Monday, October 8, 2012

ஹன்சிகாவின் கைப்பையைத் திருடியவனுக்கு எச்சரிக்கை (நானா யோசிச்சேன் )


நெஞ்சைத் தொட்ட வரிகள்:

எந்தன் கைப்பையை
யார் எடுத்தது?
நீயா?...........நீயா?
நீயா?.............நீயா?
FRONT VIEW

குவைத் விழா:

குவைத்ல பொங்கு தமிழ் மன்றமும், தமிழ்நாடு பொறியாளர் குழுமமும் சேர்ந்து தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி ஒன்னு டிசம்பர் 29 & 30-ல நடத்துறாங்க...அதனால கலந்துக்க விருப்பம் உள்ளவங்களுக்கு, கண்காட்சில ஒரு ஸ்டால் ஒதுக்கப்படுமாம்..அதுல தமிழர் வரலாற்றை, பண்பாட்டை விளக்கும்விதமா ஓவியத்துல இருந்து சமையல் வ்ரைக்கும் ஏதாவது வச்சிக்கலாமாம்..விருப்பம் உள்ளவங்க ponguthamizh@gmail.com-ங்கிற இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

அதுசரி, நீ என்ன செய்யப்போறேன்னு கேட்கறீங்களா..அதாங்க தெரியலை..நம்ம ப்ளாக்ல போட முடியாத தரத்துல ஹன்சிகாவோட டூ-பீஸ் ஸ்டில் ஒன்னு உண்டு..பேசாம அதை 50அடி கட் அவுட்டா செஞ்சுவச்சு, அதுக்குக் கீழ உட்கார்ந்துக்கலாமான்னு யோசிக்கிறேன்!

ஹன்சியும் பேக்கும்:

BACK VIEW
ஹன்சி மன்றக் கண்மணிகளுக்கெல்லாம் அந்த துயரமான செய்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆமாம்யா..ஃபாரின் சூட்டிங் போயிருந்தப்போ, ஹன்சிகாவோட ஹேண்ட் பேக்கை யாரோ சுட்டுட்டாங்களாம்..’அய்யோ..உள்ளே என்னோட மொபைல் ஃபோன் இருந்துச்சே..என்ன செய்வேன்’-னு தலைவி அழுதாங்களாம்..அழுததுல ஒன்னும் பிரச்சினை இல்லை..ஏன்னா அவங்க சிரிச்சாலும், அழுதாலும் ஒன்னு போல தானே இருக்கும்!

ஆனா அந்த நியூஸைப் படிச்சதும் எனக்கு பயங்கர கோவம் வந்திடுச்சு..நாமல்லாம் ஹன்சியின் ஹார்ட்டைத் திருடுவது எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, எவனோ ஒருத்தன் கேவலமா கைப்பையைத் திருடிக்கிட்டுப் போயிருக்கானே? ராஸ்கல்!
த்சு...த்சு!

அந்த திருடனுக்கு நம்ம மன்றம் சார்பா இறுதி எச்சரிக்கை விடுறேன்: உனக்கு இன்னும் 24 மணி நேரம் டைம் தர்றோம்..அதுக்குள்ளே மரியாதையா அந்த ஃபோன்ல இருக்கிற வீடியோ எல்லாத்தையும் யூ-டியூப்ல ஏத்திடு..ஒருவேளை யூ-டியூப் ரூல்ஸ் அதுக்கு ஒத்துக்கலைன்னா டெய்லிமோசன்லயாவது ஏத்திவிடு..இல்லேன்னா தொலைச்சிடுவோம், தொலைச்சு! (மறுபடியும் தொலைப்பீங்களான்னு கேட்டே.......பிச்சுப்புடுவேன் பிச்சு!)

சட்டை :

பெரிய மனுசங்க என்ன பண்ணாலும் பெரிய்ய ரேஞ்சுல தாம்யா பண்றாங்க..நமக்கெல்லாம் ஆபீசு போகும்போது என்ன சட்டை போடறதுன்னு குழப்பம் வரும்..ஒரு நிமிசம் யோசிச்சுட்டு, ஏதோ ஒன்னை மாட்டிட்டுப் போவோம்..ஆனா பெரிய மனுசங்க அப்படி லேசா முடிவு எடுத்துட முடியுமா?

திமுக தலைவருக்கும் அதே குழப்பம்...பார்த்தாரு..கூட்டுனாரு பொதுக்குழுவை..தீவிரமா ஆலோசனை நடத்துனாரு..டெல்லிக்கே கதிகலங்கிடுச்சு.’ஆத்தீ..பெட்ரோல் விலையை ஏத்திட்டமே..அன்னிய முதலீடை அலோ பண்ணீட்டமே..அதனால தலிவரு காண்டாகி ஆதரவை வாபஸ் வாங்கத்தான் ஆலோசனை பண்றாங்களோ’ன்னு பயந்து போய் கவனிச்சா.....தலிவரு சாயந்திரம் சொல்றாரு : இனிமே கருப்புச்சட்டை தான் போடப்போறேன்னு..

ச்சே..என்ன இருந்தாலும் பெரிய மனுசன்னா பெரிய மனுசன் தாம்யா!
RIGHT SIDE VIEW
அதுபோக, தமிழ்நாட்டுல மின்வெட்டு நிலவுதுன்னு பிட் நோட்டீஸ் அடிச்சு, வீடு வீடாக் கொடுத்திருக்காங்க..என்ன கொடுமைய்யா இது..இவங்க நோட்டீஸ் கொடுக்கலைன்னா மக்களுக்குத் தெரியாதா? யாருய்யா இப்படில்லாம் கட்சியை வளர்க்க ஐடியா கொடுக்கிறது? நல்லவேளை, மம்மி கடுப்பாகி “இருந்த கரண்ட் எல்லாம் நோட்டீஸ் அடிக்கவே சரியாப்போச்சு”ன்னு சொல்லிட்டு மொத்தமா கரண்ட்டைப் புடுங்காம விட்டாங்களே..அந்த மட்டுக்கும் சந்தோசம் தான்!

வடை :
தமிழனோட பாரம்பரிய அடையாளங்கள்ல ஒன்னா இருக்கிறது பாட்டி வடை சுட்ட கதை தான்..இப்போ என் மகனும் கதை கேட்கிற அளவுக்கு பெரிய பையன் ஆகிட்டானா..அதனால முதன்முதலா பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்றதுன்னு முடிவு பண்ணேன்.(பின்னே, முருக வேட்டை கதையைவா சொல்ல முடியும்?)..நமக்கு சொன்ன மாதிரியே பாட்டி வடை சுட்டதையும், அதை காக்கா சுட்டதையும், காக்காகிட்ட இருந்து நரி சுட்டதையும் விலாவரியா, விஜயகாந்த மாதிரி உருட்டி முழிச்சு, சவுண்ட் எஃபக்ட்டோட(!) சொன்னேன்.

கதையைச் சொல்லி முடிச்சதும் பையன் என்னை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தான். எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அந்த மாதிரிப் பார்வையோட அர்த்தம், ‘அட..கேணப்பயலே’ தான்!..இவன் ஏன் இப்படிப் பார்க்கான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே, தங்கமணி வந்துச்சு. நானும் பெருமையா ‘பையனுக்கு கதை சொல்லியிருக்கேன்..என்ன கதைன்னு அவனையே கேளு’ன்னு சொன்னேன்.

தங்க்ஸும் ‘அப்பா என்ன கதை சொன்னாரு?’ன்னு கேட்டுச்சு.

அதுக்கு அவன் சொன்னான் :”பாட்டி வடை சுட்டுச்சு..அப்பம்(அப்புறம்), கதவைப் பூட்டிருச்சு”!

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உலகத்துலேயே சின்ன சிறுகதை ‘ஒரு ஊருல ஒரு நரியாம்..அதோட கதை சரியாம்’ தான்!..என் மகன் அதைவிடவும் சின்னதா ஒரு கதை சொல்லிட்டானே-ங்கிறதை நினைச்சு புல்லரிச்சுப்போச்சு..அப்புறம் தான் அவன் பார்த்த பார்வையோட அர்த்தம் புரிஞ்சுச்சு..அது என்னன்னா..

‘யோவ், அந்த பாட்டி தான் கேணத்தனமா பப்பரப்பேன்னு வெளில உட்கார்ந்து வடை சுட்டுச்சுன்னா, நீங்களும் அதையே வம்ச வம்சமாச் சொல்லிக்கிட்டுத் திரியறீங்களா? கதவைப் பூட்டிட்டு, கமுக்கமா வடை சுடுறதை விட்டுட்டு...காக்கா தூக்கிடுச்சு-நரி தூக்கிடுச்சுன்னு அழுது புலம்பிக்கிட்டுத் திரியறீங்க..இதுவும் ஒரு கதைன்னு சொல்றான்..ஆளைப் பாரு’.

எது எப்படியோ..வம்ச வம்சமா காணாமப் போன வ்டைக்கு, ஒருவழியா தீர்வு கிடைச்சாச்சு..அவங்கவங்க வடையை பத்திரமா வச்சுக்கணும்னா, கதவைப் பூட்டுங்கய்யா..கதவைப் பூட்டுங்க.(டிஸ்கி: இது கைப்பையைத் தொலைச்ச ஹன்சிகாவுக்கும் பொருந்தும்!)
LEFT SIDE VIEW (CENSORED)

ஸ்டில்ஸ் விளக்கம் :

ஒரு ஊர்ல ஒருத்தன் 10 கழுதை வளர்த்தானாம். ஒருநாள் பத்து கழுதையைவும் மேய்க்க கொண்டு போய்ட்டு, திரும்பி வரும்போது ஒரு கழுதை மேல உட்கார்ந்து வந்தானாம். வீட்டுக்கிட்ட வரவும் அவனுக்கு ஒரு டவுட்..எல்லாக் கழுதையும் வந்திடுச்சான்னு. அதனால கழுதைகளை எண்ண ஆரம்பிச்சானாம்.

கரெக்ட்டா அவன் உட்கார்ந்திருந்த கழுதையை மட்டும் விட்டுட்டு, மீதியை எண்ணிட்டு ‘அய்யய்யோ..9 கழுதை தான் இருக்கு..இன்னொன்னை எங்கே’ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தானாம். அப்போ அவனோட தங்கமணி வெளில வரவும், அதுகிட்ட மேட்டரைச் சொல்லியிருக்கான். அந்த தங்கமணி எண்ணிப் பார்த்துட்டுக் கடுப்பாகிச் சொல்லுச்சாம்...’மச்சான்..ஒம்போது இல்லை, பதினொரு கழுதை திரும்ப வந்திருக்கு’ன்னு!
TOP VIEW!
நம்ம ஹன்சியும் அது மாதிரி கைப்பையை தோள்லயோ, அங்கயோ, இங்கயோ மாட்டிட்டு மறந்து தேடியிருக்கலாம் இல்லியா? அதனால தான் தலைவியை சுத்தும் முத்தும் திருப்பிப் பார்த்தோம்...ஆனாலும் கைப்பையை மட்டும் காணோமேய்யா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

  1. lol...
    :))))))))))

    என்னை மறந்த ______........
    வாழ்க...வாழ்க...

    அப்பாடா....வாழ்த்திட்டேன்,.......
    மீண்டும்....
    :)))))

    ReplyDelete
  2. அண்ணே நான் கொஞ்சம் பிஸி சோ ஹன்சியின் ஜபோனில் இருக்கும் வீடியோக்களை எல்லாம் அந்த பய வெளியிட்டதும் ஒரு மெசஜ் தட்டி விடுங்க... நாங்களும் பாக்கணும் இல்ல :))

    அப்புறம் அண்ணே... ஹன்சியின் போனில் இருக்கும் வீடியோக்கள் பார்த்து உங்க ஹாட்டில் இருக்கும் ஹன்ஷிகா வெடிச்சா சாரி விழுந்தா அதுக்கு திருடன் பொறுப்பு ஏற்க்க முடியாதாம்..

    ReplyDelete
  3. ///”பாட்டி வடை சுட்டுச்சு..அப்பம்(அப்புறம்), கதவைப் பூட்டிருச்சு”!///

    இப்பிடித்தான் இருக்கணும் ராசா..! இன்னும் ஹன்சிகா விசயத்திலும் அப்பனை கேள்வி கேட்டு இனிமேல் இப்படி கர்ணகொடூர படங்களை போடுவதை தடுக்கிற மாதிரி ஏதாவது கேள்வி கேட்டுப்புடு ராசா...! அப்பத்தான் உங்கட அப்பன் செங்கோவி ஜி அடங்குவாப்ல:P

    கலக்கல் செங்கோவி!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

  5. ////ஸ்டில்ஸ் விளக்கம் :
    ////

    ஸ்சப்பா......முடியலை

    கமலா காமேஷ் வீடியோ மாதிரி ஏதும் அந்த போன்ல இருக்குமா?ஹி.ஹி.ஹி.ஹி....

    ReplyDelete
  6. //.நம்ம ப்ளாக்ல போட முடியாத தரத்துல ஹன்சிகாவோட டூ-பீஸ் ஸ்டில் ஒன்னு உண்டு..பேசாம அதை 50அடி கட் அவுட்டா செஞ்சுவச்சு, அதுக்குக் கீழ உட்கார்ந்துக்கலாமான்னு யோசிக்கிறேன்!///

    அண்ணே அந்த போட்டோவ கொஞ்சம் மெயில் பண்ணிவிடுங்க, "தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி"யில் வைக்கிறதுக்கு தகுதியானதா இல்லையான்னு பார்த்து சொல்றேன்....

    ReplyDelete
  7. செங்கோவி அண்ணன் பிளாக்ல தான் இருக்கேன்னா? இல்ல எதுனாச்சும் புவியியல் விஞ்ஞானியின் பிளாக்ல இருக்கேன்னா?

    ReplyDelete
  8. உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் எழுத முடியும்......

    நன்றி,
    மலர்
    http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. நல்லா சுத்திக்க காட்டிட்டிங்க... அப்படியே ஹன்சிய கருப்பு டிரஸ்ல ஒரு ஸ்டில் போட்டிருந்தா கருப்பு கருணா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு....

    ReplyDelete
  10. அண்ணன் ஹன்சிய வளைச்சு வளைச்சு தேடியிருக்காப்ல!

    ReplyDelete
  11. எல்லா வியூலையும் ஹன்சி டெரரா இருக்கே! பாட்டம் வியூ கிடைக்கலையா?

    ReplyDelete
  12. ஹான்சிஹா பாட்டியின் படத்தைப் போட்டே ஒரு கண்காட்சி கூடம் நடத்தலாம் பாஸ்!:))))

    ReplyDelete
  13. நாமல்லாம் ஹன்சியின் ஹார்ட்டைத் திருடுவது எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, எவனோ ஒருத்தன் கேவலமா கைப்பையைத் திருடிக்கிட்டுப் போயிருக்கானே? ராஸ்கல்!//

    அதானே, அயோக்கியபயல்...

    ReplyDelete
  14. உனக்கு இன்னும் 24 மணி நேரம் டைம் தர்றோம்..அதுக்குள்ளே மரியாதையா அந்த ஃபோன்ல இருக்கிற வீடியோ எல்லாத்தையும் யூ-டியூப்ல ஏத்திடு..//

    மாம்ஸ், கால எல்லை முடிஞ்சுது. இனி களத்தில இறங்கிட வேண்டியது தான்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.