Saturday, December 21, 2013

யாரைத் தான் நம்புவதோ...(நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
யாரைத் தான் நம்புவதோ
பேதை நெஞ்சம்
அம்மம்மா - பூமியிலே
யாவும் வஞ்சம்!

 பதிவர் புலம்பல்:
ஒரு பதிவர் என்கிட்ட ‘ஏம்யா 2013 மொக்கைப்படம், ஹிட் படம்னு ஒரு மாசமா பதிவாப் போட்டுக் கொல்றியே..2013-யாரு யாரை வச்சிருந்தாங்கன்னு ஒரு பதிவு போட வேண்டியது தானே?’ன்னு கேட்டாரு. நமக்கு பக்-ன்னு ஆகிட்டாலும் ‘ஏன் பாஸ்..நீங்களே அந்த நல்ல பதிவை போடலாமே?’ன்னு கேட்டேன். ‘ஹி..ஹி..வீட்ல என் சொம்பை நசுக்கிடுவாங்கல்ல’ன்னு மைண்ட் வாய்ஸ்ல பதில் சொல்றாரு..அடப்பாவிகளா..அப்போ என்னை மட்டும் என்ன அடி வாங்கறதுக்குன்னே கட்டிக்கொடுத்திருக்காங்களா? போங்கய்யா!

ஃபேஸ்புக் புலம்பல்:
என்னோட வேலை எப்படீன்னா சில நேரம் ரொம்ப ஃப்ரீயா இருக்கும்..சில நேரம் பயங்கர டைட் ஆகிடும்..இது என் பழைய நண்பர்களுக்கு தெரியும். ஆனா ஃபேஸ்புக்ல ஃப்ரீயா இருக்கும்போது லைக்கிட்டு, அப்புறம் காணாமப்போனா சிலபேரு பதறுதாங்க..நாம போட்ட ஸ்டேடஸ் பிடிக்கலியோ, எதிர்குரூப்ல(இது வேற!) சேர்ந்துட்டாரோ, அய்யய்யோ இன்னைக்கு 50 லைக் குறைஞ்சிட்டா சோறு கிடைக்காதேங்கிற ரேஞ்சுக்கு பயப்படுறாங்க. அய்யா ராசாக்களே, நான் நிரந்தர வாடிக்கையாளன் அல்ல,,ஜஸ்ட் ஒரு வழிப்போக்கன்..ஃப்ரீயா இருந்தா கண்டிப்பா வருவேன்..புரிஞ்சுக்கோங்கய்யா!

அறிவி(ய)ப்பு:
வெட்டி பிளாக்கர்ஸ் குழுமம் பதிவர்களுக்கான சிறுகதைப்போட்டி நடத்திக்கிட்டு வருது. டீடெய்ல் இங்க இருக்கு.  இந்த மாசம் 25ம் தேதி வரை கதைகளை அனுப்பலாம். இந்த போட்டில நடுவரா இருக்க முடியுமான்னு நண்பர்கள் கேட்டாங்க. சந்தோசமா ஒத்துக்கிட்டேன். ஏன்னா கதை எழுதறவங்களுக்கே 5000 ரூபா பரிசு கொடுக்காங்கன்னா, நடுவர்க்கு எவ்வ்வ்ளோ கொடுப்பாங்க?..ம்!

சங்கே முழங்கு:
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு சோனியா அழைப்பு - என்ற செய்தியைப் படித்ததும் 'சொந்தக்காரங்க எல்லாரும் வந்தாச்சு...பாடியை எடுக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா'ன்னு சொல்ற மாதிரியே எனக்குத் தெரியுதே..இது எனக்கு மட்டும் தானா?

ஹா..ங்:
விகடன் ஆன்லைன்ல படிக்க சந்தா கட்டி இருக்கமேன்னு ஒரு விகடன் விடாம ஆ.வி,ஜீ.வி, நா.வி, அவள் விகடன்னு எல்லா இதழ்களையும் படிக்க ஆரம்பிச்சேன். இப்போ என்னடான்னா அவள் விகடனை ஒரு வாரம் படிக்கலேன்னாக்கூட என்னமோ மாதிரி இருக்கு.அய்யய்யோ, அப்போ நான் வேற மாதிரி மாறிக்கிட்டு வர்றேனா?

யோக பலன்:
நம்ம பையன் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியக்காரர், ராமர் மாதிரி வருவான்னு சொல்லிட்டாராம். அதுக்கான அறிகுறி எதுவும் அவன்கிட்ட தெரியலைன்னாலும், நான் ரொம்ப ஹேப்பி..ஏன்னா பையன் ராமர் மாதிரின்னா, நான் தசரதன் மாதிரில்ல ஆவேன்.

தசரத மஹா சக்கரவர்த்திக்கு அறுபதாயிரம் மனைவியாம். நாம இன்னும் 60 வருசம் ஆக்டிவ்வா இருப்போம்னு வச்சுக்கிட்டா, வருசம் ஆயிரம் வருது..அடேங்கப்பா, இது போதுமே..அப்போ ஆயிரம் டிவைடட் பை 365 இஸ் ஈகுவல் டூ 2.7..மூணுன்னு வச்சிக்கலாமா..சம உரிமை கொடுக்கிறது தான் நியாயம்..அப்போ காலை-மதியம்-நைட்டுன்னு வச்சுக்கலாம்.மதியம்னா ஆபீஸ்ல பெர்மிசன் வேற கேக்கணுமா..அடடா!..என்னமோய்யா, எல்லாம் நல்லபடியா நடந்தாச் சரி.

பேதை நெஞ்சம்:
போன வார பதிவுல ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன். ரிசல்ட்டே சொல்லலைன்னு உங்ககிட்ட புலம்புனேன் இல்லியா? அதே மாதிரி கூட வேலை செய்யிற ஒரு நண்பர்கிட்டயும் புலம்புனேன். ‘என்ன கம்பெனி?’ன்னு கேட்டாரு. ‘ABC கம்பெனி’ன்னு சொன்னேன். ‘அவங்களா..அவங்க எப்பவும் ஸ்லோ தான்..நீ ஒன்னியும் கவலைப்படாத..கண்டிப்பா உன்னை கூப்பிடுவாங்க..உனக்கென்ன அறிவு இல்லையா..அழ்.ச்சே, திறமை இல்லியா? உன்னை எடுக்காம வேற யாரை எடுக்கப்போறாங்க?’ன்னு ஆறுதல் சொன்னாரு.

ஆனாலும் மனசு ஆறாம ‘எப்போ ஜாயின் பண்ணுவேன்னு கேட்டதுக்கு மூணு மாசம் கழிச்சுத்தான் ஜாயின் பண்ண முடியும்னு சொன்னேன்.ஒருவேளை அதனால என்னை விட்டுட்டாங்களா?..எப்போக் கேட்டாலும் வெயிட் பண்ணுன்னே சொல்றாங்களே’ன்னு கேட்டேன். ‘அப்படில்லாம் இருக்காது...வந்திரும்’ன்னாரு. இவ்வளவு நல்ல மனுசனான்னு நான் ஃபீல் பண்ண அடுத்த நாளே..........

அந்தாளு அந்த ABC கம்பெனிக்கு போயிருக்காரு. போய் ஹெச்.ஆர் மேனேஜரை பார்த்திருக்காரு. ’சார்..இங்க ஒரு வேகன்சி இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதான் ரெசியூம் கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்’ன்னு சொல்லியிருக்காரு. அந்த ஹெ.ஆர். மேனஜர், ‘இப்போ எதுவும் ஓப்பனிங் இல்லை..இருந்த வேகன்சிக்கெல்லாம் ஏற்கனவே ஆள் எடுத்தாச்சு..போ’ன்னு விரட்டியிருக்காரு.
ஆனாலும் நம்மாளு விடலை. ‘சார்..என்னால ஒரே மாசத்துல ஜாயின் பண்ண முடியும் சார்..அந்த வேலைக்கு நான் பொருத்தமா இருப்பேன் சார்..இதே மாதிரி புராஜக்ட் நான் ஏற்கனவே பண்ணியிருக்கேன் சார்.’ன்னு ஆரம்பிச்சு பத்து நிமிசம் மூச்சு விடாம பேசியிருக்காரு. அந்த ஹெச்.ஆர் கடுப்பாகி ‘சொன்னா புரியாதா உனக்கு?..ஒழுங்கா ஓடிடு’ன்னு விரட்டி விட்டுட்டாராம். இதை பார்த்துட்டு இருந்த அங்க வேலை பார்க்கிற நண்பர் கூப்பிட்டுச் சொன்னாரு.

அடப்பாவிகளா..இப்படியுமாடா பண்ணுவீங்க..உன்னையும் மனுசன்னு நினைச்சுத்தானே சொன்னேன்..இந்த மாதிரில்லாம் பண்ணா, சக மனுசங்க மேலயே நம்பிக்கை போயிடாது? கொஞ்சமாவது மனசாட்சியோட நடங்கப்பா! அதுசரி, அந்த ஹெச்.ஆர் ஏன் அவ்ளோ காண்டானாரு? அவருக்கு என்னை அவ்ளோ பிடிக்குமான்னு நீங்க யோசிக்கலாம். ஆக்சுவலா அந்த ஹெச்.ஆர்.மேனேஜரை எனக்குத் தெரியாது..அட, அவரு பேருகூடத் தெரியாது..அவ்ளோ ஏன், அந்த ABC கம்பெனி ஆபீஸ் எங்க இருக்குன்னுகூட எனக்குத் தெரியாதுய்யா..அப்படீன்னா?


ஆக்சுவலா நான் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணது XXX கம்பெனில..சும்மா அந்த பக்கிகிட்ட ABC-ன்னு சொன்னேன்..அது நேரா ABCக்குப் போய் அசிங்கப்பட்டு வந்திருக்கு.

தம்பி, நாங்கல்லாம் பார்க்கத்தான் ’அப்படி’ இருப்போம்..கோவில்பட்டில இருந்து குவைத்வரைக்கும் வந்து சேர்ந்திருக்கோம்னா, உன்னை மாதிரி எத்தனை மொள்ளைமாரிங்களைப் பார்த்திருப்போம். எத்தனை முடிச்சவிக்கித்தனம் நாங்களே பண்ணியிருப்போம்..எங்க கிட்டயேவா?..போப்பா, போயி பால் குடிச்சுட்டு தூங்கு!

அறிமுகம்:

கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய குறும்படம்:
எழுத்துப்பிழை : http://www.youtube.com/watch?v=h6DXIUY5sTI
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

 1. கதை எழுதறவங்களுக்கே 5000 ரூபா பரிசு கொடுக்காங்கன்னா, நடுவர்க்கு எவ்வ்வ்ளோ கொடுப்பாங்க?..ம்!////5000 ரூபாவுக்கு நடுவுல இருக்கிறது(00)கொடுப்பாங்க!ரொம்ப நாள் ஆச்சேன்னு............மூச்சு விடாம(!)படிச்சுட்டேன்!///எல்லாம் சரிங்க......................பால் இல்லேன்னா?

  ReplyDelete
 2. அறுபதாயிரம்???????????

  ReplyDelete
 3. //ஏன்னா பையன் ராமர் மாதிரின்னா, நான் தசரதன் மாதிரில்ல ஆவேன்//பையன் இலங்கைக்கு போனாலும் பரவாயில்ல ஒனக்கு அறுபதாயிரம் பொண்டாட்டி வேணும்னு நெனக்கியே நீயெல்லாம் ...

  ReplyDelete
 4. அந்த மாதிரி பல பேர் இருக்காங்கண்ணே.. ஏதோ நமக்கு உதவி செய்ற மாதிரியே, நம்மகிட்ட இருத்து விஷயங்கள எடுத்துகிட்டு, நம்மளுக்கே ஆப்பு வப்பானுக!

  பட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! ABC XXX!

  ReplyDelete
 5. @கோகுல் பின்ன வாராணம் ஆயிரம்னா சொன்னாரு!

  ReplyDelete
 6. Subramaniam Yogarasa said...
  //5000 ரூபாவுக்கு நடுவுல இருக்கிறது(00)கொடுப்பாங்க!//

  முட்டை விலை வேற ஏறிப்போச்சு..கொடுத்தா நல்லது தான் ஐயா.

  //எல்லாம் சரிங்க......................பால் இல்லேன்னா?//

  கடைக்குப் போய் வாங்க வேண்டியது தான்.

  ReplyDelete
 7. //கோகுல்said...
  அறுபதாயிரம்???????????//

  ஆமாம்யா..இலக்கியச்சுவைக்காக அப்படிச் சொன்னாங்களான்னு தெரியலை!

  ReplyDelete
 8. // சேக்காளிsaid...
  பையன் இலங்கைக்கு போனாலும் பரவாயில்ல ஒனக்கு அறுபதாயிரம் பொண்டாட்டி வேணும்னு நெனக்கியே நீயெல்லாம் ...//

  இலங்கைல நமக்கு வேண்டப்பட்டவங்க நிறைய இருக்காங்கய்யா..பார்த்துப்பாங்க.

  ReplyDelete
 9. மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  //அந்த மாதிரி பல பேர் இருக்காங்கண்ணே.. ஏதோ நமக்கு உதவி செய்ற மாதிரியே, நம்மகிட்ட இருத்து விஷயங்கள எடுத்துகிட்டு, நம்மளுக்கே ஆப்பு வப்பானுக! //

  ஆமாம்யா..செய்யறதையும் செஞ்சுட்டு, ஒன்னுமே நடக்காத மாதிரி மெயின்டய்ன் செய்றாங்களேய்யா!

  //பட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! ABC XXX! //

  ஹி..ஹி..நம்ம பொழப்பே அப்படித்தானே ஓடுது!

  //@கோகுல் பின்ன வாராணம் ஆயிரம்னா சொன்னாரு!
  //

  வாரணம் மாதிரிக்கூட இருந்திருக்கலாம்..யார் கண்டது!

  ReplyDelete
 10. ஒரு பதிவர் என்கிட்ட ‘ஏம்யா 2013 மொக்கைப்படம், ஹிட் படம்னு ஒரு மாசமா பதிவாப் போட்டுக் கொல்றியே..2013-யாரு யாரை வச்சிருந்தாங்கன்னு ஒரு பதிவு போட வேண்டியது தானே?’ன்னு கேட்டாரு.////

  தம்பி.. இன்னும் டீ வரல....
  அட, இன்னும் அந்த பதிவு வரலைன்னு சொன்னேன்....

  ReplyDelete
 11. இப்படி புலம்புவது தகுமோ??? பேஸ்புக் இப்ப பலர் குடித்தனம் என்று நினைக்கினம் நானும் ஒரு வழிப்போக்கன் போலத்தான் பார்பதுடன் சரி!

  ReplyDelete
 12. ஹான்சிஹாவை மட்டும் நம்புவதில்லை:)) சிம்புவையும் சாமியார் ஆக்குவார் போல:))

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.