Friday, June 8, 2012

எழுச்சி நாயகி குஷ்பூ...வாழ்க! (நானா யோசிச்சேன்)


நெஞ்சைத் தொட்ட வரிகள்:

பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு!

கிசுகிசுக்கு மறுப்பு:
இடையில் நாலு மாசமா நான் பதிவு எழுதாதப்போ, Chilled Beers-ங்கிற பேர்ல ஒரு அன்பர் ப்ளாக் எழுத ஆரம்பிச்சிருக்காரு. யாரோ ஒரு புண்ணியவான் ‘செங்கோவி தான் வேற பேர்ல பதிவு எழுதறான்’ன்னு கிசுகிசு கிளப்பிவிட்டுட்டாங்களாம்.(அந்தப் புண்ணியவான் பன்னிக்குட்டியார் தான் -ன்னு கிசுகிசுக்குள்ள ஒரு கிசுகிசு!!) இந்தியால இருந்தப்போ பலரும் ‘அது நீங்க தானே?’ன்னு ஃபோன்ல கேட்டாங்க. இப்போ எல்லாருக்கும் சொல்லிக்கிறேன், அது நான் இல்லை, நான் இல்லை. 

உண்மைத்தமிழனோட 3 படம் விமர்சனத்துல Chilled Bears போட்ட கமெண்ட்கள் பதிவுலகில் ரொம்பவே பிரபலம்.குறிப்பா மருத்துவம் பற்றி ரொம்பத் தெளிவாப் பேசறாரு. பதிவுகளும் படிக்க சுவாரஸ்யமா இருக்கு.படிக்காதவங்க அவசியம் படிங்க.


பாராட்டுவோம்:

ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுப்பட்ட செய்தி பார்த்து மகிழ்ந்தேன். ஆகாஷ்க்கு வாழ்த்துகள்..ஓ..சாரி.... ஆகாஷை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்!

பணம் கொடுத்துப் பார்த்த கிளி..:

’காலத்தின் கை வசம் கை கண்ட மருந்துண்டு. ஆறாத காயங்களையும் ஆற்றும் அது’ன்னு கவிஞர் வாலி எங்கேயோ எழுதியிருந்தாரு. அது உண்மை தான்னு என்னோட முந்தின கம்பெனி எம்.டிகிட்ட இருந்து வந்த மெயிலைப் பார்த்தப்போ தெரிஞ்சுக்கிட்டேன். ‘செங்கோவி, இப்போ எங்கே இருக்கே? இங்கே ஒரு வேலை இருக்கு..வர்றியா?’ன்னு பாசமாக் கூப்பிட்டிருந்தாரு..நம்மையா கூப்பிடுதாருன்னு ஆச்சரியப்பட்டுக்கிட்டே ஃப்ளாஷ்பேக்க்குப் போய்ட்டேன்............

அந்தக் கம்பெனி சார்பா யு.எஸ்ல ஒரு வருசம் டெபுடேசன்ல வேளை பார்த்தேன். அவங்களே ஒரு பேங்க்ல அக்கவுண்ட்டும் ஓப்பன் பண்ணிக்கொடுத்தாங்க. மாசாமாசம் சேலரி செக்கை டெபாசிட் பண்ண அடிச்சுப்பிடிச்சு அங்கே ஓடுவோம்..ஓட்டம் பணத்துக்காக இல்லீங்க, அந்த பேங்க்ல ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு புஷ்டியா கிளியோட உட்கார்ந்திருக்கும்.

பேங்க்ல ஏது கிளின்னு யோசிக்கிறீங்களா..ஹி..ஹி..கிளிங்கிறது க்ளிவேஜ்க்கு நாங்க கொடுத்த செல்லப் பெயர்..பேங்க்ல கேபினுக்கு அந்தப் பக்கம் பொண்ணு கிளியோட உட்கார்ந்திருக்கும். இந்தப்பக்கம் சின்னதா ஒரு ஸ்டெப் வேற போட்டு ஏறி நின்னு பார்க்க வசதி பண்ணிக்கொடுத்திருந்தாங்க..(என்ன இருந்தாலும் கஸ்டமர் சர்வீஸ்ல யு.எஸ்காரங்களை அட்ச்சுக்க முடியாதுல்ல..) வரிசையா எல்லாரும் செக்கை கொடுத்து ஆ-ன்னு பார்ப்போம். ஆனால் அது 5 செகண்ட் தான்..அந்தப் பொண்ணு ரொம்ப ஃபாஸ்ட்டா ஒர்க் பண்ணும்..

அன்னிக்கு ஒரு நாளு நம்ம எம்.டியும் நம்ம கூட வந்திட்டாரு..ஃபர்ஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்டு போனாரு..அவரு கிளி பார்க்கிறதை எம்.டி.பார்த்துட்டு “என்ன பண்றான்?’ன்னு கேட்கும்போதே அடுத்த ஆளா நான் போயி கிளி பார்க்க ஆரம்பிச்சேன். “அடப்பாவிகளா..”ன்னு அலறிக்கிட்டே எம்.டி என்கிட்ட ஓடிவந்து “செங்கோவி, அந்தப் பொண்ணுக்கு பின்னாலயும் கொஞ்சம் பாருய்யா”ன்னாரு. நான் கிளி போச்சேன்னு நொந்துக்கிட்டே “என்னா சார் இருக்கு?”ன்னு கேட்டுக்கிட்டே பார்த்தா, ஒரு புக் செல்ஃப்..அதுல குட்டியூண்டா ஒரு கேமரா!

“அப்படியே அந்தப் பொண்ணு சிஸ்டத்தை எட்டிப்பாரு”ன்னாரு. எட்டிப்பார்த்தா........அய்யய்யோ! அதுல ஒரு பயங்கர உருவம் தெரியுது..அது யாருன்னு பார்த்தா, ஆத்தீ......நானு!..அப்போ இத்தனை நாளா அந்தப் பொண்ணு 5 செகண்ட்ல எங்களை விரட்டி விட்டதுக்குக் காரணம் இது தானா?

வெளில வரவும் எம்.டி.“தம்பிகளா..நான் இந்த பேங்க்ல தான் லோன் வாங்கி கம்பெனியை டெவலப் பண்ணலாம்னு இருக்கேன்.கிளி பார்க்கேன்..கிளி பார்க்கேன்னு என் பிளானை குழி தோண்டிப் புதைச்சுடாதீங்கப்பா”ன்னாரு..ஷேம்..ஷேம்..பப்பி ஷேமாப் போச்சு!

அப்புறமா வந்த ரிசசன்ல எங்களை விரட்டி விட்ட மனுசன், இப்போ மெயில் அனுப்பி கூப்பிடுதாரே ஏன்?...கவிஞர் வாலி கரெக்ட்டாத் தாம்யா சொல்லியிருக்காரு..காலத்தின் கைவசம் மருந்துண்டுன்னு!.....ஒருவேளை மனுசன் பேங்க்கை மாத்திட்டாரோ?

(தனிப் பதிவாவே போட்டிருக்கலாமோ..கிளி மேட்டர் பெருசாயிச்சே!)


நன்னி மறப்பது..:

அண்ணன் சரத்குமார் கேப்டர்ரைப் பத்திப் பேசுனதைப் பார்த்து அசந்துட்டேன்..ஜெ.போட்ட பிச்சைல தான் கேப்டருக்கு 27 சீட் கிடைச்சதாம். ஆனால் கேப்டர்ர் நன்றி மறந்து அலையறாராம்..

அண்ணன் அதிமுகல ஆரம்பிச்சு திமுகக்குப் போயி திரும்ப அதிமுக போயி, திரும்ப திமுகவுக்குப் போயின்னு சின்ன ராமதாஸா சுத்திட்டு, இப்படிப் பேசலாமா? (சாயால அரம்பிச்சு நக்மாகிட்டப் போயி ராத்துகிட்ட சிக்குனது தனிக்கதை)..சின்ன ராமதாஸ் ஆகிற உரிமை இவருக்குத் தான் இருக்கா..எங்க கேப்டர்ருக்கு இல்லையா? இவரு மட்டும் கேப்டர்ர் கைல சிக்குனாரு, மாகாராஜன் ஆவறது உறுதி.

படித்ததில் பிடித்தது:

நண்பர் ஒருத்தர் ‘வேண்டாத’ பதிவு ஒன்னு போட்டாரு. உடனே கமெண்ட் பாக்ஸ்ல கலகம் ஆரம்பிச்சுச்சு..’நீ யோக்கியமா? உங்க வழி யோக்கியமா..உங்க தாத்தா யோக்கியமா?’ன்னு மாத்தி மாத்தி ரகளையா கமெண்ட் விழுந்துக்கிட்டிருந்துச்சு. அப்போ வந்து விழுந்துச்சு பாருங்க இந்தக் கமெண்ட்... ஆடிப் போயிட்டேன்..


XXX Said....
வணக்கம் உறவே,

உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்.....உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்: 

நன்றி

அடச்சண்டாளங்களா..போர்க்களத்துலயும் பஞ்சு மிட்டாய் விக்குறீங்களே, உங்களுக்கே நியாயமா இருக்கா?

எழுச்சி நாயகி:

கலைஞர் முந்தா நாளு விட்ட அறிக்கையில “என் பிறந்த நாளை அடுத்து, தொண்டர்களிடையே பெரும் எழுச்சி உருவாகியுள்ளது. அது பொறுக்காமல்தான் முன்னால் மந்திரிகளை ஜெ. அரெஸ்ட் செய்கிறார்”ன்னு சொல்லியிருந்தாரு..அப்படி என்னா எழுச்சி உண்டாகிடுச்சுன்னு பார்த்தா...

கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த பொதுக்கூட்டத்துல நம்ம தலைவிகள்ல ஒருத்தரான, கற்பு(விளக்கம்)-க்காகப் போராடிய குஷ்பூவும் கலந்துக்கிட்டிருக்காங்க. பொதுக்கூட்டம் முடிஞ்சு இறங்கிப் போகும்போது தலைவியோட இடுப்பை யாரோ கிள்ளிட்டாங்களாம்..’என் இடுப்பு என்ன இலவசமாக் கொடுத்த ஸ்டவ் அடுப்பா’ன்னு குஷ்பூ காண்டாகிட்டாங்களாம்...

தலிவரு என்ன தான் திராவிடம், கொள்கை-ன்னு லெக்சர் கொடுத்தாலும், காரியத்துல கண்ணா இருந்திருக்காரே அந்த தொண்டர்...சபாஷ்யா..சபாஷ்..ஒருவேளை இதைத் தான் கலிஞரு எழுச்சின்னு பெருமைப்படுதாரோ..பொதுக்கூட்டத்துக்குப் போனதுக்கே இந்த நிலைமைன்னா, சட்டசபைக்கு அனுப்பினா...டிடி-ல லைவ் ஷோ கன்ஃபார்ம் தான் போல!(ஆனாலும் இப்படி சேம் சைடு கோல் போடாதீங்கப்பா..அது ரொம்பத் தப்பூ!)

நாம தான் வருஷம்-16 பார்த்த எஃபக்ட் தெளியாம அலையறோம்னு பார்த்தா, நிறைய தொண்டர்களும் ‘மறக்க முடியுமா’ன்னு திரியறாங்க போலிருக்கே..வருஷம்-16 படம் வந்து வருஷம் 16 ஆகியும் இன்னும் அதே எழுச்சியோட திரியிறீங்களே, ஐ லைக் யு ஜெண்டி மென்..ஐ லைக் யு!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

32 comments:

 1. ஏண்ணே..... கிளி பார்ட்டி இப்போ எப்படி இருக்கு........?

  ReplyDelete
 2. ////செங்கோவி தான் வேற பேர்ல பதிவு எழுதறான்’ன்னு கிசுகிசு கிளப்பிவிட்டுட்டாங்களாம்.(அந்தப் புண்ணியவான் பன்னிக்குட்டியார் தான் -ன்னு கிசுகிசுக்குள்ள ஒரு கிசுகிசு!!////////

  வெளங்கிரும்......... இது வேறயா..... இனி ஊருக்குள்ள இருக்கற எல்லா கிசுகிசுவையும் நம்ம தலைல கட்டிட்டுத்தான் மறுவேல பார்ப்பானுங்க...... யோவ் இந்த கிசுகிசுவ எனக்கு சொன்னதே அந்த உள்குத்து பதிவர்தான்யா...........

  ReplyDelete
 3. /////XXX Said....
  வணக்கம் உறவே,/////

  அது என்ன XXX? ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு?

  ReplyDelete
 4. /////வருஷம்-16 படம் வந்து வருஷம் 16 ஆகியும் இன்னும் அதே எழுச்சியோட திரியிறீங்களே, //////

  தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி.........

  ReplyDelete
 5. // பொதுக்கூட்டம் முடிஞ்சு இறங்கிப் போகும்போது தலைவியோட இடுப்பை யாரோ கிள்ளிட்டாங்களாம்.//

  பன்னிக்குட்டி அந்த கூட்டத்துல சேட்டை செஞ்சதா தகவல் வந்துருக்கப்போய்!!

  ReplyDelete
 6. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  வெளங்கிரும்......... இது வேறயா..... இனி ஊருக்குள்ள இருக்கற எல்லா கிசுகிசுவையும் நம்ம தலைல கட்டிட்டுத்தான் மறுவேல பார்ப்பானுங்க...... யோவ் இந்த கிசுகிசுவ எனக்கு சொன்னதே அந்த உள்குத்து பதிவர்தான்யா...........//

  உள்குத்து பதிவரும், ப.ரா.வும் ஈருடல் ஓருயிர் தோஸ்துகள் என்றும், 1960 களில் பிரதி ஞாயிறு ஒரே இலையில் அன்லிமிட்டட் மீல்ஸ் உண்ணும் அளவிற்கு பின்னிப்பிணைந்த பாசக்காரர்கள் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

  ReplyDelete
 7. வணக்கம் செங்கோவி!குஷ்புவோட இடுப்பை கிள்ளிட்டாங்களாம்னு நான் கூட கேள்விப்பட்டேன்,கலிகாலம்!

  ReplyDelete
 8. முதல்ப்படத்துக்கும் கிளிக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சேன் அப்புறமாத்தான் அண்ணனோட விளக்கத்தைப் பாத்து...சும்மா கிளி கிளின்னு கிழிச்சுடீங்க! :-)

  ReplyDelete
 9. யாரு வேண்டாத பதிவு எழுதினது?...உள்குத்துப் பதிவரா? நான் இந்தக்கோணத்தில யோசிக்கலையே? சில்ட்பியர் நீங்கன்னு?

  ReplyDelete
 10. அங்க எல்லாம் இடுப்பு இருக்குன்னு ஒருத்தன் கிள்ளியிருக்கான் பாருங்க அந்த நம்பிக்கைய பாராட்டணுமா இல்லையா? :-)

  ReplyDelete
 11. குசுப்பு ஆன்டியோட இளமைப் படத்தை இப்பதான் பாக்கேன்! அப்போ அடுத்த தலைவி ஹன்சிதான்னு நினைக்கேன்!

  ReplyDelete
 12. செங்கோவி மாம்ஸ்...
  இந்த பதிவுல தமன்னா போட்டோ தேவையில்லாம போட்டுடிங்கன்னு நினைக்கிறேன்....

  ReplyDelete
 13. மாம்ஸ், இந்தியா வந்தாலும் வந்தாரு...

  கிசுகிசு வெல்லாம் எழுதறாரே....

  வேனாம்ய்யா இந்த வேலை...

  ReplyDelete
 14. இந்த இடுப்பு வெவகாரம் பத்தி பேசுறவங்களை ஆணாதிக்க குறூப்புன்னு சொல்லி திட்டறதுக்கு ஒரு குறூப்பு கெளம்பியிருக்கு! என்னமோ பாத்துண்ணே! :-)

  ReplyDelete
 15. அந்த யு.எஸ் படம் கிடைக்கலியா? நம்ம ஊரு படம் போட்டிருகிங்க?

  ReplyDelete
 16. சரத் குமார் பத்தி நாலு வரி எழுதினதும் இவருக்கு எதுக்குயா நக்மா ஞாபகம் வரணும்.. இந்நேரம் சரத்தே மறந்து போயிருப்பாரு...

  இவரு வேற பழையதை கிண்டிக்கிட்டு...

  ReplyDelete
 17. பஞ்சு மிட்டாய் மட்டுமா? குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்ல்ல விக்கறாங்க...

  ReplyDelete
 18. கிளி க்கு நல்ல அர்த்தம் கொடுத்து விட்டு கிளி படம் போடவே இல்லையே....

  ReplyDelete
 19. என் இடுப்பு என்ன இலவசமாக் கொடுத்த ஸ்டவ் அடுப்பா’ன்னு குஷ்பூ காண்டாகிட்டாங்களாம்...///

  இலவசம்னு சொல்லாதிங்க, விலையில்லா பொருள்ன்னு சொல்லுங்க..

  அப்போதான் ஆளுங்கட்சிக்கு புடிக்கும். ஒருவேளை புடிச்சது ஆளும் பார்ட்டியா இருக்குமோ? செகன்ட்டுல வாழ்ந்துட்டான் ஒருத்தன்

  ReplyDelete
 20. கோவை நேரம் said...

  கிளி க்கு நல்ல அர்த்தம் கொடுத்து விட்டு கிளி படம் போடவே இல்லையே..../////

  கண்ணை நல்லா தொறந்து வச்சு பாரும்ய்யா... படம் தெரியும்...

  ReplyDelete
 21. எங்க பார்க்கிறது பிரகாஷ்...நேத்து என்ன நைட் ஷிப்ட் போனீங்களா..ஒன்னும்மே காணோம்...

  ReplyDelete
 22. நண்பர் ஒருத்தர் ‘வேண்டாத’ பதிவு ஒன்னு போட்டாரு.////

  அவருக்கு வேண்டிய பதிவா இருந்திருக்கும்...

  ReplyDelete
 23. ஒண்ணுமே இல்லாத படத்துக்கு எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்

  ReplyDelete
 24. நாம தான் வருஷம்-16 பார்த்த எஃபக்ட் தெளியாம அலையறோம்னு பார்த்தா////

  அடா...அடா....

  ReplyDelete
 25. ஆயிரம்தான் நீங்க வெளிநாட்டு கிளி பார்த்தாலும் நம்ம ஊரு கிளி மாதிரி வராது....

  நம்ம கிளி கி(ழி)ளிதான்.......!!!????

  தூக்கமில்லா இரவுகல்தான்.....

  ReplyDelete
 26. வணக்கம் உறவே,

  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்.....உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:

  நன்றி

  ReplyDelete
 27. //////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வணக்கம் உறவே,

  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்.....உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:

  நன்றி////////

  சார் வழக்கமா ஒரு பிட்டுப்பட லிங்கு ஒண்ணும் சேர்த்து போட்டுட்டு போவீங்களே, இன்னிக்கு போடலையா?

  ReplyDelete
 28. //////! சிவகுமார் ! said...
  // பொதுக்கூட்டம் முடிஞ்சு இறங்கிப் போகும்போது தலைவியோட இடுப்பை யாரோ கிள்ளிட்டாங்களாம்.//

  பன்னிக்குட்டி அந்த கூட்டத்துல சேட்டை செஞ்சதா தகவல் வந்துருக்கப்போய்!!///////

  யோவ் நானு இடுப்பையா கிள்ளுவேன், நல்லா ரோசன பண்ணிப்பாருங்க.......?

  ReplyDelete
 29. /////தமிழ்வாசி பிரகாஷ் said...
  நாம தான் வருஷம்-16 பார்த்த எஃபக்ட் தெளியாம அலையறோம்னு பார்த்தா////

  அடா...அடா....///////

  அப்போ அண்ணன் குஷ்புவ பக்கத்துல பார்த்தா............. அட வெலவெலத்துடுவாருன்னு சொல்ல வந்தேன்...........

  ReplyDelete
 30. கலந்துகட்டி கலக்குறேள்.

  ReplyDelete
 31. //NAAI-NAKKS said...
  ஆயிரம்தான் நீங்க வெளிநாட்டு கிளி பார்த்தாலும் நம்ம ஊரு கிளி மாதிரி வராது....

  நம்ம கிளி கி(ழி)ளிதான்.......!!!????

  தூக்கமில்லா இரவுகல்தான்.....//
  நக்ஸ், தானும் தூங்கமாட்டார், தன்னோட சேர்ந்தவங்களயும் தூங்காமட்டார்.

  ReplyDelete
 32. என்னடா இது பதிவே போடாம திடீர்னு 500 ஹிட்ஸ் அதிகமாயிடுச்சேன்னு செக் பண்ணினா நீங்க என் வலையைப் பத்தி பேசியிருக்கீங்க...ரொம்ப நன்றி..அறிமுகத்துக்கு.(நான் ஒரிஜினல்தான்.என் வலைப்பக்கமும் போட்டோவும் போனவாரம் சென்னை என் விகடனில் வந்திருந்தது)

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.