Thursday, May 3, 2012

இந்தியாவை நெருங்கும் ஆபத்து...(நானா யோசிச்சேன்)


நெஞ்சைத் தொட்ட வரிகள்:

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு
ஓடிப்போலாமா?-இல்லே
ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?

தாலியத் தான் கட்டிக்கிட்டு
பெத்துக்கலாமா?-இல்லே
பிள்ளைகுட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா?

க..க..க..போ:
அப்பப்போ அந்த நியூஸ் மீடியால வரும். அதைக் கேட்டதும் எனக்கு குஷி ஆகிடும். சந்தோசத்துல குதிப்பேன், ஆடுவேன், அப்பாடின்னு நிம்மதிப் பெருமூச்சு விடுவேன். எல்லாம் ரெண்டு, மூணு நாள் தான்..அப்புறம் ‘இல்லே..அது பொய்யி’ன்னு சொல்லிடுவாங்க..நமக்கு புஸ்ஸுன்னு போயிடும். இப்பவும் திரும்ப அதே நியூஸ்..அதே புஸ்ஸ்..

அது என்னன்னா...நம்ம மலா காமேஷ் ல்யாணம் ட்டிக்கிட்டு போகப்போறாருங்கறது தான்...நாம சந்தோசப்படுறது எப்படித்தான் தெரியுமோ..’இல்லவேயில்லை’ன்னு மறுத்திடுவாங்க. சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வர்றார்ங்கிறது மாதிரி, இதையும் நம்ம பத்திரிக்கைகள் அலுக்காம சொல்லிக்கிட்டே இருக்காங்க...ஏறக்குறைய அஞ்சு வருசமா இதே கதை..

ஒருவேளை மேல சொன்ன பாட்டு மாதிரியே யோசிச்சுக்கிட்டு இருக்காங்களோ?..இல்லே, இப்படியே 2-3 வருசம் ஓட்டிட்டு ஸ்ட்ரெய்ட்டா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்களோ..........?


அது ரெண்டா? மூணா?
..போதும்..இப்போ நான் சொல்றதை நல்லா கவனமாக் கேளுங்க..என் மகன் பொறந்தது 2010ஆம் வருசம் மே மாசம். எங்க ஆஃபீசர் (இவரு குவைத் ஆஃபீசருங்கோ! ) ஒருத்தர்கிட்டப் பேசும்போது, “இந்த மே மாசம் வந்தா, பையனுக்கு 2 வயசு முடியுது”-ன்னு சொன்னேன்.

அதுக்கு அவரு “அது எப்படி ரெண்டு வயசு முடியும்? ரெண்டு வயசு ஆரம்பிக்குன்னு சொல்லுங்க”ன்னார்.

நமக்கு ஷாக் ஆகிடுச்சு. “இல்லை சார்..2 வருசம் முடிஞ்சிடுச்சு..அதனால 2 வயசும் முடிஞ்சிடுச்சு இல்லியா?”ன்னு கேட்டேன்.

அவரும் சளைக்காமல் “அது எப்படீங்க முடியும்..இனிமே ரெண்டே கால் வரும்..அப்புறம் ரெண்டரை..ரெண்டே முக்கால்-னு போயி அப்புறம் தானே 2 முடிஞ்சு 3 வரும்..அதுக்குள்ளே எப்படி 2 வயசு முடிஞ்சிடுச்சுன்னு சொல்றீங்க?”ன்னு கேட்டார்.

நான் டரியல் ஆகிட்டேன்..என்னய்யா கணக்கு இது. (இப்போ ஒரு விளம்பரம்: +2 மேத்ஸில் எப்படியோ சென்டம் வாங்குனவன் நானு!!)..எங்கேயிருந்துய்யா இப்படில்லாம் கிளம்பி வர்றாங்கன்னு யோசிச்சுக்கிட்டே நானும் அப்புறம் அரை மணி நேரம் வாதாடிப் பார்த்தேன்..

அதுக்கு அவரு “என்னங்க இது..இப்படித்தான் போன மாசம் மிஸ்டர்.எக்ஸ்கிட்டச் சொன்னேன்..அவரும் ஒத்துக்கலை..நீங்கல்லாம் எங்கேயிருந்துய்யா கிளம்பி வர்றீங்க?”ன்னு தைரியமாக் கேட்கிறார்..இப்போ நானே கன்ஃபியூஸ் ஆகிட்டேன்..

இப்போ மகனுக்கு 2 வயசு முடிஞ்சு 3 நடக்குதா? இல்லே, இன்னும் 2 தான் நடக்குதா? யாராவது கணித மேதை இருந்தாச் சொல்லுங்கய்யா!

நம்ம ஊரு நமீ..!
சொந்த ஊருக்கு அடுத்தபடியாக உலகில் எனக்குப் பிடித்த ஊர் கோவை தான்..அங்கே செட்டில் ஆகும் எண்ணமும் முன்பு இருந்தது. இந்த வாரம் நம்ம நமீ எதையோ...அதாவது எந்தக் கடையையோ திறக்க கோவை போயிருக்காங்க. போன இடத்துல ‘கோயம்புத்தூர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதிர்காலத்திலும் அடிக்கடி வர விரும்பும் ஊர் இது’-ன்னு சொல்லியிருக்காங்க..

பார்த்தீங்களா..இதைத்தான் பிக் மேன் & பிக் உமன் திங்க் அலைக்-ன்னு சொல்வாங்க..நமீ அங்கே செட்டில் ஆகத் தயாருன்னா நாமளும் அங்கே குடி போயிட வேண்டியது தான்.

கறந்துடுவாங்க:
என் தோழிக்கு கல்யாணம் ஆகி 2 வருசம் ஆகியும் குழந்தை இல்லை..அதனால தமிழ்நாட்டுல பிரபலமான ஒரு ஆஸ்பத்திரிக்கு வீட்டுக்காரரோட போனாங்க..அவங்களும் நல்லா செக் பண்ணிப் பார்த்துட்டு, விந்தணு எண்ணிக்கை குறையா இருக்கு, பொண்ணுக்கு கர்ப்பப்பை வாய் சிறுசா இருக்கு,அப்புறம் லபோஃபியா லிசோஃபியா-ன்னு என்னமோ புரியாத 
வார்த்தையெல்லாம் சொல்லிட்டு, மொத்தமா 5 லட்சம் ஆகும்னு சொல்லியிருக்காங்க.

தோழி ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்ட சொன்னப்போ, இன்னொரு நண்பர் சித்த மருத்துவம் ட்ரை பண்ணலாம்னு சொன்னாரு..தோழிக்கு ஒரே குழப்பம்..ஆனாலும் அவங்க தங்களோட தினசரிக் கடமையை தவறாம செய்துக்கிட்டே வந்தாங்க..

திடீர்னு தோழிக்கு தலைசுத்தல்..என்னடான்னு வேற லோக்கல் டாக்டர்கிட்டப் பார்த்தா, கன்சீவ் ஆனதைக் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க..

அடப்பாவிகளா..அப்போ அந்த 5 லட்சம்..விந்தணு கம்மியா இருக்குன்னாங்களே..அதெல்லாம்? அப்போ கம்மியா இருந்தது விந்தணு இல்லே, டாக்டரோட நாணயமும் பேங்க் பேலன்சும் தானா? அதுசரி, நம்மாளுக கால்ல பிரச்சினைன்னாலே சும்மா விடமாட்டாங்க...என்னமோய்யா, நாடு போற போக்கு ஒன்னும் சரியில்லை!..எல்லாரும் சூதானமா இருந்துக்கோங்கய்யா!

ஆ...பத்து:


நாளை இந்தியா வருகிறேன்..ரொம்ப நாளைக்கு அப்புறம் சொந்த ஊருக்கு வர்றோங்கிற குஷியில் இருக்கேன்...வந்தப்புறம் கான்டாக்ட் நம்பர் தருகிறேன்..என்னைத் திட்ட, பாராட்ட, கொஞ்ச(?) விருப்பப்பட்டோர் 2 நாள் காத்திருக்கவும்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

 1. வந்தவுடன் மறக்காம கால் பன்னுங்க

  ReplyDelete
 2. வணக்கம் செங்கோவி!நல்லாயிருக்கு. அப்புறம் உங்க பயன் வயசு பத்திய டவுட்டை பெரியவன்?!ஆன நான் கிளீயர் பண்ணியே ஆவணும்!ரெண்டு வயசு முடியவும் இல்ல,ரெண்டு வயசு ஆரம்பிக்கவுமில்ல!"ரெண்டு" வயசு அம்புட்டுத்தான்! ////விருப்பப்பட்டோர்?!ரெண்டு நாள் காத்த்திருக்கவும்,////நிக்கப்படாதா?

  ReplyDelete
 3. பயணம் நல்லபடியாக அமையட்டும் ...

  ReplyDelete
 4. என்னது இந்தியா போறீங்களா? பார்த்து அப்பு சூதானமா நடந்துக்குங்க.

  ReplyDelete
 5. என்னது இந்தியா போறீங்களா? பார்த்து அப்பு சூதானமா நடந்துக்குங்க.

  ReplyDelete
 6. கமலா காமேஸ் இன்னும் ஓடமாட்டாங்க!
  இந்த வயது இரண்டுதான் சரி என்று எனக்குப் படுகின்றது. 

  ReplyDelete
 7. பயணம் இனிதாக அமையட்டும் என்றாவது ஒருநாள் சந்திப்போம் செங்கோவி ஐயா! வரும் போது அந்த சீடியை வாங்கி வந்திருங்க!அவ்வ்வ்வ்ப

  ReplyDelete
 8. கமலா காமேஷ் படம் போடாமயே இப்படி காலத்த ஓட்டுறது இன்னும் எத்தன நாளைக்குன்னு பாக்கிறேன்.......

  ReplyDelete
 9. உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே பெரிய பெரிய படமா கெடைக்குது?

  ReplyDelete
 10. ////.வந்தப்புறம் கான்டாக்ட் நம்பர் தருகிறேன்..//////

  ஏன்யா என்ன எலக்சன்ல நிக்க போறீரா? வந்தமா ரெஸ்ட்டு எடுத்தமா போனமான்னு இல்லாம ஏன்யா இந்த வேல?

  ReplyDelete
 11. ஹாய் செங்கோவி அண்ணா ..
  எப்படி இருக்கீங்க????

  எப்போ அண்ணா பதிவுகத்துக்கு திரும்பி வந்தீங்க என்றெல்லாம் கேக்க மாட்டேன் (ஆவ்...) நீங்க வந்ததில் இருந்து நாமளும் தவறாமல் வந்து படிக்கிறோம் தான் ஆனா கொஞ்சம் பிஸி ( அது ஒரு பெரிய்ய கதை...) ஆதால வாசலில் ஒளிஞ்சு நின்று படிச்சுட்டு சத்தம் போடாம ஓடி போயிருவோம் இல்ல :)))) ஹீ ஹீ.......

  ஜ............. அண்ணா நாளைக்கு இந்தியா வாறீங்க ??? முதலே சொல்லி இருக்கப்படாதா :( நானும் டிக்கெட் போட்டு இந்தியா வந்திருப்பேன் இல்ல.......:(((((((

  சரி சரி........ பிரான்ஸ் வரும் போது சொல்லுங்கோ ............. :)))

  அப்புறம்.... நம்மட த்ரிஷா செல்லத்தை தொடர்ந்து கலாய்ப்பதற்கு என் வன்மையான கண்டனங்கள் ;))))

  த்ரிஷா 'சமரன்" இப்போ "பூலோகம்" என்று அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிட்டாங்க...... ஹீ ஹீ நம்ம செங்கோவி அண்ணன் ஆசை இப்போதைக்கு நிறைவேறாது...... ஹா ஹா..................

  ReplyDelete
 12. மீட் பண்ண ஒன் அப்பாயின்மென்ட் ப்ளீஸ்...

  ReplyDelete
 13. பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 14. நீங்கள் தமிழகம் வருவது மகிழ்ச்சி.
  எனது எண் 94434 27128
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. பையனுக்கு ரெண்டு வயசுதான் அண்ணே! ஒரு வருஷம் முடிஞ்சப்புறம்தானே ஒரு வயசு? பிறந்த உடனேயே ஒரு வயசுன்னு சொல்லிட்டா இருந்தீங்க? எங்கப்பாவும் இப்பிடித்தான் எப்பவும் என்னோட வயசு ஒன்னு கூட்டித்தான் சொல்வாரு. நீங்க எல்லாம் எங்க இருந்துண்ணே கிளம்பி வர்றீங்க? :-)

  ReplyDelete
 16. யாருண்ணே புதுசா ரெண்டிருக்கு?
  முதல் படத்தில திரும்பினாப்டி நிக்கிறது..யாரு? கமலா காமேஷ் போட்டோ எங்க? :-)

  ReplyDelete
 17. வரவேற்ற அனைவருக்கும் நன்றி..

  ReplyDelete
 18. எப்பவும் இப்படித்தானா?இப்படித்தான் எப்பவுமா?வாழ்க வளமுடன்.கொச்சி தேவதாஸ்

  ReplyDelete
 19. எப்பவும் இப்படித்தானா?இப்படித்தான் எப்பவுமா?வாழ்க வளமுடன்.கொச்சி தேவதாஸ்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.