Monday, July 29, 2013

ஹன்சிகா...எங்கிருந்தாலும் வாழ்க! (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: ரொம்ப நாள் கழிச்சு உங்களை சந்திக்கிறதுல சந்தோசம்..ஆனா இப்படி ஒரு துக்கமான மனநிலைமைல சந்திக்க வேண்டியதாப் போச்சே.....!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
மாமா டவுசர் கழண்டுச்சே
மாமா டவுசர் அவுந்துச்சே....
மாமா டவுசர் கழண்டுச்சே
மாமா டவுசர் அவுந்துச்சே....!
பாடல் விளக்கவுரை:
போன மாசம் இந்தியாவில் விடுமுறையை நான் எஞ்சாய் பண்ணியதில், என் மாமனார் டவுசரும் என் மகனின் தாய்மாமன் டவுசரும் கிழிஞ்சதாக தகவல் கிடைச்சிருக்கு!

ஊருக்குக் கிளம்பும்போது ஒரு க்யூரியாசிட்டில தங்கமணி, தன் தந்தையார்கிட்ட 'நாங்க வந்ததுல எவ்வளவுப்பா எக்ஸ்ட்ரா செலவாச்சு?'ன்னு கேட்டிருக்கு. அதுக்கு அவரு 'ஜஸ்ட் ட்வென்ட்டி பைஃவ் தவுசண்ட் தாம்மா'ன்னு சொல்லியிருக்காரு. 25ஆ..அதுவும் ஒரு கிராமத்துல.........கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ? அவரு ஏர்போர்ட்ல வச்சு என்னை ஏன் அப்படிப் பார்த்தாருன்னு இப்பல்ல புரியுது!!

  பா..பா:
நம்ம மனீஷா கொய்யாப்ப..ச்சே...கொய்ராலா சமீபத்துல கேன்சரால பாதிக்கப்பட்டு, ஆபத்துக்கட்டத்துக்குப் போயி மீண்டு வந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதுபத்தி ஒரு புத்தகமும் எழுதப்போறாங்களாம். ரொம்ப நல்ல விஷயம். கேன்சர் வந்தாலும் 20 வருசம் அதோடயே வாழ்ந்து காட்டுனவங்களை எனக்குத் தெரியும். பயந்து, மனசு விட்டுப்போறது தப்புன்னு எல்லாருக்கும் புரியற மாதிரி அந்தம்மா புக்ல எழுதப்போறாங்களாம். அதுக்கு அந்தம்மாக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

 
இந்தக் காலத்துல டாக்டர்கள்லாம் எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வு இல்லாம இருக்காங்கங்கிறதுக்கு மனீஷா கதை ஒரு உதாரணம்...அந்தம்மா பாபா/முதல்வன் படத்துல நடிச்சப்பவே ஏதோ பயங்கர வியாதிக்கு ஆளான மாதிரி தான் இருந்துச்சு..எத்தனை டாக்டருங்க அந்த படங்களைப் பார்த்திருப்பாங்க. அப்பவே அந்தம்மாவைத் தூக்கிட்டுப் போயி டெஸ்ட் பண்ணியிருந்தா, நோய் இந்தளவுக்கு முத்தியிருக்காதுல்ல? மருத்துவம் படிக்காத நமக்கே, அந்தம்மா 'பா...பா'ன்னு ஆடறதைப் பார்த்து மைல்டா டவுட் வரும்போது, இந்த டாக்டர்களுக்கு கன்பாஃர்மா தெரிஞ்சிருக்க வேண்டாம்? இனிமேலாவது சமூகப் பொறுப்புணர்வோட படம் பாருங்கய்யா.

எங்கிருந்தாலும்...:  

நான் அப்படி என்னம்மா பெருசா தப்பு பண்ணிட்டேன்?..கொஞ்ச நாள் பிஸியா இருந்ததால பதிவு எழுதலை..அதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு சிம்புவைக் கட்டிக்கப்போறேன்னு சொன்னா என்னம்மா நியாயம்?

அப்போ இத்தனை நாள் ஹன்ஸி மன்றத்தை உரம் போட்டு, தண்ணி ஊத்தி வளர்த்த நாங்கெல்லாம் என்ன இனாவானாவா?

சிம்பு கூட ஹன்சி நடிக்கப்போதுன்னு தெரிஞ்சப்பவே சொன்னேன் ‘அந்தாளு காளை மாட்டிலேயே கால்படி பால் கறப்பாரே?’ன்னு..சொன்னபடியே ஆயிடுச்சே..ச்சே..ச்சே!

‘சிம்புவை லவ் பண்றேன்’ன்னு சொன்னது கூடப் பரவாயில்லை. ஆனா ‘இது பெர்சனல் மேட்டர்’னு சொன்னதைத் தான் தாங்க முடியலை. ஒவ்வொரு ட்ரெஸ் போடும்போதும் ரசிகனுக்குப் பிடிக்குமா, பிடிக்காதான்னு யோசிச்ச ஹன்சிகா...ஒவ்வொரு தடவை மேக்கப் போடும்போதும் ரசிகனுக்குப் பிடிக்குமா, பிடிக்காதான்னு யோசிச்ச ஹன்சிகாவா இப்போ இப்படிப் பேசறது?

 அப்போ,

நீ போடற ட்ரெஸ் எங்களுக்குப் பிடிக்கணும்!
நீ போடற மேக்கப் எங்களுக்குப் பிடிக்கணும்! - ஆனா
உன்னை.......உன்னை கட்டிக்கிற ஆளை எங்களுக்குப் பிடிக்க வேண்டாம்..அது பெர்சனல், இல்லே?...எந்த ஊரு நியாயம்மா இது?
எம்மா, உனக்கு ஞாபகம் இருக்காம்மா?..நடிக்க வந்த புதுசுல டப்பிங் வாய்ஸ் ஒரு பக்கம் போகும்..உன் ரப்பர் வாய் இன்னொரு பக்கம் போதும்..அதையெல்லாம் பெரிசு பண்ணிக்காம, ‘வாயைவா பார்ப்பாங்க?’-ன்னு வைராக்கியமா வாழ்ந்தமே...அதுக்கு நீ காட்டுற நன்றியாம்மா இது?

வாழ்க்கைல நீ சக்தி மசாலா யூஸ் பண்ணியிருக்க மாட்டேன்னு தெரியும்..ஆனா மண்டைல இருக்கிற மசாலாவையும் நீ யூஸ் பண்றதே இல்லைன்னு தெரியாமப் போயிடுச்சே!

கல்யாணம் பண்ற வயசாம்மா இது?..கமலா காமேஷே இன்னும் கல்யாணத்தைப் பத்தி நினைக்கதப்போ, பச்ச மண்ணு..உனக்கென்னம்மா அவசரம்?

எப்படிப்பட்ட ரசிகர்களையெல்லாம் நீ இழக்கப்போறே தெரியுமா? தீயா வேலை செய்யணும் படத்துல நீ மெலிஞ்சிட்டேன்னு பயபுள்ளைக சொன்னாங்க..மெலிஞ்ச ஹன்சிகாவை எப்படிப் பார்ப்பேன்னு அந்தப் படத்தையே பார்க்காம விட்ட பாவிம்மா நானு, பாவி நானு. அப்புறம் தான் என் நண்பன் ஒருத்தன், ‘மச்சான்..மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..தைரியமாப் பாரு’ன்னு ஆறுதல் சொன்னாம்மா..இதோ, இப்பத்தான் அந்தப் படத்த டவுன்லோடி வச்சிருக்கேன். அதுக்குள்ள இடி மாதிரி இப்படி ஒரு நியூஸ்.

இன்னும் அஞ்சு வருசம் கழிச்சுத்தான் கல்யாணம்னு சொல்லியிருக்கே..அஞ்சு வருசம் இருக்கு..அதுக்குள்ள முழிச்சுக்கோ, பொழைச்சுக்கோ! இல்லேன்னா............என்னத்தைச் செய்ய...கழுதை, எங்கிருந்தாலும் வாழ்க-ன்னு சொல்லிட்டு, அடுத்த அண்டா-குண்டாவைத் தேட வேண்டியது தான்.


எப்படிய்யா இது:

ஊர்ல மச்சினன்கூட ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப்போனேன். (ஓட்டலுக்குமா.......!) இலை போட வந்த சர்வர் என் மச்சினனைப் பார்த்ததும் "ஏ, மாப்ளே..நீ தானா?" அப்படீன்னாரு. மச்சினனும் "ஆமா மாமா...இங்க தான் வேலை பார்க்கறீங்களா?அதுசரி, இப்போ எத்தனையாவது போய்க்கிட்டிருக்கு?"ன்னு கேட்டான். அவர்"பதினைஞ்சாவது"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு.

எனக்கோ டவுட்டு...15 கஸ்டமர் தானா இதுவரைக்கும் வந்திருக்காங்க?-ன்னு குழம்பி மச்சினன்கிட்ட கேட்டேன்..அதுக்கு அவன் சொன்னான், "மாமா, அது கஸ்டமர் கணக்கு இல்லை...அவர் கட்டிக்கிட்ட பொண்ணுங்க கணக்கு"
நமக்கு பகீர்னு ஆயிடுச்சு..என்னய்யா இது அநியாயம்..பதினைஞ்சு கல்யாணமா? எனக்கு ஒரே ஒரு பொண்ணு தர்றதுக்கு என்ன பாடு படுத்தினாங்க....சம்பளம் எவ்ளோ?, பாஃரின் போவியா? பொண்ணையும் கூட்டிட்டுப் போவியா? உன் கம்பெனி பாஃரின்லயும் இருக்கா? அங்க எவ்ளோ சம்பளம் கொடுப்பாங்க? உன் நட்சத்திரம் என்ன, ராசி என்ன?-ன்னு ஆயிரம் கேள்வி. எல்லாம் ஒத்துப்போன அப்புறமும், 'மாப்ளை வீடு' பார்க்கிறதுன்னு ஒரு சம்பிரதாயம். ஒரு 50 பேரு கிளம்பி வந்து மாப்ளை வீடு நல்ல வீடு தானான்னு சுவரையெல்லாம் தட்டிப்பார்த்தீங்களேய்யா? பக்கத்து வீட்டு ஆண்ட்டிககிட்டயெல்லாம் மாப்ளை தங்கம் தானான்னு என்ன ஒரு விசாரணை?

ஒழுங்காப் படிச்சு, உருப்படியான வேலைல இருக்கிறவனுக்கு இந்தப் பாடு..ஆனா நிரந்தரமா ஒரு வேலை/வருமானம் இல்லாத மனுசனை நம்பி ஒன்னு, ரெண்டு இல்லை...பதினைஞ்சு பொண்ணுங்க வந்திருக்குங்க..நாம் மனசு நொந்து யோசிச்சுக்கிட்டிருக்கும்ப்போதே அவரு சர்வ் பண்ண வந்தாரு.

மச்சினன் ஆரம்பிச்சான்,"என்னச்சு மாமா...14வதும் ஓடிடுச்சா?"

"ஆமா மாப்ள..நாமளும் பிடிச்சுப் பிடிச்சுத்தான் வக்கிறோம்..ஒன்னும் நிக்க மாட்டேங்குதுகளே..ஆனா அதுக்காக நாம மனசு விட்டுடலாமா? நம்ம கடமையை நாம செய்யணும்ல மாப்ளே?"-ன்னு பதிலுக்கு அவரு கேட்டாரு.

நல்ல ஆளுங்கய்யா-ன்னு நினைச்சுக்கிட்டு "அண்ணாச்சி, அடுத்த தடவை கல்யாணம் பண்ணும்போதே 'ஓடிப்போனா ஒரு லட்சம் கொடுத்துட்டு ஓடணும்'னு அக்ரிமெண்ட் போட்டுக்கோங்க..முதல்லயே போட்டிருந்தா லட்சாதிபதி ஆகியிரக்கலாம்ல?"ன்னு மனசு வெறுத்து அட்வைஸ் பண்ணிட்டுக் கிளம்புனேன்.

என்ன கொடுமை பாருங்கய்யா...பொண்ணுங்க எப்படித்தான் இந்த மாதிரி ஆளுகளாப் பார்த்து விழுறாங்களோ?...ஹூம்...நமக்கில்லே, நமக்கில்லே...சொக்கா!

ஸ்பெஷல் ஸ்டில்:
ரொம்ப மனசு நொந்துபோயி, மறுபடியும் நமீகிட்டயே சரணடைவோம்னு பார்த்தா, நமீ மூணு மடங்கு பெருத்துப்போயி நிக்குது..முன்னாடில்லாம் நமியோட முழு ஸ்டில்லே போட முடியும். இப்போப் பாருங்க, கால்வாசி உடம்பைக்கூட ஸ்டில்லுல அடக்க முடியலை..இதுக்காக 70எம்எம் ஸ்க்ரீன்லயா பதிவெழுத முடியும்?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

60 comments:

 1. அந்தாளு காளை மாட்டிலேயே கால்படி பால் கறப்பாரே?’ஹி ஹி ஹி
  நினைச்சேன் சிரிப்பு சிரிப்பா வருது

  ReplyDelete
 2. ஹா...ஹா... அதானே...! இப்படி செய்யலாமா ஹன்சி...? நியாயமே இல்லை...!@

  ReplyDelete
 3. ஹன்சிகா என்ன இருந்தாலும் இப்படி செய்யக்கூடாது... நமக்கேன்ன, ஹன்சிகா இல்லேன்னா நஸ்ரியா...

  ReplyDelete
 4. மாமா... நீ இவ்வளவு மனவருத்தத்தோட வருவீன்னு யோசிக்கல... ஆனாலும் வா மாமா.

  ///கல்யாணம் பண்ற வயசாம்மா இது?..கமலா காமேஷே இன்னும் கல்யாணத்தைப் பத்தி நினைக்கதப்போ, பச்ச மண்ணு..உனக்கென்னம்மா அவசரம்?///

  மாமா... உன்கிட்ட அந்த பழைய வேகம் இருக்கிது எண்ணத இந்த வரிகளே சொல்லிடுச்சு. நீ எங்கிட்டு சுத்தினாலும் கமலா ஆண்டிய மறக்கல்ல பாரு... நீ மனுஷனய்யா.

  ///‘மச்சான்..மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..தைரியமாப் பாரு’ன்னு ஆறுதல் சொன்னாம்மா..இதோ, இப்பத்தான் அந்தப் படத்த டவுன்லோடி வச்சிருக்கேன். அதுக்குள்ள இடி மாதிரி இப்படி ஒரு நியூஸ்.///

  எங்க மாமா நீயி இப்பிடியான உதாரணமெல்லாம் பிடிக்கிற.”மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..” எவ்வளவு அர்த்தபூர்வமான புஸ்ஸ்ஸ்ஸ்டியான வசனம் இது. என்னமோ போ மாமா எங்களுக்கு இப்பிடியெல்லாம் தோணாது. அதுக்குத்தான் நீ வேணுங்கிறது.

  -வாங்க செஙகோவி... திருப்பவும் அடித்து ஆடுங்க.....

  காத்திருக்கிறேன்
  இங்கிட்டு மருதமூரான்.

  ReplyDelete
 5. வரிக்கு வரி ஹன்சிகாவைப் புகழ்ற நீங்க இப்படி தாளிச்சிப்புட்டிங்களே...

  கமலாகாமேஷ் (திரிஷா) ஹா... ஹா... உங்க ஆதங்கம் புரியுது...

  சரி விடுங்க.... ஹன்சி போனா அடுத்து ஒண்ணு வராமயா போகப்போகுது,...

  நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை. அடிச்சு ஆடுங்க நண்பா.

  ReplyDelete
 6. சரி... நமீ ஸ்டில்லுகுள்ள அடங்கல.. ஒத்துக்கிறேன் . அதுக்கு முகத்தையோ, காதையோ, கண்ணையோ காட்டவேண்டியதுதானே... உம்ம குசும்பு தாங்கலையா...

  ReplyDelete
 7. வருக,வருக,உங்கள் மீள் வருகைக்கு நன்றி!///சோகத்துலையும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது!!!//// 'ஜஸ்ட் ட்வென்ட்டி பைஃவ் தவுசண்ட் தாம்மா'!!!!!!!????????////தந்தனத்தானே......னா....னா....!!!!

  ReplyDelete
 8. /////25ஆ..அதுவும் ஒரு கிராமத்துல.........கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?/////

  அடங்கொன்னியா 3 வேளையும் மட்டன், சிக்கனா உள்ள தள்ளி இருக்கீரு போல.....?

  ReplyDelete
 9. ///அந்தம்மா பாபா/முதல்வன் படத்துல நடிச்சப்பவே ஏதோ பயங்கர வியாதிக்கு ஆளான மாதிரி தான் இருந்துச்சு..////

  அது அந்தம்மா ஓவரா சேவை செஞ்சி எளைச்சி போச்சுன்னு தப்பா நெனச்சிருப்பாங்கய்யா.....

  ReplyDelete
 10. /////‘சிம்புவை லவ் பண்றேன்’ன்னு சொன்னது கூடப் பரவாயில்லை. ஆனா ‘இது பெர்சனல் மேட்டர்’னு சொன்னதைத் தான் தாங்க முடியலை. /////

  யோவ் யோவ் அப்புறம் அவங்க மெரினா பீச்ல கேமரா செட் பண்ணி வெச்சிக்கிட்டாயா லவ் பண்ண முடியும்?

  ReplyDelete
 11. ////.கமலா காமேஷே இன்னும் கல்யாணத்தைப் பத்தி நினைக்கதப்போ, பச்ச மண்ணு..உனக்கென்னம்மா அவசரம்?/////

  கமலா காமேஷ் நெலமைய பாத்துதான் இப்படி முடிவே பண்ணி இருக்கும்....

  ReplyDelete
 12. ///// ‘மச்சான்..மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..தைரியமாப் பாரு’ன்னு ஆறுதல் சொன்னாம்மா../////

  இந்த பழமொழி கமலா காமேசுக்கு மட்டும் அப்ளை ஆகாது, ஞாபகம் இருக்கட்டும்......!

  ReplyDelete
 13. ////ஆனா நிரந்தரமா ஒரு வேலை/வருமானம் இல்லாத மனுசனை நம்பி ஒன்னு, ரெண்டு இல்லை...பதினைஞ்சு பொண்ணுங்க வந்திருக்குங்க..////

  பொண்ணுங்களோட திங்கிங்க் கெப்பாசிட்டி அப்படிண்ணே....

  ReplyDelete
 14. ///நமீ மூணு மடங்கு பெருத்துப்போயி நிக்குது../////

  என்னது நிக்குதா, அதான் போட்டோவா பாத்தாவே தெரியுதே....? பிகினில பாக்க ஆசையா இருந்தா வீட்டுக்கு வாங்கன்னு வீட்டு அட்ரஸ் கொடுத்து வரச்சொல்லி இருக்காம்யா நமீ.... மும்பைக்கு எப்ப டிக்கட் போடுறீர்?

  ReplyDelete
 15. கமலா காமேக்ஷுக்கு கல்யாணமாச்சானு தெரியல! ஆனா பொண்ணு ஒன்னு இருக்கு.பேரு உமா ரியாஸ்.

  ReplyDelete
 16. வாங்கண்ணே வேற ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.

  ReplyDelete
 17. ///// கோகுல் said...
  வாங்கண்ணே வேற ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.////

  அதுக்குத்தான் அந்த படமே போட்டிருக்காரு, பர்ஸ்ட் படம்

  ReplyDelete
 18. //நெற்கொழுதாசன் said...
  அந்தாளு காளை மாட்டிலேயே கால்படி பால் கறப்பாரே?’ஹி ஹி ஹி
  நினைச்சேன் சிரிப்பு சிரிப்பா வருது //

  நன்றி..நல்ல பெயர் உங்களுக்கு.

  ReplyDelete
 19. //திண்டுக்கல் தனபாலன் said...
  ஹா...ஹா... அதானே...! இப்படி செய்யலாமா ஹன்சி...? //

  எப்படி வேணா செய்யட்டும்..ஆனா, அதை வெளில சொல்லலாமா?

  ReplyDelete
 20. //ஸ்கூல் பையன் said...
  நமக்கேன்ன, ஹன்சிகா இல்லேன்னா நஸ்ரியா...//

  இது தான் பாசிடிவ் திங்க்கிங்கா?

  ReplyDelete
 21. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  ஹா ஹா //

  எவ்ளோ பெரிய கமெண்ட்டு...பிஸியா இருக்காராம்!!

  ReplyDelete
 22. //Purujoththaman Thangamayl said...

  மாமா... உன்கிட்ட அந்த பழைய வேகம் இருக்கிது எண்ணத இந்த வரிகளே சொல்லிடுச்சு. நீ எங்கிட்டு சுத்தினாலும் கமலா ஆண்டிய மறக்கல்ல பாரு... நீ மனுஷனய்யா..//

  அதை மறக்க்க்க மு...டி...யு..மா?

  ReplyDelete
 23. //சே. குமார் said...

  நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை. அடிச்சு ஆடுங்க நண்பா.//

  நன்றி குமார்..நீங்களும் பட்டையை கிளப்புற மாதிரித் தெரியுது..!

  ReplyDelete
 24. //Manimaran said...
  சரி... நமீ ஸ்டில்லுகுள்ள அடங்கல.. ஒத்துக்கிறேன் . அதுக்கு முகத்தையோ, காதையோ, கண்ணையோ காட்டவேண்டியதுதானே...//

  அப்புறம் அடையாளம் தெரியாதுல்ல....? அதான்!

  ReplyDelete
 25. //Subramaniam Yogarasa said...
  வருக,வருக,உங்கள் மீள் வருகைக்கு நன்றி.//

  வரவேற்புக்கு நன்றி ஐயா..உங்க கமெண்ட்டைக் காணோமேன்னு டவுட்டாகி ஸ்பேம்ல பார்த்தா......அவ்வ்!..வழக்கம் போல அங்க பம்மிக்கிட்டு இருக்கு.

  ReplyDelete
 26. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //அடங்கொன்னியா 3 வேளையும் மட்டன், சிக்கனா உள்ள தள்ளி இருக்கீரு போல.....?//

  சாரிண்ணே..ஞாபகம் இல்லை.

  //அது அந்தம்மா ஓவரா சேவை செஞ்சி எளைச்சி போச்சுன்னு தப்பா நெனச்சிருப்பாங்கய்யா.....//

  யோவ், நீரு அப்படி கேவலமா நினைச்சுட்டு, பழியை டாக்டருக மேல போடுதீரா?

  //யோவ் யோவ் அப்புறம் அவங்க மெரினா பீச்ல கேமரா செட் பண்ணி வெச்சிக்கிட்டாயா லவ் பண்ண முடியும்?//

  கொஞ்ச நாள்ல பாருங்க..சிம்பு ஒரு கிஸ் ஸ்டில்லை ரிலீஸ் பண்ணுவாரு..!

  //கமலா காமேஷ் நெலமைய பாத்துதான் இப்படி முடிவே பண்ணி இருக்கும்....//

  முதிர் கன்னிக்கும் முளைச்சு மூணு இலை விடாத கன்னிக்கும் வித்தியாசம் இல்லையாண்ணே?

  July 29, 2013 at 11:41 AM
  //இந்த பழமொழி கமலா காமேசுக்கு மட்டும் அப்ளை ஆகாது, ஞாபகம் இருக்கட்டும்......!//

  அப்படியா சொல்றீங்க..?

  //பொண்ணுங்களோட திங்கிங்க் கெப்பாசிட்டி அப்படிண்ணே....//

  என்ன கெப்பாகுட்டியோ...முடியலை!

  // பிகினில பாக்க ஆசையா இருந்தா வீட்டுக்கு வாங்கன்னு வீட்டு அட்ரஸ் கொடுத்து வரச்சொல்லி இருக்காம்யா நமீ.... மும்பைக்கு எப்ப டிக்கட் போடுறீர்?//

  எனக்கு அந்தளவுக்கெல்லாம் தைரியம் இல்லைய்யா..ஆமா, நமீ இடத்துக்கு அடுத்து யாரும் வரலையே, ஏண்ணே? இதைப் பத்தி ஒரு ஆய்வுக்கட்டுரை போடுங்களேன்!

  ReplyDelete
 27. //tamilspider said...
  கமலா காமேக்ஷுக்கு கல்யாணமாச்சானு தெரியல! ஆனா பொண்ணு ஒன்னு இருக்கு.பேரு உமா ரியாஸ்.//

  யார் இந்தக் குழந்தை?

  ReplyDelete

 28. //கோகுல் said...
  வாங்கண்ணே வேற ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.//

  எவ்ளோ லேசாச் சொல்லிப்புட்டீங்க கோக்குல்...கோக்குல்!

  ReplyDelete
 29. இவ்வளவு நாள் தவிக்க வச்சிட்டிங்க தல , இனிமேயாவது தொடர்ந்து எழுதுங்க . நஸ்ரியா நச்.நமீதா இச் .மனிஷா மச்.ஹன்ஷிகா ஹச்

  ReplyDelete
 30. Avani Shiva said...

  //இவ்வளவு நாள் தவிக்க வச்சிட்டிங்க தல , இனிமேயாவது தொடர்ந்து எழுதுங்க .//

  கண்டிப்பாக எழுதுகிறேன் சிவா.

  // நஸ்ரியா நச்.நமீதா இச் .மனிஷா மச்.ஹன்ஷிகா ஹச் //

  அய்யய்யோ..இந்தாளை யாராவது பிடிங்கய்யா..அடுத்து நம்ம மேலயும் பாய்ஞ்சிருவாரு போல!

  ReplyDelete
 31. வணக்கம். நீங்க விடுமுறைல போகும் போது எழுதின கடைசி பதிவு எல்போ எனப்படும் இணைப்பானைப் பற்றி.... இப்ப விடுமுறைக்கு பிறகு முதல் பதிவும் " இணைப்பை பற்றி ".

  எப்படி ...தானா அமையுதா ....இல்ல ...

  ReplyDelete
 32. சிரிச்சுசிரிச்சு வயிறு புண்ணா போயிருச்சு! அந்தாளு காளை மாட்டிலேயே கால்படி கறப்பாரேயும் நமிதா ஸ்டில் விளக்கமும் படிச்சு! குஷியோடு திரும்பி வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. சிரிச்சுசிரிச்சு வயிறு புண்ணா போயிருச்சு! அந்தாளு காளை மாட்டிலேயே கால்படி கறப்பாரேயும் நமிதா ஸ்டில் விளக்கமும் படிச்சு! குஷியோடு திரும்பி வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. வாருங்கள வாருங்கள்

  ReplyDelete
 35. போன மாசம் இந்தியாவில் விடுமுறையை நான் எஞ்சாய் பண்ணியதில், என் மாமனார் டவுசரும் என் மகனின் தாய்மாமன் டவுசரும் கிழிஞ்சதாக தகவல் கிடைச்சிருக்கு!////

  யோவ் மாம்ஸ்....
  ரெண்டு பேரோட டவுசரை அவுத்து கிழிச்சு விட்டுட்டு, இங்க வந்து மாமா டவுசர் கழண்டுச்சே-ன்னு பாட்டு.... ம்ம்ம்ம்....

  ReplyDelete
 36. இனிமேலாவது சமூகப் பொறுப்புணர்வோட படம் பாருங்கய்யா.///

  ஆமா டாக்டரே... நமீதா போட்டோ சைஸுக்கு இல்லைங்கறது உங்க கண்ணுக்கு தெரியலையா???

  ReplyDelete
 37. நான் அப்படி என்னம்மா பெருசா தப்பு பண்ணிட்டேன்?..////

  பெருசா பக்கத்துல ஒரு ஆச்சர்யக்குறி போட்டிருக்கணும் மாம்ஸ்...

  ReplyDelete
 38. அப்போ இத்தனை நாள் ஹன்ஸி மன்றத்தை உரம் போட்டு, தண்ணி ஊத்தி வளர்த்த நாங்கெல்லாம் என்ன இனாவானாவா?///

  ஷேம் பீலிங் மாம்ஸ்....

  ReplyDelete
 39. சிம்பு கூட ஹன்சி நடிக்கப்போதுன்னு தெரிஞ்சப்பவே சொன்னேன் ‘அந்தாளு காளை மாட்டிலேயே கால்படி பால் கறப்பாரே?’ன்னு..சொன்னபடியே ஆயிடுச்சே..ச்சே..ச்சே!////

  மாம்ஸ், இப்படியா டபுள் மீனிங்??????

  ReplyDelete
 40. நமீ மூணு மடங்கு பெருத்துப்போயி நிக்குது..முன்னாடில்லாம் நமியோட முழு ஸ்டில்லே போட முடியும்.///

  எப்படியா மூணு மடங்குன்னு மெஷர் பண்ணுனிங்க????

  ReplyDelete
 41. செங்கோவி said... [Reply]//Subramaniam Yogarasa said...வருக,வருக,உங்கள் மீள் வருகைக்கு நன்றி.//வரவேற்புக்கு நன்றி ஐயா..உங்க கமெண்ட்டைக் காணோமேன்னு டவுட்டாகி ஸ்பேம்ல பார்த்தா......அவ்வ்!..வழக்கம் போல அங்க பம்மிக்கிட்டு இருக்கு.July 29, 2013 at 12:22 பம்.////நமக்கு மட்டும் தான் இப்புடி ஆவுது,ஹூம்!!!

  ReplyDelete
 42. ஏன் செங்கோவி....இப்ப வர புள்ளங்க எல்லாம் கொஞ்ச நாள்ல நம்மளை தவியா தவிக்க விடுதுங்களே....பேசாம நாம EVER GREEN SUPER STAR பத்மினிக்கு நிரந்தரமா ரசிகர் மன்றம் அமைத்து நிரந்தரமா கொண்டாடுவோமே...பரிசீலிக்கவும்...

  அதுவும் இல்லாட்டி நம்ம ஸ்ரீதேவி....???

  யாரையாவது சட்டு"புட்டு"ன்னு முடிவு பண்ணுங்கப்பா ....

  ReplyDelete
 43. ஒழுங்காப் படிச்சு, உருப்படியான வேலைல இருக்கிறவனுக்கு இந்தப் பாடு///////////////


  ஏன்யா....ஏன்....வேணும்முனா நேர்ல வந்து கரைச்சி அடி...அதுக்குன்னு இப்படியா மானத்த வாங்குவீர்...????

  ReplyDelete
 44. கல்யாணம் பண்ற வயசாம்மா இது?..கமலா காமேஷே இன்னும் கல்யாணத்தைப் பத்தி நினைக்கதப்போ, பச்ச மண்ணு..உனக்கென்னம்மா அவசரம்?///////////////

  நீர் அந்த கலரையும் பார்த்துட்டீரா....???? நடத்துங்கையா....!!

  ReplyDelete
 45. அந்தம்மா பாபா/முதல்வன் படத்துல நடிச்சப்பவே ஏதோ பயங்கர வியாதிக்கு ஆளான மாதிரி தான் இருந்துச்சு//////////////

  மும்பை படத்துல பாட்டுல ஓடி வர்ற சீன்-ல தெரியலையா....??? அது சரி அவங்களை உத்து கவனிக்காவேண்டிய இடத்துல{முகம்..} கவனிக்காம வேற இடத்துல பராக்கு பார்த்தா...????

  ReplyDelete
 46. எனக்கு என்னமோ நமீதா போட்டிருக்குற தோடுதான் பெரிசா இருக்குற மாதிரி தெரியுது....

  YOU ALL BAD BOYS...


  WHY...HANSI இல்லாட்டி மீண்டும் நமி பாசறையை திறக்க கூடாது...????

  ReplyDelete
 47. வாங்க வந்தவுடன் அதுவும் ஹான்சிஹா பாட்டியா:)))

  ReplyDelete
 48. பாவம் நம்ம கரகாட்டக்காரன் கனஹாவுக்கும் புற்றுநோய் என்று பிரகாஸ் அண்ணாச்சி சொன்னதில் இருந்து மனசு வேட்டியும் சால்வையும் பறக்குது மாமானார் மனசு போல ஹீ செலவு செய்து எத்தனை படம் பார்த்த்தோம்:))

  ReplyDelete
 49. என்ன்ன்ன் சிம்பு மட்டும் நல்ல மனிசன் இல்லையா :))) நல்ல பையன் தானே !

  ReplyDelete
 50. நமீத்தா பாட்டி தான் போங்க சங்கத்தைக்கலைத்துவிட்டு:)))

  ReplyDelete
 51. நீண்டநாட்களின் பின் ஒரு பால்க்கோப்பி தாங்க சந்தோஸமாக குடித்திட்டு இடத்தைக்காலி பாண்ணுவம்:)))

  ReplyDelete
 52. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாவுல வருவோம்.Fast ஆ வந்தாலும் Firstவுல வருவோம்.
  சூப்பா் கமெண்ட்.தங்களது வருகை பதிவுலகத்தையே கலக்குதல்ல.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 53. welcome backkkkkkkkk............

  ReplyDelete
 54. மருத்துவம் படிக்காத நமக்கே, அந்தம்மா 'பா...பா'ன்னு ஆடறதைப் பார்த்து மைல்டா டவுட் வரும்போது, இந்த டாக்டர்களுக்கு கன்பாஃர்மா தெரிஞ்சிருக்க வேண்டாம்? இனிமேலாவது சமூகப் பொறுப்புணர்வோட படம் பாருங்கய்யா.

  படிக்கும்போதே மனதினுள் சிரிக்க வைக்கும் எழுத்து நடை .(வழக்கமாய் )
  மகிழ்ச்சி நண்பரே .

  ஆங்..கேட்க மறந்துட்டேன். நலமா நண்பரே ?

  ReplyDelete
 55. உங்களுக்கு வரவேற்ப்பு சொல்றதா ஆறுதல் சொல்றதான்னு ஒரு கண்பியுஷன். என்னன்னே பண்றது, எல்லாம் விதி.

  ReplyDelete
 56. ஹன்ஸி போனா என்ன?3 ஷா இல்லை?!

  ReplyDelete
 57. வரவேற்பு கொடுத்த அனைத்து பழைய நண்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 58. //சென்னை பித்தன் said...

  ஹன்ஸி போனா என்ன?3 ஷா இல்லை?!//

  நற...நற!

  ReplyDelete
 59. //
  Blogger M.R said...//

  நண்பரே..நலம் தானே? நீண்ட நாட்கள் கழித்து உங்கள் கமெண்ட் பார்த்ததில் சந்தோசம்..

  வருத்தங்கள் நீங்கி, மீண்டும் பதிவுலகிற்கு வாருங்களேன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.