Friday, October 14, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_58

தன் உற்சாகத்துடன் யோஹன்னாவைப் பார்க்கக் கிளம்பினான். யோஹன்னா எடுத்துக் கொடுத்திருந்த ட்ரெஸையே அணிந்துகொண்டான். மொபைல் அழைத்தது. யோஹன்னாவோ என்று ஆர்வமாக எடுத்தான். ஜெயபால்!


இவன் ஒரு இம்சை..நேரங்காலம் தெரியாம..முதல்ல இவனைக் கட் பண்ணனும்என்று நினைத்தபடியே ஃபோனை எடுத்தான்.

அப்புறம்..மதன் எப்படி இருக்கே?”
என்ன விஷயம் சொல்லு
சும்மா தாண்டா
சும்மால்லாம் ஃபோன் பண்ணாதே. நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்

சரி..சரி..ஒன்னுமில்லை, எல்லாரும் என்னடா உன் ஃப்ரெண்ட் இப்படிப் பண்ணிட்டான், பாவம் இல்லியான்னு கேட்கறாங்க. எனக்கும் நீ ஏன் ஜமீலாகிட்ட திரும்பி வரக்கூடாதுன்னு ..

டேய் ஓ... என்னை டென்சன் ஆக்கணும்னே ஃபோன் பண்றியா..ஜமீலா சேப்டர் ஓவர்..இனிமே அவளைப் பத்தி பேசறதுக்கு எதுவும் இல்லை..


என்னடா இப்படிப் பேசறே..அந்த குழந்தைக்காகவாவது...


டேய், குழந்தையே என்னுது இல்லேங்கிறேன். சும்மா, குழந்தை..குழந்தைன்னுக்கிட்டு...


என்னடா சொல்றே? குழந்தை உன்னுது இல்லியா? உனக்குப் பொறக்கிலியா?”


ம்..ஆமா.ஃபோனை வை


அப்போ அது யாருக்குப் பொறந்துச்சுடா?”


அதை ஜமீலாகிட்டப் போய்க் கேளு

யோஹன்னா படபடப்புடன் மதனுக்காக காத்திருந்தாள். என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என பலமுறை மனசுக்குள் ஒத்திகை பார்த்திருந்தாள்.நாம் ஏன் இப்படி நெர்வசாய் இருக்கிறோம்? அவன் ஒரு ஏமாத்துக்காரன்னு தெரிஞ்சுபோச்சு. அப்புறம் ஏன் இப்படி இன்னும் டென்சன்..ஏன் அவன் மன்சு கோணாம விஷயத்தைச் சொல்லணும்னு நினைக்கிறோம்’..யோசிக்க யோசிக்க அவளுக்கே சலிப்பாக இருந்தது.

காலிங் பெல் அடித்தது. அவன் தான்..வந்துட்டான்..என்று முணுமுணுத்தபடியே கதவைத் திறந்தாள்.

மதன் கையில் ரோஜாப் பூங்கொத்துடன் நின்றான். ப்ளூ ஜீன்ஸ், ப்ளைன் சர்ட் என அதே மதன்’. யோஹன்னா பார்த்தபடியே நின்றாள்.

ஹாய் யோஹன்னா
ஆங்..ஹாய்..கம்..கம் இன்சைடு

மதன் உள்ளே வந்து கதவைச் சாத்தினான்.

இன்னும் என்னை ஞாபகம் வச்சிருந்து, அழைச்சதுக்கு ரொம்ப நன்றிஎன்றான்.

மதன், உன்கூட கொஞ்சம் பேசணும். அதான் வரச் சொன்னேன். ஜமீலா பத்தி..உன் குழந்தை பத்தி..

யோஹன்னா, நான் ஏற்கனவே சொல்லிட்டேன்..அது..

மதன், இதுக்கு மேலயும் நமக்கிடையில பொய் வேண்டாம். நான் ஜமீலாகிட்டப் பேசுனேன்

என்ன?”

ஆமா..நாங்க பேசினோம். எனக்கு எல்லாம் தெரியும். இனியும் பொய் சொல்லாதே. உன்னோட கல்யாண ஃபோட்டோஸ்கூட என்கிட்ட இருக்கு. பார்க்கறியா?”

யோஹன்னா தன் லேப்டாப்பில் இருந்த ஃபோட்டோக்களை ஓப்பன் செய்தாள். ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்தபோது எடுத்த ஃபோட்டோக்களும், மதுரையில் திரும்ப அப்பா தலைமையில் எடுத்த ஃபோட்டோக்களும் ஒப்பன் ஆகின.

மதன் பேசாமல் நின்றான்.

மதன், நான் என் அப்பா பத்தி உன்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்கேன். அப்பா இல்லாம அம்மா, என்னைக் கஷ்டப்பட்டு வளர்ததையும், குடிக்கு அடிமையானதையும்கூட உன்கிட்டச் சொல்லியிருக்கேன். இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து, ஜமீலாவை என் அம்மா நிலைமைல தானே நிறுத்தியிருக்கோம்? இது தப்பு மதன்..இந்தத் தப்பை நாம செய்யவே கூடாது. எனக்குத் தெரியும், நீ எவ்வளவு அன்பானவன்னு. என்மேல நீ காட்டுன அன்பை நான் மறக்கவே மாட்டேன். ஆனால் நம்ம அன்புக்கு மரியாதை, நாம நேர்மையாக இருக்கும்போது தான் கிடைக்கும் மதன். நேர்மையற்ற அன்பு, வெறும் நடிப்பு, சுயநலம் தான்.

யோஹன்னா, ஐ ஸ்டில் லவ் யூ

ஓகே, ஆனா எப்போ நீ ஜமீலா பத்தின உண்மையை மறைச்சியோ, அப்பவே உன் காதல் அர்த்தமில்லாததா ஆகிடுச்சு. இனியும் நான் ஏமாறுவேன்னு நினைகக் வேண்டாம். சாரி டூ சே த வேர்ட்ஸ்..ஆமா, நீ என்னை ஏமாத்தினேங்கிறது தான் நிஜம். இதை இத்தோட நிறுத்திக்கலாம் மதன். நாம இந்த நிமிசத்தோட பிரிஞ்சிடலாம். நான் உன் வாழ்க்கைல குறுக்க வந்ததால் தானே ஜமீலாவை, உன் குழந்தையை மறந்தே. இனி உன் லைஃப்ல நான் இல்லை, என்னோட லைஃப்லயும் நீ இல்லை. இதை உன்கிட்ட நேராச் சொல்ற தைரியம், இத்தனை நாளா எனக்கு இல்லை. இப்போ வந்திருக்குன்னா...நம்ம காதல் முறிஞ்சிடுச்சுங்கிறதுக்கு அது தான் சாட்சி.

யோஹன்னா..நீ அவசரப்படுறே..

இல்லை..இன்னொரு பெண்ணோட வாழ்க்கையைக் கெடுத்து வர்ற வாழ்க்கை, எனக்கு வேண்டாம். நான் அவ்வளவு சீப்பானவ இல்லை. ஜமீலா பாவம். உன்னை நம்பி பெத்தவங்கல்ல இருந்து எல்லாரையும் தூக்கியெறிஞ்சுட்டு வந்தவ. திரும்பிப் போ மதன். அவ உனக்காக இன்னும் காத்திக்கிட்டிருக்கா. அவகிட்டத் திரும்பிப்போ.

ஜமீலா பத்திப் பேச வேண்டாம். நான் சொல்றதைக் கேளு..நான் ஏன் அப்படிப் பண்ணேன்னா...

வேண்டாம் மதன்..இதுவரை நீ எனக்குச் சொன்ன கதைகளே போதும். இனியும் இதனால எந்தப் பிரயோஜனமும் இல்லை.

யோஹன்னா நான் சொல்றதைக் கேளு. ஜமீலா மோசமான பொண்ணு. அந்தக் குழந்த்...

ஸ்டாப் இட் மதன்..என்னால இந்த மாதிரிப் பேச்சை கேட்கக்கூட முடியலை. நீ எப்படித் தயங்காம இப்படிப் பேசறே?..நீ ஜமீலாகிட்ட திரும்பிப்போகணும். அது ஓன்னு தான் உனக்கிருக்கிற ஒரே வழி. இல்லேன்னா..

இல்லேன்னா?”

நீ கோர்ட் அஃபிடவிட்ல பேச்சுலர்னு போட்டது ஞாபகம் இருக்கா? நீ கல்யாணம் ஆனவன்னு நான் சொன்னா, நீ ஜெயில்ல தான் இருக்கணும்..தெரியும் இல்லையா?..மதன், நான் அந்த அளவுக்குப் போகணும்னு நினைக்கலை. நீ கிளம்பு. இந்தியாவுக்குக் கிளம்பு

மதன் சிரித்தான்.

ஜமீலா, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கிறது என்னோட பெர்சனல் மேட்டர். அதை ஏன் நான் வெளில சொல்லணும்? நான் உன்னோட பெர்சனல் மேட்டரையே வெளில சொல்றதில்லையே?”

என்னது என்னோட பெர்சனல் மேட்டர்?”

நாம பெட்ரூம்ல எடுத்துக்கிட்ட ஃபோட்டோ, வீடியோல்லாம் ஞாபகம் இருக்கா? அதை அப்பப்போ அழிச்சுடச் சொன்னே. நான் அதை அழிக்கலை. என் லேப்டாப்ல பத்திரமா வச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன். நான் நினைச்சா, அதை ஏதாவது பலான வெப்சைட்ல போட முடியும். ஆனா போடலை. ஏன்? உன்னோட பெர்சனல் மேட்டரை வெளில தெரியப்படுத்தறது நாகரீகம் இல்லேன்னு தான். அதே டீசன்சியைத் தான், பதிலுக்கு உன்கிட்டயும் எதிர்பார்க்கிறேன்.

யூ...யூ சீப்...கெட் லாஸ்ட்..கெட் லாஸ்ட் ஐ சே

நன்றி.

மதன் வெளியேறினான்.

இனிமே நமக்கு நார்வே-ங்கிறது இல்லை. சீக்கிரம் வெளியேறிடணும். எல்லாத் திட்டமும் போச்சு. இனி உடனே வேறெங்கயாவது வேலை தேடணும்.மதன் யோசித்தபடியே ஸ்டிக்ல்ஸ்டட் ஹோட்டலைக் கடந்து பப் ஏரியாப் பக்கம் நடந்தான்.

ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த ஒரு பெண், மப்பில் தள்ளாடியபடியே, மதனை நெருங்கினாள்.

ஹே..ஏசியன் பேபி..லாங் டைம் நோ சீ

மதனுக்கு அவளை ஞாபகம் இல்லை. எப்போதாவது அழைத்து வந்திருப்போம் என்று நினைத்தபடியே அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்தான். அவள் பின்னாலேயே வந்தாள்.

ஐம் ஃப்ரீ மேன்..கம் ஆன்

மதன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

எல்லாத் திட்டமும் பாழாயிடுச்சே..யோஹன்னாகூட மேரேஜ், பெர்மனெண்ட் ரெசிடென்சின்னு எவ்வளவு ப்ளான் வச்சிருந்தோம். இனி என்ன செய்ய.. யோசித்தபடியே நடந்தான் மதன்.

பின்னால் அந்தப் பெண் ஏதோ உளறியபடியே வந்துகொண்டிருந்தாள்.

இன்னொரு பெண் பப்பின் அருகே நின்று கொண்டிருந்தாள். மதனை ஒருத்தி பின் தொடர்வதைப் பார்த்துவிட்டு, மதனை மறித்தபடி எதிரே வந்து நின்றாள்.

பின்னால் வந்தவளிடம் எனி பிராப்ளம்?” என்றாள்.

ஒரே ஒரு பிராப்ளம் தான்..இந்த ஜெண்டில்மேன் என்னைக் கண்டுக்க மாட்டேங்கிறாரு?”

புதிதாய் வந்தவள் சிரித்தாள்.

ஏன் மேன், அவள் வேண்டாமா?”

மதன் பதில் சொல்லாமல் நின்றான்.

அப்போ நான்?” என்றாள்.

மதன் விரக்தியாய்ச் சிரித்தான்.

இப்போ...?” என்ற படி தன் ஜெர்கினை விலக்கினாள்.

ஓகே, போகலாம் என்றான் மதன்.

நானா?”

இல்லை, நீங்க ரெண்டு பேருமே!

(தொடரும்)


டிஸ்கி : இன்று சனிக்கிழமை
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

60 comments:

 1. அடப் பாவி மதன காம ராஜனே

  ReplyDelete
 2. சனிக்கிழமையானாலும் பரவாயில்லை _ அடப்பாவி மதன காமராஜனே

  ReplyDelete
 3. யோஹன்னா இன்னைக்கு நல்ல முடிவெடுத்திருக்கிறாங்க!

  ReplyDelete
 4. இனி மதனின் முடிவு?

  ReplyDelete
 5. ஜமீலாவின் கனவு?

  ReplyDelete
 6. கிளைமாக்ஸ்நெருங்க நெருங்க விறுவிறுப்பு கூடுது!

  ReplyDelete
 7. எல்லோருக்கும் வணக்கம்!அஞ்சாதே யோஹன்னா,துணிந்து நில்!

  ReplyDelete
 8. இன்னிக்கு ஓனர் வர மாட்டாரு!உங்க இஷ்டத்துக்கு நாகரீகமாக மதனை திட்டி விட்டுச் செல்லலாம்!ஹ!ஹ!ஹா!!!

  ReplyDelete
 9. கிளைமாக்ஸ் வந்தும் விறுவிறுப்பு குறையலியே?

  ReplyDelete
 10. யோகன்னா செய்தது மிகச்சரி, ரொம்ப துணிச்சலான நடவடிக்கை.....

  ReplyDelete
 11. ஆனா மதன் அடுத்த கட்டத்துக்கு போயிட்டார் போல? ஆட்டோகிராப் மாதிரி போயிட்டு இருக்கே?

  ReplyDelete
 12. பன்னிக்குட்டி ராம்சாமி said... யோகன்னா செய்தது மிகச்சரி, ரொம்ப துணிச்சலான நடவடிக்கை.....////மதன் பிளாக் மெயில் பண்றானே?

  ReplyDelete
 13. பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆனா மதன் அடுத்த கட்டத்துக்கு போயிட்டார் போல? ஆட்டோகிராப் மாதிரி போயிட்டு இருக்கே?///ஜுலியன் அசஜ்சே மாட்டினாப்புல மாட்டப் போறாரு!

  ReplyDelete
 14. ///// Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... யோகன்னா செய்தது மிகச்சரி, ரொம்ப துணிச்சலான நடவடிக்கை.....////மதன் பிளாக் மெயில் பண்றானே?///////

  என்ன பண்றது, அவன் நிலமை அப்படி....

  ReplyDelete
 15. பன்னிக்குட்டி ராம்சாமி said... கிளைமாக்ஸ் வந்தும் விறுவிறுப்பு குறையலியே?///அதெப்படிங்க கொறையும்?ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 16. பன்னிக்குட்டி ராம்சாமி said... ///// Yoga.s.FR said... பன்னிக்குட்டி ராம்சாமி said... யோகன்னா செய்தது மிகச்சரி, ரொம்ப துணிச்சலான நடவடிக்கை.....////மதன் பிளாக் மெயில் பண்றானே?/////// என்ன பண்றது, அவன் நிலமை அப்படி....///அயோக்கியனுக்கு சப்போர்ட்டு பண்ணுறீங்க?

  ReplyDelete
 17. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆனா மதன் அடுத்த கட்டத்துக்கு போயிட்டார் போல? ஆட்டோகிராப் மாதிரி போயிட்டு இருக்கே?///ஜுலியன் அசஜ்சே மாட்டினாப்புல மாட்டப் போறாரு!//////

  மாட்டுற வரைக்கும் மஜாதானே?

  ReplyDelete
 18. பன்னிக்குட்டி ராம்சாமி said... /////Yoga.s.FR said... பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆனா மதன் அடுத்த கட்டத்துக்கு போயிட்டார் போல? ஆட்டோகிராப் மாதிரி போயிட்டு இருக்கே?///ஜுலியன் அசஜ்சே மாட்டினாப்புல மாட்டப் போறாரு!////// மாட்டுற வரைக்கும் மஜாதானே?///கூஜா தூக்காத வரைக்கும் ஒ.கே!

  ReplyDelete
 19. விறுவிறுப்பாக இருக்கின்றது மதனின் முடிவு என்ன ஆசைப்பட்டதும் கிடைக்கல இப்படியான துரோகிகளுக்கு இப்படிதான் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும் ! நாளை
  இரவுக்கு காத்திருக்கின்றேன்!

  ReplyDelete
 20. ஒரு வழியா யோஹன்னா நல்ல முடிவு எடுத்துட்டார்.

  ReplyDelete
 21. //“நாம பெட்ரூம்ல எடுத்துக்கிட்ட ஃபோட்டோ, வீடியோல்லாம் ஞாபகம் இருக்கா? அதை அப்பப்போ அழிச்சுடச் சொன்னே. நான் அதை அழிக்கலை. என் லேப்டாப்ல பத்திரமா வச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன். நான் நினைச்சா, அதை ஏதாவது பலான வெப்சைட்ல போட முடியும்//
  இது வேறையா? அப்பிடி ஒன்னும் நடக்கலியே? என்னா...வில்லத்தனம்!

  ReplyDelete
 22. //“இல்லை, நீங்க ரெண்டு பேருமே!”//
  பார்ரா!
  ரொம்ப அட்வான்சா போராருல்ல!

  ReplyDelete
 23. ஹே...ஹே... மாம்ஸ் உடான்ஸ் மெம்பர் ஆயிட்டார்....

  ReplyDelete
 24. செம கிளைமாக்ஸ்..... அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கிறது...

  ReplyDelete
 25. அப்பாடா... யோஹன்னா தப்பிச்சுட்டாங்க..

  ReplyDelete
 26. “இல்லை, நீங்க ரெண்டு பேருமே!”//

  இது இப்போதைக்கு முடியாது போலருக்கே... ரைட்டுய்யா

  ReplyDelete
 27. உச்சம் தொடும் மிச்சம் எப்போ?

  ReplyDelete
 28. Sengovi,

  At last Yoganna talked very clever and clearly to Madan but how my hero batted with Yaganna .He played in 2 play grounds in same time overa eruku sengovi

  ReplyDelete
 29. அட பாவி ,என்ன சொல்ல ,அவங்களை கூட்டிப் போய் வழக்கம்போல அல்லது அவர்களை அவன் விரக்தியில் கொலை கிலை ......

  ReplyDelete
 30. ////
  “இப்போ...?” என்ற படி தன் ஜெர்கினை விலக்கினாள்.

  “ஓகே, போகலாம் “ என்றான் மதன்.

  “நானா?”

  “இல்லை, நீங்க ரெண்டு பேருமே!////

  பாஸ் மதன் உண்மையிலே ஒரு சீப்பான ஆளுதான்.....

  ReplyDelete
 31. யோஹன்னா எடுத்த முடிவு மிகச்சரியானது அவங்க முடிவுக்கு ஒரு சலூட்

  ReplyDelete
 32. திருந்தவே மாட்டான்!

  ReplyDelete
 33. பல்ஸ் எகுற வக்கிறீங்க, இன்னும் ரெண்டு எபிசோடுதான் இருக்கு, என்ன ஆகும்னு இன்னும் புரியல...

  ReplyDelete
 34. K.s.s.Rajh said... [Reply]
  ////
  “இப்போ...?” என்ற படி தன் ஜெர்கினை விலக்கினாள்.

  “ஓகே, போகலாம் “ என்றான் மதன்.

  “நானா?”

  “இல்லை, நீங்க ரெண்டு பேருமே!////

  பாஸ் மதன் உண்மையிலே ஒரு சீப்பான ஆளுதான்...../////

  வாழச்சீப்பா, தலவார்ற சீப்பா? #டவுட்டு.

  ReplyDelete
 35. மதன் கலக்குகிறார். கெட்டவனா இருக்க முடிவு எடுத்து அதன் படி நடக்கிறார். அனால் பாவம் அந்த பெண்ணும் அவள் மகனும். பெண் பாவம் பொல்லாதது.

  ReplyDelete
 36. அடப்பாவி இப்ப மதன் என்ன பண்ணுவான்?

  ReplyDelete
 37. மறுபடியும் முதல்ல இருந்தா...
  அப்போ நான் அவன் இல்லை, பட கிளைமாக்ஸ் ஆ....

  ReplyDelete
 38. தல அந்த நோர்வே நாட்டுக்கு நான் ஒரு ட்ரிப் போயிட்டு வர்றனும் போல,.
  அப்டியே அந்த திறந்த மனசுகாரங்க விலாசம்..................

  ReplyDelete
 39. ரைட்டு... அடுத்த சனிக்கிழமை கருத்து சொல்றேன்....

  ReplyDelete
 40. சென்னை பித்தன் said... [Reply] திருந்தவே மாட்டான்!///சரியா சொன்னீங்க ஐயா!

  ReplyDelete
 41. ஜீ... said... [Reply] ஒரு வழியா யோஹன்னா நல்ல முடிவு எடுத்துட்டார்.////கரெக்ட்!

  ReplyDelete
 42. !* வேடந்தாங்கல் - கருன் *! said... அடப்பாவி இப்ப மதன் என்ன பண்ணுவான்?///ஊரப் பாக்கப் போக வேண்டியது தான்!

  ReplyDelete
 43. gopituty said... தல அந்த நோர்வே நாட்டுக்கு நான் ஒரு ட்ரிப் போயிட்டு வர்றனும் போல,. அப்டியே அந்த திறந்த மனசுகாரங்க விலாசம்...............////இது நடந்து ரொம்பக் காலம் ஆச்சாம்! நான் கூட கேட்டேன்.இப்போ வயசாயிடுச்சாம்!

  ReplyDelete
 44. தனிமரம் said... விறுவிறுப்பாக இருக்கின்றது மதனின் முடிவு என்ன ஆசைப்பட்டதும் கிடைக்கல இப்படியான துரோகிகளுக்கு இப்படிதான் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும் ! நாளை இரவுக்கு காத்திருக்கின்றேன்!///அது சரி!இன்றுடன் நிறைகிறதாம்.

  ReplyDelete
 45. தமிழ்வாசி - Prakash said... செம கிளைமாக்ஸ்..... அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கிறது...////இன்றுடன் நிறைகிறதாம்.

  ReplyDelete
 46. ///இது நடந்து ரொம்பக் காலம் ஆச்சாம்! நான் கூட கேட்டேன்.இப்போ வயசாயிடுச்சாம்////
  யோகா அண்ணாச்சி அந்த ஊர்ல வேற பொண்ணுங்களே இருக்க மாட்டாகளா.. என்ன..
  வேலாயி இல்லாட்டி லோலாயி....

  ReplyDelete
 47. ஆமா இந்த செங்கோவி எங்க போய்ட்டார் ஒருவேள நோர்வே போய்ட்டாரோ...

  ReplyDelete
 48. வணக்கம் பாஸ்,

  தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி நகற்கிறது.

  வலையில் மதன் விழப் போகிறான் என்று நினைக்கிறேன்.
  அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

  ReplyDelete
 49. // FOOD said...
  உச்சம் தொடும் மிச்சம் எப்போ? //

  ஆஃபீசருக்கு ஆசையைப் பாருங்க..

  ReplyDelete
 50. // Tirupurvalu said...

  He played in 2 play grounds in same time overa eruku sengovi //

  பொறாமையா இருக்கா...என்ன பண்ண, நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான்...

  ReplyDelete
 51. // M.R said...
  அட பாவி ,என்ன சொல்ல ,அவங்களை கூட்டிப் போய் வழக்கம்போல அல்லது அவர்களை அவன் விரக்தியில் கொலை கிலை ......//

  யோவ், அவனே சும்மா இருந்தாலும் நீரு சொல்லிக்கொருப்பீரு போல..

  ReplyDelete
 52. // Dr. Butti Paul said...
  பல்ஸ் எகுற வக்கிறீங்க, இன்னும் ரெண்டு எபிசோடுதான் இருக்கு, என்ன ஆகும்னு இன்னும் புரியல...//

  எனக்கே புரியலை, அப்புறம் உங்களுக்கு எப்படிப் புரியும்?

  ReplyDelete
 53. // aaa said...
  மதன் கலக்குகிறார். கெட்டவனா இருக்க முடிவு எடுத்து அதன் படி நடக்கிறார். //

  மதன் கலக்குறாரா...ரைட்டு.

  ReplyDelete
 54. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அடப்பாவி இப்ப மதன் என்ன பண்ணுவான்?//

  ம்..அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போய் பஜனை பண்ணுவான்...வர்றீங்களா?

  ReplyDelete
 55. // gopituty said...
  தல அந்த நோர்வே நாட்டுக்கு நான் ஒரு ட்ரிப் போயிட்டு வர்றனும் போல,.அப்டியே அந்த திறந்த மனசுகாரங்க விலாசம்.........//

  யோவ், மதன் இங்கயே ஒன்னை தேத்தி வெற்றிக்கொடி நாட்டிட்டுத் தானே அங்க போனான்..முதல்ல இங்க ப்ரூஃப் பண்ணும்யா..கூரை ஏறி கோழி பிடிக்காதவரு, வானம் ஏறி வைகுண்டம் போறாராம்...

  ReplyDelete
 56. // மொக்கராசு மாமா said...
  ரைட்டு... அடுத்த சனிக்கிழமை கருத்து சொல்றேன்....//

  இங்க பார்றா...

  ReplyDelete
 57. //Yoga.s.FR said...
  இன்றுடன் நிறைகிறதாம். //

  கூட்டத்தைக் கலைக்க சதி செய்த ஐயாக்கு கடும் கண்டனங்கள்.

  ReplyDelete
 58. // gopituty said...
  ஆமா இந்த செங்கோவி எங்க போய்ட்டார் ஒருவேள நோர்வே போய்ட்டாரோ...//

  குட்டி, சனி-ஞாயிறு லீவுன்னு தெரியாதா..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.