Friday, January 17, 2014

வீரம் ஜில்லாவான கதை...( நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

கொல்லையில கொய்யா மரம் - ராசா
கொழுந்தனாரு வச்ச மரம்
கொய்யாக் காய்க்கு ஆசைப்பட்டு 
கொழுந்தனாரை வச்சுக்கிட்டேன் - என்
கொழுந்தனாரை வச்சுக்கிட்டேன்!
பிராபல பதிவர்:
மூணு வருசம் முன்ன இந்தியா போனப்போ ‘அந்த பிரபல பதிவர்கிட்ட பேசுனீங்களா?..என்னது இன்னும் பேசலையா?’ன்னு நம்ம ஆளுக பதறிக்கேட்டாங்க. ரெண்டு வருசம் முன்ன போனப்போ ‘அவர்கிட்ட பேசுனீங்களா?’ன்னு சாதாரணமாக் கேட்டாங்க. இந்த வருசம் என்னடான்னா ஒருத்தரும் பிராப்லத்தைப் பத்திப் பேசவே விரும்பலை. நானே கேட்டப்போ ‘அவன்கிட்டல்லாம் மனுசன் பேசுவானா?’ன்னானு திருப்பிக் கேட்டாங்க. அவ்ளோ தாங்க, இணைய பிரபலத்துக்கு மதிப்பு. இதுக்கு எம்புட்டு ஆட்டம், எத்தனை மொள்ளமாரித்தனம்..உஸ்ஸ், அப்பப்பா!

அகிரா காராச்சேவு:

போன வாரம் நாலு நாள் லீவுல டியூப்பை ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருந்தப்போ, ஒரு செம வீடியோ மாட்டுச்சு. ஓ..டியூப்னு எழுதிட்டனா, அது யூ-டியூப் மக்கா. சினிமா ஆசான் அகிரா குரோசோவா பத்தின வீடியோ அது..நிறைய நல்ல விஷயங்களைப்பத்தி பேசறாரு..சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ இங்கே!

அகிரா.. காராச்சேவா? என்னது அதுன்னு கேட்கிற அப்பாவிகளுக்கு மட்டும் இந்த சின்ன விளக்கம். எங்க கோவில்பட்டில அகிலா ஸ்வீட்ஸ் ஸ்டால்னு ஒன்னு இருக்கு. அங்க கிடைக்கிற அல்வா, திருநெல்வேலி அல்வாவை விட டேஸ்ட்டா இருக்கும். அங்க கிடைக்கிற காராச்சேவும் நல்ல டேஸ்ட். அந்த அகிலா கடை காராச்சேவின் புகழ், ஜப்பான்ல பரவும்போது அகிரா குரசோவான்னு மரூவிடுச்சு, அம்புட்டுத்தேன்.

போலீஸ் ஸ்டோரி:

ஜாக்கிசானோட புதுப்படம் ‘போலீஸ் ஸ்டோரி 5’ இங்க ஜனவரி 2ம் தேதியே ரிலீஸ் ஆகி, பார்த்தாச்சு. நம்மூர்ல இன்னும் ரிலீஸ் ஆகாததால, விமர்சனம் ட்ராஃப்ட்ல வெயிட் பண்ணுது. நம்மூர்ல ரிலீஸ்க்கு முதல்நாள் போடறேன். ஜாக்கிசான் படம் பார்க்கப்போனப்போ, சின்ன வயசுல ஸ்கூலை கட் அடிச்சிட்டு, ஜாக்கி படம் பார்த்து மாட்டுனதெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.

எங்க ஏரியால சீன் படத்தையும் ‘இங்கிலீஸ் படம்-A படம்’ன்னு சொல்வாங்க. ஒருநாள் ஸ்கூலை கட் அடிச்சிட்டு, ஜாக்கிசான் படம் பார்க்கப் போயிருந்தேன். நம்ம ஊரு ஆளு ஒருத்தரு பார்த்துட்டு வீட்ல போய்ச் சொல்லிட்டாரு. சொன்னவன் கரெக்டாச் சொல்ல வேண்டாமா? அதை விட்டுட்டு ‘சின்னைய்யா, உம்ம மகன் படிக்கப்போகாம இங்கிலீஸ் படம் பார்த்துட்டுத் திரியறான்.,கண்டுச்சு வைய்யும்’ன்னு சொல்லிட்டான். 

வீட்டுக்குப் போறேன், நைனா பஞ்சாயத்துக்கு ரெடியா இருக்காரு. ’என்னய்யா..படிக்க அனுப்புனா, படம் பார்த்துட்டுத் திரியறீகளாமே’ன்னு ஆரம்பிச்சாரு. ‘ஆமாப்பா..எங்க கிளாஸ்க்கு மட்டும்(!) லீவு விட்டாங்க..பசங்களாம் கூப்பிட்டாங்க’ன்னு இழுக்கும்போதே ‘அதுக்கு?..இங்கிலீஸ் படத்துக்குப் போவீகளோ?’ன்னாரு. எனக்கும் முதல்ல மேட்டர் உறைக்காம’ ஆமாப்பா..சண்டை சூப்பரா இருக்கும்..பார்க்க காமெடியாவும் இருக்கும்ப்பா’ன்னு சொல்லவும் அப்பன்கிட்டயே டபுள் மீனிங்கான்னு காண்டாகிட்டாரு.

அப்புறம் தான் அவரு வேற இங்கிலீஸ் படத்தைப் பத்தி பேசறாருன்னு புரிஞ்சிக்கிட்டு ‘இல்லைப்பா..இது நல்ல படம் தான்..கராத்தே சண்டைப்படம்’ன்னேன். கொஞ்சம் டவுட் குறைஞ்சு ‘அப்படியா..என்ன படம்ப்பா அது? படத்துப் பேர் என்ன?’ன்னாரு. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. ‘என்னய்யா முழிக்கிறே? பேரைச் சொல்லு’ன்னாரு. வேற வழியே இல்லாம, பேரைச் சொன்னேன் “புராஜக்ட் A".

அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா!

வீ’ல்லா:
நாம என்ன தான் இணையத்துல அதிபுத்திசாலியா விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தாலும், விஜய்-அஜித் தான் இந்த தலைமுறையின் வசூல் சக்கரவர்த்திகள்ங்கிறதை, இங்க நடக்கிற ஆன்லைன் புக்கிங் தெளிவாக் காட்டிடுது. மத்தவங்க படம்னா ஆன்லைன் புக்கிங் ஆரம்பிச்சு, படம் போடறவரைக்கும் சீட் இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா இவங்க படத்துக்கு புக்கிங் ஆரம்பிச்ச ஒரு மணி நேரத்துல அடுத்த ரெண்டு நாளைக்கு டிக்கெட் புக் ஆகிடும். 

இந்த தடவை வீரம் படத்துக்கு அப்படித்தான் ஆச்சு. ஜில்லா ஆன்லைன் புக்கிங் இல்லை. 6மணி ஷோக்கு டிக்கெட் கிடைக்காம, 7 மணி ஷோக்கு டிக்கெட் புக் பண்ணேன். தல ரசிகர்கள்லாம் குஷியா 6 மணி ஷோக்கு போயிருக்காங்க. அவங்க உள்ளே போனதும், கதவைச் சாத்திட்டு(!)  படத்தை ஓட்டியிருக்காங்க. ஓ-ன்னு தியேட்டர்ல இருந்து அலறல் சத்தம். தியேட்டர் மேனேஜரான அரபிக்கு ஆச்சரியம். தமிழ்ப்படம்னா ஆரம்பிச்சு அரைமணிநேரம் கழிச்சுத்தானே அலறிக்கிட்டு ஓடிவருவாங்க..இப்போ டைட்டிலுக்கேவா?ன்னு யோசிச்சுக்கிட்டு உள்ளே போய்ப் பார்த்தா ‘இளைய தளபதி நடிக்கும் ஜில்லா’ ஓடுது.

தல ஆளுக கொதிச்செழுந்து என்னய்யா இதுன்னு கேட்க, அரபிக்கே ஒன்னும் புரியலை. எப்படியோ ஜில்லா-ன்னு ஆன்லைன் புக்கிங் பண்றதுக்குப் பதிலா வீரம்-ன்னு புக் பண்ணி, தல ரசிகர்களை சிக்க வச்சுட்டானுக. விருப்பப்பட்டவங்க பாருங்கன்னு சொல்லி 6 மணி ஷோ கண்டினியூ ஆகியிருக்கு.

நான் டிங்டிங்கின்னு 7 மணிக்கு போறேன். இந்த ஷோக்கு வர்றவங்ககிட்ட முதல்லயே ஜில்லான்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அரபி ரூமைச் சுத்தி ஒரே கூட்டம். ‘இவன் படத்தை முதநாளே, அதுவும் காசு கொடுத்துப் பார்க்கவா?’ன்னு ஒருத்தர் புலம்பிக்கிட்டு இருந்தாரு. என்னய்யா மேட்டர்னா, மேட்டரைச் சொன்னாரு. நமக்கு விமர்சனம் போட, ஏதாவது ஒரு படம்ங்கிறதால பிரச்சினை இல்லை.
ஆனா அஜித் ரசிகர்கள் தான் அந்த அரபியை உலுப்பிக்கிட்டு இருந்தாங்க. ‘ஹௌ?..ஒய்?..வேர் இஸ் வீரம்?’ன்னு கேட்க, அந்த அரபி ‘தட் இஸ் ஆல்சோ டமில் மூவி..திஸ் இஸ் ஆல்சோ டமில் மூவி..வாட் இஸ் த பிராப்ளம்?’ன்னு பதிலுக்குக் கேட்டாரு. அடப்பாவி மனுசா, இவங்க பங்காளிச்சண்டை புரியாம பேசிக்கிட்டு இருக்கறயேன்னு நினைக்கும்போதே ஒரு ரசிகர் இன்னொரு ரசிகர்கிட்ட நச்சுன்னு ஒரு கேள்வி கேட்டாரு.

‘ஏண்டா..இந்த அரபிக்கு இங்கிலீஸ்தான் தெரியாது..கண்ணுமாடா தெரியாது? நம்ம தல எம்புட்டு சிவப்பா அழகா இருக்காரு? அவருக்கும் விஜய்க்கும் வித்தியாசம் தெரியாதா இந்த மண்டையனுக்கு?’.....ரொம்ப நியாயமான கேள்வி தான். இந்த கேள்விக்கு பதில் எனக்கு தெரிஞ்சது, அங்க சொன்னா கும்மிடுவாங்க என்பதால் இங்கே : விஜய்க்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்..மோகன்லாலுக்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரியாமத் தான் அரபி கன்பியூஸ் ஆகியிருப்பான்!

அழகு^2:
த்ரிஷ்யம்ன்னு மோகன்லால்-மீனா நடிச்ச மலையாளப்படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க..நெட்ல நல்ல பிரிண்ட் வரட்டும்னு வெயிட்டிங். வந்தா சொல்லுங்க மக்கா. மீனாவுக்காகவாவது பார்க்கணும்ல! ஆண்டிங்கிறது ஒருவகை அழகு..மீனாங்கிறது இன்னொரு வகை அழகு..மீனா ஆண்ட்டிங்கிறது அழகோ அழகு!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

 1. எப்படியோ.... நானா யோசிச்சென்ல ஹன்சி படம் போட்டாச்சு...

  ReplyDelete
 2. @Tech in Way அதை போட்டாத்தான் பதிவே நிறைஞ்ச மாதிரி இருக்கு பாஸ்!

  ReplyDelete


 3. //கொல்லையில கொய்யா மரம் - ராசா
  கொழுந்தனாரு வச்ச மரம்
  கொய்யாக் காய்க்கு ஆசைப்பட்டு
  கொழுந்தனாரை வச்சுக்கிட்டேன் - என்
  கொழுந்தனாரை வச்சுக்கிட்டேன்!//

  ஹா..ஹா.. எங்க ஊர் ரெகார்ட் டான்ஸ் அப்போ ஒன்ஸ் மோர் கேட்ட பாட்டு இது. பாஸ் முழு பாட்டையும் போட்டிருக்கலாமே... என்னவொரு தனித்துவமான பாடல்... கவித்துவமான சிந்தனை.. சமூக பிரஞை கொண்ட பாடல் ..!. இதே காலகட்டத்தில் இன்னொரு பாடலும் ஹிட்டானது. அதை அடுத்த நானா யோசிச்சேன்ல போடுவீங்கனு நம்புறேன்.. :-)

  ReplyDelete
 4. ஆமா ப்ராஜக்ட் A வுக்கும் ஹன்சிக்காவுக்கும் என்னைய்யா சம்பந்தம்?

  ReplyDelete
 5. ஆமா ப்ராஜக்ட் A வுக்கும் ஹன்சிக்காவுக்கும் என்னைய்யா சம்பந்தம்?

  ReplyDelete
 6. //மீனா ஆண்ட்டிங்கிறது அழகோ அழகு!// அப்பு, கர்ச்சீப்ப கீழ விட்டுட்டீங்க பாருங்க, எடுத்து துடைச்சுக்கோங்க.. ஹிஹிஹி..

  (கொசுறு தகவல்: த்ரிஷ்யம் படத்தில் ஒரு காட்சி: ஒரு ஹிந்தி மசாலா படத்தில் வரும் கில்மா காட்சி ஒன்றை தான் வேலை செய்யும் இடத்தில் பார்த்துவிட்டு வரும் லாலேட்டன் நேராக வந்து கதவை தட்டியதும் ப்ரெஷ்ஷாக குளித்து, பொம்மிஸ் நைட்டியோடு நிற்கும் மீனா ஆண்ட்டி "இன்னைக்கு எந்தா குளி சீனோ? நேரத்தே வந்து" ன்னு கேட்டுட்டு நேரா... ம்ம்ம் வேணாம் அதுக்கு மேல நீங்க படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. :)

  ReplyDelete
 7. Manimaran said...//
  ஹா..ஹா.. எங்க ஊர் ரெகார்ட் டான்ஸ் அப்போ ஒன்ஸ் மோர் கேட்ட பாட்டு இது. பாஸ் முழு பாட்டையும் போட்டிருக்கலாமே...//

  முழுப்பாட்டும் இங்க இருக்கு : http://www.youtube.com/watch?v=cqUyBPZ3m24

  ReplyDelete
 8. //Manimaran said...
  இதே காலகட்டத்தில் இன்னொரு பாடலும் ஹிட்டானது. அதை அடுத்த நானா யோசிச்சேன்ல போடுவீங்கனு நம்புறேன்.. :-)//

  என்ன பாட்டு பாஸ்? மொச்சக்கொட்டையை ஏற்கனவே போட்ருக்கேன்.

  ReplyDelete
 9. // கோவை ஆவி said...
  ஆமா ப்ராஜக்ட் A வுக்கும் ஹன்சிக்காவுக்கும் என்னைய்யா சம்பந்தம்?//

  புராஜக்ட் ஏ பார்த்த பதிவர்க்கும் ஹன்சிக்கும் சம்பந்தம் இருக்கு இல்லியா? அது போதும்!

  ReplyDelete
 10. //கோவை ஆவி said...
  ம்ம்ம் வேணாம் அதுக்கு மேல நீங்க படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. :)//

  யோவ் ஆவி, என்னை தியேட்டருக்கே போக வச்சுடுவீரு போல?

  ReplyDelete
 11. //யோவ் ஆவி, என்னை தியேட்டருக்கே போக வச்சுடுவீரு போல?//

  ஹஹஹா எல்லாம் ஒரு விளம்பரம்தான்!!

  ReplyDelete
 12. //இணைய பிரபலத்துக்கு மதிப்பு. இதுக்கு எம்புட்டு ஆட்டம், எத்தனை மொள்ளமாரித்தனம்..உஸ்ஸ், அப்பப்பா!//.

  ஹி..ஹி.. பொத்தாம் பொதுவாக சொன்னாலும் என் நிலைப்பாடும் இதுதான்.


  // நமக்கு விமர்சனம் போட, ஏதாவது ஒரு படம்ங்கிறதால பிரச்சினை இல்லை.//

  அதே..அதே...அதே... அதே..! ( அன்னிக்கி நீங்க வீரம் போறதா சொன்னீங்க ... தல விமர்சனம் பண்றப்போ நாம பண்ணா சரியா இருக்காதுன்னு நான் ஜில்லா போனேன்.. கடைசில படம் நல்லாயிருக்குன்னு சொல்லி காதுல ரத்தம் வர்ற அளவுக்கு ஆயிடுச்சி... :-) :-) இனி என்ன ஆனாலும் அணில் படத்துக்கு போறதில்லன்னு முடிவு பண்ணியாச்சி.

  //அழகு^2//

  நமீதா இடத்தை மீனாவுக்கு கொடுத்தீட்டீங்களே பாஸ்...

  ReplyDelete
 13. //Manimaran said...
  இனி என்ன ஆனாலும் அணில் படத்துக்கு போறதில்லன்னு முடிவு பண்ணியாச்சி.//

  அப்படிச் சொல்லிட்டா எப்பூடி?..நம்ம தொழில்ல இதெல்லாம் சகஜம் தானே பாஸ்!

  ReplyDelete

 14. //என்ன பாட்டு பாஸ்? மொச்சக்கொட்டையை ஏற்கனவே போட்ருக்கேன். //

  அந்த காலகட்டத்தில இந்த ரெண்டு பாட்டும்தான் எங்க ஊர்ல பேமஸ்.. ஏதோ ராமராஜன் படம்னு நினைக்கிறேன்..

  " குத்துறேன் குத்துறேன்னு சொல்லிபுட்டு குத்தாமத்தான் போனிகளே ராசாவே...என் ராசாவாவே..."
  " மாட்டுறேன்..மாட்டுறேன்னு சொல்லிபுட்டு மாட்டாமத்தான் போனிகளே ராசாவே...என் ராசாவாவே..."

  முழு பாட்டையும் கேளுங்க அட்டகாசமா இருக்கும். :-)


  ReplyDelete
 15. //Blogger Manimaran said...
  அந்த காலகட்டத்தில இந்த ரெண்டு பாட்டும்தான் எங்க ஊர்ல பேமஸ்.. ஏதோ ராமராஜன் படம்னு நினைக்கிறேன்..
  )//

  ஆமா..காவலன் - படத்துப் பேரு..படம் ரிலீஸ் ஆகலை.

  ReplyDelete
 16. ///போன வாரம் நாலு நாள் லீவுல டியூப்பை ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருந்தப்போ, ஒரு செம வீடியோ மாட்டுச்சு. ஓ..டியூப்னு எழுதிட்டனா, அது யூ-டியூப் மக்கா////

  நல்லவேள,மறதில ட்யூப் லிங்க போடாம விட்டீங்களே! ;)

  ReplyDelete
 17. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  நல்லவேள,மறதில ட்யூப் லிங்க போடாம விட்டீங்களே! ;)//

  அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் லீக் பண்ண மாட்டோம்யா!

  ReplyDelete
 18. ////விஜய்க்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்..மோகன்லாலுக்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரியாமத் தான் அரபி கன்பியூஸ் ஆகியிருப்பான்!////

  கிளாஸ் விளக்கம் தல!

  ReplyDelete
 19. //செங்கோவி said...
  @Tech in Way அதை போட்டாத்தான் பதிவே நிறைஞ்ச மாதிரி இருக்கு பாஸ்!//
  ஹன்சி மேல கடுப்புன்னா அதுக்கு இப்புடியாய்யா?

  ReplyDelete
 20. //விஜய்க்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்..மோகன்லாலுக்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரியாமத் தான் அரபி கன்பியூஸ் ஆகியிருப்பான்!//

  சீக்கிரமா அண்ணனுக்கு ஜீ.ஹெச் ல ஒரு காட்டில் ரெடி பண்ணுங்க..

  ReplyDelete
 21. அண்ணே சின்ன டவுட்டு, 37 வயசு பொண்ணு ஆண்டின்னா, அப்போ 37 வயசு பையன்?

  ReplyDelete
 22. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... [Reply]
  அண்ணே சின்ன டவுட்டு, 37 வயசு பொண்ணு ஆண்டின்னா, அப்போ 37 வயசு பையன்?//

  அதை பொண்ணுங்ககிட்டத் தான் கேட்கணும்யா.

  ReplyDelete
 23. இங்கிலீஷ் படம் பார்த்த கதையும் வீரம் ஜில்லாவானதும் சிரிக்க வைத்தது! நல்ல தொகுப்பு! நன்றி!

  ReplyDelete
 24. விஜய்க்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்..மோகன்லாலுக்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரியாமத் தான் அரபி கன்பியூஸ் ஆகியிருப்பான்!/

  ஹா ஹா.. செம!

  ReplyDelete
 25. எல்லாம்(!)நன்றாக இருந்தது!!!

  ReplyDelete
 26. மூணு வருசம் முன்ன இந்தியா போனப்போ ‘அந்த பிரபல பதிவர்கிட்ட பேசுனீங்களா?..என்னது இன்னும் பேசலையா?’ன்னு நம்ம ஆளுக பதறிக்கேட்டாங்க.//நானே கேட்டப்போ ‘அவன்கிட்டல்லாம் மனுசன் பேசுவானா?’ன்னானு திருப்பிக் கேட்டாங்க.//பன்னிக்குட்டி தான அந்த பதிவர்?

  ReplyDelete
 27. // s suresh said...
  இங்கிலீஷ் படம் பார்த்த கதையும் வீரம் ஜில்லாவானதும் சிரிக்க வைத்தது! நல்ல தொகுப்பு//

  நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 28. // KANA VARO said...

  ஹா ஹா.. செம!//

  ரை..ரைட்டு!

  ReplyDelete
 29. //Subramaniam Yogarasa said...
  எல்லாம்(!)நன்றாக இருந்தது!!!//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 30. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பன்னிக்குட்டி தான அந்த பதிவர்?//

  ஏன்யா இப்படி கிளப்பி விடறீங்க?

  ReplyDelete
 31. அண்ணே ஜக்கிசான் படம் பார்த்தது செமை... ஹ.ஹ..
  அந்த ஜப்பான் விடயம் பார்க்கோணும்...

  ReplyDelete
 32. ஹன்சி படத்தைப் போட்டு ஆறுதல் தேடியாச்சு....

  எல்லாமே அருமை...

  மீனா ஆண்டி ஜொள்ளு... ம் வயசானவங்க ரசனை என்ன சொல்ல...

  ReplyDelete
 33. அது என்ன மீனா மட்டும் ஆண்டி பருவாயில்லை ஆனால் ஹான்சி பாட்டு சுத்த மொக்கை :))

  ReplyDelete
 34. அந்த பிரபல்யம் யாரு வாத்தியரே??

  ReplyDelete
 35. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  மூணு வருசம் முன்ன இந்தியா போனப்போ ‘அந்த பிரபல பதிவர்கிட்ட பேசுனீங்களா?..என்னது இன்னும் பேசலையா?’ன்னு நம்ம ஆளுக பதறிக்கேட்டாங்க.//நானே கேட்டப்போ ‘அவன்கிட்டல்லாம் மனுசன் பேசுவானா?’ன்னானு திருப்பிக் கேட்டாங்க.//பன்னிக்குட்டி தான அந்த பதிவர்?////////

  மிச்சம் மீதி இருக்க கொஞ்சநஞ்ச மானத்தையும் விடமாட்டானுங்க போல இருக்கே?

  ReplyDelete
 36. //mathi sutha said...
  அண்ணே ஜக்கிசான் படம் பார்த்தது செமை... ஹ.ஹ..
  அந்த ஜப்பான் விடயம் பார்க்கோணும்...//

  பாருங்க சுதா..உங்களுக்கு யூஸ் ஆகும்.

  ReplyDelete
 37. //சே. குமார் said...
  மீனா ஆண்டி ஜொள்ளு... ம் வயசானவங்க ரசனை என்ன சொல்ல...//

  ஆமாம் இளைஞரே!

  ReplyDelete
 38. // thanimaram nesan said...
  அந்த பிரபல்யம் யாரு வாத்தியரே??//

  நீங்க தான் நேசரே!!!!!!!!!

  ReplyDelete
 39. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மிச்சம் மீதி இருக்க கொஞ்சநஞ்ச மானத்தையும் விடமாட்டானுங்க போல இருக்கே?//

  அது நீங்க தான்னு நான் யார்கிட்டயும் சொல்லலையே..அப்புறம் ஏன் ஃபீல் பண்றீங்க?

  ReplyDelete
 40. அகிரா காராச்சேவு அவர்களின் நதிமூலம் இதுதானா?இது தெரியாமல் இவ்வளவு நாள் இருந்தேன்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 41. விஜய்க்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்..மோகன்லாலுக்கும் அஜித்துக்கும் வித்தியாசம் தெரியாமத் தான் அரபி கன்பியூஸ் ஆகியிருப்பான்!//

  இங்கிலீஸ் படம் இனி பாப்பியா பாப்பியா...அடி எப்பிடி இருந்துச்சு ? சண்டை படமாம்ல ஹா ஹா ஹா

  ஓடியாங்க ஓடியாங்க தலைய கேவலப் படுத்திட்டாரு...

  மீனா இப்பவும் அழகுதாம்ய்யா மேக்கப் போட்டால்....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.