Wednesday, April 18, 2012

தட்டு நிறைய லட்டு...(நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி பிட்டு
எடுத்தான் மீதம் கிட்டு

மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு;

கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்தது எட்டு
மீதம் காலித் தட்டு!


அய்யய்யோ...4 மாசத்துல இந்த மனுசனுக்கு என்ன ஆச்சுன்னு பதறாதீங்க..ஏன் இந்தப் பாட்டுன்னா..கடந்த மூணு மாசமா இந்தப் பாட்டைத் தான் என் பையன் லேப்டாப்ல பார்க்கிறான்..டெய்லி ஆஃபீஸ் விட்டு வந்தப்புறம் குறைஞ்சது 5 தடவை இந்தப் பாட்டு ஓடுது..எப்படியும் 500 தடவை இந்தப் பாட்டைக் கேட்டிருப்பேன்..அவ்வ்வ்!

எப்பேர்ப்பட்ட சைண்டிஃபிக் (!) வீடியோல்லாம் ஓடுன லேப்டாப் அது...கடைசீல அது நிலைமை இப்படி ஆகிடுச்சே! ஏன் மை சன்னுக்கு இந்தப் பாட்டு பிடிச்சிருக்குன்னு நானா யோசிச்சப்போ தான் ஞாபகம் வந்துச்சு, எனக்கு லட்டுன்னா ரொம்பப் பிடிக்கும்னு!!

அதனால தான் என் மகனுக்கும் லட்டு பாட்டு பிடிச்சுப் போச்சு போல..அய்யய்யோ, அப்போ என்னை மாதிரியே அவனும் வந்துடுவானா?..நினைச்சுப் பார்க்கவே பயங்கரமா இருக்கே!

என்ன கொடுமை சார் இது..

கொஞ்சநாள் பதிவுலகப் பக்கம் வரலை..அதுக்குள்ள என்னன்னமோ நடந்து போச்சே..ஒருநாள் திடீர்னு ‘சட்டசபையில விஜயகாந்த் நாக்கைக் கடிச்சுட்டார்..சஸ்பெண்ட்’னு ஆஃபீஸ்ல ஃப்ரெண்ட்ஸ்லாம் பரபரப்பாப் பேசிக்கிட்டாங்க..எனக்கு அதைக் கேட்டு அதிர்ச்சி ஆயிடுச்சு..’மனுசன் கோவக்காரரு தான்..அதுக்காக இப்படி எதிரே இருக்கிறவர் நாக்கையா கடிக்கிறது?’ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே வீட்ல போய் டிவியைப் பார்த்தா’ அவரு நாக்கைத் தான் அவரு கடிச்சிருக்காரு..

அடப்பாவிகளா இதுக்காய்யா பத்து நாளு சஸ்பெண்ட் பண்ணீங்க..ஒரு மனுசன் தன்னோட சொந்த நாக்கைக் கடிக்கக்கூடாதா? அதுக்க்குக்கூட சுதந்திரம் இல்லியா?..என்ன கொடுமை சார் இது!...நயன்தாரா உதட்டைக் கடிச்ச ஆளையெல்லாம் சும்மா விட்டுடறாங்க..சொந்த நாக்கைக் கடிச்ச மனுசனை சஸ்பெண்ட் பண்றாங்க..ஒன்னியும் புரியலியே!
லூலூ.........:

இங்க லூலூன்னு ஒரு ஷாப்பிங் மால் இருக்கு..அங்க போய் 20 தினார்க்கு ஷூ வாங்கினேன். வாங்கிட்டு கவுண்டர்ல இருந்த ஃபிலிப்பைன்ஸ்காரிகிட்ட காசு கொடுத்தா, 10 தினார் கேஷ் பேக்-னு ஒரு அட்டையை கொடுத்துட்டாங்க..10 தினார்க்கு ட்ரெஸ்-ஷூ எடுத்துக்கலாம்னு போட்டிருந்துச்சு.

நமக்கோ சந்தோசம் தாங்கலை..சரி, ரொம்ப வருஷமா வாங்க நினைச்சுக்கிட்டிருந்த ஜட்டியை இன்னிக்கு வாங்கிட வேண்டியது தான்னு முடிவு பண்ணி, 10 தினார்க்கும் ஜட்டி-பனியனை அள்ளிக்கிட்டு வந்து ஃபிலிப்பிகிட்டக் கொடுத்தா...”நோ..நோ..இதுக்கெல்லாம் ஆஃபர் கிடையாது”ன்னு சொல்லிடுச்சு..

“ஒய்..ஒய்?”னு பதறிப்போய்க் கேட்டா, ஆஃபர் அட்டையில சிறுசா “Not for Under garments" ன்னு போட்டிருக்கிறதைக் காட்டுச்சு.’அடடா..வடை போச்சே’ன்னு புலம்பிக்கிட்டே, “ஜட்டி அண்டர்கார்மெண்ட்..அதுக்கு ஆஃபர் கிடையாது, ஓகே! ஆனா பனியன் அபோகார்மெண்ட் தானே? அதுக்கு ஏன் ஆஃபர் கிடையாது?”ன்னு கேட்டேன்..

அதுக்கு அந்தப் பொண்ணு ஃபிலிப்பைன்ஸ் மொழில மரியாதையா ஏதோ சொல்லிட்டு, “நோ சார்..எங்க ஓனரு இதுக்கெல்லாம் ஆஃபர் கொடுக்க வேணாம்னு சொல்லிட்டாரு”னு சொல்லுச்சு..

ஏன் இப்படி..பெரிய பெரிய ட்ரஸ்ஸையெல்லாம் ஃப்ரீயாத் தர்றவரு, இந்த சின்ன விஷயத்தை ஏன் தர வேணாம்னுட்டாரு? ஒருவேளை அவரும் நம்மள மாதிரி அடக்குமுறைக்கு எதிரான மனம் படைத்தவரோ?...அடடா...தேவையில்லாத, ஆடம்பரப்பொருளைக் காசு கொடுத்து வாங்கக்கூடாதுன்னு தானே இத்தனை வருஷமா அதை வாங்கலை..இப்போ ஃப்ரீயாக் கிடைக்குதேன்னு வாங்க நினைச்சா, அதுவும் போச்சே!

சின்னப் புள்ளைத்தனமால்ல...:

நான் ஒம்பதாப்பு படிச்சப்போ மணின்னு ஒரு ஃப்ரெண்டு இருந்தான். பாசக்காரப் பய..ஓசில ஐஸ் எல்லாம் வாங்கித் தருவான்..அவன்கிட்ட ஒரே ஒரு கெட்ட பழக்கம், திடீர் திடீர்னு சண்டை போட்டுடுவான்..’இனிமே உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்’னு சபதமே போடுவான்..நாங்க சண்டை போட்டது தெரியாம யாராவது அவன்கிட்ட ’என்னடா நீ மட்டும் வர்றே..செங்கோவியை எங்கே?’ன்னு கேட்டுட்டா அவ்ளோ தான்..டென்சன் ஆகிடுவான்..’கண்டகண்ட பசங்களைப் பத்தில்லாம் என்கிட்ட ஏன்யா கேட்கிறீங்க?’ன்னு குதறிடுவான்..

ஆனா, எல்லாம் 2-3 நாள் தான்..அப்புறம் என் தோள்மேல கை போட்டுக்கிட்டு கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு அதே ஆளை கிராஸ் பண்ணிப் போவோம்! என்னமோ தெரியலை ஜெயலலிதா சசியை விரட்டி விட்டுட்டாருன்னு செய்தி பார்த்தப்போ மணி ஞாபகம் வந்துச்சு.இப்போ சசியை ஜெ. சேர்த்துக்கிட்டாங்கன்னு தெரிஞ்சப்பவும் மணி ஞாபகம்!ம்...மணி இப்போ எங்கே இருக்கான்னு தெரியலை..சிஎம்மா வந்திருக்க வேண்டிய பய..எங்கே இருக்கானோ என்ன பண்றானோ!

ஜெ-சசி பிரிவை உண்மைன்னு நம்பி முக்கி முக்கி எழுதுன புலனாய்வுப் பத்திரிக்கைகள்.பதிவர்கள் தான் பாவம்..ஹி..ஹின்னு எல்லாப் பக்கமும் அசடு மழை..இனிமேலாவது நண்பர் ரஹீம் கஸாலி மாதிரி சூதானமா இருங்கப்பா!

கோச்சடையான் :
தலைவர் உடம்பு சரியில்லாமப் போகவும் எத்தனை வதந்திகள்..கௌரவம் படத்துல சிவாஜி சம்சாரம் “விடுங்கோன்னா..ஆனைக்கும் அடி சறுக்கும்’னு சொல்வாங்க. அதுக்கு சிவாஜி “ஆனைக்கு அடி சறுக்கக்கூடாதுடி..அடி சறுக்கினா என்னாகும் தெரியுமில்லையோ..எழுந்திருக்கிறதே கஷ்டமாகிடும்” -அப்படீங்கிற மீனிங்ல பதில் சொல்வார்..ரஜினி அவ்ளோதான்ங்கிர ரேஞ்சுல எத்தனை எத்தனை பேச்சுகள்..தலைவர் மறுபடியும் தான் யானை இல்லே, குதிரைன்னு நிரூபிச்சுட்டார்!

கோச்சடையான் ஸ்பெஷல் சீன்ஸ்ன்னு டிவில காட்டுனாங்க..தலைவர் எலக்ட்ரானிக் கோமணம் கட்டிக்கிட்டு நடந்து வந்த அழகு இருக்கே..அடடா, சூப்பர்! ஏற்கனவே சொன்ன மாதிரி அவர் என்ன பண்ணாலும் ஸ்டைலாத் தான் தெரியுது.

அதுசரி, அவரு ஏன் கோமணத்தை வெளில கட்டியிருந்தாருன்னு நானா யோசிச்சேன்..வழக்கமா சூப்பர் ஹீரோ-ஸ்பைடர் மேன் மாதிரி ஆட்கள் தானே ஜட்டியை(மட்டும்) ஸ்டைலா வெளில போடுவாங்க..அப்போ தலைவரு கோச்சடையான்ல சூப்பர் ஹீரோவா நடிக்கிறாரோ?..

பதிவர் புல்லரிப்பு:

ஒரு வழியா மீண்டு வந்துட்டேன்..ஆனாலும் டெய்லி பதிவு போட முடியும்னு தோணலை..வாரம் இரண்டோ மூணோ வரும்...தொடர்ந்து என்னைத் தேடிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி..எல்லாக் கமெண்ட்ஸ்க்கும் பதில் போடுவதோ, சகபதிவர்களுக்கு கமெண்ட் போடுவதோ தற்போதைக்கு முடியாது..எனவே நண்பர்கள் பொறுத்தருள்க!

காந்தி தொடர் தடைப்பட்டதால் உடனே அதைத் தொடரும் எண்ணம் இல்லை..அதுக்குப் பதிலாக வரப்போகும் புதிய அதிரடித் தொடர் : முருக வேட்டை!

சரிங்க..பையன் ரொம்ப நேரமா ஹன்சிகாவையே உத்துப்பார்த்துக்கிட்டு இருந்தான்..இப்போ லேப்டாப் வேணும்னு அழறான்..லட்டு ஞாபகம் வந்துடுச்சு போல..ஓகே மை சன், ஸ்டார்ட் மியூசிக்..

தட்டு நிறைய லட்டு..ஹே..ஹே..லட்டு நிறைய தட்டு..ஹோ..ஹோ..போட்டான் வாய்ல லட்டு..ஆ..லட்டு..ஆ..தட்டு..ஆஹாங்!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

32 comments:

 1. கண்ணா லட்டு திங்க ஆசையா ?வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. கண்ணா ஆறு லட்டு திங்க ஆசையா?

  ReplyDelete
 3. //லூலு//

  ஓவர் லொள்ளு

  ReplyDelete
 4. ஹய்யோ! துரை ஒம்பதாம் வகுப்பெல்லாம் படிச்சிருக்கு....ஹிஹி!

  ReplyDelete
 5. யம்மாடி! எவ்ளோ லட்டு? :-)
  ஆமா நடுவுல எதுக்கு அந்த ஊசிப்போன லட்டு?

  ReplyDelete
 6. காலை வணக்கம்,செங்கோவி!நல்லாருந்திச்சு.///கடந்த மூணு மாசமா இந்தப் பாட்டைத்தான் என் பையன் லேப்டாப்பில பாக்கிறான்.////?!?!பொய் தான?ஏய்யா பையனை கெடுக்கிறீங்க?அந்தப் பச்சப் புள்ளையப் போய்........................ அவரு அம்மா கண்ணுல(நீங்க இப்புடி எழுதினது) இது படலியோ?

  ReplyDelete
 7. //தலைவர் எலக்ட்ரானிக் கோமணம் கட்டிக்கிட்டு நடந்து வந்த அழகு இருக்கே..அடடா, சூப்பர்!//

  தலைவர் ஸ்கெட்ச் போட்டுட்டார்னா எலக்ட்ரானிக் கோமணம் கட்டியாவது...
  :-)

  ReplyDelete
 8. //எப்பேர்ப்பட்ட சைண்டிஃபிக் (!) வீடியோல்லாம் ஓடுன லேப்டாப் அது...//

  அய்யய்யோ அப்பா முக்கியமான ஆவணங்கள் எல்லாம்...அழிச்சுட்டீங்களா?
  so...sad!!

  ReplyDelete
 9. அண்ணே!ரொம்ப சந்தோசம்ணே,நானும் கொஞ்ச நாள் கேப் கழிச்சுதான்உங்க பதிவுகளை பார்த்தேன்,ரொம்ப ரொம்ப சந்தோசம்.அப்போப்போம் எழுதறேன்னு சொன்னது மகிழ்ச்சி.

  ReplyDelete
 10. அப்பனை போல பிள்ளை..இப்பவே ஹன்சிகா கேட்குதா....

  ReplyDelete
 11. லட்டு என்று சொல்லி ஜொல்லு விட்டு விட்டு எல்லா நடிகைகள் மீதும் இறுதியில் ஒன்றும் தெரியாத பையன் மீது பழி போட்டால் விட்டு விடுவோமா! சட்ட சபையில் தூக்கியது போல லப்டொப்பை தூக்கிவிடுவோம்!:)))

  ReplyDelete
 12. முருக வேட்டை வரட்டும் வாசிக்க காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 13. பலதையும் பகிர்ந்து நானா ஜோசித்தன் வந்திருக்கு அந்த பிலிப்பின்ஸ்காரி பாடு தான் நினைவில் வருகின்றாள் நயந்தராவைவிட!:))))

  ReplyDelete
 14. வாழ்த்துகள் திரு செங்கோவி.

  ReplyDelete
 15. இனிமேலாவது நண்பர் ரஹீம் கஸாலி மாதிரி சூதானமா இருங்கப்பா!//
  என்னது சூதனமா....அவனவன் என்ன வருமோன்னு பக்குபக்குன்னு உட்கார்ந்திருக்கான்.இதுல சூதனமாம்....

  ReplyDelete
 16. 4 மாசம் ஆனாலும் இன்னும் அந்த குசும்பு குறையவே இல்லையே..
  coments போட முடியாத அளவுக்கு அப்டியென்ன வேலை.
  அப்டி நீங்க ஏன்ன ஆணி புண்டுங்குரிங்க..
  (just for fun)

  ReplyDelete
 17. மாம்ஸ், லட்டு பாட்டு போட்டுட்டு லட்டு லட்டா படம் போட்டு செங்கோவி ரிடர்ன்ஸ்ன்னு காட்டிட்டிங்க... சூப்பர்

  ReplyDelete
 18. பையன் இன்னும்முமா ஹன்சிகாவை பாக்கிறான்

  ReplyDelete
 19. இப்புடித்தான் போன வருஷம் கூட,ஹன்சிகா பாக்கிற ஆவலில காப்பிய லேப்டாப்புல கொட்டிட்டான்னு பையன் மேல பழி போட்டாரு!நான் மறக்கல,ஹும்..................!!!

  ReplyDelete
 20. அண்ணன் வெச்சிருக்க எல்லா பிகர்சையும் களத்துல எறக்கிவிட்டுட்டார் போல?

  ReplyDelete
 21. கமலா காமேசுக்கு வேற ஸ்டில்லே கெடைக்கலியா? என்னா ஒரு வில்லத்தனம்?

  ReplyDelete
 22. //////ஜீ... said...
  யம்மாடி! எவ்ளோ லட்டு? :-)
  ஆமா நடுவுல எதுக்கு அந்த ஊசிப்போன லட்டு?//////////

  ஊசிப்போனாலும் பாசி புடிச்சாலும் லட்டு லட்டுதானே? அந்த நல்லெண்ணத்துலதான் அண்ணன் போட்டிருக்கார்........ படத்த......

  ReplyDelete
 23. /////நயன்தாரா உதட்டைக் கடிச்ச ஆளையெல்லாம் சும்மா விட்டுடறாங்க..///////

  அண்ணே எவ்ளோ பழைய மேட்டரு இது, அதுக்கப்புறம் அந்த அம்மிணிய..... சரிவிடுங்க நீங்க வேற 18+ போடல.......!

  ReplyDelete
 24. //////அங்க போய் 20 தினார்க்கு ஷூ வாங்கினேன். ////////

  தங்கத்துல செஞ்ச ஷூவாண்ணே....?

  ReplyDelete
 25. //////அடடா...தேவையில்லாத, ஆடம்பரப்பொருளைக் காசு கொடுத்து வாங்கக்கூடாதுன்னு தானே இத்தனை வருஷமா அதை வாங்கலை..இப்போ ஃப்ரீயாக் கிடைக்குதேன்னு வாங்க நினைச்சா, அதுவும் போச்சே!/////////////

  அப்போ இதுக்கும் அடக்குமுறைதான் வழியா?

  ReplyDelete
 26. அண்ணே நீங்க லட்டுன்னு உவமை அணில சொல்லி இருக்கீங்களே அது கஞ்சிக்காவத்தானே? (அப்போ கமலா காமேசுக்கு அது இல்பொருள் உவமை அணியாகிடுமே?)

  ReplyDelete
 27. //////தமிழ்வாசி பிரகாஷ் said...
  பையன் இன்னும்முமா ஹன்சிகாவை பாக்கிறான்/////////

  இவரு பார்க்கிறாராம் அதைத்தான் அப்படி சொல்லி இருக்காரு............

  ReplyDelete
 28. என்னங்க!கமலா காமேஷை பிடிச்சுப்போச்சா?

  ReplyDelete
 29. //சென்னை பித்தன் said...
  என்னங்க!கமலா காமேஷை பிடிச்சுப்போச்சா?//

  அது “மீதம் காலித் தட்டு” சார்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.