Saturday, October 8, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_57

யோஹன்னா அந்த ஃபோட்டோ எடுத்தபோது, தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என்று நினைத்துப்பார்த்தாள். ’இதை தனது ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் அனுப்புகிறான் என்றால் அவன் எவ்வளவு மோசமான ஆளாக இருக்கவேண்டும்? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?’ யோசிக்கவே கஷ்டமாக இருந்தது யோஹன்னாவிற்கு.

சிவாவை ஃபோனில் கூப்பிட்டாள்.

“அண்ணா, என்ன இது? ஏன் இப்படிப் பண்ணியிருக்கான்? உங்க ஃப்ரெண்ட் என்ன சொனனார் இதைப் பத்தி?”

“பொதுவாகவே இண்டியன்ஸ்க்கு ஃபாரின் பொண்ணுன்னா தப்பான பொண்ணுன்னு நினைப்பு உண்டு. அதுல இந்த மாதிரி ஃபோட்டோ வேற போனா என்ன நினைப்பாங்க? யாரோ கால் கேர்ல்னு நினைச்சிருக்காங்க. இப்போத் தான் செங்கோவிகிட்ட சொன்னேன், நீ ரொம்ப நல்ல பொண்ணுன்னு. ஆனா அவன் 100 பேருக்கு மேல இதை அனுப்பி வச்சிருக்கானே?”

“ம்..அந்தப் பொண்ணு பேர் என்ன?”

“ஜமீலா..எனக்கு செங்கோவி சில மெயில்ஸ் ஃபார்வர்டு பண்ணியிருக்கான். ஆனால் எல்லாமே தமிழ்ல இருக்கு. அந்தப் பொண்ணு இப்போ கைக்குழந்தையோட கேரளால கஷ்டப்படுது. இவன் என்னடான்னா இங்க உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா செட்டில் ஆகிடலாம்னு அலையறான். இப்பவாவது உனக்கு மதன் பத்திப் புரியுதா?”

“ஆமா..நாந்தான் முட்டாளா இருந்திருக்கேன். இந்த விஷயத்துல உங்க உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். நீங்க இந்தளவுக்கு எனக்கு ஹெல்ப் பண்றது மதனுக்குத் தெரிஞ்சா, அவனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வரலாம். அதை நினைச்சாத்தான்...”

“அதை நான் பார்த்துக்கறேன். கண் முன்னாடி ஒரு பொண்ணோட லைஃப் கெட்டுப்போறதைப் பார்த்திட்டு இருக்க முடியுமா? நீ என்னை நிறையத் தடவை அண்ணான்னு கூப்பிட்டிருக்கே. அதுக்காகவாவது நான் இதைச் செய்யணும்”

“தேங்க்ஸ் அண்ணா..அந்தப் பொண்ணு ஜமீலாக்கு நான் ஒரு மெயில் அனுப்பலாம்னு நினைக்கிறேன். சாரி கேட்டு...”

“ம்..அனுப்பு. அது தான் நல்லது. அப்போ தான் அந்தப்பொண்ணுக்கும் உன்னைப் பத்தித் தெரியும்.”

யோஹன்னா சொன்னபடியே ஜமீலாவிற்கு ஒரு மெயில் விளக்கமாக எழுதி அனுப்பினாள்.

ஹலோ ஜமீலா,

என் பெயர் யோஹன்னா...

உண்மையில் எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை. 

சிவாகிட்ட உன்னை காண்டாக்ட் பண்ணனும்னு கேட்டேன். சிவாவும் நிறைய ஹெல்ப் பண்ணார்..சில விஷயங்களை தெளிவாக்கிக்கிறது எல்லோருக்குமே நல்லதுங்கிறதால தான் இந்த மெயிலை அனுப்புறேன்.

இந்நேரம் உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கலாம்..2009ல் மதன் என்கூட பழக ஆரம்பிச்சதுல இருந்து எங்கேஜ்மெண்ட் ஆனது வரைக்கும்..

மதன் அனுப்புன ஜூனியர்.மதன் மெயில் பார்த்தப்பவே எனக்கு டவுட் வந்திடுச்சு. ஆனாலும் என்னால அவனை உதற முடியலை. ஏன்னா மதன் அப்படிச் செய்வான்னு நான் நம்பலை. நீயும் அதே நிலைல தான் இருப்பேன்னு நினைக்கிறேன்.

உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் நிறைய கலாச்சார வேறுபாடு இருக்குது. ஆனாலும் தாய்மையும், பெற்றோர்-குழந்தைக்கு இடையிலான உணர்ச்சிகளும் யுனிவெர்சல்னு நம்புறேன்.

என்னோட அப்பாவை நான் பார்த்ததில்லை. ரொம்ப சின்ன வயசுலேயே அம்மாவை விட்டுப் பிரிஞ்சுட்டார். அப்பா இல்லாம ஒரு குழந்தை வளர்றதோட வலி எனக்குத் தெரியும். இப்போ நானே மதன் தன் குழந்தையைப் பிரியக் காரணம் ஆயிட்டேன்னு நினைக்கும்போது...எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை, அழறேன். அழுது தான் அந்த வேதனையை தணிச்சுக்கிறேன்.

மதன் வாழ்க்கையில் இனிமே நான் வர மாட்டேன். மதன்கிட்ட நான் பேசுறேன். அவன் திருந்தி, உன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா வருவான்னு நம்புறேன்.

எனக்கு உங்க ஊர் சட்டங்களைப் பத்தித் தெரியலை. ஆனால், மதன் திருந்தி வரலேன்னா, அவன் மேல போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடு. அவன் உன்னை மிரட்டுனா, என்கிட்டச் சொல்லு. அவன் பேச்சுலர்னு இங்க பொய் சொல்லியிருக்கான். நான் ஒரே ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தாப்போதும், அவன் உள்ளே இருப்பான்.

அதனால அவன்கிட்ட முதல்ல சாஃப்ட்டா போவோம். அவன் திருந்த வாய்ப்பு கொடுப்போம்.

வேறெதும் உதவின்னாலும் தயங்காமக் கேளுங்க.

உன் வாழ்க்கை கெட, தெரிந்தோ தெரியாமலோ நானும் காரணம் ஆயிட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சுடு.

அன்புடன்
யோஹன்னா

தற்கு ஜமீலாவும் பதில் அனுப்பினாள் :

யோஹன்னா,

பெற்றோர் பேச்சைக் கேளாமல், எந்தவித பாதுகாப்பு பற்றியும் யோசிக்காமல் உணர்ச்சி வேகத்துல எடுத்த முடிவுக்குத் தான், நான் இப்போ அனுபவிக்கிறேன். இதில் நீ மன்னிப்புக் கேட்க ஒன்னும் இல்லை.

ஏறக்குறைய நீயும் என் நிலைல இருக்கிறவ தானே.

நான் கடவுளை நம்புபவள். கடவுள்கிட்டயே எல்லாப் பொறுப்பையும் நான் இப்போ ஒப்படைக்கிறேன். நம்மை விட எல்லாம் தெரிஞ்சவர் அவர். நான் பண்ண பாவத்துக்கு இதெல்லாம் அனுபவின்னு சொன்னாருன்னா, அனுபவிச்சுட்டுப் போறேன்.

இப்போதிருக்கும் நிலையில் போலீஸ், கோர்ட் என்று அலைய என்னால் முடியாது.மேலும், என்னால மதனை அப்படிக் கஷ்டப்படுத்தவும் முடியாது.

அவன் திருந்தி, வரட்டும், வருவான்னு நம்புறேன்.

எங்களோட கல்யாண ஃபோட்டோஸ், சென்னை-மதுரைல எடுத்த சில ஃபோட்டோஸ் அட்டாச் பண்ணியிருக்கேன். பார்த்துக்கொள்ளவும்.

அன்புடன்
ஜமீலா.

யோஹன்னாவுக்கு ஜமீலாவின் பதிலைப் படித்தபின், மிகவும் வருத்தமாக இருந்தது. மதனிடம் ஜமீலாவுக்காகப் பேசுவதென்றும், அவன் எதற்கும் ஒத்துவரவில்லையென்றால் போலீஸ்க்குப் போவதாக அவனை மிரட்டுவதென்றும் முடிவு செய்தாள். அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினாள் :

மதன், நாளை இரவு என் ஃப்ளாட்டில் சந்திப்போம். சரியாக 7 மணிக்கு வந்து விடு.

மதன் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான்.

(சனிக்கிழமை...தொடரும்)


அறிவிப்பு :  மன்மதன் லீலைகள் தொடர் 60 பகுதிகளுடன் நிறைவுபெறும். இந்த மாத சனி-ஞாயிறை இதை வைத்துத் தான் ஓட்ட வேண்டும். எனவே தான் வார நாட்களில் லீலை போடுவதில்லை. மின்னஞ்சலில் கேட்ட அன்பர்களுக்கு நன்றி.

முக்கிய அறிவிப்பு : இன்று ஞாயிற்றுக்கிழமை

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

66 comments:

 1. மதன், நாளை இரவு என் ஃப்ளாட்டில் சந்திப்போம். சரியாக 7 மணிக்கு வந்து விடு.

  மதன் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான்.//

  இவன் திருந்தவே மாட்டானோ???

  ReplyDelete
 2. முதல் தடவை உங்க ப்ளாக்ல நான் வடை வாங்கிட்டேன்... ஹிஹி :)

  ReplyDelete
 3. வணக்கம்ணே! :-)

  ReplyDelete
 4. அண்ணன் ஒருவழியா படத்த முடிக்க போறாரு.....

  ReplyDelete
 5. siva is great. he done a good job.

  ReplyDelete
 6. மதன் லீலைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததா அண்ணன், தன்னோட லீலைகளை எடுத்து விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்......

  ReplyDelete
 7. அப்புறம் செங்கோவிலீக்ஸ் கூட அடிக்கடி வருமா?

  ReplyDelete
 8. தொடர் கிளைமாக்ஸ் வரையும் வந்திரிச்சி, ஆனா எப்புடி முடியும்னு யூகிக்க முடியல, அண்ணே நீக பேசாம கோடம்பாக்கத்துக்கு வந்துடுங்களேன், டைடில வச்சே கிளைமாக்ச தெரிஞ்சிக்கக்கூடியதா படங்கள் எடுக்கறவங்க மத்தியில உங்களுக்கு செம வரவேற்ப்பு கிடைக்கும்..

  ReplyDelete
 9. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மதன் லீலைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததா அண்ணன், தன்னோட லீலைகளை எடுத்து விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....../////

  நிறைய பிரச்சின வரும்போலிருக்கே...

  ReplyDelete
 10. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  மதன் லீலைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததா அண்ணன், தன்னோட லீலைகளை எடுத்து விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.....


  i am also awaiting for that very eagerly

  ReplyDelete
 11. //////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மதன் லீலைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததா அண்ணன், தன்னோட லீலைகளை எடுத்து விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....../////

  நிறைய பிரச்சின வரும்போலிருக்கே...////////

  அடாது மழை பொழிந்தாலும்
  விடாது தொடர் வரும்....

  ReplyDelete
 12. //சீரியஸ் பின்னூட்டம் முதல் கும்மிப் பின்னூட்டம் வரை, அனைத்திற்கும் இங்கே இடம் உண்டு...நன்றி!//

  பன்னின்னே, இத கவனிச்சீங்களா? இனிமே இவருக்கு நிறை குறைகளை சொல்லி மெருகேற்ற தேவையில்ல போல.

  ReplyDelete
 13. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மதன் லீலைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததா அண்ணன், தன்னோட லீலைகளை எடுத்து விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....../////

  நிறைய பிரச்சின வரும்போலிருக்கே...////////

  அடாது மழை பொழிந்தாலும்
  விடாது தொடர் வரும்....///

  இது விடாது கருப்பு எபெக்டா?

  ReplyDelete
 14. ////// Dr. Butti Paul said...
  //சீரியஸ் பின்னூட்டம் முதல் கும்மிப் பின்னூட்டம் வரை, அனைத்திற்கும் இங்கே இடம் உண்டு...நன்றி!//

  பன்னின்னே, இத கவனிச்சீங்களா? இனிமே இவருக்கு நிறை குறைகளை சொல்லி மெருகேற்ற தேவையில்ல போல.//////

  அவரு பெரியாளுங்கோ..... இந்தக் கும்மிக்குள்ளயும் நிறை குறை பத்தி கண்டுபுடிச்சி தெரிஞ்சிக்குவாருங்கோ....

  ReplyDelete
 15. வணக்கம் நண்பர்களே அண்ணாத்தை தொடர முடிக்கிறாராம் அதன் பின்???

  ReplyDelete
 16. இப்படி யான மதன்களை உள்ளதள்ளி பெண்டு நிமித்தனும்!

  ReplyDelete
 17. ராமசாமி அண்ணே சத்தம் இல்ல தலைவரே ஓட்டுப் போட்டாச்சா????ஹீ ஹீ

  ReplyDelete
 18. தனிமரம் said...
  //வணக்கம் நண்பர்களே அண்ணாத்தை தொடர முடிக்கிறாராம் அதன் பின்???//

  செங்கோவி லீக்ஸ் ட்ரெயிலர் போட்டாரே, செங்கோவி லீலைகளும் அண்டர் ப்ரோடக்சனாம்..

  ReplyDelete
 19. /////தனிமரம் said...
  ராமசாமி அண்ணே சத்தம் இல்ல தலைவரே ஓட்டுப் போட்டாச்சா????ஹீ ஹீ//////

  இன்னும் அந்த வயசு வரலண்ணே.....

  ReplyDelete
 20. எல்லோருக்கும் இரவு வணக்கம் விடைபெறுகின்றேன் பணி நிமித்தம்!!!

  ReplyDelete
 21. புதிய தொடர் வருவார் அண்ணாத்தை சூட்சுமம் தெரியும்!!

  ReplyDelete
 22. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// Dr. Butti Paul said...
  //சீரியஸ் பின்னூட்டம் முதல் கும்மிப் பின்னூட்டம் வரை, அனைத்திற்கும் இங்கே இடம் உண்டு...நன்றி!//

  பன்னின்னே, இத கவனிச்சீங்களா? இனிமே இவருக்கு நிறை குறைகளை சொல்லி மெருகேற்ற தேவையில்ல போல.//////

  அவரு பெரியாளுங்கோ..... இந்தக் கும்மிக்குள்ளயும் நிறை குறை பத்தி கண்டுபுடிச்சி தெரிஞ்சிக்குவாருங்கோ....///

  ஆமா ஆமா, நம்மள கும்மவுட்டு வேடிக்க பாக்குறாரு, ஒருவேள இது கூட டாக்டர் செங்கோவியின் ஒரு ஆராய்ச்சியா இருக்குமோ??

  ReplyDelete
 23. எந்த நாட்டுலையும் பொண்ணுங்க இந்த மாதிரித் தான் இருப்பாங்களோ?கல்லானாலும் கணவன்,புல்லானாலும்(அந்த "புல்" இல்ல)புருஷன்னு..........................!

  ReplyDelete
 24. /////தனிமரம் said...
  ராமசாமி அண்ணே சத்தம் இல்ல தலைவரே ஓட்டுப் போட்டாச்சா????ஹீ ஹீ//////

  இன்னும் அந்த வயசு வரலண்ணே.....

  October 9, 2011 12:17 AM
  //பொல்லுப்பிடிக்கின்ற வயசா வாங்க பூ மிதிப்பம் அண்ணா!!

  ReplyDelete
 25. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////தனிமரம் said...
  ராமசாமி அண்ணே சத்தம் இல்ல தலைவரே ஓட்டுப் போட்டாச்சா????ஹீ ஹீ//////

  இன்னும் அந்த வயசு வரலண்ணே.....///

  நம்ம ஊருல வாக்குரிம அம்பது வயசுலயான்னே?

  ReplyDelete
 26. ஓகே ஓகே... அப்ப அடுத்த வாரதுக்கு அடுத்த வார சனிக்கிழமை ஸ்வீட் எடுத்து கொண்டாடலாம்.....

  ReplyDelete
 27. வணக்கம் யோகா ஐயா! பெண்களே இப்படுத்தான் அதனால் தான் மதன்கள்தப்பினம்!

  ReplyDelete
 28. யோகா அண்ணா புரட்டாசிச்சனி விளக்கு ஏற்றினதோ!

  ReplyDelete
 29. அடசே, வணக்கம் சொல்லல!எல்லாருக்கும் வணக்கம்!இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை யாம் செங்கோவி சொல்லியிருக்காரு!எனக்கு இன்னும் ஞாயிற்றுக்கிழமை ஆவள,ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 30. வாக்குரிமையா முக்கியம் மதிக்கனும் ராமசாமி அண்ணாவை !

  ReplyDelete
 31. எனக்கும் ஞாயிறு வரல விடிந்தாலும் வேலை ஐயா!

  ReplyDelete
 32. அவரு அறுபதிலும் ஆசை வரும் என்று சொல்லிப் போட்டார் போல!!!

  ReplyDelete
 33. தனிமரம் said... யோகா அண்ணா புரட்டாசிச்சனி விளக்கு ஏற்றினதோ!///கடைசிச் சனி அடுத்த கிழமையாமே?எல்லாத்துக்கும்(சனி)சேத்து எரிச்சுடுவோம்!

  ReplyDelete
 34. ப.ரா எஸ்கேப் ஆயிட்டாரு போல?

  ReplyDelete
 35. ஓம் அடுத்தசனி எரிக்கனும் நான் முதல் சனியே முடித்துவிட்டன் வேலையில் லீவு கஸ்ரம்!!

  ReplyDelete
 36. Blogger தனிமரம் said... எனக்கும் ஞாயிறு வரல விடிந்தாலும் வேலை ஐயா!////தெரியும்,வந்திட்டம் அடிச்சுத் தான் ஆக வேணும்!

  ReplyDelete
 37. யோகா அண்ணா பன்னிக்குட்டியர் ஓடிவிட்டார் பூமித்திக!ஹீ ஹீ!

  ReplyDelete
 38. டாக்குத்தரும்Dr.(Butti Paul) எஸ்கேப் ஆகீட்டார்!

  ReplyDelete
 39. ஐயா விடை பெறுகின்றன் கடமை பில் மூலம் வந்து நிற்குது! எல்லோருக்கும் மீண்டும் இரவு வணக்கம்!!

  ReplyDelete
 40. தனிமரம் said... யோகா அண்ணா பன்னிக்குட்டியர் ஓடிவிட்டார் பூமித்திக!ஹீ ஹீ!////பூ மிதிக்கிறாரோ,இல்ல க.கா வ.............?

  ReplyDelete
 41. தனிமரம் said... ஐயா விடை பெறுகின்றன் கடமை பில் மூலம் வந்து நிற்குது! எல்லோருக்கும் மீண்டும் இரவு வணக்கம்!!////O.K.Bon courage!

  ReplyDelete
 42. நான் கடவுளை நம்புபவள். கடவுள்கிட்டயே எல்லாப் பொறுப்பையும் நான் இப்போ ஒப்படைக்கிறேன். நம்மை விட எல்லாம் தெரிஞ்சவர் அவர். நான் பண்ண பாவத்துக்கு இதெல்லாம் அனுபவின்னு சொன்னாருன்னா, அனுபவிச்சுட்டுப் போறேன்.////கடவுளை நம்பினோர் கை விடப்படார்!

  ReplyDelete
 43. சனிக்கிழமையா தொடரட்டும்

  ReplyDelete
 44. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மதன் லீலைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததா அண்ணன், தன்னோட லீலைகளை எடுத்து விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்......//
  நான் அதை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 45. மதன் லீலைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததா அண்ணன், தன்னோட லீலைகளை எடுத்து விடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்......//
  நான் அதை வழிமொழிகிறேன்.

  //repeatu..:)

  ReplyDelete
 46. நான் 50vathu வடை வாங்கிட்டேன்..

  ReplyDelete
 47. என்னது கதைய முடிக்க போறிங்களா? நீங்க அடுத்த கதைய ரெடி பண்ணிட்டு இந்த கதைய முடிங்க. மதன் திருந்திடற மாதிரி முடிங்க.

  ReplyDelete
 48. நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
  கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

  ReplyDelete
 49. ///////சீனுவாசன்.கு said...
  நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
  கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!//////

  ஏனுங்.. எல்லா இடத்துலயும் நீங்க பாட்டுக்கு இப்படி சொல்லிட்டு போயிட்டே இருக்கீங்களே, மொதல்ல நீங்க உங்க கருத்த இங்க சொல்லலாம்ல?

  ReplyDelete
 50. Sengovi,

  I hope this 2 ladies taken wrong decision finally because your story showing like that .
  Anyway yr subramaniam swamy work done very good

  ReplyDelete
 51. அட எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சுடுச்சு... யோஹன்னா ஃபிலாட்டில் யோஹன்னாவுக்கு ஏதாவது.. பட படக்குது நண்பரே!.. மதன் கேரக்டர் அப்படின்னு சொல்லிருக்கீங்க.. அடுத்த பதிவை எதிர்பார்த்து...

  ReplyDelete
 52. என்னது அறுவதொட முடியப்போகுதா?
  அடடா!

  பரவால்ல உங்களோட லீலைகள் தொடரா வரப்போகுதுன்னு பண்ணிக்குட்டி அண்ணன் சொல்லிஇருக்கார்!ஹிஹி

  ReplyDelete
 53. அப்ப மதனுக்கு நாளைக்கு ?

  ReplyDelete
 54. அடுத்த பதிவை எதிர்பார்த்து...

  ReplyDelete
 55. ஏழு மணிக்கு என்ன நடக்குத்துன்னு பார்ப்போம் ,

  ReplyDelete
 56. வணக்கம் பாஸ்,

  தன் குடும்பத்திற்கு டிமிக்கி கொடுக்க நினைக்கும் மதனை ஒன்றாக்கி ஜமீலாவுடன் சேர்த்து வைக்கத் துடிக்கும் நண்பர்களின் முயற்சி, ஜமீலாவிற்கும் யோஹன்னாவிற்கும் இடையேயான புரிந்துணர்வுடன் கூடிய மடல்,
  மதனின் தவறினை மன்னித்து அவன் ஜமீலாவுடன் சேர்ந்து வாழ்ந்தாலே போதும் எனக் கருதும் யோஹன்னாவின் உணர்வு எனப் பல அம்சங்களைத் தாங்கி இந்தப் பாகம் நகர்ந்திருக்கிறது.

  அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 57. ரொம்ப நல்லா போகுது, ஏன் சீக்கிரமே முடிக்கறீங்க செங்கோவி?

  ReplyDelete
 58. aaa said... [Reply]
  // என்னது கதைய முடிக்க போறிங்களா? //

  நான் முடிக்கலை பாஸ்..அதுவா முடியுது..

  // நீங்க அடுத்த கதைய ரெடி பண்ணிட்டு இந்த கதைய முடிங்க. //

  அப்போ என் டைரியை ஓப்பன் பண்ணிடலாமா....

  //மதன் திருந்திடற மாதிரி முடிங்க.//

  அது மதன் கையில தானே இருக்கு?

  ReplyDelete
 59. aaa said... [Reply]
  // என்னது கதைய முடிக்க போறிங்களா? //

  நான் முடிக்கலை பாஸ்..அதுவா முடியுது..

  // நீங்க அடுத்த கதைய ரெடி பண்ணிட்டு இந்த கதைய முடிங்க. //

  அப்போ என் டைரியை ஓப்பன் பண்ணிடலாமா....

  //மதன் திருந்திடற மாதிரி முடிங்க.//

  அது மதன் கையில தானே இருக்கு?

  ReplyDelete
 60. Tirupurvalu said... [Reply]
  // I hope this 2 ladies taken wrong decision finally because your story showing like that .//

  ஆமா பாஸ்....வள்ளி-தெய்வானைக்கு இருந்த கூறு இவங்களுக்கு இல்லை.

  //Anyway yr subramaniam swamy work done very good //

  ஹா..ஹா..பாராட்டுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 61. // இரவு வானம் said... [Reply]
  ரொம்ப நல்லா போகுது, ஏன் சீக்கிரமே முடிக்கறீங்க செங்கோவி? //

  நைட்டு, எதுவுமே போய்க்கிட்டே இருக்கக்கூடாது இல்லையா?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.