Sunday, January 27, 2013

குடும்பங்களை இணைக்கும் மின்வெட்டு! (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
சமுத்திரம் பெரிதா?
தேன் துளி பெரிதா?
சமுத்திரம் பெரிதா?..தேன் துளி பெரிதா?
தேன் தான்..அது நான் தான்!

பதிவர் புலம்பல்:
அப்பப்பா...ஒரு பக்கம் என்னடான்னு 'விடவே கூடாது'ன்னு கொதிக்காங்க..இன்னொரு பக்கம் 'விட்டே ஆகணும்'னு கொதிக்காங்க..இப்படியே போனா, எல்லாருக்கும் ரத்தக்கொதிப்பு வர்றது நிச்சயம். மொதல்ல,எல்லாரையும் ஏதாவது ஒரு ஆத்துல முக்கி எடுத்தாத் தான் சரியா வரும் போல!

கடல்:
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பிறந்திருக்கு-ன்னு சொல்றது யாருக்கு பொருந்துதோ இல்லியோ..கார்த்திக் மகன் கௌதமுக்கு பொருந்தும்போல..முத படத்துலேயே 15 லிப் கிஸ்ன்னு சொல்றாங்க..இதுல ராதா மகளுக்கு 16 வயசு தான்னும், ஒரு 'குழந்தை(!)'யை இப்படி நடிக்க வைக்கலாமான்னு பயங்கர எதிர்ப்பு வேற..எதிர்க்கிறது நியாயம் தான்..ஆனா 16 வயசு பொண்ணு ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கிறவங்க, ஏன் 32 வயசு கமலா காமேஷ் ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கறதில்லை?ஏன் இந்த ஓர வஞ்சனை?

பொங்கலுக்கு வந்த படங்கள்ல சமர் படம் நல்லாயிருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனாலும் படத்துக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாமப் போனதுக்கு முக்கியக் காரணமே கமலா காமேஷும், விஷாலும் தான். நிச்சயம் வேற யாராவது நடிச்சிருந்தா சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். படம் இங்க ரிலீஸ் ஆகியும், நான் பார்க்காததுக்கு ஒரே காரணம், அந்த அம்மையார் தான்.

இந்த தொழிலதிபர்லாம் என்னய்யா பண்றாங்க? சட்டுப்புட்டுன்னு யாராவது அந்த முதிர்கன்னிக்கு வாழ்க்கை கொடுத்து, தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்கய்யா..


ஒய் திஸ்.....:
நண்பர் ஒருத்தரை பார்க்கப்போவோம்னு டாக்ஸில ஏறுனேன். பார்த்தா, டிரைவர் தமிழரு..உடனே கட்டிப்பிடிச்சுக்கிட்டு, பயணத்தை ஆரம்பிச்சோம். சந்தோசமா என்ன ஊரு, பேருன்னு பேசிக்கிட்டு இருக்கும்போது, எங்க வேலை செய்றீங்கன்னு கேட்டாரு.விபரீதம் புரியாம, வெள்ளந்தியா வேலை செய்ற கம்பெனியைச் சொன்னேன்.

அவ்ளோ தான். திட்ட ஆரம்பிச்சாருங்க பாருங்க..'அதெல்லாம் ஒரு கம்பெனியா? அங்கெல்லாம் மனுசன் வேலை செய்வானா? அங்க வேலை பார்க்கிறதுக்கு பிச்சை எடுக்கலாம்'ன்னு வசவு மழை. நானும் பேச்சை மாத்த எவ்வளவோ ட் ரை பண்ணேன், ம்ஹூம்..அரைமணி நேரம்...விட்டு, ரவுண்டு கட்டிட்டாரு.

இடையில இடையில ஒரு நிமிசம் கேப் விடுவாரு..அப்படின்னு பெருமூச்சு விடமுன்னே, "அட்மின்ல அந்த *** இருக்கானா?"ம்பாரு. ஆமான்ன உடனே ஆரம்பிக்கும் பாருங்க..உஸ்ஸ்..அடுத்து "இப்பவும் அந்த *** இருக்கானா?"ம்பாரு. நானும் பரிதாபமா "ஆமாம்"ன்னு சொல்லவும் அடுத்த அர்ச்சனை ஸ்டார்ட் ஆகும்.

"ஏங்க இப்படி?"ன்னு சிக்கு சின்னாபின்னம் ஆனப்புறம் கேட்டேன். "அஞ்சு வருசம் முன்ன அங்க தான் நான் வேலை பார்த்தேன்யா"ன்னாரு..அடேங்கப்பா, அஞ்சு வருசம் கழிச்சே இந்தக் கொலைவெறின்னா, அப்பவே சிக்கியிருந்தேன்னா..........அவ்வ்வ்!

அப்புறம்தான் நண்பர்கள் சொல்றாங்க, கம்பெனிப்பேரை வெளில, குறிப்பா டிரைவர்கள் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு. அடப்பாவிகளா, பதிவுலகத்துல தான் சொல்லக்கூடாதும்பாங்க, நிஜ உலகத்துலயுமா?


கேப்டர்ர்ர்:
இன்னிக்கு ஓ.பன்னீர்செல்வம் விட்ட அறிக்கையில 'விஜயகாந்திடம்த சட்டசபைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை?. சரக்கு இருந்தால்தானே அவர் கேள்வி கேட்பார்.அவரிடம் சரக்கு இல்லையே!'-ன்னு சொல்லியிருக்காரு. 
தெரியுதுல்ல..தெரியுதுல்ல..அப்புறம் ஏன்யா டாஸ்மாக்குக்கு மூணு நாள் லீவு விடறீங்க? தெருவுக்கு தெரு டாஸ்மாக் ஓப்பன் பண்ண சண்டாளங்க, எங்க எதிர்க்கட்சித் தலைவர் வீட்டாண்டயும் ஒன்னை ஓப்பன்
பண்ணியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?

நன்றி சொல்ல உனக்கு.....:
நம்ம தோஸ்த் ஒருத்தரு, இங்க குவைத்ல குடும்பம்-குட்டிகளோட சந்தோசமா இருந்தாரு. திடீர்னு அவரோட தங்கமணிக்கு 'சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா?'ன்னு ஞானோதயம் வந்துச்சு.'ச்சீ..இதென்ன வாழ்க்கை..நாலு சுவத்துக்குள்ளயே குந்திக்கிட்டு..'ன்னு சொல்லிட்டு பிள்ளைகளைக் கூட்டிட்டுக் கிளம்பிடுச்சு.

போகும்போது, "மவனே(புருசனைத்தான்!), ஒழுங்கா வேலையை ரிசைன் பண்ணிட்டு, ஊருக்கு வர்ற வழியைப் பாரு..நம்ம ஊருல வேற வேலை பார்த்துக்கலாம்"-ன்னும் சொல்லிட்டுப் போயிருச்சு. நண்பரு ஒரு புராஜக்ட்ல பாதில இருந்ததால ரிசைன் பண்ண முடியலை.

அந்தம்மா போய்ட்டு ரெண்டு வாரம் கழிச்சு போஃன் பண்ணி, "ரிசைன் பண்ணியாச்சா, இல்லியா?"ன்னு மிரட்டுச்சு. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு "ஏங்க, ரிசைன் பண்ணிட்டிங்களா?"ன்னு கேட்டுச்சு. அப்புறம் ஒருவாரம் தான்..போன் பண்ணி "ஏங்க, ரிசைன் பண்ணிடலைல்ல?"ன்னு பரிதாபமாக் கேட்டுச்சு.

"ஏன்ம்மா?"-ன்னு கேட்டா, ஓ-ன்னு ஒரே அழுகை."இங்க ஒருநாளைக்கு 2 மணி நேரம் தாங்க கரண்ட் இருக்கு..ஒரு பேஃன் போட முடியலை. .மிக்ஸீல சட்னி அரைக்க முடியலை. பிள்ளைங்க தூங்கமுடியலை..மொத்தத்துல, முடியலை"ன்னுச்சாம்.

அப்புறம் என்ன, உடனே விசா எடுத்து இங்க வந்தாச்சு. குடும்பம் திரும்பி வந்ததுல நண்பருக்கு சந்தோசம்னாலும், ஒரே ஒரு வருத்தம். அந்த வருத்தம் தந்த குற்றவுணர்ச்சில மனுசனுக்கு தூக்கமே வரலை. அது
என்னன்னா.....

போன சட்டமன்றத்தேர்தலப்போ, அவரு இங்க தான் இருந்தாரு. ஓட்டுப்போட ஊருக்குப் போகலை. 'இப்போ நம்ம குடும்பம் இணைஞ்சதுக்கு யாரு காரணம்? நம்மை ஆட்சி செய்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி நமது விடிவெள்ளி டாக்டர் அம்மா அவர்கள் (ஸ்ஸ்..அப்பாடி!) தானே?..அவங்களுக்கு ஒரு ஓட்டுப்போடாம விட்டுட்டமே!'ன்னு தான் நண்பருக்குக் கவலை. அதனால அடுத்த தேர்தலப்போ எமர்ஜென்ஸி லீவுல போயாவது அம்மைக்குஓட்டுப் போடணும்னு முடிவு பண்ணியிருக்காரு.

இப்படியே ஒவ்வொரு வெளிநாடுவாழ் தமிழனும் முடிவு பண்ணிட்டா, அம்மாவை யாராலயும் அசைச்சுக்க முடியாது..அசைச்சுக்க முடியாது!


தீவிரமா யோசிச்சது:
அனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் இருக்கறதால தான், சிங்கம் 2-ன்னு படத்துக்கு பேர் வச்சாங்களோ?????

நொந்த சாமி:
பன்னிக்குட்டி தன்னோட பதிவுல போட்டிருந்த அந்த ஸ்டில்லைப் பார்த்ததும், அப்படியே குப்புன்னு சந்தோசம் பொங்கிடுச்சு. மனசு, வயிறு இன்னபிற உறுப்பெல்லாம் குளிர்ந்து போயிடுச்சு.(அதுக்காக, உச்சா போயிட்டயான்னு கேட்டா பிச்சுப்புடுவேன், பிச்சு!) அந்த ஸ்டில் இது தான்:

நான் வயசுக்கு வந்த காலத்துல, அரவிந்தசாமி தான் ஃபேமஸ் ஆணழகன். அதனால ஒரு டொச்சு பிஃகருகூட என்னைக் கண்டுக்கலை. இந்த மனுசனால நம்மளை மாதிரி 'கறுப்பு' பவர் ஸ்டார்கள் சிந்துன கண்ணீர் கொஞ்சமா நஞ்சமா?

ஆனா இப்போ...ஹே...ஹே..இதைத் தான் தலைவரு அன்னிக்கே சொன்னாரு, ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுப்பான், ஆனால் கடைசீல எல்லாத்தையும் உதிர வச்சுடுவான்னு!!!!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

42 comments:

 1. ரொம்பவே கிச்சுகிச்சு மூடறீங்க. நல்ல பதிவு.

  ReplyDelete
 2. மாம்ஸ்.. சமந்தா படமெல்லாம் போடறிங்க?

  ரொம்பவே மாறிட்டிங்க நீங்க....

  ReplyDelete
 3. அருமை... கடைசியில சிரிக்க வச்சுட்டீங்க... ஆமா, அந்த டிரைவர் சொன்ன வார்த்தை என்ன....

  ReplyDelete
 4. அருமை... கடைசியில சிரிக்க வச்சுட்டீங்க... ஆமா, அந்த டிரைவர் சொன்ன வார்த்தை என்ன....

  ReplyDelete
 5. //நாடோடிப் பையன் said...
  ரொம்பவே கிச்சுகிச்சு மூடறீங்க. நல்ல பதிவு. //

  நன்றி நாடோடி.

  ReplyDelete
 6. //தமிழ்வாசி பிரகாஷ் said...
  மாம்ஸ்.. சமந்தா படமெல்லாம் போடறிங்க?

  ரொம்பவே மாறிட்டிங்க நீங்க....//

  என்ன செய்ய..வேற யாரும் இல்லியே?

  ReplyDelete
 7. // ஸ்கூல் பையன் said...
  அருமை... கடைசியில சிரிக்க வச்சுட்டீங்க... ஆமா, அந்த டிரைவர் சொன்ன வார்த்தை என்ன....//

  அது 18+........ஸ்கூல் பையன்கிட்ட சொல்லக்கூடாது.


  ReplyDelete
 8. கமலா காமேஷ் விடயத்தில் முன்னாள்- இந்நாள் விவகாரத்தை கலந்து கடல்- சமர் என்று எழுதியிருப்பது உங்களின் அறிவுஜீவித்தனத்தின் உச்சத்தைக் காட்டுகிறது :P

  ReplyDelete
 9. ஒரு மனுஷனுக்கு முடி கொட்டுனதுல,எத்தன பேருக்கு சந்தோஷம்!!!!!!அது சரி அழகா இருக்குறவங்க/இருந்தவங்கல்லாம் கெட்டவங்களா?அநியாயமா இருக்கே!!!

  ReplyDelete
 10. \\அப்படியே குப்புன்னு சந்தோசம் பொங்கிடுச்சு. மனசு, வயிறு இன்னபிற உறுப்பெல்லாம் குளிர்ந்து போயிடுச்சு.\\ மின்சாரக் கனவு படத்தில கடைசியா இவர் என்ன ஆவாரு??!! சர்ச்சுல ஃ பாதரா!! அந்த சீனைப் பார்த்திருந்தா உங்க பிரச்சினை எப்பவோ தீர்ந்து போயிருக்கும்!!

  கமலா காமேஷ் எந்த பதிவரின் Favourite ?

  ReplyDelete
 11. வணக்கம்,செங்கோவி!அருமை.கொஞ்சம் நீண்ட விடுமுறைன்னாலும்,நிவர்த்தி ஆயிடுச்சு.///கமலா காமேஷ் பாவமில்லயா?வுட்டுடுங்க.

  ReplyDelete
 12. Jayadev Das said...கமலா காமேஷ் எந்த பதிவரின் Favourite ?////நான் பதிவர் இல்லீங்க!

  ReplyDelete
 13. @Yoga.S.

  நான் பதிவர் இல்லீங்க!\\ இப்படிச் சொல்லி மொத்தமா கமலா காமேஷுக்கு சொந்தம் கொண்டாடப் பார்க்கிறீங்க.. ஹா....ஹா.... அதுதான் நடக்காது............

  ReplyDelete
 14. Jayadev Das said...
  @Yoga.S.

  நான் பதிவர் இல்லீங்க!\\ இப்படிச் சொல்லி மொத்தமா கமலா காமேஷுக்கு சொந்தம் கொண்டாடப் பார்க்கிறீங்க.. ஹா....ஹா.... அதுதான் நடக்காது............///இல்லீங்க அது ஆரம்பத்துலேருந்தே......................அப்புடித்தான்.செங்கோவியே சொல்லுவாரு!

  ReplyDelete
 15. அண்ணா, நீங்க க.கா'வ இன்னும் விடலையா!!
  //அனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் ///
  ஒரு பச்ச மைதா மாவ போயி, பெண் சிங்கம்ன்னு சொல்றீகளே,

  ReplyDelete
 16. ஒரு இன்பார்மேஷன்க்குண்ணா: Real Santhanam Fanz (General) ங்குற பொது அக்கவுன்ட்ல கமென்ட்றது பழைய மொக்க ராசு மாமாவேதான்... பழைய ப்ரோபைல் டெலீட் ஆச்சு!!

  ReplyDelete
 17. ரொம்ப நாளைக்கப்புறம் களைகட்டிருக்கு............

  ReplyDelete
 18. ////// மொதல்ல,எல்லாரையும் ஏதாவது ஒரு ஆத்துல முக்கி எடுத்தாத் தான் சரியா வரும் போல!//////

  யோவ் அதுக்காக இப்படியா முங்குன படத்த போடுறது? குளமே முங்கிருச்சுய்யா......

  ReplyDelete
 19. //////ஆனா 16 வயசு பொண்ணு ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கிறவங்க, ஏன் 32 வயசு கமலா காமேஷ் ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கறதில்லை?ஏன் இந்த ஓர வஞ்சனை?/////

  32 வயசானாலும் வயசு மட்டும்தாண்ணே வளந்திருக்கு...... விடுங்கண்ணே இன்னும் வளர வேண்டி இருக்கு.....!

  ReplyDelete
 20. ////ஆனாலும் படத்துக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாமப் போனதுக்கு முக்கியக் காரணமே கமலா காமேஷும், விஷாலும் தான். /////

  என்ன கொடும சார் இது, கமலா காமேஷ் நடிச்சதுலயே நல்ல படம் இதுதான்னு நேத்து ஒருத்தர் சொன்னாரே?

  ReplyDelete
 21. ///இந்த தொழிலதிபர்லாம் என்னய்யா பண்றாங்க? சட்டுப்புட்டுன்னு யாராவது அந்த முதிர்கன்னிக்கு வாழ்க்கை கொடுத்து, தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்கய்யா..///

  அடடடடா...... நாட்ல இந்த தொழிலதிபருக தொல்ல தாங்க முடியலப்பா..... அவனுகளுக்கு வேற வேலையே இல்லையா?

  ReplyDelete
 22. /////அனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் இருக்கறதால தான், சிங்கம் 2-ன்னு படத்துக்கு பேர் வச்சாங்களோ?????/////

  என்னது பெண் சிங்கமா....? ஆமா சிலிர்த்துக்கிட்டுதான் நிக்கிதுங்க சிங்கங்கள்.......

  ReplyDelete
 23. ///நான் வயசுக்கு வந்த காலத்துல, அரவிந்தசாமி தான் ஃபேமஸ் ஆணழகன். அதனால ஒரு டொச்சு பிஃகருகூட என்னைக் கண்டுக்கலை. இந்த மனுசனால நம்மளை மாதிரி 'கறுப்பு' பவர் ஸ்டார்கள் சிந்துன கண்ணீர் கொஞ்சமா நஞ்சமா?/////

  விடுங்கண்ணே... அதான் இப்ப ஒரு செகப்பு பவர்ஸ்டார் வந்து நம்மளைலாம் வாழ வெச்சிக்கிட்டு இருக்காரே?

  ReplyDelete
 24. சிரிச்சு முடியல செங்கோவியாரே அதுவும் காமலாகாமேஷ்:)) பாவம் அம்மணி நாளை வாரேன் மிச்ச பின்னூட்டத்துக்கு:))) நேரம் இருந்தால் சமர் பார்த்துவிட்டு ஆவ்வ்வ்வ்

  ReplyDelete
 25. //இந்த தொழிலதிபர்லாம் என்னய்யா பண்றாங்க? சட்டுப்புட்டுன்னு யாராவது அந்த முதிர்கன்னிக்கு வாழ்க்கை கொடுத்து, தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்கய்யா//

  அண்ணே, பாவம்ண்ணே அவங்க, விட்டுருங்க.

  ReplyDelete
 26. //மருதமூரான். said...

  கமலா காமேஷ் விடயத்தில் முன்னாள்- இந்நாள் விவகாரத்தை கலந்து கடல்- சமர் என்று எழுதியிருப்பது உங்களின் அறிவுஜீவித்தனத்தின் உச்சத்தைக் காட்டுகிறது :P//

  அறிவுஜீவின்னு சொல்லாதீங்கய்யா...பயம்மா இருக்கு.

  ReplyDelete


 27. //Blogger SezhiyanRS said...

  ஒரு மனுஷனுக்கு முடி கொட்டுனதுல,எத்தன பேருக்கு சந்தோஷம்!!!!!!அது சரி அழகா இருக்குறவங்க/இருந்தவங்கல்லாம் கெட்டவங்களா?அநியாயமா இருக்கே!!!//  அதைத் தான் தமிழ்ல வயித்தெரிச்சல்னு சொல்வாங்க பாஸ்.

  ReplyDelete

 28. //Blogger Jayadev Das said...

  \\அப்படியே குப்புன்னு சந்தோசம் பொங்கிடுச்சு. மனசு, வயிறு இன்னபிற உறுப்பெல்லாம் குளிர்ந்து போயிடுச்சு.\\ மின்சாரக் கனவு படத்தில கடைசியா இவர் என்ன ஆவாரு??!! சர்ச்சுல ஃ பாதரா!! அந்த சீனைப் பார்த்திருந்தா உங்க பிரச்சினை எப்பவோ தீர்ந்து போயிருக்கும்!!//


  இப்படி ஆறுதல் சொல்ல, அப்போ யாருமே இல்லியே.....................!!

  ReplyDelete

 29. // Jayadev Das said...
  @Yoga.S.

  நான் பதிவர் இல்லீங்க!\\ இப்படிச் சொல்லி மொத்தமா கமலா காமேஷுக்கு சொந்தம் கொண்டாடப் பார்க்கிறீங்க.. ஹா....ஹா.... அதுதான் நடக்காது............///இல்லீங்க அது ஆரம்பத்துலேருந்தே......................அப்புடித்தான்.செங்கோவியே சொல்லுவாரு!//  ஆமாங்க, ஐயா பதிவர் இல்லை..தொழிலதிபர்ர்...செகண்ட் ஹேல்ஸ் ஐட்டம்களை வாங்கி, பட்டி தட்டி சரிபார்த்து, அப்புறம்.............சரி விடுங்க!

  ReplyDelete

 30. //Blogger Real Santhanam Fanz (General) said...

  அண்ணா, நீங்க க.கா'வ இன்னும் விடலையா!!
  //அனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் ///
  ஒரு பச்ச மைதா மாவ போயி, பெண் சிங்கம்ன்னு சொல்றீகளே,//


  ஒரு சிங்கத்தின் பார்வையில் அது பெண் சிங்கமா தெரிஞ்சது தப்பா?.....நான் பண்ணது தப்பா???????????


  // ஒரு இன்பார்மேஷன்க்குண்ணா: Real Santhanam Fanz (General) ங்குற பொது அக்கவுன்ட்ல கமென்ட்றது பழைய மொக்க ராசு மாமாவேதான்... பழைய ப்ரோபைல் டெலீட் ஆச்சு!! //

  ரொம்ப நல்ல செய்தி.......நன்றி.

  ReplyDelete
 31. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ரொம்ப நாளைக்கப்புறம் களைகட்டிருக்கு............//


  அண்ணே, யாரும் களையை புடுங்கிட மாட்டாங்கள்ல?

  ReplyDelete
 32. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் அதுக்காக இப்படியா முங்குன படத்த போடுறது? குளமே முங்கிருச்சுய்யா......//

  அண்ணே, அது இருக்கட்டும்..நமீக்கு ரீப்ளேஸ்மெண்ட் யாராவது இருக்காங்களா? நமீயும் போரடிக்குது..வேற ஒன்னும் தேற மாட்டேங்குது. உங்க ஜீகே-யை பகிரவும்.

  ReplyDelete
 33. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  32 வயசானாலும் வயசு மட்டும்தாண்ணே வளந்திருக்கு...... விடுங்கண்ணே இன்னும் வளர வேண்டி இருக்கு.....!//


  அது உங்க தனிப்பட்ட கருத்து......நாங்க முழு வீடியோ பார்த்தவங்க!

  ReplyDelete 34. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்ன கொடும சார் இது, கமலா காமேஷ் நடிச்சதுலயே நல்ல படம் இதுதான்னு நேத்து ஒருத்தர் சொன்னாரே?//


  அப்படியா? ஆனாலும் பயம்மா இருக்கே!

  ReplyDelete
 35. //Blogger தனிமரம் said...

  :)))))) //


  சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
  சொந்தமான கையிருப்பு - வேறு
  ஜீவராசிகள் செய்ய முடியாத
  செயலாகும் இந்த சிரிப்பு!!!

  ReplyDelete


 36. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

  // அண்ணே, பாவம்ண்ணே அவங்க, விட்டுருங்க.//

  அப்போ, தமிழ்சினிமா பாவம் இல்லியா?

  ReplyDelete
 37. அரவிந்தசாமிக்கு ஒரு காலத்தில் பலகிளிகள் ! """ம்ம்ம் நமக்கு ஒன்றும் மாட்டவில்லை:))))

  ReplyDelete
 38. பன்னிக்குட்டியாரும் அரவிந்தரும் ஒன்றா???ஆவ்வ்வ்

  ReplyDelete
 39. கடல் தேறாவிட்டாலும் அலைகல் ஓய்வதில்லை தேறியது ஒருகாலம்!ம்ம்ம்

  ReplyDelete
 40. சிரிக்க முடியல...அதுவும் அரவிந்தசாமி..... ம்ம்ம்... நகைச்சுவை... நக்கல்..நையாண்டியில யாரும் உங்களை அசச்சிக்க முடியாது... அசச்சிக்க முடியாது....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.