Friday, October 21, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_60

’மதனின் நடவடிக்கைகள் நண்பர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. அவன் சென்னையில் ஜமீலாவுடன் வாழ்ந்த வாழ்வைப் பார்த்தவர்கள் யாருமே, அவன் இந்த அளவுக்கு மனம் மாறுவான் என்று நம்பவில்லை. உண்மையில் மனிதனின் மனது எவ்வளவு பலவீனமானது, அபாயகரமானது என்பதை மதன் மூலம் அறிந்தோம். மனதளவில் இந்த சம்பங்களால் ஏற்பட்ட பாதிப்பு என்னவென்றால், சக மனிதர்மேல் நாங்கள் நம்பிக்கை இழந்தது தான்.

ஒருவன் ஒரு பெண்ணிடம் ‘நான் சாகும்வரை உன்னை கண்கலங்காது வைத்துக் காப்பாற்றுவேன்’ என்று சொன்னால், நண்பேண்டா என்று உதவி செய்ய இறங்கிய பலரும் அதன்பின் யோசிக்க ஆரம்பித்தார்கள். மனித வாழ்வின் அடிப்படையே சகமனிதர் மீதான நம்பிக்கை தான். மதன் அந்த நம்பிக்கையை தகர்த்தான். பிறரை மட்டுமல்லாது தன்னையே ஒருவன் நம்ப முடியாத நிலைமையை அவன் உண்டாக்கினான். மதனுடன் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த அனைவருமே இந்தப் பாதிபை அடைந்தோம்.

மதனுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியவில்லை, உண்மையில் அவனுக்கு வாழ்க்கையே இல்லை.’ - வேகமாய் டைப் பண்ணிக்கொண்டிருந்த செங்கோவி, அருகில் நிழலாட திரும்பிப் பார்த்தான். அவன் மனைவி தங்கமணி நின்றுகொண்டிருந்தாள்.

“என்ன?” என்றான்.

“லீலையா?” என்றாள்.

“ஆமா..கிளைமாக்ஸ்”

தங்கமணி அருகில் அமர்ந்தாள். “கிளைமாக்ஸ் என்ன?”

“ஒன்னுமேயில்லை”

“நல்ல கிளைமாக்ஸ்!..சிவாண்ணன் மெயில் போட்டிருந்தார், பார்த்தீங்களா?”

செங்கோவிக்கும் அவன் மனைவிக்கும் ஒரே பெர்சனல் மெயில் ஐடி. மதனின் ஆட்டத்தால் பயந்துபோன செங்கோவி, கல்யாணம் ஆனதுமே செய்த முதல் வேலை தனது பெர்சனல் மெயில் ஐடி பாஸ்வேர்டை தங்கமணியிடம் கொடுத்தது தான். ’ஒளிவுமறைவற்ற பந்தம்’ என்று ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, தங்கமணியிடம் சரண்டர் ஆகியிருந்தான். ‘அவளன்றி அணுவும் அசையாது’ என்ற கொள்கையில் தீவிரமாய் இருந்தான்.

“பார்க்கலியே..மதியம் அனுப்பினானா?..என்னவாம்?”

“யோஹன்னா இப்போ மதனை கம்ப்ளீட்டா மறந்துட்டாளாம். இப்போ ஒரு பிரிட்டிஷ் பையன்கூட நட்பு மலர்ந்திருக்காம். அவன் புரபோஸ் பண்ணிட்டான். இவ தான் பழைய காதல் தந்த பயத்துல யோசிச்சுக்கிட்டே இருக்காளாம். இப்போ சிவாண்ணன் தான் அவங்களை சேர்த்து வைக்கிறதுல பிஸியாம்”

“நல்ல வேலை”

“ஏன் இப்படிச் சொல்றீங்க..உங்களால ஜமீலா லைஃபை காப்பாத்த முடிஞ்சதா? ஆனால் சிவா யோஹன்னா லைஃபை காப்பாத்திட்டார், இல்லையா? ஹி இஸ் எ ஜெம்.”

”ம்..அது உண்மை தான்.”

“மதன் என்ன ஆனார்?”

“தெரியலைம்மா. கடைசியா போலந்துல சிலர் பார்த்திருக்காங்க, பொண்ணுங்க கூடத் தான்..!”

“ஜெனிஃபர் என்ன ஆனா? மெயில்ல வேற சிலர் கேட்டிருந்தாங்களே?”

“ஆமா. ஜெனிஃபர்க்கு ரசிகர் மன்றமே இருக்கும்போல..உண்மையில் அது என்ன ஆச்சுன்னே தெரியலை. இன்னும் ஹைத்ராபாத்ல இருக்கிறதாத் தான் நினைக்கேன்”

“இப்படி ஒன்னையுமே சொல்லாம கிளைமாக்ஸ்ன்னா என்ன அர்த்தம்?”

“சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சுல்ல?”

“ஒரு கதைன்னா தெளிவான முடிவு வேணாமா? கெட்டவன் அழிஞ்சான்..நல்லவங்க நல்லாயிருந்தாங்கன்னு”

“கதைன்னா கண்டிப்பா அது தான் முடிவு. ஆனால் இது கதை இல்லையே..நாம அப்படி நடக்கும்னு நினைக்கிறோம்.ஆனால் நிஜத்தில் அப்படி நடக்குதா? நம்ம வாழ்க்கையை நாம தான் ஜாக்ரதையா வாழ்ந்துக்க வேண்டியிருக்கு..இந்த தொடருக்கு கிளைமாக்ஸ் மூணு பேரால கொடுக்க முடியும்..

ஒன்னு, சிவா. இப்பவும் மதன் என்னென்ன பேருல ஃபேஸ்புக், கூகுள்+ல நடமாடுறான், இப்போ எங்கே இருக்கான்னு தொடர்ந்து வாட்ச் பண்றது அவன் தான். மதன் இந்தியா வந்தாத் தான் கிளைமாக்ஸே. அதை சிவா தான் கண்காணிச்சு சொல்லணும்.

இரண்டாவது, ஆண்டவன். சினிமால லேட்டா வர்ற போலீஸ் மாதிரி லேட்டாவே தீர்ப்பு சொல்ற ஆண்டவன் இதுக்கும் நல்ல முடிவு சொல்லலாம்.

மூணாவது, இதைப் படிக்கிறவங்க. இனி என்ன செய்யலாம்னு அவங்களும் சொல்லலாம். “

“கூட இருந்த இவரே ஒன்னும் கிழிக்கலியாம்..அவங்க என்ன செய்வாங்க?”

“சரி, அதை விடு. ஜமீலாகிட்டப் பேசினியா?”

“ம்..ரெண்டு மூணு நாள் இருக்கும்..பேசி. “

“என்ன சொல்றாங்க? எப்படி இருக்காங்க?”

“ஓகே..முன்னைக்கு இப்போப் பரவாயில்லை. சந்தோஷ்க்கு மூணு வயசு ஆயிடுச்சில்லையா..இப்போ தான் ‘அப்பா எங்கே?’ன்னு கேட்கிறானாம். ஜமீலா அதுக்கு “அப்பா ஃபாரின்ல இருக்கார்..வந்திடுவார்’னு சமாளிக்கிறாங்க. இப்போ ஓரளவு நல்ல வேலைல செட்டில் ஆகியிருக்காங்க. ஜமீலா அம்மா தன்னோட வந்து இருக்கும்படி சொல்றாங்களாம். ஜமீலாக்கு அதுல விருப்பம் இல்லை. ஏன்னா சுத்திலும் சொந்தக்காரங்க. சந்தோஷ்கிட்ட ஏதாவது தப்பா சொல்லிடக்கூடாதேன்னு பயப்படுறாங்க.”

“அதுவும் சரி தான். அவன் கொஞ்சம் பெரியவன் ஆனப்புறம் போய்க்கலாம்.”

“ஆமா. மதன் இந்தியா வந்தா. போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.”

“நல்லது..இப்பவாவது இந்த முடிவுக்கு வந்தாங்களே..சிவாகிட்டச் சொல்லணும்”

“அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம். ஏன்னா யோஹன்னா கூடவும் ஜமீலா காண்டாக்ட்ல தான் இருக்காங்க”

“ஓ..இருக்கலாம்”

“சரி, இப்போ கிளைமாக்ஸ்ன்னு என்ன சொல்லப்போறீங்க? மதனுக்கு என்ன முடிவு?”

“அவன் நல்லா ஃபாரின் பொண்ணுங்களோட எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கான். இதான் முடிவு. நல்லாயிருக்கா?”

“சகிக்கலை..உண்மைச் சம்பவம்ங்கிறதை விடுங்க. இதை ஒரு கதையா நினைச்சுப் படிக்கிறவங்களுக்கு ஏதாவது ஒரு கிளைமாக்ஸ் சொல்ல வேண்டாமா? உங்களுக்கு எப்பவுமே மதன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அதான், சும்மா எழுதக்கூட மாட்டேங்கிறீங்க”

“இதை கதையா நினைக்கிறவங்களுக்குத் தேவையான கிளைமாக்ஸை இரண்டாம் பாகத்திலேயே எழுதிட்டேன். மதன் இப்போ என்னெல்லாம் பண்ணானோ, ஏறக்குறைய எல்லாத்தையும் என்னைப் பெத்தவர் பண்ணிட்டார். அதனால தானோ என்னவோ, மதனை ஓரளவுக்கு மேல என்னால வெறுக்க முடியலை. மதனுக்கான முடிவு என்னன்னா......அவருக்கு என்ன நடந்துச்சோ, அதுவே இவனுக்கும்! ரத்தம் சூடா இருக்கிறவரை தான் இந்த ஆட்டமெல்லாம். அதுக்கப்புறம்..............?”

(முற்றும்)


டிஸ்கி: இன்று சனிக்கிழமை. 

டிஸ்கி-2 : மன்மதன் லீலைகள் - முடிவுரை...........நாளை வரும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

 1. முற்றும்கு அப்புறம் முடிவுரையா? அண்ணன் தமிழ்வாத்தியாரா கொஞ்சநாளு இருந்திருப்பாரோ? அப்புறம் பொழிப்புரை,விளக்கவுரை, கருத்துரைன்னு போட்டுத் தள்ளிடுவாரோ?

  ReplyDelete
 2. ஐயா முடிவு வரும் என்று ஓடிவந்தால் முடியைப் பிச்சுக்கோங்கோ மக்கா என்று விட்டீங்களே!

  ReplyDelete
 3. போலந்தில் மதன் மர்மம் என்றாலும் முயன்று இருக்கலாமே வாத்தியாரே!

  ReplyDelete
 4. உண்மைதான் எல்லாம் உடம்பில் வலு இருக்கும் வரைதான்!

  ReplyDelete
 5. //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  முற்றும்கு அப்புறம் முடிவுரையா? அண்ணன் தமிழ்வாத்தியாரா கொஞ்சநாளு இருந்திருப்பாரோ? அப்புறம் பொழிப்புரை,விளக்கவுரை, கருத்துரைன்னு போட்டுத் தள்ளிடுவாரோ?
  ////

  அதானே.. சன் பிக்சர்ஸ் படம் மாதிரி இன்னும் என்ன என்ன வாசிருக்காரோ?

  ReplyDelete
 6. leelainna athu sanikkizamai thaana?

  ReplyDelete
 7. இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்ல... ஆனா எல்லா கதையும் நீங்க சொன்ன மாத்ரி நல்லவன் வாழ்வான் கெட்டவன் வீழ்வான்னு முடியனும்னும் இல்ல...

  ReplyDelete
 8. //siva said...

  leelainna athu sanikkizamai thaana?////


  ஆமா இன்னிக்கு சனிக்கிழமைதான்.. அது நான்தான் அண்ணன கொஞ்சம் நேரங்காலதோடு பதிவு போட சொல்லி கேட்டுகிட்டேன்.. இல்லன்ன இது அரை மணித்தியாலம் கழிச்சி சனிக்கிழமைதான் வந்து இருக்கும்...

  ReplyDelete
 9. இந்த கிளைமாக்ஸ் நல்லா இல்ல

  ReplyDelete
 10. கதை நிஜ வாழ்வை ஒத்து இருக்கு. நன்றி.

  ReplyDelete
 11. இன்னைக்கு அண்ணன் சனிக்கிழமை விரதம் . ஆதலால் மறுமொழி கிடையாது.

  ReplyDelete
 12. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]முற்றும்கு அப்புறம் முடிவுரையா? அண்ணன் தமிழ்வாத்தியாரா கொஞ்சநாளு இருந்திருப்பாரோ? அப்புறம் பொழிப்புரை,விளக்கவுரை, கருத்துரைன்னு போட்டுத் தள்ளிடுவாரோஅப்படி எல்லாம் இருக்காதுன்னு நினைக்குறேன்

  ReplyDelete
 13. இதுல இருக்குற பின்நவீனத்துவம் என்ன சொல்லுதுன்னா, அண்ணே வி.தா.வ படம் மாதிரி ரெண்டு க்ளைமேக்ஸ் வச்சிருக்காரு, ஒன்னு ரெண்டாம் பாகத்தில், வாசகர் விரும்பும்படி, அப்புறம் இது நிஜ வாழ்கையை ஒட்டி...(யப்பா இத கண்டு பிடிக்க இம்புட்டு நேரம் ஆச்சி...)

  ReplyDelete
 14. may be siva will take care of both their life

  ReplyDelete
 15. ஆனால் சிவா யோஹன்னா லைஃபை காப்பாத்திட்டார், இல்லையா? ஹி இஸ் எ ஜெம்.” ஆமாம் சிவா எப்பவும் நல்லவர் தான்

  ReplyDelete
 16. யோகா ஐயா எவ்விட, ஆளைக்காணோம்

  ReplyDelete
 17. அடுத்த தொடர் செங்கோவி லீலைகளுக்காக waiting

  ReplyDelete
 18. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
  எண்ணப் படவேண்டா தார்

  nalla kural

  ReplyDelete
 19. இரவு வணக்கம்,வந்தவங்க,வந்திருக்கவங்க,வரப்போறவங்க எல்லோருக்கும்!

  ReplyDelete
 20. siva said...
  யோகா ஐயா எவ்விட, ஆளைக்காணோம்?///இங்கின தான் குந்திக்கினு இருக்கேன்! நயினா,இது ஒண்ணும் கத இல்லியே? நெசமாலுக்கும் நடந்தத இர மீட்டியிருக்காரு செங்கோவிப் புள்ள,அம்புட்டுத்தேன்!அத்தோட அவரோட தங்கமணிக்கே வெளக்கம் குடுத்திருக்காரே? நாளைக்கி முடிவுர எழுதுறதா வேற சொல்லியிருக்காரு.பொறுத்துக்கலாம்!

  ReplyDelete
 21. மனது கொஞ்சம் கனக்கிறதே?எல்லாம் அவன் செயல்!

  ReplyDelete
 22. அட அதுக்குள்ள முடிச்சிருச்சா செங்கோவி..!

  கிளைமைச்சில் நிஜயங்கள் தெறிக்கின்றன. நிஜயங்களை பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதை செங்கோவி- தங்கமணி உரையாடல்கள் சொல்கின்றன. அருமை.


  ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் படிக்க வேண்டும்.


  வாழ்த்துக்கள் செங்கோவி.

  ReplyDelete
 23. ஆடதடா ஆடதடா மனிதா....

  ReplyDelete
 24. சகோதரியோட கேள்விதான் என்னுதும் ,கெட்டவர்கள் கடைசி வரை சந்தோசமாகவே இருப்பார்களா ? இரத்தம் சுண்டிய பிறகு அவர்கள் அனுபவிப்பார்கள் என்றால் அதுவரை அவனால் கஷ்டப் பட போகிறவர்களின் கதி ?

  நான் உங்களை கேட்கவில்லை நண்பரே
  ஆண்டவனிடம் ....

  அவர் எங்கே சொல்ல போகிறார்.! ஹும்..

  ReplyDelete
 25. அட என்ன பாஸ் கிளைமாக்ஸ் இபபடி இருக்கே நான் நினைச்சன் மதன் தண்டனை பெற்று எங்கையும் ஜெலில்ல இருக்கார் என்று ஆனா...அவர் இன்னும் பலருடன் ஜல்சா பண்னிக்கொண்டா இருக்கார்...

  முடிவுரையை எதிர்பாக்கின்றோம்..

  //// ’ஒளிவுமறைவற்ற பந்தம்’ என்று ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, தங்கமணியிடம் சரண்டர் ஆகியிருந்தான். ‘அவளன்றி அணுவும் அசையாது’ என்ற கொள்கையில் தீவிரமாய் இருந்தான்./////

  ஹி.ஹி.ஹி.ஹி நீங்க அண்ணிக்கு ரொம்ம பயம் போல.....

  ReplyDelete
 26. என்ன? அண்ணன் அதுக்குள்ள கதையை முடிச்சுட்டாரு? 2 வருஷம் இழுப்பாருன்னு நினைச்சேன் ஹி ஹி

  ReplyDelete
 27. நெஜமாலுமே முடிஞ்சிருச்சா இல்லை பார்ட் டூ எல்லாம் வருமா?

  ReplyDelete
 28. உண்மைக கதைக்கு முடிவை கற்பனையா சொல்ல முடியாதே... நிறைவான முடிவு மாம்ஸ்...

  ReplyDelete
 29. இதுவரை மதனிடம் நடந்த விசயங்கள உங்களுக்கு தெரிந்த வரையில் இத்தனை நாட்களாய் அருமையான விறுவிறு தொடராக சென்றுக் கொண்ட மாம்ஸ் செங்கோவிக்கு நன்றி....

  ReplyDelete
 30. பல மனிதர்களையும் அவர்களின் மனதையும் அறிய வைத்த தொடர்.பல வித உணர்வுகளை பகிர்ந்து கொண்ட தொடர்.
  உங்கள் எழுத்தின் சுவாரஸ்யத்தால் கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் இவ்வளவு தூரம் பயணித்தது.கூடவே நாங்களும்.

  உண்மையில் நடந்த விசயத்துக்கு புனையப்பட்ட கிளைமாக்ஸ் நிச்சயம் ஒட்டாது.
  ஆனால் இறுதி வரிகள் \\ரத்தம் சூடா இருக்கிறவரை தான் இந்த ஆட்டமெல்லாம். அதுக்கப்புறம்..............?”\\

  ஆடும் வரை கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம விடும் என்ற வரிகளை நினைவூட்டி
  மதன் போன்றவர்களின் ஆட்டங்கள் ஓட்டம் விடும் என்பதை தெளிவு படுத்துகிறது!

  ReplyDelete
 31. செங்கோவிக்கும் அவன் மனைவிக்கும் ஒரே பெர்சனல் மெயில் ஐடி. மதனின் ஆட்டத்தால் பயந்துபோன செங்கோவி, கல்யாணம் ஆனதுமே செய்த முதல் வேலை தனது பெர்சனல் மெயில் ஐடி பாஸ்வேர்டை தங்கமணியிடம் கொடுத்தது தான். ’ஒளிவுமறைவற்ற பந்தம்’ என்று ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, தங்கமணியிடம் சரண்டர் ஆகியிருந்தான். ‘அவளன்றி அணுவும் அசையாது’ என்ற கொள்கையில் தீவிரமாய் இருந்தான்.//

  வாவ்... சூப்பரா லைஃப் ஹேண்டில் பண்றீங்க... உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

  ReplyDelete
 32. மதன் இப்போ என்னெல்லாம் பண்ணானோ, ஏறக்குறைய எல்லாத்தையும் என்னைப் பெத்தவர் பண்ணிட்டார். //

  ஆஹா இது வேறையா... மதனின் லீலைகள் தொடர் பதிவா வருவதற்கு உங்களை பெத்தவரின் மீது ஆழ்மன வெறுப்புதான் இப்படி ஒரு பதிவை தூண்டிருக்குன்னு நினைக்கிறேன்.. சரியா நண்பா?

  ReplyDelete
 33. ஓகே க்ளைமாக்ஸூம் படிச்சுட்டு வந்திடுறேன்ன்ன்ன்ன்ன்....

  ReplyDelete
 34. முடியாத முடிவு!
  சரிதான்.

  ReplyDelete
 35. Super Sengovi , absolutely correct. Brahmin is not by birth. By nature only. Also some time i will think why all the gods are having poonul (பூநூல் ) , it is because , poonul is representing that all are attained Bramaha level. (or knows about what is bramah) , due to that reason only old days in brahmin community before the boy attain 10 years they will arrange for upanayanam. ie) before knowing about kamamam (காமம்) the boy should start about searching for bramaha yanam.But now a days everything becomes as a routine. So they deviated from their goal.AnbudanGanapathi

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.