Tuesday, July 3, 2012

தி கிரேட் யோகா மாஸ்டர் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

உடம்பை வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே!

- திருமூலர்


பதிவர் புலம்பல்:

போன வாரம் நித்தியைப் பத்தி எழுதுன பதிவுல நித்தியை ’ யோகா மாஸ்டர்’னு சொன்னதால யோகா ஐயா மனமுடைஞ்ச போயிட்டதா தகவல் கிடைச்சிருக்கு. உங்களுக்கே தெரியும், பல பதிவர்களுக்கு டெய்லி மூணு வேளை சோறு(அட்டெனன்ஸ்) போட்டு, ஹிட்ஸை ஏத்துறதே ஐயா தான். நாம என்ன தான் மொக்கையா எழுதினாலும், பயப்படாம தொடர்ந்து வர்றவரும் யோகா ஐயா தான்..அப்படிப்பட்ட நல்ல மனுசரை நோகடிச்சுட்டமேன்னு ஒரே கவலையாப் போச்சு. பாவம், ஹிட்ஸை நம்பியே வாழுற பதிவர்கள், நம்ம வாய்க்கொழுப்பால பாதிக்கப்படக்கூடாதில்லையா.அதனால..

அனுஷ்கா நடிக்க வர்றதுக்கு முன்னாடி யோகா மாஸ்டரா இருந்தவங்க. அந்த யோகா மாஸ்டர் ரொம்ப நல்லவங்க. வல்லவங்க. யோகா மாஸ்டருக்கு பெரிய மனசு, ரொம்பத் திறமைசாலி. அவங்க நாகர்ஜுனாக்கு யோகா சொல்லித்தர அவர் வீட்டுக்குப் போனாங்க. அவர் யோகா மாஸ்டரோட திறமையைப் பார்த்துட்டு, சினிமாக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. இப்போ பல ஹீரோக்களும் அம்மணிகிட்ட யோகா கத்துக்கிட்டிடுப்பாங்கன்னு நம்புவோம். நமக்கெல்லாம் ஒரு நல்ல யோகா மாஸ்டரை அறிமுகப்படுத்திய நாகார்ஜூனாக்கு நன்றி.


உலக நாயகனே:
கொஞ்ச வருசமாவே எனக்கு கிறுக்குத் தனமா ஒரு யோசனை..’உண்மையிலேயே கமலு தமிழ்சினிமாவுக்கு இனிமே தேவை தானா’ன்னு! கேரக்டருக்கு ஏத்த மாதிரி உடம்பை வருத்திக்கிறது தான் கமலோட ஸ்பெஷாலிட்டி. இப்போ விகரமும், சூர்யாவுமே அதைச் செஞ்சுடறாங்களே..இனிமே இவரு எதுக்குன்னு கேணத்தனமா நானா யோசிச்சுக்கிட்டிருந்தேன். ஆனா இப்போ விக்ரமும், சூர்யாவும் தங்களோட ‘மேனி பளபளப்பை’ இழந்துட்டு, ட்ரை ஆகி நிற்கிறதைப் பார்த்தப்புறம் தான் கமலோட அருமையே புரியுது.

அவருக்கு இருக்கிற சினிமா அறிவுக்கும், திறமைக்கும் தமிழ்சினிமாவையும் தாண்டி அவர் தொட வேண்டிய எல்லைகள் நிறைய இருக்கு. (நிசமாவே இதுல டபுள் மீனிங் இல்லைய்யா!). ஆனாலும் குளத்துல அடைபட்ட திமிங்கலா அண்ணாத்தை இருந்தாரு. இப்போ ‘அவர் ஒத்துக்காத’ ஆண்டவன் புண்ணியத்துல ஹாலிவுட் கதவு திறந்திருக்கு. அவரோட சின்சியாரிட்டிக்கு உரிய மரியாதை அங்கயாவது கிடைக்கட்டும்.

அடுத்து பாரதிராஜாவும் ஹாலிவுட் போறாராம். சுத்திப்பார்க்க, இல்லைய்யா..படம் எடுக்கத் தான்..அவரு கொஞ்ச வருசமாவே இங்கிலீஸ்லயே பேசிக்கிட்டுத் திரிஞ்சாரு..நானும் ’என்னாச்சோ, பாவம்’-னு நினைச்சுக்கிட்டிருந்தா, மனுசன் ட்ரெய்னிங் தாம்யா எடுத்திருக்காரு..பொம்மலாட்டம் ரீமேக்காம்..நல்ல படம் தான்.அதுவும் நமக்கு பெருமை சேர்க்கும்னு நம்புவோம். உணர்ச்சிவசப்பட்டு மனோஜை மட்டும் ஹீரோவாப் போட்றாதீங்க சார்!

நிச்சயம்..லட்சியம்:

ஒலகம்பூரா வாழுற தமிழர்கள் ஆகஸ்டு மாசம் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்திருங்கப்பா..கலிஞரு டெசோ மாநாடு நடத்துறாரு..நமக்கெல்லாம் தமிழீழம் வாங்கிக்கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாராம். ‘தமிழீழம் வாங்கித் தராமல் என் உயிர் பிரியாது’ன்னும் தெளிவாச் சொல்லிப்புட்டாரு..இப்போ அதுல ஒரே ஒரு சிக்கல் தான்..’சட்டுப் புட்டுன்னு வாங்கிக் கொடுத்துட்டு மண்டையைப் போடுவோம்’னு பார்த்தா, அந்த தமிழீழம் எந்தக் கடையில கிடைக்குன்னு தான் தலிவருக்குத் தெரியலியாம்..சரி, எப்படியும் பொதுக்குழுவைக் கூட்டி கடையைக் கண்டுபிடிச்சுடுவாங்கன்னு நம்புவோம்.

அது மட்டுமில்லாம ‘திமுக கூட்டத்துக்குப் போனா, குஷ்பூ இடுப்பு கிடைக்கும்’னு வேற நிறையப் பேரு புரளியைக் கிளப்பி தொண்டர்களை வெறியேத்துறாங்களாம்..அதனால தமிழீழம் வாங்கிக் கொடுத்தா அந்த அவப்பெயரும் நீங்கிடும்னு கட்சித் தலைவர்கள் ஃபீல் பண்றாங்களாம்..எது எப்படியோ..டெசாவுக்கு எல்லாரும் வாங்க..தமிழீழம்  லட்சியம்..குஷ்பூ இடுப்பு நிச்சயம்!

எச்சரிக்கை:
என் தோழிக்கு கல்யாணம் ஆகி 2 வருசம் ஆகியும் குழந்தை இல்லை. அதனால தமிழ்நாட்டுல பிரபலமான ஒரு ஆஸ்பத்திரிக்கு வீட்டுக்காரரோட போனாங்க..அவங்களும் நல்லா செக் பண்ணிப் பார்த்துட்டு, ’விந்தணு எண்ணிக்கை குறையா இருக்கு, பொண்ணுக்கு கர்ப்பப்பை வாய் சிறுசா இருக்கு,அப்புறம் லபோஃபியா லிசோஃபியா’-ன்னு என்னமோ புரியாத வார்த்தையெல்லாம் சொல்லிட்டு, மொத்தமா 5 லட்சம் ஆகும்னு சொல்லியிருக்காங்க.

தோழி ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்ட சொன்னப்போ, இன்னொரு நண்பர் சித்த மருத்துவம் ட்ரை பண்ணலாமு சொன்னாரு..தோழிக்கு ஒரே குழப்பம்..ஆனாலும் கீதைல கிருஷ்ணர் சொன்னபடி, பலனை எதிர்பாராம அவங்க தங்களோட தினசரிக் கடமையை தவறாம செய்துக்கிட்டே வந்தாங்க..திடீர்னு தோழிக்கு தலைசுத்தல்..என்னடான்னு வேற லோக்கல் டாக்டர்கிட்டப் பார்த்தா, கன்சீவ் ஆனதைக் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க..

அடப்பாவிகளா..அப்போ அந்த 5 லட்சம்..விந்தணு கம்மியா இருக்குன்னாங்களே..அதெல்லாம்? அப்போ கம்மியா இருந்தது விந்தணு இல்லையா.... டாக்டரோட நாணயமும் பேங்க் பேலன்சும் தானா? அதுசரி, நம்மாளுக கால்ல பிரச்சினைன்னாலே சும்மா விடமாட்டாங்க..இதுல பிரச்சினைன்னா கறந்துட மாட்டாங்க..என்னமோய்யா, நீங்க பண்றது நல்லாயிருந்தாச் சரி!

சேலை விளம்பரம்:
ரெண்டு நாள் முன்ன சின்சியரா முருகவேட்டை எழுதிக்கிட்டிருந்தப்போ, டிவில ஆயிரம் நிலவே வா பாட்டு ஓடிக்கிட்டிருந்துச்சு. அதைப் பார்த்துக்கிட்டிருந்த தங்கமணி திடீர்னு ‘ஏங்க, இந்த சேலை டிசைன் நல்லாயிருக்கல்ல?’ன்னாங்க..’அய்யய்யோ’ன்னு பதறிக்கிட்டே திரும்பிப்பார்த்தா, ஜெயலலிதா ஆடிக்கிட்டிருந்தாங்க. ஆனா சேலையே கட்டலை. ‘அந்தம்மா சேலையே கட்டலையே?’ன்னேன்..’பொறுங்க..எம்ஜிஆர் வரட்டும்’னாங்க. தலைவர் வரவும் பார்த்தா, ஜிகுஜிகுன்னு ஒரு பார்டர் போட சேலைத்துணி மாதிரி ஒன்னைக் கட்டிக்கிட்டு நடந்து வர்றாரு..அடங்கொக்கமக்கா, தங்கமணிகூட தனியா ’நானா யோசிச்சேன்’ எழுதிடும் போலிருக்கே!

ஏன் தலைவருக்கு இப்படி ட்ரெஸ் பண்ணி விட்டாங்க...தலைவிக்கு வேற சேலையைக் காணோம்..ஒருவேளை லோ பட்ஜெட் படமோ? இல்லே, ஹீரோ ட்ரெஸ் வர லேட் ஆகிடுச்சுன்னு அம்மணிகிட்ட உருவிட்டாரோ! ஆனாலும் தலைவர்னா தலைவர் தாம்யா..அப்பவே சட்டசபைக்குப் போக தலைவிக்கு ட்ரெய்னிங் கொடுத்திருக்காரே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

 1. ஆமா திருமூலர் ஷகீலாவப் பாத்தா பாடினார்?

  ReplyDelete
 2. /பல பதிவர்களுக்கு டெய்லி மூணு வேளை சோறு(அட்டெனன்ஸ்) போட்டு, ஹிட்ஸை ஏத்துறதே ஐயா தான். //
  அண்ணே எனி உள்குத்து? (எதுக்கும் சும்மா கேட்டு வைப்போம்! :-))

  ReplyDelete
 3. @ஜீ...

  ஷகீலாவைப் பார்த்தா பாடவா செய்வாங்க?...தம்பி, நீங்க இன்னும் வளரணும்!

  ReplyDelete
 4. //அண்ணே எனி உள்குத்து? //

  அது நம்ம டிபார்ட்மெண்ட் இல்லியே தம்பி!

  ReplyDelete
 5. //அவருக்கு இருக்கிற சினிமா அறிவுக்கும், திறமைக்கும் தமிழ்சினிமாவையும் தாண்டி அவர் தொட வேண்டிய எல்லைகள் நிறைய இருக்கு. (நிசமாவே இதுல டபுள் மீனிங் இல்லைய்யா!). //
  எஹே! எஹே! எஹெஹே! எஹெஹெஹெஹே!!! :-)

  ReplyDelete
 6. திருமூலருக்கும் ஷகிலாவுக்கும் என்ன சம்பந்தம்...
  நமீதா போட்டோ மட்டும்தானா... மேட்டர்... அதாங்க செய்தி இல்லையா?

  ReplyDelete
 7. அண்ணன் டபுள் மீனிங் இல்லன்னதுதான் டவுட்டா இருக்கு! தமிழ்சினிமா தாண்டின்னா...ஒருவேளை...வேணம் விட்டிருவோம்! :-)

  //உணர்ச்சிவசப்பட்டு மனோஜை மட்டும் ஹீரோவாப் போட்றாதீங்க சார்! // :-))

  குஷ்புவுக்கு இடுப்பு இருந்த காலத்தில எடுத்த போட்டோ போலருக்கு! :-)

  ReplyDelete
 8. // சே. குமார் said...
  திருமூலருக்கும் ஷகிலாவுக்கும் என்ன சம்பந்தம்...
  நமீதா போட்டோ மட்டும்தானா... மேட்டர்... அதாங்க செய்தி இல்லையா?//

  ஏன் குமார், உங்களுக்கு மேட்டர் மட்டும் போதாதா? செய்தியும் வேணுமா?

  ReplyDelete
 9. இப்போதான் கமல் ஹாசனும் உலகநாயகனும்ன்னு ஒரு பதிவு எழுதி முடிச்சிட்டு திராப்டுல வச்சேன், இங்க அதுமாதிரியே ஒரு மேட்டர் இருக்கு. இதுதான் டெலிபதின்னு சொல்வாங்களோ?

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. நாங்க பதிவு எழுதாதப்போ கூட மறக்காம வந்து சோறு போட்டவர் யோகா அய்யா, அவரு மனச நோகடிச்சிருக்கீங்களே, இதற்க்கு வன்மையான கண்டனங்கள்.

  ReplyDelete
 12. ஜீ... said...

  //குஷ்புவுக்கு இடுப்பு இருந்த காலத்தில எடுத்த போட்டோ போலருக்கு! :-)//

  ஓவர் குசும்புய்யா இந்தாளுக்கு.

  ReplyDelete
 13. @Dr. Butti Paul
  //இப்போதான் கமல் ஹாசனும் உலகநாயகனும்ன்னு ஒரு பதிவு எழுதி முடிச்சிட்டு திராப்டுல வச்சேன்//

  கமல் - உலக நாயகன் , பதிவு ஒண்ணு என்கிட்டயும் டிராப்டில ரொம்ப நாளா தூங்குது பாஸ்! :-)

  ReplyDelete
 14. ஜீ... said...
  @Dr. Butti Paul
  //இப்போதான் கமல் ஹாசனும் உலகநாயகனும்ன்னு ஒரு பதிவு எழுதி முடிச்சிட்டு திராப்டுல வச்சேன்//

  கமல் - உலக நாயகன் , பதிவு ஒண்ணு என்கிட்டயும் டிராப்டில ரொம்ப நாளா தூங்குது பாஸ்! :-)//

  அடடா, அப்போ நம்ம பதிவையும் தூங்கவச்சிடலாம்ன்னு சொல்றீங்களா? இருந்தாலும் கூட்டமாவே ஒரே மாதிரித்தான் சிந்திக்கறோமோ?

  ReplyDelete
 15. மானாட மயிலாடவுக்கு செய்தி இல்லை... கொ.ப.செவுக்கு மட்டும் செய்தியான்னு நம்ம கலைஞர்சீ...இல்ல ஜீ வருத்தப்பட்டு சிறை நிரப்ப போகாம இருந்துட்டா... அதுக்காகத்தான் கேட்டேன்....

  ReplyDelete
 16. //Dr. Butti Paul said...
  ஜீ... said...
  @Dr. Butti Paul
  //இப்போதான் கமல் ஹாசனும் உலகநாயகனும்ன்னு ஒரு பதிவு எழுதி முடிச்சிட்டு திராப்டுல வச்சேன்//

  கமல் - உலக நாயகன் , பதிவு ஒண்ணு என்கிட்டயும் டிராப்டில ரொம்ப நாளா தூங்குது பாஸ்! :-)//

  அடடா, அப்போ நம்ம பதிவையும் தூங்கவச்சிடலாம்ன்னு சொல்றீங்களா? இருந்தாலும் கூட்டமாவே ஒரே மாதிரித்தான் சிந்திக்கறோமோ?//
  அடப்பாவிகளா..நானும் அப்படி ஒரு பதிவை எழுதிட்டு, திருப்தியில்லாம அழிச்சுட்டுத் தாம்யா இதை எழுதியிருக்கேன்..

  ReplyDelete
 17. இரவு வணக்கம்,செங்கோவி!என்ன இது,இப்புடீல்லாம் தப்புத் தப்பாவே உங்க மனசு திங் பண்ணுது?அவ்ளோ பெரிய அப்பா டக்கரா நான்????

  ReplyDelete
 18. எப்புடியோ நல்லா வுழுந்து,வுழுந்து சிரிச்சேன்!!!!(அடி ஒண்ணும் படலை!)

  ReplyDelete
 19. அந்தாளுக்கு(க/கொலைஞருக்குத்)தான் அறளை பேந்துடிச்சு!நமக்குமா???

  ReplyDelete
 20. ////நாம என்ன தான் மொக்கையா எழுதினாலும், பயப்படாம தொடர்ந்து வர்றவரும் யோகா ஐயா தான்..////
  ஆமா பாஸ் என் சில பதிவுகளை படிக்கும் போது எனக்கே செம மொக்கையா தெரியும் ஆனாலும் ஜயா அங்கே தவராமல் வந்துவிடுவார்.

  எங்களை போன்ற மொக்கை பதிவர்களை வாழ்வைக்கும் மாபெரும் சேவையாளனை
  (ஜயா மன்னிச்சு........) எனக்குக்கும் அறிமுகம் செய்த பெருமை உங்களையே சாரும் செங்கோவி பாஸ்

  ஞாபகம் இருக்கா ஆம் நான் அந்த அஞ்சலி வயசை சொன்ன உங்கள் பதிவில் ஏற்பட்ட அந்த சண்டையில்தான் யோகா ஜயா எனக்கு அறிமுகம் ஆனாரு.

  ReplyDelete
 21. ////ஆனா சேலையே கட்டலை. ‘அந்தம்மா சேலையே கட்டலையே?’ன்னேன்.////


  என்ன பாஸ் சொல்லுறீங்க??????????????????????????????

  ReplyDelete
 22. //திமுக கூட்டத்துக்குப் போனா, குஷ்பூ இடுப்பு கிடைக்கும்’னு வேற நிறையப் பேரு புரளியைக் கிளப்பி தொண்டர்களை வெறியேத்துறாங்களாம்..///

  அஹம் பிரமாஸ்மி!

  #அப்புடின்னா, எனக்கும் கெடைக்குமான்னு மீனிங்குய்யா!!

  :)

  ReplyDelete
 23. அட்டகாசம்! சிரிப்பு மழை பொழிய வெச்சிட்டீங்க!

  ReplyDelete
 24. அருமை செங்கோவி

  ReplyDelete
 25. பல்சுவை தொகுப்பு....! எப்பிடியோ அஞ்சு லட்சம் தப்பிச்சுது போங்க...!

  ReplyDelete
 26. திருமூலருக்கும் ஷகிலாவுக்கும் என்ன சம்மந்தம் பாஸ்??

  ReplyDelete
 27. யோகா ஐயா போல ஒரு ஊக்கிவிப்பாளரை பதிவுலகில் பார்ப்பது அபூர்வம் உங்கள் தளம் மூலம் தான் எனக்கும் அவரோடு பழக்கம் பின் அதுவே ஒரு நல்ல உறவாக அமைந்ததில் செங்கோவியாரின் நட்பை மறக்க முடியாது!

  ReplyDelete
 28. கலைஞர் பாடு பாவம் குஸ்பூ வேற இதில் ஹீ ஈழம் ஒரு கடைச்சரக்குப்போல எண்ணிவிட்டார் கொலைஞர்!

  ReplyDelete
 29. பொம்மலாட்டம் வெற்றிபெற வாழ்த்துவோம்  ஹாலிவூட்டில் பாரதிராஜாவிற்கு ஒரு சல்யூட் !

  ReplyDelete
 30. யோவ் உனக்கு இது பிடிக்கும்னு நம்புறேன் ஹீ ஹீ

  http://sabhotactress.blogspot.in/2012/01/trisha-latest-cutegorgeousspicy-and-hot.html

  ReplyDelete
 31. யோவ் கொழந்த அப்பப்போ உண்மையாவும் பேசுற >>>>>ஆனா இப்போ விக்ரமும், சூர்யாவும் தங்களோட ‘மேனி பளபளப்பை’ இழந்துட்டு, ட்ரை ஆகி நிற்கிறதைப் பார்த்தப்புறம் தான் கமலோட அருமையே புரியுது.<<<<<<<

  ReplyDelete
 32. வணக்கம் அண்ணாச்சி...

  ஃஃஃஃஅவரு கொஞ்ச வருசமாவே இங்கிலீஸ்லயே பேசிக்கிட்டுத் திரிஞ்சாரு..நானும் ’என்னாச்சோ, பாவம்’-னு நினைச்சுக்கிட்டிருந்தாஃஃஃஃ

  உண்மையாவா சொல்லுறிங்க... ஒரு தடவை நம்ம திரிவு மேடையில ஆங்கிலிசு பேச நம்ம இயக்குனர் சார் அதில வச்சே திட்டினவராமுல்ல..

  ReplyDelete
 33. அப்புறமா அந்த குழந்தை மேட்டரு பணத்தை யோசிச்சதும் அவருக்கு ஒரு சீர்த்திடனிலை மாறிடிச்சோ... (லொல்ஸ்)

  ReplyDelete
 34. /////உடம்பை வளர்த்தேன்
  உயிர் வளர்த்தேனே!//////

  இதுக்கு நீங்க போட்டிருக்க படத்த பாத்து பாத்து பலரோட உடம்பும் எளைச்சு போச்சு,உயிர் (அணுக்களும்) செத்து போச்சு.........

  ReplyDelete
 35. ///பல பதிவர்களுக்கு டெய்லி மூணு வேளை சோறு(அட்டெனன்ஸ்) போட்டு, ஹிட்ஸை ஏத்துறதே ஐயா தான். //////

  வாழ்க எம்மான்.....

  ReplyDelete
 36. /////அனுஷ்கா நடிக்க வர்றதுக்கு முன்னாடி யோகா மாஸ்டரா இருந்தவங்க.//////

  இதுவரை எத்தன பேரு யோகா கத்துக்கிட்டாங்களோ.....?

  ReplyDelete
 37. /////கொஞ்ச வருசமாவே எனக்கு கிறுக்குத் தனமா ஒரு யோசனை..’உண்மையிலேயே கமலு தமிழ்சினிமாவுக்கு இனிமே தேவை தானா’ன்னு! ///////

  இந்த யோசனை இன்னும் எனக்கு இருக்குண்ணே.... நேத்து வந்த சின்னப்பசங்கள்லாம் அழககழகா சிம்பிளா அருமையா கலக்குறானுங்க, அண்ணன், ஆஸ்கார் நோபல்னு சொல்லி சொல்லி டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கார்!

  ReplyDelete
 38. /////குஷ்பூ இடுப்பு நிச்சயம்!/////

  போட்டோவ பாத்தா வேற என்னமோ தோனுது.... சரிவிடுங்க...!

  ReplyDelete
 39. ////அடப்பாவிகளா..அப்போ அந்த 5 லட்சம்..விந்தணு கம்மியா இருக்குன்னாங்களே..அதெல்லாம்? அப்போ கம்மியா இருந்தது விந்தணு இல்லையா.... டாக்டரோட நாணயமும் பேங்க் பேலன்சும் தானா? //////

  இதுக்குத்தான் ரெண்டு டாக்டர்கிட்ட செக் பண்ணிக்கனும்....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.