Monday, February 11, 2013

லவ் லெட்டருக்குமா டேக்ஸ் கட்டணும்? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

குண்டு ஒண்ணு வெசிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெசிருக்கேன்
கன்னி வெடி வெசிருக்கேன்
என் கண்ணில் திரி வெசிருக்கேன்.

தொட்டா செதரி விடும்,
தோட்டா வெடிச்சிவிடும்
குண்டு தொளச்சிவிடும்,
பட்டா தெரிச்சிவிடும்
ஹொய்..ஹொய்...ஹொய்...ஹொய்...

பதிவர் குண்டு:சென்னையில காய்ஞ்சுபோய் திரிஞ்சுக்கிட்டிருந்த ஒரு பதிவர் இந்து மதத்தோட ஆறு தரிசனங்களைப் பத்தி எழுதிக்கிட்டிருந்தார். திடீர்னு கொஞ்சநாளா  இந்தியா கேவலமான நாடு, வாழத்தகுதியற்ற நாடு, இவ்வளவு மோசமான நாடு உலகத்துலேயே கிடையாதுன்னு ரொம்ப முத்திப்போய் ஒரே வசவு மழை.

என்னடா இது..தாய்நாட்டு மேல இவ்ளோ கோபம்னு விசாரிச்சா.........அண்ணாத்தை இப்போ வேறெதோ நாட்டுல இருக்காராம். இப்படில்லாம் எழுதுனா, நிறைய எழும்புத்துண்டு கிடைக்கும்னு தான் இந்த சத்தமாம். இந்த பொழப்புக்கு-ன்னு ஆரம்பிச்சு நாங்க திட்டமாட்டோம். ஏன்னா, கசாப்புகிட்டயே உன் கடைசி ஆசை என்னன்னு கேட்ட 'ரொம்ப நல்லவங்க' நாங்க!


காங்கிரஸ் பூந்தி:
80 வயசுக்கு கிழவிக்கு 'எதுக்கும் லாயக்கில்லாத' 20 வயசு பொடியனை நிச்சயம் பண்ணா என்ன ஒரு பீலிங் வருமோ, அதே பீலிங் தான் ராகுல் காந்தி காங்கிரஸ் துணைத்தலைவரா ஆன செய்தியைப் பார்த்ததும் வந்துச்சு. இந்த லட்சணத்துல காங்கிரஸ் எழுச்சி பெறும்னு சிலபேரு பேசுறதைப் பார்த்தா, பாவமா இருக்கு..

நம்ம மண்ணுமோகன் தன்னோட அதிபுத்திசாலித்தன பொருளாதார நடவடிக்கைகளால ஏற்கனவே காங்கிரஸை புதைகுழில இறக்கிட்டாரு. இனிமே மண்ணைப் போட்டு மூட வேண்டியது தான் பாக்கி. அதுக்கு நம்ம ராகுல் பூந்தியை விட்டா, சரியான ஆளு வேற யாரு இருக்கா, சொல்லுங்க!
ஹா...ங்:
உலகத்திலேயே பரிதாபத்துக்குரிய ஆண் இனம்னா, அது பிஎஃப்/பிட்டுப்படம் மாதிரி படங்கள்ல நடிக்கிற ஆண்கள் தான். அதிலும் மலையாளப் படத்துல நடிக்கிறவங்க நிலைமை இன்னும் மோசம். சீனோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் உச்சி முதல் உள்ளங்கால்வரை மோந்து பார்த்துக்கிட்டு 'மட்டுமே' இருக்கணும்னா கொடுமை இல்லியா அது? ஷகீலா,ரேஷ்மா அளவுக்கு அவங்க பேரும் வெளில பேமஸ் ஆகிறதில்லை. உண்மையைச் சொல்றதுன்னா, அவங்க மூஞ்சியை யாரும் படத்துல பார்க்கிறதே இல்லை. ஆனாலும் அவங்க இல்லாம படமெடுத்தாலும் நல்லா இருக்கறதில்லை. மொத்ததுல பெரும் தியாக மனப்பான்மையோட தான் அவங்க நடிக்கிறாங்கன்னு சொல்லலாம்.

அந்த மாதிரியான ஒரு அமெரிக்கர் ரான் ஜெரேமி. 2000 சீன் படத்துல நடிச்ச திறமையான நடிகரான அவருக்கு சமீபத்துல நெஞ்சுவலி வந்து, உயிர் பிழைச்சுட்டாருன்னு நியூஸ் பார்த்தேன். பரவாயில்லை, அங்கயாவது இந்தளவுக்கு பேரும் புகழுமா இருக்காங்களேன்னு சந்தோசமா இருந்துச்சு. அதுசரி, 2000 பி.எஃப்ல நடிச்சா நெஞ்சுவலியா வரும்?

ஹே..ஹே:
நானும் எனக்குத் தெரிஞ்ச தமிழன்ங்ககிட்டெல்லாம் 'ஏம்யா, மம்மி தான் அடுத்த பிரதமர்னு சொல்றாங்களே..அப்படியா?'ன்னு கேட்டா, எல்லாரும் சொல்லிவச்ச மாதிரி நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்காங்களேயொழிய, ஒருத்தர்கூட 'ஏன் ஆகக்கூடாது?'ன்னு கேட்கமாட்டேங்கிறாங்க. ஏன்யா இப்படி? ஏன்?....அடப்பாவிகளா, அவ்ளோ தேசபக்தியா உங்களுக்கு?


வரி..வட்டி..கிஸ்தி:
நம்ம 28000 கோடி புகழ் கடலை வியாபாரி கொடுத்த ஒரு பேட்டியைப் படிச்சு டரியல் ஆகிட்டேன். இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கு வந்த ஆபீசருங்க, கடலை வச்சிருந்த லவ் லெட்டர் ஒன்னையும் எடுத்துட்டுப் போய்ட்டாங்களாம். என்ன கொடுமைய்யா இது? லவ் லெட்டருக்கும் டேக்ஸ்க்கும் என்ன சம்பந்தம்? அதுல காதல்வரிகள் இருக்கறதனால, வரி போடலாம்னு நினைச்சுட்டாங்களா?

பாவம் மனுசன்..எட்டாப்பு படிக்கும்போது அவரோட லவ்வர் எழுதுன லெட்டராம். 'பொத்திப்பொத்தி பாதுகாத்து வச்சிருந்தனே, இப்படி கொண்டுபோய்ட்டாங்களே பாவிப்பயக'-ன்னு அவரு புலம்பறதைப் பார்க்க பாவமா இருக்குய்யா. அவரு இன்னும் பத்திரமா வச்சிருக்கறதைப் பார்த்தா, கண்டிப்பா லவ் பெயிலியராத்தான் இருக்கும்..பின்னே, லவ் மேரேஜ் பண்ணியிருந்தா அடுத்த மாசமே காண்டாகி கிழிச்சிருக்க மாட்டாரா?

ஆனாலும் எனக்கு ஒரு ஆச்சரியம். மனுசன் எப்படி இவ்ளோ தைரியமா பப்ளிக்கா இதைச் சொல்றாரு? வீட்டுக்காரம்மாக்குத் தெரிஞ்சிடாது? பேட்டி முடிஞ்சி வீட்டுக்குத்தான் போனாரா?

கல்யாணமான புதுசுல சிலபேரு தங்கமணிகிட்ட தன்னோட லவ் சாகசங்களையெல்லாம் குஷியா சொல்லிடுவாங்க. அப்புறம் அஞ்சாறு வருசம் கழிச்சு, செமயா கும்மு வாங்குவாங்க.என் தங்கமணி பலதடவை 'ஏங்க, நீங்க யாரையுமே வாழ்க்கைல படிக்கும்போது லவ் பண்ணதே இல்லியா?'ன்னு...அதாவது 'நீயெல்லாம் மனுசன் தானா?'ங்கிற ரேஞ்சுல எல்லாம் கேட்டிருக்கு. ம்ஹூம், ஸ்கூல் டேஸ்ல நான் குஷ்பூவை லவ் பண்ண மேட்டரைச் சொல்லவே இல்லியே..

அப்புறம் என்னிக்காவது 'என்னம்மா, சோத்துல உப்பு கம்மியா இருக்கே?'ன்னு கேட்டா 'போய்யா..போய் குஷ்பூகிட்டக் கேளுய்யா'ன்னு சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? நீங்களே சொல்லுங்க, ஒரு ஸ்பூன் உப்புக்காக குவைத் டூ சென்னை ப்ஃளைட் பிடிச்சு, சுந்தர்.சி வீட்டு முன்னால போய் நின்னா நல்லாவா இருக்கும்?

எப்படிய்யா இப்படி.....:


நல்ல மனசோட யோசிச்சது:
ஆமா, டாகுடர் விஜய் ஒரு படத்துல இஸ்லாமியரா நடிப்பார்னு சொன்னாங்களே....எப்போ நடிப்பாரு?

அதையும் தாண்டி...:
சரிய்யா, வேலன்டைன்ஸ் டே வேற வருதாம்.. அதுக்கு ஸ்பெசல் பதிவு போட டைம் இல்லை..நான் ரொம்ப பிஸீஈஈஈ....அதனால முன்னால எழுதின 'ஆத்தாவும் தாத்தாவும்' பதிவை படிச்சிக்கோங்கய்யா.

வருங்கால / நிகழ்கால வாழ்க்கைத் துணையை நேசிப்போருக்கு காதலர் தின நல்வாழ்த்துகள்.
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

 1. //பதிவர் குண்டு://என்னா ஒரு வில்லத்தனம்

  ReplyDelete
 2. //எப்படிய்யா இப்படி.....://

  என்ன கொடுமண்ணே இது, யாரு பெத்த புள்ளையோ, இப்படி ஆயிரிச்சே...

  ReplyDelete
 3. // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  //எப்படிய்யா இப்படி.....://

  என்ன கொடுமண்ணே இது, யாரு பெத்த புள்ளையோ, இப்படி ஆயிரிச்சே...

  //

  அதைப் பார்த்ததுல இருந்து ரெண்டுநாளா சோறு தண்ணி இறங்கலைய்யா.

  ReplyDelete
 4. ///சுந்தர்.சி வீட்டு முன்னால போய் நின்னா நல்லாவா இருக்கும்?///

  ச்சே ச்சே செருப்படிதான் விழும்...வீட்ட சுத்தி தொண்டர்கள் செருப்பும் கையுமா இருக்கானுங்களாம்ண்ணே...

  ReplyDelete
 5. // பரிதாபத்துக்குரிய ஆண் இனம்னா, அது பிஎஃப்/பிட்டுப்படம் மாதிரி படங்கள்ல நடிக்கிற ஆண்கள் தான். ///

  எனக்கும் அவுங்கள நெனச்சாதான் பாவமா இருக்கு!! பத்து விதமான ஸ்கின் டிசீஸ் வர்றதுக்கு அதிக வாய்ப்புள்ள பயபுள்ளைக!!

  ReplyDelete
 6. குண்டு ஒண்ணு வெசிருக்கேன்
  வெடி குண்டு ஒண்ணு வெசிருக்கேன்
  கன்னி வெடி வெசிருக்கேன்
  என் கண்ணில் திரி வெசிருக்கேன்.////

  இந்தப்பாட்டு சென்னையில் வைத்து ஈழ போராளி இயக்கத்தலைவர்களில் ஒருவரான பத்மநபா குண்டு வைத்து கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் எழுதப்பட்டதாம்.... பாடலாசிரியரே சொல்லி எங்கோ பார்த்திருக்கிறேன். ஏனோ ஞாபகம் வந்திடுச்சு சாரே..!


  ---------------

  அந்த நெஞ்சுவலி மாட்டர் சூப்பர்? எனக்கு அந்தக்கேள்வி இருக்கத்தான் செய்யுது.

  ReplyDelete
 7. குண்டு ஒண்ணு வெசிருக்கேன்
  வெடி குண்டு ஒண்ணு வெசிருக்கேன்
  கன்னி வெடி வெசிருக்கேன்
  என் கண்ணில் திரி வெசிருக்கேன்.////

  இந்தப்பாட்டு சென்னையில் வைத்து ஈழ போராளி இயக்கத்தலைவர்களில் ஒருவரான பத்மநபா குண்டு வைத்து கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் எழுதப்பட்டதாம்.... பாடலாசிரியரே சொல்லி எங்கோ பார்த்திருக்கிறேன். ஏனோ ஞாபகம் வந்திடுச்சு சாரே..!


  ---------------

  அந்த நெஞ்சுவலி மாட்டர் சூப்பர்? எனக்கு அந்தக்கேள்வி இருக்கத்தான் செய்யுது.

  ReplyDelete
 8. \\அதுசரி, 2000 பி.எஃப்ல நடிச்சா நெஞ்சுவலியா வரும்?\\செங்கோவி, இந்த மூட்டை தூக்குறவங்களைப் பார்த்திருக்கீங்களா? உடம்பு ஸ்ட்ராங்-ஆக இருக்கும். வயலில் மண்வெட்டி போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களைப் பாருங்க கைகள் வலிமையை இருக்கும். அதிகமா நடக்கிறவங்க கால்கள் உறுதியா இருக்கும். நீதி:உடலில் நன்றாகப் பயன்படுத்தும் உறுப்பு வலிமையானதாகி விடும். எப்பூடி................!!

  \\எப்படிய்யா இப்படி.....:\\ உண்மை:ஆன் பேக்கேஜிங்கைப் பார்த்து எமாந்திடுவான், பெண் பேக்கேஜிங் உள்ள நல்ல சரக்கு இருந்தால் பேக்கேஜ் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்.

  ReplyDelete
 9. குண்டு ஒன்று வைத்து இருக்கின்றேன் பாட்டு ஒருகாலத்தில் என்ன கலக்கு கலக்கியது!ம்ம்ம்

  ReplyDelete
 10. நெஞ்சுவலியைவிட இந்த ஹீரோக்கள் பாவம் தான் !ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ!

  ReplyDelete
 11. காந்தி மண்போட வாழ்த்துக்கள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 12. என்னாது காங்கிரஸ்ல "எழுச்சி"யா...? எழும்புமாக்கும் அம்புட்டும் லாயக்கில்லாத பயலுகலாகவே இருக்கானுங்க மக்கா...

  ReplyDelete
 13. பிட்டு படம் பற்றிய கருத்து....

  ஹிஹி உண்மை பாஸ்... அவங்க முகத்தை கூட கண்டுப்பான்களா தெரியவில்லை...
  அப்படி என்ன தைலமா பூசிவிட்டிருப்பாங்க?படம் முடியும் வரைக்கும் முகர்ந்து பார்த்துக்கிட்டே இருப்பாங்க ?? :v

  மலையாள கரையோரத்தில தான் அப்பிடி!வெள்ளைக்காரனுக்கு மூக்கு வேற வேலைக்கு தான் யூஸ் பண்ணிக்குவான்! ;)

  ReplyDelete
 14. வழக்கம் போலா. . . . ஹி. .ஹி

  ReplyDelete
 15. //
  மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  எனக்கும் அவுங்கள நெனச்சாதான் பாவமா இருக்கு!! பத்து விதமான ஸ்கின் டிசீஸ் வர்றதுக்கு அதிக வாய்ப்புள்ள பயபுள்ளைக!! //

  ஹா..ஹா..பாவம்யா!

  ReplyDelete

 16. //
  மருதமூரான். said...
  இந்தப்பாட்டு சென்னையில் வைத்து ஈழ போராளி இயக்கத்தலைவர்களில் ஒருவரான பத்மநபா குண்டு வைத்து கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் எழுதப்பட்டதாம்.... பாடலாசிரியரே சொல்லி எங்கோ பார்த்திருக்கிறேன். ஏனோ ஞாபகம் வந்திடுச்சு சாரே..!//

  படத்தில் ரொம்ப ஜாலியான பாட்டாக வரும்..அதான்...!

  ReplyDelete
 17. // Jayadev Das said...
  \\அதுசரி, 2000 பி.எஃப்ல நடிச்சா நெஞ்சுவலியா வரும்?\\செங்கோவி, இந்த மூட்டை தூக்குறவங்களைப் பார்த்திருக்கீங்களா? உடம்பு ஸ்ட்ராங்-ஆக இருக்கும். வயலில் மண்வெட்டி போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களைப் பாருங்க கைகள் வலிமையை இருக்கும். அதிகமா நடக்கிறவங்க கால்கள் உறுதியா இருக்கும். நீதி:உடலில் நன்றாகப் பயன்படுத்தும் உறுப்பு வலிமையானதாகி விடும். எப்பூடி................!!//

  சான்ஸே இல்லை சார்..கலக்கிப்புட்டீங்க. இதுக்கே உங்களுக்கு டாக்குதர் பட்டம்கொடுக்கலாம்.

  // உண்மை:ஆன் பேக்கேஜிங்கைப் பார்த்து எமாந்திடுவான், பெண் பேக்கேஜிங் உள்ள நல்ல சரக்கு இருந்தால் பேக்கேஜ் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்.//

  கரெக்ட்டு தான்.

  ReplyDelete
 18. //
  தனிமரம் said...
  நெஞ்சுவலியைவிட இந்த ஹீரோக்கள் பாவம் தான் !ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ!//
  நேசரே, அப்போ நீங்க ஏன் இவங்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கக்கூடாது?

  ReplyDelete
 19. //
  MANO நாஞ்சில் மனோ said...
  என்னாது காங்கிரஸ்ல "எழுச்சி"யா...? எழும்புமாக்கும் அம்புட்டும் லாயக்கில்லாத பயலுகலாகவே இருக்கானுங்க மக்கா...//

  உண்மை தான்ணே..அவங்களுக்கு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை.

  ReplyDelete
 20. //Siva Mynthan said...
  அப்படி என்ன தைலமா பூசிவிட்டிருப்பாங்க?படம் முடியும் வரைக்கும் முகர்ந்து பார்த்துக்கிட்டே இருப்பாங்க ?? :v //

  ரொம்பக் கஷ்டம்தான், இல்ல?


  ReplyDelete
 21. // Arif .A said...
  வழக்கம் போலா. . . . ஹி. .ஹி//

  வழக்கம்போல நன்றி.

  ReplyDelete
 22. ஒரு சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக விசாரிப்பது வழக்கம். குழந்தைக்கு 'கால்' கழுவிவிடு என்றால் எதைக் கழுவிவிடுவது என்று தெரியுமல்லவா? அதுபோல நெஞ்சு வலி என்றால் என்ன வலி என நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும், செங்கோவி அப்புராணியா இருக்கீங்களே!

  ReplyDelete
 23. //நெஞ்சை தொட்ட வரிகள்

  யாருடைய?

  //குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்

  படத்துக்கும் இந்த பாடலுக்கும் சம்பந்தம் இல்லை அப்படி இருந்திருந்தால் வெடி குண்டு என்பதற்கு பதிலாக அணுகுண்டு என்று இருந்திருக்கும் - நானா யோசிச்சது

  80 வயசு கிழவிக்கு எல்லாத்துக்கும் லாயக்கானவனை கட்டினாலும் நோ யூஸ். நான் காங்கிரஸை சொன்னேன். :)

  எனக்கும் பிட்டு படங்களை பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றியதுண்டு. அதிலும் ஒரு ஆசாமி கொடுத்த காசுக்கு கொஞ்சம் ஓவராவே நடிப்பார். :)

  விஜய் மட்டுமல்ல இனிமே எவனாவது இசுலாமியனா நடிப்பான்?

  ReplyDelete
 24. நல்ல மனசோட யோசிச்சது:ஆமா, டாகுடர் விஜய் ஒரு படத்துல இஸ்லாமியரா நடிப்பார்னு சொன்னாங்களே....எப்போ நடிப்பாரு?//

  :)

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.