Sunday, December 4, 2011

சிங்கம் பெத்த பிள்ளையின்னு....(நானா யோசிச்சேன்)

டிஸ்கி : நாம சொல்றதைச் சொல்லிடுவோம்..இந்தப் பதிவு 18+...எனவே நல்லவர்கள், குழந்தைகள், பெண்கள், வாலிப வயோதிக அன்பர்கள், டீக்கடை வைத்திருப்போர், ஹூண்டாய் கார் வைத்திருப்போர், குட்டையானவர்கள் மற்றும் முடிந்தவரை அனைவரும் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும். மீறிப் படித்து உலகம் அழிந்தால், கம்பெனி பொறுப்பல்ல.


நெஞ்சைத் தொட்ட வரிகள் :
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோம்
மறுநாள் எழுந்து பார்ப்போம்.....

(பார்ப்பீங்களா? என்னாத்தை? விடிஞ்சிருச்சான்னு பார்ப்பீங்களா?...அட கிறுக்குப்பய பிள்ளைகளா...இப்படி இருந்தா விளங்கும்..உருப்படும்....)

பதிவர் புலம்பல் :
’கடந்த ஒரு வாரமாக எங்கய்யா போய்த் தொலைஞ்சே?’என்று மெயிலில் கேட்ட அனைவருக்கும் நன்றி. அத்தனை பேருக்கும் தனித்தனியே ரிப்ளை அனுப்புவது சாத்தியமில்லாத காரணத்தால் (என்னா ஒரு திமிரு...ராஸ்கல்) இங்கே மொத்தமாக பதிலைச் சொல்லிடறேன்..அதுக்கு முன்னாடி இந்த ஹன்சி ஸ்டில்லை நல்லாப் பார்த்துக்கோங்க:

பதிவுல போடறதுக்கு நல்ல ஹன்சிகா ஸ்டில் வேணும்னு ஒருநாள் தேடிக்கிட்டிருந்தேன். என் மகனும் பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக்கிட்டிருந்தான். அப்போ என் தங்கமணி சூடா காஃபி கொண்டுவந்து வச்சிட்டுப் போச்சு. அப்புறமா இந்த ஸ்டில் ஓப்பன் ஆச்சு..நானும் ‘இந்த ஸ்டில்ல எல்லாம் கரெக்டா இருக்கா? இதைப் போடலாமா கூடாதா-ன்னு உத்துப் பார்த்துக்கிட்டிருந்தேன்..திடீர்னு என் மகன் என்ன நினைச்சானோ சூடான காஃபியை எடுத்து ஹன்சி மேல அதாவது மானிட்டர்மேல ஊத்திட்டான்..

நான் ஒரு செகண்ட் ஹன்சி மேல தான் ஊத்திட்டானோன்னு பதறி ‘அய்யோ’ன்னு கத்திட்டேன்..அப்புறம் தான் அது லேப்டாப்புன்னு உறைச்சது. உடனே ‘அய்யய்யோ’ன்னு கத்துனேன். அவ்ளோ தான்..லேப்டாப் அப்படியே ஆஃப் ஆகிடுச்சு..

ஏற்கனவே ஆஃபீஸ்ல இப்போ ஒர்க் அதிகம்கிறதால, லேப்டாப்பை சர்வீஸ்க்கு எடுத்துட்டுப் போய் சரி பார்க்க, இத்தனை நாள் ஆகிடுச்சு..

முதல்ல பையன் மேல கோவம் கோவமா வந்திடுச்சு..அப்புறம் நானா யோசிச்சுப் பார்த்தப்போ பெருமையா இருந்துச்சு..ஏன்னா இந்தச் சின்ன வயசுலேயே சித்திக்கு காஃபி கொடுக்கணும்னு தெரிஞ்சுருக்கு பாருங்க....என்ன ஒன்னு, கையில கொடுக்கணும், மூஞ்சில ஊத்தக்கூடாதுக்கு தான் தெரியலை..பரவாயில்லை..போகப் போகக் கத்துக்குவான்...

இது தான் நடந்தது.....டொய்ங்.


கனிப் பெயர்ச்சி :
திமுகவிற்கும் கலைஞருக்கும் பெருமை சேர்த்த கனிமொழி, ஒருவழியா ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகிட்டாங்க..மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருக்கும்போதே கனிமொழி ஜெயிலுக்குப் போகும்னு யாருமே நினைச்சுப்பார்க்கலை. இன்னும் இந்தியாலயா இப்படி நடந்துச்சுன்னு ஆச்சரியமாத்தான் இருக்கு...

ஆளுங்கட்சியா இருக்கும்போது உள்ளே போய், எதிர்க்கட்சியாகி வெளியே வந்தது கனிமொழியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்..இதுக்குக் காரணம் சனிப்பெயர்ச்சியா, இல்லே இதுக்குப் பேரே சனிப்பெயர்ச்சியான்னு தான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்.....

வில்லங்க விஜய்:

விஜயகாந்துக்கு அடுத்து பதிவுலகிற்கு தீனி போடறது விஜய் தான்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்..இப்போ விஜய்யோட அடுத்த படத்துப்பேரு ‘துப்பாக்கி’ன்னு அறிவிச்சிருக்காங்க..கேட்டவுடனே பகீர்னு ஆகிடுச்சு..

பின்னே..ஏற்கனவே விஜய்யை பயங்கரமா (கேவலமாவும்) ஓட்டுவாங்க..இப்போ இப்படி பேரு வச்சா விடுவாங்களா?..நாளைக்குப் படம் வழக்கம்போல நல்லா இல்லேன்னா என்ன சொல்வாங்க? விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க..அய்யய்யோ...இதெல்லாம் நல்லாவாய்யா இருக்கு? பேரு வைக்கும்போது நல்லா யோசிச்சு, நல்ல பேரா வைங்கப்பா..

ஹைய்யா :

‘அது’ வாஷிங் மெசின் தான்..ஃப்ரிட்ஜ் இல்லே..ஹி..ஹி.

யூத் புலம்பல்:
’மணிரத்னம்-ஷங்கர் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் புத்திசாலி இல்லே’-ன்னு தெரியும்..ஆனா ;செல்வராகவன் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் யூத் இல்லே’ன்னு தெரியாமப் போச்சே...

சிஙகம் போல....:
எங்க அப்பார்ட்மெண்ட் ஃப்ளோர்ல ஒரு மலையாள ஃபேமிலி இருக்கு..அவங்க வீட்டுக் கதவு பூட்டியே இருக்கும். ஒரு வருசம் ஆகியும் நான் இன்னும் அந்த ஆண்ட்டியை பார்க்கலை..இப்போ அதில்லை மேட்டர்..

அந்த வீட்டுல ஒரு நாய் வளர்க்காங்க..அதோட சத்தம் மட்டும் அப்ப்போ கேட்கும்..அதுக்கு நாங்க ‘பப்பி’-ன்னு பேர் வச்சிருக்கோம்.(அந்தப் பேர்ல பதிவர் யாராவது இருந்தா தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க). 

போன வெள்ளிக்கிழமை வீட்ல இருக்கும்போது தான் கவனிக்கிறேன். பப்பி குரைக்கும்போதெல்லாம் என் பையன் பயப்படுறான்..எனக்கு கோவம் வந்திடுச்சு..அது கோவம் இல்லியே...சரி, என்னமோ வந்திடுச்சு..’ஏலே, நாமல்லாம் யாரு..சிங்கம்லே...ஒரு நாய்க்குப் போய் பயப்படலாமா..உன் அப்பன் தெருநாய்கூடவே கட்டிப்பிடிச்சு உருண்டவண்டா(ச்சே..ச்சே..ரேப் அட்டெம்ப்ட் இல்லீங்க..சண்டை தான்)..”அப்படீன்னு சொன்னேன்..வழக்கம்போல அவனுக்கு ஒன்னுமே புரியலை.

’எப்படியாவது அவனுக்கு பயத்தை தெளிய வைக்கணுமே..என்ன செய்யலாம்?’னு நானா யோசிச்சேன்..அப்புறம் கண்டுபிடிச்சேன் ஒரு ஐடியா..

பப்பி குரைக்கும்போதெல்லாம், பதிலுக்கு நானும் மண்டிபோட்டுக்கிட்டு சிங்கம் மாதிரி ‘உர்ர்..உர்ர்..”-னு கத்துனேன்..பையன் முதல்ல முழிச்சான்..அப்புறம் சிரிச்சான்..நானும் விடாம கத்துனேன்..’இப்படித்தாம்யா..நாய் கத்துச்சுன்னா, நாம சிங்கம்னு காட்டு’ன்னு சொன்னேன்..கொஞ்ச நேரத்துல பையன் பிக் அப் பண்ணிட்டான்.

பப்பி குரைக்க, பையன் உறும....பயம் போயே போச்சு!........ஆனா அது எனக்கே ஆப்பு ஆகும்னு அப்போத் தெரியால..

நைட்டு பையனைத் தூங்கவைக்க தங்கமணி பப்பியைக் காட்டித்தான் தூங்க வைப்பாங்க..அதே மாதிரி அன்னிக்கு நைட்டு ‘பப்பி வருது..தூங்கு’ன்னு சொல்லவும் பையன் எந்திரிச்சு உட்கார்ந்து ‘உர்ர்...உர்ர்’ன்னு சொன்னான் பாருங்க..........................

அப்புறம் தங்கமணி டென்சன் ஆகியிருப்பாங்கலேன்னு கேட்கிறீங்கலா..அதான் இல்லை..அவங்க ஏன்யா டென்சன் ஆகணும்...’நீங்களே உங்க பிள்ளையை தூங்க வச்சிக்கோங்க’ன்னு கையில் கொடுத்துட்டாங்க..அவன் தூங்கறதுக்குள்ள நைட்டு ஒரு மணி, ஒன்றரை மணி கூட ஆகிடுது...இப்போ நாந்தான் டென்சன் ஆகி அலையறேன்..

புத்திச் சிகாமணி பெத்த பிள்ளை -இது
புன்னகை செய்யுது சின்னப்பிள்ளை...

ஆராரோ அரிஆராரோ - அட
அசட்டுப்பய புள்ளை ஆராரோ!

ச்ச்சும்மா:
சேர் செஞ்சதா...கடைல வாங்குனதா?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

58 comments:

 1. விஜய் பட டைட்டில மாத்திட்டாங்க: தீபாவளி டுப்பாக்கி! அட டுமீலுதான்..டுமீலுதான்..

  ReplyDelete
 2. என்னது சித்திக்கு காபியா?
  ஐயகோ!இதை கேட்பார் யாருமில்லையா?

  ReplyDelete
 3. பின்னே..ஏற்கனவே விஜய்யை பயங்கரமா (கேவலமாவும்) ஓட்டுவாங்க.
  //

  ஏற்கனவே ஒட்டு ஓட்டுன்னு ஓட்டுவாங்க.இப்ப இவரு இப்படி பேரு வைச்சு ஓட்ட சொல்லுறாரு சும்மா விட்டுடுவாங்களா?

  ReplyDelete
 4. சேர் செஞ்சதா...கடைல வாங்குனதா?
  //
  அண்ணே!சேரைத்தான் கேக்குறிங்களா?

  ReplyDelete
 5. இரவு வணக்கம்,பொன் சுவார்! நல்லாத் தான் யோசிச்சிருக்கீங்க!காப்பி அபிஷேகம்,பையன் ஒரிஜினல் தமிழ் நாட்டு ரசிகன்னு தெரியுது!என்ன,பால் விலை தான் ஏறிடுச்சே,காப்பி அபிஷேகம் பண்ணிடலாம்னு "மாத்தி"யோசிச்சிருக்கான்!

  ReplyDelete
 6. ///வாலிப வயோதிக அன்பர்கள்,////இதுக்கு அப்புறமும்,கமெண்டு போட்டிருக்கேன்னா,இன்னா ஒரு"தில்"லு வேணும்?ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
 7. விஜய் துப்பாக்கி சரியில்லைன்னு////அவரே பாத்தா ஏ.கே-47 மாதிரி தான் இருப்பாரு!சரியில்லைன்னு சொன்னிங்கன்னா,லண்டனிலேருந்து மைனஸ் ஒட்டு விழப் போகுது!ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 8. சித்திக்கு காபி கொடுக்கிற அளவுக்கு பையனுக்கு இப்போதே தெரிஞ்சிருக்குன்னு சொன்னது சரி - அது தங்கமணிக்குத் தெரியுமா? மன்னிக்கவும் ....

  ReplyDelete
 9. ஹா ஹா.... அண்ணே செம கலக்கல்...சூப்பர்

  ReplyDelete
 10. அதுசரி நீங்க காணாம போனதுக்கு இதுதான் மேட்டரா??? அவ்வ
  கிச் ராஜ் என்னோடன் எங்கே செங்கோவி என்று விசாரிக்க நான் கிஸ் ராஜை விசாரிக்கே இங்கே கொஞ்ச நாளா உங்க பேச்சுதான் ஓடிட்டு இருந்திச்சு தெரியுமா??? அவ்வ

  ReplyDelete
 11. சித்தி கதை அருமை...
  ஆனா எனக்கென்னவோ உங்க பையன் அந்த ஹன்சி பொண்ணு மூஞ்சிய பார்த்து சகிக்க முடியாமதான் உந்த வேலை பண்ணியிருப்பானோ என்று தோணுது...

  ReplyDelete
 12. //செங்கோவி அண்ணனோட ப்ளாகுக்கு போனா அவரு பதிவுகள காணவும் இல்ல, யாரு பதிவுல அவரு காமண்டையும் காணவுமில்ல (ஒரு வேள சொற்களை தொலைத்துவிட்டு சொல்லற சும்மாயிருக்காரோ?), ஒரு மூலையில சின்னதா லேப் டாப் ஊத்திக்கிரிச்சின்னு ஒரு அறிவிப்பு போட்டிருக்காரு, பன்னிக்குட்டி அண்ணன ரெண்டு மாசமா இந்த ஏரியா பக்கமே காணல. இப்புடியே போனா இந்த பதிவுலகத்த யாருத்தான் காப்பாத்துவாங்க?///

  இது நம்ம ட்ராப்டுல இருக்கற ஒரு பதிவுல இருந்து சில வசனங்கள்.. (இது விளம்பரம் அல்ல)

  ReplyDelete
 13. //நாளைக்குப் படம் வழக்கம்போல நல்லா இல்லேன்னா என்ன சொல்வாங்க?//

  இதுவரைக்கும் நீங்க நடுநிலைப் பதிவர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன், "வழக்கம் போலன்னு" சொல்லி உங்க சுயரூபத்தையும் காட்டிட்டீங்க...

  ReplyDelete
 14. //‘அது’ வாஷிங் மெசின் தான்..ஃப்ரிட்ஜ் இல்லே..ஹி..ஹி.//

  அண்ணன் தப்பிச்சிட்டாரே... எப்பிடியோன்னே இப்பவாவது கரெக்டா சொன்னீங்களே..

  ReplyDelete
 15. //’மணிரத்னம்-ஷங்கர் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் புத்திசாலி இல்லே’-ன்னு தெரியும்..ஆனா ;செல்வராகவன் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் யூத் இல்லே’ன்னு தெரியாமப் போச்சே...///

  அப்புடி வேற மேட்டரா? அப்போ மயக்கம் என்ன படம் சூப்பெர்ன்னே ("நானும் யூத்துதான்")

  ReplyDelete
 16. //காப்பி அபிஷேகம்,பையன் ஒரிஜினல் தமிழ் நாட்டு ரசிகன்னு தெரியுது!என்ன,பால் விலை தான் ஏறிடுச்சே,காப்பி அபிஷேகம் பண்ணிடலாம்னு "மாத்தி"யோசிச்சிருக்கான்!//

  பய்யன் வளந்ததும் இதுக்கு ஒரு எதிர் பதிவு போடாமலா போயிடப்போறான், அப்போ பாத்துக்குவோம்.

  ReplyDelete
 17. விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க..//

  ஹா ஹா இது தான் மாம்ஸ் உங்க கிட்ட பிடிச்சதே

  ReplyDelete
 18. வாங்க பாஸ் எங்க ஆளைக்காணோம் என்று தேடிகிட்டு இருந்தோம்

  ReplyDelete
 19. ////முதல்ல பையன் மேல கோவம் கோவமா வந்திடுச்சு..அப்புறம் நானா யோசிச்சுப் பார்த்தப்போ பெருமையா இருந்துச்சு..ஏன்னா இந்தச் சின்ன வயசுலேயே சித்திக்கு காஃபி கொடுக்கணும்னு தெரிஞ்சுருக்கு பாருங்க....என்ன ஒன்னு, கையில கொடுக்கணும், மூஞ்சில ஊத்தக்கூடாதுக்கு தான் தெரியலை..பரவாயில்லை..போகப் போகக் கத்துக்குவான்..////

  ஏன் பாஸ் உங்க பையன் ஹன்சி முகத்தை பார்த்து பயந்து போய் காஃபியை கொட்டி இருக்கான்...

  ஹி.ஹி.ஹி.ஹி...

  ReplyDelete
 20. ////பின்னே..ஏற்கனவே விஜய்யை பயங்கரமா (கேவலமாவும்) ஓட்டுவாங்க..இப்போ இப்படி பேரு வச்சா விடுவாங்களா?..நாளைக்குப் படம் வழக்கம்போல நல்லா இல்லேன்னா என்ன சொல்வாங்க? விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க..அய்யய்யோ...இதெல்லாம் நல்லாவாய்யா இருக்கு? பேரு வைக்கும்போது நல்லா யோசிச்சு, நல்ல பேரா வைங்கப்பா..
  /////

  ஹி.ஹி.ஹி.ஹி..................................

  ReplyDelete
 21. //////’மணிரத்னம்-ஷங்கர் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் புத்திசாலி இல்லே’-ன்னு தெரியும்..ஆனா ;செல்வராகவன் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் யூத் இல்லே’ன்னு தெரியாமப் போச்சே...////

  ஹி.ஹி.ஹி.ஹி அதானே...........

  ReplyDelete
 22. ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவு.

  ReplyDelete
 23. ம்ம்ம்..அந்த ஸ்டில்ல பார்த்தா காப்பிய ஊத்தாம என்ன பண்ணுவான்?

  //’மணிரத்னம்-ஷங்கர் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் புத்திசாலி இல்லே’-ன்னு தெரியும்..ஆனா ;செல்வராகவன் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் யூத் இல்லே’ன்னு தெரியாமப் போச்சே..//

  அப்பவே நினைச்சேன்....சரி விடுங்கண்ணே! :-)

  //ஒரு வருசம் ஆகியும் நான் இன்னும் அந்த ஆண்ட்டியை பார்க்கலை..//
  கொடுமைதான்! :-(

  அண்ணே முதலாவது ஸ்டில் பாவனா தானே? இருந்தாலும் அண்ணனுக்கு பாவனா மேலயும் ஒருபாசம் இருக்கத்தான் செய்யுது! :-)

  ReplyDelete
 24. இந்த பய புள்ளைய கண்டிக்க ஆளில்லாம போச்சி...போட்டோ போடுறேன்னு லாரி, கன்டைனருன்னு போடுது கொய்யால!

  ReplyDelete
 25. // இங்கே மொத்தமாக பதிலைச் சொல்லிடறேன்..அதுக்கு முன்னாடி இந்த ஹன்சி ஸ்டில்லை நல்லாப் பார்த்துக்கோங்க://

  புரியுது பாஸ் எங்க எல்லோருக்கும் துரோகம் பண்னிட்டிங்க எண்டு மட்டும் புர்யுது

  ReplyDelete
 26. //..ஏன்னா இந்தச் சின்ன வயசுலேயே சித்திக்கு காஃபி கொடுக்கணும்னு தெரிஞ்சுருக்கு பாருங்க.//

  கண்போர்மா இது துரோகம்தான்

  ReplyDelete
 27. // விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க..//

  இதில டபுள்மீனிங் இல்லைத்தானே...அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 28. Kalakkal sengovi.........
  Thinamum....unga blog
  poi
  eemaanthen.......
  Ini intha eematram
  thraa theenga.....

  ReplyDelete
 29. காலை வணக்கம்,பொன் ஜூர்!போன மாசம் இருவத்தைஞ்சாம் தேதி இந்த அறிவிப்பு வலது பக்க மேல் மூலைல இருந்திச்சு!///லேப் டாப் "ஊத்தி" மூடிக்கிட்டதால பதிவிட முடியவில்லை...................///அந்த "ஊத்தி" மூட வச்சது பையன் தானா?வாழ்க வளமுடன்!ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 30. மாம்ஸ், ஹன்சி எப்போ சித்தி ஆனாங்க? சொல்லவே இல்லை....


  வாசிக்க:
  நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

  ReplyDelete
 31. ஏற்கனவே ஆஃபீஸ்ல இப்போ ஒர்க் அதிகம்கிறதால, லேப்டாப்பை சர்வீஸ்க்கு எடுத்துட்டுப் போய் சரி பார்க்க, இத்தனை நாள் ஆகிடுச்சு..///

  சரி சரி... ஹன்சிக்கு ஒன்னும் ஆகலியே...

  ReplyDelete
 32. விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க.////

  உமக்கு லொள்ளு ஜாஸ்திய்யா

  ReplyDelete
 33. பப்பி வருது..தூங்கு’ன்னு சொல்லவும் பையன் எந்திரிச்சு உட்கார்ந்து ‘உர்ர்...உர்ர்’ன்னு சொன்னான் பாருங்க.///

  மாப்ள உன் அப்பாவ தூங்க விட்டுடு... இல்ல, ஆபீசுல (தூங்கி) வழிஞ்சுற போறார்...

  ReplyDelete
 34. வணக்கம் பாஸ்,
  மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்களும், வரவேற்புகளும்!

  ஹே...ஹே..

  ReplyDelete
 35. ஹன்ஸி ஸ்டில்லை காட்டி காப்பியால ஊத்து வாங்க வைச்சிட்டீங்களே....

  லப்டாப் ப்ராப்ளத்திற்கு இதுவா காரணம்...

  உங்க பையன் நீங்க ஹன்சியை ஓவரா ரசிக்கிறீங்க என்று நெனைச்சுத் தான் ஊத்திருப்பான் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 36. கனிமொழி விடயம், விஜய் படம் பதிவுலகிற்கு அவலான விடயம், அனுஷ்கா மேட்டரு, அப்புறம் நமீதா கதை எல்லாமே கலக்கல் பாஸ்...

  ரசித்தேன்!

  ReplyDelete
 37. செங்கோவி....!

  கலக்கலோ கலக்கல் பொஸ். அதுசரிங்க உங்கட வீட்டுக்காரம்மா ப்ளக் பக்கம் வரதில்லையோ. இவ்வளவு துணிச்சலா அவங்களப்பற்றி எழுதித்தள்ளிறியள்.

  கவனம் எப்பவாவது திடீர் என்று உங்கட ப்ளக் பக்கம் வந்தால் உங்களுக்கு புரிக்கட்டை அபிசேகம் கண்பேர்ம்.


  அதுசரி கடைசியில இருக்கிற படத்தில இருக்கிறவங்க யாருங்க. குட்டி யானை மாதிரி இருக்கிறாங்கள்?

  ReplyDelete
 38. யோவ எக்சில் நாவல் விமர்சனம் நாளை எதிர்ப்பக்குரேன்!என்ன?எழுதுவியா?ஏற்கெனவே இன்றைய காந்தி தேகம்னு கலக்கிய்யிருக்கே!இது பற்றியும் எழுது!

  ReplyDelete
 39. நல்லவேளை டிஸ்கியில இருக்கிற எந்த கேட்டகரியிலும் நான் வரல. உடம்பு சரியாகிருச்சா....லேப்டாப்புக்கு!

  ReplyDelete
 40. பக்கத்துல நான் இருக்கிறப்ப படத்துல என்ன ரசனைன்னு பையனுக்கு கோபம் வந்திருக்குமோ ?

  ReplyDelete
 41. கொஞ்சம் கேப் விட்டதை ஒரே பதிவில் சரிக்கட்டிட்டீங்க!

  ReplyDelete
 42. ///வாலிப வயோதிக அன்பர்கள், டீக்கடை வைத்திருப்போர், ஹூண்டாய் கார் வைத்திருப்போர், ///

  யோவ் இது என்னய்யா அநியாயம் ஹுண்டாய் காரு என்னய்யா பண்ணுச்சி?

  ReplyDelete
 43. //பதிவுல போடறதுக்கு நல்ல ஹன்சிகா ஸ்டில் வேணும்னு ஒருநாள் தேடிக்கிட்டிருந்தேன். //

  ஒருவாரம் பதிவு கூட போடாம இதைத்தான் தேடிக்கிட்டு இருந்தீராக்கும், இதுக்கு நேரா ஹஞ்சிகாவையே போய் பாத்துட்டு அப்புறம் அதான்... போட்டோவும் எடுத்துட்டு வந்திருக்கலாம்.......

  ReplyDelete
 44. @வடக்குபட்டி ராம்சாமி இன்னும் புத்தகம் வாங்கவில்லை நண்பரே...

  ReplyDelete
 45. //திடீர்னு என் மகன் என்ன நினைச்சானோ சூடான காஃபியை எடுத்து ஹன்சி மேல அதாவது மானிட்டர்மேல ஊத்திட்டான்..//

  நீ மானிட்டர்ல ஊத்துன ஜொள்ளை கழுவுறதா நெனச்சி ஊத்தி இருக்கப் போறான்....

  ReplyDelete
 46. ///விஜயகாந்துக்கு அடுத்து பதிவுலகிற்கு தீனி போடறது விஜய் தான்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.///

  நோ நோ சின்ன டாகுடர் ஃபர்ஸ்ட் அப்புறம் தான் பெரிய டாகுடர்....

  ReplyDelete
 47. // விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க..அய்யய்யோ...இதெல்லாம் நல்லாவாய்யா இருக்கு?///

  நல்லாத்தானே இருக்கு? பின்ன என்னய்யா சரியில்லேன்னா சரியில்லேன்னுதானே சொல்ல முடியும்? அதுக்காக துப்பாக்கிய எடுத்து சுட்டுக்காட்டவா சொல்ல முடியும்?

  ReplyDelete
 48. //‘அது’ வாஷிங் மெசின் தான்..ஃப்ரிட்ஜ் இல்லே..ஹி..ஹி.//

  எது?

  ReplyDelete
 49. //சேர் செஞ்சதா...கடைல வாங்குனதா?//

  அங்க எது சேர் எது இதுன்னே தெரியலியே?

  ReplyDelete
 50. >>எங்க அப்பார்ட்மெண்ட் ஃப்ளோர்ல ஒரு மலையாள ஃபேமிலி இருக்கு..அவங்க வீட்டுக் கதவு பூட்டியே இருக்கும்.

  hi hi hi எனக்கு புரிஞ்சிடுச்சு

  ReplyDelete
 51. வாஹ் வொட் எ சேஞ்ஜ்ஓவர் மாமா?

  ReplyDelete
 52. தங்கமணி அக்காவுக்கு போட்டியா ஒரு சக்காளத்தி வர்றது பிடிக்கமா, ஒங்க மகன் அப்புடி செஞ்சிருக்கான், அதை போய் சித்தி, பெரியம்மா ன்னு அந்த பிஞ்சு மன்ச கெடுக்க பார்க்குரீங்களே

  ReplyDelete
 53. //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  //‘அது’ வாஷிங் மெசின் தான்..ஃப்ரிட்ஜ் இல்லே..ஹி..ஹி.//

  எது?
  ///
  ஒன்ற மாசத்துக்கு பிறகு பதிவுலகத்துக்கு வந்துட்டு அது எது ன்னு கேட்டா எப்புடி பாஸ்?

  அது இது எது?

  ReplyDelete
 54. ///அதுக்கு முன்னாடி இந்த ஹன்சி ஸ்டில்லை நல்லாப் பார்த்துக்கோங்க:////

  உண்மையாவே இவங்க தான் கன்சிகாவா...

  ReplyDelete
 55. நமிதா இருக்கும் கதிரை செய்ய கம்பெனி எது...

  எங்க ஊர் யானை கதிரை கேட்குது..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.