Sunday, November 4, 2012

சின்மயி சிக்கன் சாப்பிடச் சொன்னாரா? (நானா யோசிச்சேன்)

டிஸ்கி : மறுபடியும் முதல்ல இருந்தா..ன்னு டயர்டாகக் கூடாது!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
யாகாவாராயினும் நாகாக்க - காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு! ----------(அவ்வ்வ்!)

பதிவர் கிசுகிசு :

கொஞ்ச வருசத்துக்கு முன்ன, ஒரு ஆளை ஒரு குரூப் ‘நீதான்யா புரட்சிப்புயலு..விடாத..அடி’-ன்னு ஏத்திவிட்டுச்சு..அப்புறம் பிரச்சினை ஆனதும் எல்லாரும் எதிர்குரூப்புக்கு ஆதரவா இறங்கி, ஆதாரங்களையெல்லாம் கொடுத்து, எதிர்குரூப் மனசுல இடம்பிடுச்சு தப்பிச்சுச்சு..இப்போ ட்வீட்டர் மேட்டர்லயும் ‘நீதாம்யா சூப்பர் ஸ்டாரு’ன்னு ஏத்திவிட்ட சிலபேரு, கடைசி நேரத்துல கமுக்கமா ஆதரவை வாபஸ் வாங்கி, நல்லபிள்ளை ஆகிட்டதா தகவல் வருது..சோ, யாரவது ஏத்திவிட்டா, உஷாரய்யா உஷாரு!

கேப்டர்ர்:
போன வாரம் யூ டியூப்பை ஓப்பன் பண்ணி பெங்காலி ஹாட் அல்லது ஒரியா ஹாட் பார்க்கலாம்னு உட்கார்ந்தா (மத்த ஸ்டேட்லாம் முடிஞ்சதுங்க!), முத பக்கத்துலேயே பன்னிக்குட்டி ஸ்டில்லு..என்னடா இது..இந்த மனுசன் இங்க என்ன செய்றாரு..பதிவுலகை வளர்த்தது போதும்னு, இப்போ இவரும் நம்மை மாதிரியே யூ-டியூபை வளர்க்க ஆரம்பிச்சுட்டாரான்னு பார்த்தா, அது கேப்டன் ஹாட் வீடியோ..அதாவது ஏர்போர்ட்ல கேப்டன் எகிறுனாரே, அந்த வீடியோ..சரி பார்ப்போம்னு பார்த்தா, கேப்டன் கார்ல இருந்து அப்போத் தான் இறங்குறாரு..அதுக்குள்ள ஒருத்தரு ஒருத்தர் ஓடிவந்து “தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்திச்சது பத்தி உங்க கருத்து...”-ன்னு ஆரம்பிக்கவும் கேப்டன் செம காண்டாகிட்டாரு..எனக்கென்னவோ அவர் கோவப்பட்டது சரின்னு தான் தோணுச்சு.ஏன்னா....

சென்னை வெயில்ல ஒரு இடத்துல இருந்து கிளம்பி, ட்ராவு ட்ஃபிக் ஜாம்ல மாட்டி ஏர்போர்ட் போய்ச் சேர்றதுங்கிறது ரொம்ப டரியலான விஷயம். எப்பவும் நிதானத்துல இருக்கிற நாமளே ‘ஙே..நான் எங்க இருக்கேன்?’-ங்கிற ரேஞ்சுல தான் போய் இறங்குவோம்..அப்படி இருக்கும்போது கேப்டன் நிலைமையைப் பத்திச் சொல்லணுமா?.அந்த நிலைமையில தேமுதிகன்னா என்னன்னு உறைக்கிறதுக்கே ரெண்டு நிமிசம் ஆகுமே..அவர்கிட்டப் போயி ‘தேமுதிக எம்.எல்.ஏஏஏஏ........’-ன்னு ஆரம்பிச்சா, கடிச்சுக் குதறாம என்ன பண்ணுவாரு? எப்பவும் அலர்ட்டா இருக்க, அவர் என்ன ‘சமீப கால’ ட்வீட்டரா?..நல்லா டைம் கொடுத்து, தெளிஞ்சப்புறம் கேள்வி கேளுங்கய்யா!


பதிவர் அலர்ட் :
நம்ம தம்பி ஒரு ஆளு ‘கையைப் பிடிச்சு இழுத்தியா’ன்னு ஒரு பதிவு போட்டாரு..அப்புறம் என்ன நினைச்சாரோ, ஜகா வாங்கிட்டாரு..

ஆனாலும் ஐ லைக் திஸ் காமெடி:

 

சினிமா கிசுகிசு :
வம்பு நடிகர், இன்னொரு வம்பு நடிகையின் குறும்படத்துல நடிக்கப்போறாருன்னு செய்தி வருது..இவரு ஏன் திடீர்னு இப்படி இறங்கிட்டாரு?..ஒருவேளை குறும்படம்-ங்கிறதை குறும்புப் படம்னு புரிஞ்சுக்கிட்டாரோ? ஆஹா, இது அதில்லைன்னு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?

கரண்ட் ஷாக்:

முதல்ல மூணே மாசத்துல கரண்ட் தருவோம்னு சொன்னாங்க..அப்புறம் 2013ல எல்லாப் பிரச்சினையும் தீர்ந்திடும்னு சொன்னாங்க..இப்போ சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயி கரண்ட் வாங்கப் போறேன்னு சொல்லிட்டாங்க.ஏற்கனவே கோர்ட்டுக்குப் போயி காவிரி நீரு, பெரியாறு நீரு எல்லாம் வாங்குன கதையை நினைச்சா, பகீருங்குதே..அப்போ, பெட்ரோ மாக்ஸ் லைட்டே தானா?

ரைட்டு..சம்சாரம் அது மின்சாரம்னு சொன்ன காலம் போயி, மின்சாரம் அது சம்சாரம்னு சொல்லும்படி ஆகிடுச்சே ஆண்டவா?


நெஞ்சில் ஜில்..ஜில் :

என்ன கொடுமை பார்த்தீங்களாய்யா..கலிகாலம்னு சும்மாவா சொன்னாங்க..எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் மீனவர் படுகொலையைக் கண்டிச்சு, சின்மயி ட்வீட்டாதது தானாம்..அந்தப் புள்ளை அப்படி என்னய்யா தப்பாச் சொல்லிடுச்சு..’நாங்க பிற உயிரைக் கொல்றதும் இல்லை..சாப்பிடறதும் இல்லை..நாங்க PETA ஆதரவாளர்கள்’னு சொல்லுச்சு..இது எவ்ளோ நல்ல விஷயம்..எல்லா உயிர்மேலயும் அன்பு செலுத்தும் தனிப்பெருங்கருணை இதுன்னு பயபுள்ளைகளுக்குப் புரியாமப் போயிடுச்சே..இந்த சுதந்திர நாட்டுல சைவமா இருக்கக்கூட உரிமை இல்லையா?, இல்லே நான் தெரியாமத் தான் கேட்கேன்..’இந்திய சினிமாவிலேயே அதிபுத்திசாலிகள் மணிரத்னமும், கமலஹாசனும் தான்’ -அப்படீன்னு ஒரு ட்வீட் ஆரம்பிச்சு, அதுக்கு ஆதரவு கொடுன்னு கேட்டா,அவங்கள்லாம் கொடுப்பாங்களா?

எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத ஒரு பச்சைமண்ணைப் போயி..ச்சே...! நினைக்கவே கஷ்டமா இருக்குய்யா..எவ்வளவு நெருக்கடி கொடுத்தும், பிற உயிரைக் கொல்ல மறைமுகமாக்கூட ஆதரவு தர மாட்டேன்னு சொன்ன, கொள்கைக் குன்று, வாழும் ஜான்சி ராணி சின்மயிக்கு ஒரு ராயல் சல்யூட்!

நெஞ்சில் கல்..கல்?:


இந்த சிக்கன் விளம்பரம் பார்த்திருக்கீங்களா? கண்டிப்பாப் பாருங்க :


ம்..என்ன தெரிஞ்சுச்சு?..என்னது, சிநேகா தெரிஞ்சுச்சா..ப்ச், இதாம்யா உங்ககிட்டப் பிரச்சினை..’இந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க?’-ங்கிற பதிவுலேயே விளக்கமாச் சொல்லிட்டேன், அப்படில்லாம் பார்க்கறது தப்புன்னு..ஆனாலும் நீங்க திருந்தறதா இல்லை..அதனால தான் எல்லாரும் ஆம்பிளைங்க தலையில மிளகா அரைக்கிறாங்க..என்ன மேட்டர்னா..உஷ்..இருங்க, யாராவது வர்றாங்களான்னு பார்த்துக்கிறேன்..

அதாவதுண்ணே, அந்தப் பாட்டைப் பாடுனது கொள்கைக் குன்று சின்மயி தான்னு விக்கிப்பீடியா சொல்லுது..ஆ-ன்னு வாயப் பிளக்கக்கூடாது..மூடுங்க..

சினிமால ஒரு பாட்டுப்பாடுனா, அது சிச்சுவேசனுக்காகப் பாடுனதுன்னு சொல்லலாம்..இது விளம்பரமாச்சே..’எல்லாரும் சிக்கன் சாப்பிடுங்கோ..என்னவென்று சொல்ல..டேஸ்ட்டி..டேஸ்ட்டி வென்காப் சிக்கன்’-ன்னு பாடி, மக்களை பிற உயிரைக் கொல்லத் தூண்டலாமா? ஆனாலும் HIGH பீப்பிள் சொல்றாங்கன்னா, அதுலயும் ஏதாவது அர்த்தம் இருக்குமோ?

ம்..எனக்குப் புரிஞ்சு போச்சு..மீனவர்க்கு ஆதரவா ஏன் அவங்க குரல் கொடுக்கலைன்னு..சம்பளமே தராம ‘குரல்’ கொடுன்னா, பாடகி எப்படிய்யா குரல் கொடுப்பாங்க? PETA-ன்னா ‘பைசா எடு, தர்றேன் ஆதரவு’ன்னு அர்த்தம்யா......இதுகூடப் புரியாம புரட்சி-புடலங்கான்னு பேசுறாங்க இரண்டு தரப்பும்..என்ன செய்ய..கலிகாலம்னு சும்மாவா சொன்னாங்க!

படங்கள் உதவி: முன் ஜாக்கிரதை முத்தண்ணா!மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

 1. ////நம்ம தம்பி ஒரு ஆளு ‘கையைப் பிடிச்சு இழுத்தியா’ன்னு ஒரு பதிவு போட்டாரு..அப்புறம் என்ன நினைச்சாரோ, ஜகா வாங்கிட்டாரு.////
  ஹி.ஹி.ஹி.ஹி............

  ReplyDelete
 2. ரொம்ப நாளைக்கு அப்பறம் அண்ணன் தளத்தில் முதல் கமண்ட் போட்டு இருக்கேன் ஒரு காலத்தில் முதல் கமண்ட் போடுறவங்க பயன் படுத்துற அட அந்த பதிவுலக வார்த்தை மறந்து போச்சே ஞாபகம் வந்திடுச்சி

  வடை எனக்கா

  ReplyDelete
 3. ////சின்மயி////யாருனே இவரு?

  ReplyDelete
 4. @K.s.s.Rajh வடை மட்டுமல்ல, சிக்கனும் கிஸ் ராஜாவிற்கே!

  ReplyDelete
 5. // K.s.s.Rajh said...

  ////சின்மயி////யாருனே இவரு?//

  இந்தப் பதிவர்(கிஸ்.ராஜா) பொழச்சுக்குவாரு!

  ReplyDelete
 6. ஆமா இந்த முறை நானா யோசிச்சேன்ல ஒரு பிகருங்க போட்டோ கூட போடலையே ஏன்( ஒரு வேளை நீங்க யோசிக்கலையோ)அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. ////
  செங்கோவி said... [Reply]
  @K.s.s.Rajh வடை மட்டுமல்ல, சிக்கனும் கிஸ் ராஜாவிற்கே////

  நான் வெஜிட்டேரியன் அட நெசமாத்தான் பாஸ்

  ReplyDelete
 8. //K.s.s.Rajh said...

  ஆமா இந்த முறை நானா யோசிச்சேன்ல ஒரு பிகருங்க போட்டோ கூட போடலையே ஏன்( ஒரு வேளை நீங்க யோசிக்கலையோ)அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  கிஸ் ராஜா, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிற ஆட்கள் பெருகிட்டதால......”படங்கள் உதவி: முன் ஜாக்கிரதை முத்தண்ணா! ”

  ReplyDelete
 9. // ஆமா இந்த முறை நானா யோசிச்சேன்ல ஒரு பிகருங்க போட்டோ கூட போடலையே ஏன்( ஒரு வேளை நீங்க யோசிக்கலையோ)அவ்வ்வ்வ்வ்வ்வ்

  November 4, 2012 9:28 PM
  Delete
  Blogger K.s.s.Rajh said...

  ////
  செங்கோவி said... [Reply]
  @K.s.s.Rajh வடை மட்டுமல்ல, சிக்கனும் கிஸ் ராஜாவிற்கே////

  நான் வெஜிட்டேரியன் அட நெசமாத்தான் பாஸ்//

  ஓ..High பீப்பிள்..ஓகே, ஓகே!

  ReplyDelete
 10. ////செங்கோவி said... [Reply]
  //K.s.s.Rajh said...

  ஆமா இந்த முறை நானா யோசிச்சேன்ல ஒரு பிகருங்க போட்டோ கூட போடலையே ஏன்( ஒரு வேளை நீங்க யோசிக்கலையோ)அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  கிஸ் ராஜா, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிற ஆட்கள் பெருகிட்டதால......”படங்கள் உதவி: முன் ஜாக்கிரதை முத்தண்ணா! ////

  வெளாட்டா இருந்தாலும் அலாட்டா இருக்கீங்கண்ணே

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. // K.s.s.Rajh said...

  ////
  ஓ..High பீப்பிள்..ஓகே, ஓகே///

  அதிகமாக பேசினால் அப்பறம் அரச செலவில் நீங்கள் இலங்கையை சுற்றிப்பார்க்க வேண்டிவரும் ஜாக்கிரதை கேஸ் போட்டுவிடுவேன்//

  எல்லாரும் ரவுடி ஆகிட்டாங்களே..அவ்வ்!

  ReplyDelete
 13. ////
  ஓ..High பீப்பிள்..ஓகே, ஓகே///

  அதிகமாக பேசினால் அப்பறம் அரச செலவில் நீங்கள் இலங்கையை சுற்றிப்பார்க்க வேண்டிவரும் ஜாக்கிரதை கேஸ் போட்டுவிடுவேன்

  ReplyDelete
 14. //// செங்கோவி said...
  // K.s.s.Rajh said...

  ////
  ஓ..High பீப்பிள்..ஓகே, ஓகே///

  அதிகமாக பேசினால் அப்பறம் அரச செலவில் நீங்கள் இலங்கையை சுற்றிப்பார்க்க வேண்டிவரும் ஜாக்கிரதை கேஸ் போட்டுவிடுவேன்//

  எல்லாரும் ரவுடி ஆகிட்டாங்களே..அவ்வ்////

  பின்ன ஆகித்தானே ஆகனும்

  சரி எனக்கு சரன்யா கூட சீ சீ சரன்யா பற்றி இணையதளத்தில் செய்திகள் படிக்கனும் நான் கெளம்புறேன்

  ReplyDelete
 15. // K.s.s.Rajh said...

  ////
  ஓ..High பீப்பிள்..ஓகே, ஓகே///

  அதிகமாக பேசினால் அப்பறம் அரச செலவில் நீங்கள் இலங்கையை சுற்றிப்பார்க்க வேண்டிவரும் ஜாக்கிரதை கேஸ் போட்டுவிடுவேன்//

  ஏன்யா அழிச்சு அழிச்சு விளையாடுறீங்க..முடியலை.

  ReplyDelete
 16. //K.s.s.Rajh said...

  சரி எனக்கு சரன்யா கூட சீ சீ சரன்யா பற்றி இணையதளத்தில் செய்திகள் படிக்கனும் நான் கெளம்புறேன்//

  ஹலோ, நாங்க மட்டும் என்ன சும்மாவா இருக்கோம்? நானும் ஹன்சி பத்தி படிக்கணும், பார்ப்போம்!!!

  ReplyDelete
 17. ////
  ஏன்யா அழிச்சு அழிச்சு விளையாடுறீங்க..முடியலை////டைமிங் மிஸ்சாகிடுச்சி அதுக்குள்ள நீங்க கமண்டை போட்டுட்டீங்க இப்ப இதுக்கு கீழ என்னவேணும்னாலும் போட்டுக்கோங்க நான் கெளம்புறேன்

  ReplyDelete
 18. //// செங்கோவி said...
  //K.s.s.Rajh said...

  சரி எனக்கு சரன்யா கூட சீ சீ சரன்யா பற்றி இணையதளத்தில் செய்திகள் படிக்கனும் நான் கெளம்புறேன்//

  ஹலோ, நாங்க மட்டும் என்ன சும்மாவா இருக்கோம்? நானும் ஹன்சி பத்தி படிக்கணும், பார்ப்போம்!////

  அப்ப அரச செலவில் இந்தியாவுல மீட்பண்ணுவோம் பாஸ்/பர்ஸ்ட் நைட் சீ குட்நைட் bye bye

  ReplyDelete
 19. //K.s.s.Rajh said...

  //// செங்கோவி said...
  //K.s.s.Rajh said...

  சரி எனக்கு சரன்யா கூட சீ சீ சரன்யா பற்றி இணையதளத்தில் செய்திகள் படிக்கனும் நான் கெளம்புறேன்//

  ஹலோ, நாங்க மட்டும் என்ன சும்மாவா இருக்கோம்? நானும் ஹன்சி பத்தி படிக்கணும், பார்ப்போம்!////

  அப்ப அரச செலவில் இந்தியாவுல மீட்பண்ணுவோம் பாஸ்/பர்ஸ்ட் நைட் சீ குட்நைட் bye bye //

  இரவு வணக்கம்.

  ReplyDelete
 20. அந்த கேப்ட்ர்ர் மேட்டர்ர் செம... எப்படியா இப்படிலாம் தோணுது உமக்கு.

  ReplyDelete
 21. என்னது இந்த தடவை படமெல்லாம் ஆண்களின் சிக்ஸ் பேக் செவென் பேக்கா இருக்கு. திருந்திட்டீரா?

  ReplyDelete
 22. அண்ணே சும்மா இருந்த என்னையும் பதிவர் ஆக்கி விட்டுடிங்களே இது உங்களுக்கே நியாயமா

  ReplyDelete
 23. அண்ணே சும்மா இருந்த என்னையும் பதிவர் ஆக்கிடிங்களே இது நியாயமா

  ReplyDelete
 24. எனது இந்த வாட்டி எல்லாமே கிசு கிசுவா இருக்கு... ஒண்ணுமே புரியல...

  ReplyDelete
 25. //சோ, யாரவது ஏத்திவிட்டா, உஷாரய்யா உஷாரு!//
  அடி ரொம்ப பலமாண்ணே?

  ReplyDelete
 26. //பெட்ரோ மாக்ஸ் லைட்டே தானா?//

  பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

  ReplyDelete
 27. //எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் மீனவர் படுகொலையைக் கண்டிச்சு, சின்மயி ட்வீட்டாதது தானாம்//

  அப்புடியாமா? நான் எதோ அந்த புள்ளயோட ஆபாச போட்டோ போட்டு மிரட்டினது தான்னுல்ல நினைச்சேன்.. ராஜ் டிவி ல அப்புடித்தானே சொன்னாக?

  ReplyDelete
 28. சூரியா 6 பேக் வெச்சிருந்தாரே..? 5 தான் இருக்கு? இன்னொன்னு எங்கே?

  ReplyDelete
 29. அருமை !!!! ஓய்வாக இருந்தால் எனது வலைபூ வையும் படித்து பாருங்களேன் Pangusanthai-eLearn

  ReplyDelete
 30. வீனா யோசிச்சேன்.... நல்லா இருக்கு மாம்ஸ்.

  ReplyDelete
 31. //‘கவுண்டச்சிகளைக் கட்டுவோம்...கவுண்டர்களை வெட்டுவோம்’//ம்.. ம்..இப்ப புரியுது உங்களோட இந்த (நடு) நெலம :))

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.