Tuesday, May 13, 2014

சபாஷ்..சரியான போட்டி! (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
Open your eyes....Darling!
Hold my hand...Darling!
This is a barren land
Join me and Harvest!

(ஒன்னுமில்லை..முந்தானை முடிச்சு படத்தை சப்டைட்டிலோட பார்த்தேனா..அதுல வந்த ‘கண்ணைத் தொறக்கணும் சாமி பாட்டு!)
அவ்வ்வ்:
சில நேரங்கள்ல நானா யோசிச்சேன் ஸ்டில்லோ, மேட்டரோ லிமிட்டைத் தாண்டி ஓவராப் போகிடும். அப்போல்லாம் தங்கமணி ‘இரும்யா..இதுக்காகவே அடுத்து பொம்பளைப் பிள்ளை பெத்துத் தர்றேன். அப்போத்தான் உம்ம ஆணாதிக்கப் புத்தி அடங்கும்’ன்னு சொல்லி குமட்டுலேயே குத்துவாங்க. 

முதல் குழந்தை பையங்கிறதால, நானும் அப்படியாவது பொம்பளைப் பிள்ளை வரட்டும்ன்னு இருந்தேன். அப்படி வந்துட்டா ‘பெண்கள் நாட்டின் கண்கள்’...’அவ்வையாரின் அற்புதங்கள்’ன்னு பதிவு எழுதிக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்னு மனசைத் தேத்திக்கிட்டேன். நல்லவேளை கடவுள் காப்பாத்திட்டாரு...ஒருவேளை அவரும் நம்ம ஹன்சிகா மன்றத்து ஆளா இருப்பாரோ?

'எனக்கெல்லாம் பொம்பளைப்பிள்ளை பிறக்காது’ன்னு உள்ளே பட்சி சொல்லிக்கிட்டு இருந்துச்சு. ஏன்னா, ரெண்டு அக்காகூடப் பிறந்தும் வளர்ந்தது தனியா..படிச்சது பாய்ஸ் ஸ்கூலு..காலேஜ்லயும் பாய்ஸ் குரூப்(மெக்கானிக்கல்!)-ன்னு நம்ம கட்டத்துலயே நம்மளைச் சுத்தி பசங்க தான் இருப்பாங்கன்னு இருக்கு. அதனால வீட்ல மட்டும் 1:1 ரேஷியோ எப்படி வரும்? 3:1-ன்னு தான் வரும்ன்னு நினைச்சேன். அப்படியே ஆகிட்டுது. கட்டம் சொன்னா கரெக்ட்டாத் தானே இருக்கும்? நல்லவேளை, கல்யாணமாவது பொண்ணுகூட நடக்கும்ன்னு இருந்துச்சே. அந்தவகையில பரவாயில்லை. இல்லேன்னா, அந்த ஆம்பிளை நிலைமை என்ன ஆகியிருக்கும்?

தொட்டால்...:
நம்ம கேபிளார் டைரக்ட் பண்ற தொட்டால் தொடரும் படத்தோட எல்லா ஸ்டில்லுலயும் பார்த்தீங்கன்னா, ஒரு பேக்லைட் வெளிச்சம் இருக்குது. இது சும்மா லுக்குக்காகவா இல்லே எதுவும் குறியீடான்னு தெரியலை. படம் வந்ததும் பார்க்கிறோம், கண்டுபிடிக்கிறோம்

‘நீயும் குறியீடு கண்டுபிடிக்கிற குறியானந்தாக்கள் லிஸ்ட்ல சேர்ந்திட்டியா?’ன்னு பதறாதீங்க..கீழே இருக்கிற ஸ்டில்ல ஏதோ ஒன்னு குறையுதேன்னு உத்துப் பார்த்தேனா, குறியீடு சிக்கிருச்சு!
'பிர’மாதம்:
இரண்டாவது குழந்தை பொறந்த உடனே தமிழ்வாசி பிரகாஷ்க்கு ஃபோன் பண்ணி மேட்டரைச் சொன்னேன். அப்போ கேட்டாரு பாருங்க கேள்வி.’ஏன் பாஸ்..இதை வெளில சொல்லலாமா? ஃபேஸ்புக்ல போடலாமா?’. 

அடப்பாவி மனுசா..நான் கல்யாணம் பண்ணி, லீகலாத் தானய்யா பெத்திருக்கேன். நான் என்ன அரசியல்வாதியா, இதையெல்லாம் மறைக்க? எங்கிருந்துய்யா இப்படில்லாம் எனக்குன்னு கிளம்பி வர்றீங்க..எப்படித் தான் இவரை வீட்ல சமாளிக்கிறாங்களோ, தெரியலியே..பிரகாசு, பிரமாதம்!

இருட்டு இலை:
தேர்தல் நடந்தப்போ மாமனாருக்கு ஒரு நப்பாசை. என் பையனையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்ன்னு. அதனால அவனுக்கு ட்ரெய்னிங் கொடுத்திருக்காரு.

‘எங்க சொல்லு..இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க’

‘இருட்டு இலைக்கு ஓட்டுப் போடுங்க’

‘இருட்டு இலை இல்லைடா...இரட்டை இலை’

‘இருட்டு இலை’.

‘டேய்..இதைக்கூட ஒழுங்காச் சொல்ல மாட்டியா?’

அப்போ என் தங்கமணி ‘அவன் சரியாத்தான் சொல்றான்..முதல்ல உங்க அம்மாவை கரண்ட் ஒழுங்கா கொடுக்கச் சொல்லுங்க.’ன்னு சொல்லிட்டு பிள்ளையைத் தூக்கிட்டு வந்திடுச்சாம். நல்லவேளை நான் அங்க இல்லை. அப்புறம் நாந்தான் பையனுக்கு அப்படி சொல்லிக் கொடுத்தேன்னு நினைச்சிருப்பாரு!
எப்படி இருந்த நான்..!

ஃபோபியா:
முன்னெல்லாம் புதுசா ஏதாவது நோய் கண்டுபிடிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சா சினிமாக்காரங்களுக்கு கொண்டாட்டம் ஆகிடும். தேவதாஸ் கதையைத் தூசிதட்டி ‘காதலனுக்கு அந்த நோய்’ன்னு கிளைமாக்ஸ்ல ரத்தவாந்தி எடுக்க வச்சிடுவாங்க. அந்த நோயை விட்டுட்டுப் பார்த்தால், மீதி எல்லாமே அதே பழைய கதையாத்தான் இருக்கும். ஹீரோ பெண்பித்தரா இருப்பார். திடீர்னு திருந்தி ஹீரோயினை சின்சியரா காதலிப்பார். கிளைமாக்ஸில் தனியாவோ, ஹீரோயினையும் கூட்டிக்கிட்டோ பரலோகம் போவார்.

இப்போ என்ன ட்ரெண்ட்டுன்னா, புதுசா ஏதாவது நோய் வந்துட்டா, கஜினி (எதுக்கு வம்பு..Memento) கதையை தூசி தட்டி, ஹீரோவுக்கு அந்த நோய்..ஆனாலும் எப்படி பழிவாங்கிறான்னு சொல்ல ஆரம்பிச்சிடுறாங்க. தேவதாஸ் கதை பலவருசமா சக்சஸ்ஃபுல்லா செல்லுபடியாச்சு. ஆனா ஏனோ தெரியலை, கஜினிக்கு அப்புறம் தாண்டவம்-நான் சிகப்பு மனிதன்னு எதுவுமே தேறலை. நம்ம பயமெல்லாம் நம் படைப்பாளிகள் கடுப்பாகி, (நம்மையும்) மறுபடி ரத்தவாந்தி எடுக்க வைக்கக் கிளம்பிடுவாங்களோன்னு தான்!
பத்மினி ஸ்டில்ஸ்:
ரொம்ப நாளாவே சில பதிவர்கள் மற்றும் மன்றக்கண்மணிகள், உங்களுக்கு மட்டும் எப்படி பாஸ் பத்மினி ஸ்டில் இப்படி மாட்டுது? எங்க இருந்து இப்படிப் பிடிக்கிறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னிக்கு அந்த ரகசியத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். நாலஞ்சு வருசம் முன்னாடி, நான் டெல்லில இருந்தப்போ ஹிந்தி கத்துப்போம்ன்னு முடிவு பண்ணேன். ஒரு ஹிந்தி நண்பரும் ஹிந்திப்படம் பாரு..சீக்கிரம் கத்துக்கலாம்ன்னு சில சிடி கொடுத்தாரு. அதுல ஒன்னு பத்மினி நடிச்ச Mera Naam Joker. அரே பாப்ரி பாப்..இதென்ன இப்படி நடிச்சிருக்குன்னு மிரண்டுட்டேன். கவர்ச்சி மலை ச்சே, மழை. 


நம்ம தலைவிக்கு நாட்டியப் பேரொளின்னு பேர் இருக்கில்லியா? ஏன் அந்த பேருன்னா அவங்க நாட்டியத்தை தமிழ்லயும் பேரொளியை ஹிந்திலயும் காட்டியிருக்காங்க, அதான். எல்லாம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தந்த தைரியம். தமிழன் ஹிந்தி படிக்க மாட்டான்..யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டாங்க போல. ஆனா நாம யாரு? அப்போத்தான் யோசிச்சேன். ஒரு படத்திலேயே இப்படின்னா...? தேடி பத்மினியோட ஹிந்திப்படங்களை கலெக்ட் பண்ணேன். (இப்போப் புரியுதா, ஏன் இன்னும் எனக்கு ஹிந்தி தெரியலைன்னு!)
முகத்தைப் பார்த்தவங்கல்லாம் கையைத் தூக்குங்க!
அந்த படங்கள்ல இருந்து எடுத்த ஸ்நாப் ஷாட் தான், இங்க நான் போடற ஸ்டில்ஸ். இது தான் என் தொழில்(!) ரகசியம். இனி மன்றக்கண்மணிகளும் இதை ஃபாலோ பண்ணலாம். ஆனா ஒரு கடும் எச்சரிக்கை. பத்மினி நடிச்ச ஹிந்தி ஒரிஜினல் படத்துல இருந்து தான் ஸ்டில் எடுக்கணும். உணர்ச்சிவசப்பட்டு, அந்த படத்தோட தமிழ் ரீமேக்ல இருந்து ஸ்டில் போட்டீங்க,.........உங்களை அந்த ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------ஃபேஸ்புக் அப்டேட்ஸ்:

ஃபேஸ்புக்ல பல அற்புதமான(!) கருத்துக்களை எழுதிக்கிட்டு வர்றேன். ஃபேஸ்புக்ல இல்லாதவங்க படிக்க, கீழே கொடுத்திருக்கேன். பார்த்துக்கோங்க:

1. என்னது, ஜல்லிக்கட்டுக்குத் தடையா?

அப்போ ராதா டான்ஸை இனிமே நாங்க பார்க்க முடியாதா?...வெரி பேட்.
2. // 46 வயதான நடிகை ஊர்வசி கர்ப்பம் - செய்தி//

ஹாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில், இந்த சாதனையைச் செய்த ஊர்வசி அக்காவைப் பாராட்டுகிறோம்.

# முருங்கைக்காய்க்கு உண்மையிலேயே சக்தி இருக்கோ?

3.  அண்ணன் கிளம்பிட்டேன்..எல்லா ஏற்பாடும் ரெடியா?

ரெடி பாஸ்!

அப்புறம், காரியம் முடியவும் ஊருக்குள்ள அண்ணனைப் பத்தி யாராவது தப்பாப் பேசாம பார்த்துக்கோங்க.

ஓகே பாஸ்.

குறிப்பா ஃபேஸ்புக்ல எவனும் அண்ணனை குறைசொல்லி ஸ்டேடஸ் போடாம பார்த்துக்கோங்க.

ஓகே பாஸ்.

அப்போ, வரட்டா?

பாஸ்...

என்ன?

கூட்டம் நிறைய இருக்கிற இடத்துல குண்டு வைங்க. குறிப்பா குண்டு வெடிக்கும்போது புகை உங்க மூஞ்சில படாம பார்த்துக்கோங்க.

ஐ லைக் யூ பிரதர்ஸ்!


4. மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத் - என்று எழுதும் மீடியா புண்ணியவான்கள்,

கணவர் சுந்தர்.சியோடு வரிசையில் நின்று வாக்களித்த நடிகை குஷ்பு... - என்று எழுதி எங்கள் தங்கம் சுந்தர்.சி மனதை நோகடிப்பது ஏன்? 

இவண்
முரட்டுக்காளை சுந்தர்.சி ரசிகர் மன்றம்

5. நண்பர் வினையூக்கியின் இந்த புகைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன். பலவிதமான சிந்தனைகளை இந்த படம் கிளறிக்கொண்டே இருக்கிறது.

வீல் சேர் இருக்கிறது.கால்களும் இருக்கின்றன. உடல் மட்டும் இல்லை. ஆண்டவன் தனக்குக் கொடுத்ததை மறைத்துவிட்டு, கொடுக்காததை மட்டும் காட்சிப்படுத்துவதன் மூலம் வினையூக்கி சொல்லவருவதென்ன?

‘பொன் இருக்க வேண்டிய இடத்தில் பூவை வைப்பது போல, உடலின் இடத்தில் பூவை வைத்திருப்பது ஏன்?

கல்லூரி ஹாஸ்டலில் முதல்ஆண்டில் என் ரூம் மேட் அவர். போலியோவால் பாதிக்கப்பட்டவராக, ஒரு குழந்தையைப் போல் எங்கள் ரூமிற்குள் அவர் நுழைந்தது ஞாபகம் வருகிறது. அதன்பின் அவர் அடைந்த உயரம், நாங்கள் நினைத்துப்பார்க்காதது.

மோனாலிசா ஓவியத்தின் மர்மப்புன்னகை போல், வினையூக்கி கடவுள் மேல் வீசிய கேலிப்புன்னகையே இந்தப் புகைப்படம் !
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

 1. அனைத்து செய்திகளும் சுவையாக எழுதி கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்! குறீப்பாக வினையூக்கியின் அந்த படம் சூப்பர்! நன்றி!

  ReplyDelete
 2. //Open your eyes....Darling!//
  ஒங்கூர்ல "சாமி" ய darling ன்னுதான் சொல்ல்வீங்களோ.என்னா ஒரு நெருக்கம்டா "சாமி" சாரி(sorry) "darling"

  ReplyDelete
 3. //எப்படி இருந்த நான்..!//
  "நாற்காலி" ல கால்மேல் கால் போட்டு அழக்க்க்கா இருக்க வேண்டிய புள்ளய இப்பிடி "பப்பரப்பே" ன்னு கால விரிச்சு தரையில உக்கார வச்சுப்புட்டியே. இது ஒனக்கே நல்லாருக்கா.(மைண்ட் வாய்ஸ் "பாக்கதுக்கு எனக்கு நல்லாத்தான் இருக்கு")

  ReplyDelete
 4. உங்கள் யோசனைகள் எல்லாம் பிரமாதம்!கடவுளையும் ஹன்சிகா ரசிகர் மன்றத்தில் இணைத்துக் கொண்டீர்கள்,ஹூம்.........பாவம் அவர்!

  ReplyDelete
 5. ஹிந்தி மட்டுமல்ல... இனிமேலும் நீங்கள் நினைப்பது தெரிந்து கொள்வது சிரமம் தான்...

  முருகா...!

  ReplyDelete
 6. "Open your eyes....Darling!
  Hold my hand...Darling!
  This is a barren land
  Join me and Harvest"

  heart touching words.

  ReplyDelete
 7. SUPER sengovi nalla jaliya eludhareenga

  ReplyDelete
 8. "நல்லவேளை கடவுள் காப்பாத்திட்டாரு...ஒருவேளை அவரும் நம்ம ஹன்சிகா மன்றத்து ஆளா இருப்பாரோ?"

  ரோஜா , ரம்யா கிருஷ்ணன் , மீனா மன்றத்து ஆளா இருப்பார் .
  ஏன்னா இந்த மாமிகள் எல்லாம் சாமிகள் வேஷத்துல நடிச்சிருக்கு .

  ReplyDelete
 9. "பெண்கள் நாட்டின் கண்கள்’...’அவ்வையாரின் அற்புதங்கள்’ன்னு பதிவு எழுதிக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்னு மனசைத் தேத்திக்கிட்டேன்"

  கடவுள் இருக்காரு குமாரு .

  ReplyDelete
 10. "நல்லவேளை, கல்யாணமாவது பொண்ணுகூட நடக்கும்ன்னு இருந்துச்சே. அந்தவகையில பரவாயில்லை. இல்லேன்னா, அந்த ஆம்பிளை நிலைமை என்ன ஆகியிருக்கும்?"

  உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் .

  ReplyDelete
 11. இரட்டை இலையும் இல்ல இருட்டு இலையும் இல்ல ,
  அது திருட்டு இலை.

  (அண்ணன் வீட்டுக்கு ஆட்டோ வருது டோய். டோய் டோய் டொட்ட டோய் )

  ReplyDelete
 12. ஹீரோவுக்கு எய்ட்ஸ் நோய் இருக்குனு எவனாவது படம் எடுக்கறான பாருங்க .

  ReplyDelete
 13. ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி நீதான் எந்தன் நக்மா நக்மா...

  எப்பன்னே போஜ்புரி கத்துக்க போறீங்க .

  ReplyDelete
 14. "பேஸ்புக்ல பல அற்புதமான(!) கருத்துக்களை எழுதிக்கிட்டு வர்றேன். ஃபேஸ்புக்ல இல்லாதவங்க படிக்க, கீழே கொடுத்திருக்கேன். பார்த்துக்கோங்க

  "what an idea sengovi ji .

  ReplyDelete
 15. "என்னது, ஜல்லிக்கட்டுக்குத் தடையா?"

  முரட்டு காளையும் தடை பண்ணிட்டாங்க.
  குஸ்பு ரசிகரான என்னாலேயே தாங்க முடியலயே ? சுந்தர் சி ரசிகர் நீங்க எப்படி தாங்க போறிங்களோ ?

  "அப்போ ராதா டான்ஸை இனிமே நாங்க பார்க்க முடியாதா?...வெரி பேட்"

  அதான் கார்த்திகாவும் துளசியும் இருக்குல்ல, டோன்ட் வொர்ரி பி ஹாப்பி.

  ReplyDelete
 16. "கீழே இருக்கிற ஸ்டில்ல ஏதோ ஒன்னு குறையுதேன்னு உத்துப் பார்த்தேனா, குறியீடு சிக்கிருச்சு"

  எனக்கும் அந்த குறியீடு தெரிஞ்சு போச்சு .
  ஹீரோயின் கை ஹீரோ முதுக தொடுறது தெரியுது . ஆனா ஹீரோ கை ஹீரோயின எங்க தொடுதுன்னு தெரியல .
  தொட்டால் தொடரும்.

  ReplyDelete
 17. ஆஹா எனக்கும் ஹிந்திப்படம் பார்க்கும் ஆசை இன்றுவரை உண்டு ஆனால் நீங்கள் ரசித்த பார்ட்டி பத்மினி நான் அறியேன் நானும் இன்னும் குழ்ந்தைதான்! ஆவ்

  ReplyDelete
 18. ஆஆஆஆ பத்மினியா ? சூப்பருங்கோ !

  ReplyDelete
 19. Gis Desh me Ganga behthi Hai - படம் பாக்கலையா செங்கோவி? அதுவும் ராஜ்கபூர் படம்தான். அதுலயும் ‘பேரொளி’ வீசியிருக்கும். (ஜோக்கரை விடக் குறைவுதான்). ஹி... ஹி... ஹி...

  ReplyDelete
 20. @வானரம் .
  //கீழே இருக்கிற ஸ்டில்ல ஏதோ ஒன்னு குறையுதேன்னு//
  ஒமக்கு ஒண்ணு மட்டுந்தானா.எனக்கு ரெண்டுமே தெரியல சாமி சாரி டார்லிங்

  ReplyDelete
 21. //‘தளிர்’ சுரேஷ் said...
  குறீப்பாக வினையூக்கியின் அந்த படம் சூப்பர்! //

  உண்மை தான்..அற்புதமான படம்.

  ReplyDelete
 22. ////Open your eyes....Darling!//
  ஒங்கூர்ல "சாமி" ய darling ன்னுதான் சொல்ல்வீங்களோ.//

  ஏஞ்சாமி, இது உங்களுக்கே நல்லாயிருக்கா?-ன்னு கேட்டா, அங்கே சாமிக்கு அர்த்தம் ஃப்ரெண்ட் தான். இறைவா-கடவுள் தான் நாம ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துறோம். மொழிபெயர்ப்பாளர் சரியாத்தான் பெயர்ந்திருக்கிறார். ஊர்வசி அங்கே கூப்பிடுவது சாமியை அல்ல, நம் ஆசாமியை.

  ReplyDelete
 23. //Subramaniam Yogarasa said...
  உங்கள் யோசனைகள் எல்லாம் பிரமாதம்!கடவுளையும் ஹன்சிகா ரசிகர் மன்றத்தில் இணைத்துக் கொண்டீர்கள்,ஹூம்.........பாவம் அவர்!//

  நம் மன்றத்தின் மகிமை மேல் உலகம் வரை எட்டிவிட்டது!

  ReplyDelete
 24. //திண்டுக்கல் தனபாலன் said...
  ஹிந்தி மட்டுமல்ல... இனிமேலும் நீங்கள் நினைப்பது தெரிந்து கொள்வது சிரமம் தான்...

  முருகா...!//

  ஹாஹா..ரைட்டு.

  ReplyDelete
 25. // r.v.saravanan said...
  SUPER sengovi nalla jaliya eludhareenga//

  நன்றி பாஸ்.

  ReplyDelete
 26. // வானரம் . said...
  "நல்லவேளை கடவுள் காப்பாத்திட்டாரு...ஒருவேளை அவரும் நம்ம ஹன்சிகா மன்றத்து ஆளா இருப்பாரோ?"

  ரோஜா , ரம்யா கிருஷ்ணன் , மீனா மன்றத்து ஆளா இருப்பார் .
  ஏன்னா இந்த மாமிகள் எல்லாம் சாமிகள் வேஷத்துல நடிச்சிருக்கு .//

  அவங்கள்லாம் சாமியா நடிச்சு சாமியைவே வெறுப்பேத்துனவங்க. நம் ஹன்சி தேவதை. கடவுளுக்கு தேவதைகளைப் பிடிக்கும்!

  ReplyDelete
 27. //வானரம் . said...
  "பேஸ்புக்ல பல அற்புதமான(!) கருத்துக்களை எழுதிக்கிட்டு வர்றேன். ஃபேஸ்புக்ல இல்லாதவங்க படிக்க, கீழே கொடுத்திருக்கேன். பார்த்துக்கோங்க

  "what an idea sengovi ji .//

  எல்லாம் உங்களை மாதிரி ஆளுகளுக்காகத் தான்.

  ReplyDelete
 28. //வானரம் . said...
  ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி நீதான் எந்தன் நக்மா நக்மா...

  எப்பன்னே போஜ்புரி கத்துக்க போறீங்க .// அதை ஏற்கனவே யூ-டியூப் பார்த்து கத்துக்கிட்டேன்.

  ReplyDelete
 29. //தனிமரம் said...
  ஆஹா எனக்கும் ஹிந்திப்படம் பார்க்கும் ஆசை இன்றுவரை உண்டு ஆனால் நீங்கள் ரசித்த பார்ட்டி பத்மினி நான் அறியேன் நானும் இன்னும் குழ்ந்தைதான்! ஆவ்//

  நீங்க குழந்தைங்கிறதை குழந்தைகூட நம்பாது நேசரே.

  ReplyDelete
 30. //MANO நாஞ்சில் மனோ said...
  ஆஆஆஆ பத்மினியா ? //

  அண்ணே..பப்ளிக்..பப்ளிக்.

  ReplyDelete
 31. //
  Blogger பால கணேஷ் said...
  Gis Desh me Ganga behthi Hai - படம் பாக்கலையா செங்கோவி? அதுவும் ராஜ்கபூர் படம்தான். அதுலயும் ‘பேரொளி’ வீசியிருக்கும்.//

  ஓட்டி, ஓட்டி பார்த்தாச்சு..நீங்கள்லாம் அப்பவே பார்த்துட்டு, கமுக்கமா இருந்த ஆட்கள் தானே!

  ReplyDelete
 32. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 33. pombalai pullai pettha paavam entra range-la katturai eludhura nee seekiram saava :)

  ur mom & sister & ur wife & ur paiyanukku kalyanam panna poradhum pombalai thaan-ya

  pombalai-na avalvu mattama.. dhoodheri

  ReplyDelete
 34. ohh payama comment publish panna

  ambalai-na comment publish pannalam :)

  ReplyDelete
 35. @tamil tamizh

  பதிவை நல்லாப் படிங்க சகோ..பொம்பளைப் பிள்ளை வேணும்ன்னு எதிர்பார்த்து ஏமாந்தததைத் தான் சொல்லி இருக்கேன்.

  இது நகைச்சுவைப் பதிவு என்பதால், நீங்கள் நானா யோசிச்சேனுக்கு புதிது என்பதால் நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். டேக் இட் ஈசி.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.