Saturday, October 15, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_59

னக்கு குவைத் விசா வந்திருந்தது. எனவே குவைத் கிளம்புவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினேன். பர்ச்சேஸ் வேலைகள் மும்முரமாக நடந்தன. நண்பர்களுக்கு ஃபோன் செய்து ஃபாரின் கிளம்புவதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். 

ஜமீலாவுக்கும் சொல்வதற்காக ஃபோன் செய்தேன்.

“ஹலோ..அண்ணா எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேங்க..மருமகன் எப்படி இருக்கான்?”

“நல்லா இருக்கான்.”

“எனக்கு குவைத்ல வேலை கிடைச்சிருக்கு. அடுத்த வாரம் கிளம்பறேன்.”

“ஓ..சந்தோசம்ணா. “

“வேற எதுவும்னா மெயில் அனுப்புங்க. அப்புறம் இந்த ஒரு வாரத்துக்குள்ள முடிஞ்சா கேரளா வர்றேன்”

“வேண்டாம்னா..நீங்க போய்ட்டு வாங்க. மெயில் அனுப்புங்க. போதும்”

“இல்லெ, மருமகனை வேற நான் பார்த்ததில்லை இல்லையா..நான் ஒருநாள் வர்றேன்”

“அண்ணா, நான் சொல்றது உங்களுக்குப் புரியலியா..இப்போ எல்லாமே மாறிப்போச்சுண்ணா..நான் இங்க தனியா இருக்கேன்..மாமாகூட இங்கே வர்றதில்லை. வீட்ல, தெருவுல, ஆஃபீஸ்லன்னு எல்லா இடத்துலயும் என்னை வித்தியாசமாத் தான் பார்க்கிறாங்க. இந்த நிலைமைல நீங்களோ, வேற யாருமோ இங்க வந்துட்டுப் போறது நல்லாயிருக்குமா? உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னா..திடீர்னு மதன் ஆஃபீஸ்ல இருந்து கால் பண்ணி ‘என் ஃப்ரெண்ட்ஸ் ஐஞ்சு பேர் வீட்டுக்கு மதியம் வருவாங்க. லஞ்ச் ரெடி பண்ணும்பான். நானும் பண்ணுவேன். அப்படி எத்தனையோ நாள், எத்தனையோ பேருக்கு நான் என் கையால சாப்பாடு போட்டிருக்கேன். ஆனா இப்போ என் நிலைமையைப் பாருங்க..”

“இதெல்லாம் டெம்ப்ரவரி தானே..மதன் திரும்ப வந்துட்டா எல்லாப் பிரச்சினையும் சால்வ் ஆகிடும் “

“அண்ணா..நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க?”

“என்னன்னா?..புரியலை”

“ஜெயபால் அண்ணன் ’மதன் சொன்னான்’னு ஒன்னு சொன்னாரு..உண்மையா?”

“என்ன சொன்னான்?”

ஜமீலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஏதோ சொல்ல கஷ்டப்படுவது போல் இருந்தது.

“சொல்லுங்க. என்ன ஆச்சு?”

“என் குழந்தைக்கு தகப்பன் அவன் இல்லேன்னு சொன்னானாமே? உண்மையான்னா?”

”அவனுக்கு இப்போ புத்தி பேதலிச்சுப் போச்சு. அதான் இப்படி..”

“அப்போ சொன்னது உண்மையா?.....இதெல்லாம் தெரிஞ்சுமா நீங்க சமாதானம் பண்ணப் பார்க்கிறீங்க? நான் என் அம்மா அப்பாவைக்கூட நம்பாம, இவன்கூட வந்தனே, எதுக்கு? இப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவா? அவனை நான் எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டேன். அவனுக்கு உடம்பு சரியில்லாதப்போ, அம்மை போட்டப்போ எல்லாம் எவ்வளவு அக்கறையா, இன்னொரு தாயா இருந்து நான் பார்த்துக்கிட்டேன். அவனே சொல்வானே ‘அம்மா மாதிரி’ன்னு. எல்லாமே...எல்லாமே இப்படி ஒரு பேச்சை கேட்கத் தானா? அந்தக் குழந்தை அவனுக்குப் பிறக்கலேன்னா, வேற யாருக்குப் பொறந்ததுன்னு சொல்றான்? நான் வேற யார்கிட்டயோ மோசம் போனேன்னா சொல்றான்? ”

ஜமீலாவின் குரல் கம்மியது. சிறிது நேரம் அழுதாள்.

“நீங்க....நீங்க எப்படீன்னா நான் இனியும் அவன்கூட வாழ்வேன்னு நினைக்கிறீங்க? இவ்ளோ மோசமா தன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட என்னைப் பத்திப் பேசற ஒருத்தனுக்கு சோறு வடிச்சுக்கொட்டி, எல்லா சுகமும் கொடுத்து, தாயா, தாதியா இருக்க இனியும் என்னால முடியுமா? நான் இத்தனை நால் போராடுனதே என் குழந்தைக்காகத் தான். ஆனா எப்போ அந்தக் குழந்தையைவே அவன் குழந்தை இல்லேன்னு சொல்லிட்டானோ, இனியும் அவன்கூட நான் வாழணும்னு என்ன அவசியம்?

அப்போ, நீங்க ஆம்பிளைங்க என்ன வேணா செய்வீங்க. எவகூட வேணா போவீங்க. நாங்க எல்லாத்தையும் பொறுத்துக்கணும். நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்டுக்கணும். அப்படி இருந்தா பூமாதேவி, கற்புக்கரசின்னு பாராட்டுவீங்க. அப்படித் தானே? சுயமரியாதைங்கிறது எங்களுக்கும் இருக்குண்ணா. மானம்ங்கிறது எல்லாருக்கும் ஒன்னு தானே?”

நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“இப்போ அவன் இல்லேன்னா என்ன ஆகும்? சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவோம், அவ்ளோ தானே..சோத்துக்காக அந்த மாதிரி ஒருத்தன்கூட வாழறதும் ஒன்னு தான். விபச்சாரியாப் போறதும் ஒன்னு தான். நானும் படிச்சிருக்கேன்..என்னாலயும் ஏதோ ஒரு வேலைக்குப் போக முடியும். இதை விட நல்ல வேலைக்கு ட்ரை பண்ணிப் போறேன்..இல்லே பட்டினி கிடந்து சாகறோம். ஆனால் ஒருநாளும்...ஒரு நாளும் அவன்கூட நான் வாழ மாட்டேன்...இனியும் அவனைப் பத்திப் பேச ஒன்னுமே இல்லை. நீங்க குவைத் கிளம்புங்க. பார்ப்போம்.”

ஃபோனை கட் செய்தாள் ஜமீலா

(சனிக்கிழமை...முற்றும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

 1. மாலை வணக்கம்!பொன் சுவார்

  ReplyDelete
 2. சனிக்கிழமை விரதம் கலைத்து உண்மையை உடைத்து உலகறியச் செய்ததற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. ஜமீலா போன்ற பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்,பெண்ணாகப் பிறந்தது தவிர?

  ReplyDelete
 4. //Yoga.s.FR said...
  சனிக்கிழமை விரதம் கலைத்து உண்மையை உடைத்து உலகறியச் செய்ததற்கு வாழ்த்துக்கள்!//

  வணக்கம் ஐயா...நம்ம தகுதிக்கு ’அதை’ப் பத்தி பேசக்கூடாதுன்னு அமைதியாத் தான் இருந்தேன்..ஆனாலும் முடியலை...

  பொன் நுயி..அ துமா!

  ReplyDelete
 5. காமமும்,வெளி நாட்டு சுக போக வாழ்க்கையும் ஒரு மனிதனை,பெற்ற குழந்தையையே என்னுடையதில்லை என்று சொல்ல வைக்குமா?

  ReplyDelete
 6. பொன் நுயி..அ துமா!

  ReplyDelete
 7. இரவு வணக்கம் !!!

  இன்று சனி விடுமுறை இல்லையா!!

  ReplyDelete
 8. மருமகனை வேற நான் பார்த்ததில்லை இல்லையா..நான் ஒருநாள் வர்றேன்”///அப்போ இன்று வரை பார்க்கவேயில்லை,அப்படியா? நாளை பதில் சொல்லுங்கள்.

  ReplyDelete
 9. bonne nuit நிரூபன் அய்யா !!!

  ReplyDelete
 10. கோகுல் said... வணக்கம் ஐயா!///வணக்கம் கோகுல்!

  ReplyDelete
 11. • » мσнαη « • said... இரவு வணக்கம் !!! இன்று சனி விடுமுறை இல்லையா!!/// இரவு வணக்கம்.சனி விடுமுறை தான்.

  ReplyDelete
 12. கடை ஓனர் விடுமுறை!உங்கள் ஆதங்கங்களைக் கொட்டி விட்டுச் செல்லுங்கள். நாளை பதிலுரைப்பார்.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. <.....----------....>ஃபோனை கட் செய்தாள் ஜமீலா///

  கொஞ்சம் கஷ்டமான ,ஆனால் தைரியமான முடிவு!!!!

  (ஃபோனை கட் பண்ணியதை சொல்லலை )

  ReplyDelete
 15. உண்மையான இன்றைய நிலையை இந்த கதை .

  ReplyDelete
 16. அடுத்த சனிக்கிழமை வர்றதுக்கு இன்னும் ஏழு நாள் இருக்கே? டூ லேட்...

  ReplyDelete
 17. “என் குழந்தைக்கு தகப்பன் அவன் இல்லேன்னு சொன்னானாமே? உண்மையான்னா?”
  //
  இந்த கேள்வியை தாங்கும் சக்தி எந்த பெண்ணுக்கும் இருக்காது!
  ஜமீலாவின் மனம் அடைந்த வேதனை சொல்லி மாளாது!

  ReplyDelete
 18. மொக்கராசு மாமா said... அடுத்த சனிக்கிழமை வர்றதுக்கு இன்னும் ஏழு நாள் இருக்கே? டூ லேட்...///வணக்கம்,மாமா!அதான் சனி கழிஞ்சிடுச்சே,கடேசி எபிசோட் வர்ற சனி!

  ReplyDelete
 19. Blogger கோகுல் said... “என் குழந்தைக்கு தகப்பன் அவன் இல்லேன்னு சொன்னானாமே? உண்மையான்னா?” // இந்த கேள்வியை தாங்கும் சக்தி எந்த பெண்ணுக்கும் இருக்காது! ஜமீலாவின் மனம் அடைந்த வேதனை சொல்லி மாளாது!///உண்மை தான் கோகுல்.என்ன செய்ய?விதி அப்படி!

  ReplyDelete
 20. “இப்போ அவன் இல்லேன்னா என்ன ஆகும்? சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவோம், அவ்ளோ தானே..சோத்துக்காக அந்த மாதிரி ஒருத்தன்கூட வாழறதும் ஒன்னு தான். விபச்சாரியாப் போறதும் ஒன்னு தான். நானும் படிச்சிருக்கேன்..
  //
  சவுக்கடி

  ReplyDelete
 21. ஒருநாளும்...ஒரு நாளும் அவன்கூட நான் வாழ மாட்டேன்...இனியும் அவனைப் பத்திப் பேச ஒன்னுமே இல்லை.

  //

  இந்திய கலாசாரம் இன்னும் ஏன் உலக அளவில் பேசப்படுகிறது என இப்ப தெரிகிறது.ஜமீலா போன்ற பெண்கள் தனது உண்மைத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் பதர்களை வெறுத்தொதுக்குவதாலே!

  ReplyDelete
 22. அடுத்த பதிவில் முடியுதா?
  அன்ன முடிவு வரும் என ஒரு வாரம் காத்திருக்க வேணுமா??

  ஹூம்!காத்திருப்போம்!

  ReplyDelete
 23. க்ளைமாக்ஸ் நெருங்குகிறது .முடிவு என்ன ? எதிர்பார்ப்போடு .....

  ReplyDelete
 24. ஜமீலா அக்காவுக்கு ஒரு சபாஸ்.அவங்களின் முடிவுக்கு.தலைவணங்குகின்றேன்..

  கதை கிளைமாக்ஸ் நோக்கி போகுது போல(ஆமா இப்படித்தான் நான் பத்து பகுதிக்கு முன்பு இருந்தே சொல்லிக்கொண்டுவாரன்.ஹி.ஹி.ஹி.ஹி...)

  ReplyDelete
 25. வணக்கம் ஐயா

  கதை சுறு சுறு

  ReplyDelete
 26. பரபரப்பு இன்னும் அடங்கவில்லை அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்...

  நம்ம ப்ளாக் பக்கமே வரமாட்றீங்க.. உங்களுக்கு ரொம்ப முக்கியமான யூடியூப் பத்தி எழுதிருக்கேன் மறக்காம வந்துடுங்க... http://vigneshms.blogspot.com/2011/10/blog-post_16.html

  ReplyDelete
 27. நல்லது செய்ய நாலு பேர் இருந்தா அதே அளவுக்கு கேட்டது செய்ய நாலு பேர் இருப்பாங்க. செங்கோவி அண்ட் ஜெயபால். 2 பேரும் 2 முனை. ஜமீலா மன தைரியம் உள்ள பெண். மதன் உலக பயந்தான் கொல்லி.

  ReplyDelete
 28. உண்மைய எதிர் கொள்ள தைரியம் வேணும். தப்பு செய்ய எவ்ளோ தைரியம் வேணுமோ அதைவிட அதிகமா வேணும். அம்மா அம்மா என்று உங்களையும் அந்த பெண்ணையும் ஏமாற்றி விட்டார் மதன் அவர்கள். அவருடைய தப்பை மறைக்க அம்மா என்ற வார்த்தையை துணைக்கு அழைத்து கொண்டார்.

  ReplyDelete
 29. கிளைமாக்ஸ்
  காத்து இருக்கிறோம்
  இப்படிக்கு

  வடக்கு வீதி சந்தானம் ரசிகர்மன்றம்

  ReplyDelete
 30. Sengovi,

  Jayapal thanniya vida rocket supera veyduchuruchu.Neega ,Iyer vancha vediku ennum 1 week wait pannanumma

  Madan words is worst above his son.He made only this mistake. All guys doing in India and over seas same like Madan .

  ReplyDelete
 31. தைரியமான முடிவு.

  ReplyDelete
 32. முடிவு மறுபடியும் படத்தின் கதையை ஒட்டி இருக்கும் போலிருக்கிறது. Waiting with fingers crossed.

  ReplyDelete
 33. அட பாவி மதன்,,,
  முடிவுக்காக waiting

  ReplyDelete
 34. ///siva said... [Reply]

  கிளைமாக்ஸ்
  காத்து இருக்கிறோம்
  இப்படிக்கு

  வடக்கு வீதி சந்தானம் ரசிகர்மன்றம்
  ////

  ஒலகத்துல இருக்குற அத்தன சந்தானம் பேன்ஸும் அதுக்குத்தான்யா காத்துகிட்டு இருக்கோம்...

  ReplyDelete
 35. வணக்கம் பாஸ்,
  ஆண்களினால் பெண்கள் தாக்கப்படும் போது பல இடங்களில் அடங்கிப் போவார்கள், இங்கே தன்னம்பிக்கை கொண்ட ஜமீலாவின் உணர்வுகளை வெளிக்காட்டியவாறு தொடர் நகர்கிறது.

  அடுத்த பாகத்தில் சுபமான முடிவினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 36. // Yoga.s.FR said...
  மருமகனை வேற நான் பார்த்ததில்லை இல்லையா..///அப்போ இன்று வரை பார்க்கவேயில்லை,அப்படியா? நாளை பதில் சொல்லுங்கள்.//

  இல்லை ஐயா..ஃபோட்டோவில் மட்டுமே பார்த்திருக்கிறோம்!

  ReplyDelete
 37. // K.s.s.Rajh said...
  கதை கிளைமாக்ஸ் நோக்கி போகுது போல(ஆமா இப்படித்தான் நான் பத்து பகுதிக்கு முன்பு இருந்தே சொல்லிக்கொண்டுவாரன்.ஹி.ஹி.ஹி.ஹி...)//

  சீக்கிரம் முடிய்யா-ன்னு தானே சொல்லிக்கிட்டு வர்றீங்க..

  ReplyDelete
 38. // Heart Rider said...

  நம்ம ப்ளாக் பக்கமே வரமாட்றீங்க.. உங்களுக்கு ரொம்ப முக்கியமான யூடியூப் பத்தி எழுதிருக்கேன் மறக்காம வந்துடுங்க... //

  வர்றேன்...சனி-ஞாயிறு கூப்பிடலாமா?

  ReplyDelete
 39. // aaa said...
  மதன் உலக பயந்தான் கொல்லி.//

  நீங்க ஒருத்தர் தான் அவனைப் பத்தி கரெக்டா புரிஞ்சிக்கிட்டதுன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 40. // siva said...
  கிளைமாக்ஸ்
  காத்து இருக்கிறோம்
  இப்படிக்கு

  வடக்கு வீதி சந்தானம் ரசிகர்மன்றம் //

  வடக்கு வீதியிலுமா..சுத்தம்.

  ReplyDelete
 41. Tirupurvalu said...

  // Jayapal thanniya vida rocket supera veyduchuruchu.//

  அது உண்மை தான்..கெட்டதுக்கு பவர் அதிகம் தான் போல..

  //Madan words is worst above his son.He made only this mistake. //

  அடடா..மதன் ரசிகரே இப்படிச் சொல்லலாமா?

  ReplyDelete
 42. // Jagannath said...
  முடிவு மறுபடியும் படத்தின் கதையை ஒட்டி இருக்கும் போலிருக்கிறது. Waiting with fingers crossed.//

  ஏறக்குறைய........இது தான் முடிவு.

  ReplyDelete
 43. // நாடோடிப் பையன் said...
  Romba interesting short-novel. //

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 44. // நிரூபன் said...
  வணக்கம் பாஸ்,
  ஆண்களினால் பெண்கள் தாக்கப்படும் போது பல இடங்களில் அடங்கிப் போவார்கள், இங்கே தன்னம்பிக்கை கொண்ட ஜமீலாவின் உணர்வுகளை வெளிக்காட்டியவாறு தொடர் நகர்கிறது.

  அடுத்த பாகத்தில் சுபமான முடிவினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். //

  எல்லாம் சரி....அதை எங்கேய்யா?

  ReplyDelete
 45. Sengovi,

  I am not Madan fan but i saw many peoples like Madan in my life .I am not expose to anybody about my friends through any channel like u.

  From beginning i reading this story but i am not satisfy about u to open yr friend story to public at least u write as a story no body know this is u & yr friend real life .

  U saw one day Jammela will or would join with Madan and both of them make archanai above u

  Any of my words wound to u sorry Sengovi u think my point and reply

  ReplyDelete
 46. //Tirupurvalu said... [Reply]
  Sengovi,

  I am not Madan fan but i saw many peoples like Madan in my life .I am not expose to anybody about my friends through any channel like u.

  From beginning i reading this story but i am not satisfy about u to open yr friend story to public at least u write as a story no body know this is u & yr friend real life .

  U saw one day Jammela will or would join with Madan and both of them make archanai above u

  Any of my words wound to u sorry Sengovi u think my point and reply//

  ஹா..ஹா..தொடர் ஆரம்பித்து பலநாட்கள் ஆகியும் யாரும் இந்த ‘எதிக்ஸ்’ கேள்வியை கேட்கவில்லையே என்று நினைத்தேன்...கேட்டுவிட்டீர்கள்..நன்றி.

  யோஹன்னா-ஜமீலா இருவரின் ஒப்புதலுடனே இந்தத் தொடர் எழுதப்படுகிறது..........

  மீதியை தொடரின் முடிவுரையில் சொல்கிறேன்.

  ReplyDelete
 47. Sengovi,

  I thought still Madan not join with Jameela .Anyway one day they will join but Madan or Jameela have to touch with with good friends in future ( Not like Jayapal Etc ) to rejoin and continue their family at least for their son

  God bless only Madan family !!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 48. Sengovi,

  I read many blogs daily only commanding for yr durrrrrrrrrrr dairy and very very few blogs .If my words wake up yr manasachi ( if u have )that is my success .

  U had got approval from Madan he was also had to give approval to write his story not only from 2 ladies.Plz understand if u not touch or not touch with Madan i don't care but u done a blunder mistake in yr life .This is in my view

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.