Tuesday, May 8, 2012

ச்சே...அவரு பாவம்ல! (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: பதிவு 18+....எனவே உங்கள் பர்த் சர்ட்டிஃபிகேட்டை எனக்கு அனுப்பி அப்ரூவல் வாங்கிவிட்டு படிக்க ஆரம்பிக்கவும்.


நெஞ்சைத் தொட்ட வரிகள்:
தொட்டபெட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா-நீ
தொட்டுக்கிட சிக்கன் தரட்டா?
தா..தா...தா!

பதிவர் கிசுகிசு:

அவரு இவரைப் பார்த்தாராம். அங்கே கூப்பிட்டாரம். இவரும் அங்கே போனாருன்னும் சொல்றாங்க.இல்லேன்னும் சொல்றாங்க..ஆனா திடீர்னு பார்த்தா இங்கே இருக்கிற மாதிரி இவருக்கு 

இருந்துச்சாம்..அதனால அந்த பதிவருக்கு கூப்பிட்டாராம்..அந்தப் பதிவரு இந்தப் பதிவருக்கு கூப்பிட்டாராம். இந்தப் பதிவரு இன்னொரு அந்தப் பதிவருக்கு கூப்பிட்டாராம். கடைசியா முதல்’இவரு’ இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சாங்களாம். இதுக்கெலாம் அவரு தான் காரணம்னு இவரு சொல்றாராம்..என்னமோய்யா..நடக்கட்டும்..நடக்கட்டும்.

பாவி....அப்பாவி:

அந்தச் செய்தியைப் பார்த்ததும் இதயமே வெடிக்கிற மாதிரி ஆகிப்போச்சு. நீங்களும் மனசைத் திடப்படுத்திக்கோங்க..என்னான்னு சொல்றேன்..நம்ம தங்கத் தலைவி ஹன்சிகா சிம்புவோட அடுத்த படத்துல நடிக்கிறாராம்..அடப்பாவிகளா..இது நியாயமா? சிம்பு காளை மாட்டிலேயே கால்படி பால் கறக்கிற ஆளாச்சே! இப்போ.........அய்யோ, நினைச்சுப் பார்க்கவே முடியலையே!

பார்க்கறதுக்கு பீப்பா மாதிரி இருந்தாலும் நம்ம தலைவி ஒன்னும் தெரியாத பப்பாங்கிறது மறுபடியும் நிரூபணம் ஆகிடுச்சே...இப்போ என்னாங்க செய்றது? சிம்பு ஹன்சியை கலைக்கிறதுக்கு முன்னாடி நாம மன்றத்தை மரியாதையாக் கலைச்சிடலாமா?

காளையின் மடியில்:

அது எப்படி காளை மாட்டுல பால் கறக்க முடியும்னு கேட்டு சின்னப்புள்ளைத் தனமா கமெண்ட் போட ரெடியாகியிருப்பீங்க..உங்க கமெண்ட்டுக்குப் பதில் போட முடியுதோ, இல்லியோ...அதனால முன்னாடி என் ஸ்கூல் ஃப்ரெண்ட்டுக்கு கொடுத்த விளக்கத்தை இப்போக் கொடுக்கிறேன்”

“ஏ....அவன் காளை மாட்டுலயே காப்படி பால் கறப்பானேப்பா..”

“அது எப்படி செங்கோவி காளை மாட்டுல பால் கறக்க முடியும்?”

“அது தெரியாதா உனக்கு? அது ரொம்ப ஈஸிப்பா”

“ஈஸியா..எப்படி..எப்படி?”

“காளை மாட்டுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இரட்டைக் கொம்புல ஒத்தைக் கொம்பை ஒடிச்சிடணும்..அவ்ளோ தான்!”

“ஒடிச்சா?....ஒன்னியும் புரியலியே”

இரட்டைக் கொம்பு-ல ஒத்தைக் கொம்பு போனா, இரட்டைக் காம்புன்னு ஆகிடும்ல?”

“அடேய், புள்ளி புள்ளிபுள்ளி புள்ளி புள்ளி புள்ளி புள்ளி புள்ளி புள்ளி புள்ளி புள்ளி...”

(புள்ளி என்பதை 18+ல் கூட சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகள் என்று பொருள் கொள்ளவும்)

ஓசில கிடைச்சா........:
யாரோ பிந்து மாதவின்னு புது நடிகையாம்.(ஃபோட்டா போடுறேம்யா..பொறுமையாப் படிங்க)..அஜித்துக்கு ஜோடியா நடிக்கிறதுன்னா ஃப்ரீயாவே நடிக்கத் தயார்னு சொல்லிடுச்சாம். மீடியாவே அலறுது..அதைப் படிச்சதும் ரத்தம் கொதிச்சிடுச்சு..

பின்னே என்னங்க..நான்கூடத்தான் நாலு வருசமா நம்ம நமீகூட (Always think Pig..sorry, Big) ஜோடியா நடிக்கத் தயாரா இருக்கேன்..சம்பளம் வேண்டாம், பேட்டா வேண்டாம்..அட, ட்ரஸ் கூட வேண்டாங்க.(நானே கொண்டு வருவேன்னு அர்த்தம்)..அதைப் பத்தி இந்த மீடியாக்கள் ஒரு பிட்(!) நியூஸாவது போட்டது உண்டா? 

இன்னிக்கு அந்த பொம்பளைப் பிள்ளை சொல்லிடுச்சுங்கவும் என்னமா எழுதறாங்க. ஆம்பிளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமா? ச்சே...பெண்ணாதிக்க சண்முகம்!

ச்சே........:

இந்தியா வந்திறங்கிய முதல் நாளே நாலு கோழியை காவு வாங்கிட்டேன்..அடுத்த நாள் நாலு கிலோ மீனு அவுட்டு..மாமனார் வீட்டுல லோக்கல் மாப்பிளையா இருந்தப்பவே செமயா கவனிப்பாங்க. இப்போ குவைத் மாப்பிளையா வேற ஆகிட்டோமா..அய்யய்யய்யோ..கொலை பாதகக் கூட்டமா மாறிட்டாங்க. 

நேத்து அப்படித்தான் ஒரு ஆடு பலி கொடுத்தாங்க. மத்தியானம் வேகாத வெயில்ல சாப்பிட உட்கார்ந்தேன்.

கொஞ்சம் சோறு, குடல் கூட்டு, ரத்தப் பொரியல், மட்டன் சால்னான்னு முதல் ரவுண்டு ஆரம்பிச்சுச்சு..நல்லா சாப்பிடுங்க மாப்ளேன்னு மாமனார் ஆசிர்வாதம் பண்ணி ஆரம்பிச்சு வச்சார்.

முதல் ரவுண்டு முடியவும், மட்டன் முழம்பு+சுக்கா வருவல்னு அடுத்த ரவுண்டு..

“என்ன மாமா..இப்படிச் சாப்பிறீங்க..நல்லா அள்ளிச் சாப்பிடுங்க”ன்னு மச்சினன் அட்வைஸ் வேற.. சரி, மாப்ளை சொல்றானேன்னு அதை முடிச்சா, மாமியார் ” எய்யா, மீன் முழம்பு நேத்து வச்சது..நல்லா ருசியா இருக்கும்”னு மூணாவது ரவுண்டும் முடிஞ்சது. மலைப்பாம்பு மாதிரி நெளிய முடியாம ‘எப்படி எந்திரிக்கறது’ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது சின்ன மாமனார் எண்ட்ரி ஆனாரு. 

“என்னம்மா இது..கறி எல்லாம் கிண்ணத்துல அப்படி அப்படியே இருக்கு..என்ன பரிமாறுதீங்க? அந்த வறுவலை அள்ளி வையுத்தா..இன்னும் கொஞ்சம் சோறு போடு”-ன்னாரு.

அப்போத் தான் என் தங்கமணி பயந்து போய் மாட்டேன்ங்கிற மாதிரி தலையாட்டிக்கிட்டே சொல்லுச்சு: “ச்சே...அவரு பாவம்ல..!”

எவ்வளவு நாசூக்கா நம்மளை நாறடிக்கிறாங்க........அவ்வ்!

என்ன கொடுமை சார் இது:
ஜீ டிவியில் ரோஜா..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

28 comments:

 1. இரவு வணக்கம்,செங்கோவி!!பதினெட்டு பிளஸ் போட்டிருந்ததால நான் எதையுமே பாக்கல,படிக்கல,ஒங்க பேர்ல இருக்கிற மரியாதையினால! வயசுப் பசங்களுக்கு நீங்க பதிவு போட்டிருக்கீங்க என்கிற விஷயத்த சொல்லிடுறேன்,வரட்டுங்களா????

  ReplyDelete
 2. பாவமுங்க"அவரு" !வெட்டிடு ச்சா விட்டிடுங்களேன்?

  ReplyDelete
 3. இப்படி மாமானார் வீட்டில் கவனிப்பு கிடைத்தால் அதைவிட வேற என்ன சுகம் வேணும்.ஹீ

  ReplyDelete
 4. ஹான்சிகா பாட்டி என்று ஒத்துக்கொண்ட பெருந்தகையே வாழ்க்க குண்டு பாப்பாவை   விட்டு இனி அடுத்த சரோஜாவுக்கு சங்கம் வைப்போம்!

  ReplyDelete
 5. சாப்பிட்டு முடிச்சதும் ஏன் எந்திரிக்கணும்,இல்ல ஏன் எந்திரிக்கணும்கிறேன்?தங்கமணி சொம்புல தண்ணியும் கைகழுவ தட்டும் கொண்டாந்தா முடிஞ்சுது!அப்புடியே வெத்தல,பாக்கு போட்டுக்கிட்டு ஒரு ரவுண்டு தூங்கி எந்திரிச்சா டின்னர் டைம் ஆயிடாது?ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete
 6. அப்பாடா தனக்கும் இன்னும் நடிப்பு ஆசை இருக்கு என்று சொன்ன எங்க அண்ணானுக்கு கட்சியில் ஒரு இடம் கொடுங்கோ  சிக்கன் தொட்டவர் சங்கவி போனபின்  இலியானவா???

  ReplyDelete
 7. பிறப்பு அத்தாச்சிப் பத்திரம் தொலைத்தவர்கள் எதை அனுப்புவது ?:))))

  ReplyDelete
 8. பையன் சாப்பிட்டானா,இல்லையா?????

  ReplyDelete
 9. "மலைப் பாம்பு மாதிரி நெளிய முடியாம....."நோட் பண்ணிக்குங்க மக்கள்ஸ்!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 10. அந்த கிசு கிசு யாராக இருக்கும் எதற்கும் கமலா காமேஸிடம் கேட்போம்:))))

  ReplyDelete
 11. கவனிப்பு அதிகமா இருக்கும் போதும் ஹன்சிகாவுக்காக பதறுதுல்ல மனசு...

  ReplyDelete
 12. ச்சே!பெண்ணாதிக்க சண்முகம்!////ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
 13. //கிசு கிசு
  இவர் என்ற வார்ததை அதிகமாக பயன் படுத்தியதால் ஆட்டத்தில் இருந்து விளக்கபடுகிறீர்கள்.


  //சிம்பு படத்தில் ஹன்ஸிகா

  கர்ர்ர் அந்த பயலுக்கு எங்கேயோ மச்சம் இருக்குயா. மாட்டுறது எல்லாமே ஆன்ட்டி சைஸ் பொண்ணுங்கதான்

  //பெண்ணாதிக்க சண்முகம்
  யாரு அந்த சண்முகனு சொல்லுங்க தூக்கிடுவோம்.

  ReplyDelete
 14. //சிம்பு ஹன்சியை கலைக்கிறதுக்கு முன்னாடி நாம மன்றத்தை மரியாதையாக் கலைச்சிடலாமா?//

  அவ்ளோதானா போச்சா போச்சா!
  அண்ணே ரசிகர் மன்றத்தைக் கலைங்க! சிம்பு என்னத்த கலைச்சு! ஏற்கனவே பிரபுதேவா...சரி விடுங்க! நான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா?
  நீங்களாச்சு உங்க ஹன்சியாச்சு! :-)

  ReplyDelete
 15. அய்யய்யே! ரோஜாவா அது? பயமா இருக்குண்ணே!

  எனக்கென்னமோ 'துறைமுகம்' படத்தில லிவிங்ஸ்டன்னைப் பாத்தமேரியே இருக்கு! :-)

  ReplyDelete
 16. நல்ல கவனிப்பு தாங்க.அப்புறம் மேற்படி ஏதும் இல்லைங்களா

  ReplyDelete
 17. கிசு - கலாச்சிட்டாராமாம்!

  ReplyDelete
 18. பின்ன இப்பூடீ சாப்பிட்டால் பாவம் தான்

  ReplyDelete
 19. ஹன்சி சிம்புகூட நடிக்கரதெல்லாம் இருக்கட்டும், 2004 ல கொய் மில் கயா படத்துல கொழந்தையா இருந்தாங்க ஹன்சிக, அப்புறம் 2007 ல முழு ஆளா தேசமுடுறு படத்துல நடிச்சாங்க. மூணு வருசத்துல எப்புடி முழுசா வளந்தாங்கன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணி சீக்கிரமா போடுங்கப்பா...

  ReplyDelete
 20. நீங்க மன்றத்தை கலைக்கவேண்டிய அவசியமில்லை...சிம்பு சின்னப்பய பாப்பாவ கவுக்கலாம் பீப்பாவ கவுக்க முடியாது...!
  ஆமா மாமனார் விருந்துல முட்டையில்லை.....இதுக்காக நீங்க கோவிச்சுக்ககூடாது...!இன்னிக்கு போடுவாங்க......

  ReplyDelete
 21. Hanshka' manraththukku pathila danshika' manram open pannunga. Nadicha ella padamum sema hot maams.

  ReplyDelete
 22. யோவ் இஷ்டத்துக்கு வெளுத்துக் கட்டிப்புட்டு ஏன்யா இப்படி..............?

  ReplyDelete
 23. //////பதிவர் கிசுகிசு:///////

  அண்ணன் நாட்டு நடப்புல அப்டேட்டடா இருக்காரே?

  ReplyDelete
 24. /////சிம்பு ஹன்சியை கலைக்கிறதுக்கு முன்னாடி நாம மன்றத்தை மரியாதையாக் கலைச்சிடலாமா?////////

  அய்யா படத்துல லட்சணமா கொளுகொளுன்னு இருந்த நயன் அப்புறம் வத்தலும் தொத்தலுமாகிப் போச்சு......! ஹன்சி அந்த மாதிரி ஆனா ஒருவேள இதவிட நல்லாருந்தாலும் இருந்துட போவுது.......... அதுனால மன்றத்த அவசரப்பட்டு கலைச்சிடாதீங்க..........

  ReplyDelete
 25. //////யாரோ பிந்து மாதவின்னு புது நடிகையாம்///////

  இதெல்லாம் ஓவரா இல்ல? இந்த புள்ள போட்டோதான் 4-5 வருசமா நெட்ல ஓடுதே?

  ReplyDelete
 26. //////ஜீ டிவியில் ரோஜா..////////

  ரோஜாவா இது.....? சூரியன் படத்துல வந்த அந்த ரோஜாவா இது.....?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.