Tuesday, September 6, 2011

சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ!

கடந்த திமுக அரசு சமச்சீர்க்கல்வியைக் கொண்டு வந்ததுமே, இங்கே நிறையப் பேருக்கு தூக்கம் போய்விட்டது. பலவருடங்களாக பத்திரிக்கைத் துறையிலும் அரசியலிலும் இருந்தும், கல்விச்சீர்திருத்தம் பற்றி எதுவுமே பேசாதவர்கள், கலைஞர் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்போகிறார் என்றதுமே துடித்து எழுந்தார்கள்.
‘பாடத்திட்டம் சரியில்லை, புத்தகச்சுமையைக் குறைக்கறதை விட்டுட்டு, இதை ஏன் செய்றாங்க, ஆசிரியர் பற்றாக்க்குறையை போக்கணும், அரசுப்பள்ளி தரத்தை உயர்த்தணும், ஆசிரியர்களை திருத்தணும், அதை அப்படித் திருப்பணும், இதை இப்படித் திருப்பணும், அதையெல்லாம் செஞ்சுட்டு, அப்புறமா சமச்சீர்க்கல்வி கொண்டுவரட்டும். அது தான் ரொம்ப அடிப்படைப் பிரச்சினைகள். அதைப் பண்ணாம வெறுமனே புக்கை மாத்துனா எப்படி?..ஆய்..ஊய்’ என்று ஏகப்பட்ட அறிவுரைகள் ஆவேசமாக இங்கு கொட்டப்பட்டன.

சமச்சீர்க்கல்வியும் அதற்கான பாடத்திட்டமும் பல வருடங்களாக கல்வியாளர்களால் கேட்கப்பட்டு வந்த விஷயம். வெளிநாடுகளில் 5 வயதிலேயே எழுதச் சொல்லிக்கொடுக்கின்றார்கள். நாம் ஏன் 2 வயது ஆனதுமே குழந்தைகளை ஸ்கூலில் தூக்கிப் போடுகிறோம்? ‘ என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன. சில நல்ல உள்ளம் கொண்ட தனியார் பள்ளிகள், குறைவான பாடத்திட்டத்துடன் சிறப்பான கல்வியை அளித்தும் வருகின்றன. (இது பற்றி லதா ரஜினிகாந்த் விகடனில் தொடர் எழுதியதாக ஞாபகம்). குழந்தைகளை புத்தகங்களில் இருந்து விடுதலை செய்யுங்கள்’ என்ற வேண்டுகோள் பல வருடங்களாக எழுப்பப்பட்டே வந்தது. 

அதன் தொடர்ச்சியாகவே சமச்சீர்க்கல்வி பற்றி ஆராய நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், பல தரப்பிலும் விவாதம் நடந்து, இப்போது சமச்சீர்க்கல்வியின் முக்கிய பயனான ஒரே பாடத்திட்டத்தை நாம் பெற்றுள்ளோம்.

இப்போது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, செயல்திறன் சார்ந்த பாடத்திட்டத்தை நாம் பெற்றுள்ளோம். கலைஞர் சம்பந்தப்பட்ட விஷயங்களும் பாடத்திட்டத்தில் இருந்து விளக்கப்பட்டுள்ளன. எளிமையே குறிக்கோளாக கொண்டுவரப்பட்ட திட்டத்தைப் பார்த்து, ‘என்ன..நாலாம்வகுப்புப் பையன் பாடத்தைப் போய் எட்டாம்வகுப்புக்கு வச்சிருக்காங்க’ என்று சிலர் முணுமுணுத்தாலும், வரும் தலைமுறையாவது கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் என்பது நிச்சயம்.

பொதுவாக ஒரு அரசு கொண்டுவரும் திட்டங்கள், அடுத்த அரசு வரும்போது முடக்கப்படும். இதற்கும் அவ்வாறே நிகழும் என்றே நினைக்கும்படியாக ஜெ.வின் நடவடிக்கை இருந்தது. ஆனால் இப்போது கல்வி சார்ந்து ஜெ. அறிவித்திருக்கும் சில விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

முதலில், மூன்று செமஸ்டர் முறை. அதிக பாடச்சுமையைக் குறைக்க அதிரடியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டம் மட்டுமே கல்விச்சீர்திருத்ததின் குறிக்கோள் அல்ல. குழந்தைகள் பொதி சுமப்பது போல் புத்தகம் சுமப்பதைக் குறைப்பதும் முக்கியமான விஷயம். இந்த மூன்றாவது செமஸ்டர் முறை மூலமாக குழந்தைகளின் பாடச்சுமை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பாக ஆசிரியர் பணி நியமனம் பற்றி வந்துள்ளது. 40 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதே நியாயமான விஷயம். இப்போது ஐம்பதாயிரம் ஆசிரியர்கள் வரை பணிநியமனம் செய்யப்படப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போதாது என்றாலும், நிச்சயம் அரசுப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை இது நீக்கும் எனலாம்.

திமுக, அதிமுக என்ற இரு பெரும்கட்சிகளிடையே நிலவி வரும் போட்டி நாம் எல்லோரும் அறிந்ததே. அது இப்போது இந்த கல்வி விஷயத்தில் ஆக்கப்பூர்வமான போட்டியாக மாறி இருப்பதாகவே தெரிகின்றது. கலைஞர் கொண்டு வந்த சமச்சீர்க்கல்வி என்று இல்லாமல், அது ஜெயா.வால் சீர்திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட கல்வியாக ஆகி வருவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, இந்த நல்ல திட்டத்தை முடக்காமல், மேலும் மேம்படுத்தும் ஜெயா.வின் செயல்பாடு, பெற்றோர் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சமச்சீர்க்கல்வி விஷயத்தில் அவரது தவறை நாம் எப்படிக் கடுமையாக சுட்டிக்காட்டினோமோ, அதே போன்று இந்த நல்ல மாற்றத்தையும் சுட்டிக்காட்டுவது நம் கடமை.

கல்விச் சீர்திருத்தம் என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய முக்கிய விஷயம். ஆட்சி மாற்றம் போன்றவற்றால் அது முடங்கி விடாமல் நல்ல திசையில் அது தொடர்வது, மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. சமச்சீர்க் கல்வியை முடக்கச் சொல்லப்பட்ட குறைகளாக சொல்லப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றாக இப்போது களையப்படுகின்றன.
அடுத்து கல்வியைப் பொறுத்தவரை செய்யப்பட வேண்டிய முக்கியமான விஷயம், எட்டாம் வகுப்பு வரை பாஸ் எனும் முட்டாள்தனமான சட்டத்தை நீக்குவது. அது எழுதப்படிக்கத் தெரியாத கூட்டத்தையே உருவாக்கும். அக்கறையுடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அந்தச் சட்டம் உள்ளது. அதையும் ஜெ. நீக்கினால், கல்வித் தாய் அவதாரமும் எடுத்த புண்ணியம் வந்து சேரும்.

செய்வாரா?

வாழ்த்துகள் :

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். (சாரி, லேட் ஆயிடுச்சு டீச்சர்ஸ்!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

90 comments:

 1. கல்வி பத்தி எழுதியிருக்காரு,படிச்சுடலாம்!

  ReplyDelete
 2. //Yoga.s.FR said...
  கல்வி பத்தி எழுதியிருக்காரு,படிச்சுடலாம்! //

  ஏன், கமலா காமேஷ் பத்தி எழுதுனா படிக்க மாட்டீங்களா?

  ReplyDelete
 3. நியாயமான கேள்விகள்,அதற்கான பதில்கள் என்று நடு நிலையாக ஷோர்ட் அண்ட் சுவீட்டாக(SHORT&SWEET) அலசிய பதிவு!குழந்தைகள் கல்வி மேம்படுமென நம்புவோம்!அடுத்த தடவையும் ஆட்சியை தக்க வைக்க அம்மா சபதம் எடுத்திருப்பது போல் தெரிகிறது!அப்படியும் வேண்டும் தான்.இல்லா விட்டால் அடுத்து ஆட்சிக்கு வருபவர் எதனை திருத்துவாரோ,யார் கண்டது?????

  ReplyDelete
 4. //Yoga.s.FR said...
  அடுத்த தடவையும் ஆட்சியை தக்க வைக்க அம்மா சபதம் எடுத்திருப்பது போல் தெரிகிறது!//

  அப்படித் தானோ?...என்ன ஆச்சு திடீர்னு?

  ReplyDelete
 5. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  கல்வி பத்தி எழுதியிருக்காரு,படிச்சுடலாம்! //

  ஏன், கமலா காமேஷ் பத்தி எழுதுனா படிக்க மாட்டீங்களா?///"டிரிபிள் ஷா" பத்தியா?ஒண்ணுமேயில்லாத விஷயத்த எழுதி ஏன் டைம வேஸ்ட் பண்ணுறீங்க?

  ReplyDelete
 6. //Yoga.s.FR said...
  "டிரிபிள் ஷா" பத்தியா?ஒண்ணுமேயில்லாத விஷயத்த எழுதி ஏன் டைம வேஸ்ட் பண்ணுறீங்க?//

  ஹா..ஹா..நான் சொன்னா யாரு கேட்காங்க..உங்களை மாதிரி பெரியவங்க தான் எடுத்துச் சொல்லணும்..நன்றி.

  ReplyDelete
 7. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  அடுத்த தடவையும் ஆட்சியை தக்க வைக்க அம்மா சபதம் எடுத்திருப்பது போல் தெரிகிறது!//

  அப்படித் தானோ?...என்ன ஆச்சு திடீர்னு?/////உங்களுக்குத் தெரியாததா?பாத்திரக் கடையில ஆனை பூந்தாப்புலன்னு சொல்லுவாங்களே,அது மாதிரில்ல ஆயிப் போச்சு நெலம?

  ReplyDelete
 8. வணக்கம் மாப்பிள நானும் ஆரம்பத்தில கலைஞர் கொண்டுவந்த நல்ல திட்டத்த இந்தம்மா இப்பிடி செய்திட்டாங்களேன்னு வருத்தப்பட்டனான்.. ஆனா அவரு தன்ர வாழ்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் வைத்தா என்னையா செய்யுறது.. ஹிஹி தெரியும்தானே மாப்ள

  இப்ப அம்மா கூட கல்வி விடயத்தில் நிதியை மட்டும் ஒதுக்கி கண்கானிக்க வேண்டுமே தவிர பாடபுத்தக விடயத்தில் கல்வியாளர்களே முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்...

  இப்ப வீட்ட போறன் பத்து நிமிசத்தில மீண்டும் வாறேன்யா..

  ReplyDelete
 9. //Yoga.s.FR said...
  உங்களுக்குத் தெரியாததா?பாத்திரக் கடையில ஆனை பூந்தாப்புலன்னு சொல்லுவாங்களே,அது மாதிரில்ல ஆயிப் போச்சு நெலம?//

  ஆமா, ஒரு பக்கம் திமுகவை அடியோட ஒழித்துக்கட்டும் வேகம், இன்னொரு பக்கம் மக்களைக் கவரும் செயல்பாடுன்னு மம்மி கலக்கத்தான் செய்றாங்க..ஒத்துக்கத்தான் வேணும்.

  ReplyDelete
 10. அப்புறம் "மங்காத்தா" படம் கூட பாத்தனே?டம்மி பீசால்ல "அத" யூஸ் பண்ணியிருக்காரு,வெங்கட்டுப் பிரபு?

  ReplyDelete
 11. //காட்டான் said...
  வணக்கம் மாப்பிள நானும் ஆரம்பத்தில கலைஞர் கொண்டுவந்த நல்ல திட்டத்த இந்தம்மா இப்பிடி செய்திட்டாங்களேன்னு வருத்தப்பட்டனான்.. ஆனா அவரு தன்ர வாழ்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் வைத்தா என்னையா செய்யுறது.. ஹிஹி தெரியும்தானே மாப்ள

  இப்ப அம்மா கூட கல்வி விடயத்தில் நிதியை மட்டும் ஒதுக்கி கண்கானிக்க வேண்டுமே தவிர பாடபுத்தக விடயத்தில் கல்வியாளர்களே முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்...
  //

  கரெக்ட் மாம்ஸ்..அம்மா, கலைஞர் மாதிரி கவிதைல்லாம் எழுதாததும் ஒரு வகையில நல்லது தான்.

  ReplyDelete
 12. மேம்படுத்தப்பட்ட கல்வியாக ஆகி வருவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.//

  உண்மையில் பாராட்ட பட வேண்டிய விசயம் தான் நண்பரே!
  நீங்கள் குறிப்பிட்டது போல்
  எட்டாம் வகுப்பு வரை பாஸ் எனும் சட்டத்தை நீக்கி மக்கள் மனதில் நிச்சயம் பாஸ் மார்க் எடுத்து வாழ்த்துக்களை பெருவார் என்ற நம்பிக்கையுடன்... நன்றியுடன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. // Yoga.s.FR said...
  அப்புறம் "மங்காத்தா" படம் கூட பாத்தனே?டம்மி பீசால்ல "அத" யூஸ் பண்ணியிருக்காரு,வெங்கட்டுப் பிரபு?//

  ஹா..ஹா..அதுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுத்தாங்களா யாராச்சும்? ஒருத்தராவது ’அதை’ பத்தி விமர்சனத்துல எழுதுனாங்களா? இத்தனைக்கும் படம்பூரா அப்படித்தான் ஒரே அது மயம்..ஆனாலும் அதை டம்மி பீசா நம்ம மக்களும் நினைச்சுட்டாங்களே!

  ReplyDelete
 14. //
  காட்டான் said...
  இப்ப வீட்ட போறன் பத்து நிமிசத்தில மீண்டும் வாறேன்யா..//

  சீக்கிரம் உங்க சிவாலயனை கட்டிட்டு வாங்க.

  ReplyDelete
 15. கோவணக்காரர் வந்துட்டுப் போறாரு போல?வூட்டுக்குப் போயி கும்முவாராயிருக்கும்,அம்மான்னா சும்மாவான்னு?

  ReplyDelete
 16. //மாய உலகம் said...
  உண்மையில் பாராட்ட பட வேண்டிய விசயம் தான் நண்பரே!
  நீங்கள் குறிப்பிட்டது போல்
  எட்டாம் வகுப்பு வரை பாஸ் எனும் சட்டத்தை நீக்கி மக்கள் மனதில் நிச்சயம் பாஸ் மார்க் எடுத்து வாழ்த்துக்களை பெருவார் என்ற நம்பிக்கையுடன்...//

  ஆம், அது நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. கொஞ்சம் போராடித்தான் நீக்கணும்னு நினைக்கின்றேன்.

  ReplyDelete
 17. //Yoga.s.FR said...
  கோவணக்காரர் வந்துட்டுப் போறாரு போல?வூட்டுக்குப் போயி கும்முவாராயிருக்கும்,அம்மான்னா சும்மாவான்னு?//

  ஆமாய்யா, துஷ் பதிவுலயே பார்த்தேன்..கோவணத்தை இறுக்கிக் கட்டிட்டு என்னா ஒரு ஆட்டம்..

  ReplyDelete
 18. இலங்கையிலும்,வேறும் வெளி நாடுகளிலும் கூட மூன்று செமஸ்டர் முறை தான் உள்ளது! நான் இப்போது தான் அறிகிறேன் அப்படி ஒரு முறை தமிழ் நாட்டில் இல்லை என்று!

  ReplyDelete
 19. செங்கோவி said...ஆமாய்யா, துஷ் பதிவுலயே பார்த்தேன்..கோவணத்தை இறுக்கிக் கட்டிட்டு என்னா ஒரு ஆட்டம்..////?!?!?!!?!):):):):

  ReplyDelete
 20. // Yoga.s.FR said...
  இலங்கையிலும்,வேறும் வெளி நாடுகளிலும் கூட மூன்று செமஸ்டர் முறை தான் உள்ளது! //

  அப்படியா..இங்கு கிடையாது தல..ஜூன் மாசம் படிச்ச பாடத்தை, அடுத்து ஏப்ரல்ல பரிட்சை நடக்கிற வரைக்கும் ஞாபகம் வச்சிக்கணும்..அப்பிடிப் படிச்சோம்!

  ReplyDelete
 21. //
  தமிழ்வாசி - Prakash said...
  maams. morning varen. comment and vote poda......//

  போய்யா.......போ!

  ReplyDelete
 22. எட்டாம் வகுப்பு வரை கட்டாய வகுப்பேற்றம் என்று சட்டம் வேறா?அவ்வாறாயின் ஒன்பதாம் வகுப்பில் மோட்டு வளையை அல்லவா பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்?

  ReplyDelete
 23. //Yoga.s.FR said...
  எட்டாம் வகுப்பு வரை கட்டாய வகுப்பேற்றம் என்று சட்டம் வேறா?அவ்வாறாயின் ஒன்பதாம் வகுப்பில் மோட்டு வளையை அல்லவா பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்?//

  அதைத் தான் நாங்களும் சொல்றோம்..அது பத்தின என் பதிவையும் பாருங்க தல.

  ReplyDelete
 24. ஆம்,இலங்கையில் ஜனவரி,பெப்ரவரி,மார்ச்-ஏப்ரல் லீவு!மே,ஜூன்,ஜூலை-ஆகஸ்ட் லீவு!செப்டம்பர்,அக்டோபர், நவம்பர்-டிசம்பர் லீவு! நவம்பரில் ஆண்டு இறுதிப் பரீட்சை!பத்தாம் வகுப்பு,பிளஸ்-டூ பரீட்சைகள் இடையில் வரும்!

  ReplyDelete
 25. //Yoga.s.FR said...
  ஆம்,இலங்கையில் ஜனவரி,பெப்ரவரி,மார்ச்-ஏப்ரல் லீவு!மே,ஜூன்,ஜூலை-ஆகஸ்ட் லீவு!செப்டம்பர்,அக்டோபர், நவம்பர்-டிசம்பர் லீவு! நவம்பரில் ஆண்டு இறுதிப் பரீட்சை!பத்தாம் வகுப்பு,பிளஸ்-டூ பரீட்சைகள் இடையில் வரும்!//

  அடேயப்பா..எவ்ளோ லீவு!

  ReplyDelete
 26. செங்கோவி said...அடேயப்பா..எவ்ளோ லீவு!////(1)ஏப்ரல்(2)ஆகஸ்ட்(3)டிசம்பர் லீவு!ஆண்டு முழுவதுமல்ல!

  ReplyDelete
 27. இன்னும் ஒன்றுமுதல் ஐந்து வரை பாடத்திட்டங்கள்
  மேன்மைபடுத்தப்பட வேண்டும் நண்பரே.
  நடக்கும் என நம்புவோம்.

  ReplyDelete
 28. //மகேந்திரன் said...
  இன்னும் ஒன்றுமுதல் ஐந்து வரை பாடத்திட்டங்கள்
  மேன்மைபடுத்தப்பட வேண்டும் நண்பரே.
  நடக்கும் என நம்புவோம்.//

  தாரளமாகச் செய்யட்டும்..பொதுவாக ஐந்து(?) வருடங்களுக்கு ஒருமுறை சிலபஸ்/புக் மாறுவது வழக்கம் தானே..அதே போன்றே இதுவும் தொடர்ந்து மேம்படுத்தப்படட்டும்.

  ReplyDelete
 29. //Yoga.s.FR said...
  செங்கோவி said...அடேயப்பா..எவ்ளோ லீவு!////(1)ஏப்ரல்(2)ஆகஸ்ட்(3)டிசம்பர் லீவு!ஆண்டு முழுவதுமல்ல!//

  அப்பீடியா...நான்கூட டக்குன்னு பொறாமைப்பட்டுட்டேன்!

  ReplyDelete
 30. செங்கோவி said...ஆமாய்யா, துஷ் பதிவுலயே பார்த்தேன்..கோவணத்தை இறுக்கிக் கட்டிட்டு என்னா ஒரு ஆட்டம்..////?!?!?!!?!):):):):

  அப்பாடா வீட்ட வந்தாச்சு..துஸி பதிவில கும்மினது அம்மா விசுவாசம் இல்லிங்கோ கலைஞர் மேல இருந்த காட்டம்தாங்கோ..!!

  ReplyDelete
 31. //காட்டான் said...
  செங்கோவி said...ஆமாய்யா, துஷ் பதிவுலயே பார்த்தேன்..கோவணத்தை இறுக்கிக் கட்டிட்டு என்னா ஒரு ஆட்டம்..////?!?!?!!?!):):):):

  அப்பாடா வீட்ட வந்தாச்சு..!!//

  ஓஹோ, சிவாலயனை கட்டியாச்சா?

  ReplyDelete
 32. அண்ணன் என்னமோ சீரியசா எழுதி இருக்காரு போல.......

  ReplyDelete
 33. ஆமாணே, அம்மா தைரியமா சில நல்லமுடிவுகளும் எடுத்து வர்ரமாதிரி தெரியுது.......

  ReplyDelete
 34. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் என்னமோ சீரியசா எழுதி இருக்காரு போல.......//

  அண்ணன் லேட்டா வந்திருக்காரே..

  ReplyDelete
 35. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமாணே, அம்மா தைரியமா சில நல்லமுடிவுகளும் எடுத்து வர்ரமாதிரி தெரியுது.......//

  எல்லாரும் ஒரே பாட்டைத் தான் பாடுறாங்க :

  நம்ப முடியவில்லை...இல்லை..இல்லை!

  ReplyDelete
 36. /////செங்கோவி said...
  //Yoga.s.FR said...
  கல்வி பத்தி எழுதியிருக்காரு,படிச்சுடலாம்! //

  ஏன், கமலா காமேஷ் பத்தி எழுதுனா படிக்க மாட்டீங்களா?
  //////

  அண்ணன் கமலா காமேசுக்கு சிலை வெக்காம விடமாட்டாரு போல இருக்கே?

  ReplyDelete
 37. ///////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் என்னமோ சீரியசா எழுதி இருக்காரு போல.......//

  அண்ணன் லேட்டா வந்திருக்காரே..
  /////

  ஏதோ ஒரு லிங்க கிளிக் பண்ணி தவறா கில்மா லிங்குக்குள்ள போய்ட்டென் அதான்........ ஹி..ஹி.....

  ReplyDelete
 38. அண்ணன் தமிழ்மணத்துலேயும் ஏதோ பிரச்சனை பண்ணியிருக்காரு போல....?

  ReplyDelete
 39. நல்ல அலசல்

  ///பொதுவாக ஒரு அரசு கொண்டுவரும் திட்டங்கள், அடுத்த அரசு வரும்போது முடக்கப்படும். /// இது அதிமுக ,திமுக என்ற இரு துருவங்கள் இருக்கும் வரை தொடரும்..)

  ReplyDelete
 40. மாப்பூ இங்கு என்ன நடக்குது அம்மா கொண்டுவந்த கல்வியை போற்றுகிறீர்களா தூற்றுகிறீர்களா!

  ReplyDelete
 41. அம்மா ஆசிரியர்களை நிற்பாட்டிய படியால் தானே ஐயா ஆட்சிக்கு வந்தார் ஒரு கையொப்பம் மறக்கமுடியுமோ!

  ReplyDelete
 42. திமுகா முதல் முக்கிய புள்ளிகள் எல்லாம் தனியார் பள்ளிக்கூடம் மூலம்தானே உழைக்கின்றார்கள் நான் பார்த்தேன் விஜய்காந்த் பள்ளிக்கூடம் நல்ல வடிவாக கட்டியிரிக்கிறார் ஆனால் பொன்முடியின் பள்ளிக்கூடம் இடிந்து விழும்போல் இருந்தது இதை நான் கண்னால் பார்த்தேன் ஐயா போட்டுக் கொடுக்காதீர்கள் விரைவில் சென்னை மீண்டும் போகனும் !

  ReplyDelete
 43. பிள்ளைகள் உடுப்பு புத்தகச்சுமை சொல்வது என்றாள் தாங்க முடியாது அம்மா நல்லது செய்வது போல் இருக்கு பணக்கார முதலைகள் திமுகா குழப்பம் பண்ணாட்டி நம் குழந்தைகள் வைரமுத்து சொன்னது போல் புத்தகச் சுமையில் பூப்பெய்தியவர்கள் நம் பெண்கள் ஆண்கள் ஆண்மை துழைத்தவர்கள் ஏய் பாரதமாதாவே என்ற கவிதைத் தொகுப்பு பற்றி அண்ணாச்சி ஜோகா சொல்லுவார் போய் வாரன் விடிய வேலை ஐயா செங்கோவியாரே  குளம் திறக்கனும் 4.45 மணிக்கு!  ஹீ ஹீ!

  ReplyDelete
 44. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! சமச்சீர் கல்வி பத்தி நல்லாத்தான் எழுதியிருக்கீங்க! கடைசி வரிகள் - நியாயமான ஆதங்கம்!

  நல்லதெல்லாம் நடக்கப் போவுதுன்னுதான் சொல்றாய்ங்க! ஸோ, லெட்ஸ் வெயிட் அண்ட் சீ!

  ReplyDelete
 45. அண்ணே சூப்பர் பதிவு போட்டு இருக்கீங்க ... பதிவை படிச்சதுல இருந்து சும்மா குளு குளு என்று இருக்கு மனசு
  அப்படியே எல்லாத்துலயும் ஓட்டைப்போடுவோம் என்றா
  தமிழ்மணத்தை காணோம் அண்ணே.....

  இது திமுகாவின் உள் சதியா இருக்குமோ????

  ReplyDelete
 46. அண்ணே நீங்க என்ன சொன்னாலும் ஒக்கே
  நான் சொல்லித்தான் ஆகணும்,
  அம்மா இப்போ ரெம்ப நல்லது எல்லாம் செய்யுறாங்க,
  பாருங்க என்னால கூட நம்மப முடியவில்லை, அடிகட்சி என்னையே கிள்ளி பார்த்துக்குறேன் என்றா பாருங்க..அந்த சசி பேச்சை சாரி சனி பேச்சை கேக்காம அம்மாவ
  பிள்ளையார்தான் காப்பாற்றனும்.

  ReplyDelete
 47. ///செங்கோவி said... [Reply]
  ஆமாய்யா, துஷ் பதிவுலயே பார்த்தேன்..கோவணத்தை இறுக்கிக் கட்டிட்டு என்னா ஒரு ஆட்டம்..///  இதை வண்மையாய் கண்டிக்குறேன்,
  என் பதிவுக்கு வந்து கருத்துரைகள் வேற இருந்து படிச்சுட்டு போயி
  வந்ததுக்கு அடையாளமா ஒரு ஒரே ஒரு கமெண்ட்ஸ் கூட போடாம போன
  செங்கோவி பாஸ செமையா கண்டிக்குறேன்,

  இதுக்கு தண்டனை கொடுக்க நம்ம காட்டான் பின்னாலேயே
  வாறார், வைட்டிங் பாஸ்

  ReplyDelete
 48. ///செங்கோவி said... [Reply]
  ஆமாய்யா, துஷ் பதிவுலயே பார்த்தேன்..கோவணத்தை இறுக்கிக் கட்டிட்டு என்னா ஒரு ஆட்டம்..///  இதை வண்மையாய் கண்டிக்குறேன்,
  என் பதிவுக்கு வந்து கருத்துரைகள் வேற இருந்து படிச்சுட்டு போயி
  வந்ததுக்கு அடையாளமா ஒரு ஒரே ஒரு கமெண்ட்ஸ் கூட போடாம போன
  செங்கோவி பாஸ செமையா கண்டிக்குறேன்,

  இதுக்கு தண்டனை கொடுக்க நம்ம காட்டான் பின்னாலேயே
  வாறார், வைட்டிங் பா

  அட மருமோனே என்னைய இப்பிடி மாட்டி விடுட்டுட்டேயே..ஹி ஹி

  நான் ஒண்டும் கட்சிக்காரன் இல்லையப்பு நல்லது செய்தா பாராட்டுவமே.. இப்ப உன்ர காட்டில நல்ல மழை அம்மா புராணத்த கொஞ்ச நாள் ஓரம் கட்டி வைச்சிட்டு என்னமோ சொல்லுவாங்கள...ஆ!!! கண்டு பிடிச்சிட்டேன்..!! காத்திரமான பதிவு எழுது மருமோனே.. காத்திரமான பதிவு.. ஹி ஹி

  ReplyDelete
 49. துஷ்யந்தன் said... [Reply]
  அண்ணே நீங்க என்ன சொன்னாலும் ஒக்கே
  நான் சொல்லித்தான் ஆகணும்,
  அம்மா இப்போ ரெம்ப நல்லது எல்லாம் செய்யுறாங்க,
  பாருங்க என்னால கூட நம்மப முடியவில்லை, அடிகட்சி என்னையே கிள்ளி பார்த்துக்குறேன் என்றா பாருங்க..அந்த சசி பேச்சை சாரி சனி பேச்சை கேக்காம அம்மாவ
  பிள்ளையார்தான் காப்பாற்றனும்.

  September 6, 2011 2:56 AM
  ஓமையா ஏன் இந்த சசியம்மாவிண்ட பேர் பெரிசா பத்திரிக்கைகள்ல அடிபடவில்லை.?? உண்மையாவே இந்த அம்மா திருந்தீட்டாங்களா..??

  ReplyDelete
 50. எட்டாம் வகுப்பு வரை பாஸ் எனும் முட்டாள்தனமான சட்டத்தை நீக்குவது....

  எனக்கென்னவோ அது ஓகே என்றே தோண்டுகிறது செங்கோவி....

  ReplyDelete
 51. நமக்கு இலங்கை அரசியலே சுத்தம், இதுக்க தமிழ்நாட்டு அரசியலா? ஏதோ பெரிய பிரச்சனையாக்கும்.. விட்டிடு வரோ!

  ReplyDelete
 52. ஆசிரியர் தின பிந்திய வாழ்த்துக்கள்!!
  அம்மா பதிவோ??

  ReplyDelete
 53. ஜெயலலிதாமேடம் இப்ப நிறையவே மாறிவிட்டார்.

  ReplyDelete
 54. லேட்டா சொன்னாலும் வாழ்த்துதான் மாப்ள..

  ReplyDelete
 55. // கந்தசாமி. said...
  நல்ல அலசல்

  ///பொதுவாக ஒரு அரசு கொண்டுவரும் திட்டங்கள், அடுத்த அரசு வரும்போது முடக்கப்படும். /// இது அதிமுக ,திமுக என்ற இரு துருவங்கள் இருக்கும் வரை தொடரும்..) //

  இந்த விசயத்தில் அப்படி இல்லேங்கிறது, பெரிய ஆறுதல் தான்.

  ReplyDelete
 56. Nesan said...
  // மாப்பூ இங்கு என்ன நடக்குது அம்மா கொண்டுவந்த கல்வியை போற்றுகிறீர்களா தூற்றுகிறீர்களா! //

  போற்றுதல் தான்.

  // பிள்ளைகள் உடுப்பு புத்தகச்சுமை சொல்வது என்றாள் தாங்க முடியாது அம்மா நல்லது செய்வது போல் இருக்கு பணக்கார முதலைகள் திமுகா குழப்பம் பண்ணாட்டி நம் குழந்தைகள் வைரமுத்து சொன்னது போல் புத்தகச் சுமையில் பூப்பெய்தியவர்கள் நம் பெண்கள் ஆண்கள் ஆண்மை துழைத்தவர்கள் ஏய் பாரதமாதாவே என்ற கவிதைத் தொகுப்பு பற்றி அண்ணாச்சி ஜோகா சொல்லுவார்//

  கேள்விப்படாத கவிதை...நல்லா இருக்கு!

  // குளம் திறக்கனும் 4.45 மணிக்கு! ஹீ ஹீ! //

  எனக்குத் தெரிஞ்சு அலாரம் வச்சு, குளம் திறக்கிறது நீங்க ஒரு ஆளு தான்!

  ReplyDelete
 57. அலசி ஆராய்ந்து விளாசி தள்ளியிருகிங்க போஸ்

  ReplyDelete
 58. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! சமச்சீர் கல்வி பத்தி நல்லாத்தான் எழுதியிருக்கீங்க! கடைசி வரிகள் - நியாயமான ஆதங்கம்! //

  நானும் கும்பிடுறேனுங்க..நன்றி சார்.

  ReplyDelete
 59. துஷ்யந்தன் said...
  // அண்ணே சூப்பர் பதிவு போட்டு இருக்கீங்க ... பதிவை படிச்சதுல இருந்து சும்மா குளு குளு என்று இருக்கு மனசு //

  அப்படியா..ஜெ. கோர்ட்டில் ஆஜராகணும்னு செய்தி வந்திக்கே..அதையும் அலசிடலாமா?

  தமிழ்மணம்...நான் தான் எடுத்துட்டேன் துஷ்.

  ReplyDelete
 60. காட்டான் said...
  இதுக்கு தண்டனை கொடுக்க நம்ம காட்டான் பின்னாலேயே
  வாறார், வைட்டிங் பா

  அட மருமோனே என்னைய இப்பிடி மாட்டி விடுட்டுட்டேயே..ஹி ஹி

  நான் ஒண்டும் கட்சிக்காரன் இல்லையப்பு நல்லது செய்தா பாராட்டுவமே.. இப்ப உன்ர காட்டில நல்ல மழை அம்மா புராணத்த கொஞ்ச நாள் ஓரம் கட்டி வைச்சிட்டு என்னமோ சொல்லுவாங்கள...ஆ!!! கண்டு பிடிச்சிட்டேன்..!! காத்திரமான பதிவு எழுது மருமோனே.. காத்திரமான பதிவு.. ஹி ஹி//

  துஷ், மாம்ஸ் பதிவைப் படிச்சு அதை எப்படி எழுதன்னு கத்துக்கோங்க.

  //ஓமையா ஏன் இந்த சசியம்மாவிண்ட பேர் பெரிசா பத்திரிக்கைகள்ல அடிபடவில்லை.?? உண்மையாவே இந்த அம்மா திருந்தீட்டாங்களா..?? //

  அடக்கி வாசிக்கிறாங்க மாம்ஸ்.

  ReplyDelete
 61. // ரெவெரி said...
  எட்டாம் வகுப்பு வரை பாஸ் எனும் முட்டாள்தனமான சட்டத்தை நீக்குவது....

  எனக்கென்னவோ அது ஓகே என்றே தோண்டுகிறது செங்கோவி....//

  என்னோட எட்டாம் வகுப்புவரை பாஸ்..கல்வி மட்டும் ஃபெயில் - பதிவைப் பாருங்க ரெவரி..மாற்றுக்கருத்து இருந்தா, அங்கே சொல்லுங்களேன்.

  ReplyDelete
 62. நல்ல தகவல் சொல்லியிருகீங்க நன்றி

  ReplyDelete
 63. மாப்ள கலக்கல் பதிவுய்யா....நன்றி!

  ReplyDelete
 64. நான் ஏலவே பல தடவைகள்,பலருக்குச் சொல்லியிருக்கிறேன்!பதிவாக இருந்தாலென்ன,கருத்தாக இருந்தாலென்ன தயவு செய்து அவசர யுகத்தில் சரி பார்க்காது பதிவு செய்யாதீர்கள்!காரணம்,ஓர் எழுத்து பொருளையே மாற்றி விடும்!

  ReplyDelete
 65. ஆமாம், நேசன்!குளம் திறப்பது முக்கியம்! இல்லா விட்டால் பலரின் பிழைப்பு நாறி விடும்!(இதனைச் சாட்டியே மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்!)

  ReplyDelete
 66. நல்ல அணுகு முறை.நல்ல பதிவு!

  ReplyDelete
 67. // K.s.s.Rajh said...
  ஜெயலலிதாமேடம் இப்ப நிறையவே மாறிவிட்டார். //

  ஆமாம் கிஸ் ராஜா..இப்படியே இருந்தாக்கூட ஓகே தான்.

  ReplyDelete
 68. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  லேட்டா சொன்னாலும் வாழ்த்துதான் மாப்ள..//

  உமக்கு நேத்தே சொல்லிட்டேன்ல.

  ReplyDelete
 69. // KANA VARO said...
  நமக்கு இலங்கை அரசியலே சுத்தம், இதுக்க தமிழ்நாட்டு அரசியலா? ஏதோ பெரிய பிரச்சனையாக்கும்.. விட்டிடு வரோ! //

  மைந்தன் சிவா said...
  ஆசிரியர் தின பிந்திய வாழ்த்துக்கள்!!

  கவி அழகன் said...
  அலசி ஆராய்ந்து விளாசி தள்ளியிருகிங்க போஸ்

  M.R said...
  நல்ல தகவல் சொல்லியிருகீங்க நன்றி

  விக்கியுலகம் said...
  மாப்ள கலக்கல் பதிவுய்யா....நன்றி! //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

  ReplyDelete
 70. // Yoga.s.FR said...
  நான் ஏலவே பல தடவைகள்,பலருக்குச் சொல்லியிருக்கிறேன்!பதிவாக இருந்தாலென்ன,கருத்தாக இருந்தாலென்ன தயவு செய்து அவசர யுகத்தில் சரி பார்க்காது பதிவு செய்யாதீர்கள்!காரணம்,ஓர் எழுத்து பொருளையே மாற்றி விடும்! //

  தல, என்னாச்சு...என்ன எழுத்து...?

  ReplyDelete
 71. //
  சென்னை பித்தன் said...
  நல்ல அணுகு முறை.//

  ஆமாம் ஐயா..நன்றி.

  ReplyDelete
 72. அரசுப் பள்ளிகளில் பணி புரியும் வாத்திகள் 99% தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். இந்த சமச்சீர் கல்வித் திட்டம் வந்தவுடன் அவர்களெல்லாம் அரசுப் பள்ளிகளுக்கே மாறி விடுவார்களா?

  ReplyDelete
 73. அண்ணன் அறிவுரை எல்லாம் சொல்றாரு.. அலசறாரு.. சீக்கிரம் எம் எல் ஏ ஆகிடுவாரோ? டவுட்டு

  ReplyDelete
 74. // Jayadev Das said...
  அரசுப் பள்ளிகளில் பணி புரியும் வாத்திகள் 99% தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். இந்த சமச்சீர் கல்வித் திட்டம் வந்தவுடன் அவர்களெல்லாம் அரசுப் பள்ளிகளுக்கே மாறி விடுவார்களா? //

  ஐயா வணக்கம்..

  அரசு மருத்துவமனைக்கு ஒரு லேட்டஸ்ட் ஸ்கேனிங் மெஷின் வாங்கினால், ’இது எதுக்கு..நம்ம எம் எல் ஏ,மந்திரிங்கல்லாம் பிரைவேட் ஆஸ்பத்திரிக்குத் தான் போறாங்க..இது வந்தா மட்டும் என்ன ஆகிடப்போகுதுன்னு திருப்பி அனுப்பிடுவீங்களா?

  அரசுப் பள்ளிகளை மட்டும் அல்ல, எல்லாப் பள்ளிகளையுமே தரம் உயர்த்தணும், வெறும் மனப்பாட மெசின்களா குழ்ந்தைகள் ஆகிடக்கூடாதுங்கிறது தான் கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படை..ஒன்னொன்னாத் தான் பண்ண முடியும்..ஒரே நாள்ல மிட்நைட்டுல எல்லாம் மாறிடுமா? நம்ம ஜனநாயகம் அப்படி..பாடச்சுமையைக் குறைக்கணும்னு பலவருசமாக் கேட்டு, இப்போத் தான் ட்ரை செமஸ்டர் கொண்டுவந்திருக்காங்க..இதுக்கு ஏன் இன்னும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்காம இருக்குன்னு ஆச்சரியமா இருக்கு..ஏன்னா அவங்களுக்கு இது வேலைப்பளுவைக் கூட்டும்..ஒருவேளை ஜெ. முன்னாடி நடத்துன பாடம் காரணமா இருக்கலாம்..இவங்ககூட போராடித்தான், இதை மாத்த முடியும்...

  ஒரே பாடத்திட்டம்னு சொன்னா, இது வந்தா மட்டும்-ன்னு கேட்கிறீங்க..

  பாடச்சுமையைக் குறைக்கிறோம்னு சொன்னாலும் இது வந்தா மட்டும்....ன்னு இழுக்கீங்க.

  அதிக ஆசிரியர்களை நியமிக்கிறோம்னு சொன்னாலும், இது வந்தா மட்டும்னு அதே பாட்டு.

  ஐயா, நீங்களே சொல்லுங்களேன்..எது வந்தா, இது மாறும்னு!

  அரசுப்பள்ளி ஆசிரியர் பிள்ளைங்க படிக்கலேங்கிறதால, அங்க படிக்கிற ஏழை/கிராம மாணவர்களை கண்டுக்காம விட்டுடணுமா? மந்திரிங்க அரசு ஆஸ்பத்திரி போகலைங்கிறதால, அங்க வர்ற ஏழைங்களையும் அம்போன்னு விட்டுடணுமா?

  இங்கே பிரச்சினை சங்கங்கள் தான்..எதையும் எளிதாக கொண்டு வந்திட முடியாது..

  ReplyDelete
 75. // சி.பி.செந்தில்குமார் said... [Reply]
  அண்ணன் அறிவுரை எல்லாம் சொல்றாரு.. அலசறாரு.. சீக்கிரம் எம் எல் ஏ ஆகிடுவாரோ? டவுட்டு //

  யோவ், என்னை என்ன தக்காளின்னு நினைச்சீங்களா?

  ReplyDelete
 76. ///செங்கோவி said... [Reply]
  துஷ்யந்தன் said...
  // அண்ணே சூப்பர் பதிவு போட்டு இருக்கீங்க ... பதிவை படிச்சதுல இருந்து சும்மா குளு குளு என்று இருக்கு மனசு //

  அப்படியா..ஜெ. கோர்ட்டில் ஆஜராகணும்னு செய்தி வந்திக்கே..அதையும் அலசிடலாமா?/////


  அண்ணே வேணாமுன்னே, வலிக்கும்........ பாவம் இல்ல :((

  ReplyDelete
 77. \\’இது எதுக்கு..நம்ம எம் எல் ஏ,மந்திரிங்கல்லாம் பிரைவேட் ஆஸ்பத்திரிக்குத் தான் போறாங்க..இது வந்தா மட்டும் என்ன ஆகிடப்போகுதுன்னு திருப்பி அனுப்பிடுவீங்களா?\\ எம்.ஆர். ராதா, MGR சுட்டதும் இருவருமே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார்கள் என்று வரலாறு கூறுகிறது. சமீபத்தில் நடிகர் ஆனந்தபாபு வேலூர் அரசு மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற்றிருக்கிறார் என்பதையும் மறக்க வேண்டாம்.மேலும் சமுதாயத்தில் ஆசிரியர் MLA, MP அளவுக்கு உயர்ந்த அடுக்கைச் சார்ந்தவர்களும் அல்ல. மிடில் கிளாஸ் தான். தன்னுடைய ஓட்டலில் வேலை செய்யும் பையனை அனுப்பி பக்கத்து கடையில் டீ வாங்கிவரச் சொல்லிக் குடிக்கும் அவல நிலை என்று மாறும், ஐயா?

  ReplyDelete
 78. \\ஒரே பாடத்திட்டம்னு சொன்னா, இது வந்தா மட்டும்-ன்னு கேட்கிறீங்க..

  பாடச்சுமையைக் குறைக்கிறோம்னு சொன்னாலும் இது வந்தா மட்டும்....ன்னு இழுக்கீங்க.

  அதிக ஆசிரியர்களை நியமிக்கிறோம்னு சொன்னாலும், இது வந்தா மட்டும்னு அதே பாட்டு.\\ அரசுப் பள்ளியில் வேலை செய்யும் வாத்திகள் அவர்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்கும் நிலை வந்தால் அதன் தரம் நிச்சயம் உயர்ந்துவிட்டது என்று அர்த்தம், அந்த நிலை எப்போ வரும்?

  ReplyDelete
 79. @Jayadev Das

  //அரசுப் பள்ளியில் வேலை செய்யும் வாத்திகள் அவர்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்கும் நிலை வந்தால் அதன் தரம் நிச்சயம் உயர்ந்துவிட்டது என்று அர்த்தம்,//

  ஆமா, ஆனால் சட்டப்படியும் ’சங்கப்படியும்’ அப்படிக் கட்டாயப்படுத்துறது கஷ்டம் இல்லையா...அதனால தான் சொல்றேன், ஒன்னொன்னா மாத்தினா/சீர்திருத்தினா, மெதுவா அந்த நிலை வரும்.

  //அந்த நிலை எப்போ வரும்? //

  அதானே, அந்த நிலைமை எப்போ சாமீ வரும்?

  ReplyDelete
 80. சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ!//

  தலைப்பே ஜெ ஏதோ சாதிச்சிட்டா என்று சொல்லுவது போல இருக்கிறதே..
  இருங்கோ உள்ளே வாரேன்.

  ReplyDelete
 81. கடந்த திமுக அரசு சமச்சீர்க்கல்வியைக் கொண்டு வந்ததுமே, இங்கே நிறையப் பேருக்கு தூக்கம் போய்விட்டது. பலவருடங்களாக பத்திரிக்கைத் துறையிலும் அரசியலிலும் இருந்தும், கல்விச்சீர்திருத்தம் பற்றி எதுவுமே பேசாதவர்கள், கலைஞர் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்போகிறார் என்றதுமே துடித்து எழுந்தார்கள்.//

  ஏழைங்க பாவம் என்று தானே சொல்லுறாங்க..
  என்ன பண்ணா?

  ReplyDelete
 82. குழந்தைகளை புத்தகங்களில் இருந்து விடுதலை செய்யுங்கள்’ என்ற வேண்டுகோள் பல வருடங்களாக எழுப்பப்பட்டே வந்தது. //

  வெளிநாட்டுக் கல்வி முறைக்கும், எமது கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாடு இது தான் பாஸ்..

  எங்கள் மாணவர்களின் அனுபவ ரீதியான கற்றற் செய்ற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து, வெறுமனே புத்தகப் பூச்சிகளாக அடை காக்க வைப்பதால் தான் நம் மாணவர்களில் பலருக்கு கல்வி முறை மீதான ஆர்வம் குறைகின்றது,
  நம் நாடுகளில் கல்வி கற்போர் விகிதாசாரமும் ஆண்டு தோறும் ஏற்றமடையால், வீச்சியடைகிறது பாஸ்.

  உண்மையில் இல்ங்கை இந்தியா நாடுகளில் உள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தால் தான் எழுத்தறிவு வீததோடு, நாட்டின் முனேற்றமும் அதிகரிக்கும்.

  ReplyDelete
 83. பொதுவாக ஒரு அரசு கொண்டுவரும் திட்டங்கள், அடுத்த அரசு வரும்போது முடக்கப்படும். இதற்கும் அவ்வாறே நிகழும் என்றே நினைக்கும்படியாக ஜெ.வின் நடவடிக்கை இருந்தது. ஆனால் இப்போது கல்வி சார்ந்து ஜெ. அறிவித்திருக்கும் சில விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.//

  இந்த விடயத்தில் ஜே அவர்களுக்கு ஒரு சல்யூட் போட வேண்டும்.
  இளமையில் கவி சிலையில் எழுத்து என்பது போன்று, குழந்தைங்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுவாக்கும் போது தான் அவர்களுக்கும் சிறு வயது முதல் படிப்பில் ஆர்வம் மேலெழும்,.

  ReplyDelete
 84. நல்லதோர் இடுகை,. ஜெ அவர்களின் கல்வித் திட்டம் இன்னும் எளிமைப்படுத்தப்பட்டு, மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் மேல் நாட்டுக் கல்வி முறைக்கு நிகராக மாற்றம் பெற வேண்டும் என்பதே என் ஆசை..

  மகிந்த ராஜபக்சே இந்த விடயத்திலாவது ஜெ அவர்களைப் பின்பற்றி இலங்கை மக்களுக்கு விடிவினைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 85. எனக்கு எப்பவும் ஆசிரியர்கள் மேல பெரிய மரியாதையை இருந்தும்,
  ஆனாலும் நம்ப மாநிலத்துல ஆசிரியர்கள் அனைவரும் நாம ஒரு சமுதாயத்தோட முக்கியமான அங்கம் அப்படின்ற பொறுப்பு மிக குறைவு.

  ஆட்சியர்களும் இவங்க எல்லோரும் நமக்கு தேர்தல உதவுவாங்க அப்படின்னு, அதிகமான சலுகைகள வாரி வழங்கரங்க.

  இவங்கள்ல பாதிபேருக்கு மேல, ஒழுங்க பாடமே நடத்தறது இல்லன்னு தான் சொல்லணும்.
  எல்லோரும் டியூஷன் வாங்க, வரலனா பிரக்டிகல் மார்க் கிடையாது, இந்த டயலாக் நாம எல்லோரும் கேட்டு பழகியது.

  அது போல, மாணவன் நல்லா படிச்சா, என்னோட மாணவன் அப்படின்றது, அப்படி இல்லையா,அது தருதல, ஒழுங்காவே படிக்காது.
  இவங்களே முடிவு பண்ணிடறது. அவனோட குணம்,திறமை,நன்னடத்தை...இத அனைத்தும் போதிக்க வேண்டிய கடமை அவங்களுக்கு இருக்குனு தெரியறதே இல்ல.

  corporate company அனைதிளையும் நிறைய சலுகைகள் இருக்கும்,ஆனா அவங்களோட திறமையும், அவங்களால நமக்கு என்ன லாபம் அப்படின்றது ஒவ்வரு வருஷம் calculate செய்யப்படும். அதாவது appraisal இங்க நீங்க என்ன பண்ணுனீங்க, உங்க மேனேஜர் என்ன பண்றாரு. நீங்க எங்களுக்கு எதாவது சொல்ல விரும்பருங்களா..இப்படி நிறைய கேள்வி இருக்கும்,

  கொடுத்த வேலைய மட்டும் செய்தா 10 இக்கு 5 மதிப்பெண், செய்யவில்லைஎன்றால் 3 , 4 ..

  உதரணத்துக்கு, 50 ௦ மாணவர்கள் உள்ள வகுப்பு 70 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெறணும், இதுல 25 சதவிகிதம் மாணவர்கள் 75 சதவிகிதம் மதிப்பெண் பெறணும், 35 சதவிகதம் மாணவர்கள் 60 சதவிகம் மதிப்பெண் பெறணும் 10 சதவிகதம் மாணவர் 40 சதவிகதம் மதிப்பெண் பெறணும்.

  இதுதான் S.L.A ..அணைத்து ஆசிரியர்களுக்கும், இது குறைந்தால் அவருக்கு INCREMENT ,BONOUS கிடையாது.

  மாவட்ட அளவில் முதல் இடம், மாநில முதல் இடம் வாங்கின 200 சதவிகத BONOUS இப்படி நிறைய மாற்றங்கள் கொண்டு வரணும்.

  அது மட்டும் இல்லாம இந்த மனபாடம் செய்து மதிப்பெண் பெறுகிற முறைய மாற்றனும். மானவர்கள சிந்திக்க விடறதே கிடையாது.

  இன்றைக்கு நல்ல நிலைல இருக்கறவங்க நிறைய பேர் AVERAGE மாணவர்கள் மட்டும் தான்.

  ReplyDelete
 86. ஏன், கமலா காமேஷ் பத்தி எழுதுனா படிக்க மாட்டீங்களா? // ஏன் எப்பவும் கமலா காமேஷ் மேலயே குறியா இருக்கீங்க.???

  ReplyDelete
 87. த்ரிஷாவ சொன்னேன்னு சொல்லி சமாளிக்க போறீங்க அதானே?

  ReplyDelete
 88. ஹ்ம்ம் எதாச்சும் உபயோகமான பதிவுல உபயோகமான பின்னூட்டம் போடலாம்னா எடுத்த எடுப்புலயே கும்மியடிச்சு நம்மளையும் டைவர்ட் பண்ணிடுறாங்க,,

  உண்மையில் இது ஒரு ஆக்கப்பூர்வமான நடைமுறைதான், சென்றமுறை ஆட்சிக்கு வந்தபொழுது இருந்த ஆணவத்திற்கும் இப்பொழுது மக்கள் நலனில் காட்டும் உண்மையான அக்கறைக்கும் வித்தியாசம் கண்கூடாக தெரிகிறது..
  இதே நிலைமை ஐந்து ஆண்டுகளும் தொடருமானால் அடுத்த முறையும் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு நிறைய உள்ளது.. ஆனால் எனக்கு இருக்கும் சந்தேகம் இன்னும் ஐந்து வருடம் வரையில் இவர் தி.மு.க என்ற கட்சி பெயரளவிலாவது இருக்கும்படி வைப்பாரா என்பதுதான்? நான் திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கிறேன் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.. என்னுடையதும் அதுவே...

  ReplyDelete
 89. சரியா சொன்னீர்கள்! எட்டாம் வகுப்புவரை பாஸ் என்பதை பாஸ் பண்ண வேண்டும்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.