Wednesday, November 9, 2011

லெமன் சாதம் செய்வது எப்படி (நானா யோசிச்சேன்)


நெஞ்சைத் தொட்ட வரிகள் :

வாடி என் கப்பக்கிழங்கே
என் அக்கா பெத்த முக்காத் துட்டே
பாடாதே வாயைத் தொறந்தே..
அடி கூடு கட்டுற குயிலே

புது மேடை கட்டுற மயிலே
வேப்பமரத்து வெயிலே
பல வேஷம் கட்டுற ஒயிலே...

கா..கா..அனுஷ்கா:
கரெக்டா கமல் பிறந்த அன்னிக்கு அனுஷ்கா பிறந்த நாளாம்..அப்போ அவங்களுக்கும் 57 வயசான்னு பிக்காலித்தனமா கேட்கக்கூடாது..அதே தேதி, வருசம் வேற..அன்னிக்கு வாழ்த்துச் சொல்ல விட்டுப்போச்சு..

பொதுவா ஒசரமா இருக்கிற நடிகைகளை நமக்குப் பிடிக்காது. ஆனா பானுப்ப்ரியாக்கு அப்புறம், பார்த்த உடனே..ம்க்கும்..அதாவது...சரி, அது எதுக்கு ...ஹேப்பி பர்த் டே அனுஷ் குட்டி!

உள்ளே-வெளியே:
ஒரு புள்ள பத்தாப்பு படிக்க ஆசைப்பட்டது ஒரு குத்தமாய்யா? இந்த புதுச்சேரி அமைச்சர் பரிட்சைக்குப் பயந்துக்கிட்டு, வேற ஆளை அனுப்பிட்டுப் படற பாடு இருக்கே, அப்பப்பா...ஜாமீன் கேட்டாலும் கோர்ட் இல்லேன்னு சொல்லிடுச்சு இப்போ..ஏதோ 2ஜி-ல பங்கு வாங்குனவன் ரேஞ்சுக்கு பாடாப்படுத்துறாங்களே..


ஜாமீனும் இல்லேன்னு ஆனதால, போலீசு அவரைப் பிடிக்க தீவிரமா இறங்கியிருக்கு. இந்த வாரம் அவரு தமிழ்நாட்டுக்கு வர்றதா தகவல் கிடைச்சிருக்கு. செக்போஸ்ட்ல உஷாரா இருந்து, அவர் காரைப் பிடிச்சா, உள்ளே அவரு இல்லியாம். வேற ஆளை அனுப்பி வச்சிருக்காரு..எப்படி வருவாரு? பரிட்சைக்குப் பயந்தே வேற ஆளை அனுப்புன மனுசன், போலிசுக்கு மட்டும் பயப்படாம வந்துடுவாரா?

குஷ்பூ ஜூஸ்:

பீதியைக் கிளப்புறதே இந்த அரசியல்வாதிகளுக்கு வேலையாப் போச்சு. வேலூருக்கு மீட்டிங் பேசப்போன ராதாரவி “வடிவேலுவை திமுககாரங்க யூஸ் பண்ணிட்டு தூரப்போட்டுட்டாங்க..அதே மாதிரி குஷ்பூவையும் சக்கையாப் பிழிஞ்சுட்டு வெளியே தள்ளிடுவாங்க”ன்னு சொல்லியிருக்காரு..

அடப்பாவிகளா..ஏற்கனவே மழையில சென்னை மிதக்குதுன்னு சொல்றாங்க..இந்த நேரத்துல குஷ்பூவை சக்கையாப் புழிஞ்சு சாறு எடுத்தா, அந்தச் சாறுல சென்னையே முங்கிடுமே..ஏன்யா இந்த வேண்டாத வேலை..

அதுசரி, சக்கையாப் புழிஞ்சப்புறம் குஷ்பூ பழைய மாதிரி ஆகிடுமா? அப்படீன்னா நல்லாப் புழிங்கய்யா, நானும் வேணா லீவு போட்டுட்டு இந்தியா வர்றேன் ஹெல்ப் பண்ண!...

நமக்கும் மெலியணும்னு ஆசையா இருக்கே, அப்போ நாமளும் திமுகல ஜாயிண்ட் பண்ணலாமோ?

கல்யாணமாம் கல்யாணம் :
சிநேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் இதுன்னு ரொம்ப நாளாவே கிசுகிசு. இப்போ அது உண்மை தான்னு அறிவிச்சுட்டாங்க. சீக்கிரமே கல்யாணம் நடக்கும்னு பிரசன்னா சொல்லியிருக்கார். நல்ல நடிகை. ரொம்ப வருசமா நடிச்சுட்டாங்க. போதும்..போய் நல்லபடியா வாழட்டும்..எங்கிருந்தாலும் வாழ்க.

காஸ்ட்லி ஃபோன்:

ஒரு நிமிசத்துக்கு ஃபோன் வாடகை 25 ரூபாயாம்..ஃபாரின் கால் பேசறதுக்கு இல்லீங்க, லோக்கல் கால் பேச!..எங்கேன்னா, நம்ம கோவை செண்ட்ரல் ஜெயில்ல தான்..கைதிங்க 2 பேரு அப்படி வாடகைக்கு விட்டு 11,000 ரூபாய் சம்பாதிச்சிருக்காங்க..நல்ல பிஸினஸ் மூளை..என்ன தான் ஜெயில்ல போட்டாலும், வியாபாரக்காந்தத்தை அடக்க முடியாதுன்னு நிரூபிச்சுட்டாங்க...

ஏன்யா, வெளிய தப்புப் பண்ணா உள்ள அனுப்பலாம், உள்ளயே தப்புப் பண்ணா, எங்கய்யா அனுப்புறது?

செய்முறை:
நான் கோயம்புத்தூர்ல வேலை பார்த்தப்போ, எங்கூட என் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஹிசாம் சையதும் தங்கியிருந்தாரு. சமைக்கிறது என் வேலை, கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வர்றது அவர் வேலை.


அன்னிக்கு ஒருநாள் லெமன் சாதம் பண்றதா ப்ளான். காலையில் அவசரமா சமைக்கும்போது, பார்த்தா லெமன் இல்லை. “பாய்”னு கத்துனதுல பாய்ல படுத்திருந்த மனுசன் பதறியடிச்சு ஓடிவந்தாரு..’செங்கோவி..ஏன் கோவம்?”ன்னாரு..’எங்கய்யா எலுமிச்சம்பழத்தை? இப்படியிருந்தா எப்படிச் சமையல் பண்ண..சாமானை கரெக்டா வாங்கி வைக்க வேண்டாமா?”ன்னு கேட்டதும் ‘அடடா..மறந்துட்டனே..இதோ வாங்கிட்டு வந்திடறேன்..பொறும்”-ன்னு சொல்லிட்டு, ஓடிப் போய் ரெண்டு எழுமிச்சம்பழம் வாங்கிட்டு வந்தாரு.
அப்புறம் அவசரமா சமைச்சு, ஆஃபீசுக்கு டிஃபன்ல எடுத்திட்டுப் போனோம். மதியம் நாலஞ்சு பேரு ஒன்னாச் சாப்பிடுவோம்.அதுல ஒரு பொண்ணும் உண்டு. டெய்லி அது என் சமையலை கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, கருத்து சொல்லும்(தந்தன தந்தன தந்தன...). அன்னிக்கும் கொஞ்சம் லெமன் சாதம் சாப்பிட்டுப் பார்த்துட்டு, உப்பு கொஞ்சம் கம்மியா இருக்கு..இன்னும் கொஞ்சம் அதிகமாப் போடுங்க. லைட்டா அரை ஸ்பூன் போட்டாப் போதும். அப்புறம் லெமன் சாதம் பண்றதுல நீங்க தான் கிங்”-ன்னு சொல்லுச்சு.. நமக்கு சந்தோசம் தாங்கலை(லாலா லாலா...). ஹிசாமுக்கு வயித்தெரிச்சல் தாங்கலை.


சாயந்திரம் வீட்டுக்கு வந்து, டிபனை கிச்சன்ல வைக்கப்போனா...அய்யய்யோ! அங்க ரெண்டு எலுமிச்சம்பழம் வெட்டி, அப்படியே இருக்கு. ஹிசாமும் வந்துட்டாரு. “ஏன்யா, எத்தனை லெமன் வாங்கிட்டு வந்தீரு?”ன்னு கேட்டேன்.


“யோவ், ரெண்டு தான்யா..அப்போ நீரு லெமனே போடலியா? லெமன் போடாமலா லெமன் சாதம் பண்ணீரு?”-ன்னு அழற மாதிரிக் கேட்டாரு.


“ஆமா..மறந்துட்டேன் போல”-ன்னேன்.


“அடப்பாவி மனுசா..இதுக்காய்யா தூங்கிக்கிட்டிருந்தவனை மிரட்டி, வெரட்டி லெமன் வாங்கிட்டு வரச் சொன்னீரு?..அதுகூடப் பரவாயில்லைய்யா..உம்மைக்கூட மன்னிச்சுடுறேன்..ஆனா இதையும் சாப்பிட்டுப் பார்த்துட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டா கிங் ஆயிடுவேன்னு சொன்னா பாரு..அவளை நான் மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்..சண்டாளி..கிச்சன் பக்கமே போயிருக்க மாட்டா போலிருக்கே..இதுல டெய்லி டிப்ஸ் வேற...அவளையும் ஒருத்தன் கட்டிக்கிட்டு.......”


அப்புறம் அவரை சமாதானப்படுத்தி, அந்தப் பொண்ணுகிட்ட எதுவும் கேட்கக்கூடாதுன்னு தடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..ஏன் தடுத்தேன்னு கேட்கீங்களா..என்ன பாஸ் நீங்க, அது ஒன்னு தான் நான் நல்லாச் சமைக்கேன்னு நினைச்சுக்கிட்டிருக்கு..அதையும் திட்டி வுட்டுட்டா, என்னை யாரு பாராட்டுவா? அப்புறம் லாலா-ன்னு பேக்ரவுண்டு மியூசிக் நான் எப்படிக் கேட்கிறது?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

148 comments:

 1. //கமல் பிறந்த அன்னிக்கு அனுஷ்கா பிறந்த நாளாம்..அப்போ அவங்களுக்கும் 57 வயசான்னு பிக்காலித்தனமா கேட்கக்கூடாது..///

  அப்புடி எல்லாம் கேட்க மாட்டோம்..ஆனா அதே நாள் அழகி நந்திதாஸ் பிறந்தநாளாம்.. அவுங்களுக்கும் 57வயசு இல்ல...

  ReplyDelete
 2. இரவு வணக்கம் மொக்கை.

  ReplyDelete
 3. //பொதுவா ஒசரமா இருக்கிற நடிகைகளை நமக்குப் பிடிக்காது. /// ஒஹ் நீங்க சூர்யா ஆளுல்ல...

  ReplyDelete
 4. //Comment deleted
  This post has been removed by the author.//

  அனுஷ்காவைப் பார்த்து ஆபாசக் கமெண்ட் போட்டது யாரு?

  ReplyDelete
 5. //வெளங்காதவன் said...
  அனுஷ்கா வாழ்க......//

  அப்போ நாங்கல்லாம்?

  ReplyDelete
 6. //மொக்கராசு மாமா said...
  //கமல் பிறந்த அன்னிக்கு அனுஷ்கா பிறந்த நாளாம்..அப்போ அவங்களுக்கும் 57 வயசான்னு பிக்காலித்தனமா கேட்கக்கூடாது..///

  அப்புடி எல்லாம் கேட்க மாட்டோம்..ஆனா அதே நாள் அழகி நந்திதாஸ் பிறந்தநாளாம்.. அவுங்களுக்கும் 57வயசு இல்ல...//

  நந்திக்கு 37 இருக்குமா?

  ReplyDelete
 7. //செங்கோவி said...

  //Comment deleted
  This post has been removed by the author.//

  அனுஷ்காவைப் பார்த்து ஆபாசக் கமெண்ட் போட்டது யாரு?//

  அது நா இல்ல..

  ReplyDelete
 8. //செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...
  //கமல் பிறந்த அன்னிக்கு அனுஷ்கா பிறந்த நாளாம்..அப்போ அவங்களுக்கும் 57 வயசான்னு பிக்காலித்தனமா கேட்கக்கூடாது..///

  அப்புடி எல்லாம் கேட்க மாட்டோம்..ஆனா அதே நாள் அழகி நந்திதாஸ் பிறந்தநாளாம்.. அவுங்களுக்கும் 57வயசு இல்ல...//

  நந்திக்கு 37 இருக்குமா?//

  என்னண்ணேஅவுங்க ஆண்டி இல்ல, பாட்டி.. 42 ஆகுது

  ReplyDelete
 9. //மொக்கராசு மாமா said...
  //செங்கோவி said...

  //Comment deleted
  This post has been removed by the author.//

  அனுஷ்காவைப் பார்த்து ஆபாசக் கமெண்ட் போட்டது யாரு?//

  அது நா இல்ல..//

  புரிஞ்சு போச்சு.

  ReplyDelete
 10. //
  மொக்கராசு மாமா said...
  //செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...
  //கமல் பிறந்த அன்னிக்கு அனுஷ்கா பிறந்த நாளாம்..அப்போ அவங்களுக்கும் 57 வயசான்னு பிக்காலித்தனமா கேட்கக்கூடாது..///

  அப்புடி எல்லாம் கேட்க மாட்டோம்..ஆனா அதே நாள் அழகி நந்திதாஸ் பிறந்தநாளாம்.. அவுங்களுக்கும் 57வயசு இல்ல...//

  நந்திக்கு 37 இருக்குமா?//

  என்னண்ணேஅவுங்க ஆண்டி இல்ல, பாட்டி.. 42 ஆகுது//

  அப்படியா...அப்போ அழகி கிழவி ஆயிடுச்சா?

  ReplyDelete
 11. //செங்கோவி said... [Reply]

  //வெளங்காதவன் said...
  அனுஷ்கா வாழ்க......//

  அப்போ நாங்கல்லாம்///

  அனுஷ்கா அண்ட் ஹன்சிகா வாழ்க...
  #நீரு எக்கேடோ கேட்டு தொலையும்... எனக்கென்ன...

  ReplyDelete
 12. ///செங்கோவி said...

  //
  மொக்கராசு மாமா said...
  //செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...
  //கமல் பிறந்த அன்னிக்கு அனுஷ்கா பிறந்த நாளாம்..அப்போ அவங்களுக்கும் 57 வயசான்னு பிக்காலித்தனமா கேட்கக்கூடாது..///

  அப்புடி எல்லாம் கேட்க மாட்டோம்..ஆனா அதே நாள் அழகி நந்திதாஸ் பிறந்தநாளாம்.. அவுங்களுக்கும் 57வயசு இல்ல...//

  நந்திக்கு 37 இருக்குமா?//

  என்னண்ணேஅவுங்க ஆண்டி இல்ல, பாட்டி.. 42 ஆகுது//

  அப்படியா...அப்போ அழகி கிழவி ஆயிடுச்சா?//

  அவுங்க எப்பயோ கெழவி ஆகிட்டாங்க.. ஆமா அனுஷ்கா அண்ணி வயச சும்மா சொல்லுங்க பார்போம் உங்க போது அறிவ!!

  ReplyDelete
 13. //வெளங்காதவன் said...
  //செங்கோவி said... [Reply]

  //வெளங்காதவன் said...
  அனுஷ்கா வாழ்க......//

  அப்போ நாங்கல்லாம்///

  அனுஷ்கா அண்ட் ஹன்சிகா வாழ்க...
  #நீரு எக்கேடோ கேட்டு தொலையும்... எனக்கென்ன...//

  ஹன்சிகா வாழ்ந்தா, நான் வாழ்ந்த மாதிரி தான்யா..

  ReplyDelete
 14. //மொக்கராசு மாமா said...

  அவுங்க எப்பயோ கெழவி ஆகிட்டாங்க.. ஆமா அனுஷ்கா அண்ணி வயச சும்மா சொல்லுங்க பார்போம் உங்க போது அறிவ!!//

  20.

  இந்த மாதிரி விஷயங்கள்ல பொது அறிவே இல்லாம இருந்தாத் தான் சந்தோசமா இருக்க முடியும்.

  ReplyDelete
 15. லெமன் சாதம் சூப்பர், அண்ணே நீங்க ஏன் சமையல் குறிப்புகள்ன்னு புதுசா ஒரு ப்ளாக் தொடங்கக்கூடாது? தயிர்ல காபி போடுறது, லெமன் போடாம லெமன் சாதம் பண்றதுன்னு அதகள படுத்தலாமே..

  ReplyDelete
 16. செங்கோவி said...
  //மொக்கராசு மாமா said...

  அவுங்க எப்பயோ கெழவி ஆகிட்டாங்க.. ஆமா அனுஷ்கா அண்ணி வயச சும்மா சொல்லுங்க பார்போம் உங்க போது அறிவ!!//

  20.

  இந்த மாதிரி விஷயங்கள்ல பொது அறிவே இல்லாம இருந்தாத் தான் சந்தோசமா இருக்க முடியும்.//

  அடடா, அவுங்களுக்கு க கா வ விட ரெண்டு வயசு ஜாஸ்த்தி..

  ReplyDelete
 17. //செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...

  அவுங்க எப்பயோ கெழவி ஆகிட்டாங்க.. ஆமா அனுஷ்கா அண்ணி வயச சும்மா சொல்லுங்க பார்போம் உங்க போது அறிவ!!//

  20.

  இந்த மாதிரி விஷயங்கள்ல பொது அறிவே இல்லாம இருந்தாத் தான் சந்தோசமா இருக்க முடியும்//

  அப்புடிங்குறீங்க... ஆனா ஒல்கத்துலையே அப்பா மகன் ரெண்டு பேர் கூடவும் கிசுகிசுக்கபடும் ஒரே நடிகை அவுங்க மட்டும்தான்...

  ReplyDelete
 18. // Dr. Butti Paul said...
  லெமன் சாதம் சூப்பர், அண்ணே நீங்க ஏன் சமையல் குறிப்புகள்ன்னு புதுசா ஒரு ப்ளாக் தொடங்கக்கூடாது? தயிர்ல காபி போடுறது, லெமன் போடாம லெமன் சாதம் பண்றதுன்னு அதகள படுத்தலாமே..//

  ஏற்கனவே பலபேரு அப்படித் தானே எழுதுறாங்க..நாமளும் அதையே பண்ணனுமா?

  ReplyDelete
 19. //Dr. Butti Paul said...
  செங்கோவி said...
  //மொக்கராசு மாமா said...

  அவுங்க எப்பயோ கெழவி ஆகிட்டாங்க.. ஆமா அனுஷ்கா அண்ணி வயச சும்மா சொல்லுங்க பார்போம் உங்க போது அறிவ!!//

  20.

  இந்த மாதிரி விஷயங்கள்ல பொது அறிவே இல்லாம இருந்தாத் தான் சந்தோசமா இருக்க முடியும்.//

  அடடா, அவுங்களுக்கு க கா வ விட ரெண்டு வயசு ஜாஸ்த்தி..//

  யாருய்யா அது அனுஷ்-கா பத்திப் பேசும்போது அபசகுணமா க-காவை இழுக்குறது?

  ReplyDelete
 20. //மொக்கராசு மாமா said...
  //செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...

  அவுங்க எப்பயோ கெழவி ஆகிட்டாங்க.. ஆமா அனுஷ்கா அண்ணி வயச சும்மா சொல்லுங்க பார்போம் உங்க போது அறிவ!!//

  20.

  இந்த மாதிரி விஷயங்கள்ல பொது அறிவே இல்லாம இருந்தாத் தான் சந்தோசமா இருக்க முடியும்//

  அப்புடிங்குறீங்க... ஆனா ஒல்கத்துலையே அப்பா மகன் ரெண்டு பேர் கூடவும் கிசுகிசுக்கபடும் ஒரே நடிகை அவுங்க மட்டும்தான்...//

  குடும்பச் சொத்தா இருப்பாங்களோ?

  ReplyDelete
 21. சினேகா, பிரசன்னா ரெண்டுபேருமே நல்ல நடிகர்கள், ரெண்டுபேரையுமே தமிழ் சினிமா அவ்வளவா கண்டுக்கல, எதோ குடும்பமாவது நல்லா நடத்தட்டும்..

  ReplyDelete
 22. //நல்ல நடிகை. ரொம்ப வருசமா நடிச்சுட்டாங்க. போதும்..போய் நல்லபடியா வாழட்டும்..எங்கிருந்தாலும் வாழ்க.//

  துக்கம் தொண்டைய அடிக்குற மாதிரி தெரியுதே, இனி நானா யோசிச்சேன்ல சினேகா படம் வராதா?

  ReplyDelete
 23. // Dr. Butti Paul said...
  சினேகா, பிரசன்னா ரெண்டுபேருமே நல்ல நடிகர்கள், ரெண்டுபேரையுமே தமிழ் சினிமா அவ்வளவா கண்டுக்கல, எதோ குடும்பமாவது நல்லா நடத்தட்டும்..//

  கண்டுக்காம இருந்தா நல்லா இருப்பாங்க..

  ReplyDelete
 24. //Dr. Butti Paul said...
  //நல்ல நடிகை. ரொம்ப வருசமா நடிச்சுட்டாங்க. போதும்..போய் நல்லபடியா வாழட்டும்..எங்கிருந்தாலும் வாழ்க.//

  துக்கம் தொண்டைய அடிக்குற மாதிரி தெரியுதே, இனி நானா யோசிச்சேன்ல சினேகா படம் வராதா?//

  டிக்கெட் வாங்குன பத்மினி படமே போடுறோம், சிநேகா படம் போட மாட்டமா?

  ReplyDelete
 25. எல்லோருக்கும் வணக்கமுங்க!

  ReplyDelete
 26. இரவு வணக்கம்,பொன் சுவார்!அனுஷ்காவுக்கும் செங்கோவி ப்ளாக் மூலமா அத(வாழ்த்தை)தெரிவிச்சுக்கிறேன்!பாப்பாவுக்கு தமிழ் புரியுமில்ல?அப்புறம்,லெமன் சாதம் நன்னாயிருந்திச்சு!செய்முறை சொல்லலியே?

  ReplyDelete
 27. Yoga.S.FR said...
  இரவு வணக்கம்,பொன் சுவார்!அனுஷ்காவுக்கும் செங்கோவி ப்ளாக் மூலமா அத(வாழ்த்தை)தெரிவிச்சுக்கிறேன்!பாப்பாவுக்கு தமிழ் புரியுமில்ல?அப்புறம்,லெமன் சாதம் நன்னாயிருந்திச்சு!செய்முறை சொல்லலியே?
  //
  அதான் செய்யவே இல்லையே

  ReplyDelete
 28. //கோகுல் said...
  எல்லோருக்கும் வணக்கமுங்க!//

  வணக்கோம்.

  ReplyDelete
 29. //Yoga.S.FR said...
  இரவு வணக்கம்,பொன் சுவார்!அனுஷ்காவுக்கும் செங்கோவி ப்ளாக் மூலமா அத(வாழ்த்தை)தெரிவிச்சுக்கிறேன்!பாப்பாவுக்கு தமிழ் புரியுமில்ல?அப்புறம்,லெமன் சாதம் நன்னாயிருந்திச்சு!செய்முறை சொல்லலியே?//

  பொன் சுவார் ஐயா..

  செய்முறையா..இன்னுமா என்னை மதிச்சுக் கேட்கீங்க..நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நாடு முன்னேற.

  ReplyDelete
 30. ஓகேண்ணே, நாளை சந்திப்போம், ஒரு ஆணி ரொம்ப நாளா புடுங்கறேன், கழண்டு வர மாட்டேங்குது, என்னன்னு கொஞ்சம் பாத்துட்டு வந்துடறேன்..

  ReplyDelete
 31. //கோகுல் said...
  Yoga.S.FR said...
  இரவு வணக்கம்,பொன் சுவார்!அனுஷ்காவுக்கும் செங்கோவி ப்ளாக் மூலமா அத(வாழ்த்தை)தெரிவிச்சுக்கிறேன்!பாப்பாவுக்கு தமிழ் புரியுமில்ல?அப்புறம்,லெமன் சாதம் நன்னாயிருந்திச்சு!செய்முறை சொல்லலியே?
  //
  அதான் செய்யவே இல்லையே//

  மஞ்சப்பொடி எல்லாம் போட்டு, வெங்காயத்தை பொன்னிறமா வதக்குனேன்..செய்யவே இல்லைன்னு சொல்றீங்க?

  ReplyDelete
 32. ஒங்களுக்கு மெலியணும்னு ஆச வரலாம் தப்பில்ல,அதுக்காக பாழும் கெணத்துலயா போயி விழணும்???

  ReplyDelete
 33. //Dr. Butti Paul said...
  ஓகேண்ணே, நாளை சந்திப்போம், ஒரு ஆணி ரொம்ப நாளா புடுங்கறேன், கழண்டு வர மாட்டேங்குது, என்னன்னு கொஞ்சம் பாத்துட்டு வந்துடறேன்..//

  ஓகேய்யா..பார்ப்போம்..இரவு வணக்கம்.

  ReplyDelete
 34. யோகா ஐயா.. இரவு வணக்கங்கள்....அப்புறம் நான் கெளம்புற நேரம் வந்துடுச்சு.. எல்லாருக்கும் குட் நைட்....

  ReplyDelete
 35. // Yoga.S.FR said...
  ஒங்களுக்கு மெலியணும்னு ஆச வரலாம் தப்பில்ல,அதுக்காக பாழும் கெணத்துலயா போயி விழணும்???//

  அதுக்காகத் தான் யோசிக்கிறேன்..

  ReplyDelete
 36. // மொக்கராசு மாமா said...
  யோகா ஐயா.. இரவு வணக்கங்கள்....அப்புறம் நான் கெளம்புற நேரம் வந்துடுச்சு.. எல்லாருக்கும் குட் நைட்....//

  குட் நைட்..புவ்னா நோட்டே.

  ReplyDelete
 37. கோகுல் said...
  மஞ்சப்பொடி எல்லாம் போட்டு, வெங்காயத்தை பொன்னிறமா வதக்குனேன்..செய்யவே இல்லைன்னு சொல்றீங்க?////மஞ்சப்பொடி போட்டது ......................கையா!என்னமோ கூடவே இருந்து வெங்காயம்! வெட்டிக் குடுத்தாப்பில சொல்லுறீங்க!?

  ReplyDelete
 38. கலந்துபல விடயங்களை சொல்லி லெமன் சாதம் சமைக்கும் ஐயாவே இரவு வணக்கம்!

  ReplyDelete
 39. //
  Yoga.S.FR said...
  கோகுல் said...
  மஞ்சப்பொடி எல்லாம் போட்டு, வெங்காயத்தை பொன்னிறமா வதக்குனேன்..செய்யவே இல்லைன்னு சொல்றீங்க?////மஞ்சப்பொடி போட்டது ......................கையா!என்னமோ கூடவே இருந்து வெங்காயம்! வெட்டிக் குடுத்தாப்பில சொல்லுறீங்க!?//

  டேஷ் என்ன? மச்சினியா?

  ReplyDelete
 40. சபையில் இருப்போருக்கும் இரவு வணக்கம்!

  ReplyDelete
 41. // தனிமரம் said...
  கலந்துபல விடயங்களை சொல்லி லெமன் சாதம் சமைக்கும் ஐயாவே இரவு வணக்கம்!//

  வணக்கம் நேசரே.

  ReplyDelete
 42. அப்படியே சிம்ரனுக்கும் ஜூஸ் புழிஞ்சா தேவலாம்

  ReplyDelete
 43. டாக்டர்,அப்புறம் மொ.ரா.மாமா,கோகுல் இன்னும் கும்மியில இருக்கவங்க எல்லோருக்கும் இரவு வணக்கம்!அப்பா டக்கர்ஸ் விடை பெற்று விட்டார்கள் போல் தெரிகிறது.குட் நைட்!(அவங்களுக்கு) நாம தொடருவோம்!

  ReplyDelete
 44. சினேஹாவுக்கு கலியாணமா?நம்ம நிரூபன் தேவதாஸ் பாடல் போடப்போறார்!ஹீ ஹீ

  ReplyDelete
 45. பரீட்சை எழுதப் போனவர் படும் பாடு சிரிப்பதா அழுவதா??

  ReplyDelete
 46. // கோகுல் said...
  அப்படியே சிம்ரனுக்கும் ஜூஸ் புழிஞ்சா தேவலாம்//

  ஆமாம்யா..அதுவும் ரவுண்டு ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்..

  ReplyDelete
 47. எனக்கு அதிகம் லெமன் சாதமோ தயிர் சாதமோ பிடிக்காது நித்திரை தூக்கும் பாஸ்!

  ReplyDelete
 48. //தனிமரம் said...
  சினேஹாவுக்கு கலியாணமா?நம்ம நிரூபன் தேவதாஸ் பாடல் போடப்போறார்//

  நிரூ பாவம் தான்..பெரிய்யா கவிதை எழுதி அழுவார்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 49. மொ.ரா.மாமா,வும் விடை பெற்று விட்டார்கள் போல் தெரிகிறது,புவனாவை நோட் பண்ணுங்க!

  ReplyDelete
 50. குஸ்பூவைப் புழிவதில் பலர் கண்ணாகத்தான் இருக்கிறாங்க போல!

  ReplyDelete
 51. //தனிமரம் said...
  பரீட்சை எழுதப் போனவர் படும் பாடு சிரிப்பதா அழுவதா??//

  கல்வி கற்க ஆசைப்பட்டது ஒரு தப்பா?

  ReplyDelete
 52. ஏன்யா, வெளிய தப்புப் பண்ணா உள்ள அனுப்பலாம், உள்ளயே தப்புப் பண்ணா, எங்கய்யா அனுப்புறது?

  //

  ஒரு வேலை வெளிய அனுப்பிடுவாங்கன்னு செய்யுராங்களோ?

  ReplyDelete
 53. செங்கோவி said...அதுவும் ரவுண்டு ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்..///இப்புடி மத்தவங்கள கிண்டல் பண்ணித் தான் நாமளும்?!குண்டாயிட்டமோ?

  ReplyDelete
 54. //தனிமரம் said...
  எனக்கு அதிகம் லெமன் சாதமோ தயிர் சாதமோ பிடிக்காது நித்திரை தூக்கும் பாஸ்!//

  அப்போ ஆஃபீஸ் போகும்போது சப்பிட்டுட்டுப் போகலாமே..

  ReplyDelete
 55. பானுப்பிரியாவைப் போல அஞ்சுக்குட்டியா ??? சான்சே இல்ல பிரியாவின் நடிப்பு கண்சிமிட்டு நடணம் மங்காத்தாவுக்கு கிட்டவரமுடியாது.

  ReplyDelete
 56. // Yoga.S.FR said...
  செங்கோவி said...அதுவும் ரவுண்டு ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்..///இப்புடி மத்தவங்கள கிண்டல் பண்ணித் தான் நாமளும்?!குண்டாயிட்டமோ?//

  நான் கிண்டலாச் சொல்லலியே..பெருமையாத் தானே சொன்னேன்!

  ReplyDelete
 57. //தனிமரம் said...
  குஸ்பூவைப் புழிவதில் பலர் கண்ணாகத்தான் இருக்கிறாங்க போல!//

  நல்ல நோக்கம் தானே?

  ReplyDelete
 58. ஒரு புள்ள பத்தாப்பு படிக்க ஆசைப்பட்டது ஒரு குத்தமாய்யா? இந்த புதுச்சேரி அமைச்சர் பரிட்சைக்குப் பயந்துக்கிட்டு, வேற ஆளை அனுப்பிட்டுப் படற பாடு இருக்கே,

  //

  அமைச்சர் பரிட்சை எழுதறதை பத்திரிக்கைகள் பேட்டி எடுக்கப் போய் எழுதிட்டு வந்தது வேற யாரோவா இருக்க,திருடன் கையில் தேள்!

  ReplyDelete
 59. ஓடணும்,ரவுண்டு கட்டி ஓடணும்!யாரையாச்சும்?!விரட்டிக்கிட்டு ஓடணும்!(மெலியிறதுக்கு)

  ReplyDelete
 60. மெலியோனும் என்றால் பாரிஸ்க்கு வாங்கோ அதிகாலையில் வேலைக்கு ஓடுவதில் பாதி மெலிந்து விடுவீர்கள் சாட்சிக்கு யோகா ஐயாவைக் கேளுங்கள் உண்மை சொல்வார்!

  ReplyDelete
 61. // கோகுல் said...
  ஏன்யா, வெளிய தப்புப் பண்ணா உள்ள அனுப்பலாம், உள்ளயே தப்புப் பண்ணா, எங்கய்யா அனுப்புறது?

  //

  ஒரு வேலை வெளிய அனுப்பிடுவாங்கன்னு செய்யுராங்களோ?//

  அந்த ஐடியால தான் இப்படிப் பண்றாங்களா..இவங்களை ஏதாவது பாதாளச் சிறையில போட்டாத்தான் சரியா வரும்.

  ReplyDelete
 62. //தனிமரம் said...
  பானுப்பிரியாவைப் போல அஞ்சுக்குட்டியா ??? சான்சே இல்ல பிரியாவின் நடிப்பு கண்சிமிட்டு நடணம் மங்காத்தாவுக்கு கிட்டவரமுடியாது.//

  ஆமா பாஸ்..பானு பானு தான்..எம்மாம் பெரிய கண்ணு.

  ReplyDelete
 63. // Yoga.S.FR said...
  ஓடணும்,ரவுண்டு கட்டி ஓடணும்!யாரையாச்சும்?!விரட்டிக்கிட்டு ஓடணும்!(மெலியிறதுக்கு)//

  நல்ல ஐடியா தான்..வழக்க்ம்போல இதையும் நோட் பண்ணிக்கறேன்.

  ReplyDelete
 64. இந்த குரூப்பில கிட்டத்தட்ட ஒரு வாரமா"முக்கியமான"ஆளு ஒருத்தரக் காணமே?யாராச்சும் என்ன,ஏதுன்னு விசாரிச்சீங்களா?

  ReplyDelete
 65. //தனிமரம் said...
  மெலியோனும் என்றால் பாரிஸ்க்கு வாங்கோ அதிகாலையில் வேலைக்கு ஓடுவதில் பாதி மெலிந்து விடுவீர்கள் சாட்சிக்கு யோகா ஐயாவைக் கேளுங்கள் உண்மை சொல்வார்!//

  மும்பையும் அப்படித் தான் இருக்கும்..

  ReplyDelete
 66. அலைகள் ஓய்வதில்லைப் பாடல் அதில் ராதாவின் அந்த ஓட்டத்தைப் போல அருகில் பிந்துக்கோஸ்சைவிட்டு ஓடுங்கள் மெலிந்து போகலாம் விரைவில்!ஹீ ஹீ

  ReplyDelete
 67. //Yoga.S.FR said...
  இந்த குரூப்பில கிட்டத்தட்ட ஒரு வாரமா"முக்கியமான"ஆளு ஒருத்தரக் காணமே?யாராச்சும் என்ன,ஏதுன்னு விசாரிச்சீங்களா?//

  பன்னியாரா..அவர் ஏதோ முக்கியமான வேலையில இருக்காராம்...முடிச்சுட்டு வர்றேன்னாரு..

  என்ன வேலைன்னா, பூமிகாவைத் தேடி-ன்னு அடுத்த தொடர் ரெடி பண்றாராம்..

  ReplyDelete
 68. விசாரிக்கச் சொல்லி கமிசன் போடவா யோகா ஐயா!

  ReplyDelete
 69. Yoga.S.FR said...செய்முறை சொல்லலியே?//செங்கோவி said.பொன் சுவார் ஐயா..செய்முறையா..இன்னுமா என்னை மதிச்சுக் கேட்கீங்க..நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நாடு முன்னேற./// இல்ல நானும் "பேர்" வாங்கணுமில்ல,அதான்!!!

  ReplyDelete
 70. தமிழ்வாசி மழையில் நனைந்து காய்ச்சலில் ஓய்வு எடுக்கின்றார்!

  ReplyDelete
 71. // தனிமரம் said...
  அலைகள் ஓய்வதில்லைப் பாடல் அதில் ராதாவின் அந்த ஓட்டத்தைப் போல அருகில் பிந்துக்கோஸ்சைவிட்டு ஓடுங்கள் மெலிந்து போகலாம் விரைவில்!ஹீ ஹீ//

  ஹி..ஹி..இப்போ ராதாவே பிந்துகோஸ் மாதிரி தான் இருக்கு நேசரே.

  ReplyDelete
 72. பிரசன்னா-சிநேகா திருமணம்.

  மீண்டுமொரு நட்ச்சத்திர தம்பதி.
  மீண்டுமொரு.........?

  ReplyDelete
 73. // Yoga.S.FR said...
  Yoga.S.FR said...செய்முறை சொல்லலியே?//செங்கோவி said.பொன் சுவார் ஐயா..செய்முறையா..இன்னுமா என்னை மதிச்சுக் கேட்கீங்க..நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நாடு முன்னேற./// இல்ல நானும் "பேர்" வாங்கணுமில்ல,அதான்!!!//

  பேர்- என்றால் என்ன?

  ReplyDelete
 74. லெமன் சாதம் ரசபி சொல்லனும் என்றாள் செங்கோவி அண்ணாத்தையை நல்ல படம் எடுங்கள் முதலில் யோகா ஐயா !ஹீ ஹீ

  ReplyDelete
 75. "பூமிகா"வத் தேடுறதுக்கு இம்புட்டு நாளா?என்னமோ தேடிக் கண்டு புடிச்சுக் கொண்டாந்துடட்டும்.

  ReplyDelete
 76. //கோகுல் said...
  பிரசன்னா-சிநேகா திருமணம்.

  மீண்டுமொரு நட்ச்சத்திர தம்பதி.
  மீண்டுமொரு.........?//

  வாயை மூடும்யா.

  ReplyDelete
 77. செங்கோவி said...நல்ல ஐடியா தான்..வழக்கம்போல இதையும் நோட் பண்ணிக்கறேன்.///மொ.ரா மாமா புவனாவ நோட் பண்ணுற மாதிரியா?

  ReplyDelete
 78. வாத்தியாரே உள்ளே வெளியே பார்த்தீபன் படுத்துக்கு மீள் விமர்சனம் எழுதலாமே! ஐஸ்வர்யா லக்ஸ்மி சூப்பர் நடிப்பு .ஹீ ஹீ

  ReplyDelete
 79. //Yoga.S.FR said...
  "பூமிகா"வத் தேடுறதுக்கு இம்புட்டு நாளா?என்னமோ தேடிக் கண்டு புடிச்சுக் கொண்டாந்துடட்டும்.//

  தேடி, ஆராய்ச்சி பண்ணி அப்புறம் தானே எழுத முடியும்..

  ReplyDelete
 80. //தனிமரம் said...
  வாத்தியாரே உள்ளே வெளியே பார்த்தீபன் படுத்துக்கு மீள் விமர்சனம் எழுதலாமே! ஐஸ்வர்யா லக்ஸ்மி சூப்பர் நடிப்பு .ஹீ ஹீ//

  அது ஆபாசப்படம் ஆச்சே..நம்ம ப்ளாக்கோட மரியாதை என்னாகிறது?

  ReplyDelete
 81. ஓகே அவையோரே!இணைய இணைப்பு சுனங்குகிறது,மீண்டும் சந்திப்போம்அனைவருக்கும் இரவு வணக்கம்!

  ReplyDelete
 82. கடமை அழைப்பதலால் மீண்டும் இரவு வணக்கத்துடன் விடை பெறுகின்றேன் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்! பொன்நுயீ!

  ReplyDelete
 83. ஓகே அவையோரே!இணைய இணைப்பு சுனங்குகிறது,மீண்டும் சந்திப்போம்அனைவருக்கும் இரவு வணக்கம்!

  ReplyDelete
 84. ஓகே...நானும் கிளம்பறேன்..அனைவருக்கும் இரவு வணக்கம்..

  ஐயா, பொன் நுயி...அ துமா.

  ReplyDelete
 85. செங்கோவி said...பேர்- என்றால் என்ன?////அது,"பெயர்"எனப் பொருள்படும்!அடுத்து,நீங்கள் ஹிசாமிடம் வாங்கினீர்களே அப்படியும் பொருள்படும்!

  ReplyDelete
 86. நல்ல விளக்கம்..நன்றி ஐயா.

  ReplyDelete
 87. பொன் நுயி.அ துமா!!!

  ReplyDelete
 88. This comment has been removed by the author.

  ReplyDelete
 89. வணக்கம் மாப்பிள..
  என்னங்க என்னை கண்டவுடன் எல்லோரும் ஓடீட்டாங்க... பாவமய்யா திமுகவில குஷ்புவ பிழியப்போறாங்கன்னு கேக்கும்போதே மனசு வலிக்குது..!!

  ஏன்யா ஒரு அமைச்சர் படிக்கோனும்ன்னு முடிவெடுத்தது தப்புங்களா..?

  ReplyDelete
 90. உண்மையில் அன்னைக்கு எதை பிழிஞ்சிங்கன்னு கடைசிவரை சொல்லவேயில்ல!

  ReplyDelete
 91. உங்க எலுமிச்சை சாதம் மிக அருமை... படிக்கும் போதே ருசிச்சிதுன்னா பார்த்துக்கோங்களேன்!

  ReplyDelete
 92. பாஸ் அனுஷ்கா வயசை சொல்லவா?ஹி.ஹி.ஹி.ஹி......பப்ளிக்கா சொல்லாம சொல்லுறன் பாருங்க....

  கரெக்டா சொன்னா அஞ்சலிக்கு மேல ஜஸ்வர்யாராய்க்கு கீழ(அட வயசு)

  ReplyDelete
 93. சினேகாவுக்கு கல்யாணமா அப்ப நிரூபன்,தனிமரம்,இவங்களுக்கு பல்ப்பா?ஹி.ஹி.ஹி.ஹி........

  ReplyDelete
 94. குஸ்புவை ஜுஸ் புளிஞ்சா எங்களுக்கும் ஓரு 10 லீட்டர் அனுப்பிவைங்க...ஹி.ஹி.ஹி.ஹி......

  ReplyDelete
 95. அஞ்சலி அக்கா என்ன அழகா இருக்காங்க?

  ReplyDelete
 96. 100 வது கமண்ட்

  ///ஆனா பானுப்ப்ரியாக்கு அப்புறம், பார்த்த உடனே..ம்க்கும்..அதாவது...சரி, அது எதுக்கு ...ஹேப்பி பர்த் டே அனுஷ் குட்டி!////

  அதே அதே.......

  ReplyDelete
 97. தலை....
  கலக்கல் ....

  ReplyDelete
 98. அழகான அஞ்சலி புகைப்படங்களை பகிர்ந்த செங்கோவிக்கு நன்றி

  ReplyDelete
 99. அழகான தகவல்கள் ,கடைசி நல்ல நகைச்சுவை ,லெமன் சாதம் அருமை ஹி ஹி

  ReplyDelete
 100. ஆஞ்...சலீ..!!!
  சும்மா மொக்கராசுமாமா ஸ்டைல்ல கூப்பிட்டு பாத்தேன்! ஆமா அஞ்சலி எதுக்கு?

  //நல்ல நடிகை. ரொம்ப வருசமா நடிச்சுட்டாங்க. போதும்..போய் நல்லபடியா வாழட்டும்..// ஆமாண்ணே ரொம்ப..அ..பழ்காசாயிட்டாங்க இல்ல!

  //எங்கிருந்தாலும் வாழ்க//
  தோ பார்ரா அண்ணன் பீல் பண்றாரு! :-)

  ReplyDelete
 101. ச்சே..அண்ணன் நமக்கு எவ்ளோ பரவாயில்ல..அண்ணனோட ஆபீஸ்ல பெண்கள் இருந்திருக்காய்ங்க..அண்ணனோட சாப்பாட்ட சாப்பிட்டிருக்காங்க.பாராட்டி வேற...!
  அண்ணன் விதவிதமா சமைச்சு அசத்தியிருப்பாரே! :-)

  ReplyDelete
 102. உலகிற்கு புதிய முறையில் லெமன் ரெசிப்பி அறிமுகபடுத்திய செங்கோவி அடுத்து என்ன ரெசிப்பி சொல்ல போறீங்க?

  ReplyDelete
 103. சரி என்னமோ அண்ணன் லாலா பாடியிருக்கார்! :-)

  ReplyDelete
 104. அட, மாப்பிள்ளை போட்டோ அப்டேட் பண்ணியிருக்கிங்க. நல்லா இருக்கு மாம்ஸ்.

  ReplyDelete
 105. குஷ்புவை சக்கையா பிழியரது இருக்கட்டும். ஹன்சிகா சக்கையான ரகசியம் என்னான்னு தெரியுமா?

  ReplyDelete
 106. @தமிழ்வாசி - Prakash
  அஞ்சலின்னாலே ஆழகுதான் இல்லையா? ஹி.ஹி..!

  ReplyDelete
 107. இனிய காலை வணக்கம் பாஸ்,

  நீண்ட நாளைக்கு அப்புறமா கும்மி களை கட்டியிருக்கு!
  ஆய் கலக்கல் தான்!

  ReplyDelete
 108. அட, அனுஷ்கா பானுப்பிரியா,
  ரெண்டு பேரையும் ஒப்பிட்டு என்னம்மா திங் பண்றாங்க

  ReplyDelete
 109. பாஸ் திமுக வில சேர நிறையப் பேருங்க ஐ மீன் உடம்பா இருக்கிற நிறையப் பேர் இப்பவே வரிசை கட்டியிருப்பாங்க என்று நினைக்கிறேன்.

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 110. லெமன் சாதம் செய்து நொந்தவர்!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 111. எலுமிச்சம் பழம் போடாது லெமன் சாதம் செய்து நொந்தவரை நினைத்தால் பாவமா இருக்கு!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  அப்புறமா சினேகாவினை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!

  இம் முறை நானா யோசித்தேனில் கொஞ்சம் காமெடிக் காரம் குறைவு!

  அடுத்த முறை இக் குறையினை நிவர்த்தி செய்வீங்க என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
 112. @தனிமரம்

  சினேஹாவுக்கு கலியாணமா?நம்ம நிரூபன் தேவதாஸ் பாடல் போடப்போறார்!ஹீ ஹீ
  //

  நமக்குத் தான் சினேகா பிடிக்காதே,
  அப்புறமா நாம எதற்கு கவலைப்படனும்

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 113. அருமை அண்ணே.

  சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆச்சு

  பேச்சிலர் சமையல் எப்பயுமே இப்பிடித்தான் வடிக்கும் போதே சாதம் சிவப்பா வர்றது எல்லாம் சகஜம் தானே இன்னும் ப்ளாக் அண்ட் வைட் இட்லி எல்லாம் செஞ்சு பார்த்து இருக்கேன் நான்

  ReplyDelete
 114. //ஆனா இதையும் சாப்பிட்டுப் பார்த்துட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டா கிங் ஆயிடுவேன்னு சொன்னா பாரு..அவளை நான் மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்..சண்டாளி..கிச்சன் பக்கமே போயிருக்க மாட்டா போலிருக்கே.//

  மாப்ள இந்த வரியை படிச்ச உடனே குபீர்னு சிரிச்சுட்டேன் ஆபிஸ்ல எல்லோரும் என்னையே பாக்குரானுங்க....

  ReplyDelete
 115. ஒரு கல்வி அமைச்சரே இந்த மாதிரி நடந்துக்கலேன்னா அப்புறம் எப்படிங்க... பாசாகலேன்னாலும் பெயில் ஆனா அமைச்சர்னு சொல்றீங்கன்னு அவரும் என்னவோ செஞ்சு புட்டார்... யாராவது சொல்லுங்களேன், பேப்பர் திருத்தும் போது செஞ்சிருந்தா கண்டு பிடிச்சு இருக்க முடியாதில்ல

  அந்த எலுமிச்சம் பழம் சாதம்... பழத்தை மிச்சம் செய்து செஞ்ச சாதம்னு பாராட்டியிருப்பான்களோ?

  ReplyDelete
 116. அந்த லெமன் சாதம் செய்முறையை ஒரு பதிவாப் போடுங்க... எங்களுக்கு ஏதாவது பாராட்டு (லாலா..லாலா) எல்லாம் கிடைக்குதான்னு பார்த்துட்டு சொல்றேன்....

  ReplyDelete
 117. மஞ்சப்பொடி எல்லாம் போட்டு, வெங்காயத்தை பொன்னிறமா வதக்குனேன்..செய்யவே இல்லைன்னு சொல்றீங்க?//

  லெமன் சாதத்துக்கு எதுக்கு வெங்காயம்?

  ReplyDelete
 118. காலை வணக்கம்,பொன் ஜூர்!

  ReplyDelete
 119. // கவி அழகன் said...
  அந்தமாதிரி //

  கவிஞர் என்ன சொல்ல வர்றாருன்னு புரியலியே...அந்த மாதிரின்னா எந்த மாதிரி?

  ReplyDelete
 120. //Yoga.S.FR said...
  காலை வணக்கம்,பொன் ஜூர்!//

  பொன் ஜூர் ஐயா.

  ReplyDelete
 121. காட்டான் said...
  //வணக்கம் மாப்பிள..//

  வணக்கம் மாம்ஸ்.

  //என்னங்க என்னை கண்டவுடன் எல்லோரும் ஓடீட்டாங்க... //

  நடு ராத்திரி தனியா வர்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு..

  //பாவமய்யா திமுகவில குஷ்புவ பிழியப்போறாங்கன்னு கேக்கும்போதே மனசு வலிக்குது..!!//

  பார்த்தா அப்படித் தெரியலியே..

  ReplyDelete
 122. // FOOD said...
  உண்மையில் அன்னைக்கு எதை பிழிஞ்சிங்கன்னு கடைசிவரை சொல்லவேயில்ல! //

  குஷ்பூவைப் பிழியலை சார்..அது மட்டும் கன்ஃபார்மாத் தெரியுது!

  ReplyDelete
 123. // சி.கருணாகரசு said...
  உங்க எலுமிச்சை சாதம் மிக அருமை... படிக்கும் போதே ருசிச்சிதுன்னா பார்த்துக்கோங்களேன்! //

  அந்தப் பொண்ணுக்கு ஏத்த ஜோடி நீங்க தாம்யா.

  ReplyDelete
 124. K.s.s.Rajh said...
  //பாஸ் அனுஷ்கா வயசை சொல்லவா?ஹி.ஹி.ஹி.ஹி......//

  யோவ், உமக்கு இதே வேலையாப் போச்சு..அடுத்த வரியை நான் படிக்கலை, படிக்கலை..

  //குஸ்புவை ஜுஸ் புளிஞ்சா எங்களுக்கும் ஓரு 10 லீட்டர் அனுப்பிவைங்க...//

  நான் என்ன மொத்த காண்ட்ராக்டா எடுத்து வச்சிருக்கேன்?


  //அஞ்சலி அக்கா என்ன அழகா இருக்காங்க?//

  அக்காவை அப்படில்லாம் ரசிக்கக்கூடாதுய்யா!

  ReplyDelete
 125. // NAAI-NAKKS said...
  தலை....கலக்கல் ....//

  தலை மட்டும் தானா?

  ReplyDelete
 126. // M.R said...
  அழகான தகவல்கள் ,கடைசி நல்ல நகைச்சுவை ,லெமன் சாதம் அருமை //

  அருமையா? உங்களுக்கு ஒருநாளைக்கு பார்சல் அனுப்புறேன்..

  ReplyDelete
 127. ஜீ... said...
  // ஆமா அஞ்சலி எதுக்கு?//

  எதுக்கா?...பார்க்க, ரசிக்க!

  // ஆமாண்ணே ரொம்ப..அ..பழ்காசாயிட்டாங்க இல்ல! //

  அதைத் தான் அப்படிச் சொன்னேன்!!

  //தோ பார்ரா அண்ணன் பீல் பண்றாரு! :-)//

  அண்ணனும் மனுசன் தானேய்யா..

  //அண்ணன் விதவிதமா சமைச்சு அசத்தியிருப்பாரே! :-)//

  ஆமா, லெமனே இல்லாம லெமன் சாதம் பண்ணோம்ல?

  ReplyDelete
 128. தமிழ்வாசி - Prakash said...
  //உலகிற்கு புதிய முறையில் லெமன் ரெசிப்பி அறிமுகபடுத்திய செங்கோவி அடுத்து என்ன ரெசிப்பி சொல்ல போறீங்க?//

  குடல் கறி!

  //அட, மாப்பிள்ளை போட்டோ அப்டேட் பண்ணியிருக்கிங்க. நல்லா இருக்கு மாம்ஸ்.//

  இப்போத் தான் கண்ணு தெரியுதா?

  //குஷ்புவை சக்கையா பிழியரது இருக்கட்டும். ஹன்சிகா சக்கையான ரகசியம் என்னான்னு தெரியுமா?//

  தலைவியை யாருய்யா புழிஞ்சாங்க?

  ReplyDelete
 129. நிரூபன் said...
  //இனிய காலை வணக்கம் பாஸ்,//

  வணக்கம்

  //ஆய் கலக்கல் தான்! //

  ஆய் கலக்கலா..என்ன ஆளுய்யா நீரு!

  //லெமன் சாதம் செய்து நொந்தவர்!//

  கூட இருந்து சாப்பிட்டவரே நொந்தார்.

  //இம் முறை நானா யோசித்தேனில் கொஞ்சம் காமெடிக் காரம் குறைவு!//

  அது இவ்வாரச் செய்திகளைப் பொறுத்தது, இல்லியா!

  ReplyDelete
 130. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  //அருமை அண்ணே...சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆச்சு //

  ஏதோ ஜல்லிக்கட்டு காளையை அடக்கிட்ட மாதிரிச் சொல்றீங்க..

  //பேச்சிலர் சமையல் எப்பயுமே இப்பிடித்தான் வடிக்கும் போதே சாதம் சிவப்பா வர்றது எல்லாம் சகஜம் தானே //

  சாதம் சிவப்பாவா..என்னய்யா அது..ரெசிப்பி இருக்கா?

  ReplyDelete
 131. // சசிகுமார் said...
  மாப்ள இந்த வரியை படிச்ச உடனே குபீர்னு சிரிச்சுட்டேன் ஆபிஸ்ல எல்லோரும் என்னையே பாக்குரானுங்க....//

  அப்போ நீங்களும் ஆஃபீஸ்ல வேலை பார்க்கலை..ரைட்டு!

  ReplyDelete
 132. suryajeeva said...
  // பேப்பர் திருத்தும் போது செஞ்சிருந்தா கண்டு பிடிச்சு இருக்க முடியாதில்ல //

  அவர் பரிட்சை எழுதினது தமிழ்நாட்டுல..அதனால அவரால் ஒன்னும் பண்ண முடியாது..இப்போ தேடறதும் நம்ம போலீஸ் தான்.

  //அந்த எலுமிச்சம் பழம் சாதம்... பழத்தை மிச்சம் செய்து செஞ்ச சாதம்னு பாராட்டியிருப்பான்களோ?//

  அந்தப் புள்ளையைக் காப்பாத்தறதுல என்ன ஒரு அக்கறை!

  ReplyDelete
 133. // Lingesh said...
  அந்த லெமன் சாதம் செய்முறையை ஒரு பதிவாப் போடுங்க... எங்களுக்கு ஏதாவது பாராட்டு (லாலா..லாலா) எல்லாம் கிடைக்குதான்னு பார்த்துட்டு சொல்றேன்....//

  பதிவாப் போடற அளவுக்கு ஒன்னுமில்லை..இங்கேயே சொல்றேன்..

  எண்ணெய் ஊத்தணும்..கடுகு, சீரகம் மாதிரி பொடுசா என்னென்ன இருக்கோ அதைப் போடுங்க..வெங்காயத்தையும் போட்டு வதக்குங்க..மஞ்சப்பொடியைத் தூவுங்க..லெமன் சாதக் கலர் வந்திடும்..அப்புறம் முடிஞ்சா லெமனைப் புழிங்க.

  ReplyDelete
 134. // Jagannath said...
  லெமன் சாதத்துக்கு எதுக்கு வெங்காயம்? //

  இதைத் தான் எங்க வீடலயும் கேட்டாங்க..அப்போ லெமன் சாதத்துக்கு வெங்காயம் போடக்கூடாதா..ஹிசாமு, பாவம்யா நீரு!

  ReplyDelete
 135. சரி,இன்னிக்கு(நாளைக்கு,11.11.11.)ஒரு விசேஷமான நாளு.என்ன பதியப் போறீங்க?

  ReplyDelete
 136. சின்னதா ஒரு தப்பிருக்கு!யாருமே கண்டுக்கலை!அது என்னன்னா,///ஆஃபீசுக்கு டிஃபன்ல எடுத்திட்டுப் போனோம்///அப்புறம்,டிபனை கிச்சன்ல வைக்கப்போனா////"ஃபாக்ஸ்" இடையில வரணுமே?

  ReplyDelete
 137. செங்கோவி said...// Jagannath said...லெமன் சாதத்துக்கு எதுக்கு வெங்காயம்? //இதைத் தான் எங்க வீடலயும் கேட்டாங்க..அப்போ லெமன் சாதத்துக்கு வெங்காயம் போடக்கூடாதா..ஹிசாமு,பாவம்யா நீரு!///கடேசில "அவர"வெங்காயம்னுட்டிங்க!

  ReplyDelete
 138. நீங்களா ஜோசித்தது கலக்கல்!!

  ReplyDelete
 139. எப்படிங்க இப்படியெல்லாம்?

  ReplyDelete
 140. \\சிநேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் இதுன்னு ரொம்ப நாளாவே கிசுகிசு.\\ நான் ஒருபோதும் நடிகையைத் திருமணம் செய்யமாட்டேன்னு சொன்னவன் இந்தாளு, எப்படி மாறினான்???....

  ReplyDelete
 141. ரெண்டு லேமன்னு சொல்லி கீழே ரெண்டு பேரோட படம், அவங்க ரெண்டு கையும்.... ஒன்னும் விளங்கலே.

  ReplyDelete
 142. ஆஹா அணுஷ்கா பிறந்த நாளை மிஸ் பண்ணிட்டமோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.