Wednesday, August 15, 2012

சட்னி பெயர்க்காரணம்.... (நானா யோசிச்சேன்)

முதலில் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!
 நெஞ்சைத் தொட்ட வரிகள்:

வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு
நான் சைதாப் பேட்டே கொக்கு!


பதிவர் நன்றி:
நண்பர்கள் கஸாலியும் தமிழ்வாசியும் நான் இந்தியா வந்தபோதே என் விகடனில் என் பெயர் வரவில்லையே என்று வருத்தப்பட்டார்கள். ஃபோட்டோவும் கொடுக்கணும் என்று தமிழ்வாசி மிரட்டினார். நானா இரண்டு மாசம் யோசிச்சு, சரின்னு சொல்லவும்,என்  ஃபோட்டோவை தமிழ்வாசி விகடனுக்கு அனுப்பினார். அப்பவும் யோசனை தான், இதனால விகடன் சேல்ஸ் எதுவும் பாதிச்சிருமோன்னு! நம்மளே இவ்ளோ யோசிக்கும்போது, விகடனார் எவ்ளோ யோசிப்பாரு? நம்ம ஃபோட்டோவைப் பார்த்தோ என்னமோ, இனிமே ‘என் விகடன்’ பகுதியே புக்ல வராது..நெட்ல மட்டும் தான்னு முடிவு பண்ணிட்டாங்களாம்..என்ன கொடுமை சார் இது!


ஆனாலும் விகடன்.காமில் நம் பெயரை/மூஞ்சியைப் பார்க்கும்போது. சந்தோசமாக இருக்கிறது. என் விகடனில் செங்கோவி ப்ளாக் பற்றிய செய்தியை வெளியிட்ட விகடனுக்கும், அதன் நிருபருக்கும், தமிழ்வாசிக்கும் நன்றி. விகடன் சுட்டி இங்கே: வலையோசையில் செங்கோவி!

 இந்த வார குழப்பம்:

நானே எப்பவாவது தான் சிறுகதை எழுதறேன்..அதுக்கும் இப்போ எப்படியெல்லாமோ ஆப்பு வருது..தற்கொலை பண்ணிக்கப்போற ஒருத்தனுக்கும், கடவுளுக்கும் நடக்கும் ஃபோன் உரையாடலை வச்சு ஒரு கதை எழுதிமுடிச்சுட்டு, தினத்தந்தி பார்த்தா, கடவுள்கூட ஒருத்தன் ஃபோன்ல பேசுறமாதிரி ஸ்டில்லோட ஒரு பட விளம்பரம்..இது எப்படி..இப்போ என்னா பண்றது......உஸ்ஸ்!
 சந்தோச அட்டாக்:
ஆப்பிரிக்காவுல ஒருத்தருக்கு ஆறு மனைவிகளாம்..ஆமாங்க, டவுட்டாகி திரும்பப் படிக்காதீங்க..’ஆறும்’ மனைவிங்க தான்..அவரு ஒருநாளு ஆறாவது மனைவியோட சந்தோசமா இருந்தாராம்.(மேட்டரை சந்தோசம்னு மொழிபெயர்த்த தமிழறிஞர் யாருங்க?). அவரு ஆறாவதை மட்டும் கவனிக்கிறது தெரிஞ்சு, மத்த அஞ்சு பேரும் காண்டாகிட்டாங்க.(பின்னே கன்சீவா ஆவாங்க!). அதனால அந்த மனுசனை சம்பவம் நடக்கும்போதே ‘மவனே, எங்களையும் சந்தோசப்படுத்து’ன்னு பிடிச்சுக்க்கிட்டாங்க. அவரும் வேற வழியில்லாம எல்லாரையும் சந்தோசப்படுத்த ஆரம்பிச்சிருக்காரு. 

ஒரே நேரத்துல நாலை முடிச்சுட்டு, அஞ்சாவதை நோக்கிப் போகும்போது, ஹார்ட் அட்டாக் வந்து, ஆளு அவுட்..ச்சு..ச்சு! இப்போ அந்த ஆறு மனைவிகளையும் போலீஸ் தேடுதாம்.

முதல்ல அந்த மனுசனை நினைச்சு ஃபீல் பண்ணாலும், அப்பாலிக்கா நானா யோசிச்சதுல நடந்ததெல்லாம் நன்மைக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன்..ஏன்னா அவரு ஆறையும் அட் எ டைம்ல சந்தோசப்படுத்தி, அது தலைப்புச் செய்தியா வந்திருந்ததுன்னு வைங்களேன்..பாதி ஆம்பளைங்களுக்கு மேட்டரைப் படிச்ச உடனே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். மீதி ஆம்பிளைங்களுக்கு மேட்டரை ட்ரை பண்ண உடனே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்..மொத்தத்துல ஆண் இனமே அழிஞ்சிருக்குமே..அதுக்கு இது பரவாயில்லையே..எப்படியோ தன்னுயிர் கொடுத்து நம்முயிர் காத்த தானைத் தலைவன் வாழ்க(!).


சட்னி:

சட்டுன்னு வேலை முடிவதால் தான்
சட்னி என்று பெயர் வந்ததோ?


தீவிரமா யோசிச்சது:
எப்படியோ கலைஞர் வெற்ற்ற்றிகரமா டெசோ மாநாடு நடத்தி முடிச்சுட்டாரு. அவங்களே டெசோ மாநாடு நடத்தும்ம்போது, நாம ஏன் ‘பெண்ணுரிமைக்காக ஒரு மாநாடு நடத்தக்கூடாதுன்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். சில ஆண்கள் பெண்களை போகப்பொருளாப் பார்க்கிறாங்க. கீழே இருக்கிற படத்தைப் பாருங்க.
 இந்த மாதிரி ஆபாசப்படமா பதிவுல போடுறாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது ரத்தம் கொதிக்குது.(அந்த கொதிப்பு இல்லைய்யா!)..அதனால நானும் பெண்களுக்கு எதிரா நடக்கும் அனைத்துக்கொடுமைகளையும் கண்டிச்சு ஒரு மாநாடு கூட்டுறேன்..’நல்ல ஸ்டில்லாப் போடுங்கண்ணே’-ன்னு கேட்கிற பின்னூட்டக் கண்மணிகள்லாம் அவசியம் கலந்துக்கணும்!

சுந்தர புருசன் :

நமக்கு குஷ்பூவைப் பிடிக்கும்னு நம்ம ப்ளாக்கைத் தொடர்ந்து படிக்கிற சின்னப்புள்ளைக்குக்கூடத் தெரியும்..அதே மாதிரி அஞ்சலியை நமக்குப் பிடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு மனுசனுக்கு ஒரே நேரத்துல இரண்டையும் பிடிக்கிறது தப்பாண்ணே? இல்லை தானே? ஆனாலும் அதைத் தப்புன்னு சொல்லிட்டாங்கய்யா..சொல்லிட்டாங்க!

ஆமாங்க, நம்ம சுந்தர்.சிக்கு இப்போ அஞ்சலிகூட ஒரு இதுன்னு கிசுகிசு..கோடம்பாக்கமே குய்யோமுறியோன்னு அலறுது..முன்னாடி நமக்கு குஷ்பூவைப் பிடிச்சது, இப்போ அஞ்சலியைப் பிடிக்குது..இதெல்லாம் பரிணாம வளர்ச்சி..இதுகூடப் புரியாம புலம்புறாங்களே!..ஆனாலும் குஷ்பூ மாதிரி ஸ்ட்ராங் லேடியை விட்டு சுந்தர்.சியால ஓட முடியும்னு எனக்குத் தோணலை!

பில்டிங் மட்டுமில்லைப்பு..பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங் தான்!

ஹன்சி மன்றச் செய்தி :
நம்ம தங்கத்தலைவி ஹன்சிகா இந்த வருசமும் தன்னோட பிறந்த நாள் அன்னிக்கு இரண்டு குழந்தைகளை தத்து எடுத்திருக்காங்க..இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு எல்லாருக்குமே ஆச்சரியமா இருக்கு. இதையே மத்த நடிகைகளும் ஃபாலோ பண்ணா எவ்ளோ நல்லா இருக்கும்?

ஹன்சி அவங்க வயசுக்கு ஏத்த மாதிரி, ’குழந்தையை’ தத்தெடுக்கிற மாதிரி சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா மாதிரி ஓல்டு ஹீரோயின்ஸ், அவங்க வயசுக்கு ஏத்த மாதிரி படிச்ச, குவைத் போன்ற ஃபாரின்ல வேலை செய்ற, 30 வயசுக்கு மேற்பட்ட நல்ல பிள்ளையைத் தத்தெடுக்கலாமே!
ஹன்சி தத்தெடுத்தது நல்ல விஷயம்னாலும், நம்ம மனசு ஓரத்துல ஒரே ஒரு சின்ன வருத்தம்..நாமெல்லாம் இருக்கும்போது, எதுக்கு தத்தெடுக்கணும்? குழந்தை வேணும்னு கேட்டா, ஹெல்ப் பண்ண மாட்டோமா?அட, அந்த ஹெல்ப் கூடப் பண்ணலேன்னா, அப்புறம் எதுக்கு இந்த மன்றம்- தலைவர்ங்கிறேன்?

கேஸ் பிரச்சினை:
இந்த பதிவர் கஸாலி இருக்காரே..சும்மாவே இருக்க மாட்டாருங்க..அப்பப்போ ஏதாவது பீதியைக் கிளப்பறே அவருக்கு வேலையாப் போச்சு. மம்மி விகடன் மேல கேஸ் போட்டிருக்காங்க, இல்லியா? அதே மாதிரி பதிவர்கள் மேலயும் கேஸ் பாயப்போகுது. ஜாக்ரதை-ன்னு பதிவு போட்டு நம்மளை டரியல் ஆக்கிட்டாரு..

நம்மளோ ஃபாரின்ல இருக்கோம்..கேஸ் போட்டா லோக்கல் போலீஸால பிடிக்க முடியாது. அப்புறம் இண்டர்போல் போலீஸ் உதவியை நாடுவாங்க..நாமளும் வேற வழியில்லாம இண்டர்நேசனல் டான் ஆகிடுவோம்...அப்புறம் செங்கோவி-1, செங்கோவி-2ன்னு படமெல்லாம் எடுப்பாங்க..அந்த பழைய கோட் சூட்/கூலிங் க்ளாஸ்க்கு மறுபடியும் வேலை கொடுக்க வெண்டி வரும்...இதெல்லாம் தேவையா? பேசாம  மம்மியை வாழ்த்தி ஒரு பதிவு போட்டுடலாமா?

சுதந்திர தின வாழ்த்து :
மேல சொன்னபடி ஒரு வாழ்த்துப் பதிவு போடுவோம்னு பார்த்தா, தட்ஸ்தமில்ல கீழே உள்ள இரண்டு தலைப்புச் செய்தி தென்பட்டுச்சு:

'மன உளைச்சல்'...ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு வக்கீல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா

அச்சமின்றி வாழ்வது தான் சுதந்திரம்: ஜெயலலிதாவின் சுதந்திர தின செய்தி

ஆஹா..என்னா ஒரு குசும்புத் தனமான சுதந்திர தினச் செய்தி!..கை நமநமங்குதே...நம்மளை டான் ஆக்காம விடமாட்டாங்க போல!..இருந்தாலும் எதுக்கு வம்பு..நம்மையெல்லாம் வாழ வைக்கும் இதய தெய்வம் மாண்புமிகு.புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நானும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

 1. விகடனில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தல!

  சட்னி பெயர்க்காரணம் ஹி ஹி செம!

  ReplyDelete
 2. ////நம்ம மனசு ஓரத்துல ஒரே ஒரு சின்ன வருத்தம்..நாமெல்லாம் இருக்கும்போது, எதுக்கு தத்தெடுக்கணும்? குழந்தை வேணும்னு கேட்டா, ஹெல்ப் பண்ண மாட்டோமா?அட, அந்த ஹெல்ப் கூடப் பண்ணலேன்னா, அப்புறம் எதுக்கு இந்த மன்றம்- தலைவர்ங்கிறேன்?////

  இன்னுமா இந்த பீப்பா மேல உள்ள அது தீரவில்லை அட ரசனை

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. விகடனில் உங்கள் தளம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 5. Is it பரிணாம வளர்ச்சி??

  I think முப் பரிமாண வளர்ச்சி

  ReplyDelete
 6. கறுப்புச் சிங்கம், கால்கிலோ தங்கம் (இதுக்கு என்ன அர்த்தம் கேட்கப்படாது) புகழ் அண்ணன் செங்கோவியை வாழ்ந்த வயதில்லை வணங்குகிறோம். அண்ணன் மீண்டும் அடித்து ஆட கிளம்பியிருக்கிறார்.

  செயலலிதா பதிவை எதிர்பார்க்கிறோம். சக்ரி இப்ப ப்ரியாத்தானாம் இருக்காப்ல. செங்கோவி சிகுவல் எடுக்க ரெடியாம்.

  அண்ணனின் உர்ரொமான்டிக் போட்டோவில் தான் அண்ணி காலியானாரோ........? நானும் இப்படி ஒரு போட்டோ எடுத்து வைத்திருக்கனும். சிலவேளை எண்ணைக்காவது பயன்படும்.

  ReplyDelete
 7. நம்ம ஃபோட்டோவைப் பார்த்தோ என்னமோ, இனிமே ‘என் விகடன்’ பகுதியே புக்ல வராது..நெட்ல மட்டும் தான்னு முடிவு பண்ணிட்டாங்களாம்..என்ன கொடுமை சார் இது!////

  செங்கோவி ஹன்சி கூட நிக்குற மாதிரி போட்டோ இருந்துச்சுன்னா ஆனந்த விகடன் அட்டைப்படத்துல போட்டிருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

  ReplyDelete
 8. மனமார்ந்த வாழ்த்துக்கள் மாம்ஸ்....

  விகடன் வலையோசையில் வந்தமைக்கு...

  ReplyDelete
 9. வாழ்த்துகள் பாஸ்...

  ReplyDelete
 10. வாழ்த்துகள் பாஸ்...

  ReplyDelete
 11. சூப்பர் யா நல்ல வேலை என் விகடன் ல போட்டாங்க நம்ம ஆனந்த விகடன்ல போட்ட என்ன ஆயிருக்கும்

  ReplyDelete
 12. காலை வணக்கம்,செங்கோவி!சுதந்திர தின வாழ்த்துக்கள்,முதலில்!!!!!இன்னிக்குப் பதிவு கூட சிம்பாலிக்கா தான் இருக்குது,ஹி!ஹி!ஹி!விகடனில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்!(கடேசில பப்ளிக் ஆயிடிச்சு.)

  ReplyDelete
 13. சட்னி:சட்டுன்னு வேலை முடிவதால் தான்சட்னி என்று பெயர் வந்ததோ?////??????????!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 14. விகடனில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

  ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

  ReplyDelete
 15. Congrats Sir..!!Keep ROcking..!!

  ReplyDelete
 16. விகடனில் சென்கோவி..... வாழ்த்துக்கள்,,,

  'மன உளைச்சல்'...ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு வக்கீல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா

  அச்சமின்றி வாழ்வது தான் சுதந்திரம்: ஜெயலலிதாவின் சுதந்திர தின செய்தி
  ரொம்பவும் ரசிச்சேன்....

  ReplyDelete
 17. கலக்கல்! அருமையான தொகுப்பு!

  இன்று என் தளத்தில்

  தாயகத்தை தாக்காதே! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

  சுதந்திர தின தகவல்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

  ReplyDelete
 18. கண்டேன் செங்கோவியை. வாழ்த்துக்கள் செங்கோவி.

  ReplyDelete
 19. முதலில் வலையோசைக்கு வாழ்த்துக்கள்.
  அப்புறம் பதிவு நல்லாயிருக்கு. ஆனா பாருங்க ஆறு பேர............ ஆசாமிய படிச்சதும் செங்கோவிக்கு மேட்டர் பதிவா வந்திருக்குய்யா...

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் செங்கோவி. விகடன் வலையோசையிலும் வாழ்த்துக்கள் பதிவு செய்துள்ளேன்.

  ReplyDelete
 21. ஃபாரின்ல வேலை செய்ற, 30 வயசுக்கு மேற்பட்ட நல்ல பிள்ளையைத் தத்தெடுக்கலாமே?////எடுக்கலாம் தான்,ஆனா........... "அந்தப்" புள்ளையும்(அம்மணி செங்கோவி) ஒத்துக்கணுமே?

  ReplyDelete
 22. விகடன் வலையோசையில் வாத்தியார் வரவுக்கு என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. ஹான்சிகா குண்டுப்பாப்பா மீது ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

  ReplyDelete
 24. //நமக்கு குஷ்பூவைப் பிடிக்கும்னு நம்ம ப்ளாக்கைத் தொடர்ந்து படிக்கிற சின்னப்புள்ளைக்குக்கூடத் தெரியும்..///


  ஆமாண்ணே தெரியும்!!

  ReplyDelete
 25. அந்த ஆப்ரிக்க ஆறு பொண்டாட்டி கதை வந்து ஒரு மாசம் இருக்கும்... அந்த நேரத்துலையே ஒரு பிரபல பதிவர் இத கொத்து பரோட்டாவாக்கிருந்தாரு...அப்புறம் எதுக்கு நம்ம செங்கோவி அண்ணனும் இதையே எழுதிஇருக்காரு? ஒரு வேளை அந்த மத்த பிரபல பதிவர் மாதிரி காப்பி பேஸ்ட் பண்ண ட்ரை பண்ணுறாரோ?ன்னு ஒரு டவுட்லையே வாசிச்சேன்.. ஆனா அந்த ரெண்டாவது பாராவுல அந்த ஆப்ரிக்கரோட சேவைய பாராட்டி வாழ்த்து சொன்னீங்களே!! அங்கதான் செங்கோவி நிமிர்ந்து நிக்கிறாரு!!

  ReplyDelete
 26. //Yoga.S. said... [Reply]

  ஃபாரின்ல வேலை செய்ற, 30 வயசுக்கு மேற்பட்ட நல்ல பிள்ளையைத் தத்தெடுக்கலாமே?////எடுக்கலாம் தான்,ஆனா........... "அந்தப்" புள்ளையும்(அம்மணி செங்கோவி) ஒத்துக்கணுமே?//

  ஐயா, அதை நான் நல்ல அர்த்தத்திலேயே சொன்னேன்!

  ReplyDelete
 27. செங்ஸ் அங்கிள்... உம்மை வாழ்த்த வயதில்லை. இருந்தாலும் வாழ்த்துகிறேன்யா....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.