Saturday, October 1, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_55

ஜெயபாலை மதன் உடனே கூப்பிட்டான்.

“என்னடா?” என்றான் மதன்.

“ம.., அன்னைக்கு என்னமோ நான் மட்டும் தான் உனக்கு எதிரா வேலை செய்றதாவும், மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உனக்கு சப்போர்ட்டா இருக்கற மாதிரியும் சொன்னே..இப்போ உன்கூடப் படிச்சவங்களே உன்னை உள்ள வைக்க வழி பண்ணிக்கிட்டிருக்காங்க, தெரியுமா?”

“யாரைச் சொல்றே? என்ன பண்றாங்க?”

“செங்கோவி.....உன் மேல போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்னு ஜமீலாகிட்ட சொல்லியிருக்கான். ஜமீலா மாமாவும் அதையே சொல்றார். நாந்தான் பொறுமையா இரும்மான்னு அவகிட்ட சொல்லிக்கிட்டிருக்கேன் தெரியுமா?”

“ஓ...செங்கோவியும் இதுல இறங்கியிருக்கானா?”

“ஆமா, நீ என்னை மட்டும் மிரட்டுனல்ல..இப்போ அங்க நொ..பார்ப்போம்”

ஆனால் மதன் என்னை மிரட்டவில்லை.

மதன் - ஜெனிஃபர் ஃபோட்டோ என்னிடம் இருந்தது. மதன் - ஜமீலா கல்யாணத்தில் மதன் அப்பாவும் இருக்கும் ஃபோட்டோ என்னிடம் இருந்தது. நான் மதன் - ஜமீலாவுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவும் இருந்தது. ஆரம்ப காலத்தில் ஜமீலாவை கல்யாணம் செய்ததில் ஆரம்பித்து அவள் கன்சீவ் ஆனதுவரை உடனுக்குடன் எனக்குத் தெரிவித்து மதன் அனுப்பிய மெயில்கள் பத்திரமாக என்னிடம் இருந்தன.

எனவே மதன் பொதுவாக நண்பர்களுக்கு ஒரு மெயில் அனுப்பினான் :

ஃப்ரெண்ட்ஸ்,

என்னோட பெர்சனல் லைஃப்ல சிலர் தேவையில்லாத பிரச்சினையை கிளப்புற மாதிரி தெரியுது. முதல்ல ஜமீலா அவளாவே எல்லாத்தையும் பண்றதா நினைச்சேன். ஆனால் இப்போத் தான் தெரியுது யாரோ சிலரோட சப்போர்ட்டோட தான் எனக்கு எதிரா சில வேலைகளை அவ பண்ணிக்கிட்டிருக்கா.

ஏன் இப்படி என் வாழ்க்கையில விளையாடுறாங்கன்னு தெரியலை. நான் யாரோ ஒருத்தரை குறிப்பிட்டுச் சொல்லலை. பொதுவாச் சொல்றேன். அனானிமஸ் மெயில்/ஃபோன் பண்றதையும் மத்த வேலைகளையும் உடனே நிறுத்துங்க. உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.

இந்த மெயிலுக்கு யாரும் எந்த பதிலும் போட வேண்டாம்.

-- மதன்

திவர் சிவா ஃபேஸ்புக்கில் புதிதாய் வந்திருந்த ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்களை பெருந்தன்மையுடன் அக்செப்ட் பண்ணிக்கொண்டிருந்தான். அதில் ஜான்சன்_ஜான்சன் என்றொரு ரிக்வெஸ்ட் இருந்தது. என்னடா இது, பேபி சோப் மாதிரி என்று நினைத்துக்கொண்டே, அதை அக்செப்ட் பண்ணிவிட்டு யாரென்று பார்த்தான். யாரோ இந்தியன் என்பது தெரிந்தது. அவனது ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் முழுக்க பெண்களே நிரம்பி வழிந்தார்கள். மச்சக்காரன் என்று நினைத்துக்கொண்டே என்ன மெசேஜ் போட்டிருக்கிறான் என்று பார்த்தான்.

ஒரு அருமையான காதல் வசனம் இருந்தது. அதைப் பார்த்த சிவா ஷாக்கானான். ஏனென்றால், அது சிவா தன் பதிவில் எழுதிய டயலாக் அது. நம் வாசகராய் இருப்பாரோ என்ற டவுட்டுடன் இன்னும் கொஞ்சம் தேடிப் பார்த்தபோது அது மதன் தான் என்று தெரிந்து போனது. சிவாவுக்கு பயங்கரக் கோபம் வந்தது. ’யோஹன்னாவை அநியாயமாக ஏமாற்றியது மட்டுமில்லாமல், இந்த வேலை வேறு செய்கிறானா? இனி இதுபோல் எத்தனை பெண்களை ஏமாற்றப்போகிறானோ’ என்று நினைத்துக்கொண்டான்.

அப்போது யோஹன்னாவிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. 

ரொம்ப நாட்களாகவே அவளிடம் சிவா பேசவில்லை. கடைசியாக கோபத்துடன் கட் செய்தது ஞாபகம் வந்தது. பாவம், நல்ல பெண் என்று நினைத்துக்கொண்டே ஃபோனை எடுத்தான். 

“ஹாய் சிவா”

“ஹாய்” என்று குரலில் நட்பே இல்லாமல் சொன்னான்.

“சாரி..நான் அன்னைக்கு ஏதேதோ பேசிட்டேன்.மதன் விஷயத்துல என்னால இன்னும் ஒரு முடிவும் எடுக்க முடியலை. அவன் நல்லவனா இருப்பானோன்னும் தோணுது.கெட்டவன்னா இப்போ வேற பொண்ணைத் தேடிப் போயிருப்பான்ல? ஏன் இன்னும் என்னையே சுத்தி வர்றான்?”

“ம்...நான் ஒரு ஃபேஸ்புக் லின்க் அனுப்புறேன். பாரு..”

“நெட்ல தான் இருக்கேன்”

“அனுப்பிட்டேன்”

“இது யாரு?”

“நீயே சொல்லு. அது யாருன்னு?”

யோஹன்னா அதில் போட்டிருந்த மெசேஜ்களைப் படித்தாள். அது மதன் என்று உடனே தெரிந்தது.

”அதே வேர்ட்ஸ்..அதே ஸ்டைல்....மதன்” என்றாள்.

“அப்புறம், என்ன பண்ணலாம்?” இறுக்கத்துடனே கேட்டான் சிவா.

“புரியுது, நான் ஒரு முட்டாளா இருக்கேன்னு எனக்கே தெரியுது. அவனுக்கு கல்யாணம் ஆனது உண்மை தானா? உங்க ஃப்ரெண்ட் கிட்டப் பேசுனீங்களா?”

“அவன் மெயில் போட்டிருந்தான். நான் பதில் போடலை. உங்க விவகாரத்தில் எதுக்கு நான் தேவையில்லாம தலையிடணும்?”

“சாரி...இப்போ எனக்காக அவர்கிட்ட நீங்க பேச முடியுமா? இவ்வளவுக்கு அப்புறமும் மதனை என்னால தூக்கியெறிய முடியலைன்னா, அவன் எவ்வளவு தூரம் என்கிட்ட அன்பாப் பழகியிருப்பான்னு யோசிச்சுப்பாருங்க. அது பொய்யின்னு என்னால நம்ப முடியலை. ஏதாவது வலுவான ஆதாரம் வேணும்னு நினைக்கிறேன். அப்போத்தான் என்னால முழுசா அவனை மறக்க முடியும்.ப்ளீஸ், என்னைப் புரிஞ்சிக்கோங்க.”

”சரி..நான் செங்கோவிகிட்டப் பேசுறேன்”

(சனிக்கிழமை.....தொடரும்)

டிஸ்கி: இன்று ஞாயிற்றுக்கிழமை


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

 1. அட வந்துடுச்சா?

  ReplyDelete
 2. நாங்களும் வந்துட்டோம்..

  ReplyDelete
 3. இனிய இரவு வணக்கம் அபையோரோ..

  கடந்த பாகங்களைப் படித்து விட்டு வாரேன்.

  ReplyDelete
 4. என்னய்யா இது ஒரே அக்கப்போரா இருக்குது?இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.சனிக்கிழமை தொடரும்னா...........ஓ....இனிமே வர்ற சனிக்கிழமையோ?செவ்வாய் இல்லியோ?

  ReplyDelete
 5. மனித வாழ்வில் நாம் சந்திக்கும் பலவேறு மனிதர்களின் பரிமாணங்களை வெவ்வேறு நிகழ் புனைவின் வழியாக அருமையாக சித்தரித்து இருக்கிறீர்கள்

  ReplyDelete
 6. நிரூபன் said... இனிய இரவு வணக்கம் அபையோரோ..கடந்த பாகங்களைப் படித்து விட்டு வாரேன்./// இனிய இரவு வணக்கம்! அந்த "மெஷின் முகவர்" கேட்டிருந்தேனே?ஓ.கே.தானே?

  ReplyDelete
 7. //நம் வாசகராய் இருப்பாரோ என்ற டவுட்டுடன் இன்னும் கொஞ்சம் தேடிப் பார்த்தபோது அது மதன் தான் என்று தெரிந்து போனது.//

  இது வேறயா?

  ReplyDelete
 8. Dr. Butti Paul said... நாங்களும் வந்துட்டோம்..///வாங்க,டாக்டர்!இரவு வணக்கம்!"அவர"இன்னும் காணல.வந்துடுவாரு!

  ReplyDelete
 9. //”சரி..நான் செங்கோவிகிட்டப் பேசுறேன்”//

  எங்க போனாலும் இந்தாளு தலைதான் உருளுது.. அண்ணன் ரொம்ப நல்லவருப்பா

  ReplyDelete
 10. என்னடா இது, பேபி சோப் மாதிரி என்று ////ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete
 11. Yoga.s.FR said...
  Dr. Butti Paul said... நாங்களும் வந்துட்டோம்..///வாங்க,டாக்டர்!இரவு வணக்கம்!"அவர"இன்னும் காணல.வந்துடுவாரு!///

  வணக்கம் அய்யா, "அவரு" எங்கிருந்தாலும் உடனே வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

  ReplyDelete
 12. Dr. Butti Paul said... //”சரி..நான் செங்கோவிகிட்டப் பேசுறேன்”// எங்க போனாலும் இந்தாளு தலைதான் உருளுது.. அண்ணன் ரொம்ப நல்லவருப்பா./////புகழ்ச்சின்னாலே அவருக்குப் புடிக்காது,தெரியுமில்ல?

  ReplyDelete
 13. நிரூபன் said...
  ///இனிய இரவு வணக்கம் அபையோரோ..

  கடந்த பாகங்களைப் படித்து விட்டு வாரேன்.//

  வணக்கம் சார், வழக்காமா பதிவ படிச்சிட்டு வர்றேன்னுதானே சொல்லுவீங்க? இது என்ன புதுசா?

  ReplyDelete
 14. Yoga.s.FR said...
  Dr. Butti Paul said... //”சரி..நான் செங்கோவிகிட்டப் பேசுறேன்”// எங்க போனாலும் இந்தாளு தலைதான் உருளுது.. அண்ணன் ரொம்ப நல்லவருப்பா./////புகழ்ச்சின்னாலே அவருக்குப் புடிக்காது,தெரியுமில்ல?///

  இது வடிவேலு மடுலேசன் "நல்லவரு" சார்

  ReplyDelete
 15. அவரை நிரூபன் வூட்டுல பாத்தாப்புல இருக்கு,பொறுமையா இருக்கலாம்,வந்துடுவாரு!'லீலை'ன்னா கொஞ்சம் மிரளுவாரு!

  ReplyDelete
 16. ”அதே வேர்ட்ஸ்..அதே ஸ்டைல்....மதன்” என்றாள்.///ங்கொய்யால!மாட்டிக்கினியா?

  ReplyDelete
 17. Yoga.s.FR said...
  //அவரை நிரூபன் வூட்டுல பாத்தாப்புல இருக்கு,பொறுமையா இருக்கலாம்,வந்துடுவாரு!'லீலை'ன்னா கொஞ்சம் மிரளுவாரு!//

  நிருபன் சாரே இங்கதான் இருக்காரு, அவரு அங்க என்ன பண்றாரு?

  ReplyDelete
 18. //இந்த மெயிலுக்கு யாரும் எந்த பதிலும் போட வேண்டாம்.//

  அப்புறம் எதுக்காம் இவரு மெயில் போட்டாரு?

  ReplyDelete
 19. அதான் சொன்னனே? நிரூபன், கடையில ஒரு மெஷின் விக்கிறாரு.அது டீல் பண்ணுறாரோ,என்னமோ? நிரூபனுக்கு லீலை புடிக்குமில்ல?அதனால அவரு இங்க இருக்காரு!இவரு அங்க இருக்காரு!அவருக்கு"கூச்ச" சுபாவம்!

  ReplyDelete
 20. @Yoga.s.FR

  நிரூபன் said... இனிய இரவு வணக்கம் அபையோரோ..கடந்த பாகங்களைப் படித்து விட்டு வாரேன்./// இனிய இரவு வணக்கம்! அந்த "மெஷின் முகவர்" கேட்டிருந்தேனே?ஓ.கே.தானே?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  ஆமாய்யா, இந்த டீலிங் ஓக்கே தான்..

  கமிசனை யூரோவில அனுப்பி வைச்சீங்க என்றால் சந்தோசப்படுவேன்....

  ReplyDelete
 21. @Yoga.s.FR

  அதான் சொன்னனே? நிரூபன், கடையில ஒரு மெஷின் விக்கிறாரு.அது டீல் பண்ணுறாரோ,என்னமோ? நிரூபனுக்கு லீலை புடிக்குமில்ல?அதனால அவரு இங்க இருக்காரு!இவரு அங்க இருக்காரு!அவருக்கு"கூச்ச" சுபாவம்!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இது வேறையா..
  நடக்கட்டும், நடக்கட்டும்!

  ReplyDelete
 22. இரு வெவ்வேறு கோணத்தில் கதை நகர்கின்றது,

  ஒரு பக்கம் கணவனின் ஏமாற்று வேலைகளை அறிந்து போராடும் ஜமீலா,

  மறுபுறம் தொழில் நுட்பம் மூலம் மதனின் தில்லாலங்கடி வேலைகளை அறிந்து கலங்கும் யோஹன்னா எனக் கதை நகர்கிறது.

  அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 23. நிரூபன் said... கமிசனை யூரோவில அனுப்பி வைச்சீங்க என்றால் சந்தோசப்படுவேன்....////அது ஒ.கே.மெஷின் வருமா?ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 24. நிரூபன் said... இரு வெவ்வேறு கோணத்தில் கதை நகர்கின்றது,///ஒன்று செங்கோணம்!மற்றது...........................?

  ReplyDelete
 25. Dr. Butti Paul said... //இந்த மெயிலுக்கு யாரும் எந்த பதிலும் போட வேண்டாம்.//அப்புறம் எதுக்காம் இவரு மெயில் போட்டாரு?/////அது இலங்கை அரசு போல்! நாம் எந்தத் தப்பும் செய்வோம்,கேள்வி யாரும் கேட்கக் கூடாது,பதில் கிடைக்காது!!!!!!!!!!!

  ReplyDelete
 26. என்ன விறு விறுப்பையா தொடர்...
  ஹும்... சான்ஸே இல்லை
  பின்னுறேல் செங்கோவி அண்ணா...

  ReplyDelete
 27. ஏனோ தெரியவில்லை
  மதன் எவ்வளவு வில்லனாக நடந்து கொள்கிறான் என்று தொடர் புட்டு புட்டு வைத்தாலும்...
  மனம் மதனை ரசிக்குது...  இப்புடி ஏமாத்துறான் என்றாளும், அதுவும் அவன் திறமை தானே.. ஹீ ஹீ

  ReplyDelete
 28. இந்த தொடரில் யார் ஹீரோ...
  சந்தேகம் ஏன்..,
  அது நம்ம செங்கோவி பாஸ் தான்
  ஹீ.. ஹீ..

  ReplyDelete
 29. என்னது அடுத்த சனி மட்டும் வெயிட் பண்ணணுமா..?? அவ்வ்வ்

  அப்போ அடுத்த சனி,  நம்ம மதனுக்கு சனி பிடிக்க போகுது என்று நினைக்கிறேன்..
  ஹீ.. ஹீ..

  ReplyDelete
 30. இந்த பதிவில் சிவா... ஹீரோவாக திகழ்கிறார்...

  ReplyDelete
 31. ஜெயபால் சதிவேலை செய்துவிட்டாப்லையோ...

  ReplyDelete
 32. இன்றைய பதிவில் யோஹன்னாவின் சந்தேகத்திற்கு தீனி கிடைத்திற்கிறது... மதன் அனுப்பிய மெயிலுக்கு செங்கோவியிடமிருந்து என்ன அடுத்து என ஆவல் எழுந்திருக்கு நண்பரே... அடுத்து..........

  ReplyDelete
 33. புடிங்க சார் மதனை புடிச்சு ஜெயில்ல போடுங்க.... எத்தனை பேரை ஏமாத்துவான்?

  ReplyDelete
 34. மாப்ள (மன்)மதன் கலக்கறான்..

  ReplyDelete
 35. லீலை தொடரட்டும்...

  ReplyDelete
 36. அண்ணே !ஒரு வாரம் காக்க வைசுடிங்களே!

  ReplyDelete
 37. Sengovi,

  Can you tell me how Jayapal got Madan number.Y he not gave number to Jameela and yr other friends .I hope u showing u r innocent in this story but i think u r a main vilian am i right

  ReplyDelete
 38. //”சரி..நான் செங்கோவிகிட்டப் பேசுறேன்”//

  எங்க போனாலும் இந்தாளு தலைதான் உருளுது..


  அதானே...

  ReplyDelete
 39. "கணினி மஞ்சம்" அப்பிடிங்கிற ப்ளாக்கில "அஞ்சலி"யோட ......................ம்!

  ReplyDelete
 40. மன்மத லீலையை வென்றார் உண்டோ...?? இன்னைக்கு அண்ணனுக்கு லீவேய்....

  ReplyDelete
 41. மிகவும் விறு விறு என்று செல்கிறது. என்னுடைய நண்பர்களுக்கு லிங்க் அனுப்பி இருக்கிறேன்.

  ReplyDelete
 42. மாம்ஸ் தொடர் விறுவிறு.... சுறுசுறு.... சூப்பர்....

  ReplyDelete
 43. நண்பா தொடர் விறுவிறுப்பாக போகிறது

  ReplyDelete
 44. பாவம்,எல்லா காரக்டர்சும் ,செங்கோவிய ,வம்புல மாட்டுரதுலையே இருக்காங்களே ,ஏன் ?

  இந்த கமெண்ட் படிக்கும் அனைத்து வாசக நண்பர்களே ,என் கன்னி முயற்ச்சி இது:

  B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

  ReplyDelete
 45. Tirupurvalu said...

  // Can you tell me how Jayapal got Madan number.//

  மதன் ஏற்கனவே முந்தின பதிவுகள்லயே ஜெயபாலுக்கு கால் பண்ணானே....வேற யாருக்கும் மதன் பேசலை, இல்லியா.

  //Y he not gave number to Jameela and yr other friends .//

  ஆப்பு வச்சிருவோம்னு தான்.

  // I hope u showing u r innocent in this story //

  ஆமா பாஸ், ஜெயபால்க்கும் எனக்கும் டைரக்ட் காண்டாக்ட் இல்லேங்கிறதையும் கவனிக்கவும்.


  // but i think u r a main vilian am i right //

  ஹா..ஹா..அது உண்மை தான்.

  ReplyDelete
 46. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும், அஞ்சலி லின்க் கொடுத்த ஐயாவுக்கும் நன்றி.

  ReplyDelete
 47. கதை நல்லா சொல்லறீங்க. நன்றி.

  ReplyDelete
 48. //Y he not gave number to Jameela and yr other friends .//

  ஆப்பு வச்சிருவோம்னு தான்.

  Sengovi,

  I ask why Jayabal not gave Madan's number ot Jameela or your friends

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.