Wednesday, June 18, 2014

மீனா ரசிகர் மன்றம் ஆரம்பம்! (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: இது ஒரு கேடுகெட்ட பதிவு. எனவே யோக்கியர்கள் இந்தப் பதிவை தவிர்க்கவும். (அதாவது வழக்கம்போல் கமுக்கமாகப் படித்துச் சிரித்துவிட்டு, படிக்காத மாதிரியே மெயிண்டெய்ன் செய்யவும்!)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
காணாத கண்ணும் கண்ணல்ல
கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல
வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல
விலை தந்து வாங்கும் பொன்னல்ல...!
த்ரிஷ்யம் பார்த்ததுல இருந்து பழைய நினைப்பு பீறிக்கிட்டு வந்திடுச்சு. உடனே மீனா ரசிகர் மன்றத்தை தூசி தட்டி மீண்டும் ஆரம்பிச்சுட்டேன். யூத்கள் மட்டுமில்லாமல், அங்கிள்ஸும் ஜாயின் பண்ணிக்கலாம்!

மீனா நடிச்ச படங்களிலேயே எனக்குப் பிடிச்சது ரிதம் தான். ஏன்னா ஹீரோயின்ஸை அழகாகக் காட்டுறதில் இயக்குநர் வசந்த் வல்லவர். நெட்டில் அந்தப் படத்தைத் தேடினால் காணோம். மன்றத்து சிடி கலெக்சனுக்கு அந்தப் பட சிடி தேவைப்படுகிறது. மன்றக் கண்மணிகளிடம் இருந்தால்....!

பாலிடிக்ஸ்:
ஒரு கூலித் தொழிலாளி தன் காதலியை கஷ்டப்பட்டு எஞ்சினியரிங் படிக்க வைச்சான். அது படிச்சு முடிச்சதும் டாட்டா காட்டுச்சு. கடுப்புல மூஞ்சில ஆசிட் அடிச்சுட்டான். இன்னொருத்தனும் அதே மாதிரி படிக்க வைச்சு பல்பு வாங்குனான். துக்கம் தாங்காம, தற்கொலை பண்ணிக்கிட்டான். 

ரெண்டு முடிவுமே முட்டாள்தனம் தான், ஆனால் நமக்குப் புரியாத விஷயம், முதல் பிரச்சினைக்கு பொங்கித் தீர்த்த போராளீஸ் எல்லாரும் இரண்டாவது பிரச்சினையைப்போ மிக்சர் சாப்பிட்டது ஏன்? அதுபுரிஞ்சா, நாமளும் புர்ச்சிவாதி ஆகிடலாம்!
ந’ங்கு:
நமீதா ’தமிழ்நாட்டு மச்சானைத் தான் கல்யாணம் பண்ணிக்கப்போறதா முடிவு பண்ணியிருக்கார்’னு நியூஸ் வரவும் சந்தோசமாகிடுச்சு. சரி, ஒரு அப்ளிகேசனைப் போட்டு வைப்போம்ன்னு பார்த்தால் பின்னாடியே இன்னொரு நியூஸ். அவர் உண்மையான குத்துச்சண்டை கத்துக்கிட்டிருக்காராம். ஆத்தீ..இதைக் கேட்டாலே எல்லா மச்சான்ஸூம் பின்னங்கால் பிடறில அடிக்க ஓடிடுவாங்களே.

கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு ஏன் தீவிரமா குத்துச்சண்டை கத்துக்குது? ஒருவேளை நம்மளை மாதிரி யோக்கியன் யாரோ டபுள் மீனிங்ல பேசுனதைப் புரிஞ்சிக்காம, கல்யாணம் பண்ணனும்னா குத்துச்சண்டை கத்துக்கணும்னு இறங்கிடுச்சோ? ஆனாலும் இவ்ளோ அப்பாவியா இருக்கக்கூடாதும்மா!

கட்:
ஜூன் மாசத்துலே இருந்து கரண்ட் கட் இருக்காதுன்னு மம்மி சொல்லிடுச்சாம், ஆனால் கரண்ட் கட் ஆகுதாம். குய்யோ முறையோன்னு ஃபேஸ்புக்ல ஒப்பாரி. மம்மியோட நிர்வாகத் திறமை பற்றித் தெரியாம அநியாயத்துக்கு மம்மியை கரிச்சுக் கொட்டுறாங்க. கொஞ்ச வருசம் முன்னாடி ஹோட்டல்ல சாப்பாடு விலையெல்லாம் ஏறிடுச்சுன்னு கம்ப்ளைண்ட் பண்ணாங்க. மம்மி என்ன பண்ணாங்க, அம்மா மெஸ்ன்னு ஆரம்பிச்சுட்டாங்க. அவ்ளோ தான், ஹோட்டல் பிரச்சினை தீர்ந்திடுச்சு இல்லையா? அதே மாதிரி எல்லா ஊர்லயும் குடிநீர் பிரச்சினை. குளம் வெட்டி, கண்மாயை பழுதுபார்த்து, நீர்நிலைகளை பராமரிச்சு-ன்னு வெட்டியா யோசிக்காம, டக்குன்னு ‘அம்மா வாட்டர்’ கொண்டு வந்தாங்கள்ல? அவ்ளோ தான் குடிநீர் பிரச்சினை தீர்ந்துச்சா, இல்லியா? 

இப்படி எதையும் தொல்லைநோக்குப் பார்வையோட சிந்திச்சுத் தீர்த்துக்கட்டற மம்மியால் கரண்ட் பிரச்சினையை ஏன் தீர்க்க முடியலை? ஏன்னா, கரண்ட்டையும் பாக்கெட்ல அடைச்சு விக்க முடியலை. இந்த சைண்டிஸ்டுக என்ன கரண்ட்டை கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க? யூஸ்லெஸ் ஃபெலோஸ்..கரண்ட்டை மட்டும் பாக்கெட் போட்டு விற்க முடிஞ்சிருந்தா, ஊருக்கு ரெண்டே ரெண்டு கடை ஓப்பன் பண்ணி மேட்டரையே சால்வ் பண்ணியிருப்பாங்க. ’கரெண்ட்டே இல்லாம இருக்கிறதைவிட இது பரவாயில்லை தானே?’ன்னு ர.ரக்களும் விளக்கம் கொடுத்திருப்பாங்க. இதுபுரியாம மம்மியை திட்டிக்கிட்டு....


வியாபார காந்தம்:
ஊர்ல என் பையனை கடைக்குக் கூட்டிட்டுப் போய் கேட்கறதெல்லாம் வாங்கிக்கொடுத்த சின்ன மாமனார், திடீர்னு சொந்தமா ஒரு கடை ஆரம்பிச்சுட்டார். பையனுக்கு ஒரே ஜாலி. தாத்தா இம்புட்டு தின்பண்டம் வாங்கி வச்சுருக்காரேன்னு. அடடா..இது தப்பாச்சேன்னு பையனுக்கு ஃபோன்ல அட்வைஸ் பண்ணேன். ’தம்பி..அது கடை. எப்பவும் கடையில காசு கொடுக்காம எதையும் வாங்கக்கூடாது’ன்னு சொல்லவும் சரின்னு கேட்டுக்கிட்டான். அப்புறம் அவர் கடைக்குப் போனவன்கிட்ட அவர் ‘என்ன வேணும்?’ன்னு கேட்டிருக்காரு. 

ஒன்னும் சொல்லாம விலகுன்னுட்டு கடைக்குள்ள புகுந்தவன், கல்லாப்பெட்டில இருந்து பத்து ரூபாயை எடுத்துட்டு வெளில வந்து நின்னு ‘தாத்தா..இந்தா காசு..சாக்லேட் கொடு’ன்னு சொல்லி இருக்கான். மனுசன் மிரண்டுட்டாரு. ’இதெல்லாம் யாருடா ராசா உனக்கு சொல்லித் தர்றா?’ன்னு கேட்டா, ’எங்க அப்பா தான்’னு சொல்லியிருக்கான். அடுத்து ஊருக்குப் போய் அவர் முகத்துல எப்படி முழிக்கன்னு தெரியல! அவரும் பாவம்..‘ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆவோம்னு கடை வச்சா விடமாட்டாங்க போலயே’ன்னு நொந்திருப்பாரு. 

க்ரியேட்டிவிட்டி:
எந்திரன் படத்துல முதல்ல கமல்-ப்ரீத்தி ஜிந்தா ஜோடி நடிக்கிறதா இருந்தாங்க. அப்போ எடுத்த ஸ்டில்லை ஷங்கர் நெட்ல ரிலீஸ் பண்ணியிருக்கார். அது கீழே...ஜனங்களே பார்த்துக்கோங்க..எம்மேல தப்பில்லை..இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்:

அடேங்கப்பா ப்ரீத்திக்கே ‘இம்புட்டு தூரம்’ யோசிச்சிருக்காங்கன்னா, கமலுக்கு எம்புட்டு தூரம் யோசிச்சிருப்பாங்க? Unfortunately அந்த ஸ்டில் கிடைக்கலை, கமல் மன்றக் கண்மணிகள் மன்னிக்கவும்!

ஜெய் ஹிந்த்:
கூட வேலை செய்யிற குஜராத்திப் பையன் ஒரு மேட்டர் சொன்னான். குஜராத்ல விவசாயிகள்/இண்டஸ்ட்ரீஸ் தவிர்த்து வேற யாரும் விவசாய நிலங்களை வாங்க முடியாதாம். அந்தப் பையன் எஞ்சினியர் என்பதால், அவன் பெயரில் ரிஜிஸ்ட்ரேசனே பண்ண முடியாதாம். ரியல் எஸ்டேட் ஆட்களால் விவசாயம் அழிஞ்சிடக்கூடாதுன்னு அப்படி ஒரு கட்டுப்பாடாம். 

உண்மையிலேயே நல்ல திட்டம் அது. நம்மூர்ல எல்லா இடத்தையும் ஃப்ளாட் போட்டுட்டே போறதைப் பார்த்தால் பயமா இருக்கு. மோடி அந்த திட்டத்தை இந்தியா முழுக்க 2015 ஜனவரில இருந்து கொண்டுவர்றது நல்லதுன்னு நினைக்கிறேன். அதென்ன ஜனவரி கணக்குன்னு கேட்கிறீங்களா? ஹிஹி..அதுக்குள்ள நாமளும் நாப்பது ஏக்கர் வாங்கிப்போட்டுக்கலாம்ன்னு தான்!

வெறித்தனமா யோசிச்சது:
ஆண்ட்டி என்பது மெருகூட்டப்பட்ட ஃபிகர்களைக் குறிக்கும். சில நேரங்களில் சுமார் ஃபிகர்கள்கூட செம ஆண்ட்டியாக மெருகூட்டப்படுவதுண்டு

கவுதை:
யப்பா..இந்த எண்டர் கீ-யை கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சாங்க..நம்மாளுங்க கவிதையா எழுதித் தள்ளுறாங்க. குண்டூசி வித்தவன்லாம் தொழிலதிபர் மாதிரி எண்டர் கீ தட்டத் தெரிஞ்சவன்லாம் கவிஞர் ஆகிட்டாங்க. ஏன்யா, நாங்கெல்லாம் அப்படி கவிதை எழுதத் தெரியாமலா இருக்கோம்? எங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்குய்யா.. உங்களுக்கெல்லாம் எண்டர் கீயை தட்டுனாத்தான் கவிதை வரும், எங்களுக்கு ஏங்குனாலே கவிதை கொட்டும். மாமன்பொண்ணுல ஆரம்பிச்சு மீனா வரைக்கும் ஏங்கி ஏங்கி எழுதுன கவிதைகளை எடுத்துவிடவா? செத்திருவீங்கய்யா, செத்திருவீங்க!...உதாரணத்துக்கு:

மீன்கள் தூண்டிலில்
வந்தால் - சாதல்.
மீன்களே தூண்டிலாய் 
வந்தால் காதல்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

58 comments:

 1. நான் யோக்கியன். எனவே.... ஹி.... ஹி.... ஹி....!

  ReplyDelete
 2. @பால கணேஷ் நானும் யோக்கியன் தான் சார். எழுதினேனே ஒழிய படிக்கவில்லை!

  ReplyDelete
 3. \\நினைப்பு பீறிக்கிட்டு வந்திடுச்சு.\\ என்னது பீறிக்கிட்டு வந்துச்சா.......?!!. ஓ ..........நினைப்பு மட்டும் தானே............ஹி ..........ஹி ..........ஹி ..........\\இரண்டாவது பிரச்சினையைப்போ மிக்சர் சாப்பிட்டது ஏன்?\\ கேஸ் 1: ரெண்டு பேரும் இருக்காங்க.கேஸ் 2:அவனே செத்துட்டான் இனி என்ன பண்ணி எதுக்கு பிரயோஜனம்?\\அவர் உண்மையான குத்துச்சண்டை கத்துக்கிட்டிருக்காராம். ஆத்தீ..இதைக் கேட்டாலே எல்லா மச்சான்ஸூம் பின்னங்கால் பிடறில அடிக்க ஓடிடுவாங்களே.\\ என்னதான் குத்துச்சண்டை கத்துக்கிட்டாலும் நமீதா அடிச்சு வலிக்கப் போவுதா?!! செங்கோவி, இவ்வளவு அப்பாவியாவா இருப்பீரு? ஹா.........ஹா.........ஹா.........செங்கோவி, உம்ம மகன் இப்பவே இந்த கலக்கு கலக்குரானேய்யா..........சூப்பர்!!\\எந்திரன் படத்துல ப்ரீத்தி ஜிந்தா \\ தோள்பட்டைக்கு மேலே இருக்கும் முள்ளுக்கு அர்த்தமே இல்லை..........ஹி ..........ஹி ..........ஹி ..........

  ReplyDelete
 4. செங்கோவி நெசமாவே படத்தை தேடினீரா? டவுட்டா இருக்கு??

  https://www.youtube.com/watch?v=daqXIUQYWQs

  ReplyDelete
 5. @Jayadev Das நான் கேட்டது டிவிடி torrent link.

  ReplyDelete
 6. //r.v.saravanan said... [Reply]
  present sir//

  இவரும் நம்மளை மாதிரியே யோக்கியர் தான் போல!

  ReplyDelete
 7. மீனா எல்லாம் ஓகே, நயன்தாரா பஞ்சாயத்து இன்னும் தீரல, அதுக்கு ஒரு தீர்ப்ப சொல்லுங்க தலைவரே.

  ReplyDelete
 8. //கல்யாணம் பண்ணனும்னா குத்துச்சண்டை கத்துக்கணும்னு இறங்கிடுச்சோ?// ஏன்ணே ஏன்?

  ReplyDelete
 9. //ஒன்னும் சொல்லாம விலகுன்னுட்டு கடைக்குள்ள புகுந்தவன், கல்லாப்பெட்டில இருந்து பத்து ரூபாயை எடுத்துட்டு வெளில வந்து நின்னு ‘தாத்தா..இந்தா காசு..சாக்லேட் கொடு’ன்னு சொல்லி இருக்கான்//
  புலிக்குப்[ பொறந்தது பூனயாகுமான்னு சொல்லுவாங்க. - நெசமா சொல்லுங்க இந்த டெக்னிக்க(யும்) சொல்லிக்கொடுத்தது நீங்கதானே?

  ReplyDelete
 10. //நம்மளை மாதிரி யோக்கியன் யாரோ டபுள் மீனிங்ல பேசுனதைப் புரிஞ்சிக்காம, கல்யாணம் பண்ணனும்னா குத்துச்சண்டை கத்துக்கணும்னு இறங்கிடுச்சோ?///

  இது கிளாஸ்!

  ReplyDelete
 11. //ஒன்னும் சொல்லாம விலகுன்னுட்டு கடைக்குள்ள புகுந்தவன், கல்லாப்பெட்டில இருந்து பத்து ரூபாயை எடுத்துட்டு வெளில வந்து நின்னு ‘தாத்தா..இந்தா காசு..சாக்லேட் கொடு’ன்னு சொல்லி இருக்கான்//
  புலிக்குப்[ பொறந்தது பூனயாகுமான்னு சொல்லுவாங்க. - நெசமா சொல்லுங்க இந்த டெக்னிக்க(யும்) சொல்லிக்கொடுத்தது நீங்கதானே?

  ReplyDelete
 12. ஆமா, ப்ரீத்தி ஜிந்தா மேல இம்புட்டு ஆணி இருக்கே, இதெயெல்லாம் தாண்டி இந்த சீன்ல நம்ம தலைவர் எப்படி முத்தம் குடுப்பாரு? - ஒருவேள அதனாலதான் விலகிட்டாரோ?

  ReplyDelete
 13. இப்போ எனக்கு ஒரு செம டவுட்டு, நான் யோக்கியனா இல்லையா?

  ReplyDelete
 14. மீனா ரசிகர் மன்றத்தில் சேர்வதற்கு யூத்கள் ஆர்வமாகவே உள்ளோம்.. ஆனா, நா என்ன சொல்ல வர்றேன்னா, ஏன் மீனாக்கு ஒன்னு, நயனுக்கு ஒன்னு, நமீதாக்கு ஒன்னு சுகன்யாக்கு ஒன்னுன்னு தனியா... பேசாம "மெருகூட்டப்பட்ட பிகர்கள் ரசிகர் மன்றம்"ன்னு பொதுவா ஆரம்பிசிரலாமே!

  ReplyDelete
 15. // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

  இப்போ எனக்கு ஒரு செம டவுட்டு, நான் யோக்கியனா இல்லையா?////

  நாம எந்த காலத்துல பாஸ் யோக்கியனா இருந்தோம்.. திரைகதை சூத்திரத்தையே ரெண்டு நாள் கழிச்சிதான் படிப்போம், ஆனா இந்த பதிவ போட்ட அடுத்த நிமிஷமே படிச்சி கமென்ட் பண்ணிட்டு இருக்கோமே, இதுலயே தெரியல நம்ம லட்சணம்!

  ReplyDelete
 16. // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  மீனா எல்லாம் ஓகே, நயன்தாரா பஞ்சாயத்து இன்னும் தீரல, அதுக்கு ஒரு தீர்ப்ப சொல்லுங்க தலைவரே.// அதான் சொல்லிட்டேனே, டேமேஜ்ன்னு!

  ReplyDelete
 17. // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

  புலிக்குப்[ பொறந்தது பூனயாகுமான்னு சொல்லுவாங்க. - நெசமா சொல்லுங்க இந்த டெக்னிக்க(யும்) சொல்லிக்கொடுத்தது நீங்கதானே?///

  ம்ஹூம்..அவன் தான் எனக்குச் சொல்லித் தர்றான்.

  ReplyDelete
 18. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  ஆமா, ப்ரீத்தி ஜிந்தா மேல இம்புட்டு ஆணி இருக்கே, இதெயெல்லாம் தாண்டி இந்த சீன்ல நம்ம தலைவர் எப்படி முத்தம் குடுப்பாரு? - ஒருவேள அதனாலதான் விலகிட்டாரோ?//

  ஆஹா..அரிய கண்டுபிடிப்பு.

  ReplyDelete
 19. // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  இப்போ எனக்கு ஒரு செம டவுட்டு, நான் யோக்கியனா இல்லையா?//

  உங்களை யோக்கியன்னு சொல்லிட்டா, யோக்கியனை என்னன்னு சொல்றது?

  ReplyDelete
 20. // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  இப்போ எனக்கு ஒரு செம டவுட்டு, நான் யோக்கியனா இல்லையா?//

  உங்களை யோக்கியன்னு சொல்லிட்டா, யோக்கியனை என்னன்னு சொல்றது?

  ReplyDelete
 21. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  மீனா ரசிகர் மன்றத்தில் சேர்வதற்கு யூத்கள் ஆர்வமாகவே உள்ளோம்.. ஆனா, நா என்ன சொல்ல வர்றேன்னா, ஏன் மீனாக்கு ஒன்னு, நயனுக்கு ஒன்னு, நமீதாக்கு ஒன்னு சுகன்யாக்கு ஒன்னுன்னு தனியா... பேசாம "மெருகூட்டப்பட்ட பிகர்கள் ரசிகர் மன்றம்"ன்னு பொதுவா ஆரம்பிசிரலாமே!//

  ஆஹா..நல்ல யோசனை..சிறு திருத்தம்..”மெருகூட்டப்பட்ட பிகர்கள் ரசிகர் மன்றக் கூட்டமைப்பு”.

  ReplyDelete
 22. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

  இப்போ எனக்கு ஒரு செம டவுட்டு, நான் யோக்கியனா இல்லையா?////

  நாம எந்த காலத்துல பாஸ் யோக்கியனா இருந்தோம்.. திரைகதை சூத்திரத்தையே ரெண்டு நாள் கழிச்சிதான் படிப்போம், ஆனா இந்த பதிவ போட்ட அடுத்த நிமிஷமே படிச்சி கமென்ட் பண்ணிட்டு இருக்கோமே, இதுலயே தெரியல நம்ம லட்சணம்!//

  ஹாஹா...எங்கே சூத்திரம் அடுத்த பதிவுன்னு யாரும் கேட்டதில்லை. ஆனா நானா யோசிச்சேன் என்னாச்சுன்னு கேட்காத ஆளில்லை!

  ReplyDelete
 23. // யூத்கள் மட்டுமில்லாமல், அங்கிள்ஸும் ஜாயின் பண்ணிக்கலாம்! ///கொழுப்புன்னா இதான்யா.ரெண்டு பெத்தாச்சு, அங்கயும் அங்கிள் ஆயாச்சு . இன்னமும் இந்த ஆண்டி மீனா படம் பாத்துட்டு ஜொள்ளு வேற. அது என்னா...(நானா யோசிச்சது ) ???

  ReplyDelete
 24. // Manickam sattanathan said...
  அது என்னா...(நானா யோசிச்சது ) ???////

  வரலாறு தெரியாம பேசுறீங்க அண்ணே!

  ReplyDelete
 25. நம்மி அம்மாவுக்கு விசியகாந் சாரை பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறன்.
  பாவம் மனுசன் அம்மா இப்படி மாறுவா என்று தெரிஞ்சிரந்தால் எங்கள் அண்ணாவிலேயெ புழிஞ்சிட்டு விட்டிருப்பார்.....

  ReplyDelete
 26. இந்த விவசாய நிலச் சட்டங்கள் வன்னியில் அமூலில் இருந்தது. உங்கள் சொந்த வயல் காணியில் கூட வீடு கட்ட அனுமதியில்லை....

  ReplyDelete
 27. //mathi sutha said...
  நம்மி அம்மாவுக்கு விசியகாந் சாரை பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறன்.//

  அவர் மேல உங்களுக்கு என்னய்யா கோபம்!

  ReplyDelete
 28. //mathi sutha said...
  இந்த விவசாய நிலச் சட்டங்கள் வன்னியில் அமூலில் இருந்தது. உங்கள் சொந்த வயல் காணியில் கூட வீடு கட்ட அனுமதியில்லை....//

  நல்ல திட்டம்.

  ReplyDelete
 29. அண்ணே நான் சொன்னது “எங்கள் அண்ணா” படம் பற்றி அவ்.. அவ்...

  ReplyDelete
 30. //mathi sutha said...
  அண்ணே நான் சொன்னது “எங்கள் அண்ணா” படம் பற்றி அவ்.. அவ்...//

  அது புரிஞ்சதுய்யா..அப்போ சிட்டு மாதிரி இருந்துச்சு, இப்போ லட்டு மாதிரி ஆகிடுச்சு.

  ReplyDelete
 31. //mathi sutha said...
  அண்ணே நான் சொன்னது “எங்கள் அண்ணா” படம் பற்றி அவ்.. அவ்...//

  அது புரிஞ்சதுய்யா..அப்போ சிட்டு மாதிரி இருந்துச்சு, இப்போ லட்டு மாதிரி ஆகிடுச்சு.//

  அது எந்த ஊருன்னே, பலாப்பழ சைசுக்கு லட்டு செய்யறது?

  ReplyDelete
 32. @Dr. Butti Paul (Real Santhanam Fanz)ஹாஹா..உருண்டையா இருக்கேன்னு சொன்னேன்..சென்னைல தானே இந்த லட்டு செய்யப்பட்டது!

  ReplyDelete
 33. குஷ்புவுக்கே கோவில் கட்டுன இனம்ய்யா நம்ம இனம் மீனா ஆண்டிக்கு கட்டாம விட்டுருவோமா ? மீனா ஆண்டி மறுபடியும் கர்ப்பமா இருப்பதா சொன்னாங்களே...கொளுத்தி போடுவோம்....

  ReplyDelete
 34. இந்த நானா யோசிச்சேன் என்பது உம்ம மகனை இனி சொல்ல சொன்னனும் செம...அதோட செங்கோவியையும் மாட்டி விட்டுருக்கான் பாருங்க சூப்பர்ர்ர்ர்...

  ReplyDelete
 35. குத்துச்சண்டைங்கறது ஒரு குறியீடுண்ணே.... அதுனால தைரியமா அப்ளிக்கேசனை போட்டு வைங்க.....

  ReplyDelete
 36. உங்க கரண்ட்டு மேட்டரை உல்டா பண்ணி ஃபேஸ்புக்ல ஸ்டேட்டசா போட்டாச்சி.... எப்பூடி.......

  ReplyDelete
 37. ப்ரீத்தி ஜிந்தாவா அது? ஒண்ணுமே தெரியலீங்களே.....

  ReplyDelete
 38. பிரித்தி ஜிந்தாவும் ஆண்டியா செங்கோவியாரே ??? சங்கர்+கமல் கூட்டு விளம்பர காட்சிப்படம் முன்னர் (ஸ்டில்) கொழும்பில் சேமித்து வைத்து இருந்தேன் பின் என்னாச்சு என்றே தெரியாது! காலம் பலதை கவிதை எழுத வைக்குது:))

  ReplyDelete
 39. //இம்புட்டு தூரம்’ யோசிச்சிருக்காங்கன்னா///செம்ம ஷார்ப்பான படமா இருக்கும் போலிருக்கே??

  ReplyDelete
 40. இதெல்லாம் யாருடா ராசா உனக்கு சொல்லித் தர்றா?’ன்னு கேட்டா, ’எங்க அப்பா தான்’னு சொல்லியிருக்கான்.//ஊருக்கு வந்தா ஆப்புதானா? ஐ ஜால்லி

  ReplyDelete
 41. ’இதெல்லாம் யாருடா ராசா உனக்கு சொல்லித் தர்றா?’ன்னு கேட்டா, ’எங்க அப்பா தான்’னு சொல்லியிருக்கான்.////பொறந்திருக்குற 'தம்பி'க்கு அவரே சொல்லிக் குடுத்துடுவாரு.நீங்க ரிஸ்க் எடுக்க வேணாம்,ஃப்ரீ ஆயிடலாம்!ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 42. மீன்கள் தூண்டிலில்வந்தால் - சாதல்.மீன்களே தூண்டிலாய் வந்தால் காதல்.////சூப்பர்,கங்கிராட்ஸ்!

  ReplyDelete
 43. மீன்கள் தூண்டிலில்வந்தால் - காதல்.மீன்களே தூண்டிலாய் வந்தால்-சாதல்.////இப்புடிக் கூட வரலாம்,ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 44. // MANO நாஞ்சில் மனோ said...
  இந்த நானா யோசிச்சேன் என்பது உம்ம மகனை இனி சொல்ல சொன்னனும் செம// சீக்கிரம் அவனே எழுதுவான்!!!!

  ReplyDelete
 45. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //குத்துச்சண்டைங்கறது ஒரு குறியீடுண்ணே.... அதுனால தைரியமா அப்ளிக்கேசனை போட்டு வைங்க.....//

  அப்படி தைரியம் சொல்லுங்கண்ணே!

  //உங்க கரண்ட்டு மேட்டரை உல்டா பண்ணி ஃபேஸ்புக்ல ஸ்டேட்டசா போட்டாச்சி.... எப்பூடி.......//

  எப்படியும் உள்ளே தூக்கி வைக்கறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க.

  //ப்ரீத்தி ஜிந்தாவா அது? ஒண்ணுமே தெரியலீங்களே.....//

  அதே டவுட் தான் எனக்கும்!

  ReplyDelete
 46. //தனிமரம் said...
  காலம் பலதை கவிதை எழுத வைக்குது:))// ரொம்ப வருத்தப்படறாரே!

  ReplyDelete
 47. //கோவை ஆவி said...
  //இம்புட்டு தூரம்’ யோசிச்சிருக்காங்கன்னா///செம்ம ஷார்ப்பான படமா இருக்கும் போலிருக்கே??// ஹா..ஹா..யார் ஐடியா இதுன்னு தெரியலை!

  ReplyDelete
 48. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  ஊருக்கு வந்தா ஆப்புதானா? ஐ ஜால்லி//

  ரொம்ப நல்லவன்(சத்தியமா)!!!!!!!!!!!!

  ReplyDelete
 49. //Subramaniam Yogarasa said...
  பொறந்திருக்குற 'தம்பி'க்கு அவரே சொல்லிக் குடுத்துடுவாரு.நீங்க ரிஸ்க் எடுக்க வேணாம்,ஃப்ரீ ஆயிடலாம்!ஹ!ஹ!!ஹா!!!// உண்மை தான். ரெண்டாவது ஆளும் ஆரம்பிச்சுட்டா, நம்ம பாடு திண்டாட்டம் தான்.

  ReplyDelete
 50. நான் வந்துட்டேன் . அப்பாடி உங்களை எல்லாம் பார்த்து எம்பூட்டு நாளாச்சு .
  மீன்ஸ் குட்டி ,நமீ தண்ணீர் தொட்டி , ப்ரீத்தி பியுட்டி ( இந்த ஆளு மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுமா ) சுகன்யா பாட்டி,பேர் தெரியாத மூணாவது பட நாட்டி ,
  நல்லா இருக்கீங்களா கண்ணுகளா ? கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க , இந்த ஆளு உங்க படத்துக்கு மேலயும் கீழேயும் ஏதோ எழுதி இருக்காரு.அத படிச்சுட்டு உடனே வந்துறேன் செல்லங்களா .

  ReplyDelete
 51. மீனா நடிச்சதுல எனக்கு ரொம்ப புடிச்ச படம் அன்புள்ள ரஜினிகாந்த் தான் .நான் யோக்கியன்னு இப்பவாது நம்புங்க .

  ReplyDelete
 52. டைரக்டர் ஷங்கருக்கு ரொம்ப ஷார்ப்பான மூளை.

  ReplyDelete
 53. புர்ர்ச்சினா என்ன தெர்மா ? பொம்பளைக்களுக்கு ஒன்னுனா பொங்க சோறா பொங்கணும் . தக்காளி சட்னிய ரத்தம்னு சொல்லணும் . அதுவே ஆம்பளைகளுக்கு ஒன்னுனா ரத்தம் கூட தக்காளி சட்னி தான் .

  ReplyDelete
 54. அன்பே ருக்கு
  கவி தந்து என்னை கவிஞன் ஆக்கு
  இல்லையென்றால்
  காவி தந்து ஆன்மீகன் ஆக்கு
  நீ இல்லாமல் நான் ஒரு பேக்கு
  அடிக்க போறேன் ரெண்டு பெக்கு.
  எங்களுக்கும் கவிதை தெரியுமையா .(தக்காளி எல்லாரும் சாவுங்கையா )

  ReplyDelete
 55. //வானரம் . said... [Reply]
  மீனா நடிச்சதுல எனக்கு ரொம்ப புடிச்ச படம் அன்புள்ள ரஜினிகாந்த் தான் .நான் யோக்கியன்னு இப்பவாது நம்புங்க .//

  நானா யோசிச்சேனுக்கு மட்டும் ஆஜராகுறீங்களே..அதிலேயே தெரியுது நீங்க யோக்கியர்னு!

  ReplyDelete
 56. //வானரம் . said...

  நீ இல்லாமல் நான் ஒரு பேக்கு//

  ருக்கு இன்னும் வரலை இல்லியா?..ஐ லைக் திஸ்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.