Monday, January 27, 2014

மன்மதன் லீலைகள் ஈபுக் ரிலீஸ்-ஏன்? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

ஷட் அப் யுவர் மவுத்
உன் சட்டி பானை கவுத்!....

ஷட் அப் யுவர் மவுத்
உன் சட்டி பானை கவுத்!..

யோடா..யோடா..யோடா
கோபம் ஏனோடா?

(என்னமோ ஏதோ - படத்தில் இருந்து)

ஸ்..ருதி:
இப்போ அடிக்கடி கேட்கிற பாட்டு, அந்த ஷட் அப் யுவர் மவுத் தான். செம பாட்டு. இமான் கலக்கிட்டாரு. யூ டியூப்ல மேக்கிங் வீடியோ பார்த்து அசந்துட்டேன். அதிலயும் ஸ்ருதி வாய்ஸ் இருக்கே..சான்ஸே இல்லை..எனக்கு எப்பவுமே ஸ்ருதி நடிப்பை(?) விட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும். அதுலயும் யோடா..யோடான்னு கிக்கா ஆரம்பிக்கும்போது கொன்னுட்டாங்க. பின்னே, தேவர்மகன்ல பாட்டுப் பாடி சிவாஜியைவே கொன்ன புள்ளையாச்சே!

தேர்தல் ஸ்பெஷல்:
அரசியல் எழுத வேண்டாம்ன்னு நினைச்சாலும், தேர்தல் நெருங்க நெருங்க கை பரபரங்குது. அதனால இந்த ஒரு பத்தி மட்டும் ஒரு தேர்தல் ஆய்வு செய்ய சமூகம் அனுமதி அளிக்கணும்..

’கண்டிப்பா நான் அர்சியல்க்கு வர்வேன்’ன்னு நமீதா சொல்லிடுச்சு. அது திமுகல சேரும்ன்னு தான் நினைக்கிறேன். ஏன்னா கலைஞர் டிவில தான் இப்போ புரோக்ராம் பண்ணுது.அந்த உடம்பை அசைச்சு, ஜெயா டிவி ஆபீஸ்க்கு போறதைவிட, இருக்கிற இடத்திலேயே இருக்கலாம்ன்னு தான் நமீ நினைக்கும். ஆனா அதுல நமக்கு ஒரு சிக்கல். நமீதா-குஷ்பூ-ஹன்சிகா-பத்மினி மன்றங்கள் நம்ம நானா யோசிச்சேன்ல சிறப்பா செயல்படறது உங்களுக்கே தெரியும். ஏற்கனவே குஷ்பூ திமுகல வலுவா காலையும் ஊனியிருச்சு. இப்போ நமீயும் அங்க தான் போகுது. டி.ஆர் திமுக போனதால அவரோட மருமக்கமார்ல ஒன்னான ஹன்சிகாவும் திமுக தானோன்னு டவுட்டா இருக்கு. நல்லவேளை பத்மினி இல்லை..இல்லேன்னா அதையும் இழுத்திருப்பாங்க.

சரி, இப்போ நாம இந்த நாலு பேரு ஸ்டில்லையே போட்டா நாம திமுக ஆதரவுப் பதிவரோன்னு டவுட் வரலாம். நாம கும்முன்னு ஸ்டில் போடறதால, அதை குறியூடுன்னு நினைச்சிக்கவும் சான்ஸ் இருக்கு..அதனால நம்ம நட்டநடுநிலை இமேஜை காப்பாத்த, அதிமுகல இருக்கிறவங்க படத்தையும் அப்பப்போ போடறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். இத்துடன் நம் தேர்தல் ஆய்வு நிறைவுபெறுகிறது.

தனுஷ் லீக்:
முன்னாடி எல்லாம் பேப்பர்ல வர்ற செய்திகளை அப்படியே நம்புவேன். என்னைக்கு பதிவர் ஆனோமோ, அன்னிக்கே எழுத்து மேலயே நம்பிக்கை போயிடுச்சு. ஒரு படம் ரிலீஸ் பண்ணும் முன்னாடி இவங்க பண்ற அற்றாசிட்டிகளை தாங்க முடியலை.சமீபத்தில் ஒரு நியூஸ். 'அனேகன் படத்தில் நடித்து வரும் தனுஷ், வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். அந்த ரகசிய கெட்டப் வெளில கசிஞ்சிரக்கூடாதுன்னு அவரை எந்த பங்சனுக்கும் போக வேன்டாம்ன்னு டைரக்டர் சொல்லியிருக்கார். ஆனா அதையும் மீறி அவர் அப்பா பங்சன்ல தனுஷ் கலந்துக்கிட்டாரு. இதனால் தனுஷ் மேலடைரக்டர்  பயங்கர கோபத்துல இருக்கார்'ன்னு செய்தி. ஆனா ஸ்டில் இல்லை. தேடி அந்த கெட்டப் சேஞ்ச்+பங்சன் ஸ்டில்லை எடுத்தா, அது இப்படி இருக்கு:

நானும் எவ்வளவோ உத்துப் பார்த்துட்டேன்யா, எனக்கு ஒரு சேஞ்சும் தெரியலை. உங்களுக்கு எதுனா தெரியுதா? ஒருவேளை காதலன்ல வடிவேலு வேட்டியைசுத்தி, ’பி’ல்டப்பை ஏத்துவாரே..அப்படி எதுவும் பண்ணிட்டாங்களோ..அதான் நமக்குத் தெரியலியோ!

 நடந்தது என்ன? :
ஏன் திடீர்னு மன்மதன் லீலைகளை வெளியிட்டோம்ன்னு பதிவர் சிவா(!) சொல்வாருன்னு எதிர்பார்த்தேன். ஆனா தன்னடக்கம் காரணமா அவர் சொல்லாததால...

பதிவர் சிவா எழுதின பதிவுகளின் எண்ணிக்கையை விடவும் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எண்ணிக்கை அதிகம். அதுல ஒரு ஆளான போலந்து பொண்ணு ஒன்னு திடீர்னு அவருக்கு கால் பண்ணி' சிவா, என் மேரேஜ் பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும். நைட்டு டின்னருக்கு வா'ன்னு கூப்பிட்டிருக்கு. நம்ம ஆளும் குஷியாகி பான்ட்ஸ் பவுடரும் பாடி ஸ்ப்ரேயும் அடிச்சுக்கிட்டு கிளம்பிட்டாரு.

அங்க போனா'சிவா, என்கிட்ட ரெண்டுபேரு புரபோஸ்  பண்ணி இருக்காங்க..ரெண்டு பேருமே நல்ல பசங்க. யாரை சூஸ் பண்ணன்னு தெரியலை. அதனால தான் உன்னைக் கூப்பிட்டேன்.ப்ளீஸ் ஹெல்ப் மீ'ன்னு செமயா பல்பு கொடுத்திருக்கு. நம்மாளு 'கடைசிவரைக்கும் நமக்கு அண்ணன் ரோல்தானா?'ன்னு காண்டாகிட்டாரு. அப்போ அந்த பொண்ணு சொல்லியிருக்கு 'இரண்டு பேர்ல ஒருத்தன் நார்த் இன்டியன்..இன்னொருத்தன் தமிழ்..இந்த தமிழ்ப்பையனை தெரியுமா பாரு?'ன்னு மொபைல்ல போட்டோ காட்டியிருக்கு. பார்த்தா அம்சமா 'மன்மதன் லீலைகள்' மதன் போஸ் கொடுக்கிறான்.

ஏற்கனவே பல்பு வாங்குன கடுப்புல இருந்த ஆளுகிட்ட, மதனை காட்டுனா என்ன ஆகும்? மன்மதன் லீலைகள் பிடிஎஃபின் 166 பக்கத்தையும் மனப்பாடமா ஒப்பிச்சதோட நில்லாம, என் ஃபேஸ்புக் ஐடியை அந்த பொண்ணுக்கும், அந்த பொண்ணு ஐடியை எனக்கும் கொடுத்து கதகளியே ஆடிட்டாரு.

அந்த மேட்டரை சால்வ் பண்ண நேரத்துல தான் 'இதை ஈபுக்கா ரிலீஸ் பண்ணி, பலபேர்கிட்ட கொண்டு சேர்க்கணும். மதன் மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றும் கடமை, நமக்கு இருக்கு. நாம் பெண்களின் பாதுகாவலர்கள்'ன்னு சிவா பேச ஆரம்பிச்சாரு. சரி..சரி..குஷ்பூ, விந்தியா ஸ்டில்லெல்லாம் போட்டுட்டு அப்படி பேசக்கூடாது தான். ஆனாலும் அன்னிக்கு அப்படித்தான் பேசினோம். அதுக்கு அப்புறம் தான் சீனுக்கு வந்த பதிவர் வினையூக்கி(!), என்னை அதை வச்சே அடிச்சு, சாதிச்சார்.  ஆக, இது தான் ஈபுக் ரிலீஸ் ஆன கதை.

உன் ஈபுக் கதையெல்லாம் இருக்கட்டும்..போலந்து மேட்டர் என்னாச்சுங்கிறீங்களா?..சொல்றேன். ஒருவாரம் கழிச்சு சிவாவுக்கு மறுபடியும் அழைப்பு. இந்த தடவை பாடி ஸ்ப்ரே மட்டும் அடிச்சுக்கிட்டு போனாரு. 'ச்சே..அந்த டமில்ப்பையன் இப்படி இருப்பான்னு நினைக்கலை'ன்னு அந்த பொண்ணு ஆரம்பிச்சிருக்கு. இடைமறிச்ச சிவா' நோ..நோ..எல்லா தமிழ்பையன்களும் அப்படி கிடையாது. தமிழர்கள் ஃபேமிலிக்குன்னே வாழறவங்க. தமிழ்ப்பசங்கள்லாம் அன்பானவங்க. அவ்ளோ ஏன், நானே ஒரு தமிழ்ப்பையன் தான்'ன்னு சொல்லி இருக்காரு.

 'அதனால தான் சிவா, ஒரு முடிவு பண்ணியிருக்கேன்'ன்னு சொல்லவும் நம்மாளு 'கமான்..டெல் மீ..நோ ஷை'ன்னு பிட்டை போட்டிருக்காரு. வழக்கம்போல் ஒரு பல்பைக் கொடுத்து 'அந்த நார்த் இன்டியனையே ஓகே பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்'ன்னு சொல்லிடுச்சாம். இப்போ அண்ணாச்சி, கூகுள்லயும் ஃபேஸ்புக்லயும் 'நார்த் இன்டியன் லீலைகள்'ன்னு ஈபுக் கிடைக்குமான்னு தேடிக்கொண்டு இருப்பதாக தகவல்!

ஒரு விளம்பரம்:
மன்மதன் லீலைகள் ஈபுக்கை அடுத்து, வினையூக்கியின் ‘ஒரு வாளி ஆக்சிஜன்’ எனும் நீண்ட சிறுகதை ஈபுக்கா வந்திருக்கு. நான் அவர்கிட்ட ‘குஷ்பூ குளிச்ச வாளி’ன்னு பேர் வைங்கய்யான்னு சொன்னேன். கேட்கலை..யாரோ பெரிய இங்கிலீஸ் ரைட்டர் எழுதுன கதையோட மொழிபெயர்ப்பாம். அப்படில்லாம் பேர் வச்சா, அவரு சூசைட் பண்ணிப்பாருன்னு சொல்லிட்டாரு..டவுன்லோடு லிங்க் இங்கே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

 1. ///என்னைக்கு பதிவர் ஆனோமோ, அன்னிக்கே எழுத்து மேலயே நம்பிக்கை போயிடுச்சு///

  பேக்ட்டு பேக்ட்டு பேக்ட்டு.. யாரு வேணாலும் என்னத்த வேணாலும் எழுதலாம்னு புரிஞ்சதே நாம பதிவர் ஆனப்புறம்தான்....

  ReplyDelete
 2. மன்மதன் லீலைகள் ஈபுக் ரிலீஸ்க்கு பின்னாடி இப்புடி ஒரு கதையா... அந்த சிவா யாருண்ணே? மெட்ராஸ் பவனா? அடுத்து சிவலீலைகள்ன்னு ஒரு கதை எழுதலாம் போலருக்கே...

  ReplyDelete
 3. ˜மன்மதன் லீலைகள் ஈபுக்கை அடுத்து, வினையூக்கியின் ‘ஒரு வாளி ஆக்சிஜன்’ எனும் நீண்ட சிறுகதை ஈபுக்கா வந்திருக்கு. நான் அவர்கிட்ட ‘குஷ்பூ குளிச்ச வாளி’ன்னு பேர் வைங்கய்யான்னு சொன்னேன். கேட்கலை..யாரோ பெரிய இங்கிலீஸ் ரைட்டர் எழுதுன கதையோட மொழிபெயர்ப்பாம். அப்படில்லாம் பேர் வச்சா, அவரு சூசைட் பண்ணிப்பாருன்னு சொல்லிட்டாரு..~

  மிக்க நன்றி எழுத்தாளர் செங்கோவி அவர்களே

  ReplyDelete
 4. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  மன்மதன் லீலைகள் ஈபுக் ரிலீஸ்க்கு பின்னாடி இப்புடி ஒரு கதையா... அந்த சிவா யாருண்ணே? // அவ்ளோ அப்பாவியா நீங்க?

  ReplyDelete
 5. //வினையூக்கி said...
  மிக்க நன்றி எழுத்தாளர் செங்கோவி அவர்களே//

  சும்மா இரும்யா.

  ReplyDelete
 6. செங்கோவி..உங்க அரசியல் கண்ணோட்டம் ரொம்ப சூப்பர்..சிரிச்சு சிரிச்சு முடியல..அப்புறம் தனுஷ் கெட்டப் change..சூப்பர்...

  ReplyDelete
 7. //ஸ்ரீ அப்பா said... [Reply].//

  புதுசா இருக்கீங்களே பாஸ்..உங்களையும் கெடுத்துட்டனா!

  ReplyDelete
 8. பாவம் இந்த மதன் போன ஜென்மத்துல என்ன உங்ககிட்ட வாங்கி சாபிடாரொ எந்த வெள்ளை கார குட்டிய கரெக்ட் பண்ணினாலும் உங்க கும்பல் ஆஜராகி கேடுதரிங்க

  ReplyDelete
 9. நானா யோசிச்சது நன்றாக இருந்தது.///'பத்மினி' மன்றம் இப்போதும் இயங்குகிறது என்று அறிவித்ததில் மகிழ்ச்சி!!///பாவம்........"நமீ"!!!

  ReplyDelete
 10. இன்னும் பொலிவாகத் திகழும் குசுப்பு அம்மையாரின் புகைப்படத்தை காணும் போது மனதில் பல எண்ணங்கள் ஊஞ்சலாடுகின்றன எழுத்தாளரே....

  ReplyDelete
 11. ////அதிமுகல இருக்கிறவங்க படத்தையும் அப்பப்போ போடறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.////

  அப்போ ராமராஜன், கார்த்திக், சரத்குமார் படங்களா போட போறீங்களா? அது தப்பாச்சே.....?

  ReplyDelete
 12. ஊஹூம்...........அது இருக்கிறவங்க "மாதிரி" காட்டகெரில வரும்,ப.ரா.சார்!

  ReplyDelete
 13. பசு நேசன் ராமராஜன் படத்தையும் விரைவில் காணமுடியும் போல!ஹீ

  ReplyDelete
 14. இன்னும் பொலிவாகத் திகழும் குசுப்பு அம்மையாரின் புகைப்படத்தை காணும் போது மனதில் பல எண்ணங்கள் ஊஞ்சலாடுகின்றன எழுத்தாளரே..../ஹீ இன்னும் பல பாடல் ஞாபகம் வருகின்றது பன்னி வாத்தியாரே!

  ReplyDelete
 15. ஒருவேளை காதலன்ல வடிவேலு வேட்டியைசுத்தி, ’பி’ல்டப்பை ஏத்துவாரே..அப்படி எதுவும் பண்ணிட்டாங்களோ..அதான் நமக்குத் தெரியலியோ!//

  என் கண்ணை தொறந்த சாமிய்யா நீரு...

  ReplyDelete
 16. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இன்னும் பொலிவாகத் திகழும் குசுப்பு அம்மையாரின் புகைப்படத்தை காணும் போது மனதில் பல எண்ணங்கள் ஊஞ்சலாடுகின்றன எழுத்தாளரே....//

  வெளங்கிரும், யோவ் அஞ்சிகிலோ பவுடர் ஒரே நாள்ல காளியாகுதாம் அங்கே.

  ReplyDelete
 17. //‘குஷ்பூ குளிச்ச வாளி’// தலைப்பு வைக்கிறதில உங்களை அடிச்சிக்க முடியாது பாஸ்..

  நமீ திமுகவில சேரப்போவுதா... ஏற்கனவே குஸ்புவை எப்பட்டி சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிக்குறோம்...இப்ப நமீதாவா.. அப்புறம் தலைவர் என் உயிரிலும் மேலான மச்சான்ஸ் னு பேச ஆரம்பிச்சிடுவாரு

  ReplyDelete
 18. மன்மதன் லீலை=மலரும் நினைவுகள்

  ReplyDelete

 19. //Tirupurvalu said...
  பாவம் இந்த மதன் போன ஜென்மத்துல என்ன உங்ககிட்ட வாங்கி சாபிடாரொ எந்த வெள்ளை கார குட்டிய கரெக்ட் பண்ணினாலும் உங்க கும்பல் ஆஜராகி கேடுதரிங்க//

  செய்ய வேண்டிய 'கடமை'யை செஞ்சுட்டு, எங்க வேணாலும் போகலாம்ன்னு தான் சொல்றோம்.

  ReplyDelete
 20. //Subramaniam Yogarasa said...
  'பத்மினி' மன்றம் இப்போதும் இயங்குகிறது என்று அறிவித்ததில் மகிழ்ச்சி!!//

  நம் இதயம் இயங்கும்வரை மன்றமும் இயங்கும்.

  ReplyDelete
 21. //பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
  இன்னும் பொலிவாகத் திகழும் குசுப்பு அம்மையாரின் புகைப்படத்தை காணும் போது மனதில் பல எண்ணங்கள் ஊஞ்சலாடுகின்றன எழுத்தாளரே....//

  எண்ணம் மட்டுமா ஊஞ்சல் ஆடுது!

  ReplyDelete
 22. //பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
  அப்போ ராமராஜன், கார்த்திக், சரத்குமார் படங்களா போட போறீங்களா? அது தப்பாச்சே.....?//

  அது நம்ம கொள்கைக்கே விரோதமாச்சே!

  ReplyDelete
 23. //Subramaniam Yogarasa said...
  ஊஹூம்...........அது இருக்கிறவங்க "மாதிரி" காட்டகெரில வரும்,ப.ரா.சார்! //

  நம்மை சரியாகப் புரிந்து வைத்திருக்கும் ஒரே ஆள் ஐயா தான்!

  ReplyDelete
 24. // nesan said...
  ஹீ இன்னும் பல பாடல் ஞாபகம் வருகின்றது பன்னி வாத்தியாரே! //

  கிளம்பிட்டாங்கய்யா!

  ReplyDelete
 25. //MANO நாஞ்சில் மனோsaid...
  என் கண்ணை தொறந்த சாமிய்யா நீரு...//

  ஏன், நைட்டு ஓவராகிடுச்சாண்ணே!

  //வெளங்கிரும், யோவ் அஞ்சிகிலோ பவுடர் ஒரே நாள்ல காளியாகுதாம் அங்கே.//

  அந்த பவுடர் வீடியோ நீங்களும் பார்த்தாச்சா!

  ReplyDelete
 26. //Manimaran said...
  //‘குஷ்பூ குளிச்ச வாளி’// தலைப்பு வைக்கிறதில உங்களை அடிச்சிக்க முடியாது பாஸ்..//

  வேறவழில மக்களை அடிக்க முடியாது பாஸ்!

  ReplyDelete
 27. //கோகுல்said...
  மன்மதன் லீலை=மலரும் நினைவுகள்//

  இந்த பதிவு மலரும் நினைவுகள்-க்கே மலரும் நினைவுகள்!

  ReplyDelete
 28. ஸ்ருதிய திட்றீங்களா??பாராட்டுறீங்களா??

  ReplyDelete
 29. //அமுதா கிருஷ்ணாsaid...
  ஸ்ருதிய திட்றீங்களா??பாராட்டுறீங்களா?? //


  No doubt..பாடகி ஸ்ருதியை பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 30. அண்ணே, நம்ம சங்கப் பலககயில ஷ்ருதி படமா? சங்கத்‌த்துல அவங்கள ஒன்னும் சேர்த்தித்துக்கலியே?

  ReplyDelete
 31. என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை, தெளிவான பார்வை, உங்க அரசியல் ஆய்வு என்னை மே சிலிர்க்க வைத்த்தது. அப்புடியே நமக்கும் கத்‌த்துக் கொடுங்கண்ணே.

  ReplyDelete
 32. அப்போ லீலைகள் இன்னும் பல பார்ட் வரும்ன்னு நினைக்கிறேன், ஐ, ஜாலி ஜாலி ஜாலி...

  ReplyDelete


 33. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  அண்ணே, நம்ம சங்கப் பலககயில ஷ்ருதி படமா? சங்கத்‌த்துல அவங்கள ஒன்னும் சேர்த்தித்துக்கலியே?
  //

  ஸ்ருதியிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது புட்டிப்பால்..ஆனாலும் புள்ளை இன்னும் வளரணும்!

  ReplyDelete
 34. அன்புடையீர்..இன்று - தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_29.htmlஅன்பின் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 35. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை, தெளிவான பார்வை, உங்க அரசியல் ஆய்வு என்னை மே சிலிர்க்க வைத்த்தது. அப்புடியே நமக்கும் கத்‌த்துக் கொடுங்கண்ணே.
  //
  உங்களைப் பார்த்தா, சூடு-சொரணை உள்ள ஆளாத் தெரியுது..நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க புட்டிப்பால்.

  ReplyDelete
 36. //துரை செல்வராஜூsaid...
  அன்புடையீர்..இன்று - தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_29.htmlஅன்பின் நல்வாழ்த்துக்கள்..
  //

  தகவலுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 37. போகிற போக்கைப் பார்த்தல் தி.மு.க திரை முன்னேற்ற கழகமாக மாறி விடும் போலிருக்கிறதே..

  revmuthal.com

  ReplyDelete
 38. @Rama K

  அப்படி ஆகாமல் பார்த்துப்போம் பாஸ்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.