Monday, October 29, 2012

சின்மயி கைது செய்யப்படுவாரா?

சமூகத்தில் ஏதாவது சம்பவம்/அசம்பாவிதம் நடந்துவிட்டால், கருத்து சொல்லியே தீர்வது பதிவர்களின் கடமையாக இருக்கிறது. சின்மயி விவகாரத்தில் கடந்த நான்கு நாட்களாக யோசித்தும் எந்தப் பக்கம் ஆதரவளிப்பது என்று நம் மரமண்டைக்குப் புரியவில்லை. முதலில் நடந்த சம்பவங்களை இரண்டாகப் பிரிக்கலாம் :
பாகம்-1:

தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த விஷயத்தைக் கவனித்து வருபவர்களுக்கு, சின்மயி என்ற குழந்தை,  சின்னாத்தாவாக பரிணாம வளர்ச்சி அடைந்த கதை நன்றாகவே தெரியும். சின்மயி தாழ்த்தப்பட்டோர் பற்றியோ இடஒதுக்கீடு பற்றியோ எவ்வித அடிப்படைப் புரிதலும் இன்றி சராசரி பிராமண அறிவுடன் பேசிவந்தார்.(படிக்க : ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு). 

ஒருவர் ஒருதுறையில் சிறந்தவராக இருக்கிறார் என்பதாலேயே எல்லா விஷயத்திலும் உயர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை.ஆனாலும் சின்மயி எல்லாம் தெரிந்த வல்லவராக தன்னைக் கருதியபடியே முத்துக்களை உதிர்த்து வந்தார்.

இது சரியா?


இப்பொழுதும் எம்மைப் பொறுத்தவரை சின்மயி சிறந்த பாடகி தான்.சினிமாத் துறையில் பிரபலம் தான். சின்மயி போன்ற பிரபலங்களுக்கு ட்வீட்டர் என்பது ஒன்றுமே இல்லை..இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. ஆனால் சின்மயி அப்படி எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. மகேஷ் மூர்த்தி என்பவர் சிறந்த ட்வீட்டர் பிரபலங்களைத் தேர்ந்தெடுத்த போது, ராஜன் லீக்ஸ் பெயரும் சின்மயி பெயருடன் இணைந்து வந்தபோது ஆரம்பித்தது வினை(ராஜனுக்கு!).

 ‘அது எப்படி ராஜனை இதே வரிசையில் இணைக்கலாம்?’ என்று சண்டைக்குப் போனார். அந்த காழ்ப்புணர்வே இப்போது ராஜன் சிறையில் இருக்கக் காரணம் என மகேஷ் சின்மயியிடம் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார்.(படிக்க:நண்பர் சிபியின் பதிவு )

நியாயத்திற்கு அந்த தரவரிசை பிடிக்கவில்லை என்றால் தன் பெயரை நீக்கும்படி தான் அவர் கோரியிருக்க வேண்டும்.(நாம் தமிழ்மணத்தில் செய்தது போல..!)

ஆக, அரசியல் சட்ட நிர்ணயத்திற்கு எதிராகவும், சக மனிதர்களான தாழ்த்தப்பட்டோர் பற்றி ஏளனமாகவும்(மாட்டுச் சாணி, ஒட்டுண்ணி), பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் ட்வீட்டர் உலகில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார் சின்மயி.

(சின்மயி எதற்கும் நான் எழுதிய பிராமண நண்பர்களுக்கு..தொடரைப் படிக்கலாம்!)

பாகம்-2:

சின்மயின் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளால் எரிச்சலுற்ற  சரவணக்குமார் உள்ளிட்ட குரூப் சின்மயியை நேரடியாகவும், தனி ட்வீட்களிலும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். இணைய போலி பெரியாரிஸ்ட்களிடம் எப்போதுமே ஒரு குறை உண்டு. அது என்னவென்றால், யாரையாவது எதிர்க்க வேண்டுமென்றால் கருத்தியல்ரீதியாக மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் தாக்க ஆரம்பிப்பர்.ஏன் போலி என்கிறேன் என்றால்,பெரியாரின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு தரும் முக்கியத்துவத்தை பெரியாரின் பெண்ணியக்கருத்துக்குத் தரமாட்டார்கள் (உண்மையான பெரியாரிஸ்ட்களும் எதனாலோ இவர்களை நேர்படுத்துவது இல்லை)

பெரியாரின் கருத்துகளை முதன்முதலில் இணையத்தில் பரப்பிய விடாது கறுப்புவில் ஆரம்பித்து இந்த ட்வீட்டர்கள் வரை பலரிடலும் உள்ள பிரச்சினை இது தான். எதனால் இப்படி வன்மத்துடன் திசைமாறுகிறார்கள் என்று நமக்குப் புரிவதே இல்லை.


சின்மயிக்கு இடஒதுக்கீடு பற்றி பாடம் எடுக்கத் துவங்கிய இந்த போலி பெரியாரிஸ்ட்கள், கடும் வன்மத்துடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் சின்மயியை தாக்கத் தொடங்கினர். சின்னாத்தா என்று சின்மயியை அழைத்தது கிண்டல் தான்.ஆனால் சின்மயியின் தாயாரைப் பற்றிய ட்வீட் நிச்சயம் கிண்டல் அல்ல.


தன் தாயைப் பற்றி தவறாக தரக்குறைவாகப் பேசுபவர் யாராக இருந்தாலும், ஒருவர் என்ன செய்வாரோ அதையே சின்மயியும் செய்திருக்கிறார் என்ற கோணத்தில் பார்க்கையில் அந்த ‘கடலை’ ட்வீட்டுக்குச் சொந்தமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க அவர் முனைந்ததில் தவறேதும் இருப்பதாய் நமக்குத் தெரியவில்லை.அந்த ட்வீட்களை ஆதரிக்கும் அளவிற்கு, நம் அறம் கெட்டுப் போய்விடவும் இல்லை.

எனவே ஆபாசமாக ட்வீட் எழுதியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது தவறு  என்றுசொல்லிவிட முடியாது தான். ஆனாலும்.......

பாகம்-2ல் தவறு செய்தோர் மீது பாய்ந்து, சட்டம் தன் கடமையைச் செய்தது போலவே பாகம்-1ல் தவறிழைத்த சின்மயி மீதும் சட்டம் பாயுமா என்பதே நம் முன் உள்ள நியாயமான கேள்வி. தமிழ் ட்வீட்டர்களின் ட்வீட்கள் சின்மயிக்கு மன உளைச்சலைக் கொடுத்தது போலவே, சின்மயியின் அரைவேக்காட்டுத் தனமான ட்வீட்கள் பலருக்கும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கின்றன. புரட்சியாளர்.அம்பேத்கர் பாசறையும் தற்பொழுது சின்மயி மீது புகார் கொடுத்துள்ளது. எனவே அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டால் மட்டுமே, காவல்துறை நடுநிலையுடன் செயல்படுவதாய் அர்த்தம் ஆகும்.
திமுக ஆட்சி நடக்கும்போது கலைஞருடன் ஃபோட்டோ எடுத்தும்அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் புகழ்பாடியும், ஆட்சிக்கு நெருக்கமானவராய் காட்டிக்கொள்ளும் சாமர்த்தியமும் வாய்ப்பும் கொண்டவர்களுக்கு மட்டுமே சட்டம் வளையுமா என்பதே நம் முன் உள்ள கேள்வி.

இந்த விஷயத்தில் நேர்மையாக கருத்துரைத்த மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், மாமல்லன் அவர்களுக்கும் பதிவர்களில் தொடர்ந்து இந்த விஷயத்தில் அக்கறை காட்டும் நண்பர் சிபிக்கும் நன்றிகள் பல.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

28 comments:

 1. ராஜனின் அதீத சொல்லாடல்கள் குறித்து எனக்கும் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆனால், இணையவெளியில் கருத்துரைக்கின்ற சுதந்திரம் ராஜனுக்கும் உண்டு. அது, சாதிய ரீதியில் ஆபாசத்தைக் கொட்ட சின்மயிக்கு இருக்கின்ற சுதந்திரம் அளவுக்கு ராஜனுக்கும் இருக்கத்தானே வேண்டும்….? ஆபாசங்கள் உடலியல் ரீதியில் மட்டும் நிகழ்த்தப்படுவதல்ல; மனரீதியாகவும் நிகழ்த்தப்படுவது!

  ReplyDelete
 2. ஹாய் செங்கோவி சார்,மனுஷ்யபுத்திரன் சின்மயி விஷயத்தில் கூறிய கருத்து இணையத்தில் இருந்தால் அதன் லின்க்கை தரவும்.

  ReplyDelete
 3. @ka

  http://www.adrasaka.com/2012/10/blog-post_866.html

  ReplyDelete
 4. //சின்மயின் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளால் எரிச்சலுற்ற ராஜன், சரவணக்குமார் உள்ளிட்ட குரூப்//

  //சின்னாத்தா என்று சின்மயியை அழைத்தது கிண்டல் தான்.ஆனால் சின்மயியின் தாயாரைப் பற்றிய ட்வீட் நிச்சயம் கிண்டல் அல்ல.//

  ராஜன் , சரவணக்குமார் இருவரையும் ஒரே பார்வையில் பார்ப்பது நியாயமல்ல!

  ராஜன் சின்மயியோடு நேரடியாக கருத்துத் தெரிவித்தார். பின்னர் சின்மயி பிளாக் செய்ததும் அவரைக் கலாய்த்தார். அதுவும் தொடர்ந்தல்ல. ஆனால் இது எல்லாம் முடிந்து பல மாதங்களாக சின்மயி என்னென்ன செய்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. சின்மயியின் தாயார் குறித்தெல்லாம் ராஜன் பேசவில்லை.

  மற்றும் சரவணக்குமார் என்னென்ன செய்தார் என்பதுபற்றி யாருக்கும் சரியாகத் தெரியாது. அவரது ட்வீட்டில் உள்ள 'கடலை போடுவது' என்பது அரட்டை அடிப்பது என்ற பொருளில் மட்டுமே எங்களுக்குத் தெரியும். தனிப்பட அவர் மெயிலிலோ, Fake Id யிலோ ஏதும் செய்தாரா எனத் தெரியாது!

  ஆனால் ராஜன் வெளிப்படையாக மட்டுமே எதையும் செய்பவர். மற்றவர்கள் சின்மயி குறித்து, வலிய அவரிடம் பேசும்போதுகூட முடிந்தவரை அவர் தவிர்த்துக் கொண்டே இருந்ததை பல ஸ்க்ரீன் ஷாட்களில் காணலாம்.

  பணபலம், பிரபல பின்புலத்துக்காக சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது!

  ReplyDelete
 5. //சமூகத்தில் ஏதாவது சம்பவம்/அசம்பாவிதம் நடந்துவிட்டால், கருத்து சொல்லியே தீர்வது பதிவர்களின் கடமையாக இருக்கிறது///

  அதெல்லாம் சீரியஸ் சிகாமணி பதிவர்களுக்கு, நமக்கெதுக்கு? இந்த வரியுடன் மேலும் வாசிக்காமல் கமேன்டிவிட்டு வெளியேறுகிறேன்.. கஸாலிண்ணா நீங்க நம்ம ரத்தம்ண்ணா..

  ReplyDelete
 6. சீரியஸ் பதிவில் மொக்கை கொம்மென்ட் போடுவதற்கு மன்னிக்கணும். 31 வரை லீவுன்னு சொல்லிட்டு, இப்ப திடீர்ன்னு பதிவு போட்டா என்ன அர்த்தம்?

  ReplyDelete
 7. இப்ப தான் மனுஷ்யபுத்திரன் கலைஞர் செய்திகளில் மக்கள் குரல் என்னும் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் மிக விளக்கமாக உரையாடி கொண்டிருந்ததை பார்த்துட்டு இங்கே வந்தால் இங்கேயும் அதே.

  நான் அரைவேக்காடு என்பதாலேயே இந்த ட்விட்டர் என்பதக்குள் நான் எட்டி பார்ப்பதேயில்லை. ஒரு விஷ்யம் முழுமையாக தெரிந்து கொண்டபின் அதை பற்றி பேசினாலே பிரச்சனை வரும் இந்த உலகில் எந்த ஒரு விஷயத்திலும் முழுவிபரம் தெரியாமல் நம் கருத்தை சொல்வது நியாயமே இல்லை. அதன் பிறகு நான் பெண் என்று சொல்வதில் ஒரு அர்த்தமே இல்லை.

  கருத்து சுதந்திரத்தை எப்படி ஒடுக்கலாம் என்று அரசியல் பண்ணுகிறவர்களிடம் இவர்கள் அனைவரும் மாட்டி கொண்டதாய் மனுஷ்யபுத்திரன் தன் வருத்தத்தை சொன்னார்.

  ReplyDelete
 8. //சமூகத்தில் ஏதாவது சம்பவம்/அசம்பாவிதம் நடந்துவிட்டால், கருத்து சொல்லியே தீர்வது பதிவர்களின் கடமையாக இருக்கிறது.//

  நம்ம கடமையையும் பண்ணியாச்சுண்ணே
  http://realsanthanamfanz.blogspot.com/2012/10/blog-post_2307.html

  ReplyDelete
 9. @ஜீ... தம்பி, அந்த கடலை ட்வீட் போட்டது ராஜன் என்று நான் சொல்லவில்லை. அம்மாதிரித் தோற்றம் வந்திருந்தால், தவறு தான்..

  தனிப்பட்ட விரோதம் காரணமாகவே ராஜன் லீக்ஸ் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரிகிறது. இப்போது ராஜனின் பிரச்சினை அவரது பொதுவான சொல்லாடல் தான்..

  ReplyDelete
 10. @செங்கோவி உண்மைதான்..! அதை ராஜனின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என யாரும் நியாயப்படுத்தவே முடியாது! ராஜனுக்கு சின்மயியை விட மூன்றுவயது குறைவு என்ற போதும்!

  ReplyDelete
 11. எனக்கு ரொம்ப நாட்களாகவே மனதைக்குடையும் சந்தேகம் ஒன்று.....நமது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதாக வெளிப்படுத்திக்கொள்ளும் நபர்கள் ஒருவர் விடாமல் உங்களை மாதிரி பிளாக்கர்கள் வரை
  " தாழ்த்தப்பட்ட....பிற்படுத்தப்பட்ட ....." என்ற வார்த்தைகளை அடிக்கடி பிரயோகம் செய்கிறார்களே...( நீங்கள் செய்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது ) அவை ஆங்கிலத்தில் scheduled caste , backward class , scheduled tribe , என்றுதானே உள்ளன. அவைகளுக்கு நேர்முகமான வார்த்தைகள் " அட்டவணை சாதியினர் , பின்தங்கிய வகுப்பினர் ........." இப்படித்தானே வர வேண்டும். இவைகளை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று சொல்லி சொல்லியே இன்றளவும் சமூகத்தில் ஒரு வெறுப்புணர்வையே விதைப்பதில் இவர்களுக்கு என்ன ஒரு குரூர திருப்தி ?


  இதைப் பற்றிக்கேள்வி கேட்டால் பாப்பாத்திக்கொழுப்பு அப்படி இப்படின்னு தான் சொல்லித்தொலைக்கிறீர்களே தவிர சரியான பதில் கிடைப்பதில்லை.

  சரி அதை விடுங்கள்.....இந்து மதத்தைப் பற்றியும் தெய்வங்களைப் பற்றியும் ஆயிரம் ஊடகங்களில் ஆயிரம் விதமாகக் கிண்டல் கேலி செய்யப்படும் போது இந்த சொல்லாடல் எல்லாம் எங்கு சாமி போனது. ?

  அது பட்டியல் இனத்தவராயினும் பின்தங்கியோராயினும் ஏளனமாகப் பேசினால் புண்பட்டுவிடுவார்கள் என்பது உண்மைஎன்றால் இந்துமதத்தைச் சார்ந்தவனும் மேற்சொன்ன கிண்டல்களால் புன்பட்டுத்தானே போவான். ?

  அரசியல் சட்டம் என்ன பெரிய இதுவா....மாறி மாறி திருத்தம் செய்யப்பட்டு நாரிப்போனதுதானே அய்யா அது ...அதை விமரிசனம் செய்யக்கூடாதா ?

  சின்மயி சொன்னதில் எந்தத் தவறும் இல்லை ...சொல்லப்போனால் அவர் சொன்னது மிகவும் குறைவே....

  ReplyDelete
 12. இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு எல்லாம் எவ்வளவு வாயும் உரிமையும் இருக்கிறதோ அதே வாயும் உரிமையும் வேண்டாம் என்று சொல்ல சின்மயிக்கும் உள்ளது

  பட்டியல் ஜாதியினர் எல்லாம் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் என்று கூடத்தான் வக்கீல் விஜயன் புதிய தலைமுறையில் சொன்னார். அவரை யாரும் கேவலமாகத் திட்டவில்லையே ...சாரி மறந்து விட்டேன்....நீங்கள்லாம் பொம்பளைங்க அப்படினாத்தான் சுவாரஸ்யமா திட்டுவீங்களா...?

  ReplyDelete
 13. அன்புள்ள செங்கோவி ,

  இந்த விழயத்துல நீங்க நடுநிலைமை தவறின மாதிரி தோணுது. நான் இதை எதிர்பார்கவில்லை.
  ராஜன் லீக்ஸ் அண்ட் மற்றவர்கள் ட்வீட் பண்ணியது அராஜகமானது.

  ReplyDelete
 14. @MnB அன்பு நண்பரே, நான் அந்த ஆபாச தாக்குதல்களை நியாயப்படுத்தவில்லை..

  இப்போது நான் சேர்த்திருக்கும் ‘இது சரியா?’ ஸ்டில்லைப் பாருங்கள்..இப்போது நீங்கள் சொல்லுங்கள்..சின்மயியின் கருத்தை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?

  ReplyDelete
 15. எனக்கு இந்த விவகாரம் அதிகம் தெரியாது வாசித்தேன்!ம்ம்ம்

  ReplyDelete
 16. அண்ணா ரெண்டு பக்க நியாயங்களையும் அலசி சொல்லி இருக்கீங்க....

  இனி நானு எந்த பக்கம் என்று வாசிப்பவம் முடிவு பண்ணி நிக்கணும்... ஹீ ஹீ......

  என்னை பொறுத்த வரை சின்மயி மேலேயே அதிக தவறு...

  ராஜன் போன்ற சாதாரணமானவர்களை சின்மயி போன்றவர்கள் பொதுவெளியில் கருத்து சொல்லும் போது அக்கறையோடு சொல்லணும் :((

  ReplyDelete
 17. செங்கோவி நடுநிலைமை என்பது வேறு, சப்பைக்கட்டு கட்டுவது என்பது வேறு .. இந்த பதிவு என்ன ரகம் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை..
  //அந்த கடலை ட்வீட் போட்டது ராஜன் என்று நான் சொல்லவில்லை. அம்மாதிரித் தோற்றம் வந்திருந்தால், தவறு தான்..
  இன்னமும் நீங்கள் அந்த தவறை சரி செய்யவில்லை
  //சின்மயிக்கு இடஒதுக்கீடு பற்றி பாடம் எடுக்கத் துவங்கிய இந்த போலி பெரியாரிஸ்ட்கள், கடும் வன்மத்துடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் சின்மயியை தாக்கத் தொடங்கினர். சின்னாத்தா என்று சின்மயியை அழைத்தது கிண்டல் தான்.ஆனால் சின்மயியின் தாயாரைப் பற்றிய ட்வீட் நிச்சயம் கிண்டல் அல்ல. //

  இந்த பத்தி ராஜன் அன் கோ மீது பொதுவான குற்றத்தை சாட்டுகிறது.. நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள எந்த ஒரு குற்றத்தையும் ராஜன் இழைக்கவில்லை..

  என் ஆதர்ச பதிவர் நீங்கள், இதைச் சொல்ல கஷ்டமாகத் தான் இருக்கிறது .. இருந்தாலும் ராஜனுக்காகவும் உண்மைக்காகவும் வேண்டி.. "தைரியம் இல்லைனா ஓரமா போக வேண்டியது தானே.. இப்படி ஒரு சப்பைக்கட்டை யார் உங்க கிட்ட கேட்டா ??"

  ReplyDelete
 18. @meera meera

  இந்த விஷயத்தைப் பற்றி பலரும் விரிவாக பதிவு எழுதிவிட்டதாலேயே, நான் மறுபடியும் விளக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் சுருக்கமாக எழுதினேன். அது ராஜனை முதன்மைக் குற்றவாளியாக குறிப்பிடுவது போல் அமைந்துவிட்டது என் தவறு தான்..நீங்கள் சொன்னபின் படித்துப் பார்க்கையில், உங்கள் கோபத்தின் நியாயம் புரிகிறது. பதிவைத் திருத்தியுள்ளேன்..மன்னிக்கவும்.

  அதே நேரத்தில் ‘சின்மயி கடுப்பேற்றினார்..அதனால்தான் ஆபாசமாகப் பேசினார்கள்’ என்ற வாதத்தை நான் ஆதரிக்கவில்லை.

  சின்மயியின் ஆதரவாளர்கள், நடுநிலை தவறி நான் சகபதிவர்களுக்கு ஆதரவாக சின்மயியைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள்..நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்..அப்போ?......ரைட்டு!

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. ஆயாசமாக இருக்கிறது செங்கோவி..
  சின்மயி அதைச் சொன்னார், இப்படி அலட்டிக் கொண்டார், அவரது மீனவர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பிற உலக அரசியல் கருத்துகள் என பிரச்சினை திசைத் திருப்பப் படுகிறது..

  ராஜனின் ஏளனத் தன்மையை உடைய (அசிங்கப்பட்டாள் சின்மயி) டிவிட்டுக்காக கைது செய்யப்பட்டது மட்டும் தவறல்ல, சின்மயியின் சில முட்டாள்த்தனமான கருத்துக்காக அவரை கைது செய்யுங்கள் என சொல்வதும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதுதான்

  it is really frustrating to talk or think about this issue anymore..leave it, watever..it is now just Rajan's bail, wat i m really expecting to hear of..
  And thanx for this
  //பதிவைத் திருத்தியுள்ளேன்.. நன்றி செங்கோவி

  ReplyDelete
 21. IDA OTHUKKEEDU ENPATHU THEVAI ILATHA ONDRU ...ULAITHTHAL VALARALAM..MUTHALA POI NEE VELAIYAI SEI ...NERADIYA KOLAIYADIPPATHUTHAN IDA OTHUKKEEDU ...VELAYAI SEYYA KATTRU KOL ..1947 TO 1970 VARAI ITHU POTHUMANA ALAVU VALARNTHATHU...INI THEVAI ILLAI ... ULAIPPAVAN JAIPPAN ... INDIA MUNNERATHAN KARANAM ITHUVUM ONDRU

  ReplyDelete
 22. SC /ST YIL MUNNERIYAVARKAL ANTHA SC /ST YAI MATHIPPATHU ILLAI .... ANTHA SAMOOGATHTHAI VALARPATHU ILLAI ... PORULATHARA OTHUKKEEDU MATTUME INDIA YAVAI MUNNERA VAIKKUM ..... SC /ST ENDRU ILAMAL PORULATHARATHTHIL MATTUME IDA OTHUKKEEDU KODUKKA VENDUM..ELLA JAATHIYILUM ELAIKAL UNDU ....SC /ST MATTU ELAI ALLA ....VARALARAI THIPPI PARTHAAL ELLARU PORADI VANGIYATHUTHAN SUTHANTHIRAM .. SC /ST MATTUM INTHIYA ALLA ..

  ReplyDelete
 23. NO SC /// NO ST // NO BC ///NO MBC ALL OF EQUAL --- YARU ELAIYO AVAN ARASANGATHTHAL IDA OTHUKKEEDU PERALAM ... AMBETKARIN THATHTHUVAM INTHIYAVAI MELUM MUTTAL NADAKKA MATRUM...DO WORK HAR ..DO BEST... DO EFFORT ...VELAYAI SEI PANAKKARAN AAGALAM ....AMBETKAR SONNATHU 2000 VARAI MATTUME .....POTHU IDA OTHUKKEEDU ... IPPADIYE PONAL INTHIYA MUTTAL NADAGA MARUM

  ReplyDelete
 24. MUTHALLA KASTAPATTU VELAYAI SEIYYA KATHTHUKKOL ...INTHA MATHIRI IDA OTHUKKEDU MELUM MELUM SOMBRIKALAI MATTUM URUVAKKUM....IPPADATHAN SC /ST OTHUKKEDU ADUTHTHU RAMADOSS MBC OTHUKKEDU... EN IPPADI VELAIYAI SEIYYA VAKKU ILLAIYA ....NO OTHUKKEDU ...HARD WORK GIVEN VICTORY ...

  ReplyDelete
 25. EN KARUTHTHU MELUM SOLLA PONAL IDA OTHUKKEEAI VIDA ORU PALAMOLI UNDU
  MEEN PIDITHTHU KODUPPATHAI VIDA MEEN PIDIKKA KATTRUKOL......ANTHA NADU MUNNERUM ...NAMATHU NATTIL LANJAM , ULAL , KUTRAM ,IVARTRIRKU AMBETKARIN INTHA THAVARANA KOLKAITHAN KARANAM...KADAVUL THEVAI ILLAI...JAATHI THEVAI ILLAI ...VELAYAI SEI ...ULAIKKA KATRUKOL ...VALA KATTRUKOL ....OTTA PANTHAYATHTHIL
  JAIKKATHAVANAI JAIPPATHU POL SEIVATHUTHAN IDA OTHUKKEEDU....ITHANAL ODUPAVANUM OTTATHTHAI PARPAVANUM MUTTAL....IDA OTHUKKEEDU ORU MUTTALAI MATTUME THALAIVANAKKUM
  ...MUTTAL THALAIVAN AANAL ANTHA NAADU MUTTAL NILAIKKU THALAPADUM.......JAIKKIRAVANUKKU PARISU KODUNGAL ... THORPAVANUKKU ALLA .....THOKKARAVAN PATHAVIYIL VANTHAL ELLATHTHAIYUM VIPPAN....NADU ITHANAL THAVARANA NILAIKKU MARUM...

  ReplyDelete
 26. ULAGATHIL ELLAM UPDATE KKU SENDRU VITTATHU .... IDA OTHUKKEEDU ENDRU PALAIYA PATTAI THOOKI ERINTHU INTHIYAVAI INIMELAVATHU MUNNERA VIDUNGAL... ARASIYAL VIYATHIKALAL URUVAKKAPATTATHU THAN INTHA IDA OTHUKKEDUU....IDA OTHUKKEDUM ORU ARASIYAL VIYATHITHAAN

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.