதுவா..ஒரு பயங்கர சீக்ரெட் மேட்டரை இங்க போட்டிருந்தாரு..அப்புறம் நீங்க வந்து பார்த்தா வருத்தப்படுவீங்களேன்னு நீக்கிட்டாரு.

  // மாப்பிள ஒருக்கா அம்மா காமெடி சொல்லிப்பாருங்கோ இவரு எப்பிடி சிரிப்பாருன்னு பாக்கலாம்..?? ஹி ஹி //

  ஹா..ஹா..இடம் பார்த்து அடிக்கீங்களே!

  ReplyDelete
 104. // KANA VARO said...
  ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..//

  சொன்னா நாங்களும் தெரிஞ்சுகுவம் எல்லே! //

  பாஸ், தெரியாமத் தானே கேட்கிறேன்..திரும்ப என்கிட்டயே கேட்டா என்ன அர்த்தம்?

  ReplyDelete
 105. // ! சிவகுமார் ! said...
  உங்க பிளாக்கை நல்ல நேரம் எல்லாரும் வீட்ல தூங்கும்போது ஓப்பன் பண்ணேன். ஷகீலா படத்தை நான் பாக்குறதை எங்க வீட்ல பாத்து இருந்தா எனக்கு அட்வான்ஸ் தீபாவளிதான். //

  ஹா..ஹா..நானா யோசிச்சேன்ல பிள்ளையார் படமா இருக்கும்? ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே!

  ReplyDelete
 106. // காட்டான் said...
  ஆமா மாப்பிள அதென்ன வாழைப்பழம் அதுக்கு பிறகு இலந்தைப்பழம் இதில உள் குத்து ஒண்டுமிலைத்தானே..!!!?? //

  மாம்ஸ், இன்னும் நீங்க ஆராய்ச்சியை முடிக்கலியா...ஒரு குத்தும் இல்லை..டவுட்..அவ்வளவு தான்.

  ReplyDelete
 107. விக்கியுலகம் said...
  // மாப்ளைக்கு Back To Formன்னு நெனப்பு....ஏன்யா தயிருக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாதா நீரெல்லாம் சமச்சி.....விளங்கிடும்! //

  அதுக்குத் தான்யா நான் கிச்சன் பக்கமே போறதில்லை..ஆனாலும் என்னை உசுப்பி விட்டுட்டாங்க!

  // அது என்னது போற வாக்குல என் பிடரில தட்டிட்டு போயிருக்கீரு....நான் நல்லா இருக்கறது உமக்கு புடிக்கலையா ஹிஹி! //

  மாப்ள, உங்க பேரைச் சொல்லலேன்னா நான் உங்களை குத்துறதா கிளப்பி விட்ருவாங்க..திரும்ப விளக்கம் சொல்லணும்..தேவையா..அதான் உங்க பேரை நானே போட்டுக்கிட்டேன்.

  ReplyDelete
 108. மாய உலகம் said...
  // தயிர்ல டீ போட்ட பிரபல பதிவர் அடுத்த தலைப்புல பதிவ போட்ற வேண்டியதான் ஹி ஹி ஹி//

  நல்ல காரியம்..சீக்கிரம் செய்ங்க.

  // தீவிரமா யோசிக்கிறது... வில்லங்கமா இருக்கே....அவ்வ்வ்வ்வ்வ்வ் //

  இதுல என்னய்யா வில்லங்கம்..என் கேள்வி நியாயமானது தானே?

  ReplyDelete
 109. K.s.s.Rajh said...

  //வரும் காலத்துல இந்த பீல்டுக்குல்(கல்யாண) போகும் போது உஷார சமைக்ககத்துக்கனுமா அண்ணே?//

  ஆமாய்யா..இல்லேன்ன இப்படித் தான் கேவலப்பட வேண்டி வரும்.

  //அப்பரம் அது ஏன் பாஸ் கடைசியில நமிதா படத்தை போட்டு அந்த பழக்கேள்விய கேட்டீங்க? //

  நமீதா தீவிரமா யோசிக்கிற மாதிரி எனக்குத் தெரிஞ்சுச்சு..அதான்!

  ReplyDelete
 110. FOOD said...
  //நான் என்ன செய்ய...எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே./....ஹாலிடே அவுட்டா! //

  நானே அவுட்டுங்கிறேன்!

  ReplyDelete
 111. // அம்பாளடியாள் said...
  அப்பாடா கண்ணக் கட்டுது .கலக்கல் கற்பனை அருமை !......
  வாழ்த்துக்கள் சகோ ..//

  நீங்க அந்த டிஸ்கியைக் கொஞ்சம் படிக்கலாமே...எனக்கே தர்மசங்கடமா இருக்கு...

  ReplyDelete
 112. // இரவு வானம் said...
  அந்த தீவிரமா யோசிக்கறத கேட்டது நீங்களா இல்லை நமீதாவா? இல்லை நமீதா கேட்க சொல்லி நீங்க கேட்டீங்களா? //

  பரவாயில்லைய்யா..எல்லாரும் நான் நமீதாவை சேம்பிள் பீஸா வைச்சு, அந்தக் கேள்வியைக் கேட்டதா நினைக்காங்க..நீங்களாவது இப்படிக் கேட்கீங்களே!

  ReplyDelete
 113. // M.R said...
  இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன் குளிக்க போற பொம்பலய நிக்க வச்சு போஸ் குடுக்க சொன்னா அந்த பொம்பல எப்ப போய் குளிக்கிறது .//

  அது வாட்டர் டேங்க் பத்தாதுன்னு நாலு டேங்கர் லாரித் தண்ணி ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கும்போது எடுத்த ஃபோட்டோ!

  ReplyDelete
 114. // Yoga.s.FR said...
  என்னமோ பொம்பளங்கள வுட்டா சமயல்ல அடிச்சுக்க ஆளே இல்லைங்கிற மாதிரி(நான் ஆணாதிக்க வாதி)மாதிரி பீத்திக்கிறாங்களே?ஸ்பக்கட்டி(spaghetti) எனப்படுகிற நூடில்ஸ் சமைக்கத் தெரியாம,அடுப்பில பாத்திரத்துல தண்ணி வச்சு,மேல ஸ்டீமரில நூடில்ஸ் ஐ வச்சு அவிச்சவ(பொம்பள)ங்களை எனக்குத் தெரியும்!ப்ரூவ் பண்ணவா?(My Loving Wife!)பின் குறிப்பு;இந்தக் கமெண்டு போட்டது,"அவங்களுக்கு"தெரியாது!வீட்டில சப்பாத்தி/ரொட்டி உருட்டுற கட்ட(குஷ்பூ இல்ல)இருக்கு! //

  அப்போ நான் பரவாயில்லை போல..இப்போ தான் எனக்கு ஆறுதலா இருக்கு பாஸ்.

  ReplyDelete
 115. // Yoga.s.FR said...
  என்ன இருந்தாலும்/இல்லாட்டாலும்,இந்தக் காப்பி?!ப் பதிவு நல்ல "உழைப்பால்" உருவாகியிருப்பது கண் "முன்னே" தெரிகிறது!இது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானே?)போல,ஒரு அதிசயப் பதிவு இது!பதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட "தேர்ந்து" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்பு!மொத்தத்தில் இது பதிவே அல்ல!அட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்!இந்தப் பதிவின் மூலம்...........,வேணாம் வுட்டுடுவோம்! //

  அடடா..அனுபவிச்சு எழுதி இருக்கீங்களே..12 ஆண்டுக்கு ஒரு தடவை மலர்வது குறிஞ்சிப்பூ இல்லாம குஷ்பூவா?..(இதுக்கு விளக்கம் போட்டு, என்னை வம்புல மாட்டி விட்றாதீங்க..அப்படியே மேட்டரை அமுக்குங்க.)

  ReplyDelete
 116. \\அவரு சாகலைன்னா இந்த கேஸே இல்லையே.\\ மஞ்சள் துண்டுவின் அறிக்கையை பேப்பரில் பார்த்தவுடன் சிரிப்புத்தான் வந்தது. நானும் இதையேதான் நினைத்தேன்.

  \\தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.\\ அதை விடு, லபானா பால்தான் என்று எப்படி நினைத்தீர், அதைச் சொல்லும்!

  \\திராட்சைப் பழம், கொய்யாப் பழம், மாம்பழம்னு எல்லாப் பழத்தையும் உருண்டையாப் படைச்ச ஆண்டவன், வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்?\\ இந்த மாதிரி யோசிச்சுத்தான் எடிசன் மாதிரி விஞ்ஞானிகள் எல்லாம் உருவாயிருக்காங்கலாம், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 117. //வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்? //
  இந்தக்கேள்விக்கு சரியான பதிலை பழுத்தஅனுபவசாலியான நமீதா மேடமிடமே தெரிந்து கொள்ளலாமே!

  ReplyDelete
 118. காபி போட்ட கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...
  வாழ்த்துக்கள்.
  போட்டோக்கள் கவர்ச்சி ரகம்.

  ReplyDelete
 119. //Jayadev Das said...
  அதை விடு, லபானா பால்தான் என்று எப்படி நினைத்தீர், அதைச் சொல்லும்!//

  வெள்ளையா இருந்துச்சு சார்..ஃப்ரிட்ஜல் வேற வச்சிருந்தாங்க..

  வெளுத்ததெல்லாம் பால்னு நம்புற அப்பாவி சார் நான்!

  ReplyDelete
 120. //
  உலக சினிமா ரசிகன் said...
  பழுத்தஅனுபவசாலியான நமீதா //

  நமீதா பழுத்த மேட்டர் கோயம்புத்தூர் வரைக்கும் தெரிஞ்சுடுச்சா சார்?

  ReplyDelete
 121. //சே.குமார் said...
  காபி போட்ட கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...//

  கதையா..யோவ், நான் வாங்கிட்டு, வீங்கிப் போய் உட்கார்ந்திருக்கேன்!

  ReplyDelete
 122. காட்டான் said...ஹி!ஹி!ஹி!!! பாருங்கையா குழந்த துள்ளிகுதிக்கிறத.. வீட்டில வைக்கேசன் முடிச்சு ஒருத்தரும் வரேல்லபோல..அப்ப நம்ம கேசுதான்..!?////சார்,சார் வூட்டுல போட்டுக் குடுத்துடாதீங்க சார்!( நல்ல வேளை ஈ மெயில் அட்ரஸ் குடுக்கல!அப்பிடிக் குடுத்திருந்தாலும் பாக்கத் தெரியாதே?ஹி!ஹி!ஹி!)

  ReplyDelete
 123. தீவிரமான யோசனை ரொம்ப முக்கியம்தான்!

  ReplyDelete
 124. அண்ணே, இன்னிக்கும் கமலா காமேஷ் படம் போடலியாண்ணே?

  ReplyDelete
 125. பெரிய பெரிய படமா போட்டிருக்கீங்க.... நடுவுல அஞ்சலி வேற, என்னமோ மெசேஜ் சொல்ல வர்ரீங்கன்னு புரியுது, ஆனா.... அது என்னன்னுதான் தெரில.... ஒருவேளை தமிழ்வாசிக்கு புரிஞ்சிருக்குமோ?

  ReplyDelete
 126. ////’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..//////

  இங்க இதான்யா ஒரெ அக்கபோரு,நானும் ஒருவாட்டி தயிருக்கு பதிலா பால வாங்கிட்டு வந்து சோத்துல வேற ஊத்திட்டேன்...... அப்புறம் வாய்ல வெக்கும் போதுதான்...... ஹி..ஹி...

  ReplyDelete
 127. செங்கோவி said... [Reply]

  //சே.குமார் said...
  காபி போட்ட கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...//

  கதையா..யோவ், நான் வாங்கிட்டு, வீங்கிப் போய் உட்கார்ந்திருக்கேன்!§§§§ஸ்...அப்பாடா!ஒரு வழியா ஒத்துக்கிட்டாரு!எங்கிட்ட மட்டும் ஏன்???????

  ReplyDelete
 128. //////ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..///

  அப்பத்தானே உரிச்சு சாப்புட வசதியா இருக்கும்....?

  ReplyDelete
 129. //////செங்கோவி said...
  //
  உலக சினிமா ரசிகன் said...
  பழுத்தஅனுபவசாலியான நமீதா //

  நமீதா பழுத்த மேட்டர் கோயம்புத்தூர் வரைக்கும் தெரிஞ்சுடுச்சா சார்?
  ////////

  ஈரோட்லதானே பழுத்துச்சு.....

  ReplyDelete
 130. பன்னிக்குட்டி ராம்சாமி said..தயிருக்கு பதிலா பால வாங்கிட்டு வந்து சோத்துல வேற ஊத்திட்டேன்...... அப்புறம் வாய்ல வெக்கும் போதுதான்....../// ஹி!ஹி!...நீங்களாச்சும் வாயில வக்க முடிஞ்சுது!அவரு?!?!?!?!?!

  ReplyDelete
 131. //
  சென்னை பித்தன் said...
  தீவிரமான யோசனை ரொம்ப முக்கியம்தான்!//

  பாவம்..இதெல்லாம் படிக்க வேண்டி இருக்கேன்னு நொந்துட்டாரு போல..

  ReplyDelete
 132. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணே, இன்னிக்கும் கமலா காமேஷ் படம் போடலியாண்ணே?//

  மங்காத்தால பார்த்த அதிர்ச்சில இருந்தே நான் இன்னும் தெளியலை.சும்மா இருங்கண்ணே.

  ReplyDelete
 133. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..//////

  இங்க இதான்யா ஒரெ அக்கபோரு,நானும் ஒருவாட்டி தயிருக்கு பதிலா பால வாங்கிட்டு வந்து சோத்துல வேற ஊத்திட்டேன்...... அப்புறம் வாய்ல வெக்கும் போதுதான்...... ஹி..ஹி.//

  அப்படி விளக்கமாச் சொல்லுங்கண்ணே..நான் ஏதோ கதை விடறேன்னு சிலபேரு நம்ப மாட்டேங்கிறாங்க..

  ReplyDelete
 134. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..///

  அப்பத்தானே உரிச்சு சாப்புட வசதியா இருக்கும்....?//

  சரி, அப்போ மத்த பழமெல்லாம் ஏன் உருண்டையா இருக்கு? ஆப்பிள் தோலை பையனுக்கு உரிச்சுத் தர முன்னே வெங்காயம் நறுக்குன மாதிரி அழறேன், தெரியுமா?

  ReplyDelete
 135. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //
  உலக சினிமா ரசிகன் said...
  பழுத்தஅனுபவசாலியான நமீதா //

  நமீதா பழுத்த மேட்டர் கோயம்புத்தூர் வரைக்கும் தெரிஞ்சுடுச்சா சார்?
  ////////

  ஈரோட்லதானே பழுத்துச்சு.....//

  இது அவர் வேலை தானா?..செய்வாரு..செய்வாரு.

  ReplyDelete
 136. யோ..எங்கே மச்சி அடுத்த பதிவு?

  ReplyDelete
 137. நல்லா இருக்கு காபி போட்ட கதை!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.