Sunday, November 20, 2011

அதுவா?......................இதுவா?(நானா யோசிச்சேன்)

டிஸ்கி-1: தலைப்பில் உள்ள அது ‘அந்த’ அது அல்ல.

டிஸ்கி-2: தலைப்பில் உள்ள இதுவும் ‘அந்த’ இது அல்ல.

நெஞ்சைத் தொட்ட வரிகள் :

உங்கப்பனுக்கும் பேபே
உங்க பாட்டனுக்கும் பேபே
காவலுக்கு வந்தவனே பேபே
உன் காதிலொரு பூ முடிப்பேன் பேபே
அடிச்சாலும் பேபே
பிடிச்சாலும் பே - நீ
கிட்ட வந்து முட்ட வந்தா பேபே.

பதிவர் புலம்பல் :
ஆஃபீசில் வேலை ஜாஸ்தி ஆகிடுச்சு. போன வாரம் முழுக்கவே நெட் பக்கம் வர முடியலை..டீம் சைஸ் பெருசாகிடுச்சு..கூட ரெண்டு பிராஜக்ட்ஸையும் கொடுத்துட்டாங்க..அதனால.......

இனிமேல் என் பதிவுகளில் எல்லாக் கமெண்ட்ஸ்க்கும் பதில் போட முடியாதுங்கிறதை வருத்தத்தோட சொல்லிக்கிறேன். கும்மியிலயும் அதிகம் கலந்துக்க முடியாது. இதுவரை என்னோட கும்மி அடித்த அனைவருக்கும் நன்றி...என்னோட கமெண்ட்ஸை ரசிக்கவும் இங்க ஆள் உண்டு..அவங்ககிட்டயும் ஒரு சாரி சொல்லிக்கிறேன்..

பதிவு போடும் நேரமும் மாறுது. இப்போல்லாம் வீட்டுக்கு வரவே லேட் ஆகிடுது. அதனால எப்போ ஃப்ரீயா இருக்கிறேனோ அப்போ பதிவு வலையேறும். கரெக்டா 11.30-12க்கு வரும்னு நண்பர்கள் எதிர்பார்க்க வேண்டாம்..அதுக்கு முன்னாடியும் வரலாம், பின்னாடியும் வரலாம்!
மீள்பதிவு மாதிரி.....மீள்படம்!
ஓட்டுப் போட்டவனுக்கும் பேபே:
”அறிவிக்கப்படாத பஸ் கட்டண உயர்வை திமுக அரசு மறைமுகமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.”-அப்படீன்னு போன ஆட்சியைப் பத்தி அம்மையார் சொன்னாரு..அதுக்கு என்ன அர்த்தம்னு இப்போப் புரிஞ்சுபோச்சு..’அறிவிக்காம உயர்த்துனாத்தான் அதிர்ச்சி-சொல்லி அடிச்சா அதிர்ச்சி இல்லை’-ங்கிறதைத் தான் அப்பவே தெளிவாச் சொல்லியிருக்காங்க. அதனால இப்போ தெளிவா சொல்லிட்டு பால்-பஸ் கட்டணம்-மின் கட்டணம்னு எல்லாத்தையும் ஏத்தியிருக்காங்க..

‘தனித்திரு-விழித்திரு-பசித்திரு’ கொள்கையை கரெக்டா ஃபாலோ பண்றது அம்மையார் தான்..எப்பவும் மக்களோடு கலந்து பழகுறதே கிடையாது, தனியாவே இருக்காங்க. ரொம்ப விழிப்பா எப்படா எதைடா ஏத்துவோம்/தூக்குவோம்னு தடாலடியா பயங்கர பசில இருக்கிற மாதிரி என்னத்தையாவது பண்ணிடறாங்க..ஒன்னொன்னா உயர்த்துவோம்னு கூட யோசிக்காம, ஒரேயடியா எல்லாத்தையும் ஏத்துனா, பட்ஜெட்ல துண்டு விழற ஃபேமிலீஸ்க்கு இனி வேட்டியே விழுமே..

இதெல்லாம் பரவாயில்லை, சைடு கேப்ல கலைஞர் ‘நான் ஒருமுறைகூட விலையை உயர்த்துனதே இல்லை’ன்னு சொல்லியிருக்காரு பாருங்க..அதைத்தான் தாங்க முடியலை.இதுக்காகவாவது இந்தம்மா விலையை உயர்த்தியிருக்கக்கூடாது..இப்போப் பாருங்க, கஷ்டத்தோட கஷ்டமா எதையெல்லாம் கேட்கவேண்டியிருக்கு..

பெயர்ப் பொருத்தம் :
படத்தோட பேரு சிலநேரம் ஹீரோக்களுக்குப் பொருத்தமா அமைஞ்சுடறது உண்டு..உதாரணமா ரஜினிக்கு ‘தனிக்காட்டு ராஜா-போக்கிரி ராஜா’ கமலுக்கு ‘சகலகலா வல்லவன்’,. அவங்க நிஜவாழ்க்கைல எப்படியோ, அப்படியே படத்தோட பேரும் அமையறது பெரிய விஷயம் தான்..

இப்போ அந்தவகையில் நம்ம விரல் வித்தைக்காரர் சிம்புவோட புதுப்படத்துக்கும் பொருத்தமான பேர் ஒன்னு வச்சிருக்காங்களாம்..ஆமாங்க, படத்தோட பேரு ‘மடையன்’.

ஓவராப் பேசிட்டமோ...!:
நம்ம வருங்கால முதல்வர் கேப்டர் மாதிரியே வருங்கால பிரதமர் ராகுல் காந்தியும் ஏதாவது உளறி வம்புல மாட்டுறதில் வல்லவர்..

உ.பி-ல போன வாரம் ஒரு மீட்டிங்ல பேசுன ராகுல் “ உத்தரபிரதேச வாலிபர்கள் வேலைக்காக பிச்சைக்காரர்களைப் போல மகாராஷ்டிரா மாநிலத்திடம் கையேந்துகிறார்கள்”-ன்னு சொல்லிப்புட்டாரு..இப்போ ‘எங்களை எப்படி பிச்சைக்காரங்கன்னு சொல்லமாம்’னு உ.பில ஒரே ரகளை..

இந்தியா மாதிரி தேசத்தில் எல்லா மாநிலக்காரர்களும் வேறுமாநிலத்தில் வேலை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கிறோம்..அது தான் இந்தியாக்கு பெருமையே..அதை பிச்சை எடுக்கிறதுன்னு சொல்றார்னா நம் இந்திய வரலாறு, பூகோளம் இத்யாதி பத்தி இவருக்கு எவ்ளோ ஞானம் இருக்கணும்..

அதுசரி, தாரளமயமாக்கல் மூலமா அமெரிக்கா மாதிரி நாடுகள்கிட்ட நாம புராஜக்ட் வாங்குறதையும் இப்படித்தான் சொல்வாரோ?

தீவிரமா யோசிச்சது:
எனக்கு ரொம்பநாளா ஒரு பிரச்சினை உண்டு..என்னன்னா ஃப்ரிட்ஜ்-வாஷிங் மெசின் ரெண்டையும் பேசும்போது மாத்தி மாத்திச் சொல்லிக் குழப்பிக்குவேன்..உதாரணமா “எங்க ஃப்ரிட்ஜ்ல ஏதோ பிரச்சினை இருக்கு..நேத்து 2 செட் ட்ரெஸ் தான் போட்டேன். ஆனாலும் அதைக்கூட சரியாத் துவைக்க மாட்டெங்குது “-ன்னு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஒருநாள் சொன்னேன்..அவங்க அரண்டு போய் “ஃப்ரிட்ஜ் எப்படிய்யா துவைக்கும்? அதுக்குள்ள ஏன்யா துணியைப் போட்டே?”ன்னு கேட்டாங்க. பிறகு நான் சுதாரிச்சுக்கிட்டு “ஹி..ஹி..ஃப்ரிட்ஜ் இல்லே, வாஷிங் மெசின்..மாத்திச்சொல்லிட்டேன்..ஹி..ஹி”ன்னேன்..

ஆனால் ஃப்ரிட்ஜ்க்கும் வாஷிங் மெசினுக்கும் வித்தியாசம் தெரியாதோன்னு நினைச்சுடாதீங்கப்பா..நிலைமை அந்தளவுக்கு மோசம் இல்லை..ஃப்ரிட்ஜ்க்கு சைடுல கதவு இருக்கும், வாஷிங் மெசினுக்கு டாப்ல கதவு இருக்கும்.பார்த்தவுடனே டக்னு சொல்லிடுவேன்..(இப்போ ஆட்டோமெடிக் வாஷிங் மெசின்ல சடுல டோர் வச்சு, கொஞ்சம் கன்ஃபியூஸ் பண்றாங்க..).

சரி, இப்போ அப்படி மாத்தி மாத்திப் பேசறதால பெரிய சிக்கல்ல மாட்டியிருக்கேன்..

எங்க வீட்ல பெரிய வாஷிங் மெசின் வாங்கணும்னு சொல்லிட்டாங்க. ‘இப்போ எதுக்கு?’ன்னு கேட்டப்போ ‘நீங்க மட்டும் பெருசாகிட்டே போவீங்க..வாஷிங் மெசின் பெருசாகக்கூடாதா?’ன்னு கேட்டு கேவலப்படுத்திட்டாங்க..சரி, அது வழக்கமா படுத்துறது தானே..அதனால புது வாஷிங் மெசின் வாங்கியாச்சு. இப்போ பழசை என்ன செய்யன்னு யோசனை..

எங்க வீட்டம்மா கர்ணன் பரம்பரை.அதனால எங்க கம்பெனில வேலை பார்க்கிற யாரவது லேபருக்குக் கொடுத்திடலாம்னு சொல்லிட்டாங்க. நானும் ஒருத்தர்கிட்ட எடுத்துக்கச் சொன்னேன். அவரும் அடுத்த வெள்ளிக்கிழமை வந்து எடுத்துக்கறேன்னு சொல்லிட்டார்.

நேத்து வீட்டுக்குப்போனதும் பெருமையா “சொல்லிட்டேன்மா..அடுத்த வெள்ளிக்கிழமை வந்து ஃப்ரிட்ஜை எடுத்துட்டுப் போறேன்னு சொல்லியிருக்கார்” நு சொல்லிட்டேன்..அவ்வளவு தான்..

“அடப்பாவி மனுசா..நான் வாஷிங் மெசினைத் தானய்யா கொடுக்கச் சொன்னேன்..இப்படி ஃப்ரிட்ஜைக் கொடுத்துட்டு வந்து நிக்கிறீங்களே......”ன்னு ஒரே பாட்டு.

“இல்லைம்மா..வாஷிங் மெசின் தான்..மாத்திச் சொல்லிட்டேன்”

“சரி, என்கிட்ட தான் மாத்திச் சொன்னீங்களா..இல்லே அவர்கிட்டயும் மாத்திச் சொல்லிட்டீங்களா?”

நியாயமான கேள்வி தான்..இப்போ அதைத் தான் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருக்கேன்..அவர்கிட்ட என்ன சொல்லியிருப்பேன்..ஃப்ரிட்ஜா..வாஷிங் மெசினா? ஒருவேளை வந்து ஃப்ரிட்ஜைத் தூக்கிட்டுப் போயிருவாரோ?ம்...எடுத்துக்கோங்கன்னு சொனவுடனே அவர் முகம் ரொம்ப பிரகாசம் ஆச்சே..அப்போ ஃப்ரிட்ஜுன்னு தான் சொல்லிட்டமோ...என்ன சொல்லியிருப்பேன்..அதுவா..இதுவா?


ஜீகே கோர்ஸ்:
இவர் தான் அனுஷ்கா.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

 1. முதல் ஃப்ரிட்ஜ்க்கும் வாஷிங் மெசின்

  ReplyDelete
 2. ஏன்ணே முன் பின் நமீதா படம் கிளுகிளு குளுகுளு....

  ReplyDelete
 3. //K.s.s.Rajh said...
  முதல் ஃப்ரிட்ஜ்க்கும் வாஷிங் மெசின்//

  முதல் வாஷிங் மெசினுக்கும் ஃப்ரிட்ஜ் .

  ReplyDelete
 4. //K.s.s.Rajh said...
  ஏன்ணே முன் பின் நமீதா படம் கிளுகிளு குளுகுளு....//

  நமீதான்னாலே குளுகுளு தானே...!

  ReplyDelete
 5. மீராஜஸ்மினை நீண்ட நாளுக்கு பிறகு பதிவுலகில் பாக்கின்றேன் என் தளத்தில் ஒரு முறை அவர் படத்தை போட்டுருந்தேன்...அதுக்குப்பிறகு உங்கள் தளத்தில் தான் பாக்கிறன்..........

  பகிர்வுக்கு நன்றி(மீரா ஜஸ்மின் படத்துக்கு)

  ReplyDelete
 6. // K.s.s.Rajh said...
  மீராஜஸ்மினை நீண்ட நாளுக்கு பிறகு பதிவுலகில் பாக்கின்றேன் என் தளத்தில் ஒரு முறை அவர் படத்தை போட்டுருந்தேன்...அதுக்குப்பிறகு உங்கள் தளத்தில் தான் பாக்கிறன்..........

  பகிர்வுக்கு நன்றி(மீரா ஜஸ்மின் படத்துக்கு)//

  என்னமோ மீரா ஜாஸ்மினே கிடைச்சுட்ட மாதிரி கிஸ்ராஜா ஃபீல் பண்றாரே..

  ReplyDelete
 7. ////நியாயமான கேள்வி தான்..இப்போ அதைத் தான் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருக்கேன்..அவர்கிட்ட என்ன சொல்லியிருப்பேன்..ஃப்ரிட்ஜா..வாஷிங் மெசினா? ஒருவேளை வந்து ஃப்ரிட்ஜைத் தூக்கிட்டுப் போயிருவாரோ?ம்...எடுத்துக்கோங்கன்னு சொனவுடனே அவர் முகம் ரொம்ப பிரகாசம் ஆச்சே..அப்போ ஃப்ரிட்ஜுன்னு தான் சொல்லிட்டமோ...என்ன சொல்லியிருப்பேன்..அதுவா..இதுவா?///

  ஏன்ணே இம்புட்டு அப்பாவியா இருக்கிறீங்களே...........

  ReplyDelete
 8. @
  செங்கோவி said...
  // K.s.s.Rajh said...
  மீராஜஸ்மினை நீண்ட நாளுக்கு பிறகு பதிவுலகில் பாக்கின்றேன் என் தளத்தில் ஒரு முறை அவர் படத்தை போட்டுருந்தேன்...அதுக்குப்பிறகு உங்கள் தளத்தில் தான் பாக்கிறன்..........

  பகிர்வுக்கு நன்றி(மீரா ஜஸ்மின் படத்துக்கு)//

  என்னமோ மீரா ஜாஸ்மினே கிடைச்சுட்ட மாதிரி கிஸ்ராஜா ஃபீல் பண்றாரே////

  இந்த நடுச்சாம நேரத்தில்(11.51)மீராஜஸ்மின் படம் மீராஜஸ்மினே நேரில் இருப்பது போல தெரியுது...ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 9. //K.s.s.Rajh said...

  ஏன்ணே இம்புட்டு அப்பாவியா இருக்கிறீங்களே...........//

  அப்பாவியா இருந்தா நல்லது தானேய்யா?

  ReplyDelete
 10. // K.s.s.Rajh said...
  இந்த நடுச்சாம நேரத்தில்(11.51)மீராஜஸ்மின் படம் மீராஜஸ்மினே நேரில் இருப்பது போல தெரியுது...ஹி.ஹி.ஹி.ஹி//

  அது சைஸ் என்ன? உங்க சைஸ் என்ன? ஏன்யா இந்த விபரீத ஆசை?

  ReplyDelete
 11. மூணாவது படத்தில் பஞ்சைக்கலர் சாரியில் பின்பக்கம் மட்டும் தெரியுர பிகர் யாரு சங்கவியா சங்கவி மாதிரித்தான் தெரியுது

  ReplyDelete
 12. கிஸ்ராஜா, அந்த காதல் கடிதம் என்ன ஆச்சு?

  ReplyDelete
 13. // K.s.s.Rajh said...
  மூணாவது படத்தில் பஞ்சைக்கலர் சாரியில் பின்பக்கம் மட்டும் தெரியுர பிகர் யாரு சங்கவியா சங்கவி மாதிரித்தான் தெரியுது//

  அது சார்மி...எல்லாம் ஒன்னு தான்!

  ReplyDelete
 14. @
  செங்கோவி said...
  // K.s.s.Rajh said...
  இந்த நடுச்சாம நேரத்தில்(11.51)மீராஜஸ்மின் படம் மீராஜஸ்மினே நேரில் இருப்பது போல தெரியுது...ஹி.ஹி.ஹி.ஹி//

  அது சைஸ் என்ன? உங்க சைஸ் என்ன? ஏன்யா இந்த விபரீத ஆசை////

  எல்லாம் ஒரு அது இது தான் இதான் அதுவோ?

  நல்ல காலம் நாம் நமீதாவை சொல்லல மீராவுக்கே இப்படினா நமீதாவுக்கு எம்மாம் பெருசு நான் மனசை சொன்னேன்.....ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 15. @
  செங்கோவி said...
  கிஸ்ராஜா, அந்த காதல் கடிதம் என்ன ஆச்சு////

  தெளிவாக கேளுங்க பாஸ் இல்லாட்டி பின்னால வரும் யாராவது இது எதோ கடிதம் என்று அப்பறம் அதையே கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க ப்ளாக்கர் எடிட்டிங் செய்தபோது அதை வரைவாக சேமித்துள்ளேன்....ப்ளாக்கர் எடிட்டிங் வேலை முடிஞ்சது மறுபடியும் வரும்

  ReplyDelete
 16. // K.s.s.Rajh said...
  @
  செங்கோவி said...
  கிஸ்ராஜா, அந்த காதல் கடிதம் என்ன ஆச்சு////

  தெளிவாக கேளுங்க பாஸ் இல்லாட்டி பின்னால வரும் யாராவது இது எதோ கடிதம் என்று அப்பறம் அதையே கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க //

  நல்லது தானே..கிஸ்ராஜா-காதல் கடிதம்னு எஃபக்ட் கூடிக்கிட்டே போகுதே!!

  ReplyDelete
 17. ப்ளாக்கர் எடிட்டிங்குக்கும் வரைவாக சேமித்ததுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்குறீங்களா நம்ம தொழில் நுட்ப அறிவில் பெரியவேலை பாத்து எல்லாம் குழம்பி தளமே ஏடாகூடமாகிடுச்சி இப்பதான் எல்லாம் திரும்ப செட்டிங் செய்தேன் நாளைக்கு வரும்

  ReplyDelete
 18. ////நல்லது தானே..கிஸ்ராஜா-காதல் கடிதம்னு எஃபக்ட் கூடிக்கிட்டே போகுதே!!////

  ஏன் பாஸ் இப்படி எடுத்துக்கொடுக்குறீங்க ஏற்கனவே கிஸ்ராஜா என்று ஏன் கூப்பிடுறாங்க என்று பலபேர் கேட்டு ஒரே தொல்லை அவங்களுக்கு விளக்கம் கொடுத்தே ஏலாம இருக்கு.....

  இப்ப இதுவேறையா?

  ReplyDelete
 19. // K.s.s.Rajh said...
  ப்ளாக்கர் எடிட்டிங்குக்கும் வரைவாக சேமித்ததுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்குறீங்களா//

  நான் எப்பய்யா கேட்டேன்? எனக்கே அது புரியாதுன்னு தானே டீசண்டா வாயை மூடிக்கிட்டேன்............!

  ReplyDelete
 20. பதிவு அருமை(அது என்னமோ தெரியல ஓரு டெம்ளேட் கமண்ட் போட்டாதான் மனசுக்கு திருப்தியா இருக்கு)

  ரைட்டு நான் கெளம்புறன் நித்திரை வருது.....இரவிரவாக முழிச்சி நெட்ல உலாவுறது பழக்கமாகிடுச்சி
  இதை பார்த்து பிறகு ஒரு பிகரும் என்னை கலியாணம் கட்டாதுகள்....அவ்....அவ்

  குட்நைட் பாஸ்

  ReplyDelete
 21. இரவு வணக்கம் கிஸ்ராஜா..

  ReplyDelete
 22. நமீதா இரவு சாரி நல்ல இரவு(குட் நைட்)
  bye boss

  ReplyDelete
 23. நல்ல தொகுப்பு முதல் செய்தி ஆதங்கம் இரண்டாவது நக்கல் இருந்தாலும் படிப்பவர்க்கு சிரிப்பு

  ReplyDelete
 24. ஏற்கனவே கெட்டவன்னு ஒரு படம் இழுத்துக்கிட்டு நிக்குதே (அது கெட்டவனா, இல்ல நம்பி கெட்டவனா? எதுன்னாலும் ஓகே)... அது தவிர, மன்மதன், வேட்டை மன்னன் ன்னு பொருத்தமான பெயராவேதான் அவருக்கு அமையும்.

  ReplyDelete
 25. ஏற்கனவே பன்னி அண்ணன காணோம், இவரு வேற ஹயிட் அண்ட் சீக் வேளயாடுராறு.. எங்கே செல்லும் இந்த பதிவுலகம்.. சீக்கிரமா ப்ரோஜெக்ட்ஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு கும்மிக்கு திரும்புங்க.. இல்லனா, தக்காளி சுட்டே புடுவேன்..

  ReplyDelete
 26. //இனிமேல் என் பதிவுகளில் எல்லாக் கமெண்ட்ஸ்க்கும் பதில் போட முடியாதுங்கிறதை வருத்தத்தோட சொல்லிக்கிறேன்//

  பதில் மட்டும்தான் போடமாட்டீங்களா, இல்ல படிக்கவே மாட்டீங்கள?

  ReplyDelete
 27. அப்புறம் அந்த புது பிரிட்ஜ்ல துணி தொவைக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

  ReplyDelete
 28. மாம்ஸ், பிரிட்ஜ், வாசிங் மிஷின்ல மட்டும் தான் குழப்பம் வருமா? இல்ல இன்னும் நிறைய இருக்கா? ஒரே வேளை அதெல்லாம் சொன்னா பதிவு பெருசாயிரும்னு சொல்லாம விட்டுடிங்களா?

  ReplyDelete
 29. இனி பதிவுகள் வரும் நேரம் யூகிக்க முடியாதாம். செங்கோவிக்கு ஆணி அதிகமாகவும், சுத்தியல் அதிகமாகவும் இருக்காம். நாம கும்மி அடிக்க எங்க போறது?

  ReplyDelete
 30. ரொம்பத்தான் குழம்புறீங்க.சரி, அடுத்த முறை கடைக்கு போய், வாஷிங் மெஷினுக்குப் பதிலா ஃப்ரிட்ஜும், ஃப்ரிட்ஜுக்கு பதிலா, வாஷிங் மெஷினும் வாங்கிட்டு வந்துருங்க,சரியாயிடும்.

  ReplyDelete
 31. அதுவா?
  தலைப்ப கூட மாற்றிவிட்டிங்களா?
  இல்ல பதிவ மாற்றிட்டிங்களா?
  நல்லா யேசனை பன்னுங்க....

  ReplyDelete
 32. அது தான் அதே தான் ஆனா அது இல்லை இது தான் - ரூம் போட்டு யோசிங்கன்னோ

  ReplyDelete
 33. அண்ணனுக்கு பேபே!
  அண்ணன் பதிவுக்கும் பேபே!

  சூப்பர்ணே! உங்க பேபே பாட்டு உண்மையாவே இருக்கா? :-)

  ReplyDelete
 34. சிம்பு படத்துக்கு சூப்பர் பேரு! :-)

  ReplyDelete
 35. //டிஸ்கி-1: தலைப்பில் உள்ள அது ‘அந்த’ அது அல்ல.

  டிஸ்கி-2: தலைப்பில் உள்ள இதுவும் ‘அந்த’ இது அல்ல.//

  ஏனய்யா ஏன்?
  ஏனிந்த கொலைவெறி????????

  ReplyDelete
 36. //இப்போ அந்தவகையில் நம்ம விரல் வித்தைக்காரர் சிம்புவோட புதுப்படத்துக்கும் பொருத்தமான பேர் ஒன்னு வச்சிருக்காங்களாம்..ஆமாங்க, படத்தோட பேரு ‘மடையன்’.//

  சிம்பு ரசிகர்கள் யாரும் இங்க இல்லையாப்பா

  ReplyDelete
 37. //இப்போ அதைத் தான் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருக்கேன்..அவர்கிட்ட என்ன சொல்லியிருப்பேன்..ஃப்ரிட்ஜா..வாஷிங் மெசினா//

  அடங்கொய்யாலே...

  ReplyDelete
 38. காலை வணக்கம்,பொன் ஜூர்!எப்புடி இருக்கீங்க?வருஷக் கடைசி.போட்டுத் தாக்குறாங்க போல?அட்ஜஸ் பண்ணிக்குங்க.பதிவு,கும்மியா முக்கியம்?வேஷ்டி தானே முக்கியம்?//முன்னாடியும் வரலாம், பின்னாடியும் வரலாம்!///ம்னு எழுதிட்டு நமீ ஸ்டில்ல "அப்புடி"ப் போட்டிருக்கீங்களே ரியலி கிரேட்!

  ReplyDelete
 39. நமிதாவைப் பார்த்தாலே ஃப்ரிட்ஜ் மாதிரித்தான் இருக்கு!

  ReplyDelete
 40. பார்த்து.ஏதாவது பானத்தை வாஷிங் மெஷின்ல வக்கப்போறீங்க!

  ReplyDelete
 41. இதுதான் அனுஷ்காவா?நடிகையா அவங்க?

  ReplyDelete
 42. எதுக்கும் உங்க friend கிட்ட கேட்டு பாருங்க... என்ன சொன்னீங்கன்னு...

  ReplyDelete
 43. எனக்கென்னமோ 'இது'வா இருக்காது.. 'அது'தான் இருக்கும் நீங்க சொன்னது...

  ReplyDelete
 44. அவர் முகம் ரொம்ப பிரகாசம் ஆச்சே..அப்போ ஃப்ரிட்ஜுன்னு தான் சொல்லிட்டமோ...என்ன சொல்லியிருப்பேன்..அதுவா..இதுவா?//

  யோவ் அப்போ நீங்கதான் மடையனா?

  ReplyDelete
 45. அய்யய்யோ,, இவரு எப்ப பதிவு போடுறாரு, எப்ப சும்மா இருக்காருன்னு ஒன்னுமே புரிய மாட்டேங்குது!!

  //இனிமேல் என் பதிவுகளில் எல்லாக் கமெண்ட்ஸ்க்கும் பதில் போட முடியாதுங்கிறதை வருத்தத்தோட சொல்லிக்கிறேன். கும்மியிலயும் அதிகம் கலந்துக்க முடியாது. இதுவரை என்னோட கும்மி அடித்த அனைவருக்கும் நன்றி...என்னோட கமெண்ட்ஸை ரசிக்கவும் இங்க ஆள் உண்டு..அவங்ககிட்டயும் ஒரு சாரி சொல்லிக்கிறேன்..

  ////


  ஓகே ஓகே
  வேலைய கவனிங்க... எல்லாருக்கும் அதே கதிதான்....

  ReplyDelete
 46. ///பதிவு போடும் நேரமும் மாறுது. இப்போல்லாம் வீட்டுக்கு வரவே லேட் ஆகிடுது. அதனால எப்போ ஃப்ரீயா இருக்கிறேனோ அப்போ பதிவு வலையேறும். கரெக்டா 11.30-12க்கு வரும்னு நண்பர்கள் எதிர்பார்க்க வேண்டாம்..அதுக்கு முன்னாடியும் வரலாம், பின்னாடியும் வரலாம்!////

  நோ பிராப்ளம், அதே மாதிரி கமெண்ட் போடுற நேரமும் மாறலாம், பதிவுக்கு முன்னாடியும் வரலாம், பின்னாடியும் வரலாம்! ஹீ ஹீ

  ReplyDelete
 47. ஆனா ஒன்னு அண்ணே, நீங்க முந்தி மாதிரி கும்மி கமெண்ட் போடாட்டியும் பரவால்ல, ஆனா உங்களுக்கு டைம் கெடைகும்போது எல்லாருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமா ஒரே கமெண்ட்ல தனி தனியா ஸ்பெசிபை பண்ணி போட்டுருங்க.. நமக்கு ஒரு ஆறுதலாவாவது இருக்கட்டுமே...

  ReplyDelete
 48. அனுஷ்கா யாருன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன் :-)

  ReplyDelete
 49. என்னது, இவர் தான் அனுஷ்காவா??????

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.