Tuesday, March 18, 2014

வாக்காளப் பெருமக்களே! (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல 
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே!
நாளைக்கு ஊருக்குப் போறேன். மார்ச் 21 முதல் 31வரை, இந்தியா வாசம்! ஏப்ரல் ஒன்னுவரை பதிவு வராது. ஃபேஸ்புக்குக்கு முடிஞ்சா வர்றேன். திரும்பி வந்தப்புறம் நின்னுபோன குழாயியல் தொடரையும் இன்னொரு புது தொடரையும் ஆரம்பிக்கிறதா எண்ணம். பார்ப்போம். நான் திரும்பி வர்றவரைக்கும் உங்களுக்கு போரடிக்கலாம். அதனால டெய்லி ஜெயமோகன் எழுதற மகாபாரதம் தொடரை படிக்கும்படி கேட்டுக்கறேன் சாமியோவ்!

கொலைவெறி:
நண்பர் ஒருத்தர்க்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குன்னு ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தாரு. எல்லாரும் நல்லா ஆர்டர் பண்ணும்போது ‘(வருங்கால) வீட்டுக்காரம்மா என்னை ஒருவேளைக்கு மூணு இட்லி தான் சாப்பிடச் சொல்லி இருக்கு’ன்னு சொன்னாரு. இப்பவே ஆரம்பிச்சிடுச்சா? நமக்குப் பரவாயில்லைன்னு நினைச்சுக்கிட்டு ‘அதென்ன மூணு இட்லி கணக்கு?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னாரு ‘உடம்பை குறைக்கச் சொல்லியிருக்காங்க. அவங்க வெயிட் 45 கிலோ. என் வெயிட் 90 கிலோ’ன்னாரு. நம்ம வாய் சும்மா இருக்குமா? ‘அதுசரி..அப்போ உயிர்பயம் இருக்கத்தானே செய்யும்’ன்னு சொல்லிட்டேன்!

மனுசன் காண்டாகிட்டாரு. பார்ட்டி முடியவரை முகம் கொடுத்தே பேசலை. அது பரவாயில்லை. கடைசீல பில்லு வந்துச்சு. ‘இந்தாய்யா பில்லு’ன்னு கொடுக்கிறேன். ‘பேசாத..போய்யா’ன்னு கோவிச்சுக்கிட்டு எந்திரிச்சுப் போய்டாரு. யோவ்..யோவ்ங்கிறேன். ம்ஹூம். திரும்பியே பார்க்கலை! அப்புறம் என்ன செய்ய..நாந்தான் கட்டுனேன். ஏன்யா ஒரு வரி டயலாக்குக்கு இவ்ளோ அபராதமா? புதுசால்ல இருக்கு! (அந்த நண்பர், நம் ப்ளாக்கை தொடர்ந்து படிப்பவர் என்பது கூடுதல் தகவல்!...கூல், மாப்ஸ்!)
ராஜ தந்திரம்:
எங்க தலைமையோட ராஜ தந்திரத்தைப் பார்த்தியான்னு ஆரம்பிச்சாரு அந்த கட்சிக்காரரு. எனக்கு ஒன்னும் தெரியலியேன்னேன். ‘அதாம்ப்பா..கரெக்ட்டா தான் நடிச்ச படத்தை தேர்தலப்போ ரிலீஸ் பண்ணாங்க பார்த்தியா’ன்னாரு. அதுல என்ன ராச தந்திரம்ன்னு கேட்டேன். ‘என்னாப்பா இப்படிக் கேட்கிறே? மக்கள் படத்தைப் பார்த்தா, ஓட்டை எங்களுக்குத் தானே போடுவாங்க’ங்கிறாரு. அடப்பாவிகளா..முன்னாடி இதைச் சொன்னதுக்குத் தானடா தீப்பொறி ஆறுமுகத்தை விரட்டி விரட்டி அடிச்சீங்க! பலதடவை ஆட்சி பண்ணியும், இப்படித் தான் ஓட்டு வாங்க வேண்டி இருக்கா? பலே, பலே!
புண்ணிய பூமி:
ஊர்ல தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிச்சிருச்சு போல. ஒரு ’ரிட்டயர்டு ஆபீசர்’ சொன்ன பழைய கதை ஒன்னு ஞாபகம் வருது. அப்போதைய சி.எம்(யாருன்னு சொல்ல மாட்டேன்!) எங்க கோவில்பட்டிக்கு பிரச்சாரத்துக்கு வர்றதா ப்ளான். மேடையெல்லாம் பக்காவா போட்டவங்களுக்கு, கூடவே ஏசியோட பாத்ரூம் ரெடி பண்ணி வைக்கவும் உததரவு வந்திருக்கு. ஆபீசர்களும் ‘சரி..அவசரத்துக்கு ஒதுங்குவாங்களே’ன்னு ஏசி டாய்லெட்(!) ரெடி பண்ணிட்டாங்க.மறுநாள் காலைல சி.எம்.வர்றாங்க. முதல் நாள் ஈவ்னிங் ஆபீசர்ஸ்க்கு ஒரு டவுட். பாத்ரூம்ன்னா குளிக்கவும் செய்வாங்களோன்னு! அப்புறம் அடிச்சுப்பிடிச்சு பைப் கனெக்சன் கொடுத்து குளிக்கவும் ஏற்பாடு பண்ணா, ஷவர் பைப்பும், ஹெட்டும் கோவில்பட்டி கடைகள்ல இல்லை. (எப்படி இருக்கும்?..கோவில்பட்டில தான் குளிக்கவே மாட்டீங்களேடா-ங்கிற மாதிரி கொலைவெறி கமெண்ட்ஸை தவிர்க்கவும்!)

மதுரைல தான் இருக்குன்னு தகவல் வரவும் சீனியர் ஆபீசர் நைட்டு பத்து மணிக்குக் கிளம்பி மதுரை ஓடறார். அங்க ஒரு கடைக்காரனை மிரட்டி, அவர் வர்றவரை உட்கார வச்சிருக்காங்க. இவர் போய் வாங்கிவந்து, எல்லாத்தையும் ஃபிட் பண்ணி முடிக்கும்போது காலை மணி அஞ்சு. மனுசர் அப்புறம் தான் நிம்மதியா தூங்கப்போனாரு. இப்போ கோவில்பட்டி பற்றி முக்கிய சிறுகுறிப்பு.
கோவில்பட்டி சாதாரண ஊர் கிடையாது. அது ஒரு புண்ணிய பூமி. இம்சை அரசன், சிரிப்பு போலீஸ் ரமேஷ், செங்கோவின்னு பல சித்தர்கள் அவதரிச்ச பூமி. அது தெரிஞ்சதாலயோ என்னவோ, அந்த சி.எம். பாத்ரூம் பக்கமே போகலை. நம்மால இந்த ஊரு மாசுபட்டுடக்கூடாதுன்னு, அடக்கிக்கிட்டு அடுத்த ஊருக்குப் போய்ட்டாங்க.

தூங்கி எந்திருச்சு வந்த ஆபீசர், ’நமக்கு புரமோசன் உண்டா?’ன்னு தெரிஞ்சுக்க நேரா ஏ.சி.பாத்ரூம்க்குப் போய் பார்த்திருக்காரு. எல்லாமே புதுசா அப்படியே இருக்கு. ‘இதுக்காடா நைட்டு ஃபுல்லா ஒரு பெரியமனுசனை தூங்கவிடாம அலைய வச்சீங்க?’ன்னு அந்த ஷவர் ஹெட்டைப் புடுங்கி, தலையிலயே அடிச்சுக்கிட்டாராம். ம்..இப்போ லட்சியம் வேற பெருசு!..எத்தனை ஆபீசர் மண்டை உடையப்போகுதோ? 

தீவிரமா யோசிக்கிறது:

ம்..இவங்க என்ன செய்றாங்க?
 கூத்தணி:

முடிச்சவிக்கி : ஏண்டா, இப்படி பொம்பளைப்படமா போடறியே? வெட்கமா இல்லை உனக்கு?

நான்: இல்லைண்ணே..சும்மா ஒரு ஜாலிக்கு.

முடிச்சவிக்கி : பெண்களை கேவலப்படுத்துறதுல என்னடா ஜாலி?

நான்: இல்லைண்ணே..கொஞ்சம் நாமளும் படிக்கிறவங்களும் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு...

முடிச்சவிக்கி : அதுக்கு பொம்பளைப் படமாடா போடுறது? இந்த பொழைப்புக்கு..

நான்: (ஆஹா..ஓவராப் போறாரே..ரைட்டு..மொள்ளமாரிகளோட அந்த ஆயுதத்தை எடுத்துட வேண்டியது தான்!), அண்ணே..பொறுமையா நான் சொல்றதைக் கேளுங்க

முடிச்சவிக்கி : என்ன?..சொல்லு.

நான்: அண்ணே, நான் ஒரு மதச்சார்பற்ற ஆளு. கரெக்ட்டா?

முடிச்சவிக்கி : ஆமா. அதுக்கென்ன?

நான்: நீங்களும் ஒரு மதச்சார்பற்ற ஆளு. கரெக்ட்டா?

முடிச்சவிக்கி : ஆமா.

நான்: இப்படி நாமளே அடிச்சுக்கிட்டா, அது மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிடாதாண்ணே?

முடிச்சவிக்கி : ம்..நீ சொல்றதும் சரி தான்யா

நான்: அது!..இப்போ நாட்டுக்கு அதிக ஆபத்து ’மஜா’வாலயா? மதவாதத்தாலயா?

முடிச்சவிக்கி : மதவாதத்தால தான்.

நான்: அப்போ நாம ஒத்துமையா மதவாதத்தை எதிர்க்க வேண்டாமா? அதனால என் மொள்ளமாறித்தனத்தைப் பத்தி நீங்க பேசக்கூடாது. உங்க முடிச்சவிக்கித்தனத்தைப் பத்தி நான் பேச மாட்டேன்.

முடிச்சவிக்கி : கரெக்ட்டாச் சொன்னப்பா..!

ஆகவே மக்களே, வரும் தேர்தலில் மதவாதச் சக்திகளை அழித்திட அருமைத் தம்பி-நீதிமான்-பெண்ணியவாதி செங்கோவியின் ஆலோசனைப்படி..................................!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

 1. ஓஹோ மதவாத சக்திகளுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணத்தான் ஊருக்கு வாறீங்களா... சென்று வென்று வாங்க!

  ReplyDelete
 2. அப்புறம் கேப்டன் பண்ணுறது ஒரு "Ab Exercise".. இப்புடி பண்ணா ரெண்டு பேருக்குமா சேர்த்து 12 pack-abs எடுத்துடலாம், என்னோட ஜிம் கோச் சொன்னாப்புல...
  பார்ட்னர் கெடைக்காம நா சுவத்தோட ஒட்டி செய்றேன்!

  ReplyDelete
 3. அட்ரா அட்ரா சக்க

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா ஹா வாய் கொழுப்பு சீலையில பில் ரூபத்துல வந்துடுச்சா ?

  இம்சை அரசன் எங்க ஊருக்காரன்ய்யா...!

  கடைசி படம் பொசிஷன் சூப்பரா இருக்கே...ட்ரை பண்ணி பாக்கணும்.

  ReplyDelete
 5. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  ஓஹோ மதவாத சக்திகளுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணத்தான் ஊருக்கு வாறீங்களா...//

  ஏன்யா இப்படி கோர்த்து விடறீங்க?

  ReplyDelete
 6. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  பார்ட்னர் கெடைக்காம நா சுவத்தோட ஒட்டி செய்றேன்!//

  புட்டிப்பால் கூடவா ஒத்துக்கலை?

  ReplyDelete
 7. //முத்தரசு said...
  அட்ரா அட்ரா சக்க//

  பெருசு வாய் திறந்து பாராட்டிடுச்சு!

  ReplyDelete
 8. //MANO நாஞ்சில் மனோ said...
  கடைசி படம் பொசிஷன் சூப்பரா இருக்கே...ட்ரை பண்ணி பாக்கணும்.//

  அண்ணே...........!

  ReplyDelete
 9. //கடைசி படம் பொசிஷன் சூப்பரா இருக்கே...ட்ரை பண்ணி பாக்கணும்.// மொரோக்கோ கீ ஜே!!

  ReplyDelete
 10. "மார்ச் 21 முதல் 31வரை, இந்தியா வாசம்"
  வனவாசம் முடிஞ்சு மனவாசம்.

  "ஏப்ரல் ஒன்னுவரை பதிவு வராது"

  நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற ...

  "நம்ம வாய் சும்மா இருக்குமா"

  இதுக்குதான் சாப்பிடும் போது பேசகூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க .


  ReplyDelete
 11. //வானரம் . said... [Reply]
  "ஏப்ரல் ஒன்னுவரை பதிவு வராது"

  நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற ...//

  எவ்ளோ சந்தோசப்படறாங்க!

  ReplyDelete
 12. "ம்..இவங்க என்ன

  செய்றாங்க?"டிக்கிலோனா ஆடி முடிச்சிட்டு இப்ப சப்ளிங்க்ஸ் ஆடுறாங்க .
  "ஆகவே மக்களே, வரும் தேர்தலில் மதவாதச் சக்திகளை அழித்திட அருமைத் தம்பி-நீதிமான்-பெண்ணியவாதி செங்கோவியின் ஆலோசனைப்படி..................................
  சொல்ல வந்தத முழுசா சொல்லுயா. .

  ReplyDelete
 13. " இம்சை அரசன், சிரிப்பு போலீஸ் ரமேஷ், செங்கோவின்னு பல சித்தர்கள் அவதரிச்ச பூமி. அது தெரிஞ்சதாலயோ என்னவோ, அந்த சி.எம். பாத்ரூம் பக்கமே போகலை"

  இவங்கெல்லாம் அங்க இருக்காங்கனு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஒருத்தன் அங்க 'இருப்பானா '.

  ReplyDelete
 14. இது வரை வந்த 'யோசிச்சது' களில் டாப் இது தான்!(ஸ்டில்'ஸ்)உட்பட!!'மனோ' ட்ரை பண்ற அளவுக்கு................ஹ!ஹ!!ஹா!!!///அருமைத் தம்பி,நீதிமான் எல்லாம் ஓ.கே.......... ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 15. நாளைக்கு ஊருக்குப் போறேன். மார்ச் 21 முதல் 31வரை, இந்தியா வாசம்! ஏப்ரல் ஒன்னு வரை பதிவு வராது. ////ஸ்..........ஸ்...........அப்பா...................!

  ReplyDelete
 16. மதவாதிகளுக்கு எதிராக பிரச்சாரமா !ஹீ போய் வாங்க புதுத்தொடருடன்.

  ReplyDelete
 17. //கோவில்பட்டி சாதாரண ஊர் கிடையாது. அது ஒரு புண்ணிய பூமி. இம்சை அரசன், சிரிப்பு போலீஸ் ரமேஷ், செங்கோவின்னு பல சித்தர்கள் அவதரிச்ச பூமி. அது தெரிஞ்சதாலயோ என்னவோ, //

  அதனால தான் மழை இல்லாம மக்காள் தண்ணிக்கு காய்ஞ்சு போய் கிடக்குறாங்க ....எதோ நான் வந்ததால் டாஸ்மாக் வந்து மக்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறது ...:) #என் காலடி பட்டதால் தான் ...டாஸ்மாக் வந்தது ன்னு சொல்லி கொள்கிறேன்

  ReplyDelete
 18. //இதுக்காடா நைட்டு ஃபுல்லா ஒரு பெரியமனுசனை தூங்கவிடாம அலைய வச்சீங்க?’ன்னு அந்த ஷவர் ஹெட்டைப் புடுங்கி, தலையிலயே அடிச்சுக்கிட்டாராம். ம்..இப்போ லட்சியம் வேற பெருசு!..எத்தனை ஆபீசர் மண்டை உடையப்போகுதோ? //

  அடங்கொன்னியா ........

  ReplyDelete
 19. //கோவில்பட்டி சாதாரண ஊர் கிடையாது. அது ஒரு புண்ணிய பூமி. இம்சை அரசன், சிரிப்பு போலீஸ் ரமேஷ், செங்கோவின்னு பல சித்தர்கள் அவதரிச்ச பூமி. //
  இந்த மூன்று மகான்களையும் அடியேன் தரிசிச்சிருக்கேன். :)

  ReplyDelete
 20. சித்தர் சென்னை வர்ராறா??? வர தேதி சொன்னாக்கா ஊரை காலி செய்துடுவோம். (சும்மா செங்கோவி)

  ReplyDelete
 21. //வானரம் .said...
  "ஆகவே மக்களே, வரும் தேர்தலில் மதவாதச் சக்திகளை அழித்திட அருமைத் தம்பி-நீதிமான்-பெண்ணியவாதி செங்கோவியின் ஆலோசனைப்படி..................................
  சொல்ல வந்தத முழுசா சொல்லுயா. .
  //

  அதை மக்கள் சொல்வாங்க!

  //இவங்கெல்லாம் அங்க இருக்காங்கனு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஒருத்தன் அங்க 'இருப்பானா './/

  ஹாஹாஹா..பெஸ்ட் 'கழுவி கழுவி ஊத்துதல்' விருது உங்களுக்கே!

  ReplyDelete
 22. //Subramaniam Yogarasa said...
  இது வரை வந்த 'யோசிச்சது' களில் டாப் இது தான்!(ஸ்டில்'ஸ்)உட்பட!!'மனோ' ட்ரை பண்ற அளவுக்கு................ஹ!ஹ!!ஹா!!!///அருமைத் தம்பி,நீதிமான் எல்லாம் ஓ.கே.......... ஹி!ஹி!!ஹீ!!//

  இப்போ எல்லாம் அப்படித்தானே சொல்லிக்கிறாங்க.

  ReplyDelete
 23. //தனிமரம்said...
  மதவாதிகளுக்கு எதிராக பிரச்சாரமா !ஹீ போய் வாங்க புதுத்தொடருடன்.//

  ஓகே, நேசரே.

  ReplyDelete
 24. //வேடந்தாங்கல் - கருண்said... வருக..வருக....//

  வரவேற்புக்கு நன்றி கருண்.

  ReplyDelete
 25. //இம்சைஅரசன் பாபு..said...
  எதோ நான் வந்ததால் டாஸ்மாக் வந்து மக்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறது ...:) #என் காலடி பட்டதால் தான் ...டாஸ்மாக் வந்தது ன்னு சொல்லி கொள்கிறேன் //

  மம்மி தொண்டர்ன்னு பேச்சிலேயே தெரியுதே...நான் - என்னால் - எனது -செய்வீர்களாஆஆஆஆஆஆஆஆஆ!

  ReplyDelete

 26. //FOOD NELLAI said...
  இந்த மூன்று மகான்களையும் அடியேன் தரிசிச்சிருக்கேன். :)//

  முக்தி கிடைச்சிருக்குமே!

  ReplyDelete
 27. //அமுதா கிருஷ்ணாsaid...
  சித்தர் சென்னை வர்ராறா??? வர தேதி சொன்னாக்கா ஊரை காலி செய்துடுவோம். //

  சித்தர்க்கு வடக்கே சூலம்..எனவே தெற்கே கேரளாவில் இறங்குகிறார்.

  ReplyDelete
 28. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
  ஹி ஹி ரொம்ப புகழாதீங்க//

  வெட்கங் கெட்ட மனுசன்யா நீரு!

  ReplyDelete
 29. தேர்தல் பிரச்சாரமா இல்ல தேர்தல்ல நிக்கிற ஐடிய எதும் இருக்க

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.